அத்தியாயம்…16
இங்கு வந்து சிறிது நேரம் தானே ஆனது அதற்க்குள் இவ்வளவு பூ அலங்காரம் எப்படி செய்ய முடிந்தது…? அங்கு மெத்தையிலும் .அதனை சுற்றியும், இருந்த பூ  வேலைப்பாடிலும் பூவின் எண்ணிகையிலும் பார்த்து அகில ரூபன் சிந்தித்துக் கொண்டு இருந்தான்..
பின் அவனுக்கு அவனே லேசாக சிரித்தவனாய்… “பெண் எப்போ வருவா…?” என்று யோசிக்கும் நேரத்தில் நான் எதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கேன் என்று அவனுக்கு அவனே நினைத்துக் கொண்டவன்..
பின்… “இன்று கண்டிப்பாக எதுவும் நடக்காது. இது அவனுக்கு தெரிந்தே இருந்தது..அவனுக்கும் இன்றே அனைத்தையும் நடத்தி முடித்திட எண்ணமும் இல்லை..ஆனால் எப்போதும் அந்த  எண்ணம் இருக்காது என்று  அவன் நினைக்கவில்லை..
இன்று என்பதா..?இல்லை இப்போது என்பதா…? ஆனால் இன்று இல்லை அது அவன் முடிவாய் தான் இருந்தான்..ஆனால் இந்த முடிவு ரொம்ப காலம் நீடிக்காது என்பதை அவன் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது..
ஆம் எடுத்துரைத்தது தான்..காலையில் திருமணத்தில்  இருவரும் நெருக்கமாய் அமரவில்லை..இருவரும் ஒருவர் பார்வைக்குள் ஒருவர் விழ வில்லை..ஆனால் அவள் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் அந்த நேரத்தில் அவள் என்னை பார்க்க வேண்டும்..குறிப்பாய் என் கண்ணை  அவள் பார்க்க வேண்டும் என்று நினைத்து தான் அந்த மாங்கல்யத்தை அவன் கையில் எடுத்தது…
ஸ்ரீயின் கழுத்தின் அருகில் கொண்டு செல்லும் போதும் சரி…அவள் கழுத்தை சுற்றி தன் கையில் உள்ள மாங்கல்யத்தை  கொண்டு சென்ற போதும் சரி. அந்த குனிந்த தலை நிமிராது தான் அவள் அமர்ந்து இருந்தாள்.
ஏன் இன்னும் கேட்டால் அகில ரூபன் மூன்று முடிச்சியில் ஒரு முடிச்சி போட்ட பின்னும் அவள் அதே குனிந்த தலையில் இருக்க… என்ன இது என்று அவன் யோசித்துக் கொண்டே இரண்டாம் முடிச்சி இடும் வேளயில் அவள் தன்னை பார்த்த அந்த பார்வை..
அதுவும் அவன் நினைத்தது போல் அவள் தன் கண்ணை நேர்க் கொண்டு பார்த்த அந்த பார்வையில் மூன்றாம் முடிச்சி  நாத்தனார் முடிச்சி இட அனிதா ஸ்ரீமதியின் பின் பக்கம் நின்றுக் கொண்டு இருந்தவள் தன் கை கொண்டு தான் பிடித்தி இருந்த மாங்கல்யத்தை பெற கை கொண்டு வந்தும் அதை பார்த்தும் பார்க்காதது போல் அந்த மூன்றாம் முடிச்சியையும் அவனே  அவள் கண்ணோடு கண் நோக்கி இட்டதில்..
தன் வாழ்க்கை காதல் வாழ்க்கையாய் இல்லாது இருக்கலாம்..ஆனால்  கண்டிப்பாக கடமைக்கான வாழ்க்கையாய்  இருக்காது… தங்கள் வாழ்க்கையில் எப்போதும் உண்மை இருக்கும் ஏனோ அவளின் பார்வையில் அவன் உணர்ந்தது இது தான். உணர்ந்தானா…? இல்லை  அவனுக்கு அவள் உணர்த்தினாளா…? அது போக போக தான் தெரியும்.
ஆனால் இனி தன் வாழ்க்கை தன் விருப்பம் பார்க்காது .. மற்றவர்களுக்காக விட்டு கொடுத்தது போதும்.. இனி யாருக்காகவும் எதுவும் விட்டுக் கொடுக்க அவன் தயார் இல்லை…
 எப்போது அவன் தன் வாழ்க்கையின் ரகசியம் அறிந்துக் கொண்டானோ அன்றையில் இருந்த அவன் எண்ணம் இது தான்… வளர்ப்பு மகனாய் அனைத்திலும் அனைவருக்கும் விட்டு கொடுத்தவன் சொந்த மகன் என்று தெரிந்த பின் எதிலும் பின் வாங்க அவன் தாயாராய் இல்லை.
அது தான் தனக்கு ஸ்ரீயின் மீது ஈர்ப்பு இருக்கிறது என்று அவன் மனம் அறிந்து அது உணருல் வேளயில் நவீனும் ஸ்ரீயின் மீது பார்வை செலுத்தவும் இவன் விட்டு விட்டான்..
ஆனால் எப்போது அவனுக்கு உண்மை தெரிந்ததோ.. ஸ்ரீ எனக்கு தான் என்று முடிவே கட்டி விட்டான்..இந்த முடிவு அவன் எடுக்க காரணம் ஸ்ரீயின் பிறப்பும்  ஒருவகையில் காரணம்..இதே ஸ்ரீ நவீனை விரும்பி இருந்தால்… விட்டு இருப்பான்..
அவள் யாரையும் கவனியாத போது… “இனி நீ என்னை கவனி..என்னை மட்டுமே கவனி.” என்று அவன் எடுத்த  அந்த முடிவு தான் இதோ இன்று இந்த இரவில்  வந்து நிற்கிறது..
பழையனவும்…புதியனவும் கலந்து அவன் மனதில்  நினைவுகள்  ஓட…அவனை கவனிக்க அவன் நினைவுகளை கலைக்க அந்த  இடத்துக்கு வந்து நின்றாள் ஸ்ரீமதி…
அவள் அந்த அறையின் உள்நுழையும் போதே அகில ரூபனின் பார்வை அவளிடம் மட்டுமே நிலைத்து  இருந்தது..ஆசையாக இல்லை..ஆராய்ச்சியாக… மணமேடையில் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தவள் இப்போது தலை குனியாது ஏதோ கல்லூரியில் முதல் நாள் தன் வகுப்பை தேடி அலையும் மாணவி போல… அந்த அறைக்குள் நுழைந்ததும் அந்த அறையின் அலங்காரத்தை சுற்றி பார்த்தாள்.
பார்த்தவளின் கண்களில் பயம் இல்லை..ஒரு எதிர்பார்ப்பு இல்லை..அதே போல் வெறுப்பும் இல்லை தான்..அப்போ என்ன தான் இருக்கு…? இது அவனுக்கு அவனே கேட்டுக் கொண்ட கேள்வியில் … அதற்க்கு அவனிடம் பதில் தான் இல்லை..
ஆனால் அது என்னவோ அவள் இந்த அறையின் உள்நுழைந்ததில் இருந்து அவளை மட்டுமே பார்க்க தோன்றியது… அது ஆசையிலா தெரியவில்லை..ஆனால் அவளை பார்ப்பது அவனுக்கு பிடித்து  இருந்தது.
சொந்தமானவர்கள் சொந்தமில்லாது வளர்த்த போது சொந்தம் கொண்டாட முடியாததால்..தனக்கு என்று தானே சொந்தமாக்கிக் கொண்டவளை ஏனோ அகில ரூபனுக்கு பிடித்து விட்டது..
ஆம் பிடித்து விட்டது. தான் .இதோ இப்போது அதை தான் அவன் மனம் உணர்ந்து அவனுக்கு எடுத்துரைத்தது… திருமணம் முன் இதோ நேற்று கூட..காதலால் மணக்கலாம்..காமத்தால் கூட மணக்கலாம்.. நம் மணம் செய்வது என்ன மாதிரியான மணம்..
ஈர்ப்பு இந்த ஈர்ப்பு யாரின் மீது யார் மேலும் வரும்..அதே சமயம் போகவும் கூடும்…இந்த ஈர்ப்பை வைத்து மட்டும் நாம் செய்யும் இந்த திருமணம் எப்படி இருக்கும்…? கடைசி வரை வருமா…?
இந்த முப்பது ஆண்டுகளாய் மற்றவர்களுக்காக வாழ்ந்தேன்.. இனி என் வாழ்வு நாற்பதோ..ஐம்பதோ…  அது வரை இந்த திருமண உறவு எனக்கு வேண்டும் ..என் சொந்தம் என்று..
அப்படி  பட்ட உறவை அவசரத்தில் முடிவு செய்து விட்டேனோ என்று நேற்று வரை நினைத்திருந்தவன்..
இன்று காலை இல்லை..என் வாழ்வு வீண் ஆகாது..என்று அவள் கண் பார்த்த நொடி அவன் மனது சொல்ல..இப்பதோ இவள் இவள் மட்டுமே உனக்கு உயிர்ப்பான வாழ்க்கையை கொடுக்க முடியும்..
இவளாள் மட்டுமே என் வசந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று  அவன் மனம் எடுத்துரைக்க அவள் அந்த அறைக்கு நுழைந்ததில் இருந்து அவளையே பார்த்திருக்க…
முதலில் தான் கல்லூரிக்கு வந்த புது மாணவி போல் பார்வை எல்லாம். அப்போது அவன் மனது வடிவேல் பாணியில் “ஆ.. பங்களா தான்..பங்களா தான்…” என்று  அவள் அந்த அறையை அவள் கண்கள் வட்டம் இடும் போது அவன் மனதில் ஓடியது..
பின் அவள் அந்த படுக்கையின்  அலங்காரத்தை பார்வை இடும் போது  “இது என்ன தாஜ்மாஹாலா  … டூரிஸ்ட் போல் பார்க்குறா… என்று நினைத்தவன் அவள் தான் சொல்லாமலேயே அந்த அறையின் கதவை தாழ்ப்பாள் இடும் போது அவனின் மனம் எந்த கவுண்டும் கொடுக்கவிலை.. மத்தளம் தான் வாசித்தது…
அவள் கையில் பால்  சொம்பு இல்லாததை பார்த்து சரி பேச்சை இதில் இருந்து ஆராம்பிப்போம் என்று நினைத்து அவன் வாய் திறக்கும் வேளயில் ஸ்ரீமதி.. அங்கு ஏற்கனவே வைத்திருந்த பாலை சொம்பில் இல்லாது ஒரு ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்ததை பக்கத்தில் வைத்திருந்த க்ளாஸில் ஊற்றி தன்னிடம் கொடுத்ததும்… 
“சே இவளே பால  கொடுத்துட்டா இப்போ நாம எதை வெச்சி பேச்சை ஆராம்பிப்பது…” என்று அவன் யோசனை செய்யும் போதே….
தன் காலில் விழுந்தவளை எழுப்ப முடியாது தன் கையில் பால்  க்ளாஸ் இருக்க… “என்ன இவ ஏதோ சொல்லி கொடுத்து செய்வது போல சிஸ்ட்ட மேடிக்க செய்யிறா..இது எல்லாம்  சொல்லி கொடுத்து செய்வதா…?” என்று அவன் மனம் நினைக்க..
அதே மனம் தான்..அது எல்லாம் பிறகு யோசி முதல்ல உன் காலில் விழுந்து கிடப்பவளை எழுப்ப பாரு… என்று நினைவு படுத்த உடனே தன் கையில் உள்ளதை அங்கு இருக்கு டேபிளில் வைத்து விட்டு..
அவள் தோள் பற்றி… “ஸ்ரீ…” என்று பேச்சை ஆரம்பித்தவனுக்கு அடுத்து பேச வார்த்தை வராது சிரிப்பு தான் வந்து தொலைத்தது..
அவன் இது போல் சிரிக்கும் வகையே  கிடையாது..இன்னும் கேட்டால்  அவன் எப்போதும்  ஒரு இறுக்கத்துடன் தான் காணப்படுவான்… அவன் பிறந்த  சூழலா வளர்ந்த சுழலா தெரியாது… சிரிப்பு என்பது அவன் முகத்தில் இருக்கவே இருக்காது..
அதே போல் தான் இது போல் தனக்கு தானே மனதோடு என்னுவது பேசுவது எல்லாம்.. அவனின் இந்த இயல்பையே மாற்றிய பெருமை நம் ஸ்ரீக்கு தான் சேரும்.
அவள் தன் காலில் விழ தான் அவள் தோள் பற்றி எழுப்பும் போது அசந்தர்ப்பமாய் அவன் நினைவில் மூன்று நாள் முன் ஏதோ டிவியில் பாடல் ஒலிக்க… அந்த வழி போகும் போது அந்த காட்சியும்..அதில் இடம் பெற்ற பாடலும்…
“பாவடை தாவணியில் பார்த்த உருவமா…” என்ற பாடல் அவள் தோளில் கை வைக்கும் போது  அவனின் நினைவில் வந்து தொலைக்க..அவன் உதட்டிலும் புன்னகை தன்னால் மலர்ந்தது…
ஸ்ரீமதி  அகில ரூபன் காலில் விழுந்து எழுந்ததும் பார்த்தது அவனின் மலர்ந்த முகத்தை தான்.. அகில ரூபனின் அந்த புன்னகையை  பார்த்து  ஸ்ரீமதியின் முகத்திலும் புன்னகை தன்னால் மலர்ந்தது…
“என்ன ஏதாவது சிஸ்ட்ட மேடிக்கா தெரியுதா…?”
அகில ரூபனின் புன்னகையை பார்த்து ஸ்ரீமதியும்  சிரிப்புடனே அந்த கேள்வியை  கேட்டாள்.. அகில ரூபனும் தன் புன்னகை முகத்தை மாற்றது…
“அப்போ உனக்கே தெரியுது…? அப்போ ஏன் இது எல்லாம்…?” 
ஸ்ரீமதி கொடுத்த பாலை கையில் எடுத்துக் கொண்டு அதை  உயர்த்தி அவளிடம் காட்டி விட்டு பின் கீழ் குனிந்து தன் பாதத்தையும் பார்த்தவனாய் கேட்டான்.
“பெரியவங்க சொன்னாங்க..நான் சின்ன வயசுல இருந்து அவங்க ஏதாவது சொன்னா ஏட்டிக்கு போட்டியா தான் செய்வேன்..சரி இப்போவாவது அவங்க சொல்றதை கேட்கலாமே…அது தான்.” என்று சொன்னவள் தன் தோளை குலுக்கியவளாய் மலர் தூவிய கட்டில் மீது அமர்ந்தாள்.
அவள் வந்த தோரணை நின்ற தோரணை இதோ இப்போது பேசி விட்டு  அவள் அமர்ந்த விதம் இவை அனைத்தும் அவன் முன் நினைத்த புதுகல்லூரியில் நுழைந்ததும்..தன்னை போலவே புது மாணவியை பார்த்தால் ஒரு ஸ்நோகத்துடன் பேசுவோமே அது போல் தான் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும்..
இது முதல் இரவு அறை என்றோ  இன்று தன்னோட ஒரு ஆண்மகன் அது கணவனே ஆனாலும் அதிகம் பேசியில்லாத ஒரு ஆண்மகனுடன் தனித்து இருக்கும் சூழ்நிலையில்…எதுக்கு  இங்கு எதற்க்கு அனுப்ப பட்டாள்..
இருவர் மனம் ஒப்பினால்  இங்கு என்ன நடக்கும் என்று அறிந்தே இப்படி சாதரணமாய் இருக்கா..எனக்கு தான் ஏதோ பட படப்பா இருக்கு… ஆனால் இவள் என்னவோ தன்னோடு படிப்பவன் கூட பேசுவது போல பேசுறாளா…? என்று நினைத்தவன் கூடவே..
என்ன இது இவள் இந்த அறைக்கு நுழைந்ததில் இருந்து கல்லூரி புது மாணவி கூட படிக்கிறவன் இதே  தோனுது..ஓ இப்போ பள்ளியறை பாடம் கற்க போகிறோம் என்பதாலா… என்று நினைக்கும் போதே திரும்பவும் அவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
அவன் சிரித்ததும் ஸ்ரீமதி அவனை ஒரு மாதிரியாக பார்த்ததில்.. அய்யோ எல்லோர் முன்னும் கெத்தா இருந்துட்டு மனைவி  முன்னே காமெடி பீஸா ஆகிட போறடா… 
மனைவியின் கண்ணுக்கு வில்லனா கூட தெரியலாம். ஆனால்  காமெடியா மட்டும் தெரியவே கூடாது…என்று நினைத்தவனாய்… “நீ இது வரை பெரியவங்க பேச்சை கேட்டது இல்ல.. அதனால இன்னையில் இருந்து கேட்கலாம் என்று முடிவு செய்து இருக்க..
ஆனா நான் இது வரை பெரியவங்க சொல் பேச்சை மட்டுமே தான் கேட்டு நடந்து இருந்ததால..இன்னையில் இருந்து அவங்க சொல்றதை  கேட்க கூடாதுன்னு முடிவு செய்து இருக்கேன்…” என்று அவள் சொன்ன பெரியவங்க சொல் பேச்சை கேட்க நினைக்கிறேன் என்று சொல்லும் போது தன் மனதில் நினைத்ததை மறையாது  இப்போது சொன்னான்..
இப்போது முழிப்பது ஸ்ரீ தான் முழித்து நின்றாள்… “இப்போ இவன் என்ன சொல்கிறான் என்று…?”
அவளின் முழியை பார்த்து இப்போதும் அகில ரூபன் சிரித்தான் தான். ஆனால் இந்த முறை  வெளியில்  இல்லாது மனதுக்குள் சிரித்தான்..
ஸ்ரீமதியோ இப்போ அம்மா சொன்னது போல இவன் கிட்ட அனுசரணையா நடந்துக்கனுமா… இல்ல அவன் சொன்ன கேட்க கூடாது என்பதற்க்கு இணங்க இழுத்து போர்த்திட்டு தூங்கவா…?என்று நினைத்து ஸ்ரீமதி  அவனையும் கட்டிலையும்  மாறி மாறி பார்த்தாள்.