அத்தியாயம் 24

அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள் கேட்க முன்பே காரணம் சொன்னார்கள். சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் கடுப்பாகவும் இருந்தது. சில நேரம் வேண்டுமென்றே கேள்வி கேட்டாள். சில நேரம் அமைதியான எரிமலையானாள்.

 

கல்யாணம் லட்சுமி அம்மாவின் குலதெய்வ கோவிலில் காலை  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் மாலை  சென்னையில்  பெரியதோர் மண்டபத்தில் ரிசப்ஷன்.

 

சரவணன் சாரின் பூர்விகம் ராஜஸ்தான் அவருடைய தாத்தா இங்கே குடிபெயர்ந்தவர். ராஜஸ்தானியான அவர் இங்கு வந்து திருமணம் செய்ததால் சரவணன் சாரின் குடும்ப திருமணங்களில்  அவரின் குடும்ப வழக்கங்கள் பல இங்கு நடை பெரும் திருமண சடங்குகளுடன் கலந்து இருந்தது. எல்லா வற்றையும் செய்ய வேண்டும் என்பது லட்சுமி அம்மாவின் ஆசை. அதற்கு ஒரு காரணமும் இருக்க குடும்ப இரகசியத்தை காப்பதாக தனது மாமனாருக்கு வாக்களித்திருந்தார்.

 

கல்யாணத்துக்கு முதல் நாளே மணப்பெண்  லட்சுமி அம்மாவின் பூர்வீக வீட்டில் தங்கவைக்கப்பட்டு  அடுத்த நாள் கல்யாணத்தை குலதெய்வ கோவிலில் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு சரவணன் சௌதகர் குடும்பம்  இரண்டு நாள் முன்னாடியே சரவணன் சாரின் பூர்வீக வீட்டை வந்தடைந்தனர். கல்யாணத்துக்கான ஆயத்தங்கள் எல்லாம் லட்சுமி அம்மா நேசமணியின் பொறுப்பில் விட்டிருந்தார். ஊரிலுள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

 

கல்யாணம் மாப்பிள்ளையின்  ஊரில் நடைபெறுவதால் மணப்பெண் சகிதம் குடும்பம் சொந்தபந்தம் என அனைவரும் ஊர் எல்லையை மதியம் வந்தடைய  மாப்பிளை வீட்டாருடன் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒண்ணுகூடி  வரவேற்று அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல அங்கே அவளுக்காக காத்திருந்தான் சைதன்யன் இரண்டு நாட்களாய் அவளை காணாதவன் அவளை கண்டதும் அவனின் கண்களில் தோன்றிய மின்னலும் சந்தோசமான புன்னகையும் அவனுடைய காதலின் அளவுகோளோ!

 

பூஜையில் இருவரையும் ஒன்றாக அமர்த்த தோள் உரச அமர்ந்தவர்களின் நிலைதான் சங்கடமானது. இருவரின் ஓரப்பார்வை அடிக்கடி இருவரையும் உரச  அவர்களுக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நிகழ வில்லை புன்னகையே  மௌன மொழியாய் ஆயிரம் கதை பேசியது. பூஜையின் பின் மணமகன் வேறாகவும் மணமகள் வேறாகவும் அவரவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட கோவிலில் ஏற்றப்பட்ட விளக்கு மீராவின் கையில் கொடுக்கப்பட்டு நடந்தவரே லட்சுமி அம்மாவின் பூர்வீக வீட்டை வந்தடைந்தனர்.

 

மணமகளே மணமகளே!

எங்க ஐயா வீட்டு மருமகளே!

வலது கால வைத்து உள்ளே வந்து

குலம்விளங்க குத்து விளக்க ஏத்தி வச்சி

நீ குத்தம்மா குத்து கை அரிசி

நாட்ட ஆழ ராஜா குட்டி வீட்டுக்கொரு இளவரசி

பெத்துகொடுத்துடு தாயீ தாயீ……. { பாடல் தொடரும்….}

 

“மீரா என்னடி இது வாழ்த்துப்பாட்டா?   வரவேற்புப்பாட்டா”  சௌமியா காதை கடிக்க மீராவுக்குமே என்னடா இது வந்து அரைமணிநேரம் ஆயிற்று பாட்டு நீண்டுகொண்டே போகுது ஆலம் சுற்றுவது முடிந்த பாடில்லை.வயதான பாட்டியிலிருந்து குமரிவரை வரிசையாய் ஆலம் சுற்றிக்கொண்டே போக கால் வேற கடுக்க ஆரம்பித்தது.  கையில் ஒரு விளக்கு வேற அணையாது உள்ளே சென்று பூஜையறையில் வைக்கும் வரை வேறு யார் கையிலும் கொடுக்கவும் கூடாது கீழேயும் வைக்கக் கூடாதென்பது லட்சுமி அம்மாவின் உத்தரவு.

 

“மீரா பேசாம மயக்கம் போட்டு விழுந்தது எப்பவாச்சும் வீட்டுக்குள்ள விடுவாங்களானு பார்ப்போம்” மீண்டும் சௌமியா பொறுமையை இழக்க “அமைதியா இருமா” சரஸ்வதி அம்மா அதட்ட சௌமியா முகத்தை சுருக்கியவாறே அமைதியானாள்.

 

ஒருவாறு ஆலம் சுத்துவது முடியவும் உள்ளே  பூஜையறை வரை அழைத்து சென்று விளக்கை வைத்து பூஜை செய்ய கண்ணை மூடி சைதன்யனுடன் வாழப் போகும் வாழ்க்கைக்காக வேண்டி நின்றாள். அதன் பின் மஞ்சள் நிற புடவை அணிய வைத்து நகைகள் எதுவுமே இல்லாமல் ரோஜாமலை மாத்திரம் அணிவித்து வாசலில் ஒரு சிறிய பெஞ்சில் அமர்த்தி சந்தனமும் மஞ்சளும் கலந்து முதலில் நெருங்கிய உறவுகளும் சொந்த பந்தமும் முகத்திலும் கை காலிலும் பூசி வாழ்த்த மெய் சிலிர்த்தாள் மீரா.

 

“மஞ்சள் நிலா மாதிரி இருக்க” சரஸ்வதி அம்மா தான் சந்தோச கண்ணீர் வடித்தார். “ஹப்பா…….என்ன கண்டு பிடிப்பு நீல் அமாஸ்ட்ரோங் தோத்தான் போங்க” சௌமியா அவரை கலாய்க்க அவளின் தோளில் தட்டியவர் கண்களை துடைத்தவாறே மீராவை அணைத்து முத்த மிட வினுக்குட்டி “நானும் நானும்” என   அவள் மடியில் அமர்ந்து எப்படி முத்தமிடுவதென கண்ணை உருட்டி மஞ்சள் குளித்த மீராவின் கன்னம் பார்க்க வினுவின் கன்னத்தில் முத்தமிட்டாள் மீரா.

 

பூஜையறை வரை வாழ்த்துப்பாட்டு தொடர்ந்தது அதன் பின் மெல்லிய இசையோடு இள மங்கைகளின் ஆடல் அரங்கேறியது. மணப்பெண்ணை சுத்தியும் சொந்தங்களை ஆட வைத்தும் கலை காட்டியது ஆடல் சடங்கு.

 

வினு குட்டியும், சௌமியாவும் ப்ரியாவின் தங்கை அனிதாவும்   மீராவை சுத்தி சுத்தி ஆட ப்ரியாவும், ப்ரியாவின் அம்மாவும், சரஸ்வதி அம்மாவும் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். ப்ரியாவை சௌமியா இழுக்க முடியாதென்றவளை சரஸ்வதி அம்மா வலுக்கட்டாயமாக அனுப்ப கொஞ்ச நேரம் ஆடியவள் மீண்டும் அவரிடம் வந்தமர்ந்தாள்.

 

பின் மல்லிகை பூ இட்ட வெதுவெதுப்பான நீர் தலையிலிருந்து பாதாம் வரை ஊற்றப்பட்டு குளிப்பாட்டப்பட்டு மீராவை புதுச்சேலை அணிந்து வர சொல்லி வயதான பெண்மணியின் கையால் முதல் வாய் சாப்பாடு ஊட்டப்பட்டது. அதுவும் ஒரு சடங்காக நன்றாக வாழ்ந்தோர் கையால் சத்து நிறைந்த உணவின் கலவை பிசைந்து ஊட்டப்படும்.

 

“ஹப்பா…. இப்பயாச்சும் சோத்த கண்ணுல காட்டினாங்களே ஜூஸ் கொடுத்தே தூங்க சொல்லிடுவாங்களோ என பயந்துட்டேன்” என சௌமியா புலம்ப சிரித்த வாறே அமர்ந்திருந்தனர் ப்ரியாவும் சரஸ்வதி அம்மாவும்.

 

“டேஸ்ட்டா இருந்தா இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுடி வெக்கப்படாத” சௌமியா சத்தமாக கூற அம்முதிய பெண்மணியோ நீயும் “வாய தொர” என அவளுக்கும் ஊட்ட “பாட்டி எனக்கும்” என வினுக்குட்டியம் வாங்கி சாப்பிட இன்னும் சில இள மங்கையினர் அருகில் வர “அந்த அண்டாவ தூக்கிட்டு வாங்கப்பா தட்டு பத்தல”

“கிழவிக்கு குசும்பப்பாரேன்”

“சௌமியா……..”சரஸ்வதி அம்மா மீண்டும் அதட்டினார்.  

ஆண்கள் வேறு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்க ஊர் பெண்கள் மொத்தமும் சடங்கு நடை பெரும் இடத்தில் இருந்தனர்.

 

பின் மருதாணி இடும் சடங்கு ஆரம்பமாக லட்சுமி அம்மா வந்து வலது கையில் கொஞ்சம் மருதாணியை பொட்டளவில் வைத்து ஆரம்பிக்க மருதாணி இட வந்த மங்கை  கையில் முழங்கை வரையும் பாதத்திலும் அழகாகன கோலம் போல் இட்டாள். கையில் மணமகன் பெயர் மருதாணியினால் இடப்படும் அதை மணமகன் கண்டுபிடிக்க வேண்டும். இளவட்டங்கள் விளையாட்டாக இது உள்ளது. என்ன பெயர் எப்படி எங்கே எழுத வேண்டும் என மீராவிடம் கேட்டு அப்பெண் அதுபோலவே பெயரை எழுதினாள்.

 

சௌமியா எட்டி எட்டி பார்க்க அவளை தள்ளி விட்ட மீரா “அத்து இவளா இழுத்துட்டு போய்டுங்க இல்லனா அவர் கிட்ட போன் போட்டே சொல்லிடுவா”

அவளை முறைத்தவாறே கழுத்தை நொடிக்க “பாத்துடி  ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்க கழுத்து சுழுக்கிக போகுது” மீரா அவளை வார” ” போடி” என என அவளை அடிக்க கையை ஓங்கியவள்  தோழியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு காதினுள் ஏதோ சொல்ல முகம் சிவந்தாள் மணப்பெண்.

 

அனிதா, ப்ரியா ,வினு சௌமியா என எல்லோரும் மருதாணி இட்டுக்கொள்ள மங்கையரோ தேவலோக கன்னியரோ எனும் விதத்தில் ஆடை அலங்காரத்துடன் ஜொலித்தனர்.

 

இங்கே சரவணன் சாரின் வீட்டில் சைதன்யனுக்கான சடங்குகள் நடை பெற்றுக்கொண்டிருந்தன. அவனையும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு ரோஜா மலை அணிவித்து மஞ்சள் சந்தானம் பூசும் சடங்கு நடை பெற்றது லட்சுமி அம்மாவே முதலில் பூசி ஆரம்பித்து வைத்தார். கண்கள் கலங்க மஞ்சள் சந்தனம் பூசும்  அவரை “என்னமா ஆனந்தக்  கண்ணீரா உன் மருமகள் கிட்ட சொல்லி வை என் கண்ணு கலங்காம பாத்துக்க சொல்லி” என சிரிக்க “போடா படுவா அவ கண்ணுல தண்ணி வந்தா நீ காலி” என அவர் சைதன்யனை வார “தேவையா உனக்கு……. உனக்கு நீயே ஆப்ப சொருகிட்டியே தனு” என்று சைதன்யன் குரலில் சந்துரு ஆள் காட்டி விரலை முகத்துக்கு முன் நீட்டி தாக்கு தானே சொல்லிக் கொள்ள “எனக்கு வில்லன் வெளிய இல்லடா கூடவே வச்சு சுத்திகிட்டு இருக்கேன்” என பல்லை கடித்தான்.

 

பெண்கள் ஆண்கள் என்றில்லாது அனைவரும் வரிசையாய் வந்து மஞ்சள் சந்தனம் பூசி வாழ்த்தினர். மணமகளை  போல் அதிக சடங்குகள் இருக்க வில்லை. மல்லிகைப்பூ குளியலும் இல்லை. அவனே குளித்து சாதாரண உடையில் வர

 

“லிட்டில் பாஸ் பேச்சுலர் பார்ட்டி எங்க?” என்று சந்துரு காதை கடிக்க அவனை முறைத்தவன் “குடிச்சி மட்டையான மீரா கழுத்துல யார் தாலி காட்டுவான் போ போய் தூங்கு” தலையில் அடித்துக் கொண்ட சந்துரு “டேய் குடிகாரா நீ ஏன் டா குடிக்கிற வாங்கிக்குடுடா நா குடிச்சிக்கிறேன்” கடுப்பாய் மொழிய அப்பக்கமாக வந்த நேசமணியை அழைத்த சைதன்யன் ” அங்கிள் என் நண்பன் சந்துரு பேச்சுலர் பார்ட்டி கேக்குறான் சரக்குதான் வேணுமாம் கொஞ்சம் என்னானு கவனிங்க” என கோர்த்து விட  

அவரை கண்டும் அசாராதவன் ” ஊருல அவனவன் ஆயிரம் பிரெண்ட்சுகளோடு  சந்தோ………..சமா இருக்கானுங்க  ஒரே ஒரு பிரெண்ட வச்சிக்கிட்டு நா படுற பாடிருக்கே!” என நடிகர்  சந்தானம் வாய்ஸ் இல் சொல்லி அவ்விடத்தை காலி செய்தான். அவனை என்ன செய்தால் தகும் என்று முறைத்த வாறே நேசமணி அகன்றார்.

 

சைதன்யனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை அவனை தூரத்திலிருந்து சந்துரு முறைத்தவாறே “குடிக்க தெரியாம குடிச்சி நாலு நாள் மட்டையானவன் தானே நீ” என வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப “உனக்கு சரக்கு வாங்கி வச்சிருந்தேன் இப்போ தர மூட் இல்ல” என பதில்  அனுப்பி இன்னும் அவனை கடுப்பேற்றியவன் தனதறைக்கு சென்றான்.

 

இங்கு சந்துரு தேவ்வை தேடிச்சென்று பேச்சுலர் பார்ட்டி பத்தி பேசலானான்.”டேய் நா ஒரு டாக்ட்டர் டா” “ஏன் டாக்ட்டர்ஸ் எல்லாம் சரக்கடிக்க கூடாதா” ஆதங்கமாய் கேட்க “என்  பொண்டாட்டி கையாள அடிவாங்க வச்சிடுவா போலயே!” ஈ என இளித்தவன்  “ப்ரியா மேம் மீரா சிஸ்டர் கூட பிசி நீங்க வாங்க சார்” என அவனை இழுத்துச் செல்ல இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என யோசித்தவன் “அதோ சௌமியா வரா” சந்துரு தலையை திருப்பி தேட தேவ் காணாமல் போய்ட்டான்  

 

எல்லா சடங்கும் முடிந்து தூங்கலாம் என அறைக்கு வந்து மீரா மொபைலை பார்க்க சைதன்யனின் மெசேஜ்  ‘சடங்குகள் முடிந்த உடன் கால் பண்ணவும்’ என்று  இருந்தது. சிரித்தவாறே அவனுக்கு கால் பண்ணியவள் அவன் ‘ஹலோ” சொல்லும் வரை காத்திருந்தாள்.

 

தனக்கு ஒரு வருடத்துக்கு மேல் நடந்தவைகள் மறந்து விட்டது என்று தெரிந்திருந்தவளுக்கு சைதன்யனை முதல் நாள் பார்த்தது நியாபகத்தில் வரவே அதை தொடர்ந்து சில நியாபகங்களை மீட்டெடுத்தவள் அவன் கம்பெனிக்காக வேறு பெயரில் இருப்பதாக முடிவு செய்தவள் எல்லாரும் அறிந்திருக்கும் விடயத்தை தனக்கு மாத்திரம் மறைப்பது ஏன் என புரியாமல் குழம்பினாள்.  

 

ஏதோ ஒரு காரணத்துக்காக மறைக்கிறார்கள் அது தான் மறந்தவைகளில் உள்ளது என சரியாக புரிந்துக்கொண்டவள். என்ன செய்யலாம் என சௌமியாவுடன் ஆலோசித்த போது “உன் குடும்பமும் சரி அண்ணாவும் சரி  உனக்கு எது நல்லதோ அதை மாத்திரம் தான் செய்வாங்க அண்ணாட லவ் மேல டவுட் இல்லையே!” ” இல்ல” ” பின்ன என்னடி எல்லாத்தயும் விட்டுத்தள்ளு கல்யாணத்த பண்ணி என்ஜோய் பண்ணு.

அவள் சொல்வது சரியென படவே எல்லாவற்றையும் புறம் தள்ளி சைதன்யனின் காதலை முன் நிறுத்தி கல்யாணத்துக்கு தயாரானாள். கல்யாண சடங்குகள் குறையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.