இரவு நெருங்கும் நேரம் நிரஞ்சன் வரவும்……. நடந்ததை கூறி அவனையும் உடன் வரச்சொல்ல அவனோ….. “இல்லம்மா….. போன தடவ நடந்ததே கால மூணு நாளைக்கு மடக்க முடியல…. இதுல இன்னொரு முறையா….? சத்தியமா முடியாதுமா…. என்ன விட்டுடுங்க” என்றுவிட்டு நகர்ந்து விட்டான்.
அந்த நேரம் மீனாட்சி வீட்டினுள் வர.. மீரா அறையை விட்டு வெளியே வந்தாள்…. மீனாட்சி “நிரஞ்சா…. கோயிலுக்கு போக தடங்கல் எதுவுமே சொல்லக்கூடாது…. தெரியாதா….?” என்றார் கடுமையுடன்…
“ஏன் பெரியம்மா…. சந்திரன் பெரியப்பா வர்றார்ல…. அது போக நீங்க அஞ்சு பேர் போறீங்க… பின்ன என்ன பெரியம்மா”
“நாங்க அஞ்சு பேருமே பொம்பளைங்க தாம்பா” என மீனாட்சி சொல்லும்போதே உள்ளே நுழைந்தான் பாலா…. பாலா மீராவின் சித்தப்பா கிருஷ்ணன் – சந்தியாவின் மூன்றாவது மகன்.
அவனைப் பார்த்த நிரஞ்சன் “பாலா சும்மா தானே இருக்கிறான் பெரியம்மா….. அவனை கூட்டிட்டு போங்க”
“எங்க…..” புரியாமல் கேட்டான் பாலா
“கோயிலுக்குடி தங்கம்…… நடந்து போறோம்…..” என்றாள் மீரா நக்கலுடன்…
“போங்க…… எனக்கு என்ன வந்துச்சு…….”
“நாங்க மட்டும் போறதுக்கு எதுக்கு உன்னை கேட்டுட்டு இருக்கோம்…. நீயும் தான் வர்ற….”
“நான் வர்றேனா…..? யார் சொன்னது……? நானெல்லாம் வரமாட்டேன்…..”
“என் தங்கம் இல்ல…. வாடி செல்லம்….. போயிட்டு வந்துருவோம் ஜாலியா இருக்கும்…..”
“போடி இவளே….. உன் ஜாலிக்கு நான் தான் கிடைச்சேனா….. என்னால் எல்லாம் நடக்க முடியாது”
“தம்பி நீங்க கிருஷ்ணனுக்கு போன் பண்ணுங்க…. வர வர ஒரு சொன்னபடி கேட்க மாட்டேன்றான்…… நீங்க போன் பண்ணுங்க நான் சொல்றேன்” என்றார் மீனாட்சி கங்காதரனிடம்
“ஐயோ பெரியம்மா…. இதுக்கெல்லாம் எதுக்கு அப்பாவ டிஸ்டர்ப் பண்றீங்க….. இப்ப என்ன… நான் உங்க கூட கோயிலுக்கு வரனும் அவ்வளவுதானே….. வந்துட்டா போச்சு…..” என்று சமாதான கொடியை நீட்டியவாறு ‘சதிகாரி சிக்க வச்சிட்டல்ல…. உன்ன… நான் பாத்துக்குறேன்டி’ என மனதுக்குள் மீராவை திட்டினான்
அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல……. பாலா மீராவை நோக்கி சென்றான்.
“பிசாசே…… ஏண்டி என்ன சிக்க வச்ச….”
“டேய்….. நான் என்னடா செஞ்சேன்……. உங்க அண்ணன் தானே உன்ன கூட்டிட்டு போகச் சொன்னது”
“ஏய்……. எங்க அண்ணன பேசாதடி……”
“ஆமாமா….. வானத்தைப் போல அண்ணன் தம்பி இவங்க…… பேசினா குறைஞ்சு போயிடும்… போடா” என்றால் மீரா நக்கலுடன்….
“இப்ப எதுக்குடி என்ன வர சொல்லுறீங்க”
“அது ஒன்னும் இல்லடி தங்கம்….. என்ன மட்டும் நடக்க சொன்னாங்க…… எனக்கு ஒரு கம்பெனி வேணும் இல்லையா…. அதனால தான் உன்னையும் கூட்டு சேர்த்துக் கொண்டேன்” என்றாள் சிரித்துக்கொண்டே……
“உனக்கு கம்பெனி வேணும்னு… அதுக்காக…….. என்னை ஏன் நீ பாடா படுத்துற”
“வாடி செல்லம்….. அக்கா போறேன்ல… கூட வந்தால் ஜாலியா இருக்கும்”
“உன்னை யாரு போ சொன்னா….. உன்னை யாரு போ சொன்னா….. அதிலேய என்ன வர சொன்னது மட்டுமில்லாம….. எங்க அண்ணனையும் பேசுறியா…..” என்று மீராவின் தலையில் கொட்டினான்..
“ஐயோ…. அம்மா……. பெரியம்மா……… வாங்க” என்று வேண்டுமென்றே அலறினாள் மீரா.
“டேய்…. பொம்பள பிள்ளைய அடிக்காத….. இன்னும் எத்தனை தடவை சொல்ல….. விட்ரா அவல…. அறிவே வராதா உனக்கு” என்று வசை பாடிக் கொண்டே வந்தார் மீனாட்சி.
“அடிக்காதேன்னு சொல்லுங்க பெரியம்மா….. அதுக்காக இவளை பொம்பள பிள்ளைன்னு எல்லாம் சொல்லாதீங்க”
“ஏன்டா…. அவளுக்கு என்ன”
“ஆமா அவளுக்கு ஒன்னும் இல்ல….. நான் எத்தனை பொய்தான் தாங்குவேன்…… பாவம் பெரியம்மா சின்ன பையன தெரியுமா….”
“யாரு…..? நீ….. சின்ன பையன்.. உனக்கு இருக்கிற வாய்க்கு”
“அப்படி இல்லேன்னா உங்களையெல்லாம் சமாளிக்க முடியாதுல….. போய் சமைக்கிற வேலையை பாருங்க பெரிம்மா…… பசிக்குது…. போங்க போங்க…”
“நீ எல்லாம் திருந்தவே மாட்டடா..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார் மீனாட்சி..
“ஏய்…. உண்மைய சொல்லுடி… நான் அடிச்சது உனக்கு வலிச்சுதா” என்றான் கோபத்துடன் பாலா.
அமைதியாக நகையை வாங்கி அணிந்து கொண்டாள்….. பாலா வந்ததும் அனைவரும் கிளம்பினர்….. சென்றவர்களில் பாலாவும் மீராவும் மட்டுமே இளம் வயதினர் மற்றவர்கள் அனைவருமே வயதானவர்கள்.
“ஏய் போயும் போயும்…. நைட்ல…… உன் கைய பிடிச்சு நடக்குற அளவுக்கு வந்துட்டேன்டி….. என் ஆள் கூட போனா இப்ப எப்படி இருக்குன்னு தெரியுமா…… என் கெரகம் இதெல்லாம்..” என தலையில் அடித்துக்கொண்டு சலித்தான்.
மீரா அமைதியாகவே வந்தாள்…… அதை கண்ட பாலா…. “ஏய்……. இப்ப என்னடி பிரச்சனை உனக்கு……… ஏன் இப்ப அமைதியா வர்ற…..” என கோபமாக கேட்டான்.
“தெரியலடா…….. ஏதோ என் மனசு படபடனு அடிச்சுகுது…….. ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுதுடா……… ரொம்ப பயமா இருக்கு……..” எனவும்
“இதுக்குதான் அந்த எலும்பு கூட சேராதேன்னு சொன்னேன்….. கேட்டியா…….? இப்போ அதுக்கு புடிச்ச லூசு உனக்கும் பிடிச்சிருச்சு”