வாக்கு தேவதை -17

 

‘கோமதி..கார் டெலிவரி எடுக்கப் போவணும்..எப்ப போவலாம்?” என்று கேட்டார் சித்தப்பா.

 

“சிவா என்னிக்கு ஃப்ரீயோ அன்னிக்குப் போலாம்”

Advertisements

 

“அவன் பிஸியா இருக்கான்..வினய் பிறந்த நாள் வேலைல..அவன் ஃபிரண்ட் நம்மகூட வருவாங்க..சிவா பேசிட்டான்..போகறச்சே சிவா காரில டிரைவரோடப் போயிடாலம்..டெலிவரி எடுத்த அப்பறம் நம்ம வண்டில எல்லாரும் வந்திடலாம்..டிரைவர் சிவாக் கார ஒட்டிட்டு வந்துடுவாங்க”

 

“சிவா வராட்டா விட்டுடுங்க..அவங்க ஃபிரண்டெல்லாம் எதுக்கு..புது கார நானே ஒடிட்டு வந்திடுவேன்”

 

“நாந்தான் கூட ஒரு ஆளு இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்..எனக்கு இந்த டெலிவரி பத்தியெல்லாம் தெரியாது.”

 

“சரி அப்ப விக்னேஷக் கூட்டிகிட்டுப் போலாம்”

 

“அவனுக்கு ஸ்கூல்யிருக்குமா”

 

“லீவு போட்டிடலாம்”

 

“அவன் சின்னப் பையன் அவனுக்கும் என்ன தெரியும்..கார் ஒட்டமுடியாதே”

 

“அவன் எதுக்கு ஒட்டணும்..நான் தான் ஒட்டப் போறேன்.”

 

“இல்லமா இது புது வண்டி…அதனாலதான் சிவாகிட்ட சொன்னேன் யாராவது நம்பிக்கையா..கார் ஒட்டத் தெரிஞ்சவங்க கூட வந்தா நல்லயிருக்கும்னு”

 

“நாந்தான் என் கார அமெரிக்காவில ஒட்டிக்கிட்டிருந்தேன்..அங்க டிரைவரெல்லாம் வைச்சிக்க முடியாது”

 

“இல்லமா..சிவா அவங்க ஃபிரண்ட் கிட்ட ஏற்கனவேப் பேசிட்டாங்க..இப்ப வேணாம்னு சொன்னமுன்னா நல்லாயிருக்காது”

 

“சரி. நீங்க என்னிக்கு சொல்றீங்களோ அன்னிக்குப் போவலாம்”

 

“நான் சிவாதம்பி கிட்ட சொல்லிடறேன் அவங்க ஃபிரண்டுக்கு என்னிக்கு முடியுமோ அன்னிக்குப் போவலாம்ன்னு”

 

புது வண்டி டெலிவரி எடுக்க போயிகொண்டிருந்தனர் சேலத்திற்க்கு சிவாவின் காரில்.  காரின் பின்புறம் கோமதியும் சித்தப்பாவும் …முன்புறம் டிரைவருடன் அரவிந்தன்.

 

கோமதி தன்னுடன் கொண்டு வந்திருந்த லாப் டாபில் வேலைப் பார்த்து கொண்டிருந்தாள்…கவனம் முழுவதும் முன்புறம்.

 

“தம்பி நீங்கதான் வர்றீங்கனு சிவா தம்பி நேத்து சொன்னாரு..லீவுல வந்திருக்கீங்களா ஊருக்கு?”

 

“ஆமாம் மாமா.”

 

“இப்ப எந்த ஊரிலத் தம்பி இருக்கீங்க?”

 

“டெல்லில”

 

இந்த பதிலைக் கேட்டதும் கோமதி தலையை நிமிர்தி முன்புறம் பார்த்தாள் அதே சமயம் அரவிந்தன்னும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்…அவன் என்னவென்று கண்களால் கேட்க..இவள் ஒன்றுமில்லை எனத் தலை அசைத்தாள்.

 

“ரொம்பத் தொலவுல வேலைப் பார்க்கறீங்க..முன்னாடி ஹோசுரிலதான பார்த்துகிட்டிருந்தீங்க?”

 

“அது பிரைவேட் மாமா..இது அரசாங்க வேலை.”

 

“அப்ப அப்பா, அம்மாவ கூட்டிகிட்டுப் போயிடுங்க உங்ககூட..இங்க தனியா இருந்து கஷ்டப்படறாங்க.”

 

“எனக்கு ஊர் ஊரா மாத்தல் ஆகற வேலை.. அவங்களுக்குச் சரிப்படாது…அதுவுமில்லாம அப்பா கடைய விட்டு வர மாட்டாரு..அவசரத்துக்கு அண்ணன் வந்து பார்த்துபாரு தர்மபுரிலேர்ந்து”

 

“இந்த காலத்தில பசங்கலெல்லாம் வெளியேப் படிக்கப் போறாங்க..அப்பறம் அங்கையே வேலையத் தேடிகிட்டு இருந்திடறாங்க..யாரும் ஊருக்குத் திரும்பி வர்றதில்ல..கோமதிதான் இனிமே அமெரிக்கா வேண்டாம் இங்கையே இருக்கேன் வந்திடுச்சு” என்றார்.

 

சித்தப்பா சொன்னதைக் கேட்டவுடன், அரவிந்தன் கோமதியைப் பார்த்து…

 

“நீங்க திரும்பிப் போகப் போகறதில்லையா யு.எஸ்க்கு” என்று கேட்டான்.

 

“இல்ல. இனிமே இங்கதான்” என்றாள்.

 

“இங்க நம்ம வீட்லதான் இருக்கபோவது..பெங்களூர் போகவேண்டிவரும்னுதான் வண்டி வாங்கறா” என்று இடமறித்தார் சித்தப்பா.

 

“பெங்களூருக்குப் போவேன் பிராஜக்ட் விஷயமா..அதனாலதான் சொந்தமா வண்டி வச்சிகிட்டா நல்லதுன்னு நினைச்சேன்.” என்றாள் கோமதியும்.

 

“எத்தனை முறை போவீங்க?” என்று கேட்டான் அரவிந்தன்.

 

“இன்னும் பிராஜக்ட் டிசைட் ஆகல..அது ஆன அப்பறம்தான் தெரியும்.. எத்தனைத் தடவைப் போகணும்னு.”

 

“அப்ப அத பார்த்துகிட்டு வண்டி வாங்கியிருக்கலாமில்ல”

 

“அது சரிப்படாது..என்னால அதுவரைக்கும் வெயிட் பண்ணமுடியாது…திடீர்னு பிராஜக்ட செட் ஆயிடும் அப்ப போயி இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது.”

 

“பெங்களூர் போயி திரும்பறது ஒரே நாள்ல முடியும்னா..இந்த வண்டியே யூஸ் பண்ணலாம்”

 

“சொன்னாரு சிவா..நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்..என்னோட தேவைகள் வேற” என்றாள் கோமதி.

 

“டீலர்கிட்ட போன்  பண்ணிடுங்க நாம இன்னும் பத்து நிமிஷத்தில அங்க வந்திடுவோம்னு..அங்க எவ்வளவு டயமெடுக்குமனு தெரியல அதனால இந்த வண்டிய திரும்ப அனுப்பிச்சிடலாம்.. என்ன சொல்றீங்க” என்று பொதுவாகச் கேட்டான் அரவிந்தன்.

 

“ஆமாம்..இந்த வண்டிய எதுக்கு நிப்பாட்டனும்..அனுப்பிச்சிடலாம்” என்றார் சித்தப்பா.

 

கிட்டதட்ட இரண்டு மணி நேரமானது வண்டி கையில் கிடைக்க.  அரவிந்தன் சித்தப்பாவிற்க்கு எல்லா விதத்திலும் உதவியாக இருந்தான்.

 

“மும்பையில் இருக்கும்போது இதெல்லாம் செய்வதற்க்கு ஆட்கள் இருந்தார்கள்.. தவிர பவார் இருந்தான்..” என்று நினைத்துகொண்டாள் கோமதி.

 

“கோமதி…புது வண்டி..கோவிலுக்கு எடுத்திட்டுப் போவணும் முதல்ல” என்றார் சித்தப்பா.

 

“இப்பத் திறந்திருக்குமா?” என்று கேட்டாள் கோமதி.

 

“நான் இங்க கடையிலையேக் கேட்கறேன்” என்று விசாரிக்கச் சென்றார் சித்தப்பா.

 

“எதுக்கு இந்த மாடல் தேர்வு செய்ஞ்சீங்க? இதோடப் பாதுகாப்பு அம்சங்களுக்காகவா” என்று இவளைப் பார்த்து கேட்டான் அரவிந்தன்.

 

“எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று ஆச்சிர்யப்பட்டாள் கோமதி.

 

“நீங்க வெளித்தோற்றத்தில்ல விருப்பமில்லாதவங்க அதனான்னுலதான் வண்டிக்கு எது முக்கியமோ அதப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கீங்க…இன்னும் என்னக் கண்டுபிடிச்சேன்னு, தெரிஞ்சுக்கணுமா?”

 

“சொல்லுங்க”

 

“நீங்க வெறும் யு.எஸ்லதான் கார் ஓட்டியிருக்கீங்க இங்க இந்தியாவில வண்டி ஒட்டிப் பழக்கமேயில்லன்னு ஆனா இந்தியன் டிரைவிங்க் லைசன்ஸ் மட்டும் வச்சிருக்கீங்க..கரெக்டா?”

 

“எப்படி.. எப்படி தெரிஞ்சுது”

 

“ஸிம்பிள்..பதினெட்டு வயசுக்கு மேல இங்க எல்லாரும் முதல்லப் பண்ணிக்கறது டிரைவிங் லைசன்ஸ்தான் அத நீங்களும் பண்ணியிருப்பீங்கன்னு..நீங்களும் உங்க சித்தப்பாவும் பின்னாடி உட்கார்ந்து வந்தீங்க..உங்க இரண்டு பேர்கிட்டியும் ஆறு வித்தியாசங்கள் இல்ல ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தது..அதுல ஒண்ணு நீங்க டிரைவருக்கு பழக்கப்பட்டவங்க..அவருயில்லன்னு.. சரியா”

 

“ரொம்பச் சரி…எனக்குத் தனி வண்டி, டிரைவர் எல்லாம் இருந்தாங்க..நானும் ஒண்ணுக் கண்டுபிடிச்சேன்..தெரிஞ்சுக்கணுமா?”

 

“வேணாம்.” என்று பதில்ளலித்தபடி சென்று வரவேற்பில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்…பின் தன் போனில் கவனமாகிப்போனான்.

 

கோமதி அவனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தாள்..பின் அவளும் அவனருகே சென்று அமர்ந்து கொண்டாள்.  சிறிது நேரத்திறக்கு பின் தன் போனிலிருந்து தலை உயர்த்திக் கோமதியைப் பார்த்தான்..அப்பொழுதும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோமதி..

 

“என்ன?” என்று கேட்டான் அவளைப் பார்த்து.

 

“ஏன் வேணாம்னு சொல்றீங்க?”

 

“எனக்குத் தெரியாதத ஒண்ணும் சொல்லப் போறதில்ல நீங்க”

 

“என்னைப் பத்தி மட்டும் நீங்க எனக்குத் தெரிஞ்சததானேச் சொன்னீங்க.”

 

“நீங்களும் வேணாம்னு சொல்லவேண்டியதுதானே.” என்றான்.

 

“நீங்க ஏமாதறீங்க..நான் ஒத்துக்க மாட்டேன்.”

 

கோமதி அவன் விரிப்பது வலை என்று உணராமல் தன் வாயாலையே அதில் விழுந்தாள்.

 

“சரி..நீங்க என்ன சொல்லணுமோ சொல்லுங்க..ஆனா அதுக்கு அப்பறம் நான் சொல்றதுக்கு ஒத்துக்கணும்” என்று டீல் பேசினான் அரவிந்தன்.

 

“சரி ஒப்புக்கறேன்..இப்ப நாம்ப வந்த வண்டி உங்களோடது..சிவா சொன்ன வண்டி ஒனர்..ஊர் ஊராப் போயி வேலைப் பார்க்கற ஃபிரண்ட்..நீங்கதான்..கரெக்டா?” என்று கேட்டாள்.

 

“வாவ்” என்றான் அரவிந்தன்.

 

“இப்ப நான் சொல்றதக் கேளுங்க.. இது உங்களுக்கானப் பிரத்யேகமான ஆஃபர்..நான் இங்க இருக்கற வரைக்கும் உங்களுக்கு டிரைவ் பண்றேன்..ஆனா நீங்க பின்னாடி உட்கார முடியாது..என் பக்கத்தில முன்னாடிதான் உட்காரணும்..என்ன ஆஃபர் அக்ஸெப்டடா?” என்று கேட்டான்.

 

“டீல்” என்றாள் ஆர்வத்துடன்.