16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்…
மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம் என்னை எழுப்புன அவ்ளோதான்னு போய் மறுபடி தூங்கிட்டு இருக்கா…!! என்ன பண்ணலாம்?’ என்று வடிவேல் கணக்காய் உதட்டில் விரல் வைத்து வானத்தை பார்த்து யோசித்துகொண்டிருக்க…
அங்க நம்ம பச்சைமிளகாய் அவனை ஏமாற்றாமல் தூக்கத்தில், தலையை போர்த்தியிருந்த போர்வையை இடக்கையால் விலக்கியபடி தன் உடலை குறுக்கி நெடுக்கி நெட்டி முறித்து மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே கண்களை மூடி படுத்திருக்க, இவன் பாடு தான் திண்டாட்டம்.
‘எழுந்தாள்ள? ஒழுங்கா வந்து டி குடிக்கலாம்ல. திரும்பி தூங்குது பாரு. கடவுளே! நீ ஒரு போலீஸ்காரன் அதுவும் டி.சி.பி வேற வெளிய சொல்லாத எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பாங்க’ என்று அவன் அறிவு கிண்டல் செய்ய.
‘ஏன் போலிஸ்னா காதலிக்க கூடாதா?’ என்று அவனுக்கு வக்காலத்துக்கு வந்தது மனது.
‘ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருகிங்களா? நானே அவள் எந்திரிக்கலைன்னு டென்ஷன்ல இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் இங்க அடிச்சிக்கிறிங்க?’ என்று அதட்ட இரண்டும் இருந்த இடம் தெரியாமல் அமைதியானது.
மெதுவாய் எழுந்து ஜன்னலில் ஏதோ வித்யாசமான வாசனை வருதேன்னு ஆர்வமாய் தேநீர் கோப்பையை கையில் எடுத்துவிட்டு குடிக்கலாமா வேணாமான்னு யோசிச்கிட்டு நிக்குறா… பச்சைமிளகாய்.
‘என்ன ஏதோ வித்யாசமாய் வாசனை வருதே?’ என்று ஆர்வமாய் ரசித்து குடித்தாள்.
அவள் ரசித்து குடித்து கொண்டிருப்பதை நம்ம க்ருஷ்வந்த் ஜன்னலில் இருந்து ரசிக்க அவனின் காதை பிடித்து நன்றாக திருகினார் சுந்தரி.
“ஏன்டா உனக்கு இருபத்திநாலு மணி நேரமும் இது தான் வேலையா? இப்ப என்ன பார்த்துட்டு இருக்க அங்க?” என்று கேட்டார்.
“அதுவாம்மா செம்பருத்தி டீ அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதான் பார்த்துகிட்டு இருந்தேன். ஹி..ஹி… ” என்றான்.
“எதுக்குடா திடிர்னு செம்பருத்தி பூ டீ மாத்தி குடுத்துருக்க?” என்று கேள்வி கேட்க.
“ஹ்ம்ம் நீங்களும் ஒரு டாக்டர்? எந்த சுவற்றில் போய் நான் முட்டி கொள்ள?” என்று தன் அன்னையை கேலி செய்ய.
”அட படவா என்னையே கிண்டல் பண்றியா? இரு உன்னை இன்னிக்கு உதைகாம விடறதில்லை” என்று அவன்முதுகில் ஒரு தட்டு தட்டினார்.
“அம்மா! ஹைபிஸ்கஸ் டி நான் ட்ரைனிங் போன இடத்துல கத்துகிட்டது. ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது. எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா ஹைச்பிச்கிஸ் டீ குடிப்பேன் வித்தின் பைவ் மினுட்ஸ் இம்மிடியட் ரிலிப் கிடைக்கும்” என்றான்.
“அது மட்டும் இலல.. இதயத்துக்கு ரொம்ப நல்லது, ப்ளட் சர்குலேஷன் ஈசியா ஆகும், இதயம் பலப்படும்,இன்னும் நிறைய இருக்கு” என்றான்.
(உங்க யாருக்கும் ரெசிபி சொல்ல மாட்டேன்…)
அதன் பிறகு வந்த நாட்களில் க்ருஷ்வந்த் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அப்பப்போ சுந்தரி சென்று பேசி அவளுக்கு தேவையானதை செய்து தருவாள்.
ஸ்ருஷ்டிமீராவுக்கு தான் அடுத்தவரிடம் உதவி பெறுவதென்றால் பிடிக்காதே? எவ்வளவோ தடுத்து பார்த்தும் சுந்தரி விடுவதாக இல்லை.
அவளை தன் மகளாக நினைப்பதாக கூறி சில நேரம் செல்லத்திட்டுகளும் கொடுத்தார்.
ஒரு வழியாய் சிறிது சுந்தரியிடம் ஒட்டி கொண்டாள்.
ஆனாலும் க்ருஷ்வந்த் அவள் கண்களில் இருந்து மறைந்தே அவளுக்கு தொடர்ந்து ஆச்சர்யங்களும் நிறைய அள்ள முடியாத அன்பையும் தந்து கொண்டிருந்தான்.Advertisements
மீராவின் ஆவலுக்கு அவளே கடிவாளம் போட்டு கொண்டிருந்தாள்.
Advertisements