வாட்ச் மேனிடம் ” இதோ வருகிறேன்” என்று கூறியபடி வெளியேறிய பிரணாவிற்கு விதுல்யா இங்கு தான் இருக்கிறாள் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை….
அப்படியே விதுல்யா இந்த கேர் மருத்துவமனையில் இருந்தாலுமே அவளது மகப்பேறு பிரிவு அடுத்த கட்டிடமான பிளாக் – பி2 வில் தான் அமைந்திருக்கிறது!!!!
அந்த எண்ணம் தான் பிரணாவை அவ்விடத்தை விட்டு நகர செய்ததோ????
சரியாக அவன் சென்ற அடுத்த ஐந்து நிமிடங்களில் விதுல்யா ” மே ஐ கம் இன் டாக்டர்????” என்று கேட்டபடி மைத்ரேயின் அறையை ஒருமுறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
” ஹாய்!!! டாக்டர்.மைத்ரேயி……
நான் விதுல்யா …..
கைனகாலஜிஸ்ட்டா இந்த ஹாஸ்பிட்டலில் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்…. “
என்று விதுல்யா மைத்ரேயியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள
ஏனோ தெரியவில்லை??????
அவளை கண்டதுமே மைத்ரேயிக்கு ஒரு இனம்புரியா சிநேக உறவு தோன்ற
அவளும் புன்னகை முகமாய்
“ஹலோ டாக்டர்.விதுலா!!!!!!” என்று கைக்குலுக்கினாள்….
” இருபது நாட்களாக நார்த் சைட் காம்ப் போயிருந்தேன் …….
காலையில் தான் சென்னைக்கு தினும்பினோம்….. வந்த
உடனே நம்ம ஹாஸ்பிட்டலிற்கு ஒரு அட்டென்டன்ஸ் போட்டு விடுவோமே
என்று ஓடி வந்து விட்டேன்!!!!!!” பலநாள் பழகிய தோழியிடம் உறவாடுவது போல் கண்ணடித்து சிரித்த விதுல்யாவை மைத்ரேயிக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது ….
திருமணமான தினத்திலிருந்து ஒருவித இறுக்கத்துடன் வலம் வந்தவளுக்கு விதுல்யாவின் நட்பு வரப்பிரசாதமாக பட பழைய மைத்ரேயியின் துடுக்குதனமான பேச்சு வெளி வந்தது……
“ஹோ!!!!!!! இத்தனை நாளா வாடி வதங்கி போயிருந்த ஹாஸ்பிட்டல் இன்று பூத்து குலுங்குகிறதே என்று வியந்தேன்!!!!!!
அதற்கு முழுமுதற் காரணம் தங்களின் வருகை தானா????? ” மைத்ரேயியின் கேளி பேச்சிற்கு
“அடடே!!! அவ்வளவு மிஸ் பண்ணிவிட்டதா??????
ஓவர் டைம் ட்யூட்டி பார்த்து டேலி செய்து விடுகிறேன்!!!!!!” என்றிருந்தாள் விதுல்யா.
மேலும் ” ரொம்ப சின்ன பொண்ணாக தெரிகிறீர்கள் !!!!
நீங்கள் ஒரு டாக்டர்……. உங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை!!!!!!”
உண்மையாக அதிசயப்பட்ட விதுல்யா
” இங்கே இருக்கும் பேபி கேரில் உங்கள் பையனை சேர்த்து இருப்பதாக டாக்டர்.மது சொன்னார்கள்……
சமத்தாக இருந்து கொள்வாரா???”
யதார்த்தமாக விசாரணை மேற்கொண்டாள்..
“அதெல்லாம் சோட்டு ஒரு பிரச்சனையும் கொடுக்க மாட்டான்………” பெருமை பொங்கி கூறிய அன்னையிடம்
” ஸ்வீட் பாய் ….. அப்போது அந்த ஸ்வீட் சோட்டுவை நேரில் பார்த்தாக வேண்டுமே!!!!???
” இல்லை…. அது இன்று சோட்டுவை வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கிறேன்…… இந்நொரு நாள் கட்டாயம் பார்க்கலாம்!!!!!”
“ஹோ.. வீட்டில் பார்த்து கொள்ள ஆள் இருக்கிறார்களா??????
அதுவும் நல்லதுதான்…..
சொல்ல போனால் அது தான் பெஸ்ட்!!!!!
என் அண்ணிக்கு பையன் பிறந்த உடனே அவர்கள் வேலையையே ரிஸைன் பண்ணிவிட்டார்கள்…….
ஆதிக்கு இப்போது இரண்டு வயது ஆகிறது…
‘வீட்டில் அம்மா ஆதியை பார்த்துக் கொள்வார்கள் .. நீங்கள் ஆபிஸ் போய் உங்க வேலையில் ஜாயின் பண்ணுங்கள்’ என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள் !!!!
‘ ஆதியை விட எந்த ஆபிஸும் முக்கியமில்லை என்று தன் வேலையை கட் அடித்து கொண்டு அந்த அடங்காத வாலு பின்னாடியே சுத்திட்டு இருக்கிறார்கள்!!!!!!!!
ஆனால் என்ன தான் பேபி கேரில் வசதியாக இருந்தாலும் வீட்டில் பார்த்துக்குற மாதிரி வராது தானே???????” என்று மூச்சுவிடாமல் பேசிய விதுல்யா
” சாரி நான் கொஞ்சம் உளறு வாய்!!!!!! ஓவராக மொக்கை போட்டு விடுவேன்……” என்று தன் பேச்சை நிறுத்தினாள்.
“அச்சோ நீங்கள் வேற!!!!!
யாருடா என்னிடம் இப்படி பேசுவார்கள் என்று தான் நானும் காத்து கொண்டு இருந்தேன்…… எது வேண்டுமானாலும் பேசுங்கள்!!!!” என மைத்ரேயி விதுல்யாவின் நட்பை இறுகப் பற்றிக்
கொள்ள நினைக்க
ஆனால் அந்நட்பின் ஆயுட்காலமோ இன்னும் இரண்டே நிமிடத்தில் முடியபோவது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை…..
” நான் பேசமாட்டேன்பா!!!!
நீங்க வாங்க போங்க என்று இப்படி மரியாதை இல்லாமல் இப்படி பேசினால் எல்லாம் நான் பேச மாட்டேன்பா!!!!!” என்ற விதுல்யா
” உன்னை விட ஒரு வயது தான் நான் பெரியவளாக இருப்பேன் …….
ஸோ….
சீனியர் சொல்கிறேன்…
மரியாதையாக நீ !! வா!! போ!! என்று கூப்பிடு சரியா??????” என்று கேட்க
” உத்தரவு சீனியர்!!!!!!” என்று தலையை சற்று குனிந்தபடி உரைத்தாள் மைத்ரேயி…
“சரி சரி காலில் விழுந்தது போதும்!!!!!!!! எழுந்திரு மைத்தி”
” எப்பவும் இப்படிதானா????
இல்லை… இப்படித் தான் எப்பவுமா?????” என்று விதுல்யாவின் குணத்தில் மிகவும் பிடித்துபோய் மைத்ரேயி வினவ
“பிறந்ததலிருந்தே!!!!!!!!!!
ஆனால் ஒருவரை பார்த்தால் மட்டும் இந்த லிப்ஸ் ஃபெவிக்கால் இன்றி ஒட்டிக் கொள்ளுமாக்கும்!!!!” என்று சோக கீதம் பாடினாள் விதுல்யா.
“ஓ !!!! அப்படி யாரு அந்த மேஜிக்கல் பெர்சன்??????? “
“என் அண்ணியின் தம்பி….
உன்னிடம் பேசினால் நேரம் போவதே தெரியவில்லை மைத்தி !!!!!
அதிலும் நான் இப்போது அவரை பற்றி பேச ஆரம்பித்தால்….
பூத்து குழுங்கும் இந்த கேர் ஹாஸ்பிட்டலை விட்டு என்னை ரிஸைன் பண்ணினாலும் பண்ணி விடுவார்கள் !!!!!!
வாங்குகிற ஃபீஸிற்கு கொஞ்சமாவது வேலை பார்த்து விட்டு வருகிறேன்……
லஞ்ச் டைமில் மீட் பண்ணலாம்…. பை மைத்தி!!!!!!” என்று திரும்பி நடந்தவளின் நீண்ட கூந்தலை பார்த்தவளுக்கு சம்பந்தமே இல்லாமல்
தன் குட்டையான சுருள் கேசத்தையும் கண்டு ” ஏன்டி பஜாரி என்னை ஏமாற்றினாய் ??????” என்ற கணவனின் சொல் நினைவிலாடியது………
” உங்… உன் ஹேர் ரொம்ப சூப்பராக இருக்கிறது விது…… எப்படி இதை மெயின்டெய்ன் பண்ணனும் ??????”
பார்த்ததும் நெருங்கிய
தோழியானவளிடம் தன் முடியைத் தொட்டு பார்த்தவாறு மைத்ரேயி கேட்க
கதவு வரை சென்ற விதுல்யா திரும்பி நின்று பதிலளித்தாள்….
இப்போது தான் நாமே வளர்ந்துட்டோமே இது எதற்கு ??? கட் பண்ணி விடலாம் என்று பார்த்தால்……..
அண்ணியின் தம்பிக்கு இது தான் பிடித்து தொலைத்திருக்கு…. ரொம்ப கஷ்டம் பா..” லேசாக வெட்கம் பூசி சென்றதோ அவள் முகத்தில்……..
சற்று முன் தானே அவள் அண்ணியின் தம்பியிடம் பேச மாட்டேன் என்றாள்!!!! ஆனால் பிடித்ததையெல்லாம் செய்வாளாமாம்????? மனதுள் எட்டி பார்த்த
வரிகளை அப்படியே எதிர் நின்றவளிடம் கொட்டி இருந்தாள் மைத்ரேயி.
“பேச மாட்டாய்!!!! ஆனால் பிடித்ததெல்லாம் தெரியுமோ???????” விதுல்யாவின் சந்தோஷம் தன்னையும் தொற்றி கொள்வதாய் அவள் மனம் கவர்ந்தவனை பற்றி கேள்வி எழுப்பினாள் மைத்ரேயி…
” ஓட்டாதே மைத்தி!!!!
இனி என்ன ஆனாலும் சரி அவரிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன்…..
ஆனால் இப்போது கதம் கதம்!!!!!!!
இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாதே!!!!!
எதுவென்றாலும் லஞ்ச் டைமில் பேசி கொள்ளலாம்….
அதிலும் அவரை பற்றி பேசவே பேசாதே!!!!!” என்று சற்றுமுன்
பரிச்சயமான தோழியின் அருகில் வந்து
அவளது இதழ்களை ஒரு கரத்திலும் தன் இதழ்களை இன்னொரு கரத்திலும் மூடி நின்றவளிடம்
மதியம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்???????
இப்போதே அனைத்தையும் பேசி தீர்த்து விடுவோமே!!!!!! என்பது போல் உள்ளே நுழைந்திருந்தான் பிரணாவ்………
காரை உரிய இடத்தில் பார்க் செய்த பிரணாவின் மனதில் ஒரே ஒரு கேள்வி தான்!!!!!!!
அக்கேள்வியை உடனே தன் மனைவியிடத்தில் கேட்டு விட நினைத்தவன்
‘இப்போது உள்ளே போகாதே!’ என்பது போல் போன் அவனை அழைத்து தடுக்கவும்……
அலுவல் நிமித்தமாக அழைத்தவரிடம் பேசியதில் கால் மணி நேரத்தை கடத்தியிருந்தான்.
அவனுள் உதித்த கேள்வியை அவளிடத்தில் சேர்த்து அதற்கான விடை கிடைக்காமல் கிளம்ப முடியாது என்று எண்ணியவன்
தன் பெயரையும் சேர்த்து தாங்கிக் கொண்டு மிளிரந்த அவளின் அறைக் கதவை தட்டாமலேயே திறந்தான்……
பிரணாவை அங்கு எதிர்ப்பாராத விதுல்யா சிறு பதற்றமடைந்த போதும் சிறு துணிவை வர வழைத்து
” என்ன அத்தான் இந்த பக்கம்????
ஒருவேளை என்னைப் பார்க்க வந்தீர்களா?????
இரண்டு வாரங்களுக்கு முன்னே என்னைத் தேடி வீட்டிற்கு வந்து
இருந்தீர்களாம்……
நான் குஜராத் கேம்ப் போயிருந்தேன்!!!!
அம்மா காலையிலேயே உங்களைப் பற்றி பேச போவதாக சொன்னார்கள்….
ஆனால் நான் இங்கே வந்துவிட்டேன்….
எதுவும் முக்கியமான விசயமா அத்தான்??????”
ஆரம்பத்தில் தயங்கியபோதும்
இனி பிரணாவுடன் பேசியே ஆக வேண்டும் என்று உருப்போட்ட மந்திரம் விதுல்யாவை தெளிவாக உரையாட வைத்தது…..
அந்த தெளிவு!!!!
அவள் கண்களில் தெரிந்த ஆசை!!!!
உள்ளே நுழைந்தவனின் கலக்கம்!!!!
இவையனைத்தும் அவர்களுக்கு சற்று தள்ளி நின்றவளை போரில் முதுகு புறமாய் குத்திய கத்தியாக அச்சுறுத்தியது……
அவ்வாறு உடைந்து போயிருப்பினும் நூற்றில் ஒரு சதவீதமாக நப்பாசை ஒன்று தன்னை தழுவி கொள்ள கணவன் கூறவிருக்கும் பதிலுக்காக செவி சாய்த்து நின்றவளை அவனின் வார்த்தைகள் சுக்குநூறாக கிழித்து எரிந்தது!!!!!!!