அத்தியாயம் 25

முகூர்த்தம் காலை எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை என்பதால் காலை ஏழு மணிக்கே மீராவை அலங்கரித்தனர். சைதன்யன் வாங்கி இருந்த சிவப்பு நிற புடவையில் பொருத்தமான நகைகளோடு தேவதையாய் இருந்தவளுக்கு கண் த்ரிஷ்டி பட்டு விடுமோ என பயந்த சரஸ்வதி அம்மா கையை மடக்கி த்ரிஷ்டி கழித்து   சைதன்யனின் உறவுமுறை ஒரு பெண்மணி சொல்லியபடி கண் த்ரிஷ்டிக்காக அவளின் கண்மையை எடுத்து கழுத்துக்கு கீழே வைத்தார். வீட்டில் சில சடங்குகளை முடித்துக்கொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள் மணப்பெண்.

 

பின்னால் மணப்பெண்ணின் சொந்தங்கள் ஆண்,பெண் என அனைவரும் வர, பூவால் நெய்யப்பட்ட வலை போன்ற குடை பிடித்து தெருவெல்லாம் பூக்களிடப்பட்டு கோவில் வரை பல்லாக்கிலும் கோவில் உள்ளே நடந்தும் அழைத்து வரப்பட்டாள் மணப்பெண். மண்டபத்துக்கும்   குலதெய்வத்துக்கும்  நடுவே தனது மணாளனுக்காக காத்திருந்தாள் மங்கை.

 

ஆணழகனுக்கே அழகனாக  ஷர்வானி  ஆடையணிந்து தலையில் முண்டாசு கட்டி நெத்தியில் திலகமிட்டு படைவீரன் போல் வாளேந்தி குதிரையில் தனது மணப்பெண்ணை நோக்கி வந்தான் சைதன்யன்.  அவனின் படைவீரன் போலிருந்த தோற்றத்தை கண்டு பூர்வஜென்ம பந்தம் பொய்யில்லை போனஜென்மத்தில் இப்படித்தான் இருந்திருப்பானோ என்ற எண்ணம் தோன்ற நடந்து முடிந்தவை கனவாய் வந்தபோது  போனஜென்மத்தில் நடந்தது என நினைத்தது நியாபகத்தில் வர அழகான வெட்கப்புன்னகை வந்து நாணி தலைகுனிந்தாள் மணப்பெண்.

 

கோவிலை அடைந்ததும் குதிரையில் இருந்து குதித்திரங்கிய கனமிருந்து தன்னவளின் முகபாவங்களையும் தேவதைப்போன்று அலங்காரத்தில் திகழ்ந்தவளை கண்டு சைதன்யனின் காதல் மனம் நூறுமடங்கு அதிகமாக துடிக்க ஆரம்பித்தது. அவளின் அழகில் மயங்கி ஒருகணம் சிலையாய் நின்றவன் பட்டாசு வெடித்து அடங்கியதும் ஒரு வித இசைக்கருவி இசைக்கப்பட்ட தன்னை சமாளித்து  தன்னவளை நோக்கி வீர நடையிட்டு மணமகள் அருகில் வந்து வாளை உருவி வான் நோக்கி  பிடித்து ” என் உயிர் உள்ளவரை உன் மானம் காப்பேன்” என பொறுமையாகவும் அழுத்தமாகவும் திருத்தமாகவும் உச்சரித்து வாக்களித்தவன். வாளை இரு கைகளிலும் ஏந்தி இடது காலை மடித்து அவள் முன் மண்டியிட்டு தலை வணங்கி அவள் புறம் நீட்ட ஒன்றும் புரியாது திருதிரு வென முழித்தாள் சைதன்யனின் ஸ்ரீ.

{இந்த வாளத்தான்யா ஒருத்தன் ராஜஸ்தான்ல தேடிக்கிட்டு இருக்கான்.}

 

“காலேஜ் ரேகிங் மாதிரி  கல்யாண ரேகிங் போல”என சௌமியா மீராவின் காதை கடிக்க மீராவின் முகத்திலும் புன்னகை “என் பையன எவ்வளவு நேரம் தான் மண்டியிட்டு வைக்க போற சீக்கிரம் வாளை வாங்கு இல்லனா கல்யாணம் நடக்காது” லட்சுமி அம்மா பூரிப்புடன் சொல்ல வாளை இரு கைகளிலும் வாங்கினாள் மீரா.  மீராவிடம் சொன்னால் கேள்விமேல் கேள்வி கேப்பாள் என தக்க தருணத்தில் சொன்னால் மறுக்காமல் செய்வாள் என சொல்லாமல் விட்டு விட்டார். ஆனால் அவள் எந்த கேள்வியும் அவரிடம் கேளாது சைதன்யனை படுத்தப் போகிறாள் என யாரும் அறியவில்லை.

 

சரவணன் சாரின் கொள்ளுத்தாத்தா ‘விஷ்வதீரன் சௌதாகர்’ பெண்ணின் மானம் காத்த வாள் அவர்களின் குடும்பச் சொத்து, பரம்பரையின் அடையாளம் கல்யாண சடங்காய் வாளேந்தி வரும் மணவாளன் வாளை வானுயர்த்தி வாளின் மேல் மனைவியை காப்பதாக   வாக்களிக்க அதை முழு மனதாக நம்பினேன் என மணப்பெண் வாளை இரு கைகளிலும் ஏந்தி குலதெய்வத்துக்கு அருகே சென்று இருவரும் வாளை குலதெய்வத்தின்  முன் வைத்தி பூஜை செய்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னே மணமேடைக்கு அழைத்து செல்லப் படுகின்றனர்.

 

வாளின் பாரம் தாங்காமல் தடுமாறியவளின் இடது கையின் கீழ் தனது இடது கையையும் வலது கையை இடுப்பை சுற்றி கொண்டுபோனவன் அவளின் வலது கையின் கீழ் வைத்து அவளையும் வாளையும் தாங்கி பிடிக்க அழகான ஓவியம் போல் இருந்தது அக்காட்சி.

 

அவளை அணைத்திருந்தவன் காதருகே குனிந்து “இந்த ட்ரெஸ்ஸுல சூப்பரா இருக்க ஸ்ரீ” என புன்னகைக்க அவன் உதடுகள் காதுமடல் உரச மேனி சிலிர்க்க அவன் புறம் திரும்பி அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்களும் தான் சையு” புன்னகைத்தாள்.

அவளை அணைத்தவாறே குலதெய்வத்துக்கு அருகே சென்றவன்  வாளை தெய்வத்தின் முன் வைக்க பூஜை நடை பெற்றது.அதன் பின்னும் அவளின் கையை பிடித்தவாறே மனமேடையை நோக்கி நடந்தான் சைதன்யன்.

 

மணமேடை வரை பூக்களாலேயே பாதை அமைத்திருக்க மணமேடையும் பூ அலங்காரமே செய்யப்பட்டிருந்தது. முகூர்த்த நேரம் வர கெட்டி மேளம்கொட்ட தமிழர்களின் தாலி அணிவித்து சைதன்யன் மீராவை தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.

 

 மணமேடை சடங்குகள் அனைத்தும் லட்சுமி அம்மாவின் குடும்ப வழக்கப்படி இருக்க மாங்கல்யத்திலும் பெண்ணின் நெற்றியிலும் குங்குமம் வைத்து அம்மி மிதித்து மெட்டி அணிவிக்கப்பட்டு  அருந்ததி பார்த்தது என எல்லா சடங்குகளும் இருக்க,

 

அதன் பின் உறவுகள் ஒவ்வொருவராக வந்து வாழ்த்த சந்துரு அவனை கட்டியணைத்து “மாப்புள நீ தாலி கட்டினது சிஸ்டருக்கு இல்லடா டைமே செட் பண்ணாத பாம்கு, எப்படி வெடிக்கும்னு ஒரு கணக்கு இருக்கு,  எப்பவெடிக்கும்னு தெரியல அவங்க பழைய நியாபகங்கள் வந்துச்சு நீ செத்தடா” என வில்லா சிரிப்பை உதிர்த்து விட்டே அகல முற்பட அவன் பின்னாடி வந்த தேவ்

 

“தம்பி மீராகு பழைய நியாபகங்கள் வந்த பிறகு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு கேனத்தனமான யோசிக்காம சட்டு புட்டுன்னு புள்ளய பெத்துக்க அதான் உனக்கு சேப்பிட்டி” என கொளுத்திப்போட

 “நா எப்போடா அப்படி யோசிச்சேன் அதுவும் அவளை பக்கத்திலேயே வச்சிட்டு சாமியார் மாதிரி என்னால இருக்க முடியாது” சைதன்யன் வாய் விட்டே புலம்ப சந்துருவும் தேவ்வும் ஹைபாய் கொடுத்து நக்கலாக சிரிக்க “இவனுங்க ஏதோ பிளான் பண்ணிதான் போட்டு வாங்கி இருக்கானுங்க” சைதன்யனின் மனம் கூவியது.

 

மணமக்கள் இருவரும் குதிரை வண்டியில் வீடு நோக்கி அழைத்து வரப்பட்டு ஆலம் சுற்றி வீட்டினுள் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி பால் பழம் வழங்கப்பட்டது.

 

மனமக்களுக்கான விளையாட்டென குடத்தில் மோதிரம் போட்டு தேடுதல் நடைப்பெற மணமகன் மணமகளின் பெயரை அவள் கையிலிட்ட மருதாணியில் தேடணும் என இள வட்டங்கள் கோரஸாக கூச்சலிட “உன் பெற தனஞ்சயன் னு தான் மாப்புள இருக்கும்” சந்துரு காதை கடிக்க அவனை முறைத்தவன் அதிகநேரம் எடுக்காது அவளின் இடதுகை மோதிரவிரலில் மருதாணியால் எழுதியிருந்த  ‘சையு’ என அவனின் பெயரை கண்டுபிடித்தான்.  இன்னும் சில விளையாட்டுக்களும் சிறப்பாக நடைப்பெற காலை சாப்பாடு வீட்டில் பெரிய விருந்தாக வித விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்க மதியம் மணமக்கள் சென்னையை நோக்கி பயணப்பட்டனர் இரவில் நடைபெறும் ரிஷப்சனுக்காக.  

கல்யாணத்தில் உறவினர்கள் மாத்திரம் கலந்து கொள்ள எல்லாவற்றையும் புகைப்பட கருவி அழகாக உள்வாங்கியது.

 

நேற்று இரவு சரியாக தூங்காத மீரா சைதன்யனின் மடியில் கார் பயணம் முழுவதும் தூங்கி இருந்தாள். அவளை அணைவாக பிடித்திருந்தவன் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தான்.

நான்கு மணித்தியாலங்களுக்கு பிறகு ரிசப்ஷன் நடைபெறும் மண்டபத்துக்கு வந்திறங்கினார் மணமக்கள்.

மீராவின் குடும்பம், சந்துரு உட்பட  நேசமணி குடும்பம் மணமக்கள் புறப்பட ஒருமணித்தியாலத்துக்கு முன்பே புறப்பட்டு மணமக்கள் வரும் போது வர வேற்க காத்திருந்தனர்.

 

சரவணன் சார் லட்சுமி அம்மா அவர்களின் சொந்த பந்தங்கள் மணமக்களோடு வந்து சேர மணமக்கள் அவர்களுக்கான அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு கூற

“வரும் போதே நல்லா தூங்கிட்டேன்” என சைதன்யன் மறுத்து விட அவனை இரண்டு புருவங்களை உயர்த்தி சந்துரு “மாப்புள நீ பொழச்சிக்குவா டா பஸ்ட்  நைட் ல தூங்கிடாம இருக்க வரும் போதே தூங்கிட்டியா” அவன் கூறி முடிக்கும் போதே அவன் தலையில் யாரோ கொட்ட “அம்மா” என கத்தியவாறே திரும்பி பார்க்க

 

“அம்மா தாண்டா உன் அம்மாவே தான்” என சந்துருவின் அம்மா காதைப்பிடித்து திருக

 

“புள்ளய பெக்க  சொன்னா தொல்லைய பெத்து வச்சுருக்க என்ன பேச்சு பேசுறான் சின்ன பொண்ணுங்க இருக்காங்களேன்னு பாக்குறானா?” சந்துருவின் தங்கை இன்னும் ஏற்றி விட “உனக்கு இது பத்தாதே” என சௌமியா முறைக்க

” ஹப்பா மீ எஸ்கேப்” என சைதன்யன் மானசீகமாக நெஞ்சை தடவ மீரா வெக்கத்தில் தலை குனிய அவளை அணைத்தவாறே இடத்தை காலி செய்தான்.

 

அந்த மண்டப அலங்காரம் பணத்தை வீசி செய்திருப்பாங்க என்றே தோன்றியது மீராவுக்கு அவளின் கேள்விக்கணைகளை எதிர் பார்த்திருந்தவர்கள் எந்த கேள்வியும் கேக்காது மீரா சைதன்யனுடன் கைகோர்த்து நடந்து வந்து மேடையில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர ஏமாற்றமடைந்தனர்.

 

சைதன்யன் வாங்கி இருந்த நீல நிற டிசைனர் புடவையில் தங்க நிற ஜரிகையிட்டு இருக்க புடவையின் விலையை அதன் நேர்த்தியே சொல்லியது அவள் அதை பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

சைதன்யன் அணிந்திருந்த கோட் சூட் கூட நீல நிறத்தில் இருக்க மண்டபம் முழுக்க நீல நிற மற்றும் வெள்ளை  மலர்களும் அதற்கேத்த வாறு வெள்ளையும் பாச்சையுமாக நிற சேர்க்கையாக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டிருக்க இரவு விளக்கொளியில் மண்டபமே அழகாக ஜொலித்தது.

 

மெல்லிய இசை அரங்கத்தில் காற்றில் தவழ்வது போல் இனிமையாக இருக்க உணவு புபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

தொழில் சாம்ராஜ்யத்தில் முக்கிய இடத்தில் உள்ள சரவணன் சௌதகரின் வீட்டு திருமணம்  பணக்காரர்கள், அரசியல்வாதிகள் சில நடிகர்கள் என அந்நகரத்தில்  உள்ள முக்கியமான வி ஐ பி கள் அனைவரும் வருகை தந்திருக்க மணமக்களை அறிமுகப்படுத்தும் படலம் நடைபெற்றது.

 

சைதன்யனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தாலும்  அந்த கஷ்டத்தையும் மீரா அவனுக்கு கொடுக்காது சௌமியாவை அருகிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டாள்.

ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி விட்டு செல்ல யாரவது அவனின் பெயரை கூறி  அழைத்தால் அதை கண்டும் காணாதது போல் சௌமியாவுடன் பேசிக்கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்வாள்.

 

சைதன்யனுக்கு “திக் திக்” என்று நெஞ்சம் அடித்துக்கொள்ளும் மீரா சௌமியாவுடன் பேசுவதை பார்த்து நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொள்வான்.

அவள் அவனை ஓரப்பார்வை பார்த்து “எத மறைக்கிறீங்க? ஏன் மறைக்கிறீங்க சையு” என தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொள்வாள்.

 

ரிசப்ஷனுக்கு ஆபீஸ் ஸ்டாப் யாரையும் சரவணன் சார் அழைத்திருக்கவில்லை. தொலைகாட்சிக்கோ , பத்திரிகைக்கோ எந்த ஒரு புகைப்படமும் வழங்கப்படவுமில்லை.

 

இதனாலையே மீண்டும் சௌமியா மீரா கூட்டணி டவுட் நம்பர் ஒன் ஆஃபீஸ் ல ஏதாச்சும் தில்லு முள்ளு நடக்குறதான்னு சைதன்யன் கண்டுபிடிக்க தான் தனஞ்சயனா மாரி இருக்கான் என முடிவு செய்தார்கள்.

 

சைதன்யன் வாளேந்தி மீராவுக்கு வாக்கு கொடுக்கும் புகைப்படத்தை சந்துரு தனது பேஸ்புக்கில் போட்டுவிட அதை பார்த்து வாளை தேடி ராஜஸ்தானில் இருக்கும் “அவன்”  வரப்போறான் என அறியாதவர்கள் இங்கே சந்தோசமாக நடனமாடிக்கொண்டிருந்தனர்.

 

ரிசப்ஷன் முடிய நடு இரவை நெருங்க மணமக்கள் மீராவின் வீட்டுக்கே அழைத்து செல்லப்பட்டனர்.

நாளைக்கு என்ன கலாட்டா பண்ண போறாங்களோ என்ற எண்ணம் தான் மீராவின் சிந்தனையில்.