பிரணாவ்  அவ்வறையை விட்டு சென்றும் அவனின் நினைவுகள் அவளை விட்டு அகன்ற பாடாக தெரியவில்லை….

உதிதா…. இல்லையில்லை…. அண்ணி…. உதிஅண்ணி!!!! கட்டாயமாக அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று உதிதா தன்னிடம் கூறியிருந்தாள்…….

உதிஅண்ணியின் ஒற்றைச் சொல்லை தட்ட மாட்டாமல் எப்படி வந்து தாலி கட்டினான்????????????

 இந்த ஒற்றைக் கேள்வியே

சோட்டுவுடன் தன் முழு நாளை செலவழித்து இருந்ததையும் மீறி மனதை குடைந்து கொண்டே இருந்தது!!!!

அவன் வாழ்வையே பணையம் வைக்கும் அளவிற்கு பாசமலர் !!!!!!

நல்லவன் தான் …….

இனி தன் மகனுக்கும் தனக்கும் அந்த அயோக்கியனால் சட்டப்படி எந்த பிரச்சனையும் விளைய போவதில்லை என்பதற்கு ஏற்ப அரணாய் வந்து காத்து நின்றவன் தான்……

 உதிஅண்ணி குடும்பத்தின் மீது தன் மனம் விதைத்த சிறு நம்பிக்கை

 மாலை சென்னைக்கு வந்ததும் நடந்தேறிய நிகழ்வுதனில் சுக்குநூறாய் கிழிந்திருத்த அந்த சமயத்திலும் மகனை தோளில் சாய்த்து தன் கரத்தை பிடித்து ஆதரவாய் நின்றவன் தான்…….

 இவையனைத்தும் இருந்தும் அவள் மனதை நெருடிய விசயமோ வேறு!!!!!

 பிரணாவின் அன்னை காஞ்சனா தன்னை குறிப்பிட்டு உதிஅண்ணியிடம் ‘பாதாளக் குழியில் என் மகனை தள்ளி விட்டாயா????’ என்று கேட்ட போது

 இக்கடுஞ்சொல்லை கேட்க நேர்ந்ததற்கு

அதே குழியில் தான் விழுந்து இருக்கக் கூடாதோ என்றல்லவா தோன்றியது ???!!!!

விவரமறிந்த நாட்களிலிருந்து அம்மா பாசத்தை ருசித்திராதவள் வரவிருக்கும் மாமியாரிடம் டபுள் போனஸை போட்டு அன்னை அன்பை நிவர்த்தி செய்துகொள்ள ஏயங்கியவள் …….

ஆனால் எப்போது அந்த பொறுக்கியின் கண் பட்டதோ அன்றே தன் வாழ்வு கேள்விக்குறியானதோடு தினம் தினம் பல அதிசய த்ரில்லர்களை சுமந்து பயணிக்கிறது ……

அவள் திருமணம் செய்து கொள்ள இருந்த வியான் …….  கொஞ்சம் தூரத்து சொந்தம் தான்………

 அவனுடைய அம்மா ஓர் அன்னையைப் போல் அவளிடம்  பாசத்தை பொழியாத போதும் ஒருநாளும் அவளை வெறுத்து

ஒதுக்கியதுமில்லை…….

அதிலும்  சோட்டு பிறந்து முதல் மூன்று மாதங்கள் அவர் செய்த உதவிகளோ இன்றியமையாதவை…..

 வியான் அவளை திருமணம் செய்து கொள்ள போவதாக அவன் அன்னையிடம் தெரிவித்த போதும் அவரிடம் எந்தவித எதிர்ப்பும் எழவில்லை…..

”  இந்தக் கல்யாணம் நடக்குமா ?????

அந்த அரசியல்வாதி நடக்க விடுவானோ!!!!!”

 என்ற ஒரு பயம் இருந்ததே தவிர சோட்டுவோ அவளோ அவர் பார்வையில் சற்றும் தாழ்ந்து விடவில்லை……

 ஆனால் இன்று முகத்திற்கு நேரே வார்த்தைகளைக் கொட்டி காயப்படுத்தாத போதும்

அவளுக்காக உதிஅண்ணியும் பிரணாவும் ஏற்றம் பாரம் மனதை கசக்கியது!!!!!

நடப்பு அவளுக்குப் புரியாமல் இல்லை……

 இன்றைய அழுகையும் கோபமும் அதீத அன்பின் வெளிப்பாடு என்று உணர முடிந்தது…..

இதுவே தான் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்துகொண்டு

அதிலும் தன் துணையானவனுக்கு கையில் ஒரு குழந்தை இருந்தால் தன் தந்தையும் இப்படித் தான் திட்டி இருப்பாரோ ?????

திட்டி இருப்பாரோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக வருத்தப்பட்டு இருப்பார்!!!!!!!!

அத்தகைய வருத்தம் தான் இப்போது பிரணாவ் குடும்பத்திற்கு அதுவும் தன்னால் ஏற்பட்டிருக்கிறது என்று

எண்ணி நன்கு யோசித்து  ஒரு முடிவுக்கு வந்தாள் ……

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த குடும்பத்தை விட்டும் பிரணாவுடன் உருவான இந்த பந்தத்தை விட்டும் ஒரேடியாய்  வெளியேறி விட வேண்டும்!!!!!!

 அந்த அயோக்யனின் நடவடிக்கையை  பொருத்து தன் அடுத்த கட்ட முடிவை  எடுத்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்……

அதுவே இவ்வன்பு கூட்டை பிரிந்து தனக்குத் தாலி கட்டிய பாவத்திற்காக வெளியேற நினைத்தவனுக்கு தான் செய்யும் நன்றி கடனும் கூட!!!!!!!!!

 அனைத்தையும் யோசித்து களைத்தவளுக்கு

திடீரென பிரணாவ்  தன்னை நெருங்கி வந்தது ஒருவித குறுகுறுப்பை உண்டு

பண்ணியது நினைவுகூற

நல்ல வேளை சோட்டு தடுத்து வைத்தான்!!!!!

 இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்?????

 மிரட்டுவதற்காக என்றாலும் இப்படியா செய்வார்கள் ??????

அம்மாடி……..

மீண்டும் ஒருமுறை முன்பு போல் உடலை நடுக்கிக் கொண்டவள்

அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்

எங்கு செல்ல வேண்டும்  என்பதை எல்லாம்  சிந்தித்து கண்ணயர அதிகாலை 4:30 மணி ஆனது …….

சரியாக ஐந்து மணிக்கு ” எழுந்திரிடா பிரணாவ்……. இன்று ஒரு நாளாவது அப்பாவிடம் திட்டு வாங்காமல் இருந்து விடுடா பிரணாவ் ” யாரோ கத்த கேட்டு அதிர்ந்து விழித்தவள் சுற்றும் முற்றும் தன் பார்வையைச் சுழல விட்டாள்…..

சோட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க மீண்டும் அக்குரல் ஒலிபரப்பானது…..

 “சோற்றில் உப்பு போட்டு தானே அம்மாவும்  யசோம்மாவும் பிசைந்து கொடுக்கிறார்கள் !!!!!! அப்புறமும் ஏன் பிரணாவ் உனக்கு சுரணையே வர மாட்டேன்கிறது?????????”

 தான் இருந்த அறையில் வேறு யாரையும் காணாது பேச்சு வந்த திசையில் இரு ஆளுயர  ஜன்னல்கள்  மட்டுமே இருக்க……

சற்று  பயந்த படியே மாட்டப்பட்டிருந்த ஸ்கிரீனை நீக்கி பார்த்தவளுக்கு அங்கு ஆள் அரவம் இல்லாமல் போனதும் திடுக்கிட்டது….

 யார் பேசியது????? என்று அவள் மலைத்து நிற்கையிலேயே

” இப்படியே இருந்தாய் என்று வை…..

உன்னை ஓட ஓட விரட்ட போகிறாள்  வரப்போகிறவள் !!!!!”

 எனும் சத்தம் கேட்க பேய் பிசாசுகளின் மீது நம்பிக்கை இல்லாதவளுக்கு இப்போது நடுங்கி விட்டது …..

சில நாட்களில் இங்கிருந்து சென்று விடலாம் என்று நேற்று எண்ணியவை அனைத்தும்  மறந்து

 இப்போது இந்த நொடியே இவ்வீட்டை விட்டு ஓடிவிடலாம் என ஆயத்தமாகி தூக்கத்தில் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டவள் என்ன கனவா கண்டிருப்பாள்!!!!???????

 இவ்வளவு கூப்பாட்டிற்கான காரணமும்  ஜன்னல் திரைச்சீலையின் பின் நேற்று சோட்டு வீசி எரிந்த அலாரம் க்ளாக் தான் என்பது!!!!!!!

 குழந்தையோடு ரூமை விட்டு வெளியேறியவளை

“நான் ஒன்று சொன்னால்

செய்வாயா?????? அடேய்!!!! அதற்கு முதலில்  என்னை பாருடா பரதேசி!!!!!! அப்போது தான் நான் சொல்வதே உன் காதில் கேட்கும்…….”  எனும் மிரட்டல் துரத்த

அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள் பயத்தில்….

 அங்கோ இவ்வுலகத்திலே இல்லாது மற்றொரு புதிய பிரபஞ்சத்தில் துயில் கொண்டிருப்பவனை போல் படுத்திருந்த கணவனை நொடியும் தாமதிக்காமல் எழுப்பியவள்

” அங்கே என்னமோ சத்தம்…… யாரோ பேசுகிறார்கள்!!!!!”  என்று வியர்க்க விறுவிறுக்க கத்தினாள்.

உடனே திடுக்கிட்டு தூக்கி வாரி போட்டு பதறி எழுந்தான் பிரணாவ்…..

” யாரோ பேசுகிறார்கள்…… யாரோ பேசுகிறார்கள்……”  மீண்டும் மீண்டும்

அதையே அவள் சொல்ல

ச்சு ……இவள் தானா எழுப்பியது !!!!!

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனுக்கு கையில் குழந்தையோடு பயந்த விழிகளுடன் நின்றவளை கண்டதும் ஒரு மாதிரி தான் இருந்தது…..

 இருந்தும் ” என்ன இப்போது?????”  என்றான்  கெத்தாகவே.

” அது ….. அங்கு யாரோ பேசுகிறார்கள்!!!!”

 சற்றே எரிச்சலுடன் ” பேசினால் பதில் பேச வேண்டியது தானேடி பஜாரி……

 இங்கே வந்து ஏன் என் உயிரை எடுக்கிறாய்??????” பிரணாவ்  சிடுசிடுக்க

”  பேசுகிறவர்கள் யார் என்று தெரிந்தால் நான் பேச மாட்டேனா?????”  கடுப்புடனே பதிலளித்தாள் இம்முறை.

” என்னடி உளர்ற?????

காலங்காத்தாலேயே குடித்திருக்கிறாயா??உங்கூரில் அதெல்லாம் சகஜம் தானே!!!!!”

“டேய் மரியாதையா எழுந்திருச்சு வா… அப்போது தெரியும் யார் உளருகிறார்கள் என்று”

“என்னது டேய்யா???????” பொங்கியவனின் மனம்

 எதேச்சையாக அவள் தோள் வளைவில் படுத்திருந்த சோட்டுவின் கையில் மாட்டியிருந்த தன் சிறு கற்றை முடியை பிரித்து பின் பக்கமாய் போட்டுக் கொண்டவளை கண்டதும் 

“நான் எங்கு? எப்படி இருக்க வேண்டியவன்???????” கவுண்டமணி டயலாக் ஒன்றை கவுண்ட்டர் அடிக்க

தன் தலைவிதியை நொந்து கொண்டபடி 

அவளைப் பின் தொடர்ந்தான் .

“எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி இப்படியே இருந்தாய் என்று வை அந்தப் விது பேபியை மடக்குவது கஷ்டம் ….. ஆமாம் சொல்லிட்டேன்!!!!!”

 சரியாக அறையினுள் நுழையும் சமயம் இச்சொற்களை கேட்க நேரவும் ஒலி வந்த திசையில் ஓடிச்சென்று   ஸ்கிரீன் பின்னால் இருந்த அலாரம் கிளாக்கை எடுத்து அமர்த்தி இருந்தான் பிரணாவ்….

 ஏனென்றால் அதன் பிறகு அவன் பதிவு செய்து வைத்திருந்தவை அப்படி!!!!!

 கணவனின் கையிலிருந்த கடிகாரத்தை காணவும் தன் சிறுபிள்ளை தனத்தை எண்ணி  இதழ்களை மடித்து நின்றவளை பார்த்தவனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது……

 வலுக்கட்டாயமாக தன் பார்வையை அந்த ரோஜா மொட்டிதழ்களிடமிருந்து பிரித்தவன்

” இந்த அலாரம் கிளாக்கிற்கா இவ்வளவு ஸீனு?????” கோபமாக கேட்டான் .

“எந்த மடையனாவது காலையில் எழுந்திருக்க இப்படி அவனே இந்த கத்து கத்துவானா???????

 நீ எல்லாம் எப்படி தான் உதிஅண்ணிக்கு தம்பியாய் பிறந்தாயோ !!!!!!!!!” அவளும் பாய்ந்தாள்….

 தன் அக்கா பெயரைக் கேட்டதும் அவ்விடம் விட்டு வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து சென்று விட்டான் பிரணாவ்….

 அவனுக்கு தன் தமக்கையின் மீது இப்போது புதியதொரு கோபம் முளைத்து இருந்தது………

 இவ்வளவு சிறிய பெண்ணை கட்டி

வைத்ததை எண்ணி!!!!!

ஒரு அலாரம் கிளாக்கிற்கு பேயை கண்டதைப் போல் இப்படி அலறுகிறாள்???!!!!!

 இதில் அடிக்கடி அந்த ரோஸ் பட்  வேறு தன்னை வில்லனாக முயல்கிறது!!!!!!

 இவளிடம் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது என்று சட்டென முடிவெடுத்தவன் அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்று விட்டான்…..

 பிரணாவின் ‘பகானி ஜோன்டா’ அவன் கைகளின் கட்டுப்பாட்டை மீறியும் வேறொரு இடத்திற்கு தான் முதலில் சென்று நின்றது…..

 அங்கு கிடைக்கப்பெற்ற ஏமாற்றத்தில் அலுவலகத்திற்கு சென்றவன் வேலையில் தன்னை முற்றிலும் தொலைத்துக் கொண்டான் .

கதிரேசனுக்கு மகனின் கார் அலுவலகத்தில் ஒன்பது மணிக்கு முன்பே நிற்பதைக் கண்டு அளவுகடந்த ஆச்சரியம்……

 அதிலும் ஃபார்மல் உடையணிந்தது….

  இவை  அனைத்தையும் விட பிரணாவ் கழுத்தில் போன மாதம் பிறந்த நாளின் போது அவர் வாங்கிக் கொடுத்திருந்த ‘டை’யை பார்த்ததும் பேச்சே எழ மறுத்தது.

 ஆம் எப்போதும் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட் சகிதமாக இருப்பவனுக்கு இப்படி உடை அணிந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் மற்ற தினத்தில் சொன்னால் கேட்டுக் கொள்ள மாட்டான் என்பதால் பிறந்தநாளன்று ஒரு ‘டை’யை ஆசையாக பரிசளிக்க

பிரணாவ் “ஐயோ அப்பா இதெல்லாம்

ஓல்ட் பெல்லோஸ் அணிவது…… நான் உபயோகிக்க  மாட்டேன்” என்றதோடு

“இந்தா உதிக்கா யுகன் மாம்ஸ் டை கட்டுவார் தானே……  அவரிடம் கொடுத்து விடு” என்று தன் அக்காவிடம் நீட்டி இருந்தான் .

“அப்போது என் புருஷனை ஓல்ட் ஃபெல்லோ என்கிறாயா டாங்கி”  என்று உதிதா துரத்தியதும்

”   ஒரு மங்கியை வைத்து மேய்த்து மேய்த்தே மாம்ஸ் ஓல்டு பெல்லோ ஆகிவிட்டார் ஒடிதா” என்று பிரணாவ் ஓடியதும் கதிரேசனின் நினைவில் ஆடியது.

 பிரணாவ் தான் இன்று செய்ய வேண்டிய பணியை அதிவிரைவில் முடித்ததோடு

சில மாதங்கள் சற்று இழுபறியாகவே கிடந்த டெல்லி காண்ட்ராக்ட் ஒன்றின் காரணகர்த்தாவை கண்டுபிடிப்பதில் மூழ்கியிருந்தான்.

 இதையெல்லாம் கவனித்தாலும் மகனிடம் ஒரு வார்த்தை கதிரேசன் பேசி விடவில்லை …..

அப்போது அவருக்கு ரகுநாதனின் அழைப்பு வரவும் பிரணாவை  ஒரு முறை பார்த்துவிட்டே அதை ஏற்றார் .

“போன காரியம் என்ன ஆனது ரகு?????”

“அதெல்லாம் முடிந்தது அண்ணா…..

 யசோதா சொன்னாள்….. பிரணாவ் கல்யாணம் பற்றி!!!!!!”

“யார் கல்யாணம் பண்ணினால் நமக்கு என்ன?????? நீ இன்று வந்து விடுவாய் தானே?????”

” உங்கள் கோபம் புரிகிறது அண்ணா…..

 என்ன இருந்தாலும் நம்ம பையன் வாழ்க்கை!!!! கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே!!!!”

” எப்படி அனுசரிப்பது?????

 ஹோ ஒரு வேளை உன் பொண்ணு கட்டி வைத்தாள் என்பதற்காக

எல்லோரும் சரி சரி என்று தலையை ஆட்ட வேண்டுமா???????”

 அவர் அப்படி கேட்டதும் வேகமாக தன் இடத்தில் இருந்து எழுந்து வெளியே போய்விட்டான் பிரணாவ்.

 ரகுநாதனும் போனை அணைத்து இருந்தார்…

 கதிரேசனின் கோபத்திற்கான நியாயம் ரகுநாதனிற்கு புரிந்தது…..

 கோபத்தில் வார்த்தைகளை அள்ளி வீச கூடியவர் தான்…..

 ஆனால் மறுநிமிடமே தன் வருத்தம்

ஓடிவிட்ட நிலையில் அரவணைக்கவும் தவறமாட்டார்……

 அப்படித் தான் இன்று உதிதாவை ஒதுக்கி பேசியதும்….

 மென்மேலும் பேசினால் வீண் வருத்தமே மிஞ்சும் என்பதை உணர்ந்து தான் போனை வைத்திருந்தார் ரகுநாதன்.

 “உதிதாவை சொன்னால் இவன்கள் இருவருக்கும் பொறுக்காதே!!!!!”

மகனின் மீதும் தம்பியின் மீதும் ஆவேசப்பட்டார் கதிரேசன்.

அவள் செய்த காரியம் மட்டும் என்ன சின்னதா??????

 எப்படி அவளால் இப்படி திடீரென ஒரு கல்யாண பந்தத்தில் உடன் பிறப்பை திணிக்க முடிந்தது அதுவும் ஒரு சுமையோடு?????? என்று அவரது ஒரு மனம் கேள்விகளை தொடுக்கும் போதே

“ஏன் நீ செய்யவில்லை??????????” என்று

மறுமனம் எதிர் கேள்வி கேட்டு வைத்தது…

 அன்று  பிரணிதா ஓடிப்போய் இருந்த நிலையில் இதோ இதே உடன் பிறப்பு ‘வேண்டாம்’ என்று அவ்வளவு மன்றாடிய போதும்

“நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன் பெரியப்பா”  என்று மணமேடை ஏறியவள்!!!!!!!!

 அவளையா என்று இப்படி பிரித்து பேச நேர்ந்தது??!!!

பிறந்ததிலிருந்து பிரணிதாவிற்கும் உதிதாகவிற்கும் பாகுபட்சம் ஏதும் பார்த்ததில்லையே…..

இவ்வளவு  ஏன் பிரணிதாவை விட உதிதா தானே தன்னிடம் அதிகம் செல்லம் கொஞ்சுவாள்…..

 அவளது இப்போதைய  செய்கையில் நியாயமே இருப்பினும் அவளால் எப்படி தன்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல்

இவ்வளவு பெரிய காரியத்தை  இப்படி சாதாரணமாக  செய்ய முடிந்தது??????? என்ற வறட்டுப் பிடிவாதம் தலைதூக்க

கோபம் என்னும் முகமூடி அவர்  கொண்ட அன்பு அனைத்தையும் ஒளித்து வைக்க

அதை அவர் கையிலிருந்த ஃபைல் ஒன்றிடம் காட்டி  ‘டப்’ என்று அதனை மூடிவிட்டு எழுந்து சென்று விட்டார்….