உண்மை தானே… மாற்றிக் கொள்ள மாட்டானே.. இதை இவர்கள் தொழில் டெக்ஸ்டைல்ஸ் இருக்க. அவன் தனக்கு என்று  தனியாக விளம்பர கம்பெனியை ஆரம்பித்தான்.. .கணவன் மனைவி இருவருக்கும் இதில் துளி கூட விருப்பம் இல்லை.
இருந்தும் அவனின் அந்த முடிவுக்கு சம்மதம் தான் தெரிவித்தனர்… அவன் தாங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு இதோ  தனக்கு என்று ஒரு இட்ததில் உயர்ந்து நிற்க்கிறான்..
என்ன ஒன்று அவர்கள் எதிர் பார்த்த பிரச்சனையும் கூடவே வந்தது..நாள் ஒன்றுக்கு நடிகையோடு மாடலோடு ஏன் சீரியல் நடிகையோடு கூட இவனை இணைத்து பேசப்பட்டது..
முதலில் கேட்க தாய் தந்தையாய் அதுவும் பழக்க மில்லா பேச்சை கேட்க, ஒரு மாதிரியாக தான் இருந்தது.. இதோ அதுவே இப்போது பழகி விட வில்லையா..? அது போல் தான் இவன் திருமணமோ..
இருந்தும் ஜெய வரதனின் பக்குவம் துர்க்காவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. தொழிலில் ஏதாவது நஷ்டப்பட்டால் வேறு ஒன்றுக்கு மாறி விடலாம்.. ஆனால் திருமணம்..
ஆனாலும் சக்தி வரதனின் முடிவை மாற்ற முடியாது என்று நினைத்து நாளை போக வேண்டும் என்று  கணவனும், மனைவியும் ஒரு முடிவுக்கு வந்தனர்..
ஜெய வரதன்.. “ நாம அங்கு எத்தனை மணிக்கு போகனும்..?” என்று கேட்டார்..
அதற்க்கு துர்கா. ஒரு சலிப்போடு.. “எட்டு மணிக்கே…” என்று சொல்லவும்..
“ ஓ அவ்வளவு இயர்லியா கிளம்பிடனுமா…?” என்று கேட்டவர் பின் அவரே..
“ அங்கு கொண்டு போக ஏதாவது வாங்கனும் என்றால், எப்படி அவ்வளவு சீக்கிரம் கடை திறக்க மாட்டாங்களே… உன் கிட்ட போடாத நகை ஏதாவது இருக்கா…?” என்று கேட்டார்..
ஆம் அவர்கள் வழக்கம் அது தான்.. புதியதாய் ஒரு வீட்டுக்கு போவது என்றால் கூட ஏதாவது உடை எடுத்துக் கொண்டு தான் செல்வர்..
அப்படி இருக்க சம்மந்தம் பேசும் இடத்திற்க்கு,  நகை எடுத்துக் கொண்டு செல்வது தானே  முறை என்று நினைத்து தான் ஜெய வரதன் கேட்டது..
ஆனால் துர்கா அளித்த பதிலான..
“ ஆ அது எல்லாம் உங்க மகன் படு விவரம் தான்..” என்று சொல்லி தன் கையில் ஒரு முழ நீளத்தை காட்டி..
“இவ்வளவு பெரிய சரிகை வைத்து பட்டு புடவை.. நகை..அதுவும் வைர செட்…” என்று  மனைவியின் அங்கலாய்ப்பில்  ஜெய வரதன் ஏன் கேட்டோம் என்று படி ஆகி  விட்டது..
“ஏன்டி டெக்ஸ்டைல்ஸ் ஓனர் மனைவி டீ.. புடவை எல்லாம் உனக்கு ஒரு விசயமா..? நான் வாங்கி கொடுக்காத வைர நகைகளா…?” என்று ஒரு கணவனாய்  நான் எவ்வளவு வாங்கி குவித்தேன் என்ற ஒரு ஆதங்கம் ஜெய வரதனுக்கு இருந்தது.. அதை  தன் மனைவியிடம் கேட்கவும்  செய்தார்..
ஆனால் துர்கா ஒரு மனைவியாய் இல்லாது ஒரு அன்னையாக.. “ அவன் வாங்கி கொண்டு வந்தது என் கிட்ட இல்லாதது எதுவும் இல்ல… ஆனா எனக்கு இதை வாங்கி கொடுக்க அவனுக்கு தோனல பாருங்க..” என்று மனைவியின் பேச்சில் ஜெயவரதனுக்கு என்ன சொல்வது என்று புரிய வில்லை தான்.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்து விட்டது… மாமியார் மருமகள் யுத்தம் நம் வீட்டில் இருக்கிறது.. அது எந்த வகை யுத்தம் என்பது வரும் மருமகளை  பொறுத்து தான் என்று நினைத்தவர் தன் மனைவியின் கவனத்தை திசை திருப்பும் வகையாக அந்த பேச்சை விடுத்து வேறு பேச்சான..
“சக்தி  டெல்லிக்கு எத்தனை மணிக்கு கிளம்புறான்.. இந்த தடவை ஒரு மாதம் அங்கு இருக்கிறான் தானே..” என்றும் கேட்டார்..
“இயர்லி மார்னிங் தான்.. நீங்க சொன்னது போல ஒரு மாதம் ஆகுமா சென்னை வர..” என்று சொன்னதோடு  மட்டும் அல்லாது கூடவே.
“ அவன் வந்ததும் முகூர்த்தம் இருப்பது போல டேட் புக்ஸ் பண்ணுங்க என்று சொல்லிட்டான் உங்க மகன்.” என்று ஒரு பெரும்  மூச்சோடு பேசிய  தன் மனைவியை இப்போது ஜெய வரதம் பெரும் மூச்சு விட்டு கொண்டு பார்த்திருந்தார்..
பின் என்ன.. சக்தி ஏதாவது நல்லது செய்தால், என் மகன் என் மகன் என்று பெருமை பட்டுக் கொள்ளும் இந்த வாய் தான், அவன் இது போல் அவளுக்கு  பிடிக்காது ஏதாவது செய்தால் உங்கள் மகன் என்று தன் தலையை போட்டு உருட்டுவது என்ன..?
இப்படி என்ன .?என்ன..? என்று அவரால் மனதில் தான் புலம்ப முடிந்ததே தவிர வாய் திறந்து  எதுவும் பேசாது..  அமைதியாக இருந்து விட்டார்.
பின் என்ன..?  பேசி பேசி ஒர் அளவுக்கு மேல் முடியாது மனைவி உறங்க சென்ற பின் தான். ஜெய வரதனால்.. “அப்பாடா..” என்று  மூச்சு விட முடிந்தது.. 
இரு வீட்டார்ளையும், இரு வேறு சூழ்நிலைக்கு தள்ளிய நம் சக்தி வரதனோ விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில்  விமான நிலையம் வந்ததும்,..
 பூஜாவுக்கு.. “ குட் மார்னிங்” செய்தி அனுப்பிய பின் விமானத்தில் பறந்து விட்டான்..
அவன் மெசஜை பார்த்த பூஜா தான்.. “ நீ குட் மார்னிங் சொல்லிட்டலே.. அது பேட் மார்னிங்கா  தான் போக போகுது.” என்று ஏதோ அவன் மீது இருக்கும் கோபத்தில் இப்படி நினைத்து விட்டாள்..
ஆனால் உண்மையில் பூஜாவுக்கு அன்றைய தினம் அவள் நினைத்தது போல் தான் அமைந்து விட்டது.
லட்சுமி தன்னால் முடிந்த மட்டும் வீட்டை தயார் படுத்தி,  எப்போதும் மாப்பிள்ளை வீட்டார் வந்தால் செய்யும் பஜ்ஜியையும், கேசரியும் கிளரியவர்..
விடிந்தது செய்த முதல் வேலை பரணில் இருந்து எடுத்த அந்த பில்டரில் டிக்கஷேன் எடுத்து பாலை சுண்ட காய்ச்சி விட்டு அவர்கள் வந்த உடன் கொடுக்க வேண்டி அனைத்தும் தயார் நிலையில் வைத்து விட்டு ஹாலுக்கு வந்தவர்..
கன்னிகா அப்போது தான் டீப்பாவை துடைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து..
“ ஏன்டி இதை துடைன்னு உன் கிட்ட எப்போ சொன்னேன்..இப்போ தான் இதை செய்யிறியா…? இவ்வளவு நேரம் என்ன செய்துட்டு இருந்த…”  என்று பெண் வீட்டாருக்கே இருக்கும் டென்ஷனில், லட்சுமி  தன் சின்ன மகளை கடிந்து கொண்டார்.
“ அம்மா தலைக்கு ஊத்தினேன் மா..அப்போ தானே அவங்க வர்றதுக்குள்ள தலை காய்ந்து விடும்..” என்று சொன்னாள் கன்னிகா..
“ பெண் பார்க்க வருவது பூஜாவை..” என்று லட்சுமி பேச்சுக்கு..
“ அய்யோ வர்றவங்க அவளையே பார்க்கட்டும்.. எனக்கு எல்லாம் இவ்வளவு பெரிய இடம் வேண்டாம். நமக்கு ஏத்தது … ஐடியோ.. லெக்ச்சர்ரோ  இப்படி இருந்தால் போதும்..” என்று சொல்லி விட்டு போகும் சின்ன மகளையே பார்த்திருந்த லட்சுமிக்கும் இதே எண்ணம் தான்..
இதோ ஒரு வேளை வந்து போகவே எனக்கு இப்படி ஆகுது.. அப்படி இருக்க நாளை கல்யாணம் ஆன பின் நல்லதுக்கு எல்லாம் ஒவ்வொரு தடவை வரும் போதும், மாப்பிள்ளை இங்கு வந்து தங்கும் போது எல்லாம் என்ன ஆகுமோ என்ற கவலை அவரை இப்போதே பிடித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்..
பாவம் அந்த தாய்க்கு  அப்போது தெரியவில்லை.. இந்த வீட்டில் இருக்கும் பெண்ணை மட்டும் தான் சக்தி வரதனுக்கு பிடித்து இருக்க, அவளை மட்டுமே தன் சொந்தமாய் அவன் ஏற்க இருப்பதையும்,
பின் தன் மகளையே தன்னிடம் இருந்து பிரிக்க அவன் திட்ட மிட்டு இருப்பதையும் தெரிந்து இருந்தால், இப்போதே இந்த ஏற்பாட்டை அவர் நிறுத்தி இருப்பாரோ என்னவோ..
பிரம்மை பிடித்த நிலையில் இருந்த லட்சுமியை ஷண்முகம்  வந்து தான் சுயநினைவுக்கு கொண்டு வந்தார்..
“ என்ன நடக்குமோ ..அது தான் நடக்கும் லட்சுமி..நாம இப்படி எல்லாம் ஆகும் என்று நினைத்தோமா.. பூஜாவுக்கு இந்த இடம் தான் என்று எழுதி இருந்தா அது தான் நடக்கும்..வீணா எதேதோ நினச்சி மனச போட்டு குழப்பிக்காம ஆக வேண்டிய வேலையை பார்..” என்று கணவன் சொன்ன பின் தான் குனிந்து தன் உடையை பார்த்தார்..
காலையிலேயே குளித்து விட்டார்.. சமையல் அறையில் வேலை இருப்பதால் சாதரண வாயில் சேலை எப்போதும் வீட்டுக்கு உடுத்தும் சேலையையே அணிந்துக் கொண்டவர்..
இப்போது மாப்பிள்ளை வீட்டார் வருவதற்க்கு முன் தன் உடையை மாத்த தங்கள் அறைக்கு சென்றவர்..
போன தீபாவளிக்கு தான் வேண்டாம் ..வேண்டாம் என்று மறுத்தும் பூஜா வாங்கி கொடுத்த மைசூர் சில்க் புடவையை எடுத்து உடுத்திக் கொண்டார்..
இந்த புடவையை வாங்கும் போது.. “ என்னதுடி இது.. ஐய்யாயிரம் சொல்ற.. இதுக்கு பட்டு புடவையே வாங்கிடலாமே..” என்று சொன்னவர் தான் லட்சுமி..
ஆனால் இன்று அப்புடவை எடுத்ததும் எவ்வளவு நல்லதாக போயிற்று என்று நினைத்துக் கொண்டே உடுத்தி விட்டு கண்ணாடி முன் நின்ற லட்சுமி இதை தான் நினைத்தார்..
தான் அலங்கரித்து  எத்தனை நாட்கள் ஆகின்றன.. இல்லை இல்லை எத்தனை வருடங்கள்… மத்திய தரவர்க்கத்தின் தாய்மார்கள் பெண்ணை பெற்று விட்டால் போதும்..
வயதான ஒரு எண்ணம் அவர்களுக்குள்.. எனக்கு என்ன இனி.. ஒவ்வொரு முறையும் உடை வாங்கும் போது பெண்களுக்கு பிடித்தது போல் வாங்கி கொடுத்து விட்டு மீதம் பிடித்த உள்ள காசில் கிடைத்த உடையையே வாங்கி உடுத்திய லட்சுமிக்கு இன்று இப்புதிய உடை உடுத்தியதில் மனதில் தன்னால் மகிழ்ச்சி உருவானது..
அதே மகிழ்ச்சியோடு மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க தயார் நிலையில் இருந்த போது சரியாக சக்தி வரதன் வீட்டார் சொன்ன நேரமான எட்டு மணிக்கு டான் என்று வந்து இறங்கியதோடு. துர்காவும் டான் டான் என்று பேசவும் ஆரம்பித்து விட்டார்..