காதல் தோழா 4
“ரகு… ரகு… ரகு…” அவனின் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தார் கெளசி. ‘இதோ வந்துட்டேன்மா..’
”சொல்லுங்கம்மா…” கதவை திறந்ததும் கேட்டான்.
“இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ட்ரெஸ் எடுக்க போகனும், அதான் டா உன்னை ரெடியா இருக்க சொன்னேன் கிளம்பிட்டயா” என அவர் கேட்க.
“ நான் வரலைமா… எனக்கு வேலை இருக்கு” அவரிடம் சொல்ல. அடுத்த வார்த்தை பேசுவதர்க்குள் ரத்தினம் வந்தார்.
“என்ன பெரிய வேலை அதெல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். பொண்ணு வீட்டுல இருந்து வராங்க அவங்க உன்னை கேட்டா நாங்க என்ன சொல்லுறது. போய் ரெடியாகி வா” அவர் சொல்ல.
“அவனுக்கோ, கோவமாக வந்தது”.
“என்னங்க நீங்க, பிள்ளைய போய் அதட்டிட்டு இருக்கீங்க… நான் தான் அவன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல போங்க.” அவரை அனுப்பிவிட்டு மகனிடம் திரும்பினார்.
“அப்பா கடுமையா பேசினதெல்லாம் மனசுல வைக்காத ரகு… அம்மாக்காக வாப்பா.. அவரின் பாசத்தில் பேச. அவனுக்கோ அம்மாவ கெஞ்சவிட மன இல்லாமல். அவரிடம் வருகிரேன் என சொல்லிக்கொண்டு கிளம்ப ஆயுத்தமானான்.”
“சரிம்மா வரேன்… போகலாம்”
”மனமில்லாமல், அவர்களுடன் கிளம்பி சென்றான்.”
“என்ன ஹேத்து இப்படி பண்ணுற… கௌசி அண்ணி உன்னை கேட்டா என்ன சொல்லுறது. உனக்கு தான் கல்யாணச்சேலை எடுக்க போறோம். அதை நீயும், மாப்பிள்ளையும் தான் செலக்ட் செய்யனும். அதுக்கு தான் உன்னை கிளம்பச் சொல்லுறேன் நீ அசையாம படுத்திருந்தா என்ன அர்த்தம்.” சித்ரா கேட்க.
“ அம்மா, நான் வரலைமா… நீங்களும், அவங்களும் பார்த்து எனக்கு சாரீஸ் எடுத்துட்டுவாங்க. இதுக்கு எதுக்கு நான் வேற.” அவள் அழுப்பாய் சொல்ல.
“அண்ணி ஏற்கனவே சொல்லிட்டாங்க ஹேத்துமா… கல்யாண ட்ரெஸ் மாப்பிள்ளையும், பொண்ணும் செலக்ட் பண்ணட்டும், அதுனால தான் டா உன்னை வரச்சொல்லுறேன்.”
“என்ன ஆச்சு… சித்து… இன்னும் கிளம்பாம என்ன பண்ணுறேங்க அம்மாவும், பொண்ணும்.” என்று கேட்டபடி வந்தார் அன்பு.
“உங்க மக ட்ரெஸ் எடுக்க வரலைனு சொல்லுறா… என்னனு நீங்களே கேளுங்க… நீங்காளாச்சு, உங்க பொண்ணும்மாச்சு. நான் கிளம்ப போறேன். பொறுப்பை அவர் தலையில் போட்டுவிட்டு சென்றார்.”
“ஏன் டா வரலை நீ…”
“போரிங் ப்பா… அதெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்கப்பா…”
“எப்பவும் உனக்கு பிடிச்சதை தானேம்மா நீ எடுப்ப, இப்போ மட்டும் என்ன நாங்க…”
“எப்படிப்பா சொல்லுவேன்… எனக்கு இதெல்லாம் பிடிக்கலைனு…” மனதில் நினைக்க.
“பிடிக்கலையாம்மா.” அவர் கேட்க.
“எ… எது… எதுப்பா..”
“ட்ரெஸ் எடுக்க போற கடை பிடிக்கலையானு கேட்டேன்ம்மா”
“அப்படியெல்லாம் இல்லைப்பா… நான் வரேன்…” இதற்க்கு மேல தந்தை தன் முகத்தை பார்த்தே அனைத்தையும் கேட்டுவிடுவார் என உடனே சம்மதித்தால்.
“சரிம்மா… சீக்கிரம் கிளம்பி வா.” அவர் சொல்லிவிட்டு போக. இவளோ ‘அய்யோ… ஏன் தான் கடவுள் என்னை இப்படி சோதிக்கிறாறோ. ஒகே ரிலாக்ஸ் ஹேத்து ரிலாக்ஸ்.” அவளே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தயரானால்.
“மிக பிம்மாண்டமான ஜவுளி கடையின் முன் இரு வீட்டு வாகனமும் சரியான நேரத்தில் வந்தது. இரு வீட்டு பெரியவர்களும் பரஸ்பரம் அறிமுகம் முடிந்து உள்ளே சென்றனர்.”
“ஹேத்து திரும்புமா என அவளின் நீண்ட கூந்தலில் உருட்டி கட்டிய மல்லிகை சரத்தை வைத்துவிட்டார் கௌசி. ‘அழகா இருக்கம்மா’ அவளை நெட்டி முறித்தார்.”
“சிறு புன்னகையுடன் அவரின் காலில் விழுந்து வணங்கினால்.”
“காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தவன் கண்ணில் கௌசியின் முன் நின்ற ஹேத்து தான் தெரிந்தால். அவளின் உடுத்தி இருந்த சேலைக்கும், அந்த பின்னலில் இருந்த பூவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்தது.”
“அதை பார்த்தவன் மனதில் ‘அய்யோ அந்த பொண்ணும் வந்திருக்கும் போலயே… எப்படி அந்த பொண்ணுகிட்ட நான் பேச முடியும். இப்போ எல்லாரும் என்னை தான் எதிர்ப்பார்ப்பாங்க. அப்போ அந்த பொண்ணையும் நேரா பார்த்து பேசனும். வேறவழியே இல்லை.” நொந்துகொண்டே அவர்களின் அருகில் சென்றான்.
“அனைவரையும், வரவேற்றவன் அன்பு, சித்ரா காலில் விழுந்து வணங்கினான். ஹேத்துவின் அத்தை, மாமாவின் காலிலும் விழுந்து வணங்கினான்.”
” அவள் பக்கம் திரும்ப்ப போக, அதற்க்குள் சகுந்தலா நல்ல நேரத்தில் கல்யாணச்சேலையும், பட்டு வேஷ்டியும் எடுக்கவேண்டும். அதனால் பொண்ணையும், மாப்பிள்ளையையும் அழைத்துகொண்டு செல்லலாம்” என அவர் சொல்ல.
“ நல்ல வேளை அவகிட்ட பேசுனுமோனு நினைச்சேன்.” என அவனும்
“அத்தை காப்பாத்திட்டாங்க, இல்லைனா அவனை வாங்கனு கூப்பிட சொல்லுவாங்க” என அவளும் ஒரு சேர நினைத்தனர்.
” இருவீட்டு பெரியவர்களும், தங்களது பிள்ளைகளை சேர்ந்து பட்டு செக்ஷனிற்க்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஒருவர் பின் ஒருவராக சென்றனர்.”
“ நிச்சயதார்த்தம் அன்னைக்கு தான் பொண்ணும், மாப்பிள்ளையும் பேசிக்கலை, இப்போவாச்சும் அவங்க மனசுவிட்டு பேசட்டும் தான் நான் அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா அனுப்பிவைச்சேன் அண்ணி, உங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லயே.” கௌசி, சித்ராவிடம் கேட்க.
“ இதுல என்னை அண்ணி இருக்கு, நானும் அதே தான் நினைச்சிட்டு இருந்தேன் நீங்களே அனுப்பி வைச்சுட்டேங்க.” அவரும் சேர்ந்து கூறினார்.
“சரி வாங்க மத்தவங்களுக்கு ட்ரெஸ் எடுக்கலாம். அவங்க பார்த்து எடுத்து வரட்டும் என மூன்று பெண்களும் அவர்களின் உடை தேர்வுவுக்கு போக, ஆண்கள் மூவரும் அவர்களின் உடை தேர்வுக்கு சென்றனர்.”
“இங்க எந்த பக்கம் பட்டு செக்ஷன் இருக்குனு எனக்கே தெரியாது இதுல இவளுக்கு நான் தான் செலக்ட் பண்ணனுமா.” அவன் நினைக்க.
“இவனுக்கு என்ன தெரியும்னு என்னை கூப்பிட்டு போறான் கல்யாண சேலை எடுக்க. எல்லாரும் என்னை இவன்கிட்ட மாட்டிவிட்டாங்களே..” அவள் நினைக்க.
“இருவரின் நினைப்பை தடுத்தது அங்கிருந்த ஊழியர் தான்.” ‘என்ன சாரீஸ் பார்க்கனும் சர், மேடம்.”
“என்ன… என்ன… சாரீஸ்” என அவன் வாய்விட்டு புலம்ப. அவளோ ‘சுத்தம்’ இதுக்கூட அவனுக்கு தெரியாதா அவள் முனுமுணுக்க அவன் காதில் விழாமல் இருக்க அவன் என்ன செவிடனா”
“மேடம் நீங்களாச்சும் சொல்லுங்க என்ன சாரீஸ் பார்க்கனும்.” அவர் ஹேத்துவை பார்த்து கேட்க.
“இப்போ சொல்லு, அவர் கேட்க்குறதுக்கு” என அவன் எகத்தாளமாய் நினைக்க. அவன் நினைப்பை பொய்யாக்கினால்.
“கல்யாணச்சேலை பார்க்கனும் தாத்தா…”
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா மேடம்.”
“ஆமாம் தாத்தா.”
”சரிங்க மேடம்” என அவர் பட்டுச்சேலைய எடுத்து அவர்களின் முன் எடுத்து ஒவ்வொன்றாய் எடுத்து போட்டார்.
“மேடம், இது எல்லாம் ஒரிஜினல் பட்டு, முக்கியமா கல்யாண சேலை அரக்கு குங்குமம் நிறத்துல தான் எடுப்பாங்க அதே தான் நானு இப்போ எடுத்து போட்டுருக்கேன். இது மாதிரி பார்க்குறேங்களா, இல்லை வேற கலர்ல பார்க்குறேங்களா.”
“இதே கலர்ல நாங்க பார்க்குறோம் தாத்தா… வித விதமான பட்டு சேலை இருந்தா எடுத்து போடுங்க” அவள் சொல்வதெல்லாம் பிரம்மிபுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
“பரவாயில்லையே, இதெல்லாம் அவளுக்கு நல்லா தெரியும் போலயே, ஷாப்பிங்க் பண்ணியே பழகிருப்பா போல” என அவன் நினைத்தான்.
”இது காஞ்சிப்பட்டு, சொந்த தறில இது நெய்தது மேடம், இதே மாதிரி தான் இந்த பட்டு எல்லாம். அவர் ஒவ்வொரு பட்டின் பெருமையும், அருமையும் அவளுக்கு சொல்லிக்கொண்டே எடுத்துப்போட்டார்.”
“அவளும் சலிக்காமல் ஒவ்வொன்றையும், எடுத்து தடவியும், அவள் மேல் போட்டும் பார்த்தாள். அவனோ ”அதான் அவ செலக்ட் பண்ணுறாலே இதுல நான் எதுக்கு” என்ற ரீதியில் ஒரு கண் அவள் எடுக்கும் சேலையின் மீதும், ஒரு கண் ஜவுளிகடையையும் சுற்றி பார்த்து கொண்டிருந்தான்.”
“குங்குமம் நிறம் கொண்ட காஞ்சி பட்டில், ராமன்,சீதாவின் கல்யாண காட்சி இடம் பெற்றிருந்தது. முந்தானையில் முக்கோடி தேவர்களும் சூழ்ந்து ராமன்,சீதாவின் மணக்கோலமும் முந்தானைக்கு ஏற்ப அளவில் இடம் பெற்றிருந்தது. அந்த காட்சியை பார்த்ததும் அவளுக்கு அந்த சேலை மிகவும் பிடித்திருந்தது. தங்க பட்டு நூல் கொண்டு முழுவதும் நெய்தது. அதையே அவள் எடுத்தால்.”
“தாத்தா இந்த சேலை ஓகே… இதே பில் போட்டுருங்க.” அவள் சொல்லும் போது அவள் எடுத்த சேலையை அவனும், அவளுடன் சேர்ந்து தான் பார்த்து வியந்துகொண்டிருந்தான்.”
“ சேலை நல்லா இருக்கு, அவளோட ரசனைகூட நல்லா தான் இருக்கு… என்கிட்ட கேட்ப்பாலோ, இந்த சேலை தான் நான் எடுத்துருக்கேனு” அவன் நினைக்க.
“சர்கிட்ட கேளுங்க மேடம் உங்க செல்ஷன்” அவர் எடுத்துகொடுக்க.
“அவன்கிட்ட வேற கேட்கனுமா… சரி கேட்ப்போம், நல்லா இல்லைனு சொல்லட்டும் அடுத்து அவன்கிட்ட சஜஷன் கேட்ககூடாது.” என எண்ணிக்கொண்டே. அவன் புறம் திரும்பினால்.
“ஆனால் அவனோ, அவள் திரும்புவதை பார்த்தவன், ’ நல்லா இருக்கு, இதையே பில் போடுங்க தாத்தா…” அவள் தன்னிடம் கேட்ப்பதைகூட விரும்பாமல் அவன் அவ்வாறு கூறினான்.
“ நல்ல வேளை அவன்கிட்ட கேட்கனுமானு நினைச்சேன். எனக்கொரு வேளை மிச்சம்.” அவளு அவனிடம் கேட்க விரும்பவில்லை.”
“ பெரியவர்கள் இருவரும் மனவிட்டு பேசி, தங்களது கல்யாண உடையை எடுக்க வேண்டும் என நினைத்திருக்க. இருவரும் ஒருவரின் முகத்தை பார்த்து பேசகூட பிடிக்காத நிலையில் இங்கு இருக்கின்றனர்.”
“ கல்யாணப்பட்டு சேலை எடுத்து காட்டுங்க…”
“ விவாஹா பட்டு, காஞ்சி பட்டு இரண்டு எது பார்க்குறேங்க”
“ காஞ்சி பட்டு காட்டுங்க.”
“ ஒவ்வொரு பட்டு சேலையும் எடுத்து அவளுக்கு பொருத்தமா இருக்குமா, இல்லையானு அவன் அவள் மேல் வைத்துப்பார்க்க. அவளோ அவன் ஒவ்வொரு சேலையையும் தன் மேல வைத்துப் பார்ப்பதை ஆசையுடன் பார்த்துகொண்டிருந்தால்.”
“என்ன பார்க்குற… நீயும் பாரு உனக்கு பிடிச்சதை சொல்லு எடுக்கலாம்” அவளிடம் கேட்க.
“ நீங்களே, பார்த்து எடுங்க…”
“ஹூகும்… உன் செலக்ஷன் என்னனு எனக்கு தெரியனும். அதனால நீயும் சேலைய பாரு.” அவன், அவளை எடுக்க சொன்னான்.
“அவளும், பட்டு சேலையை பார்த்துகொண்டிருந்தால். அப்பொழுது ஒரு பெண்ணின் கை பக்கத்தில் இருந்த சேலையை பார்த்தால். சாந்து பொட்டின் நிறம் கொண்ட சேலையில் கண்ணன், குழல் ஊதும் காட்சியும், ராதா கண்ணனின் மீது சாய்ந்து அந்த குழலிசையை கேட்பது போன்று இருந்த காட்சியும் இடம் பெற்றிருந்தது.”
“அதை அவள் எடுக்க நினைத்து அந்த பெண்ணின் அனுமதியை கேட்டால்.”
“எக்ஸ்க்யூ மீ…” சரண்யா அழைக்க.
“எஸ்”
“இந்த சேலை நீங்க எடுத்ததா.” அவள் சுட்டிக்காட்ட.
“ நோ… நோ…” என அந்த பட்டு சேலையின் மீது இருந்த தன் கையை எடுத்தால்.
“ சரண்யா, அவள் கை எடுத்ததும் அந்த சேலையை எடுத்துகொண்டு அவன் அருகில் சென்றால். அவன் முன் அந்த சேலையை தன் மீது வைத்து காட்டி எப்படி இருக்கு என அவனிடம் கேட்டால்.”
“சூப்பர்… அழகா இருக்கு… உனக்குள்ள இவ்வளவு ரசனையா. அதுவும் கண்ணன் ராதாவோட மோன நிலையில இருக்குற காட்சி. சூப்பர்.. எனக்கு பிடிச்சிருக்கு. இதையே பில் போடலாம்.”
“ நிச்சய சேலையை அவன் தேர்ந்தெடுத்தான். தாமரையின் நிறம் கொண்ட சேலையில் மணமக்கள் ஊர்வலமாக போகும் காட்சி இருந்தது. அதையே அவன் தேர்ந்தெடுத்தான்.”
“என்ன விஜய் பொண்ணுக்கும், உனக்கும், பிடிச்ச மாதிரி தான ட்ரெஸ் எடுத்தீங்க. முக்கியமா சரண்யாவுக்கு பிடிச்சிருந்ததா” அவனின் அத்தை கேட்க.
“ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் செலக்ட் பண்ணோம் அத்தை. அவளுக்கும், எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.” இருவரின் மனநிலையை தெளிவாக கூறினான்.
“இந்த ஜோடி, தங்களது ஒருவரின் ஒருவர் மனம் அறிந்து தங்களுக்கு பிடித்த உடையை தேர்ந்தெடுத்தனர். இதில் இருவரின் சந்தோஷம் இருந்தது. பெரியவர்களும் அவர்களின் சந்தோஷத்தில் திளைத்தனர்.”
“அக்கா… கத்திக்கொண்டு ஷிவானி ஒரு பெண்ணை கட்டிக்கொள்ள.”
“அந்த பெண்ணோ.. திரும்பி அந்த சிறுபெண்ணை பார்த்தால்”.. ‘யாருடா குட்டி நீங்க’
“அய்யோ… என் அக்கானு நினைச்சு உங்களை கட்டி பிடிச்சுட்டேன்… சாரி அக்கா” ஷிவானி காது இரண்டையும் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்க.
“அச்சோ… இதுக்கெல்லாம் சாரி வேண்டாம் செல்லம். நானும் உனக்கு அக்கா தான் சரியா.” அவள் ஷிவானியுடம் சரிக்கு சமமாய் முட்டி போட்டுகொண்டு பேசினால்.
“ஷிவானி அக்கா இங்க இருக்கேன்ம்மா… எங்க போன.” அவளை தேடிகொண்டே வந்தால் சரண்யா.
“சாரி… சின்ன பொண்ணு தெரியாமா என்னைனு நினைச்சு உங்களை கட்டிபிடிச்சுட்டா.”
“அய்யோ என்னங்க நீங்க… இதுக்கெல்லாம் சாரி சொல்லிட்டு.”
“அக்கா, உங்களை மாதிரி சாரீஸ் போட்டுருந்தாங்களா அதான் நீங்கனு நினைச்சேன்.” ஷிவானி அப்போது தான் இருவரின் உடையையும் சுட்டிக்காட்டினால்.
“இருவரும் ஒருவரை ஒருவரை அப்பொழுது தான் நன்றாக பார்த்தனர். இருவரும் ஒரு கலரில் சேலை அணிந்திருப்பதை.”
“ஆமால… அப்போ நீங்க எனக்கு சாக்லெட் வாங்கி கொடுக்கனும்.” என ஹேத்துவும்.
“சரிங்க கண்டிப்பா வாங்கி தரேன்.. அதே மாதிரி நீங்களும் வாங்கி தரனும்” என சண்யாவும் பேசிக்கொண்டிருந்தனர்.
“பேர் கூட தெரியாம நாம பேசிட்டு இருக்கோம், என் பேர் ஹேத்தான்சிகா.”
“என் பேர் சரண்யா… எனக்கும், அவருக்கு கல்யாண ட்ரெஸ் எடுக்க வந்தோம்.”
“சேம்… நாங்களும் தான் ஃபேமிலியோட வந்திருக்கோம்.”
“அண்ணி… இங்க இருக்கிங்களா… பெரியத்தை உங்களை கூப்பிட்டாங்க” கார்த்திகா வந்து அவர்களின் பேச்சை அப்பொழுத்திர்க்கு தடை செய்தால்.
“ஒகே ஹேத்து… பார்க்கலாம்”
“கண்டிப்பா பார்க்கலாம் சரண்யா”
“பாய் ஷிவானி குட்டி” என அவளின் கன்னத்தில் முத்தமிட்டால்.
“பாய் அக்கா, என ஷிவானியும் அவளுக்கு முத்தம் கொடுத்தது”
“ சரிங்க அண்ணி் அப்போ நாங்க கிளம்புறோம். ரொம்ப திருப்தியா இருந்துச்சு. இப்போ தான் கல்யாண் கலை கட்டுது.”
“ஆமாம் அண்ணி… எங்களுக்கும் திருப்தியா இருக்குது. நாங்களும் கிளம்புறோம். வரேன் ஹேத்துமா…”
“சரிங்க அத்தை…”
“வரோம் மாப்பிள்ளை… வரோம் சம்மந்தி…” அன்புவும் விடைபெற்றார்.
“சரிங்க மாமா… “
“இவன்கிட்ட எதுக்கு நான் சொல்லிட்டு வரனும்… முடியாது” என ஹேத்துவும்.
“அவசியம் பேசனுமா… முடியாது” என ரகுவும் சொல்லிக்கொள்ளாமல் விடைபெற்றனர்.
”எங்களுக்கு கல்யாணம் நடக்க போகிறது என எந்த அறிகுறியும் இல்லாமல், பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் போல நடந்துகொள்ளும் இவர்களின் வாழ்க்கையில் முற்று புள்ளியாய் வந்தது தான் கல்யாண நாள்.”
“ என்ன டி… கல்யாண பொண்ணு மாதிர் இல்லாம இருக்க. உனக்கு தான கல்யாணம். அப்புறம் ஏன் டீ இவ்வளவு சோகமா இருக்க.” கல்பனா கேட்க
“ஹே அவ ஏன் டீ சோகமா இருக்கனும்… மாப்பிள்ளை வீடு பெரிய ஆளுங்க டீ. ஒரு பொண்ணுக்கு அவங்க அப்பா நல்ல பெரிய இடத்து மாப்பிள்ளைய பார்த்துருக்காங்க. இதுல அவ சோகமா இருக்கானு நீ தான் நினைக்குற.” ப்ரியா, கல்பனாவிர்க்கு பதில் சொன்னால்.
“ நான் உன்னை கேட்டேனா…”
“இல்லை”
“அப்போ உன் முன்னாடி இருக்குற பீட்சாவ மூடிட்டு சாப்பிடு.” அவளை அடக்கிவிட்டு ஹேத்துவிடம் கேட்டால்.
“என்ன டி”
“ஒன்னுமில்ல… இந்தாங்க… வர்ர ஏழாம் தேதி எனக்கு கல்யாணம் மறக்காம வந்திருங்க டி..”
“தன் இரு தோழிகளுக்கும் இன்விட்டேஷ்னை கொடுத்தால்.”
“ கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்ன வந்திருவேன் டி ஹேத்து.”
” அதான… கல்யாண சாப்படுக்கு எதுக்கு ஒரு வாரத்து முன்னாடி போற.”
“ நம்ம ஃப்ரண்டு டி”
“பார்த்த அப்படி தெரியலையே…” கல்பனா கலாய்க்க.
“உனக்கு தெரியலைனா, நான் என்ன பண்ண முடியும்.”
“இரண்டு பேரும் சண்டை போடாம இருங்க டி…” இருவரையும் அடக்கினால்.
“மறக்காம இரண்டு பேரும் வந்திருங்க… எனக்கு இன்னைக்கு ஷாப்பிங்க் இருக்கு அதான் இன்விட்டேஷன் கொடுத்துட்டு போகலாம் வந்தேன். இங்க வந்தும் எனக்கு நிம்மதி இல்லை.” அவர்களிடம் சொல்லிகொண்டு கிளம்பினால்.
“ஏய்… ஹேத்து… டி ஹேத்து… இருவரும் அவளை அழைக்க… அவள் கேட்டுக் கேட்காத மாதிரி சென்றுகொண்டிருந்தால்.
“என்ன டி இவளுக்கு உண்மையில கல்யாணம் பிடிக்கலையா, இல்லை மாப்பிள்ளை பிடிக்கலையா” என ப்ரியா, கல்பனாவிடம் கேட்க.
“எனக்கு தெரியலை டி…”
“அவளுக்கு எது செஞ்சாலும், அவளோட நல்லதுக்கு தான் அவங்க அப்பா செய்வாங்க டி. சரி வா நாமளும் கிளம்பலாம்.”
“இதுவே அந்த சோடாப்புட்டி இருந்தா இன்னேரம் அவ மனசுல்ல என்னனு கண்டுபிடிச்சிருப்பா… மிஸ் யூ டி சோடாபுட்டி”
“ஆமா… காலேஜ் பைனல் எக்ஸாம்ல பார்த்தது எங்க போனானு ஒரு தகவலும் இல்லை…” இரு தோழிகளும் தங்களுது ஒரு தோழியை மிஸ் செய்கின்றனர்.
தொடரும்…………………..