பிரணாவ் கேர் மருத்துவமனையை அடைந்ததும்  மனைவி  பணிபுரியும்

 கட்டிடத்திற்கு சென்று அவளை தேட

 அங்கு அவள் இல்லாது போகவும் “எங்கு சென்றாளோ?????” சிறு எரிச்சலுடனே வெளியே வந்தான்.

அப்போது பக்கத்து கட்டிடமான மகப்பேறு பிரிவிற்கான பிளாக் பி2வின் வாசலில் ரகுராம் நிற்பது தெரிய வர அது விதுல்யா இருக்குமிடம் என்று ஒரு கணம் தயங்கிய போதும்

‘சித்தப்பாவிற்கு இங்கே என்ன வேலை????????’

 யோசித்துக்கொண்டே முன்னேறினான் பிரணாவ்.

 ஆனால் அங்கு உள்ளே தன் மொத்த குடும்பமும் இருப்பதை கண்டு அதிர்ந்தவன் அவர்களிடம் விரைந்து

” என்ன ஆச்சு யசோம்மா???????”

என்றிருந்தான் யசோதாவிடம் .

“உன் போனுக்கு என்ன ஆயிற்று பிரணாவ்??????

எத்தனை முறை அழைப்பது?????”

 யசோதா கேட்டதும்தான் சைலண்ட் மோடில் காரின் டேஷ்போர்டிற்குள் காலையில் கோபமாக தன் போனை விட்டெறிந்தது  பிரணாவிற்கு ஞாபகம் வந்தது ….

“ப்ச்…..அதை விடு யசோம்மா …..  இப்போது யாருக்கு என்ன???????”  என்று கேட்கும் போதே

உதிக்காவிற்கு ஏதேனுமா????? என்று மனம் கலங்க

” உன் உதிக்கா ஒழுங்காக சாப்பிடாமல் மயக்கம் போட்டு வைத்துவிட்டாள் ……

 எல்லோரும் பயந்து விட்டோம்!!!!!

 இப்போது தான் கண் விழித்தாள்….

 போய் பாரு பிரணாவ்!!!”

 என்று யசோதா கூறியதும்

தடாலடியாக  அவர் காட்டிய அறையை நோக்கி நடந்தான் பிரணாவ்.

 சரியாக அந்த சமயத்தில் தான் விதுல்யா உதிதாவிடம் கோபமாக பேசிவிட்டு வெளியேறியதும் !!!!!!

எவளை இனி பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அவளையே  அங்கு சந்தித்ததில் தடுமாறியவன் அப்படியே சுவற்றின் உதவியோடு நிற்க முயல

பிரணாவை பார்த்துவிட்டவளோ அவனை கடந்து விட்டு செல்ல தான் நினைத்தாள்!!!!

 ஆனால் இரு அடி தாண்டி இருந்தவள் மீண்டும்  அவன் அருகில் வந்து

” எனக்கு இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!!!

 கல்யாணம் பண்ணுவதற்கு முன் ஒரு

வினாடி கூட என் நினைப்பு உங்களுக்கு வரவே இல்லையா ??????????” என்றாள் விதுல்யா தோற்று போன தன் காதலின் கடைசி கேள்வியாக!!!

 விதுல்யாவின் அக்கேள்வி அறையினுள் இருந்த இரு பெண்களுக்குமே  தெள்ளத் தெளிவாக கேட்க

இது என்ன இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ???????

உதிதா  எண்ணுகையில்

“என்ன சொல்லப் போகிறான் ????????”

என்று பதைபதைக்கும் நெஞ்சோடு சுற்றம் மறந்து கதவையே வெறித்தபடியே நின்றிருந்தாள் மைத்ரேயி .

“சொல்லுங்க அத்தான்????” மீண்டும் விதுல்யா உந்த

அவள் வலி சுமந்த கண்களை நேரே சந்தித்தவன்

” வந்தது !!!!!!!!!!! “என்றான் உண்மையை மறைக்காமல்…

 அவன் கூறிய ஒற்றை வார்த்தையில் மைத்ரேயிக்கு தான் அணிந்திருந்த தாலிக் கயிறே தூக்குக் கயிறாய் மாறி விட

“அந்தப் பொறுக்கியை கல்யாணம் பண்ணி இருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது உதிஅண்ணி !!!!!!!!”

கண்ணீர் வழிந்தோட அவ்வறையை விட்டு  மைத்ரேயி ஓடிவிட துடிக்க

 “நான் சொல்வதைக் கேள் மைத்தி!!!!!!”

 சமன்மொழி கூற முற்பட்ட உதிதாவிடம்

 ” தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள் உதிஅண்ணி!!!!!!!”  என்று விரைந்து வெளியே சென்று விட்டாள் .

 மனைவி வெளியேறியதை இடது புறமாக திரும்பி நின்ற பிரணவால் பார்த்திருக்க முடியவில்லை….

 அவ்வாறு மைத்ரேயி  ஓடியதும்

 “யுகி!!! யுகி!!! இங்கே வாங்களேன்!!!!!!!”

 என்று உதிதா அழைக்கும் குரல் கேட்டு

 தமக்கையை பாராமலே யுகனிடம் விரைந்தான் பிரணாவ்.

“உங்க பொண்டாட்டி உங்களை தேடுகிறாள் மாம்ஸ்!!!!”  பிரணாவ் கூறிய விதத்தில்

” உனக்கு எப்போது மாப்பு  அவள் மேல் இருக்கும் கோபம் மறையும்?????”  சற்றே வருத்தத்துடன் நொந்து கொண்டபடி தன் மனைவியிடம் சென்றான் யுகன்.

”  மைத்தி கோபமாக ஆதங்கத்துடன்

போகிறாள் யுகி!!!!!!

 அவளை தடுத்து நிறுத்துங்கள் ப்ளீஸ்…..

 இப்போது அவள் எங்கள் வீட்டிற்கு வராமல் விட்டாலும் பரவாயில்லை…

 எப்படியாவது நம் வீட்டிற்கு அழைத்துச் செல்வோம்…..

 மற்றதை பிறகு பேசிக் கொள்வோம்!!!!!!!”

 மனைவியின் பதற்றத்தில்

“சரி அம்மு…… நீ மறுபடியும் டென்ஷன் ஆகாதே!!!!!

 நான் பார்த்துக் கொள்கிறேன்!!!!!”  என்று உறுதியாய் மொழிந்தவன் மைத்ரேயியை தேடலானான் .

அதற்குள் மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டாளா?????

ஆனால் எப்படியும் சோட்டுவை கூட்டிக் கொண்டு தானே செல்வாள்??!!

 ஆமாம் சோட்டு எங்கே?????

 காலையில் அவள் தான் தூக்கி வைத்து

இருந்தாள்!!!!

ஆனால்  இப்போது அரை மணி நேரத்திற்கு முன் உதிதாவின் அறைக்குள் வரும் போது தான் சோட்டுவை பார்க்கவில்லையே????!!!!!!

 என்பதை உணர

ஒன்றும் புரியாமல் குழம்பினான் யுகன்……

 பின் எப்படியும் மும்பைக்கு தான் போக நினைப்பாள் என்பதை யூகித்து தன் காரை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டிற்கு கிளம்பும் போது மருத்துவமனை நுழைவாயிலில் அவசர நடையுடன்

 பையனை சுமந்தபடி மைத்ரேயி வெளியேறியது யுகனிற்கு தெரிந்தது…..

 அப்படியே காரை நிறுத்திவிட்டு அவளிடம் இறங்கி நடந்தவன் “மைத்தி நில்லு!!!!!

 எங்கே போகிறாய்????”  என்றபடி தடுத்தான் .

” என்னை விட்டு விடுங்கள் அண்ணா…. நான் மும்பைக்கு போகிறேன் !!!!

தயவுசெய்து யாரும் எனக்காக இனியும் எதையும் செய்ய வேண்டாம் !!!!!

இத்தனை நாட்கள் தனியாக தானே சமாளித்தேன்…..

 இனியும் எங்களை நானே பார்த்துக் கொள்கிறேன்!!!!!”  யுகனின் பதிலை எதிர்பாராமல்  முன்னேறி நடந்தவளிடம்

” உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஒரு அண்ணன் எனும் முறையில் அதை தீர்த்து வைக்க நான் இருக்கிறேன்!!!!!!

 ஆறுதலுக்கு உனக்கு ஒரு அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள்!!!!!!

 இனி தனியாக போக வேண்டிய அவசியமில்லை…. புரிந்ததா??????”

 சிறு கட்டளையை சுமந்து வந்த யுகனின் வார்த்தைகள் அடுத்த நொடியே வருத்தத்தை போர்த்திக் கொண்டது….

” ஒருவேளை இந்த அண்ணனை பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு!!!! நான் ஒதுங்கிக் கொள்கிறேன்……”

” அண்ணா ப்ளீஸ் !!!!! மென்மேலும் என்னை பேச வைக்காதீர்கள்…….

 உங்கள் உறவை ஏற்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியவில்லை??!!!!!”

 உணர்ச்சி பெருக பேசிக்கொண்டு போனவளை

” முதலில் எதுவென்றாலும் நம் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் மைத்தி!!!!!! இப்போது என்னுடன் வருவாயா???????” என்று இடைமறித்தான் யுகன்.

 மறுக்க வழியின்றி “சரி அண்ணா…..”  என்று கூறும்போது அவர்களை நெருங்கிய பிரணாவ் தன் மனைவியிடம்

” உன்னை எங்கு எல்லாம் தேடுவது?????

 ஃபோன் பண்ணினால் எடுக்க மாட்டாயா?????”  என்ற காய்ந்தான்.

 இவனிடம் இனி பேச என்ன இருக்கிறது???? என்பது போல்

“ஹம் ஜா சகதே ஹை பையா!!!!!”

(” நான் கிளம்பலாம் அண்ணா!!!!!” )

என்று யுகனைப் பார்த்து மைத்ரேயி கூற

 இன்று காலையில் தானே கிளி பிள்ளைக்கு சொல்வது போல் படித்து படித்து

இந்திக்கும் தனக்குமான உறவு பாலத்தை…..

 விளக்கினோம் !!!!!

“இன்னொரு முறை இந்த வாயிலிருந்து

உன் மதர் டங் வந்தது  என்றால் உன் ஹஸ்பன்ட் டங்கை பார்க்க நேரிடும்!!!!! மரியாதையாய் தமிழில் பேசி தொலைடி பஜாரி!!!!!!” பிரணாவ் பொது இடம் என்றும் பாராமல் பாய

“மேய்ன் ஐசே இ பாத் கரூங்ஙி …. ஆப் கியா கர் லோகே??????”

 (“நான் அப்படி தான்டா பேசுவேன் உன்னால் என்ன பண்ண முடியும்?????”)

 இந்தியிலேயே மைத்ரேயியும் கத்த

 தன்னை மறந்து அவள் கன்னத்தை இறுகப் பற்றினான் பிரணாவ்.

“விடுடா!!!!!” மைத்ரேயி இம்முறை தமிழில் கத்த

“மாப்பு  என்ன இது????? முதலில்  அவளை விடு!!!!” அதட்டி இருந்தான் யுகன் . அதே சமயம்

“நீயும் ஏன் மைத்தி இவ்வாறு பேசுகிறாய்?????

 பிரணாவ் உன் ஹஸ்பண்ட்!!!!!

 கொஞ்சம் மரியாதையாக பேச வேண்டாமா?????”  தங்கையை கடியவும் தவறவில்லை!!!!

” நல்லா கேளுங்க மாம்ஸ்…..

மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணை தேடிப்பிடித்து உங்கள் பெண்டாட்டி தான் கட்டி வைத்தாள்!!!!!!

 பேசாமல் இவளையும் உங்கள் வீட்டிற்கே கூட்டிப் போய் மரியாதையை பற்றி நன்றாக கற்றுக் கொடுத்து விட்டு அப்புறம் அனுப்பி வையுங்கள்……”  பற்களைக் கடித்தான் பிரணாவ்.

“அதே தான் மாப்பு  நானும் கூறிக் கொண்டு இருந்தேன்…. ஒரு வாரம் மைத்தி அங்கு நம் வீட்டில் இருக்கட்டும்!!!!! அப்புறம் நானே கூட்டி வருகிறேன்….  சரி

தானே?????”

 என்று யுகன் கூறியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பிரணாவ்.

” ஒரு வாரம் என்ன மாம்ஸ்??? ஒரு வருடம் கூட வைத்துக் கொள்ளுங்கள்!!!

 ஆனால் சோட்டுவை என்னிடம் கொடுத்து விடுங்கள்!!!!!!”  என்றவன்

மனைவியின் கையில் இருந்த மகனை நோக்கி ” வாடா சோட்டு!!!!!!”  என்று தன் கைகளை நீட்ட

அவன் நீட்டியது தான் தாமதம் என்பது போல் தந்தையிடம் தாவி இருந்தான் மகன்!!!!

” சரி மாம்ஸ்  பை!!!! நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து அனுப்பி வையுங்கள்…..

 முடிந்தால் அந்த ஹிந்தியை மறக்கடித்து

விடுங்கள்!!!!!”  என்று யுகனிடம் கூறியவன்

” நீ வாடா மவனே!!!!! நாம் நம் வீட்டிற்கு போகலாம் ……” என்று சோட்டுவை தூக்கிக் கொண்டு நடந்தான்.

” ஹேய் நில்லு நில்லு!!!!! எங்கே போகிறீர்கள் ?????????

சோட்டு நீ வாடா”  என்று கத்தியபடி பின் தொடர்ந்தவளை

பார்த்த யுகனது இதழ்கள் புன்னகை பூத்தது!!!!!

 எப்படியும் பிரணாவ் அனைத்தையும் சமாளித்து விடுவான் எனும் நம்பிக்கை விதை யுகனின் மனதிற்குள்  விருட்சமாய் வளர்ந்தது  ……

அவ்வளவு நேரம் கத்திக்கொண்டு வந்தவள் பிரணாவ் தன் குடும்பத்தினரின் அருகில் செல்லவும் அமைதியாகிவிட்டாள்.

மகனை கண்ட யசோதா ” பில் செட்டில் பண்ணிவிட்டு வா பிரணாவ்!!!!!

உதியை கூட்டி கொண்டு நாம் கிளம்பலாம்……” என்று கூறவும்

“மாம்ஸை விட்டு அவள் இருக்க மாட்டாள் யசோம்மா!!!! எதற்கும் மாம்ஸிடமே கேட்டுவிடலாம்……”

உதிதாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் பின் நடு இரவில் புருஷன் வீட்டுக்குப் போகிறேன் என்று அடம் பிடிப்பாள் என்று தெரிந்து தன் சிற்றன்னையிடம் மறுத்திருந்தான் பிரணாவ்.

“அதெல்லாம் உங்க அப்பா பேசி ஆயிற்று…..

 நீ சீக்கிரம் கிளம்பு பிரணாவ்!!!!” யசோதா அவசரப்படுத்த

பில் கவுன்டரில் யுகன் நிற்பதை கண்ட பிரணாவ் தமக்கையை தன்னோடு

அழைத்து செல்லும் விவரத்தை கூறலானான்…..

“உங்கள் பொண்டாட்டி அங்கு எங்களுடன் வீட்டிற்கு வருகிறாளாம்  மாம்ஸ்!!!!!”

”  உன் உதிக்காவை நன்றாகப் பார்த்துக் கொள் மாப்பு!!!!!”

 அதற்கு பிரணாவிடம் எந்த பதிலும் இல்லை !!!!

உதிக்கா மயங்கி விட்டாள் என்று அறிந்ததும் அவளை பார்க்க விரைந்தவன் அங்கு அறை வாயிலில் விதுல்யாவை சந்தித்த காரணத்தால் உள்ளே செல்ல முற்படவில்லை!!!!

 மேலும் தன் அக்காள் நன்றாக இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டதும் மீண்டும் அவளை சென்று சந்திக்க விளையவில்லை!!!!!

 வீட்டிற்கு அழைத்து வரும்போது உதிதாவும் பிரணாவிடம் எதுவும் பேசினாள் இல்லை…..

” இந்தா சோட்டுவை பிடி….. நீ பின்னால் உட்கார்ந்து கொள்!!!!”  மைத்ரேயியிடம் பிரணாவ் கூறியதும்

அவன் உதிஅண்ணிக்காக முன் பக்க இருக்கையில் மறைமுகமாக அமர சொல்லி பரிந்து பேசியதற்கு ஏற்ப

 அவனுடன் மல்லுக்கு நிற்க தோன்றாமல் அவனது பகானி காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் அவன் மனைவி.

 இரவு தங்கள் அறையில் தன் சிந்தனை முழுவதையும் கணவனுக்காக பரிசளித்தபடி சோட்டுவுடன் விளையாடிக் கொண்டிருந்தவளிடம் ஒரு தட்டை

நீட்டிபயடி உள்ளே நுழைந்தான் பிரணாவ்….

” காலையிலிருந்து நீ சாப்பிட்டாயா என்று தெரியவில்லை ????

ஆனால் நான் சாப்பிடவில்லை…

 செம பசி !!!!

இந்தா பிடி…..” என்றான் .

 அவள் வயிறும் சாப்பாட்டு தட்டை வாங்க சொல்லி கெஞ்ச வாங்கிக் கொண்டவள்

” தேங்க்ஸ்!!!”  என்றபடி  உண்ணத் தொடங்கினாள் .

“சோட்டுவிற்கு சாப்பாடு கொடுக்கலாமா?????

 இல்லை பால் மட்டும் தான் குடிப்பானா????”

 விவரம் கேட்ட தந்தையானவனிடம்

” இன்னும் எதுவும் கொடுக்க ஆரம்பிக்க வில்லை !!!” என்று அவள் கூறவும்

மேற்கொண்டு அவனும் எதுவும் பேசவில்லை.

 அவள் சாப்பிட்டு முடித்ததும்

 “இனி என்னை இப்படி வெயிட்டர் வேலை பார்க்க வைக்காதே !!!!

ஒழுங்காக நல்ல பொண்டாட்டியா லட்சனமாக டைனிங் டேபிளுக்கு வந்து புருஷனுக்கு பரிமாறிவிட்டு நீயும் சாப்பிட வேண்டும்  புரிந்ததா??????”

 பிரணாவ் கேள்வி எழுப்ப

இவ்வளவு நேரம் அமைதியாக சமத்தாக அமர்ந்திருந்த புத்திரன் கைதட்டி சிரித்தான்…..

அதில் ” வாடா ங்கொப்பன் மவனே !!!!”  சோட்டு தூக்கி  வைத்துக் கொண்ட பிரணாவின் கன்னத்தில்

 “ஹவ்வா!!!!!!!”  என்று தன் முத்தத்தை  வழங்கியிருந்தான் மகன்…..

மகனின் இரண்டாவது  முத்தத்தில் லயித்தவன்

பூரித்து போய்  அச்சின்னஞ்சிறு பட்டுக் கன்னத்தில் வலிக்காத வண்ணம்  தன் உதட்டினை பதித்து விலக்கினான்……..

பின் தங்களையே இமைக்காமல் பார்த்து நின்றவளை

”  உன் ஆத்தாகாரிக்கு ஒன்றுமே தெரியவில்லைடா மகனே !!!!! இன்னும் சின்ன பெண்ணாகவே……”

 மனைவியை வம்பிழுக்க பேசியவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் அப்பேச்சினை விட்டுவிட்டு

அவன் பேச ஆரம்பித்ததும் தட்டுகளை எடுத்து கொண்டு கீழே  செல்ல முற்பட்டவளிடம்

”  ஏய் பஜாரி  நில்லு!!!!  காலையிலேயே இதை கேட்கணும் என்று இருந்தேன்…..

 ஆமாம் உன் வயது என்ன?????????”

காலையில் அவள் டாக்டர் என்று தெரிந்ததும்  தன் பகானியை பார்க் செய்யும் போதே அவனுள் உதித்த கேள்வியை

 தீவிரமாய் கேட்டவனை அதிதீவிரமாய் முறைத்து விட்டு திரும்பினாள் அவன் பஜாரி .