அத்தியாயம் – 5
மழைச்சாரல் விட்டுச்சென்ற சுவடுகள் மண்வாசனையாய் நாசிக்குள் நுழைந்திட ப்ரணித்தாவின் இமைமேடுகள் தாமாக முத்தமிட்டுக்கொண்டது..!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் உணர்ந்திடும் மண்வாசம் அவளை பள்ளி காலத்திற்குள் இழுத்துச்செல்ல இதழ் பிரிக்காத புன்னகை அவளிடம்..!!
அப்பாவும் அரூபாவும் சின்னதாக வாக் போயிருக்க அவள் மட்டுமே வீட்டினில்..!!
என்றுமே தனிமையில் அத்தனை பிடித்தம் இருந்ததில்லை அவளுக்கு..!! ஆனால் இன்று ஏனோ அது இனிமையாய்..!!
காரணம்.. அழையா விருந்தாளியாய் கண்முன் தோன்றி மறைந்த அஷ்வினின் முகம்..!!
அஷ்வின்..!! அவளது நலம்விரும்பிகளுள் ஒருவன்..!! அவளை விரும்புபவன்..!! அனைத்து சூழ்நிலைகளிலும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பவன்..!!
அவனது அன்பு பாசம் எல்லாம் எல்லாம் சரிதான்.. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அவளுக்கும் அவன் மீது விருப்பம்தான்..!! இப்பொழுது என்றில்லை பள்ளிக்காலம் முதலே அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அப்பொழுது காதல் என்றெல்லாம் ஒன்றுமில்லை.. அ வெரி பெஸ்ட் பிரென்ட் ஆப் மைன் என்ற எண்ணம் மட்டும்..!!
கல்லூரியில் படிக்கும்பொழுதுதான் அவன் மீது விருப்பம் தோன்றியது அவளுக்கு.. அதுவும் ஒருமுறை அவளது கல்லூரித்தோழி ஒருத்தி உனக்கு யாரை மாதிரி ஹஸ்பன்ட் வேண்டும் என்று கேட்டபொழுது, “அப்படியெல்லாம் நான் யோசிச்சத்தில்லை..”, என்று இதழ்கள் உச்சரிக்க.. அவளது மனமோ இன்ஸ்ட்டன்ட்டாக, “அஷ்வினை மாதிரி ஒருத்தன் இருந்தால் நல்லா இருக்கும்ல..??”, அவளே உணராமல் கேள்வி எழுப்பியது..!!
அவன் தன் மனதில் இருக்கிறான் என்று உணர்ந்த அந்த நொடி இப்பொழுது நினைத்தாலும் தித்திப்பாய்..!!
பள்ளிக்காலம் முடிந்தவுடன் அவரவர் வழிகளில் சென்றிருக்க.. இவள் மட்டும் அஷ்வினின் நினைவுகளை சுமந்தபடி..!!
ஏதோ ஒரு குருட்டுநம்பிக்கை.. சினிமாத்தனமாக.. தன்னைத்தேடி அவன் வருவான் என..!!
அவன் எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் அவனும் வந்தான் தான்.. ஆனால் அவளுக்குத்தான் அவனைப் பார்க்கவே பிடிக்கலை.. பிடிக்கவில்லை என்பதைவிட அந்த நிலைமையில் அவன் தன்னைக்காண்பதை விரும்பவில்லை அவள்..!!
அந்நேரம் அனைவரிடமும் அனைத்திலிருந்தும் விடுபடும் தீர்மானம் மட்டுமே அவளிடம்..!! அதில் அத்தனை தீவிரம் அவளிடத்தில்..!!
அதற்கான முயற்சிகள் பலவும் யாரும் அறியாமல் எடுத்தாள்தான்.. தூக்க மாத்திரை சாப்பிடுவது.. மணிக்கட்டை அறுப்பது.. தூக்கில் தொங்கும் முயற்சி என அனைத்தையும் முயன்று பார்த்துவிட்டாள்.. ம்ஹூம்.. அனைத்திலும் படுதோல்வியே அவளுக்கு..!!
ஒவ்வொரு முறையும் அவளது முயற்சிகள் அனைத்தையும் உடைத்தவன் சாட்சாத் அஷ்வினே..!!
எப்படித்தான் தெரிந்துகொள்வானோ அவன்.. பிடிக்கவில்லை விருப்பமில்லை என்று அவள் துரத்தியடித்தும் சரியாக வந்துவிடுவான் அவளிடம்..!!
அந்த இரண்டு வருடங்கள் மட்டும் தனது வாழ்வில் குறுக்கிடவில்லை என்றால் கண்டிப்பாக இந்நேரம் அவள் வாழ்க்கை அவனோடுதான்.. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருந்திருக்காது..!!
அவன் அவளைத் தேடி வரவில்லை என்றபொழுதும் அவளே அவனை தேடிச் சென்றிருப்பாள்..!! அவனைத் தேடித்தரத்தான் அவளது இருநபர் ராட்சசப்படை இருக்கிறதே..!! ஒரு போன்க்கால் போதும்.. அஷ்வினின் ஏ டூ செட் இன்பார்மேஷனை அறிந்துகொள்ள..!!
அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலின் ஆட்டம் சட்டென நின்றுபோக அவளது மனதின் ஆட்டமும் நின்றுபோனது..!!
யாரோ நிறுத்திவிட்டிருந்தனர் அதனை..!!
“யாரடா அது..??”, என்பதாய் அவள் பின்னால் திரும்பிட கண்களில் குறும்புகள் நடனமாட அவளைப் பார்த்து சிரித்தபடி பரணி..!!
“BUNNY.. FUNNY..”, இன்ஸ்டன்ட்டாய் ஊஞ்சலைவிட்டு குதித்திருந்தாள் ப்ரணி.. அவனைக்கண்ட மகிழ்ச்சியில்..!!
“ஹே.. என்னது..??”, ப்ரணியின் BUNNY.. FUNNY.. யில் அவனது முகம் முறைப்பை தத்தெடுத்துக்கொள்ள..
“ஒரு ப்ளோல வந்திருச்சுடா..”, சிரிப்புடன் மொழிந்தவள் குளிரில் லேசாக அவனது பற்கள் தந்தியடிப்பதைக் கண்டு, “டைப் அடிக்கறா நீ..”, என்று லேசாக தலையில் அடித்துக்கொண்டவள் தந்தையின் கம்பளியை எடுத்து அவன்மீது போட.. சற்று நேரத்திற்கெல்லாம் மட்டுப்பட்டது அவனின் நடுக்கம்..!!
“ஹில் ஸ்டேஷனுக்குப் போறோமே ஒரு ஸ்வெட்டர் எடுத்துப்போட்டுட்டு வரணும்னு அறிவு வேணாம்..??”
“இப்படிக் குளிரும்னு எனக்கு எப்படித் தெரியும்..?? பெருசாக் குளிராது மேனேஜ் பண்ணிக்கலாம்னு வந்துட்டேன்..”, என்றவன் தானாகவே கிட்சனிற்குள் நுழைந்து தேநீர் தயாரிக்கத் துவங்க..
“எனக்கும் ஸ்ட்ராங்காடா..”, சவுண்ட் மட்டும் கொடுத்தாள் ப்பிரணீ…
“எல்லாம் என் நேரம்..”, என்று முணுமுணுத்தவன் மும்முரமாக தேநீர் தயாரிக்க..
அவசரமாய் ஒலித்தது வீட்டுத் தொலைப்பேசி..!!
இந்நேரத்துல யாரு கூப்பிடறாங்க..?? யோசனையுடன் ப்ரணித்தா போனை எடுக்க.. அவள் ஹலோ சொல்வதற்கு முன்னால் அதிர்ந்தது விஷ்ணுவின் குரல்..!!
“ஹே ரூபா.. போன் எதுக்கு ஆப் பண்ணி வெச்சிருக்க..?? அறிவில்ல உனக்கு.. எமெர்ஜென்சி டைம் அப்ப எப்படி கான்டாக்ட் பண்ணுவதாம்..”, அவளைப் பேசவிடாமல் பொரிந்து தள்ளியவன், “இங்க ஹாஸ்ப்பிடல்ல எமெர்ஜென்சி.. ஒரு குழந்தைக்கு.. நம்ம ப்ரீத்தியோட கிளாஸ் மிஸ் பொண்ணு.. பயத்துல பிக்ஸ் வந்திருச்சு அவளுக்கு.. ஹராஸ்மெண்ட்னு நினைக்கறேன்.. அவ ஜென்ட்ஸைப் பார்த்தா ரொம்ப பயப்படறா.. சீக்கிரம் வா நீ..”, என்றவன் போனைக் கட் செய்துவிட..
அவனது ஹராஸ்மெண்ட்டில் தொங்கிப்போய் நின்றுவிட்டது ப்ரணியின் உள்ளம்..!!
தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தவன் இடையில் இடையிட்டவள்.. அப்படியே கேசை ஆப் செய்துவிட்டு.. அவனை இழுத்துக்கொண்டு வெளியே வர.. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு..
“ப்ரிணீ.. என்னாச்சு..?? ஏன் என்னை இப்படி இழுத்துட்டு வர..??”, அவனுக்குள்ளும் அவளது பதற்றம்..
“ஹாஸ்ப்பிடல்.. எமெர்ஜென்சி.. அரூபாவைக் கூட்டிட்டுப் போகனும் அங்கே..”, கோர்வையாக சொல்ல முடியாமல் தடுமாற.. அவளது உணர்வுகளைப் படித்தாற்போன்று விரைந்து செயல்பட்டான் அவன்..!!
ஜனனத்தில் என்றும் இல்லாத டென்ஷனில் இருந்தான் விஷ்ணு..!!
ஒருபுறம் நித்திலாவின் கேஸ்.. மறுபுறம் மாதாந்திர செக்கப்பிற்காக ப்ரீத்தி மற்றும் சகியின் வருகை..!!
“விஷ்ணூப்பா.. இன்னைக்கு ஆல்ரெடி லீவ் போட்டுட்டுத்தான் வந்திருக்கோம் நாங்க.. நீங்க என்னடான்னா இன்னைக்கு செக்கப் வேண்டாம்னு சொல்றீங்க..”, அன்று கிளாஸ் கட்டான கடுப்பில் அவள் லேசாக சிணுங்க..
ஏற்கனவே டென்ஷனில் இருந்தவன், “இன்னைக்கு வேண்டாம்ன்னா வேண்டாம்னு அர்த்தம் ப்ரீத்தி..”, என்றிருந்தான் அவ்வளவு அழுத்தமாக..
அந்தக்குரலில் இருந்த கடினம் தானாகவே குழந்தையை சகியிடம் ஒன்றைச்செய்ய.. மானசீகமாக தன்னைத்தானே கடிந்துகொண்டவன் சகியை ஏறிட்டுப்பார்க்க.. உங்களிடம் நான் இதை எதிர்பாக்கவே இல்லை என்ற பார்வை..!!
கண்கள் இரண்டையும் மூடித் தன்னைத்தானே நிதானித்துக்கொண்டவன் இருவரின் முன்பும் மண்டியிட்டு அமர்ந்து ப்ரீத்தியின் விரல்களைப் பற்றிக்கொள்ள.. கோபத்தில் தன் விரல்களை பின்னால் இழுக்க முயற்சி செய்தாள் ப்ரீத்தி..
அதை எதிர்பார்த்தவனாக அவளது விரல்களுக்கு லேசாக அழுத்தம் கொடுத்து தன்னைப் பார்க்கவைக்க.. கண்களில் நீர் சேர்ந்திருந்தபொழுதும் அதை வெளியே விடாமல் இறுகிப்போய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்..
“ப்ரீத்தீம்மா.. விஷ்ணூப்பா சாரிடா.. ஏதோ டென்ஷன் குட்டி..”, குழந்தையின் இம்முகம் அவனை மிகவும் பலவீணப்படுத்த.. அவனொரு மனநல மருத்துவன் என்பதே அவனுக்கு மறந்துபோனது..!!
அவனுக்கு பதில் சொல்லாமல் ப்ரீத்தி மௌனத்தை பதிலாய் தத்தெடுத்துக்கொள்ள.. அவளது மௌனம் விஷ்ணுவைக் கொல்லாமல் கொல்வதாய்..!!
“பாப்பா.. நெஜமாவே ஐ ஆம் வெரி வெரி சாரிடா.. அப்பா வேணும்னே பண்ணல..”
இப்பொழுதும் அதே மௌனம் கூடவே அவனது சாரியில் லேசாக முகம் தெளிவானதுபோல்..
“இன்னும் உன் கோபம் போகலனா தோப்புக்கரணம் போடவா நான்..??”, கைகளை அவளிடமிருந்து பிரித்துக்கொண்டு தனது காதுகளைப் பிடிக்க..
“ப்பா.. வேணாம்..”, தட்டிவிட்டிருந்தாள் ப்ரீத்தி..
“அப்ப பாப்பா என்னை மன்னிச்சாச்சா..?? ஹ்ம்..??”
“ம்ஹூம்..”, வேகமாக கணக்குப்போட்டது ப்ரீத்தியின் மூளை..
“ஒரு ரெட் வெல்வெட்..”, இரண்டு விரல்களை அவளிடம் நீட்டி அவன் டீல் பேசிட..
“ஹ்ம்ம்.. டீல் அக்ஸப்ட்டட் விஷ்ணூப்பா..”, அவனது விரல்களைப் பிடித்தபடி குழந்தை சிரித்திட.. அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் ஒரு சுற்று சுற்றியபடி இறக்கிவிட..
அவ்வளவு நேரம் அந்த அறையில் முகாமிட்டுக்கொண்டிருந்த இறுக்கங்கள் எல்லாம் காற்றில் கலந்துவிட்டதுபோல்..!!
தான் வேலையை முடிக்கும்வரை ப்ரீத்தியையும் சகியையும் தனது அறையில் ஓய்வெடுக்கச் சொன்னவன் நித்திலாவைப் பார்க்கச் செல்ல..
ஐசியூவின் முன்பு நிலைகொள்ளாமல் அழுதபடி அமர்ந்திருந்தார் சுதா..!! காலையிலிருந்து உண்ணாதது வேறு அவரை சோர்வடையச் செய்திருக்க நிர்கதியான தோற்றம் அவரிடத்தில்..!!
நித்திலாவைக் காணத்துடித்து அலைப்பாய்ந்துகொண்டிருந்தது அவரது கண்கள்..!!
அவரை நெருங்கியவன், “சுதா மிஸ்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நித்திலா நார்மல் வார்டுக்கு மாத்திருவாங்க.. அதுக்கு அப்புறம்தான் பாப்பாவைப் பார்க்கமுடியும் உங்களால.. அதுக்குள்ள நீங்க சாப்பிட்டு வாங்களேன்..”, கனிவாக அவன் உரைத்திட..
“எனக்குப் பசிக்கல டாக்டர்..”, என்றவரை முறைத்தவனைக்கண்டு, “நெசமாத்தான் சார்.. சுத்தமா பசி எடுக்கல எனக்கு..”, பரிதாபமாக..
இடம் வலாமாக தலையை அசைத்த விஷ்ணு வார்ட் பாயை அழைத்து ஜூஸ் வாங்கிக்கொண்டு வரச்சொல்ல..
“அதெல்லாம் வேண்….”, மீண்டும் மறுப்பாய் எதையோ சொல்லவந்தவரை இடையிட்டவன், “உங்களுக்கு பசிக்கல இல்லை மிஸ்.. பசி தெரியல..”, என்றவன் வார்ட் பாயிடம் அனுப்பி வைத்துவிட்டு, “மிஸ்.. உங்க ஹஸ்பன்ட்..??”, தயக்கமாக..
“அவ..ர்.. இப்ப எங்ககூட இல்..லை.. ஐ ஆம் அ டிவோர்சீ..”
“ஹோ.. ஐ ஆம் சாரி மிஸ்..”, என்றவன் அதற்கு மேல் கேள்விகள் ஏதும் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பாது, “நீங்க ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க மிஸ்.. பாப்பாவை ரூமுக்கு மாத்தறப்போ கூப்பிட சொல்றேன் உங்களை..”, என்று சொல்ல.. சம்மதமாக தலையசைத்த சுதா ரிசப்ஷனை நோக்கி நடக்கத்துவங்கினார்..!!
சுதாவின் விரல்கள் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு நித்திரையில் ஆழ்ந்திருந்திருக்கும் நித்திலாவின் விரல்களை வருடிக்கொடுத்தபடி இருந்தது..!!
நித்திலாவை தனி ரூமிற்கு மாற்றி அரை மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தது.. இன்னும் கண் விழிக்கவில்லை அவள்..!! ஆழ்ந்த உறக்கத்தில்.. முன்னிறவில் உறங்காததற்கு சேர்த்து உறங்கிக்கொண்டிருந்தாள் அவள்..!!
ஒருமணிநேரத்திற்குள் குழந்தை விழித்துக்கொள்வாள் என்று நர்ஸ் சொல்லியிருக்க அவளது அருகிலேயே அமர்ந்திருந்தார் சுதா..!!
ஐந்து நிமிடம் கடந்திருந்த நிலையில், “ம்மா..”, என்றபடி புரண்டது குழந்தை..
“இங்கதாண்டா அம்மா இருக்கேன்..”, என்ற சுதா அவளது தலைமுடியில் விரல்களை நுழைத்து வருடிக்கொடுக்க.. அந்த ஸ்பரிசத்தில் விழிகளை நன்றாக மூடிக்கொண்டவள் அவரது மற்றொரு கையை இறுகப்பிடித்துக்கொண்டது..!!
இன்னும் அவளை நெருங்கி அமர்ந்தவர் அவளுக்கு ஆதரவாக தனது கையில் இறுக்கத்தைக் கூட்ட, “ப்..ளீஸ்.. ண்ணா.. நா..ன்.. இ..னி.. கு..றும்..பு.. பண்ண..மாட்டே..ன்.. ப்..ளீஸ்.. ண்ணா..”, தூக்கத்தில் தெளிவில்லாமல் அழத்துவங்கியது..
“பாப்பா.. நித்திம்மா.. அழாதேடா.. அம்மா இருக்கேன்..”, அவளை சமாதானப்படுத்த முயல..
“ம்மா.. அவங்..களை.. எ..துவு..ம் செ..ய்ய.. வேண்..டாம்.. சொல்லு..ங்க.. பா..ப்பா..க்கு வலி..க்கு..து..ம்மா.. ப்ளீ..ஸ் ம்மா.. சொ..ல்லு..ங்க..”, கதறலாய் இப்பொழுது..
“குட்டி உன்னை யாரும் எதுவும் பண்ணமாட்டாங்கடா.. அம்மா உன்னோடவேதான் இருக்கேன்..”, தன் இருப்பை அவளுக்கு உணர்த்திட அவர் துடிக்க.. சுத்தமாக அது சென்று சேரவில்லை குழந்தையிடம்..
குழந்தையின் சத்தம் அதிகமானதே ஒழிய குறையவேயில்லை..
“வயி..று.. ரொம்..ப வலி..க்கு..த்து.. ப்..ளீஸ்.. ண்ணா.. விடு..ங்க..”, கதவு லேசாகத் திறந்திருந்ததால் குழந்தையின் சத்தம் வெளியே இருக்கும் நர்ஸுக்குக் கேட்க.. அவசரமாக ரூமுக்குள் எட்டிப்பார்த்தவர் குழந்தையின் நிலையைக் கண்டு விஷ்ணுவைத் தேடி அவனது அறைக்குச் செல்ல.. அங்கு ப்ரீத்தியும் சகியும் மட்டுமே..
“மேம் சார்..??”, நர்ஸ் இழுக்க..
“அவங்க கீழ ரிசெப்ஷனுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனாங்க..”, என்றவள் நர்ஸின் முகத்தில் தெரிந்த கலவரத்தில், “ஏதாவது எமர்ஜென்சியா..??”, என்று கேட்க..
“எஸ் மேம்.. ஒரு ஹராஸ்மென்ட் கேஸ் போல.. குழந்தை ரொம்பத் துடிக்குது..”, அரைகுறையாக ஒப்பித்துவிட்டு அவர் சென்றிட.. பிரம்மை பிடித்ததுபோல் நின்றுவிட்டாள் சகி..!!
-பற்றி எரியட்டும்..!! தீச்சுடர்..!!