A.B என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும்.
“ஏய்.. மது..” – ஜான்வி.
“என்ன?”- மது.
“என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?”
“சும்மாதான். இட்ஸ் போரிங்.”
“ஏய்… சும்மாதான சொல்ற? யாரோ ஒரு பையன் டிஸ்டர்ப் பண்ணதும் வாட்ஸ் ஆப் பண்றதை விட்டுட்ட.”
“தெரியிதுல?? பின்ன எதுக்கு தெரியாத மாதிரி கேட்குற? மணி பன்னிரண்டு ஆயிடுச்சு. நீ இன்னும் படுக்கல? போய்ப் படு.”
“மது…”
…
“மதூ…”
“இப்ப என்ன ஜானு? ப்ளீஸ் லீவ் மீ அலோன். நான் படிக்கிறது கண்ணுக்குத் தெரியல?”
“மது… You are really great… You have a lot of self control you know?? I am very proud of you.. எனக்கு உன்னை அப்படியே ஹக் பண்ணிக்கணும் போல இருக்கு. அந்தப் பையன் ஆர்யாதான? அவனையே நீ ப்ளாக் பண்ணிட்ட… சான்ஸ்லெஸ் தெரியுமா? அம்மா சொன்னதால தான? அன்றைக்கு அம்மா நிறைய பேசியதை வச்சித்தான இந்த மாதிரி பசங்க விஷயத்துல இருந்து நீ ஒதுங்கியே இருக்க?”
“யெஸ் ஜானு.”
“ஏய்ய் ஏய்ய் உன்னை அப்படியே ஒரு ஹக் பண்ணிக்கட்டுமாப்பா??”
“ஹா… ஹா…”
“ஏய்ய்… என்னப்பா சிரிக்கிற?”
“தாங்க்ஸ் ஜானு… அவன் நல்ல பையன் தான்.. ஆனா Flirt பண்றானோன்னு தோணுச்சு… முதல் தடவை போன்ல அழைச்சபோது அமைதியா இருந்திட்டேன். ஆனா இரண்டாவது தடவையும் வெட்டிப்பேச்சு பேச அவன் அழைத்தபோது கண்டிப்பா Flirt தான் பண்றான்னு நான் வைத்த டெஸ்ட்ல தெரிஞ்சிடுச்சு. அதான் கட் பண்ணிட்டேன். வேற ஏதாவது பேசேன். இப்பதான் மைன்ட் லேசாகி இருக்கு.”
“சரிப்பா… இனிமேல் ஆர்யா பற்றிப் பேசலை. அலியா பட் படம் சோனில போடுறான். ‘டூ ஸ்டேட்ஸ்.’ பழைய படம்தான்… ஆனா ரொமான்டிக் மூவி. பார்க்கலாம் வர்றியா?”
“அம்மா??”
“பெர்மிஷன் வாங்கிட்டேன்.”
“எப்படி?”
“என்னோட மூளையோட 200 ஜுல்ஸ் எனர்ஜிய மேக்ஸ்க்கு தானம் செய்திருக்கேன்ப்பா… சன்டே முழுதும் அம்மாகிட்ட மேக்ஸ்ல இருபது சாப்டர்ஸ் செய்து காண்பிச்சிருக்கேன். அலியா பட் படம் பார்த்தா மூளை செலவழிச்ச 200 ஜுல்ஸும் அதுக்குத் திரும்ப கிடைச்சிடும்னு சொன்னேன், அம்மா சிரிச்சிட்டாங்க.. அப்பாவும் எனக்காக சப்போர்ட் பண்ணிப் பேசினாரா உடனே சிரிச்சிட்டே சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு மணி நேரம் தான் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க வா.. சீக்கிரம்.”
“இதோ வர்றேன்.” என்ற மது தனது கைபேசியை கட்டிலின் மெத்தையில் போட்டுவிட்டு வரவேற்பறைக்கு ஓடினாள். மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்டது மதுவின் கைபேசி.
அவள் வைத்த சோதனையில் லிட்மஸ் தாள்ளின் சாயம் வெளுத்துப்போனது.
முதல் முறை தேவையில்லாமல் கைபேசியில் அழைத்தபோது அமைதியாக இருந்த மதுமிதா, இரண்டாம் முறையும் ஆர்யா தேவையில்லாமல் வெட்டி அரட்டையடிக்க அழைத்தபோது அவனது தோழமை தேவையேயில்லை என்று நட்பை முறித்துக் கொண்டாள்.
ஆனால் இரண்டே ஆண்டுகளில் அடுத்த சத்திய சோதனை வந்தபோது இதே உறுதி மதுவிடம் இருந்ததா? தனது தந்தைக்கு செய்து கொடுத்திருந்த சத்தியத்திற்கு மீண்டும் இதே ஆர்யா ரூபத்தில் சிக்கல் வந்தபோது அதே உறுதி மதுவிடம் இருந்ததா?
பெண்களின் கண்களுக்குள் அடங்க மறுக்கும் ஆண்மையின் அழகுடன் அவன் அவள் எதிரே வந்து நிற்கும்போது அவனை மறுக்கும் உறுதி மதுவிற்கு இருந்ததா?
“எனக்கு உன்கூட நிறையப் பேசணும்.” என்று பார்க்கும் போதெல்லாம் அவன் விழிகள் அவளிடம் ரகசியமாய் பேசும்போது, “என்கூட நீ ஒண்ணும் பேச வேணாம்.” என்று சொல்லிடும் துணிவு வந்துவிடுமா?
போதை தரும் சிரிப்பை கோடி கோடியாய் அவன் இதழ்கள் கொட்டும்போது இதே துணிவு மதுவிடம் இருந்ததா?
அவனது விடலைத்தனம் பிடிக்காமல் இன்று அவனை உதறியவள் அவளது விடலைத்தனம் தலைதூக்கும் போது என்ன செய்வாள்?
மதுவின் உள்ளத்து உறுதியின் ஆழம் நீளம் என்ன?
* * *
இன்று…
மீண்டும் பெங்களூர் டோல் கேட்…
“சார்.. நான் வந்திட்டேன் சார்.” என்று சுங்கச் சாவடிக்கு வந்துவிட்டதை காவல்துறை அதிகாரி சங்கருக்கு கைபேசியில் தெரியப்படுத்தினான் விவேக்.
உடனே விவேக் நின்ற இடத்திற்கு வந்துசேர்ந்தார் காவல் துறை அதிகாரி.
விவேக்கிடம் “ஃபைன்?” என்று கேள்வியாய் பேச்சை ஆரம்பித்தார் சங்கர்.
“ஓ… அவரும் மது ‘அமெரிக்காதான் வேணும். நீ வேணாம்’னு சொன்னதால மனசு உடைஞ்சி மெடிக்கல் காலேஜ் பசங்க குடிக்கச் சொன்னதைக் குடிச்சிட்டார். அப்படித்தான?”
“மது அமெரிக்கா போறது உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”
“அந்தப் பையன் தான் நேத்து ஸ்டேஷன்ல ஆயிரம் தடவை சொன்னானே…”
“ஆமால… சரி சரி. சார், ஆர்யாவோட ஃபோன்…”
“மறந்தே போனேனே… இந்தாப்பா. அப்புறம் மதுவோட நம்பர் எடுத்து வச்சிருக்கேன். அந்தப் பொண்ணுகூட டைம் கிடைக்கும் போது பேசுறேன்.”
“ஃபோன் லாக் எப்படி எடுத்தீங்க சார்? மது நம்பர் எதுக்கு சார்?” என்று அலறினான் விவேக்.
“சைபர் கிரைம் ஆளுங்க லாக் எடுத்துக் கொடுத்தாங்க. நீ எதுக்கு மது பேரைச் சொன்னதும் பயப்படுற?”
“மதுகூட நீங்க பேசவே வேணாம் சார்… அது ஒரு கெட்ட கனவு சார்… பிரச்சனையே…”
“பிரச்சனையை நான் சரி பண்றேன். நீ வேணும்னா மதுவை கெட்ட கனவா நினைச்சு மறப்ப, ஆனா உன்னோட ஃப்ரண்ட் மறக்க மாட்டான். திரும்ப தண்ணியடிப்பான். போன வாரம் இதே மாதிரி கேஸ் ஒண்ணு வந்துச்சு. பையன் தண்ணியடிச்சி என்கிட்ட தான் மாட்டுனான். இதே மாதிரி லாவண்யா லாவண்னு புலம்புனான். பையன்கிட்ட 5000 ஃபைன் வாங்கிட்டு அனுப்பிட்டேன். ஆனா இரண்டே நாள்ல பையனை ரெயில்வே லைன்ல…”
“அந்தப் பையன் வீட்டுல இன்ஃபார்ம் பண்ணிருந்தேன்னா அந்தக் கெட்ட சம்பவம் நடந்திருக்காது. கொஞ்சம் அசால்டா இருந்திட்டேன். அதான் உன் ஃப்ரண்ட் விஷயத்துல மதுகிட்டப் பேசலாம்னு நினைச்சேன். எனக்கும் ஒரு விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் விவேக்.”
“என்ன சார் நீங்க தெரிஞ்சிக்கணும்?”
“மது ஏன் ஆர்யா மூக்கு மேல கைவச்சான்னு தெரிஞ்சிக்கணும், எதுக்கு ஆர்யா வேணாம், அமெரிக்கா தான் வேணும்னு சொன்னான்னு தெரிஞ்சிக்கணும்…”
“ஓ…”
“சொல்லு விவேக்… என்ன ஆச்சு? மது ஏன் ஆர்யா மூக்கு மேல…”
“சார்… நீங்களுமா? வேணாம் சார், ஆர்யாக்கு இன்னும் போதை தெளியல சார், இப்ப பத்து நிமிஷம் முன்னாடி வரை அந்த வசனத்தைக் கேட்டுட்டு தான் சார் வர்றேன்… நான் உங்ககிட்ட எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிடுறேன் சார்.”