இரவு தான் உதவிக்கு அழைத்து வைத்திருந்த அலாரம் அடிப்பதற்கு அரை நிமிடத்திற்கு முன்பாகவே அன்று அதிகாலையில் விழித்துக்கொண்டான் பிரணவ்….
எழுந்தவன் அருகில் இருந்த கடிகாரத்தை கையில் எடுத்து ” யூ லேஸி ஃபெல்லோ!!!! உன்னையெல்லாம் எங்க அப்பாகிட்ட போட்டுக் கொடுத்தால் தான் ஒழுங்காக வேலை பார்ப்பாய்!!!!” அதனை திட்ட
அடப்பாவி மகனே!!!! எப்படியும் இன்று இரவு என்னிடம் தானே வருவாய்….. அப்போது பார்த்துக் கொள்கிறேன்!!!! என்பது போல் ஆக்ரோஷமாய்
“எழுந்திரிடா பிரணாவ்!!!!! இன்று ஒரு நாள் ஒரே ஒரு நாளாவது அப்பாவிடம்
திட்டு வாங்காமல் இருந்துவிடுடா பிரணாவ்” அவனை முறைத்தபடி சத்தம் போட்டது அலாரம் க்ளாக்.
என்று தன் கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் ஃபேக்டரியில் காலெடுத்து வைத்தானோ அன்று அவனுக்கு அவனே செட் பண்ணிய அலாரம் டோன் தான் இது!!!!!
ஆனால் பாவம் சாப்பாடு இல்லாமல் கூட ஒரு நாளை எளிதாக கடந்து விட்டிருந்தவனால் தன் தந்தை கதிரேசனின் திட்டை சுமக்காமல் தன் வாடிக்கையான தினத்தை நிறைவு செய்ய முடியவில்லை……
சரி சரி விடு!!!! என்பதுபோல் தன் அலாரம் கிளாக்கை தொட்டு தடவி ஆஃப் பண்ணினான் பிரணாவ்….
இல்லாவிட்டால் அவன் பதிவுசெய்து
வைத்திருந்த மேலும் பல தகவல்களை இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேட்க நேர்ந்திருக்கும் !!!!
குளித்து தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்தவன் யாரையும் காணாது சுற்றும் முற்றும் பார்த்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கொண்டு தன் போனை எடுத்து “கிளம்பி விட்டாயா????” என்று ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸப்பில் அனுப்பினான்.
பிரணாவை காணக்கூடாத நேரத்தில் அதுவும் பார்க்கக் கிடைக்காத கோலத்தில் நோக்கிய யசோதா தன் கண்களை நம்ப முடியாமல் கசக்கியபடி சற்றே அதிர்ச்சியாகி அவன் அருகில் வந்து அமர்ந்தார் .
” என்ன யசோம்மா லுக்கு????? பொம்பள பிள்ளைகள் வீட்டிற்கு வருகிறார்களே!!!!
அவர்களுக்கு பிடித்ததை சமைத்து வைக்கணும் என்று கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இவ்வளவு லேட்டாக எழுந்து வருகிறாய்?????” என்று தன் சிற்றன்னையை வம்பிழுக்க
“யாருக்கு பொறுப்பு இல்லையாம்?????” என்றபடி திடீரென அங்கு வந்தார் கதிரேசன்.
” அ.. அது…. எனக்கு தான்பா!!!! நேற்று நீங்கள் கொடுத்த ஃபைலில் கடைசி ஒன்று மட்டும் பெண்டிங் ….. ‘இன்றைக்கு பொறுப்பாக முடித்து விடுவேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அப்பா….. அப்படித்தானே யசோம்மா……” யசோதாவையும் கோர்த்துவிட்டான் மைந்தன்.
“ஹான் ஆமாம் மாமா…. அந்த ஃபைல்
பற்றி தான் பிரணாவ் சொல்லிக் கொண்டிருந்தான்” யசோதா அவசரமாக கூற
“என்னமோ போ!!!! நாளைக்கு ஃபேக்டரிக்கு வரும்போது மிஷினரி பார்ட்ஸ் அடங்கிய ஃபைலின் அக்கௌன்ட்ஸையும் டாலி பண்ணியிருக்கணும் … ” என்று சிறு கட்டளை மொழியில் கூறிவிட்டு நகர்ந்தவர் சடாரென திரும்பி பிரணாவை உற்று நோக்கினார்.
“ஆமாம் துரை எங்கே காலையிலேயே கிளம்பி விட்டாரு?????? அதுவும் இப்படி சட்டை எல்லாம் போட்டுக்கொண்டு….. பொண்ணு பார்க்க போகிற மாதிரி!!!!”
எப்போதும்…. ஏன் அலுவலகத்தில் கூட டீ ஷர்ட் வசத்தில் உலா வருபவன் இன்று டக்கின் செய்யபட்ட ஃபார்மல் உடையில்
அமர்ந்திருந்த விதத்தை கண்டு எழுந்த வினா இது!!!!
“அது அப்பா…. அது… ஹான் …… யசோம்மா தான் இப்படி கிளம்ப சொன்னது….”
என்னை ஏன்டா மறுபடியும் இழுத்து விடுகிறாய்?????? என்பது போல் பார்த்தவரிடம்
” இன்று உதிக்காவும் பிரணிக்காவும் இங்கு வருவதால் யசோம்மா தான் போய்க் கூட்டி வர சொன்னது பா”
ஆஃபீஸுக்கு அனுப்பினால் எனக்கு பாதி தலைவலி குறையும் மா…. துரை இப்போதெல்லாம் பதினொரு மணிக்கு தான் ஆஃபீஸ் பக்கம் வருகிறார்… மாலையில் நானும் ரகுவும் வருவதற்கு முன்பே இவரது கார் வீட்டில் நிற்கிறது …. எனக்கு சொல்லி சொல்லி அலுத்து போய்விட்டது… எப்போதுதான் சிறுபிள்ளை தனம் மாறுமோ???? இவன் வயதில் நாங்கள் எல்லாம்….. ” ஆரம்பித்த கதிரேசனிடம்
“இனி கட்டாயம் அனுப்பி விடுறேன் மாமா…..” அடுத்து கேட்க போகும் கதையை ஒரு லட்சம் முறை ஏற்கனவே கேட்டிருந்ததால் யசோதா உடனே பதில் அளித்தார்.
“இந்த சட்டை தான் நல்லா இருக்கு பிரணாவ்….. இந்த மாதிரியே உடுத்திக் கொள் என்று சொன்னால் கேட்கவா போகிறாய்!!!!????” என்று மகனிடம் கூறும்
போது கதிரேசனின் கைப்பேசி அழைத்து அவரை அங்கிருந்து அப்புற படுத்தியது.
புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது இருவருக்கும் !!!!!
” அடேய் எத்தனை தடவை சொல்றது…… உங்க அப்பா பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவில் என்னை இழுத்து விடாதே என்று !!!!” யசோதா பிரணாவிடம் பாய
விட்றா விட்றா!!! என்பது போல அவரின் தோளை அணைத்து கொண்டவன்
” வயிறு பசிக்குது யசோம்மா….. போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு கொண்டு வா” என்றான் தன் வயிற்றை தொட்டு காண்பித்து.
மகன் அப்படி சொல்லி விட்டதும் எழுந்தவர் “எங்கேடா இவ்வளவு
காலையில் கிளம்பி விட்டாய் ???? சண்டே அதுவுமா????” பேசியபடியே கிச்சனுள் சென்றார்.
” இல்லைடா …. ஒரு அரை மணி நேரம் ஆகும்!!!” என்ற குறுஞ்செய்தியை பார்த்து புன்னகைத்தவன்
” ஒன்றரை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை…. பொறுமையாகவே கிளம்பு !!!” என்று பதில் அனுப்பியவனின் முன்பு காபியை நீட்டினார் யசோதா.
” எம்புட்டு குவிக்!!!!! யசோம்மான்னா யசோம்மாதான்!!!! வரப்போகிறவளுக்கும் இதை முதலில் கற்றுக் கொடுத்துவிடு யசோம்மா “
” வரப்போகிறவள் என்றால் பிரணிதாவா இல்லை உதிதாவா பிரணாவ்?????” என்று மகனை வார
“எனக்கு என்ன???? நீயும் உங்க அக்காவுமே இந்த கிச்சனை கட்டிட்டு அழுங்க…… கூடமாட ஹெல்ப் பண்றதுக்கு ஒரு ஆளை சேர்த்துக்கணும் எனும் நினைப்பு எப்போ தான் வருமோ ???” கெத்தாக சமாளித்து நொந்து கொண்டான்.
“நேற்று கூட அக்கா பொன்னியை மறுபடியும் வேலைக்கு வர சொல்லி விட்டார்கள் பிரணாவ் ….. அதனால் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை” யசோதா சீரியசாக சொல்ல
” போதும் யசோம்மா நிப்பாட்டு….. என் பொன்னான டைமை உங்க பொன்னி
பெயரைச் சொல்லி ஸ்பாயில் பண்ணாதே!!!! நான் கிளம்புகிறேன்….. என்னை பெத்த ஆத்தாளை பார்த்தாய் என்றால் இன்ஃபார்ம் பண்ணி விடு ….. அது பெத்த பெண்ணை கூப்பிட தான் போய் இருக்கேன் என்று !!!!!” கூறியவாறு எழுந்து சென்றவனின் மனதை அறிந்து கொண்டவர் அகம் மகிழ்ந்ததோடு அதுபற்றி பிரணாவின் அன்னை காஞ்சனாவிடமும் அன்றே சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் .
தனது ‘பகானி ஜோன்டா’ கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவனின் அருகில் ஒரு கருப்பு நிற ஜகுவார் மகிழுந்து வழுக்கி வந்து நின்றது.
அதைப் பார்த்ததும் சிரித்தபடி தன் சாவியை பாக்கெட்டில் திணித்த பிரணாவ் தன் எதிர் வந்து நின்ற காரின்
முன்பக்க கதவை திறந்து விட்டு “வாங்க மாம்ஸ்!!!!!!” புன்னகையை சிந்தி யுகனிற்கு கை கொடுத்து வரவேற்றான்.
இடப்பக்க முன் இருக்கையில் இருந்து இறங்கியவள் பின்பக்க கதவை திறந்து அங்கிருந்து இரு துணிப்பைகளை இறக்கி வைக்க ” இன்று என்ன உதிக்கா இரண்டு பேக்?????? ” தமக்கையின் கையிலிருந்த பைகளை வேகமாக வாங்கியிருந்தான் பிரணாவ். மேலும்
” மாம்ஸ்…. ஒரு பையை இப்போதே ரிட்டன் எடுத்து கொண்டு போய் விடுங்கள்…… அங்கே பாருங்கள் !!!” என்று தன் பைக்கை சுட்டி காண்பித்து
” அந்த டுகாட்டியில் என் உதிக்காவிற்கும் அவளது ஒரு பேகிற்கும் தான் இடம் இருக்கும்!!!!! ” என்று பிரணாவ் சலித்து கொள்ள அங்கு நின்ற தம்பதியினருக்கு காலையில் நடந்த சம்பாஷனை
நினைவில் ஆடியது………
*************
அங்கும் இங்கும் ஓடியாடி தன் துணிமணிகளை பெட்டியில் அடிக்கி கொண்டிருந்தவளை ஒற்றைக்கண் விழியால் நோட்டமிட்டவனின் இதழ்கள் தானாக மலர்ந்தது……
” எதுக்கு அம்மு தேவையில்லாத வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய்??????” படுக்கையிலிருந்து எழ மனம் இல்லாது போக சற்று தள்ளி நின்றவளை இழுத்து அணைத்திருந்த யுகன் அன்றைய நாளின் தொடக்க வழக்கத்தை நிறைவு செய்துவிட்டு கேட்டான்.
“நானா தேவையில்லாத வேலை பார்க்கிறேன்???????? நீங்கள் தான்…….. அதுவும் பிரஷ் கூட பண்ணாமல்!!!!” தன் ஆதரங்களை துடைத்தபடி முறைத்தாள்
உதிதா.
“அது என்னமோ இந்த பெட் கிஸ் அடிக்காது போனால் அன்றைய நாளே சுறுசுறுப்பாக இருக்க மாட்டேன்கிறது அம்மு…… இப்போது எவ்வளவு கிக்-காக இருக்கிறது தெரியுமா??? “
“இருக்கும் இருக்கும்!!!! நாளையிலிருந்து கொடுங்கோல் ஆட்சியாளர் என்ன செய்வாராம்????????”
” இதோ……..”என்றவன் இரண்டாவது ரவுண்டில் முழு இன்னிங்சையும் ஆடி களைத்துவிட்டு
” இதையே தான் செய்வேன்!!!!!” கண்ணடித்து சிரிக்க
அக்கள்வனையே ஒருவித லஜ்ஜையோடு பார்த்துக் கொண்டிருந்தவளை அரை மணி நேரமாக அவள் மூட்டை கட்டிய
துணிப்பை வாயை பிளந்து சிரித்தது ….
சுத்தம்!!!!!!
‘உன்னை கண்டிப்பாக ஒரு வாரம் என் அம்மா வீட்டில் தான் போட போகிறேன் பார்’ பையிடம் மானசீகமாக உரையாடிவிட்டு
“ஏற்கனவே குளித்தவளை அழுக்காக்கி விட்டு சிரிப்பு வேறா????????” அருகில் இருந்த தலையணையை எடுத்து கணவனின் மீது வீசியவள் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
” நான் தானே அழுக்காக்கினேன் நானே சுத்தம் செய்கிறேன்…… கதவை திற அம்மு!!!!! ” வெளியிலிருந்து குரல் கொடுத்தவனிடம் வேறு பேசாது
“யுகி ப்ளீஸ்!!!!!!” என்று பணிந்து போனாள்…..
ஏனெனில் மேலும் அப்படி ஏதாவது அவன் பேசினான் என்றால் அவளையும் மீறி அவளது கை தாழ்ப்பாளில் தான் சென்று நிற்கும் என்பதை உணர்ந்து அவனை கட்டிப்போடும் மந்திரத்தை உபயோகப்படுத்தி இருந்தாள்…….
யுகன் அவனது அம்முவின் ‘யுகி ப்ளீஸ்’ சொல்லிற்கு மட்டும் இதுவரை மறுப்பு தெரிவித்ததே இல்லை……
” உன்னை நைட் வைத்து கொள்கிறேன் அம்மு… அப்போது எங்கு ஓடுகிறாய் என்று பார்க்கிறேன்” குளித்து முடித்து வெளியே வந்தவளிடம் மிரட்டியவனை
“இந்த டைம் ஸ்ட்ரிக்ட்டா சொன்னபடி செய்வேன்…… பிரணி அக்காவும் வருகிறேன் என்று
சொல்லியிருக்கிறாள்….. ஆதி குட்டியை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது???!!!! ஒரு வாரமும் அங்கேதான்…. ஆதி குட்டியோடு தான்….. ” உறுதியாய் பார்த்தாள்.
” உன் அக்கா பையன் ஆதியை பார்த்து எவ்வளவு வாரமானாலும் மாதமானாலும் சரி அவனை பார்த்த உடனே நீ என்னிடம் கிளம்பி விடுவாய்” சவாலாய் மொழிந்த கணவனை இம்முறை எப்படியாவது தோற்கடிக்க
வேண்டும் …..
அதற்காகவே ஒரு வாரம் அம்மா வீட்டில் இருந்தாக வேண்டும் என்றொரு சபதம் எடுத்திருந்தாள் உதிதா.
கிளம்பியதும் “அம்மா வீட்டிற்கு போய் விட்டு வருகிறேன் அத்தை” என்று தன் மாமியார் தேவகியிடம் உரைக்க
அவரோ ” எங்கேடாமா உன் பேக்-கை காணோம்?????” என்று சிரித்திருந்தார்.
” யூ டூ புரூட்டஸ் அத்தை!!!! என்று சிணுங்கி விட்டு தனக்கு பின்னால் இரண்டு பைகளை சுமந்து வந்த யுகனை பார்த்தாள்.
“இதென்ன உதிமா இன்று இரண்டு பைகள்?????” என்று தேவகி கேட்டதற்கு
” சொன்னால் எங்கே அம்மா கேட்கிறாள்???? எப்படியும் என் மாப்பிள்ளை பிரணாவ் இதை வீட்டிற்குள்ளேயே கொண்டு போக விடமாட்டான் …… நானே ஒன்றை தூக்கிவிட்டு வரப் போகிறேன் பாருங்கள்!!!!” என்று தன் அன்னையிடம் கூறிவிட்டு மனைவியை அழைத்து வந்திருந்தான் யுகன்.
***********
“என்ன மாம்ஸ் இந்த பேக்-கை பிடிக்க சொன்னால் என் உதிக்காவை லுக் விடுகிறீர்கள்????? ஹோ!!!!!! அவள் ஓகே சொன்னால் தான் இப்போது இதை வாங்கி கொள்வீர்களா??????” என்ற பிரணாவ் உதிதாவின் ஒரு பையை மாமனிடம் திருப்பி கொடுக்க யுகனோ தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் …..
தஞ்சையிலிருந்த யுகன் சென்னைக்கு மாற்றுதல் ஆகி அப்போதுதான் நான்கு மாதங்கள் ஆகியிருந்தன…….
வாராவாரம் அம்மா வீட்டிற்கு பெட்டியை தூக்குபவள் மாலையானதும் தம்பியிடம் விரைந்து “உங்க மாம்ஸ் வரும் நேரம் ஆகி விட்டது பிரணாவ்……. என்னை அங்கு கொண்டு போய் விட்டுவிட்டுடா என் ஸ்வீட் ஹார்ட்” தாஜா பண்ணி தன் வீட்டிற்கே திரும்பியும் விடுவாள் .
இப்போதும் அதே போல் வந்து நிற்பவளை ஓட்டிய தனயனிடம் ” இன்று சாயங்காலம் மட்டும் உன்னிடம் வந்து அந்த வீட்டிற்கு கூட்டிப்போக சொன்னேன் என்றால் என் பெயரை நீ கூப்பிடும் படி ‘ஒடிதா’ என்றே மாற்றி வைத்துக் கொள்ளலாம் ” புதிதாக ஒரு சவால் விட்டிருந்தாள் உதிதா.
“ரிஸ்க் எடுக்காதே அம்மு….. ஒடிதா பெயர் நன்றாகவே இல்லை”
அவள் காது மடல்களில் ரகசியம் பேசிய கணவனை முறைத்து நின்றவளிடம்
“என்ன இது புருசனும் பொண்டாட்டியும் ரகசியம் பேசுறீங்க?????? அதுவும் ஒரு சின்ன பையனை வைத்துக்கொண்டு!!!!! திஸ் இஸ் நாட் ஃபேர் மாம்ஸ்” என்றான் பிரணாவ்.
எங்களையா சொல்கிறாய் சின்ன பையனே!!!!!!! என்பது போல்
” இந்நேரத்துக்கு இவன் எங்கே புறப்பட்டான் என்று நீங்களே கேளுங்கள் யுகி ?????” என்று தன் கணவனிடம் போட்டு கொடுத்திருந்தாள் தமக்கை.
“அட ஆமாம் ……. அதுவும் அதிசயமாக ஃபார்மல் ஷர்ட் எல்லாம் உடுத்தி செம்ம கலக்கு கலக்குகிறாய் பிரணாவ்!!!!!!!!! எங்கே போ……….” யுகன் கேட்பதற்குள்
“ஸ்டாப் மாம்ஸ் ஸ்டாப்……. போகும் போது ‘எங்கே போகிறாய்???’ என்று கேட்க கூடாது ” என்று இடைமறைத்தான் பிரணாவ்.
“சரி பிரணாவ் யாருக்காக இந்த மாப்பிள்ளை கெட் அப் என்று மட்டும்
சொல்லு!!!!!”
பிரணாவ் எதையோ சொல்ல முற்படுவதற்குள் அவனை பற்றி எல்லாம் அறிந்திருந்தவள்
“நான் சொல்றேன்…. அதை நான் சொல்றேன்” என்று யுகனின் முன் நிற்க
தன் மனதில் குடியேறியவளை பற்றி தான் இன்னும் யாரிடமும் தெரிவித்திருக்காத போது எப்படி????
உதிக்காவிற்கு உண்மையிலேயே ‘விதுல்யா’ பற்றி எப்படி தெரிந்தது!!!!!!????