“பேசும் ஓவியம் பார்த்ததுண்டோ எம் நண்பர்காள் பேசும் ஓவியம் பார்த்ததுண்டோ” கவிதை பாணியில் பாட்டாக பாடினாள்.
“சீக்கிரமா யாரும் எழுப்பாம எந்திருச்சதே அதிசயம்னா பாட்டு அதுலயும் தூய தமிழ் பாட்டு, என்னாங்கடா நடக்குது இங்க” மலையப்பன் தன் நெஞ்சில் கைவைக்க.
“டாடி, அப்படி பாக்காதடா நிஜமா என்கிட்ட பேசுற படம் இருக்குடா, நீங்கலாது நம்புங்கடா ” நண்பர்கள் யாரும் நம்பாது போகவே, நால்வரையும் தன் அறைக்குள் தள்ளி சென்றவள் ஓவியத்தின் முன் நிறுத்தினாள்.
“எப்பிடிடா இருக்கு படம்?” ருத்ரா
“சூப்பரா இருக்கு ருத்ரா” சுருட்டை
“ஆனா இது பேசனும்னு சொன்னபாரு அதைத்தான் நம்பமுடியல” ஏழுமலை
“இப்டி ஒரு ஹெரோயின் மட்டும் என்கூட நடிக்க கிடைச்சுது நா எங்கயோ போய்டுவேன் ஹிம்.. எங்க ” மலையப்பன்
“ருத்ரா சொன்னா கரெக்டா தான் இருக்கும் நீ பேசி பாருடா ஸ்ப்ரிங்கு”மண்ணாங்கட்டி
“மலையில இருந்து விழுந்ததுல மண்டைல எங்கனா அடி பட்டுச்சா ருத்ரா போட்டோல இருக்கிற பொண்ணுக்கெல்லாம் பேரு வைக்கிற” ஏழுமலை
“ஐயோ நிஜமா தாண்ட சொல்றேன் நீ வேணா பேசிப்பாரு”
ருத்ரா இவ்வாறு கூறவும் விளையாட்டாகவே ஓவியத்தின் அருகில் சென்ற சுருட்டை
“என்னய கட்டிக்கிறாயா மஞ்சரி?” என்று வினவ, தன் காதுகளை பொத்தியது போல் மாறிய மஞ்சரியின் உருவம் கண்டு தன்னால் இரண்டடி பின்வாங்கினான்.
மற்றவர்களுக்கும் அதிர்ச்சிதான்
“உன்னை நான் மனப்பதானால் நீர் உயிர் துறந்து இந்த ஓவியத்துக்குள் வரவேண்டும், ருத்ராவின் நண்பனான நீ எனக்கும் நண்பனல்லவா உன் வாழ்வை எப்படி தியாகம் செய்ய சொல்வேன். மேலும் உன் தலை மயிர்கற்றைக்குள் நான் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? எனக்கு பயமாக உள்ளதே?” பாவம் போல் மஞ்சரி கூறவும் பேஎன அசடு வழிய நின்ற சுருட்டையை ஒரே சமயத்தில் திரும்பி பார்த்த நால்வரும் விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினர் சிரிப்பின் ஊடே
” பேய பாத்து பயந்தவங்களைத்தான் இதுவரைக்கும் பாத்துருக்கேன்டா, பேயே பயப்படறமாதிரி பண்ணிட்ட பாத்தியா வேற லெவல் மச்சி நீ” மலையப்பன் புகழ்வது போல் காலை வார அவன் மீது பாய்ந்தான் சுருட்டை மற்றவர்களும் களத்தில் இறங்க சிறிதுநேரம் அது கலவர பூமி ஆகிப்போனது. இவர்களின் இந்த விளையாட்டை இதழ்களில் சிரிப்புடன் பார்த்திருந்தாலள் மஞ்சரி.
அடித்து பிடித்து கட்டி உருண்டு ஒருவழியாய் ஓய்ந்த அனைவரும் ஆளுக்கு ஒரு முலையில் அமர்ந்தித்திருந்தனர் அவர்களை அழைத்த ருத்ராவின் காதலை குறித்த தன் கருத்துக்களை கூறினாள்
“நண்பர்களே நேற்றிரவு ருத்ரா தன் காதல் கதையையும் கனவையும் என்னிடம் கூறினாள், தோழியின் காதலை நிறைவேற்றமுடியவில்லை என்றால் நம்பர்கள் என்று நாம் இருந்து பயன் என்ன ஆகையால் எங்கணமாயின் ருத்ராவின் காதலை வெற்றிபெற செய்ய வேண்டும், என்னோடு இணைபவர்கள் யார்?”
“உதவணும்னா எப்படி உதவ முடியும் அவங்க வீட்டு வாசல்ல கூட நம்மள நிக்க விட மாட்டாங்க, அவங்க லெவல் வேற மஞ்சரி அவளவு ஈஸி கிடையாது” மலையப்பன்.
“காதலில் உயர்வு தாழ்வு கிடையாது நண்பனே” மஞ்சரி.
“டயலாக் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, நடைமுறைக்கு ஓதுவரவேண்டாமா” ஏழுமலை.
“ஏன் ஏன் எங்க ருத்ராவுக்கு என்ன குறைச்சல் ” மண்ணாங்கட்டி.
“எனக்கு கூட இது சரிவனும்னு தோணல ருத்ரா “சுருட்டை.
“சரி விடுங்க டா, எனக்காக நீக்க கஷ்டப்பட வேண்டாம் நா வேற யாராவது லவ் பண்றேன்”ருத்ரா.
மஞ்சரி அதிர்ந்து விழித்தபடி ருத்ராவை நோக்க, மலையப்பன் முகம் பளீரிட்டது.
“தெய்வமே எங்க அந்த அல்டாப்பு அரங்கநாயகிகிட்ட மாட்டிவிட்டுருவயோனு உள்ளுக்குள்ள கலக்குனது எனக்குதான் தெரியும் ஜஸ்ட் சட்டையை மாத்தறமாதிரி உன்னோட லவ்வ மாத்தி எனக்குள்ள பால வாத்த, இப்போ சொல்லு யாரு அந்த பலியாடு, சாரி சாரி உன்னோட அடுத்த டார்கெட்?”
“வேற யாருடா நீதான்” கண்ணடித்து ருத்ரா அவனை பார்த்த பார்வையில் சாஷ்டாங்கமாக ருத்ராவின் காலில் விழுந்தான்.
“தெய்வமே ஆறு நூறு ஆனாலும், இந்த உலகமே அழிஞ்சாலும், உன்னோட லவ்வ ஜெயிக்க வைக்கிறதுக்கு நானாச்சு, என்னோட வாழ்க்கைல கபடி விளையான்றாத தெய்வமே”
இதையெல்லாம் பார்த்த மஞ்சரியின் முகத்தில் மீண்டும் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
“சரி இப்பொழுது, நாம் நம் திட்டதை வகுக்கலாம். ருத்ராவின் காதலுக்கு உதவ நமக்கு முதலில் ருத்ராவின் காதலனின் முழு விவரம் தெரிந்தாக வேண்டும், அதை செய்ய வல்லவர் யார்?” மஞ்சரி.
“கவலையே படாத அதுக்கெல்லாம் என்கிட்டே அடிமைகள் இருக்குறாங்க, என்னங்கடா” ருத்ரா கேட்ட விதத்திலேயே அந்த அடிமைகள் யார் என்பது புரிந்து போக அவர்கள் மண்டையை ஆட்டிய வேகத்தில் பூம் பூம் மாடு தோற்றுவிடும் என்றால் பாத்துக்குங்க.
“முதல்ல ஆரம்பிப்போம் பொறுமையா மாமாகிட்ட சொல்லிக்கலாம், என்னோட சந்தோசத்தைவிட அவருக்கு பெருசா எதுவும் இருக்காது, ஆனா மஞ்சரி விஷயம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கனும் மாமாவுக்கு தெரிய கூடாது பயந்திடுவாரு”ருத்ரா.
“அதுவும் சரிதான்”மலையப்பன்.
அனைவரும் முடிவெடுத்தபின் நண்பர்கள் அனைவரும் மலையையே பிரட்டியது போல் இரண்டே நாளில் அதனை விவரங்களுடன் வந்தனர்.
சோர்ந்து பொய் அமர்ந்திருந்த நண்பர்களிடம் “என்னடா?” ஒரு வார்த்தையில் வினவினாள் ருத்ரா
எதிரில் வந்து ருத்ராவின் கைகளை பற்றிக்கொண்ட ஏழுமலை “விட்டுடு ருத்ரா இது சரிப்பட்டு வராது”
மற்றவர்களை ருத்ரா பார்க்க அனைவரும் ஒன்றாய் “சரிப்படாது சரியே படாது” ஒன்றாய் சேர்ந்து துதி பாடினார்.
எழுமையிடம் இருந்து தன் கைகளை இழுத்துக்கொண்ட ருத்ரா “மிதி வாங்க போரிங்கடா என்கிட்டே என்ன விஷயம்னு சொல்லுங்கனா சரிப்படாது சரிபடாதுனு வடிவேலுமாதிரி சொல்லிக்கிட்டு”வெடுவெடுத்தாள் ருத்ரா.
மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர், பெருமூச்சை விட்ட சுருட்டை ஒரு காகிதத்தை ருத்ராவின் கைகளில் வைத்தான் “படி ருத்ரா, படிச்சிட்டு நீயே சொல்லு”
தன் கைகளில் இருந்த காகிதத்தை படித்த ருத்ராவின் உலகம் தலைகீழ் ஆனது.
ஆனான பட்ட ருத்ராவையே கதிகலங்க வச்ச விஷயம் என்னனு அடுத்த எபிசோட்ல பாப்போம்.