விலகிச்செல்வது ஏனோ..??-12

 

சிநேக புன்னகை உடன் மூவரும் ஒருவரை ஒருவர்

பார்த்துக்கொண்டனர்…இவர்களை பார்த்த நந்தலன் “சரி டா வரு,என்னோட இரண்டு கண்களையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..

Advertisements

அதுல இருந்து ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்…”என வசனம் பேசவும்…அவனின் தோளில் தட்டிய வரு “டேய் ஓவரா பேசாத டா..என்னால முடிஞ்ச அளவு உன்னோட தங்கச்சிங்களுக்கு ஹெல்ப் பண்றேன்…”என்றான் அவனிடம் மெதுவாக…

 

அவனின் தங்கச்சி என்ற வார்த்தையில் அதிர்ந்தவன் “டேய் தங்கச்சினு சொல்லாத,ரெண்டு பிசாசுங்களும் என்னை பின்னி எடுத்துருவாங்க..

எப்பவுமே ப்ரிண்ட்ஸ் தான்…”என அவனின் காதில் சொன்னவன் பக்கத்தில் இருந்த இரு பெண்களையும் நோக்கி தன் ஒட்டுமொத்த பற்களையும் காட்டினான்…

இவன் இப்போ எதுக்கு இப்படி பல்லை காட்டுறான்..இதுல ஏதோ இருக்கு போலவே..என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டவர்களின் கண்ணில் அச்செய்தி இருந்தது…

 

ஜெயஸ்ரீ “சரி நந்தி,ரொம்ப டையார்டா இருக்கு,நாங்க ஹாஸ்டல் போலாமா..நாங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறோம்…”என்றாள்..

 

நந்தலன் வருவினை பார்க்க,வருவும் “ஹ்ம்ம்..போகட்டும் டா,டிராவல் பண்ணி வந்தது அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும் இல்லை…”என்றான்

 

இவர்களின் சம்பாஷனைகளை கேட்ட சுபா மனதிற்குள் “இவரு பெரிய பருப்பு,இவன் கிட்ட போய் இந்த ஜெயா பர்மிஷன் கேட்கணுமா…இவன் சொன்னா தான் ரெஸ்ட் எடுக்கணுமா..இல்லைனா எடுக்ககூடாதா…

இந்த ஜெயா எதுக்கு இப்படி இவன் கிட்ட கேட்டுட்டு இருக்கா..

போறோம்ன்னு சொல்ல வேண்டியது தான,இதுல இந்த புது ஆளுக்கிட்ட வேற இந்த நந்தி கண்ணாலே சம்மதம் கேட்குறான்..

அவரும் பெரிய வள்ளல் மாதிரி சம்மதம்னு சொல்றார்…”

என நந்தலனையும்,வருவினையும்,ஜெயஸ்ரீயினையும் வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள்…

 

வரு சொல்வது சரி என பட நந்தலன் வருவிடம் சொல்லிக்கொண்டு பெண்களின் பொதி மூட்டையினை எல்லாம் எடுத்து கொண்டு அவர்களின் ஹாஸ்டல் முன் இறக்கி வைத்தான்…

 

மனதிற்குள் “இவளுகளுக்கு எல்லாம் நான் டிரைவர் வேலை பார்த்து பொதி மூட்டை தூக்குற கழுதையாவும் மாத்திட்டாளுங்க..இரண்டு நல்ல பிகர்ங்களை சைட் அடிக்க முடியுதா…”என புலம்பி தள்ளினான்…

 

இவனின் புலம்பலை எல்லாம் அறியாத பெண்கள் இருவரும் உள்ளே சென்று அறைகள் எல்லாம் எப்படி இருக்கிறது என ஒரு சுற்று சுற்றி ஒட்டுமொத்த ஹாஸ்டலின் நிறைகளை எல்லாம் விட்டுவிட்டு,

குறைகளை எல்லாம் பட்டியலிட்டு கொண்டு வந்து நந்தலன் முன் வந்து நின்றனர்…

 

நந்தலன் இவர்கள் சொல்ல வந்ததை அறிந்தது போல அவர்கள் கூறும்முன் “நீங்க எல்லாம் எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாது…

அப்பாவும்,மாமாவும் வந்து ஹாஸ்டலை பார்த்துட்டு,சாப்பாடு எல்லாம் எப்படின்னு தெரிஞ்ச பின்னாடி தான் உங்களை இங்க சேர்க்க

சொன்னாங்க,ஏதாவது சொல்லி ஹாஸ்டல் வேண்டாம் அப்படின்னு சொன்னா,எதுவும் எடுபடாது,சமத்து பிள்ளைகளா ரெண்டு பேரும் போய் உங்களோட சமானங்களை எல்லாம் அடுக்குற வழியை பாருங்க…”என சொல்லிவிட்டு பெட்டியினை இருவரும் கையிலும் திணித்தான்..

 

பெண்கள் இருவரும் சிணுங்கிக்கொண்டே பெட்டியினை எல்லாம் உள்ளே அறைக்கு எடுத்து சென்றனர்…அவர்கள் எல்லாம் பொருட்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு நந்தலனை காண வெளியே வந்தனர்…வெளியில் வந்தவர்கள் அவனை கண்டு அதிர்ச்சியில் நின்றே விட்டனர்…

 

நந்தலன் பெண்கள் புடைசூழ ஒவ்வொருத்தரிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்..பெண்களும் அவனுக்கு ஏற்றார் போல அவனின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு,சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்…இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அப்பெண்களின் அம்மாக்களும் அவனுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தது தான்…

 

ஜெயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின் கோவமாய் அவனின் முன் சென்று நின்றனர்…    

 

தன் முன் நின்று இருக்கும் இரு பத்தரகாளியினையும் பார்த்து அதிர்ச்சியாகி இருப்பது இப்போது நந்தலன் முறையானது…பின்னே ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் தன்னோட அப்பாவிடம் இருந்து வாங்கும் அறிவுரைகளைவிட அவனின் தாய் மாமாவான மகேஸ்வரன் கொடுக்கும் அறிவுரைகளே அவனின் காதில் ரம்பம் இல்லாமல் அறுத்து இரத்தத்தினை வரவைத்துவிடும்.. மகேஸ்வரன் திட்டி அறிவுரையை வழங்குவார் என்றால்,சுபாவின் அப்பா சீதாராமன் கீதா உபச்சாரத்தினை வழங்க ஆரம்பித்துவிடுவார்…அப்படி இருக்கையில் இன்று இரு காளிகளும் தத்தம் தந்தைமாரிடம் போட்டு கொடுத்தால் நந்தலினின் காது இருக்க உத்திரவாதம் ஏது….

 

நந்தலன் அவர்களை பார்த்து சின்னதாய் புன்னகைத்தவன்,பக்கத்தில் இருக்கும் பெண்களை நோக்கி “சரி சிஸ்டர்ஸ்…நீங்க எல்லாம் நல்லா படிங்க…நல்ல மார்க் வாங்கணும்..அப்போ தானா இந்த அண்ணனுக்கு பெருமை…”என்றவன் “என்ன மா நான் சொல்றது சரி தான, “ என பெண்களின் அம்மாக்களிடமும் அபிப்ராயத்தினை கேட்டான்..

அவர்களும் “ஆமா நந்து நீ சொல்றது கரெக்ட் தான்…”என அவனுக்கு ஒத்து ஊதினர்…

 

“ஹ்ம்ம்…சரி மா,என்னோட அத்தை பொண்ணுங்க வெயிட் பண்றாங்க,நான் அப்புறமா பேசுறேன்…உடம்பை பார்த்துக்கோங்க…வரேன்”அவர்களை பார்த்து சொன்னவன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சுபஸ்ரீ,மற்றும் ஜெயஸ்ரீ இருவரையும் நோக்கி சென்றான்…

 

ஆனால் சிஸ்டர்ஸ் என நந்தலநாள் அழைக்கப்பட்ட அப்பெண்களோ இவனை முடிந்த அளவு முறைத்துக்கொண்டு இருந்தனர்…சும்மா இருந்தவர்களிடம் வந்து “ ஹாய் பியூட்டீஷ் “ என தானாகவே வந்து கடலையை வறுத்து எடுத்துவிட்டு,பிறகு அவர்களின் அம்மாக்களிடம் சிரித்து பேசி சோப்பு போட்டுவிட்டு,இப்போது சிஸ்டர்ஸ் என்றால் கோவம் வராதா…ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவன் இல்லை,சுபஸ்ரீயையும் ஜெயஸ்ரீயையும் சமாதானபடுத்த வேண்டிய முக்கிய வேலை இருக்கிறதே….

 

பெண்கள் இருவரும் இன்னும் அவனை முறைத்துக்கொண்டு இருக்கவும் “ஹே ஸ்ரீஸ் என்ன,இப்படி என்னை முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க,நான் உங்களோட முறைபையன் தான் அதுக்காக இப்படியா…”என வெட்கபடுவது போல் நடிக்கவும்…இப்போது பெண்கள் தங்களது முகபாவனையை நொடியில் மாற்றி “அவனா நீ என்பது போல்” பார்த்து வைத்தனர்…

 

அவர்களின் பார்வையை கண்டுகொண்டவன் “ஹேய்ய்….ச்சீசீ…என்ன ஒரு கெட்ட எண்ணம் உங்களுக்கு எல்லாம்,நான் நல்ல பையன் மா…”என்றான் கெஞ்சலோடு..

 

அவனின் கெஞ்சலை பார்த்த பெண்கள் பக்கென்று சிரித்துவிட்டனர்..

நந்தலனும் அவர்களோடு இணைந்து சிரித்தான்…ஆனால் நந்தலனின் மனமோ என்னவோ தவறு என்பது போல மருண்டியது…ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை…மனதில் இனம் புரியாத ஒரு பயம் அவனை சூழ்ந்து கொண்டது…அவ்வுணர்வுகள் அப்படியே அவனின் முகத்தில் பிரதிபழித்து அவனின் முகசிரிப்பு நொடியில் உறைந்தது…

 

சட்டென்று அவனின் சிரிப்பு மறையவும் பெண்கள் இருவரும் கேள்வியாய் அவனை நோக்கினர்..அவர்களின் கண்களில் தெரிந்த கேள்வியில் அவர்களை பார்த்தவன் “ஸ்ரீஸ் இது தான் முதமுறை நீங்க தனியா இவ்வளவு தூரம் இருக்குறது,உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க,இப்படியே போய்டலாம்,நான் மாமா கிட்ட பேசிக்கிறேன்..

எனக்கு என்னவோ ஒரு விதமான கலக்கமா இருக்கு…”என மனதில் தோன்றியதை மறைக்காமல் அப்படியே இருவரிடம்

பகிர்ந்துகொண்டான்…

 

அவனை விநோதமாய் பார்த்தவர்கள் “ஹேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..கொஞ்ச நாள் போனா எல்லாம் எங்களுக்கு பழகிடும்…நாங்களும் வெளி உலகத்தை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கத்துக்குறமே…”என பேசியது வேறு யாரும் இல்லை சுபா தான்…

 

நந்தலனும் ஜெயஸ்ரீயும் திறந்த வாயினை மூடாமல் பார்த்துகொண்டு இருந்தனர் அவளை…சுபா என்ன என்று கேட்கவும், “ஷ்…அப்பா..வந்த இரண்டு மணி நேரத்துல இப்படி ஒரு அதிரடி மாற்றமா…இது எல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம் சுபா உனக்கு ..” என்றான் தான் நினைப்பதை மறவாமல்…

 

அவன் சொல்வது எல்லாம் எரிச்சலை தந்தாலும் அதை எல்லாம் வெளி காட்டிக்கொள்ளாமல் “மாற்றம் என்பது எப்போதுமே நல்லது தான் நந்தலன்…”என்றாள் அழுத்தத்தோடு…

 

அவள் சொல்வதை ஏற்றுகொள்வது போல தலையை ஆட்டியவன் “நீ சொல்றதும் உண்மை தான் சுபா,ஆனா எந்த ஒரு மாற்றமும் மற்றவங்களுக்கு துன்பத்தை கொடுக்க கூடாது,அதே போல நாமும் பாதிக்ககூடாது..”என்றான் அவளைவிட அழுத்தமாக…

 

சுபா அவனின் பேச்சில் அவனை முறைக்கவும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் “சரி ஜெயா,நீங்க சாப்பிட்டீங்க அப்படின்னா,நான் கிளம்புவேன்..எனக்கு டைம் ஆகுது..”என்றான் ஜெயஸ்ரீயிடம்…

 

ஜெயஸ்ரீயும் சரி என தலையை அசைத்தவள் “நாம்ம போலாம் சுபா..”என அவளையும் அழைத்து சென்றாள்…

 

அவர்கள் செல்லும்முன் “ஹேய்ய்ய் மாமா பொண்ணுங்களே,எனக்கு சாப்பாடு,நீங்க மட்டும் மூக்கு முட்ட சாப்பிட போறீங்க…”என்றான் அழுகுரலில்..

 

ஜெயஸ்ரீ பதில் சொல்லும்முன் சுபாவே “வாசல்ல வச்சு ஊத்தின ஜொள்ளு போதாது,இதுல உள்ளார வந்து ஹாஸ்டல்லையும் ஊத்திணுமோ ,போதும் நீ போய் வீட்ல சாப்பிட்டுக்கோ…நாங்க உள்ளார போறோம்…” என சொல்லிவிட்டு அவள் ஜெயஸ்ரீயினையும்    

அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்..

 

இதில் ஜெயஸ்ரீக்கு தான் தர்மசங்கடமாய் இருந்தது..எப்போது சுபா எப்படி நடந்து கொள்வாள் என அவளால் இப்போது எல்லாம் எந்த ஒரு ஊகமும் செய்யமுடியவில்லை…

 

நந்தலனை பார்த்து அமைதியாய் சில நிமிடங்கள் நின்றாள் ஜெயஸ்ரீ…சுபா பேசியது நந்துவிற்கு மனதிற்கு கஷ்டமாய் இருந்தாலும் ஜெயஸ்ரீயினை பார்த்து தன் கண்களை மூடி திறந்தவன்,உள்ளே போகு மாறு சமிங்கை செய்தான்..பிறகு நந்தலன் வருவினை பார்க்க அவனின் ஹாஸ்டலிற்கு சென்றான்…

 

மாணவர்களை தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது என்பது அங்குள்ள விதிமுறை..எனவே வருவின் வருகைக்காக வெளியில் உள்ள நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்…

 

வரு “டேய்..என்ன டா,உன்னோட அத்தை பொண்ணுங்களை எல்லாம் சேப்பா கரை சேர்த்து விட்டுட்டியா….?”என்ற கேலியோடு அவனின் அருகில் அமர்ந்தான்….

 

“டேய்…நீ வேற என்னை கடுப்பேத்தாத,என் மாமா மண்டோதரி மகேஸ்வரன் பண்ண வேலை இதெல்லாம்,இந்த பிசாசுங்களை அங்கவே படிக்க வைங்கன்னு சொன்னேன்,ஆனா மாமா தான் பொண்ணுங்களுக்கு வெளி உலகம் தெரியணும்,உள் உலகம் தெரியணும் அப்படின்னு இங்க சேர்த்துவிட்டார்,இதுல என் அப்பாவும் நல்லா ஜால்ரா,இவங்களுக்கு இனிமேல் லீவ் நாள்ல நான் தான் டிரைவர்….அதுவே எனக்கு கடுப்பா இருக்கு,இதுல நீ வேற நேரம் காலம் தெரியாம கிண்டல் பண்ணிட்டு…”என பொரிந்து தள்ளினான்…

 

அவனின் புலம்பலில் வாய்விட்டு சிரித்தான் வரு…அவனின் சிரிப்பில் இருந்த எரிச்சல் இன்னும் அதிகமாக அவனை முயன்ற மட்டும் முறைத்தவன் “பார்த்து பல்லு சுளிக்கிக்க போகுது…எனக்கு வர ஆத்திரத்துக்கு,அமைதியா இருடா.. ” என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு…

 

அவனின் பற்கள் அடிபடுவதை நன்கு அறிந்துகொண்டவன் அதற்கு விடுதலை கொடுக்கும் பொருட்டு “சரி டா,நான் சிரிக்கல…வா ரொம்ப பசியா இருப்ப போல் இருக்கு,சாப்பிடலாம்,இல்லனா இப்படி தான் கோவம் வரும்…”என்றான் இன்னும் சிறு கேலியோடு.

 

நந்து மீண்டும் அவனை முறைக்கவும் “டேய் போதும் டா,முறைச்சது,கண் வலிக்க போகுது…வா போலாம்..”என அவனின் தோள் மீது கை போட்டுக்கொண்டு அவனை சாப்பிட அங்குள்ள விடுதி ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே அழைத்து சென்றான்…

 

பிறகு இருவரும் தங்களது பள்ளி வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டு ,தாங்கள் செய்த கலாட்டக்கள்,இருவரும் சேர்ந்து அவர்களோட எதிரியான மூர்த்தியை படுத்தியபாடு என 30 நிமிடத்தில் சாப்பிட்டு எழுவ வேண்டியவர்கள் 2 மணி நேரம் கழித்தே எழுந்தனர்…

 

பின் நண்பர்கள் இருவரும் கல்லூரி வளாகத்திற்கு பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்..பெண்கள் இருவரும் இவர்களுக்காக அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தனர்…

 

“என்ன ஸ்ரீஸ்,சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா…”என்றான் நந்தலன்.

 

ஸ்ரீஸ் இருவரும் ஆம் என தலையை உருட்டினர்..அவர்கள் செய்த செயலில் ஆண்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்…

 

பெண்கள் அவர்களை முறைக்கவும் சட்டென்று தங்கள் சிரிப்பினை அடக்கி கொண்டவர்கள்  “ஏன் ..”என்றனர் கோரசாக…

 

“சாப்பாடு நல்லாவே இல்லை…உவ்வே…”என அதே போல் கோரசாக பதில் சொல்லினர் இருவரும்…வருவும் நந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்…. பின் வரு தான் பேசினான் “அது ஒண்ணும் இல்லை,புதுசு இல்ல அதான் இப்படி இருக்கும்,போக போக சரியாகிடும்…”என்றான் சமாதானமாய்….

 

“அச்சோ அப்படின்னா புது மாஸ்டரா,அது தான் இப்படி சமைக்கிறாரா,,போக போக நல்லா சமைப்பாரா…”என்றாள் ஜெயஸ்ரீ ஆர்வமாய் சிறு குழந்தை போல…

 

அவளின் குழந்தை போன்ற பாவனையில் சில நொடிகள் தன்னை தொலைக்க இருந்தவன்,அவள் சொல்லிய விதத்தில் தன்னுள் உண்டான சிரிப்பினை அரும்பாடுபட்டு அடக்கிகொண்டு “நான் அப்படி சொல்லல,மாஸ்டர் எல்லாம் பழசு தான்,ஆனா நீங்க புதுசு இல்ல,இனிமேல் போக போக இதையே சாப்பிட்டா பழகிடும்,அந்த அர்த்தத்துல தான் சொன்னேன்…”என்றான் சாதாரணமாக…

 

ஜெயஸ்ரீயோ அவனின் பதிலில் “ஞே..”என விழித்துக்கொண்டு இருந்தாள்…அவளின் முகபாவனையை கண்டு இப்போது மூவரும் வாய்விட்டு சிரித்தனர்…

 

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்..”என பொய்யாக சிணுங்கவும் “ஹோய்..போதும் டா,என் அத்தை பொண்ணும் பாவம்,ரொம்ப ஓட்டாத அவளை..”என அவளுக்கு பரிந்துக்கொண்டு வந்தான்…

 

“என் நந்தினா,நந்தி தான்,நந்தி இனிமேல் எனக்கு தினமும் சாப்பாடு எடுத்துட்டு வரியா,எனக்கு இந்த சாப்பாடே பிடிக்கல,ஒரே கசப்பு,புளிப்பு…”என்றாள் கெஞ்சலோடு….

 

“என்னது …”என இப்போது அலறுவது நந்துவின் முறையானது…

தினமும் 2 மணி நேரம் பயணம் செய்து இவர்களுக்கு சாப்பாடு கொடுப்பது அவ்வளவு பெரிய காரியமில்லை தான் அவனுக்கு…

ஆனால் இவன் இப்படி செய்வது தெரிந்தால் ஸ்ரீஷின் அப்பாக்கள் மற்றும் அவனின் அப்பா மூவரும் பெரிய சொற்பொழிவினையே நடத்திவிடுவார்கள்…அப்போது நந்துவினை காப்பாற்ற யார் நினைத்தாலும் முடியாது..அதை எல்லாம் கேட்பது  என்பது அவனின் தலை எழுத்தாகிவிடும்…

 

முந்தைய காலங்களில் பெண்களை எல்லாம் வெளி ஊரில் உள்ள பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்புவது என்பதே ஒரு பெரிய விஷயமாய் இருந்தது…ஆனால் இன்றைய நவீன உலகத்தில் பெண்கள் எல்லாம் வெளி ஊருக்கு என்று மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள்,நாடுகள் என உலகத்தின் எந்த ஒரு மூலைக்கும் சென்று தன்னோட திறமைகளை திறம்பபட மற்றவர்கள் வியக்கும் வண்ணம் ஒவ்வொரு செயலினையும் செய்து வருகின்றனர்…

 

காவல் துறையில் இருக்கும் மகேஸ்வரனுக்கு தன் பெண்ணால் எந்த ஒரு விஷயத்திற்கும் யாரோட உதவியும் இல்லாமல் தனித்துவமாய் செயல்பட வேண்டும்..அதே போல் தன்னோட சொந்த காலில் அவள்  நிற்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவருக்கு உண்டு…பயம் என்ற ஒரு வார்த்தை அவளது அகராதியில் இருக்ககூடாது என எண்ணுபவர்…ஆனால் ஜெயஸ்ரீயோ அதற்கு எதிர்மறையாக பயம் என்ற ஒன்று மட்டுமே அவளுக்கு தெரிந்த ஒரு விஷயமாய் இருக்கும்…தன் காலின் மேல் தன் பாவடையில் இருக்கும் சிறு நூல் உரசினாலும் என்னவென்றுகூட பார்க்காமல் ஒரு வகையான பூச்சி தான் ஊறுகிறது என எண்ணி கத்தி அக்கம் பக்கத்தினரை கூட்டிவிடுவாள்…இவளின் பயத்தினை போக்கவே மகேஸ்வரன் சில பல கட்டுகதைகளை அள்ளி அளப்பார்…ஆனால் பலனோ பூஜ்ஜியமாய் மட்டுமே இருக்கும்…

 

அதன் நோக்கத்தில் மட்டுமே ஜெயஸ்ரீயினை மகேஸ்வரன் ஓசூரில் உள்ள கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்யபட்டது…சீதாராமனும் சுபாவும் சிறிது காலங்கள் வெளியில் இருந்தால் அவளது பிடிவாதகுணம் மாறி சிறிது பொறுப்பு வரும் என எண்ணி அவளையும் அதே கல்லூரியில் சேர்க்க விருப்பபட்டார்…

 

இரு வேறு காரணங்களால் தனது தந்தைமார்களின் கருத்துப்படி கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர்கள்,சிறிதும் எண்ணி பார்த்திருக்க மாட்டார்கள் ,இனி தான் சனி பகவான் தங்களுது வாழ்க்கையில் கபடி விடையாட போகிறார் என்று…தங்களது குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என எண்ணி செய்த பெற்றோர்களின் செயல்,காலத்தின் கோலத்தால் கலைந்து சின்னா பின்னமாய் போக போவது அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்…

 

சிட்டுகுருவியாய் சிறகடிக்க பறக்க ஆசைப்பட்ட பெண்களும் ஒரு நாள் சிறகொடிந்து இருப்போம் என எண்ணி இருக்கமாட்டர்கள் தான்..

மனிதன் நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்???…பிறகேது..??

கடவுள்….

 

இது தான் காலம் செய்யும் விதியின் சதியோ…விதியை மதியால் வெல்லலாம் என முன்னோர்கள் சொன்னாலும்,சில சமயம் மதியும் அதன் வேலையை செய்யாமல் விதியின் பிடியில் சிக்கிகொள்கின்றன…

 

இதில் ஜெயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் விதியின் வசத்தில் தங்களை தொலைத்து வாழ்க்கையினை இழப்பார்களா???இல்லை விதியின் வழியிலே சென்று விதியினை வெல்வார்களா??…காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…விதியின் செயலையும்,விளைவையும்,அதனோட சதியினையும்…

 

மனதோடு இருந்து

மயிலிறகாய் வருடுகிறாய்..

மனதை மயக்கும் வித்தை

தெரிந்து இருக்கிறது

உந்தன் நினைவிற்கு…

உன்னை நினைக்கும்போது

நெஞ்சில் சந்தோஷ சாரல்…

வானில் உள்ள விண்மீன்

எல்லாம் உந்தன் முகம்

கொண்டே பிறப்பெடுத்தது ஏனோ..??

என்னை இம்சை படுத்த தானோ..??

இம்சைகள் போதும் கண்ணா..

என் கண்ணில் ஒரு நொடி

உன் பிம்பம் பதிந்தாலும்…

என் கண் உன்னை அடுத்த நொடியே

படம் பிடித்து கொள்கிறது..

உன்னை மறந்துவிடுவேனோ

என்று எண்ணி அல்ல..

அந்த ஒரு நொடி கூட நீ

எந்தன் விழியில் இருந்து

விலககூடாது என எண்ணியே….

எந்தன் இமைகள் விலகாது

உன்னை கண்டு கொண்டு

இருக்கிறேன்..

ஒரு நிமிடம் உன் விழி

இமையை என்னை

நோக்கி திருப்புவாயா???

உந்தன் விழியில் ஒழிந்து கொள்ள

ஆசைபடுகிறேன்…

என் கள்வனே…

ஒரே ஒரு நிமிடம்

அனுமதிப்பாயாக….

அனுமதி வேண்டி

காத்திருக்கிறேன் உன்னிடம்…

இப்படிக்கு

உன்னை இதயத்தை என்றும்

களவாட நினைப்பவள்….

நித்தமும் உந்தன் நினைவில்

இருப்பவள்….

 

     

விலகல் தொடரும்…