“வாட் ?” என்று யுகன் உறுமி கொண்டு எழுந்திருத்த வேகத்தில் இரு அடிகள் உதிதா பின்னால் நகர
“கற்பனையெல்லாம் பிரமாதம்!!! ” என்று துளைப்பது போல் பார்த்தான் .
இனி ஒரு போதும் இவன் தூங்கி கொண்டிருக்கும்போது பேசிவிட கூடாது… ஜூட் உதி… எஸ்கேப்…. என்ற மனதுடன் கதவை நோக்கி ஓடியவளை யுகனின் “ஒரு நிமிடம்” கட்டி போட்டது.
“பிரிவு நம் இருவருக்கும் மட்டுமான விஷயம். இதை மற்றவர் அறிவதை ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் . குறிப்பாக அம்மாவிற்காக என்னை நீ பொறுத்து தான் போக வேண்டும் ” என்று அறிவித்துவிட்டு அவளுக்கு முன் வெளியேறியவனை வெறித்தாள் .
இவனுக்கு எப்போதுமே அடுத்தவர் பேச்சை கேட்பதற்கு நேரமே இருக்காதா?????
பொறுத்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஏன் வலியுறுத்திவிட்டு போனான்????
உதிதாவின் கேள்விக்கான விடையை உணவு வேளையின் போது அளித்திருந்தான் அவள் கணவன் .
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்த தேவகி டைனிங் டேபிளில் அமர்ந்து பாத்திரங்களை உருட்டி கொண்டிருப்பதை கண்டு “என்னம்மா இன்றைக்கு ஸ்பெஷல் ????” என்றபடி வந்து அமர்ந்தான் யுகன்.
மகனின் கேள்வியை பொருட்படுத்தாமல் “நீயும் உட்காரு உதிம்மா….. சேர்ந்து சாப்பிடலாம் ” என்று தேவகி உதிதாவை அழைக்கவும்
“திஸ் இஸ் டோட்டலி அன்ஃபேர்மா !!!
இப்படி நேற்று வந்தவளிடம் ஒரே நாளில் சாய்ந்திருப்பது….. ” என்று குறைப்பட்டான் மகன்.
“அவன் கிடக்கிறான் …… நீ உட்காரும்மா” என்று மருமகளின் கையை பிடித்து உட்கார வைத்தவர் பள்ளியில் உன்னை பேச வைப்பது சுலபமான காரியம் என்பது எனக்கு தெரியும் …… ஆனால் வீட்டில் எப்படியோ???????” என்றார் உதிதாவிடம் வாஞ்சையுடன்.
“இதற்கு மேல் இங்கு உட்கார்ந்திருந்தாய் என்றால் உனக்கு மரியாதை இல்லைடா யுகன்!!!!” என்று தனக்கு தானே சொல்லி கொண்டு எழுந்தவனின் செல் சிணுங்கவும் அதை எடுத்து கொண்டு வெளியே சென்றான் .
மாமியாரின் மனதை புரிந்து கொண்டவள் வலுக்கட்டாயமான சிரிப்பு ஒன்றை வரவழைத்து
” என்ன அத்தை இப்படி கேட்கிறீர்கள் ? என்னிடம் மாட்டி கொண்டாரே என்று உங்கள் பையனை பற்றி கவலை கொள்ளாமல் என்னை நினைத்து வருந்துகிறீர்கள் போலும்?????” என்று தன் அகன்ற விழிகளை மேலும் பெரிதாக்கி கொண்டு கேட்ட போது அங்கு வந்த யுகன் அந்த பூத கண்களை பார்த்து கொண்டு நின்றான் .
லேசாக சிரித்த தேவகி “யுகன் …” என்று பேசதொடங்கும் போது அங்கு தன் மகன் வந்துவிட்டதை கவனித்துவிட்டு “என்னடா இந்த பக்கம்??? எங்கேயோ மரியாதையை தேடி சென்றாய்?” என்று வம்பிழுத்தார் .
“அம்மா ஒரு குட் நியூஸ் ….. எனக்கு தஞ்சை மாவட்டத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்திருக்கின்றது!!! ” என்றான் ஆனந்தமாக .
“எல்லாம் என் மருமகள் வந்த நேரம் ” என்று தேவகி உதிதாவை காட்ட
” டெஃபநெட்லி மா!!! ” என்று கூறிய யுகனோ “தேங்க்ஸ் மை டார்லிங்!!!” என்று தன் மனைவியின் செம்மை பரவிய கன்னங்களில் தன் இதழ்களை பதித்து மேலும் செம்மை அடைய செய்து விட்டு நிற்காமல் சென்று விட்டான்.
அதனை கண்டதும் தன் மகனின் வாழ்வு குறித்த கவலை நீங்கி அகம் குளிர அவ்விடம் விட்டு சென்றிருந்தார் தேவகி .
அவன் விட்டு சென்ற இடத்தில் அப்படியே இமைக்க மறந்து அமர்ந்திருந்தவளை “அம்மா கோவிலுக்கு போய்விட்டு வர சொன்னார்கள் . கிளம்பு “
என்ற யுகனின் அழைப்பு இவ்வுலகிற்கு மீட்டது .
பயணத்தின் போது “ஏன் இப்படி செய்தீர்கள்????? ” என்று கோபமாய் கேட்டவளை முறைத்து
“நான் ஒன்றும் என் ஆசைக்காக இதை செய்யவில்லை . அம்மாவிற்கு நம் மீது இருக்கும் டவுட்டை கிளியர் பண்ணுவதற்காகதான்..” என்றான் விட்டேறியாக.
“உங்களுக்கு என் மேல் கோபமிருந்தால் இரண்டு அடி கூட கொடுத்துவிடுங்கள் . ஆனால் இனியொரு தடவை நடிப்பிற்காக இது போல் நடந்து கொள்ளாதீர்கள் . ப்ளீஸ் ..” என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் சாலையில் கவனத்தை செலுத்தினான்.
கோவிலில் உதிதாவின் கல்லூரி தோழி மேகாவை காணவும் அவளிடம் சற்று
நேரம் நின்று பேசி கொண்டிருந்தனர்.
மரியாதை நிமித்தமாக ஹாய்
சொல்லிவிட்டு காரிற்குள் புகுந்து கொண்டான் யுகன் .
திருமணம் குறித்த தோழியின் ஆயிரம் கேள்விகளுக்கு விடையளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது உதிதாவிற்கு .
யுகனையும் வைத்து கொண்டு இதற்கான பதிலை சொல்வதானால் தர்மசங்கடமான நிலையாக தான் இருந்திருக்கும் . விலகி சென்றவனின் மேல் என்னவென்று வரையறுக்க முடியாத உணர்வு ஒன்று தோன்ற மேகாவிடம் முடிந்தமட்டும் சீக்கிரம் விடை பெற்று கொண்டு தன் கணவனிடம் விரைந்தவளுக்கு காரில் அவன் அமர்ந்திருந்த தோற்றம் மனதை உறுத்தியது .
எஃப்.எம். மில் ‘சக்கரை நிலவே ….’ பாட்டு ஒலித்து கொண்டிருக்க விழிகளை திறக்க
விருப்பமில்லாதவனாக தலையை பின் சீட்டில் சாய்த்து அதை ரசித்த வண்ணம் படுத்திருந்தான் யுகன் ….
எழுப்ப மனம் இல்லாமல் கணவனையே யோசனையோடு பார்த்தபடி நின்றாள் உதிதா….
‘பிரிந்து சென்றது உன் தவறா ? நான் புரிந்து கொண்டது என் தவறா ?……’ என்ற வரிகளின் போது திரையிட்டிருந்த விழிகளை அழுந்த துடைத்து விட்டு நிமிர்ந்தவன் அங்கு மனைவியை காணவும் சற்றே திகைத்து “நீ எப்போது வந்தாய்????” என்று சாதாரண குரலில் கேட்க முயன்றான்.
“ஜஸ்ட் நௌ!!!” என்ற பதிலுடன் காரில் ஏறி அமர்ந்தவளின் மனதில் இரு விடை தெரியாத புதிர்கள் ….
அக்காவை காதலித்திருப்பானோ ??!!??!!
அல்லது …
இப்படியும் இருக்குமோ !!!!
பெண் பார்க்க வந்ததிலிருந்து ப்ரணிக்காவிடம் ஒரு வார்த்தை கூட பேசியதாக நினைவில் இல்லை ….. இவன் மனதில் வேறு யாரோ இருப்பார்களோ?
அப்படி என்றால் ஏன் அக்காவை மணம் செய்து கொள்ள சம்பதித்திருக்க வேண்டும்?????
அலைபாய்ந்த மனதை வலுக்கட்டாயமாக ‘இவன் யாரை காதலித்தால் நமக்கென்ன????
காதலிக்காவிட்டாலும் தான் என்னவாகிவிட போகிறது????
இந்த உலகத்திலே நமக்கு புடிக்காத விசயம் அந்த காதல் தான்…..
அப்பப்பா!!!!! போதும்டாசாமி…. இந்த பிரணிக்கா பண்ணி வச்ச காதலினால் தான் எல்லாமும்…. நாமுண்டு நம் வேலை உண்டு என்று இருந்துவிட வேண்டியதுதான்’ என்று கணவனை பற்றிய நினைவை கடிவாளமிட்டு
அப்போதிற்கு அடக்கினாள் உதிதா.
அன்று இரவு அடுத்த நாளே தான் தஞ்சைக்கு புறப்பட வேண்டும் என்று யுகன் தெரிவித்தபோது அவனோடு செல்ல மறுத்திருந்தாள் உதிதா.
“இரு மாதங்கள்
இங்கேயே இருந்து அத்தையை பார்த்துகொள்வதோடு பள்ளிக்கு சென்று அதன் விவரங்களையும் அத்தைக்கு தெரிவிக்கிறேன் ” என்று உதிதா சொன்னபோது
யுகனும் ஆமோதித்திருந்தான்.
தேவகி இதை மறுத்தபோது “ஒவ்வொரு வார இறுதியையும் உங்களோடு செலவளிக்க ஓடி வந்து விடுவேன் அம்மா” என்று சமாதானப்படுத்தியிருந்தான் மகன் .
அடுத்த நாள் காலையில் யுகன் தஞ்சைக்கு கிளம்பிய பிறகு தானும்
பள்ளிக்கு சென்று வருவதாய் தேவகியிடம் சொல்ல சென்றவளிடம் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த இரு நபர்களை அறிமுகம் செய்து வைத்தார் மாமியார்.
“இவர்கள் நவிகா ஹோம் கேரிலிருந்து வந்துள்ளார்கள் . வருடம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையையும் யுகனின் பழைய துணிமணிகளையும் கொடுப்பது நம் வழக்கம் ” என்று விளக்கம் அளித்த தேவகி
மாடி பரணியில் இருக்கும் யுகனின் துணிகளை எடுத்து வருமாறு சொல்லவும் இருவருக்கும் பொதுவான வணக்கத்தை தெரிவித்துவிட்டு மாடி ஏறலானாள் உதிதா.
பரணியில் அடுக்கி வைத்திருந்த துணி அட்டை பெட்டியை சற்று சிரமப்பட்டே எடுத்தவளின் கைகளுக்கு ஒரு டைரி சிக்கியது .
அதனை எடுத்தவள் “அடுத்தவங்க டைரியை படிப்பது தப்பு தான் ….. ஆனால் நான் தான் ஆறு மாசத்திற்கு அவன் மனைவியாயிற்றே .ஸோ படிக்கலாம் … என்னதான் எழுதி வைத்திருக்கிறான் என்று ஒரு கண் இல்ல ரெண்டு கண்ணாலையும் பார்த்துருவோம் ” என்று கூறிவிட்டு அதை திறக்க யத்தனித்தபோது “உதிதா கீழே வாம்மா” என்ற தேவகியின் அழைப்பு தடுத்தது.
“உன்னை பிறகு வந்து படித்து கொள்கிறேன்!!!” என்று டைரியிடம் மானசீகமாக பேசியவள் அவளது கட்டிலில் மெத்தைக்கு அடியில் அதனை பத்திரப்படுத்திவிட்டு துணிகளை எடுத்து கொண்டு அவசரமாக கீழே இறங்கினாள்.
அங்கு அவள் அப்பாவையும் பெரியப்பாவையும் காணவும் சந்தோஷத்தில் ஓடி சென்று அவர்களை கட்டி கொண்டாள் உதிதா.
“மறுவீட்டு அழைப்பிற்கு மாப்பிள்ளையால் தான் வரமுடியாமல் போயிற்று….. எங்கள் பெண்ணையாவது அனுப்பிவையுங்கள்” என்று கதிரேசன் கேட்டபோது கார்த்திகேயன் தம்பதியினரால் மறுக்க முடியவில்லை .
“வெள்ளிகிழமை யுகன் வருவதாக கூறினான் . அதற்குள் வந்துவிடுமா” என்று இரு தடவைக்கு மேல் கூறிய தேவகியிடம்
“வெள்ளிகிழமை காலையில் நான் இங்கே இருப்பேன் அத்தை” என்று உத்தரவாதம் அளித்து தன் பிறந்த வீட்டிற்கு புறப்பட்டாள் உதிதா.
வழியில் “யசோம்மாவையும் பெரியம்மாவையும் கூட்டி கொண்டு வந்திருக்கலாம் அல்லவா????? ” என்று செல்லமாக குறைபட்டவளிடம்
“உன் பெரியம்மா மாப்பிள்ளை இல்லாமல் பெண்ணை மட்டும் அழைத்து வருவது நன்றாக இல்லை என்று கூறி கொண்டிருந்தாள் ….. நான் தான் வீடே நன்றாக இல்லை என்று உன் அப்பாவையும் அழைத்து கொண்டு வந்து விட்டேன் ” என்றார் பெரியப்பா .
வீட்டிற்குள் நுழைந்ததும் “உதிம்மா….. வாடாம்மா” என்று வாஞ்சையோடு கட்டிக்கொண்ட காஞ்சனாவிடம்
“கூட்டி வர வேண்டாம் என்றுவிட்டு கொஞ்சல்ஸ் எல்லாம் தூக்கலாக இருக்கிறது ” என்று மனைவியை மடக்கினார் கதிரேசன் .
கணவனை முறைத்து “திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக வரும்போது மாப்பிள்ளையோடு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன் உதிம்மா…. ” என்றார் இளைய மகளை சமாதான படுத்திவிடும் தொனியில் .
“தட்ஸ் ஃபைன் பெரியம்மா . யசோம்மா
எங்கே? ஆளையே காணோம்????”
“நீ வர போகும் குஷியில் கிட்சனை தடால்புடால் பண்ணி கொண்டிருக்கிறாள் உன் அம்மா…. போய் பாரு… இதோ வருகிறேன் ” என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றார்.
“யசோம்மா …” என்றதும் திரும்பியவர் ரசகுலாவை கிண்ணத்தில் எடுத்து “வாடா கண்ணம்மா …… இதை சாப்பிடு” என்று ஊட்டி விட்டிருந்தார் அன்னை .
சென்ற வாரம் “அம்மா!!! ரசகுல்லா சாப்பிடணும் போல் இருக்கிறது . செய்து கொடுங்களேன்” என்று கேட்டதற்கு
” கல்யாண வேலை எவ்வளவு இருக்கிறது??? இப்போது வந்து கேட்கிறதை பாரு!!!” என்று மறுத்த யசோம்மா கண்முன் தோன்றினார்.
திருமணம் ஆகிவிட்டால் பெண்களுக்கு
தான் எவ்வளவு வரவேற்பு !!!!!
இது ப்ரணிதா அக்காவிற்கும் கிடைக்க வேண்டுமே …… அக்காவை பற்றிய தகவல் ஏதும் கிடைத்த பாடில்லை ….. அவர்களை பற்றிய பேச்சை இப்போது எடுத்தால் பெரியப்பா முகத்தில் எஞ்சியிருக்கும் மேலோட்டமான உற்சாகமும் தொலைந்து விடும் ….. என்ன செய்வது? என்று கற்பனை உலகில் மிதந்தவளை உலுக்கினார் யசோதா .
“என்ன உதிம்மா? என்னவோ போல் இருக்கிறாய்? மாப்பிள்ளை உன்னை நன்றாக தானே பார்த்து கொள்கிறார் ???? நான் கேட்பது புரிகிறதா? சந்தோஷமாகதானே இருக்கிறீர்கள் ???? திடீரென்று நடந்த திருமணமா!! அதுதான் உறுத்தலாகவே இருக்கிறது!!!” கவலையோடு வினவியவரிடம்
இருக்கிற பிரச்சனையில் தன் ஆறு மாத திருமண வாழ்வை பற்றி இப்போதிற்கு
கூறாமல் இருப்பதே மேல் என்று எண்ணி “ஐயோ யசோம்மா தஞ்சாவூருக்கு சென்ற பிறகு போன் பண்ணுகிறேன் என்று சொல்லியிருந்தார் . இன்னும் போன் வரவில்லையே என்று யோசித்து கொண்டிருந்தேன் . அதற்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள் என்று தான் புரியவில்லை ” என்று அவசரமாக யோசித்து சமாளித்தாள் .
வரவர வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை என்று முணுமுணுத்து கொண்டே வீட்டை அடைந்த பிரணாவின் உள்ளம் உதிதாவை அங்கு காணவும் சந்தோஷத்தில் குத்து பாட்டிற்கு தமக்கைக்கு போட்டியாய் ஆட்டம் போட்டு திளைத்தது.
“ஹே ஒடிதா!!! வாட் எ சர்ப்ரைஸ்!!!! அங்கே உன் தொல்லை தாங்காமல் அனுப்பி விட்டார்களா????? இருந்தாலும் டூ டேஸ் உன்னை வைத்து சமாளித்ததற்கே நோபல் பீஸ் அவார்டு தான் கொடுக்க வேண்டும் ” வம்பிழுத்தான்…..
எழுந்து வந்து அடிப்பாள் என்று எண்ணியவனுக்கு விரக்தியாக ஒரு சிரிப்பை உதிர்த்து “ஏன் பிரணாவ் லேட்?” என்று கேட்டவளை பார்க்க விநோதமாக இருந்தது.
“எனி ப்ரோப்ளம் உதிக்கா?” என்று அவள் கரத்தை பற்றி அருகில் அமர்ந்தவனிடம் “நத்திங்டா ” என்று சிரிக்க முயன்றாள் உதிதா.
“இல்லையே சம்திங் இருக்கிறது போல தெரிகிறதே . அந்த கொடுங்கோல் ஆட்சியாளர் ஏதாவது செய்தானா? கேட்க ஆள் இல்லை என்ற கொழுப்பா?????” என்று ஆவேசமாய் கேட்டவனை
“அவரை மாமானு கூப்பிடுனு சொன்னேன் இல்லையா?????” என்று தம்பியின் முதுகில் ஒன்று போட்டாள்.
“ம்ம்ம்…. நத்திங் என்றே ஒத்து கொள்கிறேன் ” என்று தன் முதுகை தடவி கொடுத்தவன்
“ஆனால் அவரை மாமா என்று மட்டும் கூப்பிட சொல்லாதே . ஆரம்பத்திலிருந்தே பிடிக்காமல் போயிற்று . அதுவும் திருமணத்தில் நடந்த குழப்பத்தில் சுயநலமாக உன்னை மணந்து …. எனக்கு அவர் மேல் வெறுப்பு தான் அதிக மாகியிருக்கிறது” என்றவனை
“போதும்டா ” என்று இடைமறித்தாள் தமக்கை.
“லூஸு மாதிரி உளறாதே . முதலில் அவரை உனக்கு பிடிக்காமல் போனதற்கு நான் தான் காரணம் . திருமண விசயத்தில் அவர் மேல் என்ன தவறு இருக்கிறது ? ப்ரணிதா அக்கா செய்த …” என்று பேசி கொண்டு போனவள் அந்த பேச்சை விடுத்து அவன் கரத்தை பற்றி மென்குரலில்
“அக்காவை பற்றி
ஏதேனும் தெரிந்ததா பிரணாவ் ?” என்றாள்.
பற்றியிருந்த அவள் கையை தட்டி விட்டு “ப்ரணிக்கா பற்றி பேச இனி ஒன்றுமில்லை. நீயும் அவளை மறந்துவிடு”
சிடுசிடுவென பேசிவிட்டு அவனறைக்குள் புகுந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் வெறித்தாள்.
பெரியப்பாவே மனமுவந்து ப்ரணிக்காவை ஏற்று கொண்டாலும் இந்த பெரிய மனுஷனை சமாதான படுத்துவது கஷ்டம் போல தெரிகிறதே என்று பெருமூச்சு ஒன்றை விட்டாள்.
எந்த அளவிற்கு தோழமையாக பழகுகிறார்களோ அதே அளவிற்கு தான் காதல், குடும்ப கௌரவம், பண்பாடு போன்ற விசயங்களில் கண்டிப்பாகவும்
வளர்த்தார்கள் . எல்லாம் தெரிந்திருந்தும் அக்கா ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தாளோ !?!?
தன் குடும்பத்தை தியாகம் செய்யும் அளவிற்கு அந்த காதலில் அப்படி என்ன தான் இருக்கிறது????
என்று சப்பு கொட்டியவளை பார்த்து விதியும் காதலும் ஹைஃபைவ்