அத்தியாயம் 3
“வி..ஷ்..ணூ..”, அரூபாவின் குரலைத்தாண்டி அழுத்தமாக ஒலித்த சகியின் குரலில் எதுவும் பேசாமல் அருகில் பூத்திருந்த பூக்களை அவன் நோட்டமிடத்துவங்க..
அப்படி ஒரு கோபம் சகிக்கு..!!
அரூபாவின் கலங்கிய முகம் வேறு சகியின் கோபத்திற்கு இன்னும் தீனிபோட..
விஷ்ணுவிற்கு முன்பு வந்து நின்றவள், “சோ.. நீங்கதான் ப்ரணீக்கா அழுதுட்டு இருக்க காரணம்.. ரைட்..??”, தீர்க்கமாக வந்து விழுந்தது கேள்வி..
“ஆமா சகி.. நான்..தான்.. நான்தான் அவளை அழவெச்சேன்..”
நான் செய்ததில் எந்தவொரு தவறில்லை என்பதுபோல் அவன் சொல்லிட..
“ப்ரணீக்கா.. என்ன பண்ணாங்க விஷ்ணூ..??”, நிதானமாகவே வெளிவந்தது சகியின் குரல்..
“கொல்லப்போறாலாம் அவ.. எல்லாரையும்.. அவ நினைக்கறதெல்லாம் நிஜ வாழ்க்கையில சாத்தியம்னு தெரியல அவளுக்கு.. ரொம்பவே அரகன்ட்டா..வைல்டா இருக்கா.. எனக்கு அதைப் பார்த்து அவ தேவையில்லாம எதுலயாவது போய் மாட்டிப்பாளான்னு பயம்.. அதான் அவளை ஸ்டாப் பண்ண அப்படி பேசினேன்.. இதுல எனக்கு தப்பு மாதிரி ஒன்னும் தெரியல..”
சகியிடம் என்றும் ஒன்றும் மறைத்ததில்லை அவன்.. எல்லாம் முகத்தில் அடித்தாற் போன்றுதான்.. பேச்சுக்கள் அனைத்தும்.. சரி தவறு எல்லாம் முகத்திற்கு நேராய் உரைத்திடுவான் அவன்.. முதல் நாள் அவளைப் பார்த்தது முதல் இன்றுவரை அப்படித்தான்..
“அதுக்கு நீங்க இதை சொல்லிருக்க வேண்டிய அவசியமில்லை..”, என்னயிருந்தாலும் அவனது வார்த்தைகள் அரூபாவை ஹர்ட் செய்திருக்குமல்லவா..??
“எனக்குத் தெரியும் சகி அது.. ப..ட்.. வேற வழி தெரியல எனக்கு.. ப்ரணிக்கு(அ)ரூபானா அவ்ளோ இஷ்டம்.. அவ ஹோல்டாகரான்னா அது இவ மட்டும்தான்.. சோ இந்த வோர்டஸ் சர்ஜரி தேவை அவளுக்கு.. லெட் ஹர் டேக் சம்டைம்.. அனலைஸ் பண்ணட்டும்.. அவ செய்யறது தப்பா சரியான்னு.. சும்மா அவரசத்துல அவனைப் பழிவாங்கறேன் இவனைப் பழிவாங்கறேன்னு இனி இருக்கர வாழ்க்கையை அழுச்சுப்பா போல.. அவளை யாரும் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்.. நான் சொன்ன வர்ட்ஸ்ல ஹர்ட்டாகி நான் ஏன் அப்படிப் பேசுனேன்னு யோசிப்பா அவ.. நல்லா யோசிக்கட்டும்.. நிதர்சனம் புரியனும் அவளுக்கு..”, என்றவனிடத்தில் தெளிவு..
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. இல்லைன்னு மறுக்கல நான்.. பட் அதுக்குன்னு அக்காவை அழவைக்கனுமா விஷ்ணு..”, மீண்டும் ஆரம்பித்தாள் அரூபா..
இப்பொழுது கொஞ்சம் எரிச்சல் பிறந்திருந்தது விஷ்ணுவிடத்தில்.. எத்தனை தடவைதான் சொல்வது இவளிடம்.. எல்லாம் ப்ரணிதாவிற்கு என்று.. புரிந்துகொள்ளவே மாட்டாள்ளா..?? ஆயாசமும் கூட..
அதை அவன் வார்த்தைகளும் அப்படியே பிரதிபலித்தது..
“நீ என்ன இன்னும் குழந்தையா ரூபா.. எத்தனைவாட்டித்தான் சொல்றது நான்..எல்லாம் அவளுக்காகத்தான்னு.. புரிஞ்சுக்கவே மாட்டியாடீ நீ..?? இங்க பாரு.. உனக்கு அவளைத் தெரியும் முன்னாலயே எனக்கு அவளைத் தெரியும்.. அவளோட ஒவ்வொறு மூமென்ட்டும்.. எல்லாமே தெரியும் எனக்கு.. உன்னவிட எனக்கு அவமேல அக்கறை இருக்கு.. எனக்கு நான் என்ன பண்றேன்னு தெரியும்.. சும்மா சும்மா.. இதை ஏன் பண்ண அதை ஏன் பண்ணன்னு அவ விஷயத்துல நீ தலையிடாத என்ன..??”, கோபம் கொப்பளித்தது விஷ்ணுவிடத்தில்..
அவனது வார்த்தைகளில் அதிர்ந்துபோன அரூபா இருவரையும் நிமிர்ந்துகூடப் பார்க்காமல் வேகமாக அகன்றுவிட..
சங்கட்டமாகிப்போய்விட்டது சகிக்கு..!!
“வி..ஷ்..ணு..”
“உனக்கும் ஏதாவது என்க்கிட்ட கேட்கனும் திட்டனும்னா.. அதைப் பண்ணிடு சகி..”, என்றவன் ஓய்ந்துபோய் காணப்பட..
இடம் வலமாக தலையசைத்தவள், “உங்களுக்கு எது நல்லது கெட்டதுன்னு நல்லாத் தெரியும் விஷ்ணு.. நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. ஐ வில் ஸ்டாண்ட் வித் யூ..”, என்றவள் அவன் தோளை லேசாக தட்டிக்கொடுக்க..
அவனது கண்கள் அவளை பிரம்மிப்பாய் பார்த்து நின்றன..!!
விஷ்ணு சொன்னதுபோலவேதான் நடந்துகொண்டிருந்தது ப்ரணிதாவின் வீட்டினில்.. யோசித்துக்கொண்டிருந்தாள் அவள்..!!
எப்படி இவர்களுக்குத் தெரியாமல் அவர்களை பழித்தீர்ப்பது என்று..
ஆம்.. பழித்தீர்க்கவே அவள் யோசித்துக்கொண்டிருந்தாள்..!!
அவ்வளவு வஞ்சம் மனதில் ஊறிப்போயிருந்தது பெண்ணுக்கு..
அவள் இழந்த அளவு அத்தனை..!!
இரண்டு வருடங்கள்..!! முழுவதுமாக எழுநூற்றி முப்பது சொச்ச நாட்கள்..!!
அந்த இருட்டறைகளில் அவள் அனுபவித்த கொடுமைகள்.. இந்நொடி நினைத்தாலும் உயிர் பறிபோவதுபோலிருந்தது அவளுக்கு..!!
அவள் உடலில் பதிந்திருக்கும் வடுக்கல் சொல்லும் அவளது கொடுமையான அந்த அனுவத்தை..
வானில் பறக்கக் காத்திருந்தவளுக்கு அப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்திடவில்லை..
ஆனால் அனைத்தும் நடந்தும் முடிந்தும் விட்டது..!!
உள்ளம் மரத்து.. உடல் மரத்து.. வெளியே மற்றவர்களுக்காக சிரித்தமுகத்துடன் கிட்டத்தட்ட பிணம்ப்போலவேதான் இன்னும் நடமாடிக்கொண்டிருக்கிறாள் ப்ரணி..
தனது அறையிலுள்ள சிறு மேஜையில் வீற்றிருந்த அன்றைய நியூஸ் பேப்பரிலிருந்த அவனது புகைப்படத்தின் மீது கிறுக்கிக்கொண்டிருந்தாள் அவள்..!!
அந்தப் புகைப்படம் விஷ்ணு அவளைப் பார்த்து சொன்ன வார்த்தைகளையெல்லாம் மறைக்கச்செய்திருந்தது..
உக்கிரம் என்ற சொல் அவளுக்காகவே படைக்கப்பட்டதுபோல் இருந்தது அவளது செய்கை..
பேனாவை இறுக்கமாக பிடித்திருந்தவளது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும் கண்களில் தீப்பொறி பறந்துகொண்டிருந்தது..
அத்தனை.. அத்தனை கோபம்.. காதை அடைத்திடும் கோபம்..
அதன் விளைவு..
நான்கு முறை ஒலித்த டோர் பெல்லின் சத்தம் அவளது காதில் விழுந்திருக்கவில்லை..
நேரம் கடக்கக் கடக்க.. டோர் உடைபடத்துவங்கியது..
உடல் ஒருநொடி தூக்கிப்போட்ட.. இறுக்கையைவிட்டு எழுந்திருந்தாள் ப்ரணீ..
கால்கள் இரண்டும் ஒன்றோடொன்று பிண்ணிக்கொள்ள.. மெதுவாய்.. மெதுமெதுவாய் மெயின் டோரை நோக்கி நகர்ந்திருந்தாள் அவள்..
அதிர்ந்துகொண்டிருந்தது வீட்டுக் கதவு..!!
“யாராம் அது..??”, கேட்கக்கூட வார்த்தைகள் வெளிவரவில்லை..
வேரூடிப்போய் அப்படியே நின்றவள்.. லேசாகத் திறந்திருந்த சாளரம் வழியே வெளியே பார்க்க.. அங்கு பதற்றமாய் நின்று கதவைத் தட்டிக்கொண்டிருந்தான் அவன்..!!
மலையிலிருந்து விழுந்திடும் நீர்வீழ்ச்சியைப்போல்.. அவசரமாய் கதவு திறந்தவள்.. அதே போர்சில் அவனைக்கட்டிக்கொள்ள..
அவளது செயலில் இரண்டடி பின்னால் சென்றவன் நிதானித்து அவளது தலையை வருடிக்கொடுத்திட..
நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ப்ரணிக்கு..
தான் பயத்தில் அவனை அனைத்திருப்பது உணர்ந்து சட்டென விலகி திணறிப்போய் நின்றுவிட.. அவளது செயல்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தவனது கண்கள் சிரித்தது..!!
“என்னடா ஆச்சு..?? ஏன் இப்படி நடுங்கற..??”, அவன் கேள்வி அவளை சென்றடைந்திருந்தபோதிலும் மௌனமே அவளிடம்..
இவனின் சொல்லலாமா வேண்டாமா என்ற பற்றிமன்றம் வேறு மனதினில்..
“என்னாச்சு நிதூ..?? நீ சைலன்ட்டா இருந்தா என்ன நினைக்கிறது நான்..??”
“ஒ..ன்னு..மில்லை.. அ..ஷு.. அஷ்..வின்..”, அவனது ‘நிதூ’வினால் தடுமாற்றம் நிரம்பிவழிய இவள் பதில் கொடுக்க.. அதில் ஏனோ இன்னும் இன்னும் ஒளிர்ந்தது அஷ்வினின் முகம்..
அதற்கு மேல் எதுவும் துறுவாது, “ஆமா.. அரூபா எங்க..?? காணோம்..??”, என்று கேட்டிட..
“அவ.. அவ கடைக்குப் போயிருக்கா.. உள்ளே வாங்க அஷ்வின்..”, என்றவள் அவனை உள்ளே அழைத்துச்சென்று அமரவைக்க..
வலப்பக்க அறையிலிருந்து எழுந்துவந்தார் மோகன்..
அவரது நடையில் ஒருவித தடுமாற்றம்.. நீ இப்பொழுது என்னைப் பிடித்துக்கொள்ளவில்லை என்றால் நான் விழுந்துவிடுவேன் என்பதாய்..
இறுக்கையிலிருந்து விரைவாய் எழுந்தவன் அவரைத் தாங்கிப்பிடித்து அமரவைக்க..
சோர்வாய் அவனிடம் புன்னகைத்தவர், “மாத்திரை போட்டேன்ப்பா.. அதான் ரொம்ப டையர்டா இருக்கு..”, என்றவர் டீப்பாயிலிருந்த நீரைப்பருகி தனது சோர்வைப்போக்க முயற்சித்தவர், “வந்து ரொம்ப நேரம் ஆகுதோ..??”, என்ன நடந்துமுடிந்தது என்பது தெரியாமல் கேட்க..
அவரை விட்டுவிட்டு அஷ்வின் ப்ரணியைப் பார்க்க.. கலங்கிக்கிடந்தது அவளது கண்கள்..
அதைக் காணவே சஹித்திடவில்லை அஷ்வினுக்கு..
“லூசு சும்மா பொசுக்குப் பொசுக்குனு எல்லாத்துக்கும் அழுகைதான்.. கொஞ்சமாவது தைரியமா இருக்கவேண்டாமா..??”, இப்படித்தான் நினைக்கத்தோன்றியது அவனுக்கு.. இன்னும் அவள் திட்டங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை அவனுக்கு..
அவளை ஒரு முறைப்புடன் பார்த்து அவன் சைகை செய்ய.. கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டவள் தேநீர் தயாரிக்க கிட்சனுக்குள் சென்றிட..
“ப்ரணியை கல்யாணம் பண்ணிக்கறீங்களா அஷ்வின்..??”, அங்கு நடந்த நாடகத்தைக் கண்டுகொண்டவர் மனதில் பட்டதை எதுவும் யோசிக்காமல் தவிப்புடன் இறஞ்சிட..
இளையவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி..!!
கொஞ்சம் திக்குமுக்காடிப் போன அஷ்வின் தனக்கு சம்மதம் என்பதாய் அவரது கைகளைப் பிடித்து அழுத்திக்கொடுக்க.. தனது சோர்வையும் மீறி புன்னகைத்தார் மோகன்..!!
“ரொம்ப சந்தோஷம்ப்பா.. எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு..இவளை எப்படி கரைசேர்க்கறதுனு ரொம்ப கவலைப்பட்டேன்.. இனி எனக்கு அந்தக் கவலை அவசியமில்லை..”, அவனிடம் அவர் நெகிழ்ந்துகொண்டிருக்க..
“அ..ப்..பா..”, ஸ்திரமாய்.. மிக அழுத்தமாய் அவரை தடுத்தது ப்ரணியின் குரல்..
“அஷ்வின் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாறுமா..”, மிகவும் சந்தோஷமாய் அவளது குரலின் பேதம் புரியாது அவர் சொல்ல..
“போதும்ப்பா.. நிறுத்துங்க ப்ளீஸ்..”, கைகளால் சைகை செய்து இவள் சொல்லிட..
ஒன்றும் புரியாமல் கொஞ்சம் ஸ்டன்னாகி குழந்தையைப் போல் அவர் அவளைப் பார்க்க..
“ப்ர..ணி..தா.. அப்பாவை எதுக்கு அதட்டற நீ இப்போ..??”, கோபமாக கேட்டிருந்தான் அஷ்வின்..
“நீங்க இதுல தலையிடாதீங்க அஷ்வின்..”, அவனையும் அதட்டியவள்..தந்தையைப் பார்த்து, “நான் உங்க்ககிட்ட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கேட்டேன்னா..??”, கடுமையாகவே..
“இல்ல..ம்மா.. அது.. வந்து..”
“வந்து போய் எல்லாம் ஒன்னுமில்லை.. எத்தனை தடவை சொல்றது நான்..எனக்கு கல்யாணம் வேண்டாம்னு.. எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்குப் புரியாதா..??”
“பாப்பா.. என்னடாம்மா பேசற நீ..?? உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கனும்னு ஆசையிருக்கக் கூடாதா எனக்கு..??”
“கூடாதுப்பா.. கண்டிப்பா அந்த ஆசை இருக்கவே கூடாது.. ஏன்னா நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கற மனநிலையில இல்லை.. விட்டுப்போச்சு எனக்கு.. எல்லாமே.. தயவுசெஞ்சு யாரும் இதைப்பத்திப் பேசாதீங்க.. எனக்கு ரொம்ப ஹர்ட்டாகுது..”, என்றவள் அஷ்வினை ஒருநொடி தயக்கமாக பார்த்துவிட்டு உள்ளே சென்று கதவை அடைத்துக்கொள்ள..
அடிபட்டுத்தான் போனது அஷ்வினுக்கு.. அதை அவனது முகமும் பிரதிபலித்திட..
“அஷ்..வின்.. சாரிப்பா.. இவ இப்படியெல்லாம் பேசுவான்னு நினைக்கல நான்.. அவக்கிட்ட பேசறேன் நான்..”, மோகன் இவனை சமாதானப்படுத்த முயற்சிக்க..
“வேண்டாம் அங்கிள்.. அவ ரொமபவே ஹர்ட்டாகியிருக்கா.. தெரியும் எனக்கு.. அவளுக்கு இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுத்திருக்கனும்.. அவசரப்பட்டிருக்கக்கூடாது..”, அவளுக்கு சப்போர்ட்டாக இப்பொழுதும் அவன் பேச.. நெகிழ்ந்துதான் போனார் மோகன்..
அதைக்கண்டுகொள்ளாதவனாக, “ஓகே அங்கிள்.. எனக்குக் கொஞ்சம் வெளியில வேலை இருக்கு.. கிளம்பறேன்..”, என்றவன் விடைபெற்றுச் செல்ல..
அவன் போகும் திசையையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மோகன்..!!
குறிஞ்சி மலைப்பாதையில் மிதமான வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தது பரணியின் ஸ்கோடா ராபிட்..!!
தாத்தாவின் சொல்லை மதித்து அவளை அழைத்துவரச் சென்றுகொண்டிருந்தான் அவன்..!!
நம்பிக்கை என்பதை சுத்தமாக துடைத்தெரிந்துவிட்டுத்தான் பயணத்தைத் துவங்கியிருந்தான் அவன்..
காரணம்..!!
அவள் மீதிருக்கும் நம்பிக்கை அப்படி..!! அவள் தன்னுடன் வர சம்மதிக்கமாட்டாள் என்ற நம்பிக்கை..!!
இருந்தும் மனதில் எங்கோ ஒரு மூலையில் எப்படியாவது அவளை அழைத்துச் சென்றிட வேண்டும் என்று மனது உந்தாமல் இல்லை.. அதில் கொஞ்சமே கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்தது அவனுக்கு..
வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அதனை அவன்..!!
இறுக்கமாக இருப்பதுபோல் அவன் பாவனை செய்துகொண்டிருந்தான்..!!
அவன் செயல்கள் யாவும் அவனுக்கே சிரிப்பை வரவழைக்க ட்ரை செய்தாலும்.. அந்த முகமூடியைக் கழட்ட விரும்பவில்லை அவன்..
மாசற்ற பாசத்தால் நின்
மானசீகமாய் பிடித்துக்கொண்டாய்
இதயம் தன்னில் அகலாத
இடத்தினை தானே..
தமயனவன் தளர்கையில்
தாங்குபவளும் தாயானவளும்
தனிமையுணர்வினை
தகர்த்தெறிபவளும் நீ தானே..
உன்னிடம் சரணடைந்து
உள்ளத்தினை தேற்றிடவே
உருகும் சிறு பிள்ளையாய்
உணர்கிறேன் நானே..
“சிஸ்” என்ற அடைமொழியுடன் பளிச்சென ஒளிர்ந்தது பரணியின் செல்போன்..!!
-பற்றி எரியட்டும்..!! தீச்சுடர்..!!