அத்தியாயம் 31
“சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா”
சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டான்.
சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த இடத்துக்கு வந்தடைந்தவனை கடத்தியவர்களின் தலைவன்,
“சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா” என்றிலுக்க நடையை நிறுத்தி அவன் பக்கம் திரும்ப “கடத்தும் போது கூடவே அவரோட மனைவியும் இருந்ததால் அவங்க இவர கடத்த விடாம போராடியதுல” என்று நிறுத்த அவனை கண்கள் கூர்மனையாக்கிப் பார்க்க அவனின் புலியின் பார்வை மாதிரியான கூர் பார்வையை எதிர் பார்வை பார்க்க முடியாமல் பேச்சு வராமல் அவன் திண்டாட
அவன் பக்கத்திலிருந்தவன் “நான் தான் சார் அந்த பொண்ணு தலையிலேயே கட்டயால அடிச்சேன் அந்த பொண்ணு மயங்கிருச்சு இந்நேரம் போய் சேர்ந்திருக்குமோ என்னவோ” என இளித்தவாறே பெருமையாக கூற அவனை “பளார்” என அறைந்தான் ஷரப்.
தலைவனே எப்படி சொல்வதென்று திண்டாடும் போது தான் முந்திக்கொண்டு தற்பெருமை பாட கன்னத்தில் அறைவாங்கியவனுக்கு பேரிடியாக “அவங்க கண்ணு திறக்குற வரைக்கும் இவனுக்கு சோறு தண்ணி கிடையாது அவங்களுக்கு ஏதாவது ஆச்சு இவன் உசுரோட இருக்கக் கூடாது” என கர்ஜனை குரலில் ஹிந்தியில் கூறியவன் தனது பி.ஏ வ்ருஷத்தை அழைத்து ஏதோ பேச மீராவை அடித்தவன் கடத்தப்பட்டான். அவனுடன் வந்த சில பேர் அடித்தவனை தூக்கிச்செல்ல தலைவன் செய்வதறியாது நின்றுவிட்டான்.
பெண்களை மதிக்காது அடிமையாக நடத்துபவன் ஷரப் ஒரு பெண்ணின் மீது வைத்த காதலால் சற்ரேனும் பெண்களை மதிக்கவும் உயிருள்ள ஜீவனாகவும் ஏற்றிருந்தான். அதனால் தான் என்னவோ சைதன்யன் உயிரை வைத்திருக்கும் மீராவை கடத்தாமல் ஒரு ஜென்டில்மேன் ஆகா மேன் டு மேன் பிரச்சினையை பார்த்துக் கொள்ளலாம் என சைதன்யனை கடத்தச்சொன்னது. மீராவை கடத்தியிருந்தால் சுலபமாக சைதன்யன் வாளை அவனிடம் கொண்டு சேர்த்து விடுவான் என அறிந்திருந்தும் சரவணன் மூலம் வாளை பெற சைதன்யனை கடத்தினான்.
“எவ்வளவு நேரமாக மயக்கத்துல இருக்கான்” சைதன்யனின் மேல் வைத்த பார்வைவை அகற்றாது அவனை அங்குலம் அங்குலமாய் அளந்தவாறே கேட்க
ஒரு கதிரையில் பின்னால் கை கட்டப்பட்டவாறு சைதன்யன் இடது பக்கமாக சாய்ந்தவாறே கழுத்து தொங்கி மயங்கிய நிலையில் இருக்க வலது பக்க நெற்றி அடி பட்டதால் வீங்கி புடைத்திருந்தது. கன்னத்தில் இரத்தம் வழிந்தது அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையிலும் தெறித்திருக்க வலது காலை நீட்டியவாறும் இடது கால் மடிந்த நிலையிலும் வேர்வையில் குளித்து காணப்பட்டான்.
“கடத்தும் போது மயக்க மருந்து கொடுத்தது தான் சார் இன்னும் எந்திரிக்கல” கதவின் உள்ளே புகும் போதே சைதன்யன் இருந்ததால் இன்னொரு முனகல் சத்தம் கேட்கவே இடது பக்கமாக திரும்ப அங்கே இன்னொருவன் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து இருக்க அவனின் முகம் சரியாக தெரியவில்லை நெற்றி சுருக்கி யோசனையாக கடத்தல் காரனை பார்க்க “இவர கடத்தும் போது பின்னாடியே பாலோவ் பண்ணி கிட்டு வந்திருக்கான் அவரோட பாடிகார்டா இருக்கும்னு சந்தேகமா இருந்ததால பசங்க தூக்கிட்டு வந்துட்டானுங்க” பவ்வியமாக சொல்ல கீழே கிடந்தவனை பார்த்து கேலிப்புன்னகையை உதிர்த்தான் ஷரப்.
” “வ்ருஷாத் இவன போட்டோ அண்ட் வீடியோ எடுத்து அவன் அப்பனுக்கு அனுப்பு எந்த டிமாண்டும் இல்லாம ஜஸ்ட் அனுப்பு” என அவனுடைய பி.ஏ வை ஏவ ஷரப் கண் காட்டினாலே செய்து முடிப்பவன் வாயால சொன்னால் தாமதிப்பானா? உடனே காரியத்தில் இறங்கினான்.
லேசாக மயக்கம் தெளியும் போது சைதன்யனுக்கு நடந்தவைகள் படமாக நியாபகத்தில் வந்தது
அன்று மலர்ந்த மலர் போல் குளித்து விட்டு வந்த குழந்தை உண்டாகி இருந்ததால் இன்னும் பிரகாசமாக ஜொலித்த மீராவை கண்டு விசிலடித்தவன் “ரௌடி பேபி ரெண்டு நாளா நீ என்ன கண்டுகிறதே இல்ல மீ பாவம் டி” என அணைக்க வர பட்டென்று அவன் கையில் அடித்தவள் “மீயூம் பாவம்” என சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு “பாப்பாவும் பாவம் ஏதாவது ஆச்சுன்னா” என்று முகம் சுருங்க அதை கூட தாங்க முடியாமல் “ஏய் கியூட்டிபய் நம்ம வீட்டுல ஒரு திருட்டு பூனா புகுந்திருச்சு டி” என பேச்சை மாற்ற
“பூனையா” அதிசயமாய் கேட்டால் மீரா. இந்த பத்து வீட்டுக்கும் இருக்கும் காவலாளிகள் இரவும் சுத்திக்கு கொண்டே இருப்பதால் பூனை எப்படி வரும். என்ற புரியாத பார்வை பார்க்க
“பூனை தான் டி திருட்டு பூனை பிரிஜில் உள்ள எல்லாத்தையும் காலி பண்ணி இருக்கு” என சிரிக்காமல் சொல்ல தன்னை தான் திருட்டு பூனையென்று சொல்கிறான் என புரிந்துக் கொண்டவள் அசடு வழிந்தவளாக “என்ன செய்ய சையு எந்த நேரமும் பசிக்குதே உங்க பாப்பா பண்ணுற வேல” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கூற அவன் அடுத்து சொன்னதை கேட்டு திரு திறனு முழிக்க ஆரம்பித்தாள்.
“அந்த பூனை அடுப்பு பத்த வச்சி சமைச்சி சாப்பிடுது டி” அவன் சொல்லி முடிக்கையில் குட்டு உடைந்ததை நினைத்து முழித்தவள் “சாரி சையு உங்க கிட்ட இருந்து உண்மைய வரவழைக்க எனக்கு சமைக்க தெரியாதுன்னு பொய் சொன்னேன்”
“உனக்கு உண்மை தெரிஞ்சி ஏதாவது ஆகிடுமோனு தான் மறைச்சேன் பொய் சொல்லணும்னு எண்ணம் எல்லாம் இல்ல என்ன தனஞ்சயனா மத்தினதே நீதான்” என்று அன்று ஆபீசில் நடந்ததை சொல்ல தனக்கு பழையதெல்லாம் மறந்ததால் வந்த வினையென்று கவலையடைந்தாள்.
அவளின் சுருங்கிய முகத்தை கண்டு முத்தமிட்டவாறே “ஆனாலும் சந்துருவும் சௌமியாவும் கதை திரைகதை வசம் எழுதி எல்லாருக்கும் படத்த ஓட்டிட்டாங்க” என்று சத்தமாக சிரிக்க அவனின் சிரிப்பில் மயங்கி “சையு’ லோங் டிரைவ் போலாமா?”
“போலாம் போலாம் அதுக்கு முன் அம்மணி என்னெல்லாம் தெரியாதுன்னு என் கிட்ட மறச்சீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” நெற்றியில் முட்டியவாறே கேக்க “ஏதோ யு டியூப் புண்ணியத்துல சாப்பாடு சாப்டுற மாதிரி இருந்துச்சு நீங்க சமைச்சிட்டு குளிக்க போனதும் சமையல் நல்லா இருக்கானு பாத்து போதா குறைய சரி பண்ணிடுறேன். துணியும் அப்படிதான் நீங்க துவச்சத நா காய போடுறேன் ஆபீஸ் போக லேட் ஆச்சுன்னு உங்கள அனுப்பிட்டு திரும்ப துவைச்சு கதையெல்லாம் நிறையவே இருக்கு” உதட்டை சுளித்து சொல்ல உதட்டை சுண்டி விட்டவாறே ஜீப்பின் சாவியை கையில் எடுத்தவன் கண்ணாலேயே போய் கிட்டு பேசலாம் என சொல்லிய வாறே மீராவை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான்.
அவளை வண்டியில் இருத்தி சீட் பெல்ட்டையும் போட்டு விட்டவன் வண்டியை கிளப்பியவாறே “அன்னக்கி உங்க கைய சுட்டு கிட்டீங்கல்ல அதுக்கப்போறம் தான் உங்களுக்கு தெரியாமலேயே எல்லா வேலையையம் பாத்தேன். ஆனாலும் உங்க வாயிலிருந்து உண்மைய வரவைக்க முடியலையே!” என்று பொய்யாய் பெரு மூச்சு விட “நேரடியா கேட்டிருந்தாலே சொல்லி இருப்பேன்”என சைதன்யன் சிரிக்க அவனை முறைத்தாள் மீரா.
இவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து வண்டியை முன்னும் பின்னும் தொடரும் நான்கு வண்டிகளை கவனிக்கத்தவறினான் சைதன்யன். வாகனங்கள் அதிகமில்லாத பாதையில் பயணிக்கும் போது சைதன்யனின் வண்டியை மறைத்து நின்றது ஒரு வேன்.
சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான் சைதன்யன் என்ன ஏதென்று அவன் இறங்குவதற்கு முன் உருட்டு கட்டைகளுடன் சில பேர் இறங்க மற்ற வண்டிகளும் வந்து நிறுத்தி இருந்தன.
பிரேக் போட்ட வேகத்தில் மீரா வயிற்றை பிடித்திருக்க சைதன்யனின் இடது கையும் அவளை மறித்து தாங்கியது. சீட் பெல்ட் போட்டிருந்த படியால் அவள் முன்னாடி அதிகமாக வராமல் சைதன்யனின் கையில் தாங்கி நிற்க சைதன்யன் கோபமாக வண்டியிலிருந்து தாவி இறங்கினான்.
மற்ற வேன்களிலிருந்தும் பல பேர் இறங்க ஜீப்பில் வந்ததை நினைத்து நொந்து கொண்டான் சைதன்யன் ” ஸ்ரீ நீ கீழ இறங்காதே” அவன் சொல்லி முடிக்கும் முன் மீரா சீட் பெல்ட்டை கழட்டி இறங்கி இருந்தாள். பின்னாடி இன்னும் இரண்டு வாகனமும் பக்க வாட்டில் ஒரு வாகனுமாக நான்கு வாகனம் இருக்க எல்லா வாகனத்திலிருந்து அடியாட்கள் போல் சில பேர் உருட்டுக்கட்டைகளுடன் இருப்பதை கண்டு மீரா பதை பதைத்த வாறே சைதன்யனிடம் செல்ல முற்படும் போது ஒருவன் அவனின் தலையில் அடித்தான்.
வலது நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பொல பொல வென கொட்ட மீரா “சையு” என கத்தியவாறே முன்னாடி பாய்ந்தாள். அவளை ஒருவன் இழுத்து பிடிக்க சைதன்யனுக்கு மயக்க மருந்தை முகத்துக்கு ஒருவன் தெளிக்க முற்பட அதை தடுத்தவன் “அவளை விடுங்கடா” என காத்த மீண்டும் அவனை அடிக்க பின்னாலிருந்து ஒருவான் பாய மீரா அவளின் கையை பிடித்திருந்தவனின் கையை கடித்து விட்டு சைதன்யனிடம் பாய முதுகில் அடி வாங்கினாள்.
அவள் குறுக்கால வந்ததால் கோவ முற்றவன் கட்டையால் அவளின் தலையி பலமாக அடித்தான். சைதன்யன் அவள் புறம் திரும்பியவுடன் மயக்கமருந்தை தெளித்து இருந்தான் ஒருவன். மயங்கியவாறே மீரா கீழே சரிவதை கண்டான்.
மெதுவாக கண்ணை திறந்தவனுக்கு தலை வின் வின் என்று வலித்தது. அவன் முன்னாடி ஒருவன் கண்ணக் குழி விழ புன்னகையுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவன் அசையமுடியாதவாறு கைகள் கட்டப் பட்டிருக்க “ஹலோ ப்ரோ ஐம் ஷரப். ஷரப் சௌதாகர் நைஸ் டு மீட் யு’ என்றான் ஷரப்.
“எங்கடா என் ஸ்ரீ” சைதன்யன் பலம் கொண்ட மட்டும் விடுபட முற்சித்த வாறே கர்ஜித்தான். “சு சு சு பொண்டாட்டி மேல அவ்வளவு பாச…..ம்” என்றான் ஷரப்.
சைதன்யனை கட்டி வைத்திருந்த புகைப் படங்களை பார்த்து லட்சுமி அம்மா மயங்கி விழ சரவணன் சார் அதிர்ச்சில் அமர்ந்திருந்தார்.
மீரா என்ன ஆனா? சைதன்யனை தொடர்ந்து வந்தவன் யார்?