அத்தியாயம் 20
சிறு தணலாய்
அக்னி சிறகாய்
என்னை நீ வெம்மையால்
எரிக்கும் போதும்
பற்றும் காதல் தீ!!!!!
அவன் கை பற்றியதும் “போங்க அத்தான்”, என்று செல்ல சிணுங்களுடன் விலகி அமர்ந்தாள் சத்யா. அவன் கை மீண்டும் அவளை பிடித்து இழுத்தது. அவன் மேல் பூமாலையாக விழுந்தாள் சத்யா.
அவன் கரம் ஆக்டோபஸ் போல அவளை வளைத்து கொண்டது.ஆவேசமாக அவளை இறுக்கி அணைத்தான் விஷ்ணு. அவனது வேகத்தில் அவள் எலும்புகள் நொறுங்குவது போல இருந்தது.
அவள் முகம் முழுவதும் முத்தம் பதித்தவன் இறுதியாக அவள் உதடுகளை சிறை செய்தான். அவனது கைகள் எல்லை மீறியது. அவன் முத்தத்தில் கரைந்தாலும் அவன் கைக்கு தடை விதித்தாள் சத்யா.
“ஏண்டி தடுக்குற? பிடிக்கலையா?”, என்று அவள் காதில் உதடு பட கேட்டான் விஷ்ணு.
“இவன் இப்படி பேசுறதுக்கு எண்ணமும் செய்ன்னு விட்டிருக்கலாம்”, என்று எண்ணி கொண்டாள் சத்யா.
அவள் முக சிவப்பு அவனை முன்னேற தூண்டியது. அவளை மீண்டும் அணைத்து கொண்டான்.
அவனுக்குள்ளே புதைந்து விடுபவன் போல அவனுடன் ஒன்றிய சத்யா பேச்சிழந்து போனாள். அவளை மெதுவாக தரையில் சரித்தவன் அவள் மீது படர்ந்தான்.
கட்டியவன் கை பட்டால் சாதாரண பெண்ணே சும்மா இருக்கும் போது அவன் மீது மொத்த காதலையும் வைத்திருக்கும் சத்யா விலகி போவாளா?
அவள் அவன் கழுத்தினில் தன் கைகளை மாலையாக கோர்த்து கொண்டாள். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் தன்னுடைய உதடுகளால் முத்த ஊர்வலம் நடத்தினான்.
அதை தாங்க முடியாமல் அவள் கைகள் அவன் முதுகில் பரவி படர்ந்து இறுக்கி கொண்டது. அவனிடம் தன்னை இழந்து கொண்டிருந்தாள் சத்யா.
அப்போது அவள் முதுகில் மரத்தில் இருந்து விழுந்து கிடந்த குச்சி குத்தியதால் “ஆ” என்றாள்.
“ஐயோ என்ன ஆச்சு சத்யா? நான் இன்னும் ஒன்னும் பண்ண ஆரம்பிக்கலையே”
“ப்ச் போங்க அத்தான் பின்னாடி எதுவோ குத்திட்டு”, என்றவள் அந்த குச்சியை எடுத்து “இது தான்”, என்றாள்.
“ப்ளீஸ் டி, இன்னொரு தடங்கலை எல்லாம் என்னால தாங்க முடியாது. வா நாம கீழே போகலாம்”, என்று சொல்லி அவள் கை பிடித்து கீழே இழுத்து சென்றான்.
இருட்டில் அவன் கைகளுக்குள் மயங்கி கிடந்தவள் அறைக்குள் இருந்த வெளிச்சத்தில் அவன் முகம் பார்க்க தயங்கி ஜன்னல் அருகில் போய் நின்று கொண்டாள்.
அவள் மனதை புரிந்து கொண்டவன் அவளை நெருங்கி நின்றான். அவன் மேலிருந்து வந்த இதமான பெர்பியும் வாசனை அவளை மயக்கி என்னவோ செய்தது.
அவனும் அவளை உச்சி முகர்ந்தான். அவள் வாசனை அவனையும் கிறங்க வைத்தது. அவள் முகம் நோக்கி குனிந்தான் விஷ்ணு. அவன் ஏற்படுத்திய உணர்வுகளின் தாக்கத்தால் உடல் நடுங்க நின்றவளை கண்டு அவன் முகத்தில் திருப்தி வந்தது.
தன் மேல் காதல் கொண்டு தன்னை ஆணென்று உணர்த்திய அவள் மேல் காதல் பெருகியது. அவளை தன்னை விட்டு பிரித்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவள் கண்களை இறுக மூடி கொண்டாள். அவள் மூடிய இமைகளின் மீது முத்தமிட்டான் விஷ்ணு. அவளை அணைத்து தூக்கி தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
அவன் கழுத்தில் தன் கைகளை கோர்த்து கொண்டாள் சத்யா. கைகளில் தூக்கி சென்றவன் படுக்கையில் மெதுவாக அவளை கிடத்தினான். அவள் மேல் படர்ந்தவனின் காதில் “அத்தான் லைட்”, என்று இழுத்தாள்.
அவள் காதில் உதடு படும் படி “நான் பாக்க கூடாதா?”, என்று கிசுகிசுப்பாக கேட்டவனை பார்க்க முடியாமல் அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்து கொண்டாள்.
அந்த செய்கையில் அணை உடைத்த வெள்ளமாக அவள் மேல் படர்ந்து அவளை எடுத்து கொள்ள தொடங்கினான். இப்போது அவன் கைகள் எல்லை மீறினாலும் அதற்கு தடை சொல்லாமல் வழி வகுத்து கொடுத்தாள் சத்யா.
“டிரெஸ் இல்லாம உன்னை கட்டி புடிச்சிருந்தா உன் வாசனையை கண்டு புடிச்சிருப்பேன் டி”, என்றான் விஷ்ணு.
“ச்சி”, என்று சொன்ன அவளின் உதடுகளை சிறை செய்தவன் அதை விடு விக்க வெகு நேரமானது.
அவள் கண் மூடி கிறங்கி அவனுக்குள் மூழ்கி அடித்து செல்ல பட்டாள். இருவருக்கும் இடையில் தடையாக இருந்த உடைகளுக்கு கூட அவன் விடுதலை கொடுத்த போது போர்வையை அவள் கைகள் வாரி சுருட்டி கொண்டது.
அவன் அழைத்து சென்ற புதிய உலகத்துக்குள் நுழைந்த அவளுக்கு “இவன் என்னை இந்த அளவுக்கு தேடுவானா?”, என்ற எண்ணம் எழுந்தது. மீண்டும் மீண்டும் தன்னை நாடியவனை அவள் பெண்மை ஏற்று கொண்டது.
விடியும் வேளையில் அவனை அறியாமலே கண் அசரவும் தான் அவளும் தூங்கினாள். காலையில் முதலில் கண் விழித்த சத்யா இருக்கும் நிலை அறிந்து ஒரு வெட்க புன்னகை பூத்தாள்.
“இப்ப குழந்தை போல் தூங்குறது என்ன? நேத்து நடந்துக்கிட்டது என்ன?”, என்று நினைத்தவள் அருகில் கிடந்த உடையை அணிந்து கொண்டு குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வந்தவளை அவன் தான் விட்டு விடுவானா என்ன? அவள் மேல் இருந்த குளிர்ச்சி அவன் மேல் பரவியது. பத்து மணியாகியும் கீழே வராதவர்களை நினைத்து குழம்பி போனாள் புவனா.
பின் வேறு எதுவும் யோசிக்காமல் அவர்களை தொல்லை செய்ய வேண்டாம் என்று வேலையாட்களிடம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
அடுத்த நாளே ரம்யாவிடம் அணைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு சத்யாவை அழைத்து கொண்டு தேனிலவு கிளம்பி சென்று விட்டான்.
இருவரும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்தார்கள். அவர்களுக்கான தனிமையில் அவர்களின் தேடல் இன்னும் கூடியது. இரண்டு வாரங்கள் கழித்து வீட்டுக்கு வந்ததும் வாழ்க்கை அதன் போக்கில் சென்றது. ஆனால் விஷ்ணு தான் அவளை விட்டு இருக்க முடியாமல் தவித்து போனான்.
வேலை செய்யும் போது கஷ்ட பட்டு கவனம் செலுத்தினாலும் மாலையானதும் அவள் தரும் இனிய நினைவுகளில் பற்றும் காதல் தீயுடன் அவளை தேடுபவனை அவளும் அணையாமல் மடி தாங்கி கொண்டாள்.
இருவருக்குள்ளும் பற்றும் காதல் என்னும் தீயை அவர்களே அணைக்கும் வித்தை தெரிந்தவர்களாக இருந்தார்கள். இப்படியே நாட்கள் அழகாக சென்றது. நிறைய பரிசு பொருள்களை வாங்கி கொண்டு தேன்மொழியை சந்திக்க ஊருக்கும் சென்று வந்தார்கள். வாழ்க்கை அதன் போக்கில் நகர்ந்தது.
அப்போது தான் உடலில் ஒரு வித சோர்வை உணர்ந்தாள் சத்யா. அவளுக்கும் அந்த குழப்பம் இருந்தது தான். இப்போது மூன்று மாதங்கள் ஆகவும் அவனுக்கு அழைத்தவள்” அத்தான் ஹாஸ்பிட்டல் போகணும்”, என்று போனில் சொன்னாள்.
“ஏய் குட்டிமா செக் பண்ணவா?”, என்று கேட்டவனின் குரலில் ஆரவாரம் இருந்தது.
“ஹ்ம்ம் அப்படி இருக்கும்னு தோணுது”
“கிளம்பி இரு டா. அரை மணி நேரத்துல வரேன்”, என்று சொல்லி வைத்து விட்டான். கிளம்பி கீழே வந்தவளை பார்த்து புருவம் உயர்த்திய புவனாவிடம் “அத்தை வெளிய போய்ட்டு வரோம்” என்றாள்.
“விஷ்ணு வாரானா?”
“ஹ்ம்ம் இப்ப உங்க பையன் வருவாங்க”
இந்த பதிலில் புவனாவின் புருவம் ஒரு முறை உயர்ந்தது. பின் “பத்திரமா போய்ட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
புவனாவை அப்படி யோசிக்க வைப்பதற்கு தான் சத்யா அந்த பதிலையே சொன்னது. விஷ்னுவை அவர்களிடம் இருந்து பிரிக்க தான் சத்யா வந்திருக்கிறாள் என்பது தான் அவர்கள் எண்ணம்.
அதை மாற்றும் விதமாக தான் எதற்கெடுத்தாலும் புவனா மற்றும் பிரதாப்பிடம் “அத்தான்”, என்று சொல்லாமல் “உங்கள் மகன் உங்கள் மகன்”, என்றே சொல்லி கொண்டிருந்தாள்.
அந்த விஷயத்தில் சத்யாவை பற்றிய அவர்கள் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற துடங்கி இருந்தது. அதுவும் ஒரு வாரம் முன்பு புவனா தலை வலி என்று ஹாஸ்ப்பிட்டல் போன போது அங்கே அபாசன் செய்து கொள்ள வந்திருந்த டிம்பிளை பார்த்ததும் சத்யா அவள் மனதில் மேலும் உயர்ந்தாள்.
வீட்டுக்குள் வந்த விஷ்ணு “உன்னை யாரு கிளம்பி இங்க இருக்க சொன்னா?”, என்று கடுப்பாக சொன்னான்.
“ப்ச் என்ன அத்தான்? இதுக்கு என்ன கோபம்? நீங்க தான கிளம்பி இருக்க சொன்னீங்க”
“லூசு பொண்டாட்டி கிளம்பி இருன்னு சொன்னேன். ஹால்ல இருன்னு சொன்னேனா? ரூம்ல இருந்திருந்தா அப்படியே ஒரு கிஸ் பண்ணிருக்கலாம்”
“இவ்வளவு தானா?”, என்று சொன்னவள் “வாங்க போகலாம்”, என்று அவன் கரம் பற்றி காருக்கு அழைத்து சென்றாள்.
அவளை முறைத்த படியே காரில் ஏறி அமர்ந்ததும் அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள் அவன் உதடுகளில் தன் உதட்டை பொருத்தினாள்.
அவனுள் முளைத்த மனத்தாங்கல் முற்றும் தொலைய அவள் ஆரம்பித்த வேலையை தனதாக்கி கொண்டான்.
“தேங்க்ஸ் டி”, என்று சொல்லி காரை எடுத்தவன் அவள் வெட்கத்தை ரசித்த படியே அவளை வம்பிழுத்து கொண்டு வந்தான்.
அந்த பெரிய ஹாஸ்ப்பிட்டல் முன்பு காரை நிறுத்தியவன் அவளை உள்ளே அழைத்து சென்றான். அவர்கள் எதிர்பார்த்த விடையையே மருத்துவரும் சொல்ல அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தவன் “எனக்கு உன்னை இருக்க கட்டிக்கணும் போல இருக்கு. அதுவும் இங்கயே”, என்றான் விஷ்ணு.
“விளையாடாதீங்க அத்தான். வீட்ல போய் வச்சிக்கலாம்”, என்று சொல்லி காருக்குள் அழைத்து சென்றவள் காரில் ஏறியதும் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
காரில் இருந்தே போனை எடுத்து அன்னலட்சுமியை வீடியோ காலில் அழைத்தான்.
“எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?”, என்று கேட்டாள் அன்னலட்சுமி.
“நாங்க மூணு பெரும் நல்லா இருக்கோம் மா”, என்று சிரித்தான் விஷ்ணு.
“மூணு பேரா? இன்னொரு ஆள் யாருப்பா?”
“அதுவா? உங்க மருமக வயித்துக்குள்ள இருக்குற என் பிள்ளை”
உலகையே வென்ற சந்தோசம் அந்த தாயின் முகத்தில் வந்திருந்தது. அதை கண்டு இவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது.
“ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் கண்ணு. பத்திரமா வீட்டுக்கு போங்க. அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க. சத்யா குட்டி வீட்டுக்கு போய் போன் போடுடா”, என்று சொல்லி போனை வைத்தாள்.
வீட்டுக்கு வந்து புவனா மற்றும் பிரதாப்பிடம் விசயத்தை சொன்னதும் அவர்கள் முகமும் பூவாக மலர்ந்தது. அனால் அடுத்து புவனா சொன்ன வார்த்தையில் சத்யா முகம் தான் இருளடித்தது. அது என்னவென்றால் “சத்யா இனி நான் சொல்றதை தான் சாப்பிடணும்”, என்ற வரிகள் தான்.