“ஆர் யூ ஆல்ரைட் ஆரண்யா..??”, என்றபடி உள்ளே நுழைந்தவனை அந்நேரம் எதிர்பாராமல் எழுந்து நின்ற ஆரு, “குட் மார்னிங் மித்ரன்..”, ஸ்கூல் பிள்ளையைப்போல்..
“இன்னும் நீ இந்த ஸ்கூல் பழக்கத்தை விடவில்லையா..??”, கேலிபோல் அவள் தலையில் கொட்டு வைத்தான் மித்ரன்..
அவனை முறைக்கமுயன்று தோற்றவளுக்கு முகம் முழுதும் புன்னகையே தங்களது பள்ளிப்பருவத்தை நினைத்து..
“என்ன பண்றதுண்ணா.. நீங்க பயம் காட்டுனது இன்னும் தெளியல எனக்கு..”, அவனைப்போல் கேலியாகவே சொன்னாள் மித்ரனின் ஸ்கூல் ஜூனியர்..
“எனக்குமே உன்னால பெல்ட் அடி கிடைச்சது மறக்கல..”
“சாரிண்ணா.. நான் இன்ட்டென்ஷலா பண்ணல அதை..”, சிறு குற்றவுணர்வுடன்..
“ஹே.. நோ கில்டி பீலிங்ஸ் ஆரு.. அன்னைக்கு தப்பு என் பேரில்தான்.. என் ப்ரெண்டை பயப்படுதறதா நெனச்சு உன்மேல் பல்லியைத் தூக்கிப்போட்டு.. நீ பயத்துல மயங்கி.. மிஸ்டேக் வாஸ் மைன்..”, என்றவன், “ஆரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”, அதுவரை இருந்த கேலிக்குரல் மாறி சற்றே சீரியஸ்ஸாக ஒலித்தது..
“சொல்லுங்கண்ணா.. புதுசா ஏதாவது டிசைன் பண்ணனுமா..??”
“இல்லை ஆரு.. இது பெர்சனல்.. உன்னோட பெர்சனல்..”, தயக்கமாக..
“என்னோட பெர்சனல்லா..?? என்னண்ணா..??”, புரியாமல்..
“ஆதி..”
ஒற்றைவார்த்தையில் புரிந்துவிட்டது ஆருவிற்கு..
மித்ரனுக்கும் ஆதிக்கும் நடுவிலிருக்கும் சொந்தம் முதலிலேயே தெரிந்திருந்தாலும் ஆதி தன்னைப்பற்றி மித்ரனிடம் கூறியிருப்பான் என்று நினைக்கவில்லை ஆரு..
மித்ரனை தீர்க்கமாகப் பார்த்தாள் அவள்..
அவளின் பார்வை புரிந்தவனாக, “ஆதியாக சொல்லவில்லை ஆரு.. நானாக கண்டுபிடித்ததுதான்.. சாரி உங்கள் இருவருக்கும் இடையில் நான் வரவேண்டும் என்று நினைக்கவில்லை..”, விளக்கத்துவங்கினான் மித்ரன்..
“புரியுது மித்ரன்.. சொல்லுங்க..”
“நீயும் ஆதியும் எனக்கு ஒன்றுபோல்தான்.. அந்த உரிமையில் சொல்கிறேன்.. ஆதிக்கும் நீயும் உனக்கு அவனும் என்னைப் பொறுத்தவரை பெஸ்ட் சாய்ஸ்..”
“……………………”
“ஐ ஆம் நாட் ப்ரெயின் வாஷிங் யூ.. நான் என்னுடைய ஒப்பீனியனைச் சொன்னேன்.. முடிவு செய்வது உன் விருப்பம்..”
மெல்ல தலையசைத்தவளிடம் கீற்றாய் மிக மெல்லிய புன்னகை இதழுக்கிடையில்..
கடிகாரம்மணி பதினொன்றே முக்கால் என்று காட்ட ஆதியின் வீட்டில் எதுவோ உடையும் சத்தம்..
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி திடுக்கிட்டு எழ.. அவர் எழுந்த வேகத்தில் சைட் டேபிளில் இருக்கும் வாட்டர் பாட்டில் விழ முழித்துக்கொண்டார் விஸ்வநாதன்..
எழுந்து அமர்ந்திருந்த மீனாட்சியைக் கண்டு, “மீனா.. என்னம்மா ஆச்சு..??”, பதற்றமாக..
“பூனையா..?? அதுவும் நம்ம வீட்டிலையா..?? இருக்காது..”, என்றார் மீனாட்சி நெற்றிச்சுருக்கத்துடன்..
மீண்டும் டம்மென்ற சத்தம்.. இப்பொழுது வெகு அருகில் கேட்பதுபோல்..
“திருடனோ..??”, மீனாட்சியின் குரலில் சிறு சந்தேகம் கூடவே கவியைப்பற்றிய நினைப்பும்..
சுதாரித்துக்கொண்டார் விச்சு, “நான் போய் பார்க்கிறேன்..”, என்றபடிஅருகில் இருந்த பிளவர் வேசை எடுத்துக்கொண்டு மெதுவாக சத்தம் வரும் திசையை நோக்கி நடக்கத்துவங்கினார்..
அவரை ஒட்டியபடியே மீனாட்சி..
பெட்ரூம் கதவை திருந்துகொண்டு இருவரும் ஹாலைத் தொட்டநொடி ஆப்பானது வீட்டின் பவர்..
பயத்தில் விச்சுவின் கையை இருக்கப்பற்றினார் மீனா..
ஒரு கையில் மனைவியையும் மறுக்கையில் வேசையும் இறுகப்பற்றியபடி தயாராக இருந்தார் விச்சு..
தன்னருகில் யாரோ வருவதுபோல் இருக்க அந்நபரைத்தாக்க கையோங்கிய சமயம் பளிச்சென மின்னியது ப்ளாஷ்..
“அதுவா.. அது..”, கொஞ்சமே கொஞ்சம் இழுத்தவன், “நம்ம ஆர்கானிக் பார்மில் விளையும் காய்கறிகளின் தரத்திற்காகவும் அதை நாம் சேல் செய்யும் விதத்திற்காகவும் அப்பாவுக்கு ஒரு விருது கிடைக்கபோகுது.. விவி க்ரூப்க்கிட்ட இருந்து.. மதியம் இரண்டு மணிக்கு அநோன்ஸ் பண்ணினாங்க..”, அவ்வளவு மகிழ்ச்சி குரலில்..
அவள் முதுகில் ஒன்று போட்ட மீனாட்சி, “என்னால இன்னும் நம்ப முடியலை ஆதி..”, என்றவர் விச்சு இன்னும் மீளாததைக் கண்டு,“ரொம்ப மேனக்கட்டார் இவர்.. கெமிக்கல்ஸ் யூஸ் பண்ணி இனி மேல் விளைச்சலே வராதுன்னு இருக்க நிலத்தை வாங்கி அதில் விளைச்சல் செய்யறது எவ்வளவு பெரிய விஷயம்.. அதுவும் இயற்கை உரங்களை மட்டும் நம்பி.. ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு..”, ஆத்மார்த்தமாக..
மீனாட்சி சொல்வதுபோல் ரொம்பவும் சிரமப்பட்டார் விச்சு.. விருதுக்காக அல்ல அந்த உழைப்பு.. தங்களுக்கு அடுத்த தலைமுறைக்காக எல்லாம்..
மலடென்று பெயரெடுத்த நிலம்தான் விஸ்வநாதனின் குறி..
சுற்றத்தார் சொல்வதுண்டு.. இப்படி உபயோகமே இல்லாத நிலத்தை வாங்குகிறீர்களே.. காலத்திற்கும் நஷ்டம் மட்டும்தான் நமக்கு மிச்சமென்று..
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளமாட்டார் விச்சு..
இயற்கைவேலாண்மைப் பொருட்களின் விலை கூடுதலாமே சமாளிதுவிடமுடியுமா? என்று மீனாட்சி கேட்டால், “உற்பத்தி செலவு குறையக்குறையத்தான் வேளாண்மை பொருட்களின் விலை குறையும்.. இப்பொழுது இது சாத்தியமில்லைதான்.. அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்..”, என்பவர் இப்பொழுது நம் கையில் பணம் இருக்கிறது.. அதை நல்ல காரியத்திற்காக பயன்படுத்த விரும்பிகிறேன் என்பார்..
விவரம் புரிந்த பிறகு இதெல்லாம் இந்தக்காலத்தில் சாத்தியமாப்பா என்று ஆதியும் மீனாட்சியைப் போல் பலமுறை கேட்டிருக்கிறான்..
அதற்கு அவரோ, ”இப்பொழுதுதான் இது சாத்தியம் ஆதி.. இன்னும் சில பல ஆண்டுகள் கடந்தால் இது எட்டாக்கனியாகிவிடும் நம் நாட்டுக்கு.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்பதுபோல் இதை நாம் இப்பொழுதே செயல்படுத்தவேண்டும்..”, என்பார் கூடவே எனக்குப் பிறகு நீயும் இது செய்யவேண்டும் என்ற வார்த்தைகளும் அவரிடமிருந்து பிறக்கும்..
வார்த்தைகளில் மட்டும் அவர் ஜாலம் காட்டவில்லை.. சொன்னது போல செயலிலும் ஜாலம் காட்டினார்..
அவருக்கு வழிகாட்டியாக பலரும் தூண்களாக..
ஆதி தொழிலில் இறங்கிய பிறகு விச்சுவிற்கு பலமாக..
இருவரும் புதுமையை விவசாயத்தில் புகுத்தவில்லை.. பழமையை மட்டும் புகுத்தியிருந்தனர்..
ஆம்.. முழுவதும் இயற்கை முறையே..
இவர்கள் விதைத்து கருவாகி உருவாகும் காய்கறிகள் கோவை முழுதும் ஓரளவிற்கு பிரபலமாகி இருந்தது..
தந்தையும் மகனும் சேர்ந்து செய்யும் விவசாயத்தில் கொள்ளை லாபம் இல்லையென்றாலும் இருவருக்கும் விவசாயி என்பதில் பெருமையே..
ஆட்டங்கள் பாட்டங்கள் எல்லாம் முடிய தனது சின்ட்ரெல்லாவை அழைத்திருந்தான் ஆதி துள்ளலுடன்..
ஆனால் ஆதிக்கு மறுபுறமிருந்து கிடைத்த விடை ஸ்விட்ச் ஆப்..