அவள் 2:
அன்று அலுவலகத்தில் ஒரு பக்கம் காதை கைப்பேசிக்குக் கொடுத்து இருந்தவள் இரண்டு கைகளையும் தட்டச்சிற்குக் கொடுத்து முமூரம்மாய் வேலையில் ஈடுபட்டு இருந்தாள். வேலையில், அவளுடைய மென்டோர் அல்லது ட்ரைனர், அவளது ஹெட் வரவில்லை. படிப்பை முடித்துவிட்டு அவளும் வேலைக்குச் சேர்ந்த புதிது தான். முதல் முறையாய் அவள் தனியாகச் சமாளிக்கப் போகிறாள். எல்லாம் சுலபமாகவே சென்றது அவள் எதிர்பார்க்காதது கூட ஆனால் அது மாலை நான்கு மணி வரை மட்டுமே.
 
அன்றன்றைகான விலைப்பட்டி மற்றும் சரக்கு அனுப்புதல் அவர்களின் முக்கிய பொறுப்பு. அது தவிரக் கணக்கு வழக்குகளைச் சரி பார்ப்பது. தினமும் காலையில் முதல் நாள் வேலைகளை நேரடியாக உரிமையாளரிடமே இவளின் ஹெட் மற்றும் விற்பனை அதிகாரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
 
இவர்கள் இருவர் மற்றும் விற்பனை அதிகாரி மற்றும் நடுவயது பெண் என்று நால்வர் இந்த அறையில். அவளும் அந்த மேடமும் முதல் வரிசை அவளுக்குப் பின்னால் அவள் மென்டோர் அவருக்குப் பின்னால் விற்பனை மேலாளர்.
 
இரண்டு குழந்தைகளுக்குத் தாய் அந்த பெண்மணி, மிகவும் மனமுதிர்ச்சி சில விஷயங்களில், மிகவும் தடுமாற்றம் பல விஷயங்களில். பழகாதவரைச் சற்று கடினமாக காணப்படுவார். பழகிவிட்டாள், இனிமை என்று கிடையாது. ஆனால் புரிந்துகொள்ள கூடியவர்.
 
அவளின் மென்டோர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாத இருபதின் இறுதியில் இருப்பவர், சூழ்நிலை உணர்ந்து சரியான தருணத்தில் உதவுபவர், விளையாட்டு பாதி, தெளிவான வாழ் மீதி.
 
விற்பனை மேலாளர்- கல்லூரி செல்லும் இரண்டு பெண்களுக்கு தந்தை. அவர் வேலையையும் இவர்கள் தலையில் கட்டிவிட்டு ‘ஹாயாக’ காலையில் வந்து அரைமணி நேரம் விடாது அதிகாரம் செய்து வந்த கள அதிகாரிகளை அதட்டிவிட்டு உள்ளே சென்று அறிக்கை சமர்ப்பிக்கும்போது அனைவர் பற்றியும் போட்டுக்கொடுத்துவிட்டு எப்போதடா ஒரு மணி ஆகும் எனக் காத்திருந்து கிளம்புபவர் சாப்பிட்டு உறங்கி சாவகாசமாய் நான்கு மணி போல் வருவார்.
 
அவரிடம் ஒரே பிரச்சனை யோசியாமல் யார் என்ன எனத் தெரியாமல், யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன பேசுகிறோம் என்று யோசியாமல் மற்றவரை காயபடுத்தும் அளவிற்குக் கத்திவிடுவார். இன்னும் கோவம் வந்தால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை பற்றிக்கூட இழுத்துப் பேசுவார், கெட்ட வார்த்தைகளும் அடக்கம் இதில். யாரும் தனக்கு இணையில்லை என்ற நினைப்பு எப்போதும்.
 
 அன்று அவளின் கெட்ட நேரம், அவர் உள்ளே நுழையும்போதே நான்கு பக்கமும் அவளை வேலை இழுத்தது. ஒரு பக்கம் பணம் கட்ட வந்திருப்போர், ஒரு பக்கம் உள்ளே பொது மேலாளர் அவளை அழைக்க ஒரு பக்கம் பைஞ்சுதை கிடங்கிலிருந்து அவளை அழைக்கவென பரபரப்பாய் சுற்றிக்கொண்டு இருந்தாள். அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த இவர், அவளிடம்
 
“அந்த ****** பேசச் சொன்னேனே பேசிட்டியா” என்று அதிகாரமாய் கேட்க
 
அவளோ இன்னும் பேசியிருக்கவில்லை, இரண்டு தடவை தொடர்புகொள்ள முயன்றும் எடுக்கவில்லை. ஒரே வார்த்தையில் ‘இல்லை’ என்று கூறினாலோ ஆடி தீர்த்துவிடுவார், விளக்கித்தான் சொல்ல வேண்டும், அவள் வாயைத் திறக்கலாம் என்று எண்ணும்போது ஆபீஸ் பாய் மறுபடியும் உள்ளே கூப்பிடுவதாய் சொல்லிவிட்டுப் போக
 
“இதோ, ஒரு நிமிஷம் சார் வந்துடறேன்” என்று கூறிவட்டு வேகமாய் ரசீது கிழித்து வந்தவரிடம் கொடுத்தவள் உள்ளே ஓடினாள்.
 
வந்தவளை முறை முறை என முறைத்தவர், பின் அலட்சியமாய் தன் கைப்பேசியில் மூழ்கிப் போக ‘இது வேறயா என்று’ ஆயாசமாய் எண்ணாமல் இருக்க முடியவில்லை
 
“சாரி சார் உள்ளேயும் கூப்பிட்டார்கள் அந்த பார்டியும் காத்துக்கொண்டு இருந்தார்கள் அதான் போக வேண்டியதா இருந்தது, நீங்க சொன்ன விஷயம் பேசவில்லை சார் அவர் தொடரக்கொள்ள முடிய இன்னும். கைப்பேசியை அனைத்து வைத்து இருக்கிறார்கள்” அவரிடம் அசைவே இல்லை. இவள் இரண்டு நிமிடம் நின்று பார்த்தவள் ஒன்றும் கூற முடியாமல் தன் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டாள்.
 
பக்கத்திலிருந்த அந்த மேடமோ ‘ஏன் இப்படி பண்ணிட்ட’ என்று அவள் ஏதோ கொள்ளை கொலை செய்துவிட்டதுபோல் அவளை பாவமாகப் பார்த்தார். ‘என்னடா இது’ என்று நொந்தே போய்விட்டாள். அந்த விற்பனை மேலாளர் அந்தப்புறம் நகர்ந்ததும் இவளிடம் ஆரமித்துவிட்டார் அந்த மேடம்.
“என்ன நீ இப்படி பண்ணிட்ட, அவர் கேட்டே இருக்காரு நீ பாட்டுக்கு போயிட்ட அவர் நிறைய கோவம் ஆகிவிட்டார், என்கிட்ட ‘என்ன மேடம் நான் கேட்டே இருக்கிறேன் அவ பாட்டுக்கு போயிட்டா’ அப்படின்னு அவர் கோவமா கேட்டார்” என்று பீதியைக் கிளப்பினார்கள்.
 
“நீங்க என்ன சொன்னிங்க?”
 
“நான் எனக்கு தெரியவில்லையென்று சொல்லிவிட்டேன், போகும்போது ஒரு வார்த்தை மறுபடியும் சாரி கேட்டுட்டு போ” அதற்குள் போன மனிதர் திரும்பி வந்துவிட இவரும் தன் வேலையைப் பார்க்கத் திரும்பிக்கொண்டார். இவள் திரும்பி பார்க்க ஏதோ தின்று ஏதோ போல் முறைத்துக்கொண்டு இருந்தார் அவர்.
 
“அட ஆண்டவா” வாய்விட்டே முனகிவிட்டாள்.
 
ஏற்கனவே இப்படி தான் ஆகிற்று. ஆறு மணிக்கு பெண்கள் கிளம்பிவிட வேண்டும். ஆண்கள் எட்டு மணி வரை கூட அமர்ந்து வேலை செய்வர். அதற்கு ஏற்ற மாதிரி சம்பளமும் அதிகம் இன்ன பிற வசதிகள் (காலையில் தாமதமாக வரலாம், வீட்டிற்கு உணவிற்கென சென்று மூன்று மணி நேரம் கூட எடுத்துக்கொள்ளலாம் இது போன்று)
 
அன்றும் இவள் ஹெட் ஏதோ அலுவலக வேலையாக ஒரு மணி நேரம் வெளியே சென்று இருந்தார். அவரிடம் கூறிவிட்டு இவள் விற்பனை மேலாளரிடம் கூறிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்தால், சரியாக அதே நேரம் அவர் கழிவறைக்குள் சென்றுகொண்டு கால்மணி நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.  இவள்கூட இருந்த பெண்மணியும் சென்றுவிட உள்ளேயும் அனைவரும் சென்றுவிட்டனர், இருக்கும் ஆண்களும் அன்று ஏதோ தணிக்கையாளர் அலுவலகம் வரை பாதிப்பேர் சென்றுவிட்டனர்.
 
இவள், வெளியில் ஆபீஸ் பாய், உள்ளே ஒருவர், மற்றும் மேலாளர் இருவர் மட்டுமே இருந்தனர். மழைவேறு வெளுத்து வாங்க இவளுக்கோ சிறிது பயமாய். (இருட்டு என்றால் அதிக பயம், அமானுஷ்ய பயம்) எனவே பார்த்தவள், வெளியே ஆபீஸ் பாயிடம் அவர் வந்தால் சொல்லிவிடு என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
மறுநாள் பத்து பேர் சூழ இருக்க, உள்ளே நுழையும்போதே “நேற்று சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிடீங்களே மேடம், உள்ளே அறிக்கை கேக்குறாங்க, எனக்கு இன்றைய விற்பனை பற்றித் தெரியவில்லை நீங்கப் பாட்டுக்கு போய்விட எப்படி அது” என்று கத்திவிட்டார். (மேடம் என்பதெல்லாம் சும்மா, கோவமாய் இருப்பதை கோடிட்டுக் காட்ட)
 
“இல்ல சார், நீங்க இங்க இல்லை, உங்கள் மேசையில் அறிக்கை வைத்துட்டு, ஆபீஸ் பாயிடம் சொல்லிவிட்டுத் தான் போனேன்” என்று இவள் மெதுவாகச் சொல்ல
 
“ஹாஹா நான் இங்க இல்லையா நான் எங்க போக போறேன் இங்க தான் இருந்தேன்”
 
அதற்குமேல் ‘நீ கழிவறை சென்று அரைமணி நேரம் ஆகியும் வரவில்லை அதனால் நான் கிளம்பிவிட்டேன் என்று சொல்லவா முடியும்?” பல்லை கடித்துக்கொண்டு தன்னிடம் சென்று அமர்ந்துகொண்டாள்.
 
அவளின் மென்டோர், பின்னிலிருந்து, உனக்கு அவர் பத்தி தெரியாத சொல்லிவிட்டு போறது தானே? என்னாச்சு என்றார். இவளும் சொன்னாள். “உள்ளே போய்விட்டு வரவே இல்லை சார் எனக்குக் கொஞ்சம் இருட்டுனா பயம் எவ்வளவு நேரம் இருக்க? அதனால் போய்விட்டேன்” என்றாள்.  என்ன சொல்வது என்று தெரியாமல் அவரும் அமைதி ஆகிவிட்டார். (பல சமயங்களில் அவளைக் காப்பாற்றும் ஜீவன்)
 
இன்று மறுபடியுமா? எண்ணிக்கொண்டே வேலையை முடிக்க நேரம் ஆகிற்று. பக்கத்தில் பார்த்தால், அந்த மேடம் எப்பவோ எஸ்கேப். கிளம்பினாள். அவரிடம் சொல்லிக்கொண்டு போகலாம் எனத் திரும்ப வேண்டுமென்றே அலைபேசியில் இல்லாத நபரிடம் பேசிக்கொண்டு இருந்தார். இவள் போய் நிற்க, அப்படி ஒருத்தி இல்லவே இல்லை என்பது போல் மீண்டும் கைப்பேசியில் மூழ்க
 
“sorry sir, I didn’t mean to disrespect you, but I was quite tensed, because at the same point, everyone is calling me that’s why, I thou…”
 
“no, no its my mistake, I treated you equally right, that’s my mistake. I should have kept you where you are. I should have maintained hierarchy”
 
“sir…”
 
“no, don’t disturb me, just leave madam, please I don’t want to talk to you anymore. Hereafter I don’t ask you anything. I will communicate to him for any need. Please don’t try to contact me. கிளம்புங்கள்” என்று கத்திவிட்டார்.
 
இவளுக்குக் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. இது தான் இவள், அனிச்சை அதே சமயம் அழுத்தம். கண்ணீர் விட்டுக்கொண்டே கத்தியின்றி ரத்தம் பார்ப்பாள், அமைதிக்குப் பேர் போனவள் ஆனால் ஆரமித்தால் பூகம்பமே வந்துவிடும், கலவையான குணம் கொண்ட பெண். ஒழுக்கம் மட்டுமே உயிர். அதே சமயம் மற்றவர்களின் வாழ்வில் மூக்கை நுழைக்கமாட்டாள். அவரவர் வாழ்வு அவருக்கு ரகம்.
அழுகையோ, சந்தோசமோ, அந்த நேரம் மட்டும் தான் மற்றபடி தன்னிலையைச் சீக்கிரமே அடைந்து பழைய நிலைக்கே வந்துவிடுவாள் சாதாரணமாகவே இருப்பாள் எப்போதும். அவள் என்ன எண்ணுகிறாள் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, பழிவாங்குதல், மனதில் ஒன்று வைத்து வெளியில் நடிப்பது எதுவும் இருக்காது. Very emotional, very sensitive, very sensible, matured plus childish combo. எல்லாமே கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முயல்வாள். சில சமயங்களில் தன்னையும் மீறி அழுகை வந்துவிடும் இப்போதுபோல்.
 
வாய் திறந்தால் அழுது விடுவோமோ என்று பயந்துவிடக் கிளம்பி மின்தூக்கியில் நுழைந்தாள். அதே சமயம் அவள் மென்டோர் ஏதோ வேலை விஷயமாய் கேட்க அழைக்க இவள் குரல் வைத்து
 
“என்னம்மா என்னாச்சு?” என்று கேட்டது தான் தெரியும்
 
“சார், அவர் கூட பிரச்சனை ஆகிடுச்சு” என்று தேம்பிவிட்டாள்.
 
“என்னாச்சு ஸ்….எங்க இருக்கிறீர்கள் அழாதீங்கம்மா யாரது பார்த்தா தப்பாகிடும்” அவருக்குப் பயம், எங்கே அந்த மனிதர் எதாவது கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டரோ என்று. ஏனென்றால் அவள் அழுகை அப்படி இருந்தது.
 
“இல்…இல்ல…யாரும் இல்ல…நான் கிழ இருக்கிறேன் யாரும் பார்க்காத இடத்தில்” என்று வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.
 
“என்னாச்சு, முதல வீட்டுக்கு கிளம்புங்கள் தயவுசெய்து கன்ட்ரோல்” என்று அவர் சிறிது அழுத்திச் சொல்ல இவளும் கிளம்பினாள்.
 
வீட்டிற்கு வந்தவள் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு கதவை அடைத்துக்கொண்டாள். தினமும் இப்படி தான் என்பதால், அவள் அம்மா பெரிதாய் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. உள்ளே வந்தவள் தேம்பித் தேம்பி அழ அவள் கைப்பேசி ஒலித்தது. அவளின் மொண்டோர் தான்.
 
நடந்தது அனைத்தையும் கூறியவள் “உன்கிட்டலாம் சரி சமமா பேசினேனா பாருன்னு சொல்லிவிட்டார், அசிங்க இருக்கிறது சார் நான் என்ன பண்ணன்” என்று ஆழ
 
“ஐயோ அவர் பத்தி எனக்கு தெரியும்மா நீ இவ்ளோ அழ வேண்டியதே இல்லை என்னலாம் எவ்வளவோ பேசிருக்காறு முதல அழறத நிறுத்து”
“இதோ பாரு அவரு சுபாவமே அதான். நிறைய சுயநலம், அவர்காகலாம் நீ அழவேண்டுமென்று அவசியமில்லை” என்று ஏதேதோ பேசி அமைதிப்படுத்தினார்.
 
“ம்ம்…ம்ம்…” என்று தேம்பிக்கொண்டே இருந்தாள். அவள் அழுகையை நிறுத்திவிட்டால் என்று நினைத்தவர் பொதுவாகப் பேச ஆரமித்தார்.
 
“**** ****” ஒரு புத்தகத்தில் பெயரைக் கூறி அதை படித்து பாருங்கள்” என்று கூறிக்கொண்டு இருந்தார் (அவள் சிறிது நேரம் கிடைத்தாலும் செய்வது புத்தகம் படிப்பது என்று அறிந்தவராய்.
 
“ம்ம் படிக்கிறேன் சார்”
 
“அது எப்படி காலையில் போடுற மேகப் கலையாமல் இருக்கிறீர்கள்”
 
“அது, I don’t sweat” என்றாள்
 
“ஹே நிஜமாகவா? எனக்குக்கூட ஆகாது. சுத்தமா வெயிலில் அலைஞ்சா கூட கொஞ்சம் கூட வராது” என்று ஆச்சரியப்பட்டவர் அவள் பதில் பேசாமல் இருக்க
“என்ன இன்னும் அழுதுகொண்டு இருக்கிறீர்களா?” என்று கேட்க அவளிடம் மீண்டும் தேம்பல்.
 
மீண்டும் ஏதேதோ பேசி அவள்  வேலையில் செய்யும் குளறுபடிகளை கூறி கிண்டல் அடித்து  அவளைச் சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார். இவள் அவள் தாயிடம் ஒப்பிக்க ஆரமித்தாள். ஒரு மணி நேரம் கடந்து மீண்டும் அவளின் மென்டோர் அழைத்தார்
 
“சாப்பிட்டாச்சா?”
 
“எஸ் சார், நீங்க?”
 
“எங்கமா? வெளியே வந்திருக்கிறேன் நட்புகளோடு” என்று கூற
 
“இப்போவா?”
 
“ஆமா, மொத்தம் எட்டு டீ ஆயிற்று, விடமாற்றங்க” சலித்துக்கொண்டார்
 
“சரி தான், வீட்டில் ஒண்ணும் சொல்லமாட்டார்களா?
 
“ஒண்ணும் சொல்லமாட்டார்கள் இப்போது கிளம்பவேண்டும், வீட்டில் எதுவும் சொல்லலையே?”
 
“இல்லையே சொல்லிட்டேனே” இப்போது தெளிந்து இருந்தாள், சிரிப்போடு பேசலானாள்.
 
“எல்லாமேவா?”
 
“ம்ம். ஆமா எல்லாமே, I don’t hide anything from my parents”
 
“ரொம்ப சரியான விஷயம் தான். ஆனால் எல்லாம் சொல்லனும்னு இல்ல அவர்களுக்கும் கஷ்டமா இருக்குமில்லை?”
 
“ம்ம்..ம்ம்..ஆனா அம்மா ரொம்ப நட்போடு பழகுவார்கள், ரொம்ப broadminded person” என்று சொல்ல
 
“சூப்பர் சூப்பர், சரி ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கிறோம் வீட்டில் ஏதாவது தப்பாக நினைக்க போறாங்கம்மா”
“அதெல்லாமில்லை சார், அவங்களுக்கு தெரியும். என் சாரோட பேசிட்டு வரேன்னு சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அம்மா பக்கத்தில் தான் இருக்காங்க” என்று கூற நிம்மதியானவர். சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார்.
 
அவளுக்குமே சீக்கிரம் தூக்கம் வந்துவிட்டது. எப்போதும் அழுதால் எளிதில் உறங்கிவிடுவாள்.