‘இங்க ஆபீசர்ஸ் எல்லாம் பக்கத்தில இருக்காங்க.. ஒர்க்கிங் டேன்னு தெரிஞ்சும் எதுக்கு இந்த டைம்ல கால் பண்றிங்க..? இன்னும் ஒரு அரைமணிநேரத்தில நானே கால் பண்றேன்.” என்று கட் பண்ணினாள்.
‘கல்யாணம் பண்ணிக்கிட்டா வேலைக்கு போகமாட்டேன்னுதான சொன்ன..? இப்ப எதுக்குடி வேலைக்கு போற..?” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான்.
போச்சிடா.. டி போட்டு பேச ஆரம்பிச்சிட்டானா..? இதுக்கு மேல இவன் தொல்லை தாங்க முடியாது.. என்று போனை சுவிட்ச் ஆப் செய்தாள். உடனே அவளுடைய அலுவலகத்திற்கு கிளம்பினான் ரகுராம்.
லன்ச் டைம் வரை காத்திருந்தவன் பிறகு உள்ளே போய்.. ‘இப்ப லன்ச் பிரேக்.. நீ இப்ப ஆபீசர் இல்ல.. இந்த ரகுராமோட பொண்டாட்டி.. வா போய் லன்ச் சாப்பிடலாம்..” என்றான்.
‘உங்களுக்கு கொஞ்சமாச்சம் அறிவிருக்கா..?” என்றாள்.
‘அது இருந்திருந்தா.. இப்படி வயசுக்கேத்த பீலிங்ஸ்சே கொஞ்சம் கூட இல்லாத உன்னைப் போய் லவ் பண்ணியிருப்பேனா..?“ என்றான்.
‘ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. ப்ளீஸ்.. புரிஞ்சிக்கோங்க.. நான் இப்ப கண்டிப்பா வரமாட்டேன்.. வேணும்னா இந்த மீட்டிங் முடிஞ்சதும் வரேன்..”
‘சரி.. நீ சாப்பிடு நான் போறேன்.. இன்னைக்கு என்ன லன்ச் கொண்டுவந்த..?”
அவள் லன்ச் பாக்சை திறந்து பார்த்தான்.. அதில் சாம்பார்சாதமும் ஊறுகாயும் இருக்க.. ரகுவிற்கு கோபம் தலைக்கேறியது… ‘இதுக்கு கேப்பைக் கஞ்சி எவ்வளவோ மேல்… அதை குடிச்சா உடம்பாவது நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும், இதென்ன சாம்பார்சாதத்துக்கு ஊறுகாய் மட்டும் கொண்டு வந்திருக்க..? காய்.. கீரை இப்படி எதுவுமில்லாம சாப்பிட்டா உடம்பு வீக்கா இல்லாம என்ன செய்யும்…?” என்று கடிந்தான்.
‘மீட்டிங் முடிஞ்சதும்.. நீ உடனே கிளம்பிடனும்.. அப்படி நீ வர லேட் பண்ணின..‚ அப்புறம் நானே வந்து உன்னை கூட்டிட்டுப் போவேன்..” என்று கோபமாக கிளம்பினான்.
ரகு நேராக பார்வதியை வழக்கமாக சந்திக்கும் தனது எஸ்டேட் பங்ளாவிற்கு சென்றுகொண்டிருந்தான். தனது போன் அடிக்கவும்.. எடுத்துப்பார்த்தான். துரைமாமா காலிங் என்று வரவும்.. ‘மாமா.. சொல்லுங்கமாமா.. எல்லாம் நல்ல படியா முடிஞ்சதுங்களா..?”
‘ஆமாம் ரகு.. இப்ப நீ எங்க இருக்க..? ஒரு முக்கியமான விசயம் பேசனும்..” என்றார்.
ரகு அமைதியாக இருக்கவும்.. ‘ஏன்யா..? முக்கியமான வேலையா இருக்கியா..?”
‘வீட்லதான் இருக்கேன் ரகு.. விவேக் தம்பி வீட்ல என்னைக்கு உறுதிபண்றதை வச்சிக்கலாம்னு கேட்டுட்டு போயிருக்காங்க.. அதைப் பத்திதான் பேசனும்..” என்றார்.
‘சரிங்கமாமா.. நீங்க வீட்லயே வெய்ட் பண்ணுங்க.. நானே வந்து உங்களை கூட்டிட்டு வரேன்..” என்று சற்று நேரத்தில் வீட்டிற்கு முன்னால் வண்டியில் இருந்தபடியே ‘மாமா..” என்றழைத்தான். அவர் வந்ததும்..
‘ஏன்யா..? அதுக்கு இங்கையே பேசிடலாமில்ல..?” என்றார்.
‘இல்லமாமா.. ஒரு சின்ன டென்சன் அதனால என்னால இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. நீங்க வாங்க.. நான் நம்ம எஸ்டேட் பங்களாக்குத்தான் உங்களை கூட்டிட்டுப்போறேன்..” என்று கிளம்பினான்.
உள்ளே வந்ததும்.. ‘அந்த விவேக் தம்பிவேற ஒருவாரம்தான் லீவ் போட்டுருகாராம் அதனால சீக்கிரமா உறுதி பண்ணிக்கலாம்னு சொன்னாங்க. எனக்கும் அதுதான் சரின்னு படுது. நான் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அவங்களுக்கு தகவல் சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.. என்னைக்கு வச்சிக்கலாம்னு நீ சொல்லு..“ என்றார்.
‘மாமா.. நாளைக்கேன்னாலும் நான் வரேன்..” என்றான்.
‘சரி ரகு.. உடனே அவங்களுக்கு தகவல் சொல்லிடறேன்.. நாள் நல்லா இருந்தா நாளைக்கே வச்சிக்கலாம்.. நீ ஏன் ரகு டென்சனா இருந்த..?” என்றார்.
‘பார்வதியை ஏற்கனவே டாக்டர் ரொம்ப வீக்கா இருக்கிறதா சொன்னாங்க. இன்னைக்கு என்னடான்னா.. எல்.கே.ஜி குழந்தைங்க ஸ்னாக்ஸ் பாக்ஸ்மாதிரி ஒரு பாத்திரத்தில சாப்பாடு கொண்டு வந்திருக்கா.. ஆபிஸ்ல வச்சி என்னால எதுவும் சொல்ல முடியலை அவ வீட்டுக்கு உள்ளேயும் நான் போறதில்ல.. அதனால இங்க வரசொல்லியிருக்கேன்.. ” என்றான்.
பார்வதியிடமிருந்து ரகுவிற்கு கால் வரவும் ‘எங்க இருக்க..?” என்றான்.
‘இங்கதான் வெளியில.. வீட்ல யார் இருக்கா..?” என்றாள் பதட்டத்துடன்.
‘மாமாதான் இருக்கார் நீ உள்ள வா..” என்றான்.
பார்வதி உள்ளே வந்ததும் துரையைப் பார்த்து பதட்டமாய் நின்றாள். ‘உன்னோட வீட்டுக்கு வரதுக்கு எதுக்குமா இப்படி தயங்குற..? வா..” என்றார் துரை. பார்வதி உள்ளே வந்து அமைதியாக நின்றாள்.
‘டாக்டர் உன்கிட்ட என்ன சொன்னாங்க..?” என்றான் ரகு.
‘இப்ப கொஞ்சம் பரவாயில்லையா இருக்கு. முன்னைவிட பெட்டராத்தான் இருக்கேன்..”
‘நீ கொண்டு வந்தியே.. அதுக்கு பேர் சாப்பாடா..?” என்று கத்தினான்.
பார்வதி அமைதியாய் இருக்கவும்.. ‘உனக்கு கொஞ்சமாச்சம் அறிவு இருந்தா.. இப்படி சாப்பாடு சாப்டுவியா..? அதுவும் இப்படி வீக்கா இருக்கிற நேரத்தில..” என்றான்.
‘நான் என்ன பண்ணட்டும்..? எனக்கு சமைக்கவும் தெரியாது.. ஏதோ தெரிஞ்சதை பண்ணலாம்னு பார்த்தா.. சமைக்கும்போதே ஒரே குமட்டலா வருது.. எனக்கென்ன பார்த்து பார்த்து செய்ய எங்கம்மாவா இருக்காங்க..? அவங்கதான் எந்த கவலையும் இல்லாம என்னை தவிக்க விட்டுட்டு போய்ட்டாங்களே..‚” என்று அவளும் கோபமாய் கத்தினாள்.
தம்பிதுரை மனம் பதறினார். பிறகு ‘ஏன்மா.. உனக்கும் வேலை கிடைச்சிடுச்சி யாரை நம்பியும் நீ இல்லை சமையலுக்கு ஆளாச்சம் வச்சிக்கலாமில்ல இல்லன்னா ரகுகிட்டையாவது உன் பிரச்சணையை சொல்லியிருக்கனும் இதெல்லாம் விட்டுட்டு.. எனக்கு சமைக்கத்தெரியலைன்னு சொல்லிகிட்டு.. சாப்பிடாம இருக்கியே.. இது தப்பில்லையா..?” என்றார்.
‘எங்க தெருவுல ஒரு அம்மாகிட்ட கேட்டுப் பார்த்தேன்.. அவங்க நான் வரலைன்னு சொல்லியிந்தாங்கன்னா கூட பரவாயில்ல எங்க வீட்டுக்காரரு சுந்தரம் ஐயா எஸ்டேட்லதான் ரொம்ப வருசமா வேலை செய்றாரு அவங்களுக்கும் .. உங்களுக்கும் இப்ப பிரச்சணையா இருக்கும்போது நான் எப்படிம்மா உங்க வீட்டுக்கு சமைக்க வரமுடியும்..? அவங்களை எதிர்த்துக்கிட்டு எங்களால ஒன்னும் பண்ணமுடியாது என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்றாங்க…‚ உங்க எஸ்டேட்ல வேலைசெய்யாதவங்க யாருன்னு கண்டுபிடிச்சி… எங்களுக்கு சமைச்சி கொடுங்கன்னு பிச்சை கேக்க என்னால முடியாது..” என்று ரகுவை முறைத்துக்கொண்டே கூறினாள்.
‘சரிம்மா.. நீ யார்கிட்டையும் போய் எதுவும் கேக்க வேணாம். எங்க வீட்ல சமையலுக்குன்னு இரண்டு பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒரு ஆளை நான் நாளைலயிருந்து அனுப்பி வைக்கிறேன்..” என்றார் தம்பிதுரை.
‘உங்களால எங்களுக்கு எந்த பிரச்சணையும் வராதுன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா.. அது எங்கப்பாக்கு தெரியாது அதனால உங்களுக்கு தெரிஞ்சவங்க யார் வந்தாலும் அவர் நம்ப மாட்டார்.” என்று சொன்னாள்.
‘சொல்ல வந்ததை முழுசா சொல்லு…” என்று மிரட்டினான்.
‘அதான் சொல்லிட்டனே..‚ எங்கப்பா நம்ப மாட்டார் அவருக்கு பிடிக்காதுன்னு…” என்றாள்.
‘சொன்னதையே திருப்பி சொல்லாம.. உண்மையான காரணத்தை சொல்லு..?” என்று அவனும் விடாமல் கேட்டான்.
‘உங்களுக்கு தெரிஞ்சவங்க சமைக்க வந்தா நம்ம குழந்தைக்கு எதாவது ஆய்டும்னு பயப்படறார்..” என்று தலைகுனிந்து தயக்கத்துடன் சொல்லிமுடித்தாள்.
இறுகிய முகத்தோடு.. ‘சரி நீ கிளம்பு..” என்றான்.
‘நான் அப்படி நினைக்கல அவர் ரொம்ப பயந்துக்கிறார் நான் என்ன பண்ணட்டும்..?”
‘நீ ஒன்னும் பண்ண வேண்டாம்.. கிளம்பு..” என்று மீண்டும் சொன்னான். ரகுவிற்கு கோபத்தில் முகமெல்லாம் சிவந்திருந்தது. அதைப்பார்த்தவள்..
‘இதுக்குத்தான் நான் உங்ககிட்ட எதையும் சொல்றதில்லை எங்கம்மா போனதுக்கப்புறம் அவரோட நம்பிக்கை தைரியம்.. இப்படி எல்லாமே போன மாதிரி அவர் இருக்கார். கொஞ்சம் கொஞ்சமாத்தான அதை சரிபண்ணமுடியும்..‚ உங்க இரண்டு பேருக்கும் நடுவில நான்தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்..” என்று தளர்வாய் கூறினாள்.
நாம் இங்கிருந்தால் இவர்கள் சமாதானம் ஆகமாட்டார்கள் என்றுணர்ந்த துரை.. ‘ரகு.. நான் போய் முதல்ல பார்வதிக்கு எதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன் உன் வண்டிசாவியை கொடு..” என்றார்.
‘வேணாம் மாமா எல்லாருமே கிளம்பலாம்.. போற வழியில நம்ம வேலுச்சாமி ஹோட்டல்ல இவளுக்கு எதாவது வாங்கி கொடுத்துக்கலாம்..” என்று வீட்டை பூட்டுவதற்கு சாவியை எடுத்தான்.
‘நான் உன்னை உன்னோட வண்டி சாவியைத்தான கொடுக்க சொன்னேன்..‚ என் பேச்சுக்கு மதிப்பே இல்லையா..?” என்றதும்.. எதுவும் சொல்ல முடியாதவனாய் சாவியை கொடுத்தான் ரகு.
‘இவங்களும் சாப்பிடாமத்தான் இருப்பாங்கப்பா…” என்று துரையிடம் பார்வதி சொன்னாள். ரகுவும் துரையும் பார்வதியை அதிசயமாய் பார்த்தனர். நாம அப்படியென்ன சொல்லிட்டோம்..? இப்படி பார்க்கிறாங்க.. என்று யோசித்தாள்.
‘அப்பான்னு சும்மா சொல்லிட்டா பத்தாது.. உனக்கு எதாவது பிரச்சணைன்னா.. என் நியாபம் உனக்கு வரனும்..” என்று சந்தோசமாய் அவளுக்கு அறிவுறுத்தானார்.
பார்வதியும் சம்மதமாய் தலையசைத்தும்.. ‘நம்ம வீட்ல விசேசம் நான் சாயங்காலம் வீட்டுக்கு வந்து உங்கப்பாகிட்ட சொல்லிட்டு வரேன். நீங்க இரண்டு பேரும் ரகுவோட வரனும்..‚” என சொல்லி கிளம்பினார்.
துரை கிளம்பியதும் ரகு ஜன்னல் புறம் திரும்பியவன்தான்.. கால் மணி நேரமாகியும் அப்படியே நின்றிருந்தான். காலிங் பெல் சத்தம் கேட்டது. அப்பொழுதுதான் திரும்பி வெளியே பார்த்தான். ‘என்ன ராமு..?” என்றான்.
‘துரை ஐய்யா இதை உங்ககிட்ட கொடுத்திட்டு வர சொன்னாருய்யா..“ என்று சாப்பாடோடு வண்டி சாவியையும் கொடுத்தான். ரகுராமின் போன் அடிக்கவும்.. ‘மாமா..” என்றான்.
‘ரகு.. அது நம்ம வீட்டு சாப்பாடுதான் இதுவரைக்கும் வேணும்னா.. பார்வதி உனக்கு பொண்டாட்டியா மட்டும் இருந்திருக்கலாம்.. ஆனா இனிமே அப்படியில்ல என்னை அப்பான்னு கூப்பிட்டிருக்கு.. அதனால உன் கோபத்தையெல்லாம் பார்வதிகிட்ட காட்டாம ஒழுங்கா பார்வதியை சாப்பிட வச்சிட்டு நீயும் சாப்பிட்டு கிளம்பு. அப்படியே என் நெம்பரை பார்வதிகிட்ட கொடுத்து அவங்க அப்பா வந்ததும் எனக்கு போன் பண்ண சொல்லு நாம போய் அவங்களுக்கு போய் சொல்லிட்டு வந்திடலாம் வச்சிடட்டுமா..?“ என்றார்.
‘சரிங்க மாமா.. “ என்று லேசாய் சிரித்துக்கொண்டே பார்வதியைப் பார்த்தான்.
அவள் அமைதியாக இருக்கவும்.. அவள் பேகில் இருந்து வண்டிசாவியை எடுத்தான். அவள் வேண்டாம் என்பதுபோல் ரகுவை பார்க்கவும் ரகு பார்வதியை கண்டுகொள்ளாமல்.. ராமுவோடு வெளியே போய்.. பார்வதிக்கு தெரியாமல் ‘வேலுச்சாமி ஹோட்டல்ல நான் சொன்னேன்னு ஒரு பார்சல் சாப்பாடு வாங்கிட்டுபோய் பார்வதியோட அப்பாக்கு கொடு அவர் சாப்பிட்டதுக்கு அப்புறம் நீ கிளம்பு..” என்று ராமுவை அனுப்பிவிட்டு ‘வா.. சாப்பிடலாம்..” என்றான்.
‘இவ்ளோ நேரம் அந்த ஜன்னலைத்தான கட்டிப்பிடிச்சிட்டு இருந்திங்க.. சாப்பாட்டையும் அதுக்கே கொடுங்க.. எனக்கு ஒன்னும் வேணாம்..” என்று முறுக்கினாள்.
‘சரி.. நான் துரைமாமாக்கு போன் பண்ணி பார்வதிக்கு சாப்பாடு வேணாமாம்னு சொல்லிடறேன்.. ஏன்னா..? இந்த சாப்பாட்டை அவங்க வீட்ல இருந்துதான் உனக்காக கொடுத்தனுப்பியிருக்கார். “ என்று போனை எடுத்தான்.
அவனிடமிருந்து போனை பிடுங்கி சோபா மீது தூக்கிப்போட்டு ‘வாங்க சாப்பிடலாம்..“
‘ஒரு நிமிசம் இரு..” என்று வெளியே வந்தவன் வீராச்சாமிக்கு கால் செய்தான்.