இப்பொழுது கௌதமன், “தினமும் பேசினால் தான் நெருங்கிய நண்பர்கள் என்று இல்லை.. எங்கள் நட்பை உங்களிடம் விளக்கனும் னு எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.. சவிதா என் மனைவி.. ஊர்மிளா சித்தார்த்தின் மனைவி.. அவ்ளோ தான்.. தனி மனிதன் ஒருவனின் துண்டுதலில் தேவை இல்லாத சர்ச்சையை நீங்க எழுப்புறது சரியில்லை.. இவன் மலேசியாவில் இருந்து வீட்டிற்கு வந்து அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணலை.. அதற்குள் இப்படி படையெடுத்து வந்து, ஏதோ தேச துரோகமோ பெரும் குற்றமோ செய்தது போல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீங்க! எங்கள் பெர்சனல் விஷயத்தில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை”
“அது எப்படி சார்? மிஸ்டர் சித்தார்த்தன் ஒரு லீடிங் பிஸ்னஸ் மேன்.. இவரை முன்னுதாரணமா நினைப்பவர்களுக்கு இவர் தவறான வழிகாட்டியாகி விட கூடாதே!”
சித்தார்த்தன், “என்னை முன்னுதாரணமா எடுத்துக்க சொல்லி நான் யாரிடமும் கூறவில்லை.. அப்படியே யாரும் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் என் தொழில் யுக்திகளை தானே பின்பற்றுவார்கள்!!” என்றவன், “அப்படி என்ன சார் நான் தவறாக நடந்துக் கொண்டேன்?” என்று சிறு கோப குரலில் வினவியவன்.
சித்தார்த்தன், “உண்மை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?”
“இருக்கிறது”
“உங்கள் ஆதாரத்தை காட்டுங்க”
“ஒரு நிமிஷம்” என்று கூறி சென்ற சதீஷ் ஒரு இளைஞனை அழைத்து வந்தான்.
அந்த இளைஞனை பார்த்ததும் சித்தார்த்தன் கௌதமனை பார்க்க அவன் சிறு தலை அசைப்புடன் உள்ளே சென்றான்.
சதீஷ், “இவர் தான் சாட்சி”
“எதற்கு?”
“ஒரே நாளில் நீங்க சவிதா மற்றும் ஊர்மிளா என்ற இரு பெண்களை திருமணம் செய்ததிற்கு”
“ஓ” என்றபடி அவன் திரும்பி பார்க்க, அப்பொழுது கௌதமன் சித்தார்த்தனுக்கு திருமணம் செய்து வைத்த குருக்களுடன் வந்தான்.
அந்த குருக்கள் நேராக சென்றது சதீஷ் அருகில் இருந்த அவர் மகனிடம் தான். அவர் கோபத்துடன் மகனை பார்த்து, “ஏன் டா இப்படி பண்ண? நம்மாத்துலயும் பொண் குழைந்தை இருக்கா னு நோக்கு தோணவே இல்லையா?”
“அப்பா.. அது.. வந்து” என்று அவன் சிறிது திணற,
சதீஷ், “சார் உண்மையை வெளி கொண்டு வர………..”
“நேக்கு உன்னாண்ட பேச்சு இல்லைடா அம்பி” என்ற குருக்கள் மகனை பார்த்து, “பெண் பாவம் பொல்லாதது டா.. நம்மாத்துக்கு அது வேணாம் டா” என்றார் சிறிது கலங்கிய குரலில்.
சட்டென்று கூட்டத்தை நோக்கி திரும்பிய அந்த இளைஞன், “எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க..” என்று கூறி சித்தார்த்தனை கை காட்டி, “இவர் ரெண்டு பொண்ணுகளை கல்யாணம் செய்துகிட்டார்னு இங்கே வந்து சொல்ல சொன்னாங்க” என்றான்.
சித்தார்த்தன், “யார் இப்படி சொல்ல சொன்னது?” என்று வினவினான்.
“அவர் யாருன்னு எனக்கு தெரியாது.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த இப்படி சொல்லணும் னு சொன்னார்.. பணமும் தரேன்னு சொன்னார்.. நான் பணம் வேணாம் னு சொல்லிட்டேன்.. அவர் அந்த காரில் தான் இருக்கிறார்” என்றான் சற்று தொலைவில் இருந்த வண்டியை சுட்டிக் காட்டி.
கூட்டத்தில் சிறு சலசலப்பு எழ, சித்தார்த்தன் சதீஷை பார்த்து, “அவரை கூட்டிட்டு வாங்க” என்றான்.
அனைவரின் பார்வையும் தன்னிடம் இருக்கவும் வேறு வழி இல்லாமல் சதீஷ் விக்னேஷ் இருந்த வண்டியை நோக்கி சென்றான்.
இவ்வளவு நேரம் இங்கே நடந்ததை சதீஷின் கைபேசி அழைப்பு மூலம் கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ் சதீஷ் அங்கே சென்றதும் கோபத்துடன், “அவன் சொன்னா என்னை கூப்பிட வந்திருவியா?” என்று சீறினான்.
சதீஷ், “சாரி சார்.. வேறு வழி இல்லை.. எல்லோரும் பார்க்கிறாங்க.. வாங்க” என்றான்.
விக்னேஷ் கடுமையாக முறைக்கவும், சதீஷ், “சார் இப்போ நீங்க வரலைனா எல்லோரும் இங்கேயே வந்திருவாங்க.. அங்கே போய் சமாளிக்கலாம்” என்றான்.
விக்னேஷ் பல்லை கடித்துக் கொண்டு, “என்னத்தை சமாளிப்ப? எல்லாத்தையும் அந்த குருக்கள் வந்து கெடுத்துட்டானே!”
“வேற ஏதாவது யோசிங்க சார்.. இப்போ வாங்க” என்றான்.
‘உட்கார்ந்த இடத்தில் இருந்துட்டே எல்லா காரியத்தையும் சாதிக்கிறான்!’ என்று கடுப்புடனும் இயலாமை தந்த கோபத்துடனும் முணுமுணுத்தபடியே அங்கே சென்றான்.
விக்னேஷ் அங்கே சென்றதும்,
“நீங்க தான் இவரை அனுப்பி இப்படி சொல்ல சொன்னீங்களா?”
“ஏன் சார் இப்படி பண்ணீங்க?”
“மிஸ்டர் சித்தார்த்தை தொழிலில் ஜெய்க்க முடியலைன்னு இப்படி செஞ்சீங்களா சார்?”
“தொழிலில் ஜெய்க்க முடியவில்லை என்றால் இப்படியா சார் செய்வீங்க?”
“என்ன இருந்தாலும் அடுத்த வீட்டு பெண்களை பற்றி அவதூறாக பேச வச்சிருக்க கூடாது சார்”
“கொஞ்ச நாட்கள் முன் உங்கள் இடங்களில் நிகழ்ந்த ரேய்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா சார்?” என்ற கேள்வி கணைகள் அவனை சரமாரியாக தாக்கியது.
விக்னேஷ் சித்தார்த்தனை முறைக்க, அமைதியான முக பாவனையுடன் நின்றிருந்த அவனோ பிறர் அறியாமல் புருவம் ஏற்றி இறக்கினான். அதை கண்டதும் விக்னேஷின் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது.
விக்னேஷ் கோபத்துடன், “நிஜமாவே ஒரே நாளில் இவன் ரெண்டு கல்யாணம் செஞ்சுகிட்டான்.. அதுவும் இவனோட முதல் மனைவி இதோ நிற்கிறானே கெளதம் அவனோட மனைவி தான்..”
“நீங்க சொல்றதை நாங்க எப்படி நம்புறது?”
“நீங்கள் சொல்வது நம்புறது போல் இல்லையே!” என்ற கேள்விகள் எழ,
விக்னேஷ், “இவ்வளவு நேரம் இதை நம்பினீங்க தானே!”
அந்த நடுத்தர வயதில் இருந்த பத்திரிக்கையாளர், “அதை நாங்க நம்பினதா எப்போ சொன்னோம்? கிடைத்த தகவல்கள் உண்மையா என்று மிஸ்டர் சித்தார்த்தன் கிட்ட கேட்டோம்.. மிஸ்டர் சித்தார்த்தன் மற்றும் மிஸ்டர் கௌதமன் கூற்றின் படி அது உண்மை இல்லை என்று தான் தெரிகிறது.. இது என்னவோ உங்களின் திட்டமிட்ட சதியாக தான் தெரிகிறது.. தொழில் போட்டி மற்றும் பழி வாங்கும் திட்டமாக தான் தெரிகிறது” என்றார்.
“இல்லை.. இல்லை.. நான் சொன்னது உண்மை தான்” என்று கத்திய விக்னேஷ் அந்த குருக்களை நோக்கி, “நீங்க தான் பொய் சொல்ல மாட்டீங்களே! உண்மையை சொல்லுங்க சார்” என்றான்.
அவரோ, “பெண் பாவம் எங்களுக்கு வேணாம்.. எங்களை விட்டுங்கோ” என்றவர் மகனின் கையை இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
“நான் சொல்றது தான் உண்மை..” என்ற விக்னேஷ் சித்தார்த்தன் பக்கம் திரும்பி, “உன் கல்யாணத்தை ஏன் அம்பாசமுத்திரத்தில் நடத்தினீங்க?”
“சவிதாவோட அம்மா அங்கே கல்யாணம் நடத்துறதா வேண்டி இருந்தாங்க”
“உன் மனைவி ஊர்மிளா தானே சவிதா அம்மா வேண்டுதல் படி ஏன் உன் கல்யாணம் நடக்கணும்?”
“என்னவோ சொன்னீங்களே! இவன் வாயாலேயே சொல்லிட்டான் பாருங்க” என்றான் விக்னேஷ்.
ஒரு நொடி கௌதமனை பார்த்த சித்தார்த்தன் அவனது கண்ணசைவில் சம்மதம் பெற்று, “கௌதமும் சவிதாவும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ரகசிய கல்யாணம் செஞ்சுகிட்டாங்க.. சுனாமியில் பாதிக்கப் பட்ட சவிதா தன்னோட நினைவை இழந்துட்டாங்க.. தான் யார்? தன் பெயர் என்ன? என்பது கூட தெரியாத நிலையில் அவங்க இருந்தாங்க.. அப்போ தான் எனக்கும் அவங்களுக்கும் எங்க பரென்ட்ஸ் மரேஜ் பிக்ஸ் பண்ணாங்க.. சவிதா அம்மாவின் வேண்டுதலால் அம்பாசமுத்திரத்தில் கல்யாண ஏற்பாடு நடந்தது. கல்யாணத்தன்று கௌதமை பார்த்ததும் சவிதாவிற்கு பழைய ஞாபகம் வந்து அவங்க கல்யாணத்தை பற்றி சொன்னாங்க.. அப்பறம் எனக்கும் ஊர்மிளாவிற்கும் கல்யாணம் நடந்தது”
“அப்போ இரண்டாவதா கோவிலில் யாருக்கு கல்யாணம் நடந்தது?”
“பெற்றோர் முன்னிலையில் கௌதமிற்கும் சவிதாவிற்கும் நடந்தது”
“இல்லை.. இவன் சொல்றது எல்லாம் பொய்.. நீங்க வேணா சவிதா ஊர்மிளாவை கூப்பிட்டு கேளுங்க” என்று கத்தினான் விக்னேஷ்.
சித்தார்த்தன் கோபத்துடன், “விக்னேஷ் உன் லிமிட்டை ரொம்பவே கிராஸ் பண்ற” என்று எச்சரித்தான்.
“உன் பக்கம் உண்மை இருந்தால் அவங்களை பேச சொல்றதிற்கு ஏன் தயங்குற?”
“என் மனைவி யாரோட கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..”
“இதெல்லாம் சமாளிக்கிறதுக்கு சொல்றது.. உன் பக்கம் உண்மை இருந்தால் தைரியமா அவங்களை கூப்பிடு”
“என் தைரியத்தை பற்றி தான் உனக்கு நல்லா தெரியுமே!”
விக்னேஷிற்கு உள்ளுக்குள் சிறு உதறல் எடுத்தாலும் கடைசி முயற்சியாக, “அப்போ அவங்களை கூப்பிட்டு” என்றான்.
“நீ உன் மனைவியை இப்படி தான் ப்ரெஸ் மீட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்க விடுவியா?”
“என் மனைவியும் இவங்களும் ஒன்றா? என் மனைவி என்ன சவிதா போல் இரண்டு கல்யாணம் செய்துக் கொண்டாளா இல்லை ஊர்மிளா போல் இரண்டாம் தாரமாக என்னை கல்யாணம் செய்துக் கொண்டாளா?” என்று அவன் இகழ்ச்சியாக பேசி முடித்த நொடி அவன் கன்னத்தில் பளார் என்று அரை விழுந்தது.
அவன் கோபத்துடன் திரும்ப அங்கே அவன் மனைவி கோபத்துடன் நின்றிருந்தாள்.
விக்னேஷ் அதிர்ச்சியுடன் பார்க்க அவளோ கோபத்துடனும் வெறுப்புடனும், “அடுத்த வீட்டு பெண்ணை இப்படி கீழ் தரமா பேசுவியா? நான் விரும்பிய மென்மையான விக்கி எங்கே போனான்?” என்று முடித்த போது அவள் குரலில் வருத்தமே அதிகமாக இருந்தது.
விக்னேஷ் தாழ்ந்த குரலில், “நான் சொன்னது உண்மை தான் லட்சு.. இவன்…………”
அவன் மனைவி, “மிஸ்டர் சித்தார்த்தன் கல்யாணம் நடந்த சூழ்நிலை பற்றி முழுமையா உனக்கு தெரியும் தானே?”
“லட்சு” என்று அவன் ஆரம்பிக்க அவளோ, “தெரியுமா தெரியாதா?” என்று வினவினாள்.
அவன் தெரியும் என்பது போல் தலையை ஆட்டவும், அவள், “உனக்கும் மிஸ்டர் சித்தார்த்க்கும் தொழிலில் தானே போட்டி! உனக்கு அவர் மேல் கோபமோ வெறுப்போ வெறியோ எது இருந்தாலும் அதை நீ தொழிலில் தானே அவரிடம் காட்டனும்.. இப்படியா இரண்டு பெண்களின் பெயரை கெடுப்பது போல் நடந்துப்ப!”
“நான் பொய்யா எதையும்…………”
“நீ என்னை காதலித்தது உண்மை என்றால் இங்கே பிரச்சனை பண்ணாமல் மன்னிப்பு கேட்டுட்டு வா”
அவன் அதிர்ச்சியுடன், “நான் மன்னிப்பு கேட்கணுமா? உன் நேர்மை என்னாச்சு லட்சு?”
“இரண்டு குடும்பத்தின் பாவம் நமக்கு வேணாம்.. எனக்காக நான் சொன்னதை செய்” என்றாள்.
யார் முகத்தையும் பார்க்காமல், “எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க.. நான் தான் தேவை இல்லாமல் பிரச்சனையை கிளப்பிட்டேன்” என்றவன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று வண்டியில் அமர்ந்துக் கொண்டு மனைவிக்காக காத்திருந்தான்.
விக்னேஷின் மனைவி சித்தார்த்தனை பார்த்து, “அவர் சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்.. இதை இபப்டியே விட்டிரலாமே ப்ளீஸ்” என்றாள்.
கூட்டத்தை பார்த்து திரும்பிய சித்தார்த்தன், “பிரெண்ட்ஸ்.. இதை என் மலேசியா ட்ரிப் பற்றிய பேட்டியாக மாற்றிவிடலாமே! என்ன சொல்றீங்க?”
“சூர் சார்” “ஓகே சார்” என்று குரல்கள் எழ, அவன் புன்னகையுடன், “டென் மினிட்ஸ் கார்டனில் வெயிட் பண்ணுங்க நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றவன் சுதர்சன் பக்கம் திரும்பி, “டாட்.. இவங்களுக்கு குடிக்க டீ காபி ஆர் ஜூஸ் ஏற்பாடு பண்ணுங்க” என்றான்.
வசந்தன், “நான் அவங்களை கவனிக்கிறேன்.. நீங்க சாப்பிட ஏற்பாடு பண்ணுங்க அங்கிள்” என்று கூறி வந்தவர்களை தோட்டம் பக்கம் அழைத்துச் சென்றான்.
விக்னேஷின் மனைவி கிளம்ப சித்தார்த்தன், “ஒன் மினிட் மிசஸ் விக்னேஷ்” என்றான்.
அவள் திரும்பியதும், “உங்கள் செய்கைக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆனா உங்கள் கணவர் செயலுக்கு நான் பதிலடி கொடுக்காமல் விட மாட்டேன்”
“உங்கள் பதிலடியை தாக்குபிடிக்க அவருக்கு நான் துணையா நிற்பேன்” என்று மென்னகையுடன் கூற,