விலகிச்செல்வது ஏனோ..?? -25
அவன் சொல்வதை நம்ப முடியாமல் அவள் சமைந்து நிற்க,விஜய் அமைதியாய் நின்று கொண்டு இருந்தான்…சில நொடி எடுத்துக்கொண்டவள் “நீ..நீங்க…என்ன சொல்றீங்க…அவ எப்படி இதுக்கு எல்லாம் பொறுப்பாக முடியும்..அவ இப்போ எங்க இருக்கான்னே யாருக்கும் தெரியல..அவ இல்லாததுனால அவ மேல பழியை போடதீங்க…”என கோவமாய் சொல்ல..
“எனக்கு தெரியும் ஜெய்..நான் சொல்றதை நீ நம்பமாட்டன்னு..சுபாஸ்ரீ ஏன் ஜீவாகிட்ட என்னைய பத்தி தப்பா சொல்லணும்..ஜீவாகிட்ட நான் தான் தப்பு செஞ்ச மாதிரி சொல்லணும்..இதை எல்லாம் விடு..நான் உன்கிட்ட என் காதலை சொல்ல வரும்போது,ஏன் என்னை திசை திருப்பணும்…”
“அவளுக்கு அது ஏற்கனவே தெரிஞ்சி இருக்கு…அவ மட்டும் என்கிட்டே அப்படி சொல்லாம இருந்து இருந்தா,கண்டிப்பா நான் அன்னைக்கு உன்ன வந்து பார்த்து இருப்பேன்..அவ ஏன் அப்படி சொல்லணும்,நீயே யோசிச்சு பாரு…”என சொன்னவன்,அமைதியானான்…சிந்திக்க சிந்திக்க அவளுக்கு தலைவலி வரும் போல் தான் இருந்தது…அவள் தலையை பிடித்து அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள்..
விஜய்க்கும் அவளின் நிலை புரிய அவளின் அருகில் சென்று அமர்ந்தான்..அவனை பார்த்தவள் “ஏன் சுபாஸ்ரீ அப்படி பண்ணனும்..என்ன காரணம்..”என புரியாமல் கேட்க…
விஜய் “நீ தான்..உன்மேல் அவளுக்கு வந்த பொறாமை…”என விஜய் சொல்ல…”என் மேல சுபாஸ்ரீக்கு பொறாமையா..??..“என அதிர்ச்சியோடு ஜெயஸ்ரீ கேட்க..ஆமாம் என்பது போல தலையசைத்தவன், “சின்ன வயசுல இருந்து உன்னை பார்த்து அவளுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை,எல்லோரும் உன்னையே தூக்கிவச்சி கொண்டாட்ற மாதிரி அவளுக்குள்ள ஒரு எண்ணம்,எல்லாத்துலையும் அவ தான் முதல்லா இருக்கணும் அப்படின்ற ஒரு எண்ணம், நினைக்கிற எதையும் செஞ்சு முடிக்கணும் அப்படின்ற வெறி, இது எல்லாமே அவளை ஒட்டுமொத்தமா மாத்திடுச்சு..”என சொல்ல..
“இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது..”என கேட்க, “இன்னைக்கு காலையில போனமே,அது யார் வீடுன்னு நினைக்குற,அது தான் சுபாஸ்ரீ வீடு….நவீன் வேற யாரும் இல்ல,சுபாஸ்ரீயோட புருஷன்..”என்ற விஜய் ஜெயஸ்ரீயின் அதிர்ந்த முகத்தை பார்த்து மீண்டும் தொடர்ந்தான்…
“எனக்கு நல்லா தெரியும் ஜெய்..உன்னால எதையும் நம்பகூட முடியாது..ஏன் உன்னால ஜீரணிக்கவே முடியாது..எல்லாமே உனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும் அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும்..ஆனா உண்மை இது தான்..எனக்கே இன்னைக்கு காலையில நவீன் போன் பண்ணி வீட்டுக்கு வா…”
“உன்கிட்ட உன்னோட லைப் பத்தி பேசணும் அப்படின்னு சொல்லும்போது, எனக்கு ஒண்ணுமே புரியல…இவன் என்ன நம்ப லைப் பத்தி பேச போறான்..அப்படின்னு எனக்குள்ளே பெரிய குழப்பமே இருந்தது….அதுக்கு அப்புறம் அங்க போய் அவன் கிட்ட தனியா பேசின போது தான் எனக்கு எல்லாமே தெரிஞ்சது…”
“சுபாஸ்ரீ நவீனை காதலிச்சு ஓடிவரல,அவ நம்ப காலேஜ்ல இருக்குற வேற ஒரு பையனை தான் காதலிச்சு இருக்கா…ஜோசப் அவன் பேரு…அவன் நல்லவன் கிடையாது…சுத்த பொறுக்கி..அது தெரியாம சுபா,அவனை நம்பி வெளிய வந்து இருக்கா…ஆனா நவீன் சுபாவை காதலிச்சு இருக்கான்…அதை அவ கிட்ட சொல்லியும் இருக்கான்..ஆனா சுபா நவீனை அசிங்கபடுத்தி, திட்டி,எல்லோர் முன்னாடியும் கேவலமா பேசி அனுப்பி இருக்கா…அதுக்கு பிறகு நவீன் அவளோட வாழ்க்கைக்கு குறுக்க வரல…அவ இருக்குற பக்கம் கூட அவன் திரும்பி பார்க்கல..”
“ஹாஸ்டல் விட்டு வெளிய வந்த சுபாஸ்ரீயை,அந்த பையன் திருச்சிக்கு நேரா அழைச்சிட்டு போயிட்டான்…உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சி,அவங்க தேடி அங்க போன போது,சுபாஸ்ரீ அவங்க கூட வரமாட்டேன்னு சொல்லிட்டாளாம்..எவ்ளோவோ சொல்லியும் அவ வரமாட்டேன்ன்னு அடம் பிடிக்க,உங்க வீட்லயும் இதுக்கு மிச்சம் அவகிட்ட பேச வேண்டியது இல்ல…”
“அவளோட வாழ்க்கை அவ முடிவு பண்ணிக்கிட்டா,எக்கேடோ கெட்டு போகட்டும்…இனி அவ யாரோ,நாங்க யாரோ…அப்படின்னு வந்துட்டு இருக்காங்க…உன்னோட அப்பாகூட பேசி பார்த்தாராம்..ஆனா அவ வரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாளாம்…”
“அந்த சமயத்துல,சுபாஸ்ரீ கழுத்துல இருந்த செயின்,கையில் இருந்த ரிங்,காதுல இருந்த தோடு,கால் கொழுசு,கையில அவ வச்சு இருந்த பணம் எல்லாத்தையும் வாங்குன அந்த பொறுக்கி,அவன்கிட்ட பத்திரமா வச்சிக்கிறதா சொல்லி,சுபாவை ஏமாத்தி இருக்கான்..இதை எல்லாம் தெரியாத சுபாவும் அவன் சொல்றதுக்கு ஏத்த மாதிரி தலையாட்டி இருக்கா…”
“திருச்சி பஸ் ஸ்டாப்ல நிக்க வச்சிட்டு,நான் என் ப்ரிண்ட்க்கு போன் பண்ணிட்டு வரேன்,இங்கவே இருன்னு போனவன் ஆளே திரும்ப வரலையாம்…அங்கவே பஸ் ஸ்டாப் புல்லா சுத்தி சுத்தி,அவனை தேடி அலைஞ்சிட்டு இருந்து இருக்கா..திருச்சிக்கு சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போயிட்டு திரும்ப காலேஜ் போக வந்த நவீன் எதற்ச்சியா அவளை எங்க பார்த்துட்டு,அவளை விசாரிக்க..நடந்ததை எல்லாம் அவன்கிட்ட அழுதுகிட்டே சொல்லி இருக்கா…”
“அவளை அப்படியே விட மனசு இல்லாத நவீனும்,வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல,அவங்க வீட்ல ஏற்கனவே இவனோட காதல் தெரிஞ்சவங்களா இருந்தாலும்,நடு ரோட்ல நின்னு தவிக்கற பொண்ணை நினைச்சு வருத்தப்பட்டு,வீட்டுக்கே அழைச்சிட்டு வர சொல்லிட்டாங்களாம்…”
வீட்டுக்கு அழைச்சிட்டு போய் இரண்டு நாள் அங்க விட்டவன்,அவனோட அப்பா,அம்மா பேச்சுப்படி,சுபாவோட அப்பாக்கு சேதி சொல்ல போக,அதை கேட்ட சுபா ”வேண்டாம்…என் வீட்டுக்கு யாரும் சொல்லாதீங்க…அவங்க முகத்துல மீண்டும் முழிக்கிற அருகதை எனக்கு இல்ல…”
“என்னை அவங்க தலை முழுகுனது தலை முழுகனதாவே இருக்கட்டும்…இதுக்கு மேல அவங்களை நான் அசிங்கபடுத்த விரும்பல..”என சொல்லி அவள் அழுது இருக்கா…ஆனா நவீனோட பாட்டி,தாத்தா எல்லாம் சின்ன புள்ள அப்படி தான் தெரியாம பேசும்,நீங்க சொல்லுங்க என சொன்னதை எதற்ச்சையாய் கேட்ட சுபா தற்கொலை பண்ண போயிட்டாளாம்…”
“அதை பார்த்த நவீனின் அம்மா சாலா தான் கடைசியில் அவளை காப்பாத்துனாங்களாம்..அதுக்கு பிறகு கொஞ்ச நாளைக்கு அவ நவீனோட வீட்லையே இருந்தாளாம்..நவீனும் பெங்களூர் வேலைக்கு வந்திட,சாலா அம்மா அவளை தன்னோட பெண் போல பார்த்துட்டாங்களாம்…நவீன் சுபாவோட நினப்புல கல்யாணம் வேண்டாம்ன்னு தட்டி கழிக்க,சாலா அம்மா சுபாகிட்ட பேசி,சம்மதம் வாங்கி இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணிவச்சு,பெங்களூர்லயே குடி வச்சிட்டாங்க…”
விஜய் சொன்ன எல்லாவற்றையும்,அமைதியாய் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு இருந்தவள்,“இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா….”என சந்தேகத்தோடு கேட்க…“ம்க்கும்…”என தலையைஇடது வலதுமாய் ஆட்டியவன்,எல்லாத்தையும் நவீன் தான் சொன்னான்..”என்றான் அமைதியாய்..
“என்னோட வாழ்க்கையில பெரிய போர்களத்தையே உண்டு பண்ணி இருக்கா,அவளை சும்மா விட்றதா,ச்ச்ச..அவ எல்லாம் ஒரு பொண்ணு,அவ மனசுல இருந்த கெட்ட எண்ணத்துக்கு,அகம்பாகத்துக்கு,திமிருக்கு எல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்…என் வாழ்க்கை என்ன அவ கையில் வச்சு விளையாடற பொம்மையா…எப்படி எல்லாம் என்கிட்ட நல்ல பொண்ணு மாதிரி நடிச்சு இருக்கா…..”
“விஷத்தை உள்ளுக்குள்ள வச்சிட்டு,எத்தனை முறை என் கிட்ட எதுவும் தெரியாதவ மாதிரி பேசி இருக்கா…என் வாழ்க்கையில விளையாட்னதுனால தான்,அவ அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கா,அவ இன்னும் கஷ்டப்படுவா..கண்டிப்பா நான் பட்ட கஷ்டத்தை இன்னும் அனுபவிப்பா…நான் எப்படி எல்லாம் வேதனை பட்டனோ..அதே மாதிரி அவளும் படுவா…சத்தியமா அவ நல்லா…”என கோவத்தில் என்ன பேசுகிறோம்,என்ன சொல்கிறோம் என தெரியாமல் இன்னும் என்ன என்ன பேசி இருப்பாளோ…
“ஜெயாயாயா…..”என்ற விஜயின் கத்தலில் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்….அவனின் முகம் இரும்பை போன்ற ஒரு கடினத்தை கொண்டு இருந்தது…”என்ன பேச்சு பேசற நீ…படிச்ச பொண்ணு மாதிரியா பேசுற…ஏதோ தேர்ட் கிளாஸ் பொம்பளைங்க மாதிரி,அவ நல்லா இருக்க கூடாதுன்னு சாபம் விட்ற…என்ன ஆச்சு உனக்கு,நீ பட்ட வேதனை எல்லாம் சாதாரணம் இல்ல தான்,ஆனா அதுக்காக நீ இப்படி எல்லாம் பேசலாமா…”என கோவமாய் கேட்க…
ஜெயஸ்ரீ அமைதியாய் நின்றுகொண்டு இருந்தாள்..அவளுக்கே புரிந்தது தான் பேசிய வார்த்தைகள் எல்லாம் அதிகம் என்று..கோவத்தில் ஏதோ வார்த்தைகளை விட்டவள்,விஜய் கத்திய பின்பே தான் சொல்லியதன் அர்த்தம் உணர்ந்தாள்…அவள் திட்டியது எல்லாம் அவளின் தோழி அல்லவா,அவளின் மற்றொரு சகோதரி அல்லவா,அவளை அப்படி திட்டலாமா,அவளுக்கு அப்படி ஒரு சாபம் கொடுக்கலாமா,என்ன தான் அவள் தவறு செய்தவளாய் இருந்தாலும்,தன் வாழ்க்கைக்கு இடஞ்சல் செய்து இருந்தாலும்…
மனம் குறுகுறுக்க அவள் நின்றிருக்க ,ஜெயஸ்ரீயின் நிலை உணர்ந்த விஜய் தன் கோவத்தை மட்டுபடுத்தியவன்,”எனக்கு உன்னோட வேதனை புரியுது ஜெய்..ஆனா நீ அவளுக்கு சாபம் குடுக்கலாமா..அவ செய்ஞ்ச தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்கிறா,சொல்ல போனா இன்னும் அவ அனுபவிச்சிட்டு இருக்கா..அவளோட வாழ்க்கை கண்டிப்பா நல்லா இல்ல,உன்னோட தோழி சந்தோசமாய் வாழல…அவ சந்தோசமா வாழ்றது உன்னோட கையில்தான் இருக்கு…”என சொல்ல..
ஜெயஸ்ரீ “என்ன விஜய் என்ன என்னமோ சொல்றீங்க…என்ன ஆச்சு அவளுக்கு..நவீன் தான் அவளோட கணவர் அப்படின்னா,நாம்ப போனது சுபா வீடு தான..ஆனா அங்க சுபா இருந்த மாதிரி தெரியலையே..சுபா எங்க போனா…எனக்கு என்னதான் அவ துரோகம் செஞ்சு இருந்தாலும்,அவ என்னோட தோழி,என்கூட பிறக்காத அக்கா…என்னன்னு சொல்லுங்க..ஏதோ கோவத்துல அப்படி எல்லாம் பேசிட்டேன்..சாரி.”என அவனிடம் மன்னிப்புகேட்க…
“என்னன்னு நான் சொல்றேன்…”என்ற குரலை கேட்டு இருவரும் திரும்ப அங்கு நவீன் நின்றுக்கொண்டு இருந்தான்…தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் “வா வா..நவீன்..எப்போ வந்த…”என தன் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு விஜய் கேட்க…
நவீன்“ஜெயஸ்ரீ சுபாவை திட்டிட்டு இருக்கும் போதே வந்துட்டேன்…”என சொல்ல,ஜெயஸ்ரீ சங்கடமாய் தலையை குனிந்துக்கொண்டாள்…விஜய் “அது வந்து நவீன்..அவ ஏதோ தெரியாம..”என அவன் விளக்கம் சொல்ல முயல..நவீன் “எனக்கு தெரியும் விஜய்..வலியை அனுபவிச்சது அவங்க தான்..அவங்களோட ஆதங்கம் எல்லாம் சரியே..நான் எந்த ஒரு தப்பும் சொல்ல மாட்டேன்…”என்றான் இருவரையும் பொதுவாய் பார்த்துக்கொண்டு…
“உட்காரு நவீன்…”என்று நவீனை அமரவைத்தவன்,ஜெயஸ்ரீயின் அருகில் அமர்ந்தான்…சிறிது நேரம் அங்கு அமைதியே ஆட்சி புரிய,முதலில் யார் பேசுவது என தயக்கம் அங்கே கூத்தாட ஆரம்பித்தது…நிமிடங்கள் கரைய,மூவரும் ஒருவரின் ஒருவர் முகம் பார்க்காமல், நிலத்தினையே பார்த்துக்கொண்டு இருந்தனர்…அங்கே சங்கடமான சூழ்நிலை நிலவியது…விஜயே முதலில் அதனை தகர்த்தான்…
விஜய் “சொல்லு நவீன்..இப்போ சுபா எப்படி இருக்கா..பரவாயில்லையா.”என கேட்க…ஜெயஸ்ரீயினை ஒரு முறை பார்த்தவன்,நெடிய மூச்செடுத்து தன்னை நிலை படுத்தியவன் “இல்ல விஜய்..அப்படியே தான் இருக்கா…கொஞ்ச நேரத்துல என்ன பெரிய மாற்றம் வந்திட போகுது…எல்லாம் விதி..”என சொல்லியவன் வார்த்தை கடைசியில் பிசிறிட்றோ என ஜெயஸ்ரீக்கு தோன்றியது…
அவளால் எதையும் கவனிக்கக்கூட முடியவில்லை..இருவரும் ஏதோ மர்ம கதை பேசுவது போல,புதிர் போட்டு மொட்டையாய் பேச,அவர்கள் பேசுவது தெரியாமல் குழம்பி போனாள்…
விஜய் “எல்லாம் சரியாகிடும் நவீன்,கவலைபடாத,அம்மா எப்போ வராங்க..” நவீன் “இன்னைக்கு சாயங்காலம் வந்திடுவாங்க…”என்றவன் சிறிது நேரம் அமைதியை கடைபிடித்தான்…நவீன் ஏதாவது சொல்லுவான் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீக்கு நவீன்-விஜய் பேசும் பேச்சுகளை கேட்டு கோவம் கோவமாய் வந்தது..
நேரம் கடத்தி எந்த ஒரு பயனும் இல்லை என்றுணர்த்த நவீன், தன் பேச்சை துவங்கினான்..”விஜய் ஜெயஸ்ரீகிட்ட சொல்லிட்டியா…”என கேட்க..
ஜெயஸ்ரீயினை திரும்பி பார்த்த விஜய்,அதன் பின் நவீனின் பக்கம் திரும்பி பாதி சொல்லி இருக்கேன்..இன்னும் மீதி சொல்லல..அத சொல்றதுக்குள்ள நீ வந்துட்ட..”என்றான்…
இருவர் பேசுவதையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருந்தவள் “என்ன தான்ய்யா நடக்குது இங்க..என்ன சொல்லணுமோ,சொல்லி தொலைங்க.. இப்படி மொட்டையா பேசி என்னோட BP-யை ஏத்தாதீங்க….அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்…”என மனதிற்குள் இருவரையும் வைதுக்கொண்டு இருந்தாள்..
நவீன் “எங்களை மன்னிச்சிடுங்க ஜெயஸ்ரீ..காலேஜ் இருக்கும் போது உங்களை நான் சுபாகூட சேர்ந்து பார்த்திருக்கேன்..நீங்க என்னை பார்த்து இருக்கமாட்டீங்க…இத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்குறதுக்கு காரணமே சுபா தான்..எனக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது…”
“ஜோசப்யை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைக்க இருந்தவளை கடைசில அவன் ஏமாத்திட்டு போனது அவளுக்கு ஒரு பெரிய அடியா போச்சு..எங்களோட கல்யாணம் முடிஞ்சு அவ அதே நினப்புல வெந்து போயிட்டு இருந்தா,அதுவும் இல்லாம உங்களுக்கு செஞ்ச துரோகம் அவளை மனசை ரொம்பவே காயப்படுத்தி இருக்கு…”
“இது எல்லாம் எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்…அதுவும் அவளா சொல்லல..தன்னோட தப்பை எல்லாம் எண்ணி புழுகி,யார்கிட்ட இதைபத்தி சொல்றதுன்னு தெரியாம ஒரு டைரில எழுதுட்டு இருந்து இருக்கா..ஒரு நாள் எதற்ச்சையா படிச்சு பார்த்த எனக்கு,அதுக்கு பிறகு தான் எல்லா விஷயமும் தெரிஞ்சது…”என்றவன் மீண்டும் தொடர்ந்தான்…
“அவளுக்குள்ள நாளுக்கு நாள் குற்ற உணர்ச்சி அதிகம் ஆகிட்டே இருந்துச்சு,நைட்ல தூங்கும்போது எல்லாம் அவளோட புலம்பல் ரொம்ப அதிகமா இருந்துச்சு…நான் விரும்பிய பொண்ணு,அவளை என்னால அப்படி பார்க்க முடியல..அவளோட மனமாற்றத்துக்கு ஒரு டாக்டரை பார்த்தோம்..அவரோ என்னை அவகிட்ட அன்பா நடந்து அவளோட பழைய நினைப்பை எல்லாம் என்னோட செயல் மூலியமா மறக்க வைக்க சொன்னார்..”
“என்ன தான் எங்களுக்குள்ள அவ்வளவு ஒத்துமை,அன்னியோன்யம் இல்ல அப்படின்னாலும்,என்னோட அன்பு அவளை கொஞ்ச கொஞ்சமா அவளை கூண்டுக்குள்ள இருந்து கொண்டு வரவச்சது..கொஞ்ச கொஞ்சமா அவ என்கிட்டே நெருங்கி வர ஆரம்பிச்சா…அதுனோட விளைவா நாங்க ஒரு கணவன் மனைவியா வாழ ஆரம்பிச்சோம்…”
“கொஞ்சமே கொஞ்சம் எங்க வாழ்க்கையிலும் சந்தோசம் எட்டி பார்த்தது…எங்களோட வாழ்க்கைக்கு ஆதாரமா சுபா கற்பமான…ஆனா அது எல்லாம் தற்காலிக சந்தோசம் அப்படின்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல…”என சொல்லியவன் கண்களை மூடி அந்த நாள் வேதனையை தனக்குள் விழுங்க போராடினான்…
விஜய் ஆதரவாய் அவனின் அருகில் அமர்ந்து நவீனின் கையினை பிடித்து அழுத்த, விழுத்து விஜயினை பார்த்து சிரிக்க முயன்று தோற்றவன்,மீண்டும் சொல்லலானான்…மூணு மாச கற்பத்தோடு இருந்தவ,துணி காய வைக்க மாடிக்கு போயிட்டு கீழ இறங்கி வரும்போது,படியில இருந்த தண்ணியில தெரியாம காலைவச்சு அங்கு இருந்து உருண்டுட்டா…”என சொல்ல…. “அய்யோ…”என அலறினாள் ஜெயஸ்ரீ…
அவளை பார்த்து விரக்தியாய் சிரித்தவன்,”மீதியை என்னால சொல்ல முடியாது ஜெயஸ்ரீ,நீயே வந்து பார்த்துக்கோ…எனக்கு சொல்ற அளவுக்கு உடம்புலையும் மனசுலயும் தெம்பு இல்ல…இது வரைக்கும் சொன்னதே என்னால முடியல…என்ன மன்னிச்சிடு..என்ன நடந்தது அப்படின்னு என்னால என் வாயால சொல்ல முடியாது…”என சொன்னவன்,அடுத்த நொடி அங்கு இருந்து எழுந்து வெறியேறி இருந்தான்…
இருக்கையில் இருந்து எழுந்து விஜயின் அருகில் வந்தவள் “ஜெய் சுபாக்கு என்ன ஆச்சு,நவீன் என்ன என்னவோ சொல்லிட்டு போறாரு…ப்ளீஸ் சொல்லு….உனக்கு தெரியும் தான,சொல்லு..ப்ளீஸ்….எனக்கு தெரியல அப்படின்னா தலையே வெடிச்சிடும்…ஏன் கேட்க கேட்க அமைதியா இருக்க…உனக்கு தெரியும் தான,சொல்லு..ஏன் எதுவும் சொல்ல மாட்டன்னு இருக்க,அவளோட உயிருக்கு ஏதாவது,அய்யோ..”
“அப்படி எதுவும் இருக்க கூடாது..கருவுக்கு ஏதாவது,கண்டிப்பா அப்படி எல்லாம் இருக்காது,குட்டி பாப்பா நல்லா இருக்கும்,அப்போ ஏன் நவீன் எதுவும் சொல்லாம போறாரு…”என விஜய் பேச இடம் குடுக்காமல் அவள் பாட்டிற்கு தன் போக்கில் புலம்பிக்கொண்டு போக…விஜய் அவளை சாமதானம் படுத்தும் வழி தெரியாது விழிக்க ஆரம்பித்தான்…
விஜய் “ஜெய் கொஞ்சம் அமைதியா இரு,எதுக்கு இப்போ இவ்ளோ எமோஷனல் ஆகுற…அவளுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது,அவ நல்லா இருப்பா,குட்டி பாப்பாவும் நல்லா இருக்கும்…நீ தைரியமா இரு…வா வந்து உட்காரு..கொஞ்சம் தண்ணி குடி..”என அவளை சோபாவில் அமர வைத்தவன்,அவளுக்கு குடிக்க தண்ணீரை குடுத்தான்…
அதனை வாங்கி மடமடவென்று குடித்து முடித்தவள் “சரி வாங்க சுபாவை பார்க்க போலாம்…”என அவனை துரிதபடுத்தியவள் முன்னே நடக்க ஆரம்பித்தாள் தன் கால் வலியினையும் பொருட்படுத்தாது…அவள் பின்னே சென்றவன்,மீண்டும் நவீனின் வீட்டிற்கே தனது வண்டியினை விட்டான்..
வீட்டிற்கு வந்த நவீன் அறையில் இருந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு அங்கு ஓடிசென்று,சத்தம் வந்த அறைக்கதவை திறக்க,அவனின் நெற்றியினை செவ்வனவே பதம் பார்த்தது ஒரு பூச்சாடி…
கீழே விழுந்து நொறுங்கிய அந்த பூச்சாடியை பொறுக்கி அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டவன்,கீழே கிடந்த பொருட்களில் கால் படாமல் அடி மேல் அடிவைத்து மெத்தையின் அருகில் சென்றான்…கட்டிலின் விளிம்பில் அமர்ந்துக்கொண்டு மற்றொரு பொருளை அவனை நோக்கி எப்படி வீச என குறி பார்த்துக்கொண்டு இருந்தாள் அவனின் மனைவி சுபா…
நவீன் “சுபா செல்லம் இல்ல..அதை என் கையில் குடுத்துடு….”என சொல்லிக்கொண்டே அவளால் நெருங்கி அவளின் கையில் இருந்த கண்ணாடியினை வாங்க முயன்றான்…
அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து கண்ணாடியினை தன் கையில் இறுக்க,அது அவளது மென் தசையை செவ்வனவே கிழிந்து இரத்தம் வழிந்தது….”சுபா என்ன பண்ற…”என கோவமாய் நவீன் அவளிடம் அவசரமாய் நெருங்க…அவன் கத்திய கத்தலில் அதிர்ந்தவள்,அதன் பின் கோவமாய் அக்கண்ணாடியை அவனை நோக்கி வீசினான்…
சட்டென்று அவன் நகர அக்கண்ணாடி அறை வாசலில் சென்று விழுந்து சுக்கு நூறாய் நொறுங்கியது…அப்போது தான் அவர்களுது வீட்டுக்குள் நுழைந்து இருந்த விஜயும்,ஜெயஸ்ரீயும் “சுபா..”என்ற நவீனின் கத்தலில் அந்த அறையை நோக்கி வர,கண் முன்னாடி விழுந்து நொறுங்கிய கண்ணாடியை இருவரும் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தனர்…
நடங்கும் ஜெயஸ்ரீயினை தன் கையின் வளைவில் கொண்டு வந்தவன்,அவளை தன் அருகில் நிறுத்திக்கொண்டான்…என்ன தான் நவீன் சுபாவை பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தாலும்,நேரில் பார்க்கும்போது அவனுக்கே அவளை கதி கலங்கி போனது..எப்படி நவீன் அவளை பார்த்து கொள்கிறான் என அவனை நினைத்து வியந்தான்…
உள்ளே சிறிது நேரம் சத்தம் அதிகமாக,நவீன் சுபாவிடம் போராடுவது இருவருக்கும் வெளியில் இருந்தே கேட்க முடிந்தது…விஜயின் அருகில் அவனை ஒட்டிக்கொண்டு நின்றுக்கொண்டு இருந்தவள்,அவனிடம் இருந்து விலகி அறையின் உள்ளே நுழைந்தாள்…
உள்ளே நவீன் சுபாவை கட்டுபடுத்த போராடிக்கொண்டு இருந்தான்…உள்ளே அடிவைத்தவள் அறை இருக்கும் நிலை அதிர்ந்து ஒரு முறை தன் கண்களாலே அறையினை நோட்டம் விட்டாள்..வெளியில் எவ்வளவுக்கு எவ்வளவு எல்லாம் அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருந்ததோ,அதற்கு எதிர்மறையாய் இருந்தது அவ்வறை…
பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து சிதறி இருக்க,பூச்சாடி உடைந்து நொறுங்கி இருந்தது…தன் பார்வையை அவர்களின் பக்கம் திருப்பியவள்,தன் கண்களையே நம்ப முடியாமல்,கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தாள்..
ஆனால் அவளின் கண் முன்னால் தெரிந்த உருவத்தை சுபா என்று அவளால் சிறிதும் எண்ணியும் பார்க்க முடியவில்லை…எப்படி இருந்தவள் ,இன்று உருக்குழைந்து,கண்ணில் ஜீவன் இல்லாமல்,உடல் இளைத்து போய் பார்ப்பதற்கே அவள் சுபா தானா என்று அவளால் அவளின் தோற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை..
கண்களில் கண்ணீர் வழிய சுபாவினையே பார்த்துக்கொண்டு இருந்தாள் ஜெயஸ்ரீ…அவள் அருகில் வந்த விஜய் ஆறுதலாய் அவளின் மேல் கை வைத்து அழுத்தினான்..அவனை திரும்பி பார்த்தவளின்,கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது..
விஜய் “கவலைபடாத ஜெய்..எல்லாம் சரியாகிடும்..கூடிய சீக்கிரம் அவளை சரி பண்ணிடலாம்..”என்றான் அவளிடம்…”ம்க்கும்” என மறுப்பாய் தலை அசைத்தவள் “எனக்கு பயமா இருக்கு ஜெய்..எப்படி இருந்தவ,இப்போ எப்படி இருக்கா..சத்தியமா இவளை இப்படி ஒரு நிலையில பார்ப்பேன்னு,நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஜெய்…இவளுக்கு ஏன் இப்படி..”என சொல்ல முடியாமல் வேதனையில் தவித்து போனாள்…
அவளை சுபாவின் அருகில் மெதுவாக அழைத்து சென்றான்…நவீன் “சுபா கொஞ்சம் அமைதியா இரு..என் செல்லம் இல்ல…நான் சொல்றத கேட்பியாம்..நான் உனக்கு பிடிச்ச ஐஸ் கிரீம் வாங்கி தரேன்..”என சுபாவினை அடக்கும் வழி தெரியாமல் அவளை சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தான்..
அவனை ஒரு மாதிரியாய் பார்த்தவள் “நீ பொய் சொல்ற…எனக்கு நீ வாங்கி தர மாட்ட,என்னை ஏமாத்திட்டு போயிடுவ..”என சொல்லியவள் கண்ணில் நீர் ததும்பியது…அதனை கேட்டவனுக்கோ இதயத்தில் கத்தியை வைத்து குத்தியது போல வலிக்க ஆரம்பித்தது…கண்கள் கலங்க அதனை துடைக்க மறுபுறம் திரும்பியவன்,ஜெயஸ்ரீயினையும் விஜயினை பார்த்து வருமாறு தலையசைத்தான்…
உன்னில் என்றும் கரைந்திட
காற்றாய் மாறி
உன் மூச்சுக்குள் நுழைந்திட
பேராசை கொண்டேனடி..
உனக்கென நான் இருக்க
நீ தனியாய் தவித்து போவது ஏனடி
என் கண்ணே…
விலகல் தொடரும்…