தன் சிற்றன்னை யசோதாவிடம் பேசி விட்டு மாடி ஏறி தன் அறைக்கு சென்ற பிரணாவ் அங்கு கண்ட காட்சியில் அப்படியே உறைந்தான்…..

இது தன் அறை தானா????? அல்லது மாறி வந்து விட்டோமா???? என்று ஒரு நொடி வெளியே சென்று உறுதி செய்து கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்திருந்தான் ….

 எப்போதுமே எடுத்த பொருட்களை அதே இடத்தில் வைத்து பழக்கப் பட்டிருந்த பிரணாவ்  தன் அறையை சற்றே கூடுதல் கவனத்துடன்

கண்ணை கவரும் அலங்காரப் பொருட்களை ஆங்காங்கே தொங்கவிட்டும் நிறுத்தி வைத்தும் மெருகேற்றி ரசித்ததோடு

கண்டிப்பாக  உள்ளே யாரையும்

அனுமதிக்காமல் அவனறையை அவனே பராமரித்தும் வந்தான் ……

அந்த அறை பிரணாவிற்கு என்று ஆன பிறகு அங்கு நுழைந்த மற்றொரு ஜீவன் அவனது உதிக்கா மட்டுமே!!!!

  ” ஹப்பா சாமி !!!!! அந்த மியூசியத்திற்குள் எந்தப் பொருளிலாவது என் கை தெரியாமல் பட்டுவிட்டால் அந்த டாங்கியிடம் என்னால் திட்டு வாங்க முடியாதுப்பா!!! என்று தம்பியின் அறைக்குள்ளே சென்றிராத பிரணிதாவோ

பிரணாவ் இல்லாத சமயங்களில் அவளுக்கு அங்கு ஏதாவது  பொருள் தேவைப்படுமாயின்  உதிதாவை தான் அணுகுவாள்……

 அப்பேர்பட்ட கண்காட்சி இன்று காண சகிக்காத குப்பை கூடமாக பிரணாவிற்கு  காட்சி தர சுர்ரென்று ஏறிய கோபத்துடன்

”  ஏய் பஜாரி !!!! வந்தவுடன் ஆரம்பித்து விட்டாயா??????  என்னடி பண்ணி வைத்திருக்கிறாய் என் ரூமை?????”

 அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீசி எறியப்பட்டிருந்த அவன் பொக்கிஷப் பொருட்களை நோட்டமிட்டவாறு  கத்தினான்.

“தோடே தீமே ஸே பாத் கர்த்தோ……. பகுத் முஸ்கில் ஸே சோட்டு சோயா ஹை!!!!!!!”

(”  கொஞ்சம் அமைதியாக பேசுங்களேன்…… ரொம்பவும் போராடி இப்போது தான் சோட்டு தூங்கி இருக்கிறான்  !!!!!!!”)

என்று அவசரமாக மொழிய

கண்ணெதிரில் நிற்பவள் கதைப்பது ஹிந்தியில் என்பது கூட தெரியாமல் ஒரு மூலையில் கிடந்த போட்டோவை

வேகமாக சென்று கையில் எடுத்தான் பிரணாவ்.

அது பிரணிதாவிற்கு உதிதாவிற்கும் நடுவில் பிரணாவ் அவர்கள்  தோளில் கையை போட்டபடி நின்றிருக்கும்  புகைப்படம்……

 அவன் மனதிற்கு  மிகவும்  நெருக்கமான அந்த போட்டோ ஃபிரேம் இப்படி தூக்கி வீசப் பட்டிருப்பது  கண்டு ருத்ர தாண்டவமாய்

“யாரை கேட்டு என் பொருட்களில் எல்லாம் கை வைத்தாய்??????? அதுவும் இப்படித் தூக்கி எரிந்து இருக்கிறாயே!!!!!! இதன் வேல்யூ என்னவென்று உனக்கு தெரியுமா????? உனக்கு அக்கா தங்கை இல்லை அண்ணா தம்பி யாராவது இருக்கிறார்களா?????? இதன் அருமை புரிவதற்கு!!!” ஆத்திரமாய் பாய்ந்தான்….

“சோட்டு பகுத் ரோ ரஹ தா….. கொய் பி சீஸ் சே சோட்டு கா ரோனா பான்ட் நஹி

ரோ ரஹதா!!!!! பிர் ஏ போட்டோ தேக்தே ஹி உஸி ஜஹா பர் ஸோ கயா…… மைனே சோட்டு கோ நீச்சே சே உடாகர் பெட் மெயின் லிட்டா தியா…. சோச் ஹி ரஹி தி போட்டோ உட்டாகர் டங்வா டூன், கப் டக் ஆப் ஆ கயே!!!!!!!”

(“சோட்டு அழுதுகொண்டே இருந்தான்….. எந்த பொருட்களை பார்த்தும் அழுகையை நிறுத்திய பாடாக தெரியவில்லை!!!!! அப்புறம் இந்த போட்டோவை பார்த்து கொண்டே அப்படியே அதே இடத்தில் தூங்கி விட்டான்….. அவனை மட்டும் தூக்கி பெட்டில் படுக்க வைத்தேன்…. போட்டோவை எடுத்து மாட்டி விட்டு விடலாம் என்று தான் நினைத்திருந்தேன்……. ஆனால் அதற்குள் நீங்கள் வந்து விட்டீர்கள்!!!!!)

இவ்வளவு நீள ஹிந்தி வசனத்தை கேட்டவனுக்கு தலையே சுற்றியது!!!!

” அடியேய்  உன்னிடம் காலையிலேயே

சொன்னேனா இல்லையா?????

உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது…. இனி உன் மதர் டங்கை சுத்தமாக மறந்து விட வேண்டும் என்று ?????? “

பிரணாவின் அந்த அதட்டல் சோட்டுவை  சிணுங்க செய்ய

” சோட்டு து பிர்சே சலூ கர் தியா???? சோ ஜா பேடா, அப் மைன் தும்ஹே சுலாட்டி ஹூன்!!!!!”

(” சோட்டு மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா??? அம்மா தட்டி தரேன்…. தூங்கிடு ப்ளீஸ்டா!!! ” )

குழந்தையின் அருகில் சென்றவள் அவனருகில் படுத்தபடி தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்…..

 ஒரு மனுஷன் பேசிக் கொண்டிருக்கிறேனே!!!! கொஞ்சமாவது

மரியாதைக்கு ‘சரி இனி தமிழில் பேசுகிறேன்’ என்று சொல்கிறாளா???????

 மகனிடம் ஓடி சென்று ஹிந்தியில் சமாதானம் செய்யும் இவளை!!!!!!! என்ன செய்கிறேன் பார்!!!!!

 சோட்டு சற்று கண் அசரும் வரை அதே சூட்டில் காத்துக்கொண்டு இருந்தவன்

 குழந்தையை தூங்க வைத்துவிட்டு கட்டிலை விட்டு அவள்  எழவும்

“இங்கே பார்…….. முதலும் கடைசியுமாக சொல்கிறேன்!!!! நன்றாகக் கேட்டுக் கொள்……  இனி நீ தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் ….. அடுத்து இந்த  ரூமின் உள்ளே வரும்போது எந்தெந்த பொருட்கள் எப்படி எப்படி இருந்ததோ அவை அனைத்தும்  அப்படியே தான் இருக்க வேண்டும்…… கொஞ்சம் மாறினாலும் சின்ன பொண்ணு என்று கூட பார்க்க மாட்டேன்”  என்று பிரணாவ்  சத்தமாக பேச ஆரம்பிக்க

 எங்கு குழந்தை இவன் சத்தத்தில் மீண்டும் முழித்து விடுவானோ??!!! என்று மெத்தையில் உறங்கும் மகனையே  பார்த்து நின்றாள் பிரணாவின் மனையாள்.

அதில் மேலும் ஆவேசமான பிரணாவ்

” ஏய் இங்கே என்னை பாருடி பஜாரி……. இங்க ஒருத்தன் உன்னிடம்  காட்டு கத்து கத்ததிட்டு இருக்கிறேன்…..

 உன் பாட்டிற்கு அந்த அந்தப் பக்கமே திரும்பி கொண்டு நிற்கிறாய்!!!!!! திரும்புடி”   தன் சப்தத்தை கூட்டியிருக்க

” வாயை மூடு!!!!!”  என்றாள் அவன் மனைவி மெதுவாக அதேசமயம் அழுத்தமாக ….

” எ…… என்னது???????  என்னடி சொன்னாய்?????????”  அவள் பேச்சில் முற்றிலும் அதிர்ந்தவன்

சரி தமிழ் இன்னும் நன்றாக தெரியாத பெண் போலும் !!!! பேச தெரியாமல் பேசி விட்டாள் என்று தன்னைத்தானே பிரணாவ்  சமாதானப்படுத்திக் கொண்டு நிற்கும் வேளையில்

“உன்னை தான்டா சொல்றேன்…. வாயை கொஞ்சம்  மூடு !!!!!  உனக்கு தமிழ் தெரியும் தானே????” என்று  எகிறினாள்.

 அதிர்ச்சி ஆத்திரமாக மாறி அவன் கத்த ஆரம்பிப்பதற்குள் அவன் வாயைப் பொத்தியவள் அவனது கரத்தை பற்றி கட்டிலுக்கு சற்று தூர இழுத்து சென்று

” நானும் அப்போதிருந்து பார்க்கிறேன்…. ரூம்!! ரூம்!! என்று ரொம்ப ஓவராக குதிக்கிறாய் …..

நீ முதலில் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்!!!

 இந்த ரூமில் உனக்கு எவ்வளவு ரைட்ஸ் இருக்கோ அதே அளவிற்கு எனக்கும் இருக்கு……..

 இங்கிருக்கும் பொருள் எதை வேண்டுமானாலும் நான் உபயோகப் படுத்திக் கொள்வேன்……

 அதை ஏன் என்று கேட்கும் ரைட்ஸை தான் இன்று காலையில் என்னிடம்  நீ இழந்து விட்டாய்!!!!!!

 அடுத்து என்ன சொன்னாய்?????

 நான் ஹிந்தியில் பேச கூடாதா??!!!!!

“மெய்ன் ஐசே இ பாத் கரூங்கி !!!!! ஆப் கியா கர் லோகே???????????”

 (“அப்படி தான்டா பேசுவேன்!!!!!  உன்னால் என்ன செய்ய முடியும்??????????”)

  கடைசி வாக்கியத்தை மட்டும் இந்தியில்

பிரணாவின் முன்னே சொடக்கு போட்டு மொழிந்தவளை  கண்டவனோ தன்னை மறந்தான்…….

 தன் முன்னே நீட்டப்பட்ட கரத்தை பிடித்து அவளுக்குப் பின்னே கொண்டு  சென்றவன் மற்றொரு கரத்தையும் சிறை செய்து

“வைஃப் ரைட்ஸ் பற்றி பேசுகிறவளுக்கு ஃபர்ஸ்ட் நைட்ல ஹஸ்பன்ட் ரைட்ஸ் பற்றி தெரியாமலா போயிருக்கும்???????” என்றபடி அவனை வம்பிழுத்த அச்செவ்விதழ்களை நோக்கி குனிந்தான் பிரணாவ்.

 இந்த திடீர் தாக்குதலையும் கணவனின்  புதிய பரிமாணத்தையும் எதிர்பாராதவள் அதிர்ச்சியில் சமைய அவளது அந்த மந்தக நிலை அவனுக்கு மேலும் சாதகமாக அமைந்ததோ ……. சுற்றம் மறந்து மேலும் முன்னேறி அவள் இதழை

தீண்ட முற்படுகையில் ‘என் அம்மாவை விடு’ என்பது போல  வீறிட்டு கத்தியபடி பிரணாவை சுயநினைவிற்கு இழுத்து வந்தான் குட்டி மைந்தன்.

 அவசரமாக பிரணாவை தள்ளி விட்டு சோட்டுவை தூக்கச் சென்றவளிடம்

” இது டெமோ தான்!!!!!  இன்னொரு முறை நீ ஹிந்தியில் பேசினாய் என்றால் மெயின் பிக்சரை பார்க்க வேண்டி வரும்….. ஜாக்கிரதை!!!!!!”  என்று எச்சரிக்க அவளுள் குளிர் பிறந்தது .

எதுவும் பேசாமல் உடல் நடுங்க குழந்தையைத் தோளில் கிடத்தியவள்

 சோட்டுவின் அழுகையை நிறுத்தியதும் அவனது தூக்கம் முற்றிலும் கலைந்து போயிருந்தது ……

அப்போது தான் கண் விழித்தவன் போல்

அன்னையின் ஜடையை பிடித்து இழுத்து சோட்டு விளையாட ஆரம்பிக்க

தன்னுள் ஏற்பட்ட  இயலாமை கோபமாய் மாறி ” உனக்கு இப்போது என்னடா வேண்டும்???? இதுதானே!!!!! இந்தா பிடி  நீயே வைத்துக்கொள் !!!!!!!” என்று கூறியபடி  தன் ஜடையை முன்பக்கமாய் இழுத்து மணமகள் அலங்காரத்திற்காக சேர்த்து பின்னப்பட்டிருந்தது சவுரி முடியை பிரித்தெடுத்து மகனிடம் நீட்டினாள்.

 அக்காட்சியைக் கண்டவனின் இதயமோ சுக்குநூறாய் வெடித்தது !!!!!!

”  என்னடி இது ?????? ” தன்னுள் எழுந்த அதிர்ச்சியை அப்படியே வெளிப்படையாக சத்தமாக கேட்டு வைத்தான் பிரணாவ்…..

 இந்த திடீர் திருமணத்தையும் …….

ஏன் அவள் ஒரு ஹிந்தி காரி …..

அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறான் என்பதை கூட ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதவனுக்கு

தன்னை விட ஒரு நான்கு சென்டிமீட்டர் நீளமாக அதுவும் சுருள் சுருளாய் அலைமோதிய கூந்தலை கண்டதும் தான் பெரிதும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான் பிரணாவ்….

 கணவன் எதை குறிப்பிடுகிறான் என்று தெரியாது நின்றவள் இடத்தில்

”  எதற்காகடி இப்படி என்னை ஏமாற்றினாய்???????”  சோட்டுவின் கையில் வைத்திருந்த ஜவுரி முடியை பார்த்த படியே நொந்து கொண்டான் பிரணாவ்.

“கியா ???? மைனே தும்ஹே தோக்கா தியா?????”

(”  என்னது????  உன்னை ஏமாற்றினேனா??????” )

ஹிந்தியில் ஆரம்பித்தவள் அவன் முகம் மாறுதலைக் கண்டு அவசரமாக ஒரு கரம் கொண்டு தன் வாயை மூடிக் கொண்டாள்.

 பின் அவளது பதிலுக்காக எதிர் நிற்பவன் காத்து நிற்பது தெரியவும் ” நீ என்ன சொல்கிறாய் என்றே தெரியவில்லை???

 ஒருவேளை இதை பற்றி கேட்டிருந்தால்……

ஏன் நீ படம் எல்லாம் பார்த்ததில்லையா????? உங்கள் தமிழ் படத்திலும் கூட தான் கல்யாணத்தன்று மணப்பெண்ணிற்கு இந்த விக்!! இது பெயர் ??? ஹான்….. சவுரி முடி!!யை பயன்படுத்துவார்கள் ” திமிராகவே பதிலளித்தவளை முறைத்தான் பிரணாவ்…

” பேச்சு தான் பஜாரி என்று பார்த்தால் ஆளும் அப்படித் தான் இருக்கிறாள்!!!!” புலம்பியபடி நகர்ந்தவனுக்கு சட்டென மின்னல் வெட்ட வேகமாய் திரும்பி

அவளை பார்த்தான்…. அவளையல்ல…. அவளது ரோஜா பூ இதழ்களை!!!!!!

 கணவனின் பார்வை புரியாதவள்

” இப்போது என்ன ???????? சொல்லு!!!!”   என்று சிடுசிடுக்க

 அவன் மனம் புரிந்து கொண்டதை ‘ நான்  சொன்னால் அதை கொடுத்து விட்டு தான் அடுத்த வேலை பார்ப்பாயா ????? போடி!!!!! ‘  மானசீகமாய் சண்டை போட்டவன்

 அடுத்த நொடியே நீயாடா பிரணாவ் இப்படியெல்லாம் பேசுவது??????? என்றபடி அவனது அறிவு எட்டிப்பார்த்ததும்

 இந்த பஜாரி கூட இருந்தால் கண்டிப்பாக நான் நானாக இருக்க மாட்டேன் போலவே!!!!!!!! 

என்று எண்ணியபடி அவளை திரும்பியும் பாராமல் பக்கத்திலிருந்த உதிதாவின் அறைக்குள் கிட்டத்தட்ட எதிலிருந்தோ

தப்பித்து ஓடுபவன் போல் விரைந்து சென்று கதவை அடைத்தான்…

 இது கொஞ்சம் கூட சரி இல்லை பிரணாவ்!!!!!

 எல்லோரிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளும்…. ஏன் காதலை உணர்ந்த விதுல்யாவிடமே அவள் கண்களை நேராக சந்தித்து  உரையாடுபவன் இன்று இந்த சின்ன பெண்ணின் இதழ்களைக் கண்டு தடுமாறுவது ஏன்????????  எதனால்??????

 இதழ்கள் என்றதும் மனம் மீண்டும் ஒரு முறை அந்த ரோஜாப் பூ குவியலை கண்முன்னே நிறுத்த

அதுவும் லிப்ஸ்டிக்- கின் மாயாஜாலமோ????????

 அப்படி இருந்தும் காலையில் அலங்காரம் செய்யும் போது பூசி இருப்பாள்……  அதன்பின் நாள் முழுவதும் தன்னோடு

தானே இருந்தாள் !!!!

 ஒருவேளை நமக்கு தெரியாமல் மறுபடியும் போட்டிருப்பாளோ ???

 ஆனால் ஏன்???

 ஹான்….. உன்னை மயக்கத் தான்!!!!

 மனசாட்சி ஏளனமாய் சிரிக்க அதனை புறம் தள்ளியவன் ஆனாலும் ரொம்பவும் அழகாக தான் இருந்தது அந்த ரோஸ் பட் !!!! சர்ட்டிபிகேட் வழங்கினான்…..

 அப்படியே மெல்ல அதன்

 நினைவுகளால் ஆட்கொண்டவனை

இது தப்பு பிரணாவ்!!!! என்பது போல் தடை செய்து அவனை சத்தம்போட்டு அழைத்தது அவனது போன்……

 திரையில் தன்  உதிக்கா பெயரை பார்த்தவனுக்கு கோபம் கோபமாக வந்தது……

 அவள் அறையில் தான் நின்று கொண்டிருந்தான் ….

யுகனும் உதிதாகவும் சேர்ந்து நிற்பது போல் அமைந்த ஆளுயர புகைப்படம் ஒன்று  சுவற்றில் அங்கு மாட்டப்பட்டிருக்கும்……..

அதன் அருகில் சென்றவன் தமக்கையின்  அழைப்பை நிராகரித்து விட்டு “இவ்வளவு நேரம் ஆகிவிட்டது தூங்காமல் என்ன செய்கிறாய் உதிக்கா ?????? போட்டோவில் நிற்பவளிடம் உரையாடியதோடு அருகில் நின்ற யுகனிடம் ” மாம்ஸ் உங்க பொண்டாட்டியை ஒழுங்காக தூங்கு சொல்லுங்கள்” என்றான்…….

 பின் தன் மனம் எண்ணியவைகளை கண்டு சற்று வெட்கி போய் முகம் கழுவி வந்தான்…….

 என்ன தான் தாலி கட்டி விட்டோம் என்று சமன் செய்ய பார்த்தாலும்….

ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறாள்!!!!! 

போதாதென்று  அவளது கடந்தகால கசப்புகளே அவளை விட்டு அகன்று இருக்காது……. அப்படியிருக்க தன்னால் எப்படி இப்படி எல்லாம் நினைக்க முடிந்தது என்று சற்றே தன்னை மீட்டு தன் தலையை பலமாக ஆட்டிக் கொண்டான் பிரணாவ்…..

யசோம்மாவிடம் சொன்னதுபோல் நன்றாக வாழ்ந்து காட்ட தான் போகிறோம்……  ஆனால் அதற்கென்று காலம் வரும் வரை காத்திருப்பதும் உசிதமும் கூட தானே ……..

தற்போதைய புதிய பிரச்சினை என்னவென்றால்????!!!!!!

அவளைக் கண்டாலே இல்லையில்லை  அந்த ரோஸ் பட்ஸை பார்த்தாலே ஒரு மாதிரி ஜெர்க் ஆகுகிறதே!!!!

 இவ்வளவு தானா நான்??????

 காதல் இன்றி  மோகத்தில் வாழ்வை ஆரம்பிக்க நினைத்தேனா?????

 அது எப்படி காதலே இல்லாமல் ஒருத்தியின் மீது இவ்வெண்ணம் தோன்றும்?????

 உண்மையிலேயே புரியாமல் மண்டையை பிடித்துக்கொண்டான் பிரணாவ்…….

 ஆனால் மனைவி மேல் தான் கொண்ட தீரா மோகம் காதலின் உச்சகட்டம் என்று அவன் உணரும் சமயம் அவளை நெருங்க முற்படுகையில் பிரணாவே அவளைப் புறக்கணித்து அப்புறப்படுத்தப் போகிறான் என்பதை அறியாதவனோ அவளையே சிந்தையிலும் எண்ணங்களிலும் நிரப்பியபடி அதிகாலையில் கண் அயர்ந்தான்……….