அத்தியாயம் 1
” நான் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு…நல்லா என்ஜாய் பண்ணுங்க…டாடா…”என்று விடைபெறும் குரலில் கூறினாள் சுருதி…
“அக்கா லாஸ்ட் வரைக்கும் உங்க பேரை சொல்லாம போறீங்களே…இதெல்லாம் நியாயமா தர்மமா…”என்று ரயிலில் அந்த பெர்த்தில் இருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவன் சலித்துக்கொண்டான்…
“உன்மேல அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை மச்சி…அவங்க மதுரைல ஏறுன உடனே நீ விட்ட ஜொல்லுல பயந்துபோய் எடுத்த எடுப்பிலே பெரும் சொல்லாம ஊரும் சொல்லாம நான் ஒரு டீச்சர்…எனக்கு வயசு 23 சொன்னாங்களே டா..”என்று சுருதியின் பெயரை கேட்டவனுடைய தோழி அவனை வாரினாள்…
இப்டி இவர்கள் கூறும் அக்கா தான் நம் கதையின் கதாநாயகி சுருதி…இவர்கள் இப்டி வழியும் அளவிற்கெல்லாம் அவள் ஒன்றும் அப்டி ஆளை அடித்து புரட்டி போடும் அழகியெல்லாம் இல்லை… கேர்ள் டு நெக்ஸ்ட் டோர் என்பார்களே அது போன்று சாதாரண அழகி தான்…ஆனால் நூறு அழகிகளுக்கு மத்தியில் இருந்தாலும் இவள் நம்மை கவர்வதற்கான காரணம் அந்த தெத்துபல் சிரிப்பு தான்…புன்னகை இளவரசி என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சியான புன்னகையை உடையவள்…
ஐந்தேகால் அடி உயரத்தில்….மாநிறத்திற்கும் கொஞ்சம் கூடுதலான நிறத்தில் …துறுதுறு கண்களுடன்…தோள்வரை மட்டுமே புரளும் கூந்தலுடன்… வாடாபுன்னகையுடன் இவர்கள் பேசுவதை கேட்டவாறு தன் பயணப்பொதிகளை எடுத்துக்கொண்டிருந்தாள் சுருதி…
“ஹா ஹா …அப்டிலாம் ஒன்னும் இல்லை…என் பெயர் சுருதி….சரி ட்ரெயின் ஸ்டாப் ஆயிருச்சு நான் போயிட்டு வரேன்….டாடா…”என்று சிரித்தவாறு இரயிலை விட்டு உதகைமண்டல ஊராட்சியில் இறங்கினாள் சுருதி….
பயண பொதிகளை எடுத்துக்கொண்டு அவள் கவனமாக சுற்றுப்புற சூழலை கவனிக்காமல் தன் கவச குண்டலமான கைபேசியில் வாட்ஸ்ஆப்பில் “I AM BACK ….”என்ற ஆங்கில பாடலை ஸ்டேட்ஸ்சில் பதிவேற்றிக்கொண்டிருந்தாள்…
அப்பொழுது அவளை கடந்து சென்ற இருபெண்கள் பேசி சென்றது அவள் செவி வழி நுழைந்து மூளையின் உட்சென்று சுற்றுப்புறத்தை கவனிக்க வைத்தது…
“ராஜமௌலி மட்டும் பிரபாஸ பார்க்கறதுக்கு முன்னாடி இவனை பார்த்து இருந்தா இவன் தாண்டி பாகுபலி படத்துல ஹீரோவா நடிச்சுருப்பான்…என்ன உசரம்…என்ன உடம்பு டி…என்ன ஆளு தான் கொஞ்சம் கருப்பா போய்ட்டான்…”
வேகமாக தன் சுற்றுப்புறம் முழுவதையும் தன் விழி என்னும் ரேசரால் அலசி ஆராய்ந்த சுருதியின் விழிகள் ஒரு இடத்தில் முழுவதும் குவியமாகியது…
அங்கு தன் நீண்ட நெடிய 6 அடி 4 அங்குல உயரத்தால் தன்னை சுற்றிருப்பவர்கள் அனைவரையும் குள்ளமாக்கி கொண்டு நின்றிருந்தான் செல்வகுமார்…
செல்வகுமார் யாரென்றால் நம் கதையின் நாயகன் ஜெயக்குமாரின் உடன்பிறப்பு…அதாகப்பட்டது நம் கதாநாயகியின் அத்தைமகன்…அதைவிட சுருதியின் நெருங்கிய தோழன்… இருவரும் ஒரே வயதுடையவர்கள்…இல்லை இல்லை சுருதியை விட மூன்று மாதங்கள் இளையவன் இந்த நெடுமாறன் சாரி இந்த செல்வகுமார்…
“டேய் கவாயா மாமா…”என்று அழைத்துக்கொண்டு வேகமாக அவனை நோக்கி ஓடினாள் சுருதி…
அது என்னடா கவாயா மாமா என்று தானே யோசிக்கிறீங்க…அம்மணி சின்ன வாண்டாக இருக்கும் பொழுது இந்த ர எழுத்தெல்லாம் வாய்க்குள்ளே நுழையாது போனதால் கருவாயன் கவாயா ஆகிப்போனான்…அதுவே இன்று வரை தொடர்கதையும் ஆகிப்போனது…
நீ போட்டு இருக்க stilettos தடுக்கி கீழே விழுந்துராதே மா…அப்புறம் என் வருங்கால மனைவியே ஏன் டா கீழே தள்ளி விட்டேனு சொல்லி என் அண்ணன் என்னை அடிக்க போறான்…“ அவன் அப்படி கூறிக்கொண்டிருக்கும் போதே சுருதியின் நீண்ட ஹீல்ஸ் பிரட்டி விட்டு ஆஆ என்ற அலறலுடன் ஒரு கால் மடங்கி சுருதி விழுவதற்கு முன் பின்னிருந்து ஒரு கை அவளை பிடித்திருந்தது…
ஸ்லோவ் மோஷனில் திரும்பிய சுருதி தன்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய அந்த கலியுக கண்ணனை பார்த்தவள் வலியையும் மறந்து சிரித்தாள்…ஏனெனில் அவளை காப்பாற்றியது அவளின் சித்தப்பா மகள் அவந்திகா…(ஹீரோனு நீங்க நினைச்சு இருந்தா கம்பெனி பொறுப்பாகாது மக்களே…இப்டி ஒரு சம்பவம் நடந்து இருந்தா நம்ம ஹீரோ கீழே விழுக விட்டு சிரிச்சுருப்பார்…)
அதற்குள் சம்பவ இடத்தை நெருங்கிய செல்வகுமார் “நல்லவேளை பிடிச்ச டி…இல்லாட்டி சுருதி பூசணிக்காய் மாதிரி தெறிச்சு இருப்பாள்…”
அவந்திகா சிரித்துக்கொண்டே”சும்மா இரு டா நாயே…நீ வா அக்கா…”என்று மெதுவாக அவளை ஒரு ஓரமாக அழைத்து சென்று அமரவைத்தாள்…
“ஏன் டா நாயே நா வலில இருக்கேன் நீ சிரிக்குறியா..”என்று அந்த வலியிலும் செல்வாவை மொத்தி எடுத்தாள்…
“ஏ…நீ என்ன இப்டி அடிக்குற…வலிக்குது பக்கி…எங்க அண்ணன் பாவம்…உன்கிட்ட இப்டி அடிவாங்கி சாகபோறானே…”என்று கூறிய செல்வாவை அதுவரை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த இருபெண்களின் சிரிப்பும் உதட்டிலியே உறைந்தது…
தன் தடுமாற்றத்தை மறைத்தவாறு சுருதியின் கால்லை குனிந்து பார்க்க ஆரம்பித்திருந்தாள் அவந்திகா…
அவந்திகா இவர்கள் இருவருக்கும் ஒரு வருடம் இளையவள்…மதுரையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நான்காம் வருடம் படித்து கொண்டிருந்தாள்…உடைத்த கோதுமை நிறத்தில்…நீண்ட கருங் கூந்தலுடன்…பெண்களின் சராசரி உயரத்தை விட சற்று அதிக உயரத்துடன் அழகாக இருப்பாள்…அவளது முகத்தில் எப்பொழுதும் ஒரு அமைதி இருக்கும்….
“ஸ்ப்ரைன் தான்…பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை…எதுக்கும் பக்கத்துல இருக்க hospital காமிச்சுட்டு போவோம்…”என்றவாறு எழுந்து நின்றாள்…
“இனிமே இந்த மாதிரி ஹீல்ஸ் எல்லாம் போடாதே பக்கி “என்று கூறியவாறே சுருதியை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு சென்றான் செல்வகுமார்…அவந்திகாவும் ஏதோ யோசித்தவாறு அவர்கள் பின் சென்றாள்…
“எப்ப சென்னைல இருந்து வந்த…மதுரைக்கு போகாம நேரா இங்கே வந்துட்டியா…” என்று நடந்துக்கொண்டே செல்வாவிடம் விசாரித்தாள் சுருதி…
“அடியே…நா சென்னைல இருந்து வந்து ஒன் வீக் ஆச்சு…இன்னைக்கு மோர்னிங் தான் இங்கே வந்தேன்…”
“பாவி சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேன்ல…”
“ஓடி போயிரு…அடிச்சுற போறேன்…4 மாசமா என் போனே அட்டென்ட் பண்ணியா நீ…”
“இல்லை டா…அங்கே ரொம்ப முக்கியமான ஒர்க் அதான்…உன்னை பார்த்த என் உயிர் நாடி நரம்பு அணு செல் எல்லாத்திலையும் நீ வர ஆரம்பிச்சுருவா அதான் உன் கூட பேசல…”
சுருதி கடந்த 4 மாதங்களாக மதுரையில் உள்ள ஜெயராம் பள்ளியில் ஒரு போட்டிக்கான பொறுப்பாசிரியராக சென்றிருந்தாள்…போட்டி இனிதே முடிந்து அதில் இவள் பயிற்றுவித்த மாணவர்களும் வெற்றிபெற்றிருந்தனர்…இன்னும் ஒருவாரத்தில் சுருதிக்கு தன் அத்தை மகனான ஜெயக்குமார் உடன் நிச்சயதார்த்தம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கூறியிருந்தனர்…அந்த நிச்சியதாதார்த்தம் நடக்க கூடாது என்பதற்காகவே அடித்து பிடித்து மதுரையில் இருந்து ஓடி வந்திருந்தாள் சுருதி…
“எப்படி இவ்வளவு வலியிலும் உன்னால இப்டி பேசிட்டு வரமுடியுது…வாய்மூடிட்டு கொஞ்ச நேரத்துக்கு அமைதியா வா…அவந்தி இவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் பவர் இருக்கானு ஆராய்ச்சி பண்ணி பாரு டி …என்ன ஆனாலும் வாய் மட்டும் மூடவே மாட்டேனுது…”என்று சுருதியிடம் ஆரம்பித்து அவந்திகாவிடம் முடித்தான்…
ஆனால் அவந்திகா தன்னை சுற்றி நடக்கும் எதிலும் கவனம் செலுத்தாமல் அமைதியாகவே வந்தாள்…
“முருகா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகமா இருக்கு…ஒன்னு பேசியே கொல்லுது…இன்னொன்னு பேசாமயே கொல்லுது… எங்க மாமாங்க இதுகளே எங்கிருந்து பிடிச்சுட்டு வந்தாங்கனு தெரிலையே…”
என்று சலிப்புடன் கூறினான் செல்வா…
“உன்னை எங்க அத்தை எங்கே இருந்து கூப்பிட்டு வந்தாங்களோ அங்கே இருந்து தான் எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வந்தாங்க…”என்று இருதேவியரும் ஒருசேர கூவினர்…
“ஒன்னு கூடிட்டாங்க யா…ஒன்னு கூடிட்டாங்க…”என்று அலறினான் செல்வா…
இவ்வாறு சலசலத்துக்கொண்டே மருத்துவமனையை அடைந்தனர்…
அவந்திகா சொன்னதே போலே சாதாரண சுளுக்கு தான் என்றும் கணுக்காலின் தசை நாரில் பாதிப்பு என்பதால் நான்கு நாட்களுக்கு கால் அசைக்க கூடாது என்றும் மருத்துவர் கூறியிருந்தார்…
மருத்துவமனையில் இருந்து வீடு நோக்கி காரில் கிளம்பிய மூவர் மனதிலும் ஒருவனே வியாபித்திருந்தான்….
ஆதிக்கம் தொடரும்…