நிழல் தரும் இவள் பார்வை…
6
அவன் பற்றிய கைகளில் அவ்வளவு அழுத்தம்.. மெதுவாக, அவினாஷை நிமிர்ந்துப் பார்த்தாள் அம்மு. அந்த முகம், கலங்கி, பார்வை எங்கோ வெறித்து இருந்தது.. அந்த நேரத்திலும் பெண் மனதில் ‘இவருக்கு.. பிரேக்கப்பா.’ எனத்தான் தோன்றியது.
கொஞ்சம் சுதாரிக்கட்டும் என அம்மு “ஜி” என்றாள்.
அவினாஷ், சற்று தன்னை சமாதானம் செய்துக் கொண்டு, நிமிர்ந்து அவளின் கையின் மேலிருந்து தன் கையை எடுத்தான் லேசான ஒரு புன்னகையுடன் “சாரி பிரெண்ட… சாரி” என்றான் தன்னை மீட்டுக் கொண்ட பாவனையில்.
அம்முக்கு, அவனின் அந்த சிரிப்புதான் சங்கடமாக இருந்தது.. லேசாக ‘தள்ளி நிறுத்துகிறானோ’ என தோன்றியது, ‘இவ்வளவு நேரம் நல்லாதானே  இருந்தான்.. இப்போது என்ன’  என அந்த சிரிப்புக்கு அர்த்தம் உணர்ந்தாள் அம்மு.
அவளும் லேசாக சிரித்து அவனை பார்த்திருந்தாள் ஏதும் சொல்லாமல். ஆனால், மீண்டும் அவளின் பார்வை அவனை எதோ செய்தது.. ‘மீண்டும் மீண்டும் நான் குற்றம் செய்கிறேன்’ எனதான் அவனின் மனம் சொன்னது. 
பெரிதாக ஒரு பெருமூச்சு.. விட்டு, மீண்டும் தன் கனவை நினைவு படுத்திக் கொண்டான் அவினாஷ்.
அவினாஷ் “அப்பாக்கு அவர் எடுத்த படம் பயங்கர லாஸ் அதான் என்னை எடுக்க அனுமதிக்கல, அந்த பக்கமே வேண்டாம் தோத்திடுவோம்ன்னு பயப்படறார்…
அதனால், நான் அவரிடம் பேசுவது இல்லை. என்ன செய்கிறேன்னு சொல்றது இல்லை. அம்மாதான் என்னை பார்த்துக்கிறாங்க.
நான் இப்போதான் ஒரு ப்ராஜெக்ட் முடிச்சேன்… அதான் கொஞ்சம்  ப்ரீ. ம்.. நான், என் அப்பா சொல்றா மாதிரி தோற்க மாட்டேன்.. எல்லாம் கத்துக்கிட்டு வருவேன்…
அத்தோட என்னோட குருகிட்ட வேலை செய்யணும், அவர் கண்ணடிப்பா என்னோட வொர்க் பார்த்து.. என்னை அசிஸ்டென்ட் டிரெக்ட்டரா ப்ரொமோட் பண்ணுவார்… ம்…
அதுக்காக காத்திருக்கேன். அதுக்கு அப்புறம்தான் நான் டைரக்ட் பண்ணனும்..“ என கடகடவென தன் கனவை அவளிடம் இறக்கி வைத்தான். 
அழகான திட்டமிடல்தான் அவனுடையது, யாராவது தன்னை செவிமடுப்பார்கள் என தன் கனவுகளை சுமந்து கொண்டு பலர் இருக்கிறார்கள் அதில் அவினாஷும் ஒருவன்.
‘தோற்க கூடாது’ என அவன் பொறுமையாக செயல்படுவாதாக அந்த சிறு பெண்ணுக்கு தோன்றியது, மற்றபடி.. அவளுக்கு, தான் உதவக் கூடும், தன்னிடம் அவன் உதவி எதிர்பார்ப்பான் என அவளால் இன்னும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. எனவே அவினாஷை.. ஒரு ஹீரோ என இமைக்க மறந்துப் பார்த்திருந்தாள்.
அவினாஷ், மேலும் மேலும் தனக்குள் சுருங்கினான்.. ‘அப்படி பார்க்காத.. உன்னை இம்பெரஸ் பண்ண இதெல்லாம் சொல்லல’ என கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும், மௌனம் காத்தான்.
மெல்ல அவன் ஆர்டர் செய்த வகைகள் வந்தது.. இருவரும் உண்ணத் தொடங்கினர்.. அவினாஷ் “சாரி போர் அடிச்சிட்டேன்.. ம்.. சொல்லு உன்னை பத்தி..” என்றான்.
பின் பேச்சுகள் சென்றது.. படம், விளையாட்டு.. படிப்பு, பொழுதுபோக்கு.. சாப்பாடு என நீண்டது. இரண்டு மணி நேரம் முழுதாக கரைந்ததேத் தெரியவில்லை அவளுக்கு. 
அவனாக ‘கிளம்பலாம்’ என்ற பிறகே வீட்டு நினைவு வந்தது அம்முக்கு. அப்படி அவளை தன் பேச்சாலும் நடத்தையாலும் இழுத்து மடித்து கைக்குள் வைத்துக் கொண்டான் அவினாஷ்.
அம்மு “ம்.. டைம் போனதே தெரியலை” என சொல்லி எழுந்துக் கொண்டாள். தானே பில் செட்டில் செய்தான். இருவரும் மீண்டும் காரில் பயணம். இப்போது இயல்பாக பேச்சும் சிரிப்புமாகச் சென்றது நேரம்.
வீட்டில் இவள் கவனிக்கத்தான் ஆட்கள், தாத்தா.. தம்பி என. ம்.. அது அப்படிதானே, பெண் மனம் இயல்பாய் கொஞ்சம் பொறுப்பை எடுத்துக் கொள்ளுமே.. அம்மா இல்லை, தான்தான் தம்பியை பார்க்க வேண்டும் என அவனின் வார்டன் எண் வாங்கி பேசுகிறாள். தாத்தா வருந்த கூடாது என அதிகம் வெளியே செல்வது இல்லையே.. இதெல்லாம் வயதுக்கு மீறிய பொறுப்புதானே.
ஆக எங்கும் பிறழாமல் இருந்தாள் தன் வயதில்.. ஆனால், இழுத்துக் கொள்வான் போல இந்த அவினாஷ். அதில் இன்பமாக தானும் சென்று அடைபடுபவளாக அவள். அதனாலோ என்னமோ  கண் கொட்டாமல் அவினாஷை பார்த்துக் கொண்டே.. பேசி கொண்டே.. இருந்தாள் பெண். 
அவளின் வீட்டில் இறக்கிவிட்டான், மணி எட்டு. அம்மு “உள்ள வாங்க.. தாத்தா, யாரு உன்னோட புது பிரெண்ட் அப்படின்னு கேட்டார்” என்றாள் சிரித்துக் கொண்டே.
அவனும் இதை எதிர்பார்த்தவன் போல உள்ளே சென்றான். தாத்தா என்ன செய்கிறார் என செண்பா ஆன்ட்டியிடம் கேட்டாள். செண்பா ஆன்ட்டி அந்த பையனை பார்த்தார்.. அம்முவின் பேச்சில் கவனம் இல்லாமல்.
அம்மு “ஆன்ட்டி.. எங்க செபஸ்டீன் அண்ணா” என்றாள்.
செண்பா “யாரு அம்மு, உன் பிரெண்ட்டா.. பார்த்தா.. பெரிய வேலை செய்பவர் போல இருக்கார்… உன் கூட படிக்கிறாரா..” என்றார் கேள்வி மேல் கேள்வியாய்.
அம்மு “ச்சு… வாங்க” என சொல்லி.. ஹாலுக்கு இழுத்து சென்றாள்
அவினாஷிடம் “அவினாஷ், இது எங்களோட கேர் டேகர் செண்பா ஆன்ட்டி. 
ஆன்ட்டி, இது அவினாஷ் அஸிஸ்டன்ட் டைரக்டர்” என எதோ ஒரு பெயர் தெரியாத படத்தை சொன்னாள் அம்மு.
செண்பா “வாங்க… அப்படியா.. சரிங்க, இருங்க குடிக்க எடுத்துட்டு வரேன்” என்றார், எல்லாவற்றுக்கும் தலையாட்டி. 
அவினாஷுக்கு இப்போதுதான் எதோ புரிந்தது, அவளுக்கு அம்மா இல்லை என. பெரிதாக, பொது விஷையங்கள் பேசினார்களே தவிர.. சொந்த விஷையங்கள் பேசவில்லை. அவள் பேசவில்லை. 
இப்போது செண்பா என அறிமுகப் படுத்தவும்  எதோ லேசாக புரிந்தது.. ‘சொல்லவே இல்லை என்கிட்டே’ என உண்மையாக நினைத்தான் அவினாஷ்.
தாத்தா உண்டு கொண்டிருப்பதாக சொன்னார் செபஸ்டீன். எனவே அம்மு வெளியே வந்து அவினாஷுடன் பேசிக் கொண்டிருந்தாள். 
பாதம் பால் எடுத்து வந்து தந்தார் செண்பா.. சிறிதளவு மட்டும் எடுத்துக் கொண்டான் அவினாஷ். அரை மணி நேரம் சென்று தாத்தா வந்தார் மெதுவாக செபஸ்டீன் கையை பிடித்துக் கொண்டு.. 
அம்மு எழுந்து சென்று அழைத்து வந்து அமர வைத்தாள் தன் தாத்தாவை.
நாலுமுழ வேட்டி.. கையில்லா வெள்ளை நிற காட்டன் குர்த்தா.. ஸ்படிக மணிமாலை.. என வந்து அமர்ந்தார் பெரியவர். பொறுமையாக பேசினார்.. “நீதானா புது பிரெண்ட். என் பேத்தி.. எப்போவும் என்கிட்டே பெர்மிஷன் கேட்பா.. இன்னிக்குதான் சொல்லிட்டு போனா.. 
ஹா.. ஹா… சொல்லுப்பா என்ன உன் பேரு” என தொடங்கினார்.
அவினாஷ்க்கு இதெல்லாம் கொஞ்சம் உறுத்தினாலும் இயல்பாக பேசினான். தன்னை பற்றி பகிர்ந்துக் கொண்டான், தன் குடும்பம் பற்றி சொல்லி, இன்னும் அந்த வயதான மனிதரை அதிர வைத்தான். ம்.. அவனின் தந்தை பற்றி சொல்லவும் “ஓ அவங்க பையனா..” என கேட்டுக் கொண்டார். ஆக, ஒரு நல்ல வைப் அங்கே உருவாகியது.
செண்பா “சாப்பிட்டு போலாம்” என்றார். அதனை மறுத்துக் கிளம்பினான் அவினாஷ். அவனின் எண்ணம் தனக்கானதை எடுப்பதே.. அது சீக்கிரயம் நிறைவேறும் என தோன்ற.. நிரம்ப மகிழ்ச்சியோடு.. எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினான்.
பொதுவாக அம்முவின் நண்பர்கள், அந்த வீட்டின் முக்கிய விருந்தாளிகள், அப்படிதான் தாத்தா பார்த்தார்.. அம்முவின் பர்த்டே என்றால் கூட, நண்பர்களை  வீட்டிற்கு அழைத்துக் கொண்டாடச் செய்வார்.. வெளியே அனுப்பமாட்டார் இது நாள் வரை. இப்படி அம்முவின் நண்பர்கள் எல்லோரும் இங்கே பழக்கமானவர்கள்தான். அதே வரிசையில் அவினாஷ் இப்போது இங்கு பொருந்திக் கொண்டான். அதிலும், அவனின் தோற்றம், வயது, அளவான பேச்சு, மேலும் தெரிந்த வட்டம் எனும் போது.. இன்னும் கொஞ்சம் தாத்தாவிடம் நம்பிக்கை உண்டானது.
காரில் செல்ல செல்ல தன் அன்னைக்கு அழைத்து பேசினான்.. இல்லை உளறினான்.. அவினாஷ். அவர் போனை எடுத்ததுதான் தாமதம் “ம்மா.. நான் புல் ஹாப்பியா இருக்கேன்… உன் பையன் சீக்கிரமே உன்னை பெருமைபடுத்துவான் ம்மா… பாரேன்” என்றான்.
சித்ரா “டேய்.. டேய்.. என்ன டா… எங்க இருக்க.. ட்ரிங்க் பண்ணி இருக்கியா” என்றார்.
மகன் “ம்மா, அப்படி எல்லாம் இல்லம்மா… வேலை விஷையமா ஒருத்தரை பார்த்து வந்திருக்கேன்… இன்னும் ஒருமாசத்தில் கண்டிப்பா.. என் கனவு நிறைவேறிடும்.. பாரேன்…” என்றான், கனவுகளோடு.. வந்தது அவனின் வார்த்தைகள்.
அவனின் அம்மாவும் “சந்தோஷம் டா… அப்படியே நடக்கும். எனக்கு தெரியும் நீ செய்வேன்னு… நல்லதே நடக்கும்” என்றார்.
மகன் “நீ சூப்பர் ம்மா… எப்போதும் நீ சூப்பர் மா.. தேங்க்ஸ் மா” என்றான்.
பின் அவனின் அம்மா ‘எங்க இருக்க.. பொங்கல் வருது.. வீட்டுக்கு எப்போ வர’ என எப்போதும் போல.. அவனை கேள்விகள் கேட்க… “வரேன், ம்மா, கண்டிப்பா வரேன்” என்றான் நல்லவிதமாக. 
பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு.. போனை வைத்தான்.
குறிப்பு: சில பொதுவான தெரிந்தும் தெரியாதவை…:
(@பொதுவாக படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள் ‘தேன்ணாண்டாள் பிலிம்ஸ்..’ என வருமே அது தயாரிப்பாளர்கள், அவர்கள். 
படத்தை வாங்கி தியட்டர்களுக்கு வெளியிடுபவர்கள் வேறு.. ரெட்ஜெயின் மூவிஸ் என விளம்பரம் வருமே அப்படி. 
எனவே… ஒருவருக்கு ஒருவர் தெரிந்திருக்கும். ஆனால், ஒரே இடத்தில் வேலை இல்லை.. குறிப்பாக இவர்கள்.. முதலீடு செய்பவர்கள் எனவே, எல்லாம் தரகு முலம், இல்லை கம்பெனி பேச்சு வார்த்தை மூலம் நடக்கும். அதனால், அவினாஷ் என்ற மனிதனை பெரிதாக அந்த வட்டத்தில் தெரிய வாய்ப்பில்லை.
@ஆசிஸ்டன் டைரக்டர் என்பதும்.. ஒரு படத்திற்கு நிறைபேர் இருப்பர். திரையில் அவர்களின் பெயர் வருவதே பெரிது. அப்படி அவர்களின் பெயர் வந்தால்தான்.. அவர்களை இயக்குனர்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்வர். அப்படி சங்கத்தில் சேர்ந்தால்தான் அவர் இயக்குனர்.. அப்போதுதான் படம் எடுக்க முடியும்.. அதற்காகத்தான் அவினாஷ் முயல்கிறான்.)