தன் மாமாவின் முகத்தை பார்க்க சிரிப்பு வந்தாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தான்..
சற்று தயங்கியவர்,” மாப்பிள்ள..??”
“சொல்லுங்க மாமா..”
“அக்கா சொன்னாங்க.. நீங்க இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிற மாட்டேங்கிறிங்கன்னு.. உங்களுக்கு இன்னும் 30 வயசு கூட ஆகல .. கண்டிப்பா உங்களுக்கும் ஸ்ரீக்கும் ஒரு பெண்துணை ரொம்ப அவசியம்.. ஒரு பொண்ண பார்க்கவா மாப்பிள்ள..?”
தன் தாயை நிமிர்ந்து பார்த்தவன் ஓஓஓ சப்போர்ட்டுக்கு ஆளக்கூட்டிட்டு வந்திருக்காங்களா..
கோகிலா” என் பொண்ணுக்குத்தான் உங்க அருமை தெரியல .. அவளுக்காக ஏன் உங்க வாழ்க்கையை கெடுத்துக்கனும்…கண்டிப்பா ஒரு பெண்துணை தேவை .. இந்த முறை நல்லா விசாரிச்சு நல்லா பெண்ணாப்பார்த்து உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைப்போம்.. ஏங்க நீங்ககூட சொன்னிங்களே ஏதோ ஒரு பொண்ணு இருக்குன்னு..??”
“ஆமா மாப்பிள்ள.. எங்க ஆபிஸ்ல வேலைப்பார்க்கிற பொண்ணுதான் உங்கள மாதிரி கல்யாணம் பண்ணி ஆறு மாசத்திலயே கணவனை இழந்திருச்சு ரொம்ப நல்ல பொண்ணு பாவம் குழந்தையும் இல்ல நம்ம ஸ்ரீயை பெத்த குழந்த மாதிரி பார்த்துக்கும்..”
கற்பகம்” நம்ம சொந்தத்திலயும் நல்ல நல்ல பொண்ணெல்லாம் இருக்கு.. நீ சரின்னு ஒருவார்த்தை மட்டும் சொல்லு கண்ணா..??”
சற்று நேரம் அமைதியாய் இருந்தவன் நாம நினைக்கிறத இவங்ககிட்ட எப்படி சொல்வது என யோசித்து” ப்ளிஸ் மாமா.. இப்ப அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்ல.. கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்.. கொஞ்சம் டயம் கொடுங்க…??” வேகமாக தன் அறையை நோக்கிச் செல்ல,
“விடுங்கக்கா..கவலைப்படாதிங்க கொஞ்சம் கொஞ்சமா மாப்பிள்ளைய சம்மதிக்க வச்சிருவோம்.. நானும் விசாரிக்கிறேன் நீங்களும் விசாரிங்க இன்னும் நல்ல பொண்ணா பார்த்து முடிப்போம்..”
அறைக்கு வந்த அஸ்வினுக்கு தன் மனம் என்ன சொல்கிறெதென்றே புரியவில்லை.. தன் தாயும் இந்த பத்து நாட்களாக தினம் ஒரு பெண் போட்டோவை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்..சிலர் முதல்தாரம், சிலர் இரண்டாம்தாரம். ஒரு குழந்தையோடு இருப்பவர்கள் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் என .. அவனுக்கு கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்வதில் எந்த வருத்தமும் இல்லை ஆனால் எந்த பெண்ணின் முகத்தை பார்த்தாலும் அது சில நிமிடங்களிலேயே ஸ்ருதியாக மாறியிருக்க தன்னால் இனி ஸ்ருதியை தவிர வேறு எந்த பெண்ணை திருமணம் செய்தாலும் தனக்கும் ஸ்வேதாவின் நிலைதான் என்பதை உணர்ந்திருந்தான்..முதல் திருமணத்தின் போது ஸ்வேதாவின் முகத்தை பார்க்காமலே திருமணம் செய்ய சம்மதித்திருந்தவன் இப்போது தாய் அவ்வளவு பெண்களின் போட்டோவை காட்ட அவன் தலை சம்மதிக்கவே இல்லை..
இன்று சந்திரனையும் கோகிலாவையும் பார்த்து ஒருவேளை ஸ்ருதியை தனக்கு மணம் முடிக்க கேட்கத்தான் வந்திருக்கிறார்களோ என ஒரு நிமிடம் சந்தோசப்பட்டுவிட்டான்.. இவர்கள் பேசியதிலிருந்து ஒருவேளை நாம ஸ்ருதிக்கு ஏத்தவனில்லைன்னு நினைக்கிறாங்களோ.. ஏன் ஒருத்தர்கூட ஸ்ருதியை நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கல… சில நாட்களாக இந்த எண்ணம்தான்..
ஸ்ருதியும் எக்ஸாம் முடிந்து வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது..அஸ்வின் அவளை பார்க்கவேயில்லை அவனும் எப்படியாவது அவளை பார்த்துவிடலாம் என முயற்சி செய்ய அவள் கண்ணிலேயே படவில்லை அவர்கள் வீட்டிற்குகூட சென்றுவிட்டான் சந்திரன் அலுவலகம் சென்றிருக்க ஸ்ருதியும் ஸ்ரீயும் மேலே அறையில் இருந்தார்கள் போல மேலே பாட்டு சத்தம் சத்தமாக கேட்டு கொண்டிருக்க சற்று நேரம் இருந்து பார்த்துவிட்டு வந்துவிட்டான்.. அவளுக்கு எந்த நேரமும் ஓட்டமும் ஆட்டமும்தான் கால் தரையில் படுமோ படாதோ எனும் வகையில் அவள் செயலும் இருந்தது.. காலை ஆறுமணிக்கே ஸ்ரீயை தூக்கிச் செல்பவள் அஸ்வின் கண்ணிலேயே படுவதில்லை..
அன்று காலை அஸ்வின் ஹாலில் அமர்ந்து நியூஸ்பேப்பர் படித்துக் கொண்டிருக்க வேகமாக நடந்துவரும் கொலுசொலி ஸ்ருதியாய் இருக்குமோ சட்டென நிமிர்ந்து பார்க்க ஸ்ருதிதான்.. அவள் இடுப்பில் ஸ்ரீ கையில் ஏதோ பலகாரம் போல ஒரு கிண்ணத்தில் வைத்திருந்தாள்.. ஹாலில் இருந்த அவனை கவனிக்காமல் நேராக கிச்சனுக்கு செல்ல அவள் சென்ற பின்னும் அவளை பார்த்த தாக்கம் தீரவில்லை.. முழங்கால் வரையுள்ள ஸ்கர்ட் அணிந்திருக்க அதற்கேற்றார் போல ஒரு டாப்ஸ் ஸ்ருதியை பார்த்தால் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியை போலிருக்க ஸ்ரீயோ அவள் கடைசி தம்பி போல இருந்தான்.. தலையை போனிடெய்ல் போட்டிருந்தாள்.. உள்ளே ஸ்ருதியின் சிரிப்பு சத்தம்..
இவனுக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் மெல்ல இவனும் கிச்சனுக்குள் நுழைய கிச்சன் மேடையில் ஸ்ரீயை வைத்து கற்பத்தோடு சேர்த்து மூவரையும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தாள்.. அவரை இப்படி போஸ் குடுங்க அப்படி போஸ் கொடுங்க என பாடுபடுத்திக் கொண்டிருக்க அவரும் முகம் சுழிக்காமல் ஸ்ருதி சொன்னபடி செய்து கொண்டிருந்தார்..ஸ்ரீயும் சமத்தாய் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க,
“ ஏய் இப்ப எதுக்கு இப்படி போட்டாவா எடுக்கிற..??”
“வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைக்க மாமா..?” அவனுக்கு பதிலை மட்டும் சொல்லிக் கொண்டு பார்வை போனிலேயே இருந்தது.. அவளை முழுதாக பார்த்தவன் வித்தியாசமாக எதுவும் தெரியாவிட்டாலும் முழங்காலுக்கு கீழே அவள் வாழைத்தண்டு கால்கள் அப்படியே தெரிய அவன் மனம் முரண்டியது.. ஏனோ அடுத்தவர் இப்படி பார்ப்பதை விரும்பாதவன் எட்டி போனை பறிக்க,
“ஏய் இதென்ன டிரஸ் போ போய் சுடிதார் இல்லனா லாங்க் ஸ்கர்ட் இப்படி ஏதாவது போட்டுக்கோ..” அவள் எடுத்ததை அவளறியாமல் தன் போனுக்கு மாற்றி அவளில் இருந்ததை அழித்துக் கொண்டிருக்க,
“மாமா… நீங்க குடுங்க போன..?” அவன் கையை பிடிக்க குதித்துக் கொண்டிருக்க அவனோ கையை தன் உயரத்திற்கு தூக்கியிருந்தான்..
“டேய் கண்ணா போனக்குடுப்பா சின்னப்புள்ள அதுக்கிட்ட ஏன் வம்பிழுக்கிற..?? இந்த டிரஸ்கென்ன குறைச்சல்.. நல்லாத்தான இருக்கு.. நீ இந்த மாதிரி பொம்பள புள்ளைங்க போடுற டிரஸெல்லாம் எப்ப கவனிக்க ஆரம்பிச்ச.. விளையாடமா குடுப்பா..”
“ம்மா இப்படியே சொல்லி இவளுக்கு செல்லம் கொடுக்காதிங்க..” பேசியபடியே போனை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைய,
ஸ்ருதிக்கு கோபம் அதிகமாகி தன் குதிரை வாலை கொண்டயாக்கியவள் இருகைகளையும் இடுப்பில் வைத்து “அத்த உங்க புள்ளைய மரியாதையா என் போன கொடுக்கச் சொல்லுங்க அப்புறம் ஸ்ருதிக்கு கோபம் வந்தா அவருக்குத்தான் சேதாரம் அதிகமாகும் சொல்லிட்டேன்..”
அவளுடைய கோப முகபாவனையில் இவருக்கு சிரிப்பு வந்திருக்க சிரித்தால் இன்னும் கோபப்படுவாள் என நினைத்தவர்” ஸ்ரீய குடுறா இட்லி ஊட்டனும் நீ போய் கேளு குடுத்துருவான் சும்மா விளையாட்டு காட்டுறான்டா.. “
அஸ்வின் அறைக்குள் வேகமாக நுழைந்தவள் அவன் தன் பீரோவில் ஏதோ எடுத்துக் கொண்டிருக்க அவன் கைகளின் இடையில் நுழைந்தாள்..” மாமா மரியாதை என் போன கொடுங்க..??”
அதை இன்னும் தன் சட்டைபையில் தள்ளிவிட்டவன் ,”போடி தரமுடியாது..”
“இனி உங்ககிட்ட வாயால கேட்க முடியாது..” அவன் சட்டைப்பையில் தன் கைகளைவிட்டு எடுக்கப் போக..,
அவனோ மறுபக்கம் திரும்பி கொண்டு,” போடி ராட்சசி இந்த மாதிரி டிரஸ் போட்டு போட்டோ எடுக்க மாட்டேன் சொல்லு தர்றேன்..??” மனதிற்குளோ ஏய் லூசு எனக்கு மட்டும் இந்த டிரஸ போட்டுக்காட்டுடி..
ஸ்ரீயோட அப்பா.. அதுதாண்டி இப்ப உனக்கு தெரியுது.. நான் உனக்காக உருறது தெரியுதா இவளுக்கு எப்ப விளக்கம் சொல்லி எப்படி புரிய வைக்கிறது.. இப்போது அவள் அவன் முன்புறம் வந்து நின்றவள் அவன் ஏதோ யோசனையில் இருக்க சட்டென அவன் சட்டைக்குள் கைவிட்டு அவள் போனை பிடித்திருந்தாள்.. அதை எடுக்க விடாமல் அப்படியே அழுத்தியவன்,” அப்ப நான் சொன்னா கேட்க மாட்டியா..??”
“நான் ஏன் கேட்கனும் ஸ்ரீய கேட்கச் சொல்லுங்க.. அவன்தான் உங்க பையன் நானெல்லாம் சந்திரன் சொன்னாலே கேட்க மாட்டேன்.. ”அவனை தலையால் தண்ணீர்குடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்..
பெருமூச்சவிட்டவன் அவள் கையை தன் இதயத்தோடு வைத்து அழுத்தி விலக்க போனை வெற்றிகரமாக பறித்ததில் அவளோ துள்ளிக்குதித்து கொண்டிருந்தாள்.. ஆமா சும்மாவே நான் பிளாட் இவ இதுல குதிக்க வேற செய்றாளே.. தன் கண்கள் போகும் பாதைக்கு தடைவிதிக்க முடியாமல் தடைவிதித்தவன் சட்டென மறுபக்கம் திரும்பி அங்கிருந்த ஒரு பையை எடுத்து,
புடவையை வாங்கி கொண்டவள் எப்ப பார்த்தாலும் என்கிட்ட வம்பிழுக்கிறிங்கல்ல இன்னைக்கு உங்கள வைச்சு செய்றேன் பாருங்க.. யாருக்கிட்ட..” ஓகே மாம்ஸ் பெரிய பொண்ணாவே நடந்துக்குறேன்..??”
“ஏய் லூசு மாம்ஸ் கீம்ஸ்ன்னு சொல்லாம மரியாதையா கூப்பிடுடி..??” இவ இப்படி பேசுறதுனாலதான் எல்லாரும் இவள இன்னும் சின்னப்புள்ளையாவே நினைக்கிறாங்க..
“ஓகே ஓகே நோ கோபம்… நீங்க என்ன சொல்றிங்களோ அதயே கேட்கிறேன்..?” நல்ல பிள்ளையை போல பதவுசாக பேசியவள் அந்த உடைகளோடு கற்பகத்தை நோக்கி ஓட ,
இன்னைக்கு எப்படியாவது என் மனச இவளுக்கு புரிய வைச்சிரனும்.. ஸ்ருதிக்கு தான் ஆசையாக எடுத்த புடவையில் வரும் அவள் வரும் அழகை காண இப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்தான்..!!!