முகவரி 7:
காலமும்.., நேரமும் …. எப்பொழுதும்…. யாருக்காகவும் நின்று கொண்டிருப்பதில்லை.இதைப் புரிந்து கொண்டவன் அறிவாளி ஆகின்றான்.புரியாதவன் ஏமாளி ஆகின்றான் வாழ்க்கையிடம்.
நிலா இன்றோடு வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.அவளது டிசைன்ஸ் சுதாகரனுக்கு மிகவும் பிடித்துப் போக..அது எம்.டி யின் பார்வைக்கு சென்று அவளது வேலையும் உறுதியாகிப் போனது.அதுமட்டுமின்றி சுதாகரனும்..,நிலாவும் இப்பொழுது நிஜ தந்தை..,மகள் போல் ஆகிவிட்டனர்..தங்களின் பாசப் பிணைப்பில்.
நிலாவை அந்த அலுவலகத்தில் அனைவருக்கும் பிடித்துப் போனது.அவளது குறும்பும்..,கலகலப்பான பேச்சும் அனைவரையும் கவர்ந்தது.எது எப்படி இருந்தாலும் நிலாவிற்கு ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது.அது அந்த கம்பெனியின் எம்.டி.யை இதுவரை அவள் பார்க்காததே காரணம்.அனைவரும் தங்கள் எம்.டி.யைப் ஆகா..ஓகோ..எனப் புகழ…எம்.டி.யைப் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆவல்..நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.ஆனால் எம்.டியைப் பார்க்கும் வாய்ப்பே அவளுக்கு வாய்க்கவில்லை.
அன்றும் அப்படித்தான்..சுதாகரனுக்கு உடம்பு முடியவில்லை என்று வேலையில் சற்று தடுமாறிக் கொண்டிருந்தார்.ஏதோ அவரிடம் கேட்க வந்த நிலா..,, அவரது நிலை பார்த்து…வருந்தினாள்.
என்னப்பா..நீங்க..? உங்களுக்குத்தான் உடம்பு முடியலை இல்லை..? அப்பறம் எதுக்கு ஆபீஸ் வந்திங்க..? என்றாள் கோபத்துடன் நிலா.
“இல்ல நிலா…எம்.டி.வேற ஊர்ல இல்லை…வழக்கமா அனுப்ப வேண்டிய செக் எல்லாம் பெண்டிங்க்..சரி அதை மட்டும் அனுப்பிடலாம்ன்னு வந்தேன் ” என்றார் சுதாகரன்.
அவரது குரலில் உள்ள சோர்வே…, அவருக்கு முடியவில்லை என்பதை எடுத்துக் கூற…நீங்க விலகுங்க…நான் பார்க்கறேன் அந்த வேலையை என்று.., அவளை மறுத்தவரையும்… சட்டை செய்யாது வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.அவளது செய்கையில் அவரது மனம் குளிர்ந்தது என்றாள்..,, அங்கே..அந்த செக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் மனம் அதிர்ந்தது.
என்னப்பா..இதெல்லாம்..?என்றாள் நிலா
எதும்மா…?
இல்லை..இதுல அனாதை ஆசிரமத்துக்கு ஐந்து லட்சம் டொனேஷன் போட்டு இருக்கு..! என்றாள் நிலா.
அது வழக்கம் தான் நிலா.., எப்பவும் கொடுக்குறது தான்…!! என்றார் அசிரத்தையாய்.
ஆனால் நிலாவின் மனம் அந்த செக்கையே பார்த்துக் கொண்டிருந்தது.பெயர் .., முகம்..,பெயர்.., தெரியாத அந்த எம்.டி…,நிலாவின் மனதில்.., மதிப்பில் உயர்ந்து கொண்டே போனார்.
அப்பொழுதுதான் அதில் இருந்த கையெழுத்தைப் பார்த்தாள்..கீழே சூர்யா என்று இருந்தது. சூர்யா..! என்று மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.அவளையும் அறியாமல் அந்த பெயர் அவளைப் பாதித்ததை அவள் மனம் அறிந்து இருக்கவில்லை.
————-
தீபாவிற்கு ..தன்னை ஜீவா பெண்பார்த்து சென்றதில் இருந்து மனம் ஒரு நிலை இல்லாமல் தவித்தது.அன்று அவன் வந்த போது பார்த்ததோடு சரி.அதற்கு பிறகு அவனைப் பார்க்கவும் இல்லை.அவனது தொலைபேசி எண்ணும் அவளிடம் இல்லை.அவளுக்கு ஒருபுறம் எரிச்சலாக இருந்தது.அது ஏன் என்று அவள் அறியாள்.
எனக்கு என்னாச்சு.., ! நான் ஏன் இப்படி இருக்கேன்..அவன் வந்தா என்ன..,? வராமல் இருந்தா..என்ன..? நான் நல்லாதான் இருக்கேன்… என்று அவள் தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.அந்த பேதை நெஞ்சிற்குத் தெரியவில்லை…தன் திருமணத்திற்கு தடை தன் தாய் தான் என்று தெரிந்து இருக்கவும் வாய்ப்பில்லை. அருளிடன் சென்று என்னவென்று கேட்கலாம் என்று அவள் நினைத்தாலும்…. ஏதோ ஒன்று அவளைக் கேட்க விடாமல் தடுத்தது. சரி என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்..! என்று எண்ணியவளாய் நாளைக் கடத்திக் கொண்டிருந்தாள் தீபா.
அருள் தனது ஆபீஸ் அறையில் உட்கார்ந்து தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்தான்.அவன் தீவிர சிந்தனையில் இருப்பதைப் பார்த்த முரளி….” என்ன அருள்…இவ்வளவு பலமான யோசனை…? என்றார்.
ஒன்னும் இல்லைப்பா…! என்று சமாளித்தவன்..அவரது துளைக்கும் பார்வையைத் தவிர்த்தவனாய் தலை குனிந்தான்.
என்ன …யோசனைன்னு சொன்னாதான் அருள் தெரியும்..! என்றார் கடினமாய்.
அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா…,, ” அன்னைக்கு பொண்ணுப் பார்க்க வந்தாங்க இல்ல..அதுல சூர்யாவை எங்கோ பார்த்து பழகிய முகமா இருக்கு…ஆனா..சரியா நியாபகத்துக்கு வரமாட்டேங்குது.அன்னைக்கு அவங்க வந்த உடனே..,, அம்மா..முகத்திலையும் கலகலப்பு மிஸ்ஸிங்..அவங்க முகத்துல சந்தோஷமே இல்லை.ஏதோ கடமைக்கு நின்னவங்க மாதிரி இருந்தாங்க.சரி அவங்க போனப் பிறகு ஏதாவது கேட்பாங்கன்னு பார்த்தா….,அதுவும் இல்லை.அவங்க தீபாவைப் பார்த்துட்டுப் போய் பத்து நாள் ஆகிவிட்டது.நீங்களும் அதைப் பத்தி ஒன்னும் பேசலை..தீபா… சின்ன பொண்ணுப்பா…,,அவளுக்கு ஜீவாவை பிடிச்சிருக்கு…அவளா வந்து எப்படிப்பா நம்மகிட்ட கேட்பா …..நாமதான் ஏதாவது ஒரு முடிவு எடுக்கனும்….. ” அதான்ப்பா யோசனையாய் இருந்தது…என்றான் அருள்.
முரளிக்கு தன் மகனை நினைத்து பெருமையாய் இருந்தது.எப்படி இந்த சின்ன வயதில் இப்படி தீர்க்கமாய்..பொறுப்பாய் யோசிக்கிறான் என்று..!
திடீரென்று வாய்விட்டு சிரித்தவர்…” அருள்..எவ்வளவு பொறுப்பான பிள்ளையாய் மாறிட்ட…ம்ம்ம்.நான் எங்கப்பா சும்மா இருந்தேன்..நானும் அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுட்டு தான் இருக்கேன்..கூடிய சீக்கிரம் நம் வீட்டில்..டும்..டும்..தான்.அதில் சந்தேகமில்லை. ஆனா நீ சொன்னதில் ஒரு விஷயம் உண்மைதான் அருள். சுதா கொஞ்ச நாளா..,,அவ அவளா இல்லை.எதையோ போட்டு மனசக் குழப்பிக்கிறான்னு நினைக்கிறேன். ஒருவேளை மகளை பிரிய வேண்டிய வருத்தம் இப்பவே வந்துட்டதோ என்னவோ..! நான் அவளிடம் பேசுறேன் அருள். ” என்றபடி மகனின் தலையைத் தடவியவாறு எழுந்து சென்றார் முரளி.
இவர்களின் பேச்சைக் கேட்டு ஒரு ஜீவன் மகிழ்ச்சி அடைந்தது என்றால்…மற்றொரு ஜீவன்… திகிலும்...., கலக்கமும் அடைந்தது.
தீபாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.எப்படி தான் நினைப்பதை தன் முகத்தை வைத்தே அறிந்து கொள்கிறான் தன் அண்ணன்..! என்று அவளுக்கு பெருமை பிடிபடவில்லை.
ஆனால் அங்கு சுதாவோ…!!! நிலமையின் தீவிரம் எண்ணி கலக்கம் அடைந்தார். இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால்..ஏன் .? எதற்கு..? என்று கேட்காமல் விடமாட்டார்கள்.அதே சமயம் இந்த கல்யாணம் நடந்தால்..? என்று அவரது மனம் பலவாறும் சிந்தித்துக் கொண்டிருந்தது.
அன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை தோழியின் வருகையை எதிர்பார்த்து பூமி கத்திருக்க..,மழையவள்.., நான் அவ்வளவு சீக்கிரம் வருவேனா..? என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்தாள்.இளம் தென்றல் குளுமையாய் வீச….அலுவலகம் முடிந்த வெளியே வந்த நிலா….,, அதை அந்த பருவ நிலையை ரசித்து… அனுபவித்தாள்.
மழை வரும் அறிகுறி…. அவளது மூளைக்கு எட்ட…,,வேகமாய் வண்டியை எடுத்தாள் நிலா. பாதி தூரம் செல்லும் போதே மழை வழுவாய் பிடித்துக் கொண்டது. இருந்தாலும் அவள் மழைக்கு ஒதுங்கவில்லை. அவள் எதிர் பார்த்ததும் அதுதானே..! எப்படியும் வீட்டுக்குப் போனால்.., அம்மா.. கண்டிப்பா மழையில் நனைய விட மாட்டங்க..!
அதனால்.., எவ்வளவு நனைய முடியுமோ..அவ்வளவு நனையலாம் என்று மனதில் நினைத்தவள்…ஸ்கூட்டியை வேண்டுமென்றே..மெதுவாக ஓட்டினாள்.
நிலாவிற்கு சிறு வயது முதலே மழை என்றாள் மிகவும் பிடிக்கும்.ஆனால் அவள் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்று ..,மாலா அவளை மழையில் விடவே..மாட்டார். ஆனால் நிலா..அதற்கும் நேர் மாறாய்..தன் அம்மாவிற்கு டேக்கா..கொடுத்துவிட்டு…மழையில் நன்றாய் ஆட்டம் போடுவாள்.அதையே இப்பொழுதும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் நிலாவிற்கு நடப்பது எல்லாம் ஏனோ.. அவள் நினைப்பதற்கு எதிர்மாறாய் இருந்தது. சாதாரணமாய் ஆரம்பித்த மழை …அதிகமாய் பெய்ய ஆரம்பித்தது.பேய் மழை என்று கேள்விப் பட்டு இருக்கிறாள்..ஆனால் இன்று தான் நேரில் பார்க்கிறாள்.அவளால் வண்டியயை செலுத்த முடியாதபடி…மழை வழுத்தது.எப்படியும் சமாளித்து சென்று விடலாம் என்று நிலா …மனதில் திடத்துடன் ஸ்கூட்டியை செலுத்த…அவள் மனதில் இருந்த திடம் அவளது வண்டிக்கு இல்லாமல் போனது தான் பரிதாபத்திற்குரிய ஒன்று.
நகரவே மாட்டேன்..! என்று அடம்பிடித்த வண்டியை ஓரம் கட்டி விட்டு…சரி மழை நிற்கவும் …ஒரு ஆட்டோ பிடித்து போகலாம்..என்று எண்ணி மழையில் நனைந்தவாறே நின்றிருந்தாள் நிலா.தனது செல்போனை எடுத்து தந்தைக்கு விவரம் சொன்னவள்..தான் சீக்கிரமாய் வந்து விடுவதாய் சொல்லி போனை வைத்தாள்.
“ச்ச்ச..என்ன நிலா…எல்லாமே உனக்கு எதிரா சதி செய்யுது…இந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ கூட காணோம்..!
“இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ..என்று அவள் மனம் புலம்ப…,,நிலா நீ எழுந்த உடன் கண்ணாடியில் உன் முகத்தைத்தான் பார்த்த..என்று மனசாட்சி அறிவுறுத்த..மனசாட்சியிடம் ஒரு அசட்டு சிரிப்பை சிந்தி விட்டு நிண்டிருந்தாள் நிலா.”
சரி யாரிடமாவது லிப்ட் கேட்டு போகலாம்..என்று எண்ணியவள்…அந்த வழியாக வந்த ஒன்றிரண்டு கார்களை நிற்குமாறு கையசைக்க…ஒரு காரும் நிற்கவில்லை. அவளுக்கு எரிச்சலாய் வந்தது.பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. இப்ப என்ன செய்றது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே..அவள் கை மறித்து நிற்காமல் முன்னே சென்ற கார் இப்பொழுது பின்னோக்கி வந்தது.அதைப் பார்த்த நிலா..பெருமூச்சு விட்டவளாய்..தனது ஸ்கூட்டியைப் லாக் பண்ணி சாவியைக் கையில் எடுத்தாள்.
காரில் ஓட்டிக்கொண்டு டிரைவரிடம் அனுமதி கேட்டு உள்ளே சென்று அமர்ந்தவள்..அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அதிர்ந்தாள்.ஆமாம் அங்கு அமர்ந்திருந்தது சாட்சாத் சூர்யாவே..!
முதலில் அவனைப் பார்த்து..கீழிறங்கப் போனவள்..,, ஆபத்திற்கு பாவமில்லை என்று அமர்ந்தாள்.
ஆனால்., சூர்யா ஒன்றும் சொல்லவில்லை.அவள் செய்வதை எல்லாம் ஒரு பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை..” என்ன புலி பம்மிகிட்டு வருது..எப்ப பார்த்தாலும் இவன் தான் எனக்கு உதவிக்கு வரும்படி இருக்கு..நிலா..உனக்கு டைம் சரி இல்லை அவ்வளவுதான்” என்று தனக்குத் தானே மனதிற்குள் நினைத்தபடி அமர்ந்திருந்தாள் நிலா.
சூர்யா…” இவகிட்ட ஒன்னும் பேசிடாத சூர்யா…அப்பறம் திருப்பி உனக்கே ஆப்பு அடிப்பா…” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு அமைதியாய் இருந்தான்.
முழுவதும் நனைந்ததால்..நிலாவிற்கு ..குளிர் உடம்பை வாட்டியது. அவள் குறுகி குறுகி அமர்ந்திருப்பதைப் பார்த்த சூர்யா…,பின்னால் திரும்பி தனது ஜெர்கின் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
நிலாவின் மனம் மறுக்க நினைத்தாலும் .., அவளின் கைகள் உடனே வங்கிக்கொண்டது. தேங்க்ஸ்..என்றாள் அவளுக்கே கேட்காத படி..
அவன் அவளை நக்கலாய் ஒரு பார்வை பார்த்தான்..அந்தப் பார்வையில் .., “நன்றிய.. இவ்வளவு சீக்கிரம் சொல்லிட்ட…?” என்ற பாவனை தொக்கி நின்றது.
அவனின் பார்வையில் கடுப்பான நிலா…தேவை இல்லாம ஒரு நன்றிய வேஸ்ட் பண்ணிட்டோம் என்று வருந்தினாள் .
“அவளை ஓரக் கண்ணால் பார்த்தான் சூர்யா…!! மழையில் நனைந்ததில் நடுங்கிய அவளது தேகம்…நிலவாய் ஜொலித்த அவது முகம்….அனைத்தும் அவளைப் பேரழகியாய்க் காட்ட…சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான் சூர்யா.அழகிதான்..ஆனா அழகுக்கு ஏத்தமாதிரி திமிரும் அதிகம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.”
சூர்யா..தன்னிடம் பேசாமல் வந்தது..நிலாவிற்கு என்னவோ ..போல் இருந்தது.
அவள் ஓரக் கண்ணால் அவனைப் பார்க்க…அவன் முகம் பாறையை விட கடினமாய் இருந்தது…” பிறந்ததுல இருந்து சிரிக்கவே மாட்டானோ..! மூஞ்சியப் பாரு…கொரில்லா குரங்கு மாதிரி…இவனெல்லாம் ஜூல தான் இருக்கனும்..” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்வதாய் நினைத்து நிலா..சத்தமாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“சூர்யா…நெருப்பாய் அவளை முறைக்கவும் தான் உரைத்தது…அவளுக்கு…தான் வாய் விட்டு புலம்பியது.அவளும் சளைக்காமல் அவனை முறைக்க..அவள் வீடும் வந்தது.”
நிலாவிற்கு ஒரே ஆச்சர்யம்,…” நாம் அட்ரஸ் சொல்லவே இல்லையே..? அப்பறம் எப்படி கரெக்ட்டா…டிரைவர் இங்க வந்து நிறுத்தினார்..? என்று தனக்குள்ளே..ஆயிரம் கேள்விகள் கேட்டவளாய்..இறங்கினாள்….. நிலா.அதற்குள் பிரபு குடையுடன் வர…நிலா..அவரிடம் நடந்தையும் ..தான் லிப்ட் கேட்டு வந்ததையும் எடுத்து உரைத்தாள்.
ரொம்ப நன்றி தம்பி..! என்று சூர்யாவிடம் உரைத்தவர்..வாங்க தம்பி..ஒரு காபி சாப்பிட்டு போகலாம் என்றார் பிரபு.
இல்ல சார்..பரவாயில்லை. என் வீடும் பக்கம் தான்..நான் போய்ட்டு வரேன் சார்… என்றான் சூர்யா.
அட என்ன தம்பி நீங்க..இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கிங்க…ஒரு காபி கூட சாப்பிடாமல் போனால் எப்படி..? என்னம்மா…? அப்படியே நிக்குற..அவரை உள்ள கூப்பிடு..என்றார் பிரபு.
நிலாவும் ..வேண்டா வெறுப்பாய் ..பல்லைக் கடித்துக் கொண்டு ..உள்ள வாங்க சார்..! என்றாள். அதற்கு மேல் மறுக்க முடியாத சூர்யா…இறங்கி சென்றான்.
உள்ளே..நுழைந்த சூர்யா..ஆச்சர்யப்பட்டான்..எளிமையான..அதே சமயம் அழகான வீடு…என்று மனதினுள் நினைத்தான்.
நிலா..வேகமாய் தனது அறைக்கு சென்று தனது ஈர உடைகளை மாற்றிக் கொண்டு வந்தாள். மாலா..,,சூர்யாவிற்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்.
“வாவ்…..ஆண்ட்டி காபி சூப்பர்…அப்படியே எங்கம்மா..மாதிரியே போட்டு இருக்கிங்க..” என்றான் மனதார.
அவனது பாராட்டில் குளிர்ந்த மாலா…ஒரு புன்னகையைப் பூத்தார்.
” என்னம்மா…! ஸ்கூட்டி பத்து நாளைக்கு முன்னாடிதான ரிப்பேர்ன்னு சொன்ன…இன்னைக்கு மறுபடியும் இப்படி மக்கர் பண்ணிடுச்சு…அன்னைக்கு மெக்கானிக் சரியா பார்க்கலையா..? ” என்றார் பிரபு.
“அன்று பொய் சொன்னது…,, நிலாவிற்கு இன்று எமனாய் மாறி கேள்வி கேட்டது. என்னாச்சுன்னு தெரியலைப்ப்பா…! என்று மென்று முழுங்கினாள்.”
சூர்யாவிற்கு…நிமிடத்தில் எல்லாம் நியாபகம் வந்தது.பத்து நாளைக்கு முன்னால் என்றால்…அந்த ஷாப்பிங்க் மாலில் ., யாரோ..துரத்த ஓடினாளே.. அப்பவா இருக்குமோ..என்று ஆராய்ந்தான். அதை ஏன் வீட்டில் சொல்லாம..,, ஸ்கூட்டி ரிப்பேர்ன்னு பொய் சொல்லனும்..என்று மனதில் ஆராய்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
ஆனால் சூர்யா தன்னை ஆராய்ச்சியுடன் பார்ப்பதை நிலா அறிந்திருக்கவில்லை.
சூர்யாவும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்..மாலா வாயைத் திறந்து பேசவே இல்லை.ஒரு வேளை நாம் வந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லையோ…! என்று நினைத்தவன் தன் சந்தேகத்தை வெளிப்படையாகவேக் கேட்டுவிட்டான்.
அங்கில்..தப்பா எடுத்துக்காதிங்க…நான் வந்ததில் இருந்து ஆண்ட்டி ஒரு வர்த்தை கூட பேசலையே..! ஒரு வேளை நான் வந்தது எதும் பிடிக்கலையா..? என்றான் சூர்யா.
அவனது கேள்வியில் மூவரும் திகைத்து நின்றனர்.முதலில் சுதாரித்தவர் பிரபு..”ஐயோ தம்பி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..அது வந்து..என் மனைவிக்கு பேச முடியாது.அவள் ஒரு ஊமை…” என்றார் பிரபு கஷ்டப்பட்டு.
மாலாவைப் பார்த்தால் சூர்யாவிற்கு ஊமை போலவே தெரியவில்லை.அதற்கேற்றார் போல் அவரும் சிரித்த முகமாய் தான் இருந்தார்.ஆனால் அந்த செய்தி அவனுக்கு சற்று அதிர்ச்சிதான்.
“சாரி அங்கில்…சாரி ஆண்ட்டி..” என்றான் சூர்யா.
“இதுல என்ன இருக்கு தம்பி…இடைல ஏற்பட்ட ஒரு விபத்துல இப்படி ஆகிவிட்டது..என்றார் பிரபுவும்.”
சரி அங்கில்.., எனக்கு நேரம் ஆகிட்டது.வீட்ல அம்மா வேற காத்திட்டு இருப்பாங்க..அப்ப நான் வரேன்..என்றவாறு விடை பெற்று சென்றான் சூர்யா
அவன் சென்ற பின்..பிரபு..ஐயோ இதை மறந்துட்டனே…! என்றார்.
என்னப்பா மறந்திங்க..? என்று வினவினாள் நிலா.
அந்த தம்பி பேரக் கூட கேட்கலையேம்மா..பேச்சில அப்படியே மறந்துட்டேன்..என்றார் கவலையாய்.
நிலாவிற்கும் அப்பொழுதுதான் தோன்றியதுய்…நமக்கும் அவன் பேர் தெரியாதே…எத்தனை முறை உதவி பண்ணி இருக்கான்..அவன் பெரைக் கூட கேட்கலையே..? என்று நினைத்தாள்.
“அவன் செய்த உதவிக்கு.., நீ….. முதல்ல ஒழுங்கா நன்றி சொல்லி இருந்தால்தானே…பேரைக் கேட்க தோன்றும் !!என்று அவளது மனசாட்சி அவளை இடிந்துரைத்து.
அங்கு சூர்யாவும் அதைத்தான் நினைத்தான்…”அந்த திமிர் பிடிச்சவ பேர் என்னன்னு தெரியலையே…? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.”
மாலா…நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க…பிரபு அவரை சமாதானப் படுத்தும் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.
“நிலாவோ..சூர்யாவை மனதினுள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். எல்லாம் இவனாலதான்..வந்தமா காபி குடிச்சமான்னு போகாம…தோண்டி …துருவி..அம்மா இப்படி பழசெல்லாம் நினைக்கும் படி ஆகிட்டதே..!!! என்று உள்ளுக்குள் குமுறினாள் நிலா.”
பழைய சம்பவங்களை..நினைத்துப் பார்த்தவளுக்கு…தன்னை அறியாமல் மேனி நடுங்கியது.
அந்த வீட்டில் இருந்த மூன்று ஜீவன்களும்…நடந்து முடிந்த…சம்பவத்தை நினைத்து ..ஆளுக்கொரு மூலையில் இருந்தனர்.அவர்களின் மனதில் இருப்பதை யார் அறிவார்..?
——————
மொட்டை மாடியில் நின்றிருந்த அருள்…நிலவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.” நிலா..என்ன பண்ணிட்டு இருப்பாங்க…..! இந்த நிலா..அழகா…? அந்த நிலா அழகா..? என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.
அவனைத் தேடி அங்கு வந்த தீபா…” நிலவைப் பார்த்து தீவிரமாய் எதையோ யோசித்துக் கொண்டிருந்த அருளை.., பின்னால் இருந்து முதுகில் தட்டியவள்…என்ன புரோ..எதைப் பார்த்து இப்படி ஒரு சிந்தனை..,என்றாள் கிண்டலுடன்..”
சும்மாதான் குட்டிமா..அப்படியே காற்று வாங்கலாம்ன்னு வந்தேன்..என்றான் அருள் மலுப்பலாய்.
“காற்று வாங்கப் போனேன்..நல்ல கவிதை வாங்கி வந்தேன்..” என்று தீபா ராகத்தோடு பாட…,அவளது தலையில் செல்லமாய் கொட்டினான் அருள். வர வர உனக்கு வாய் அதிகமாகிவிட்டது தீபு என்றான்.
“நான் என்ன அண்ணா பன்றது..! வாய் பேசினாதான்.. என்ன உன் தங்கைன்னே வெளிய ஏத்துக்கறாங்க…”என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
அம்மா தாயே..!! தெரியாம சொல்லிட்டேன்..ஆள விடுமா..என்று கும்பிடு போட்டான் அருள்,
என்னடா…நிலாவையே வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்க..? ம்ம்ம்..என்ன விஷ்யம் என்றாள் தீபா..மிரட்டும் பாணியில்.
தீபு இங்க வாயேன் என்று அவளை தன்னருகில் இருத்திக் கொண்டவன்…” அங்க பாரு ..அந்த நிலாவைப் பார் என்ன தெரியுது..? என்றான்.”
அவனையும் .., நிலாவையும் மாறி..மாறி பார்த்தவள்…ம்ஹீம்..ஒன்னும் தெரியலை என்றாள் உதட்டை பிதுக்கி.
நல்லா பாரு தீபு என்றான்..அருள்…ஆர்வமாய்.
ஹய்யா…!! பர்த்துட்டேன்…எனக்கு தெரியுது..தெரியுது..என்றாள்., குதித்துக் கொண்டே,…!
என்ன பார்த்த…கண்டுபிடுச்சுட்டியா..? என்றான் அருள்.
“ஐயோ…அண்ணா..நீ எங்கயோ போய்ட்ட…! நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையப் பத்தி.., கேள்வி தான் பட்டுருக்கேன்..இன்னைக்கு உன் புண்ணியத்தால நேர்ல பார்த்துட்டேன்..” என்றாள் குதித்துக் கொண்டே..
தீபுஊ..என்று பல்லைக் கடித்தான் அருள்.அவனை வினோதமாய் பார்த்த தீபா..” அப்பறம் என்னடா…நிலாவைப் பாரு ..பருன்னா…,, நிலா என்ன பக்கத்து வீட்டு மொட்டை மடியிலா இருக்கு…பாக்குறதுக்கு….இதுக்குத்தான் மார்கழி பனியில மொட்டை மாடில நிற்க கூடாதுன்னு சொல்றது. இப்ப பாரு இருந்த கொஞ்ச நஞ்ச மூளையும் இறுகிப் போச்சு….”என்றாள் தீபா நையாண்டியுடன்.
வேண்டாண்டி…என்று மிரட்ட…..,, “என்னடா என் செல்லத்தை மிரட்டுற..?”என்று அங்கு வந்தார் முரளி.
அப்பா..அப்பா.. !! வாங்க அண்ணனுக்கு என்னமோ ..ஆகிவிட்டது.வந்து என்னன்னு பாருங்க..!! என்று தன் தந்தையை இழுத்து வந்தாள் தீபா.
கிளிஞ்சிடும்..என்று மனதிற்குள் அருள் நினைக்க..அங்கு தீபாவோ..” ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு எனக்கொரு அண்ணன் இருந்தானே…அவனும் இப்படி அரை லூசா போய்ட்டானே..! ஐயோ..கடவுளே..நான் என்ன செய்வேன்…” என்று ஒப்பாரி பாடல் ராகத்தில் தீபா..பாட…முரளி விழுந்து விழுந்து சிரித்தார்,”
“அருள் இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்ன…உன் மொத்த இமேஜும் டேமேஜ் ஆகிடும்…எஸ்கேப் ஆகு…ஆகிடு..என்று மனம் எச்சரிக்க..அப்பா..எனக்கு பசிக்குது நான் சாப்பிடப் போறேன்..” என்றாவறு கீழே ஓடிவிட்டான் அருள்.
பாவம்மா..பிள்ளைக்கு பசி ..என்று முரளி சொல்ல..” ஐயோ அப்பா..அவன் இப்பத்தான சாப்புட்டு மேல வந்தான் மறந்துட்டிங்களா,…நம்ம கிட்ட இருந்து சார் அப்படி சொல்லி எஸ்கேப் ஆகிறான்..அது கூட தெரியாம..நீங்க எல்லாம்.. என்று இழுத்தவள்…அப்பா எதுக்கும் நீங்களும் சீக்கிரம் கீழ வாங்க ..”என்று ரகசியம் போல் கூறினாள்.
ஏண்டா குட்டி ..? என்று முரளி கேட்க…
“இல்லை.., உங்களுக்கும் கூட மூளை கம்மிதான…. அதான்…. என்றவள்..அவர் புரிந்து கொள்ளும் முன் ஓடி விட்டாள்.பிறகு அவருக்கு அர்த்தம் லேட்டாய் புரிய ..அடிக் கழுதை என்றவர்..அவள் ஓடுவதைப் பார்த்து மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் சிரித்தார்.”
அவரது மகிழ்ச்சி நிலைக்குமா…?
முகவரி 8:
சூப்பர் அங்கில்…இந்த…டிசைன்ஸ் எல்லாம் அருமையா…அதே சமயம் புதுமையாவும் இருக்கு.கண்டிப்பா..,இந்த டிசைன்ஸ் எல்லாம் நல்லா ரீச் ஆகும். ரியலி சூப்பர் என்றான் சூர்யா மனம் முழுதும் மகிழ்ச்சியுடன்.
அவனது பதிலில் மனம் குளிர்ந்த சுதாகரன்…” தம்பி …இந்த டிசைன்ஸ் எல்லாம்..,நம்ம..ஆபீஸ்ல புதுசா ஜாயின் பண்ணியிருக்கிற நிலான்ற பொண்ணோடது.ரொம்ப நல்ல பொண்ணு . நல்ல திறமையான பொண்ணும் கூட…அது மட்டும் இல்லாம நம்ம கண்டிஷன்ஸ் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லிடுச்சு…” என்றார்.
அவரை வியப்புடன் பார்த்த சூர்யா…” உங்க தேர்வு எப்பவும் சோடை போகாது அங்கில்.அப்பறம் அந்த நிலாவை என்ன வந்து மீட் பண்ன சொல்லுங்க…நான் இன்னும் அவங்களை பார்க்கலையே..அதனால்தான்.”என்றான்.
நிச்சயமா தம்பி…, நீங்க பார்க்கத்தானே போறிங்க..! நான் வர சொல்றேன் என்றார் சுதாகரனும்.அப்பறம் தம்பி …என்று அவர் இழுக்க….
என்ன அங்கில் என்னமோ..சொல்ல வரிங்க..ஆனா தயங்குறிங்க….! சொல்லுங்க என்ன விஷயம்..என்றான் சூர்யா.
“அது ஒன்னுமில்லை தம்பி…இந்த ஜூவல்லரி பிஸ்னெஸ்ல நாம இறங்கனுமான்னு….. ஒரே யோசைனையா இருக்கு…இது வரைக்கும் நமக்கு அனுபவம் இல்லாத தொழில்.அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு…” என்றார்.
“நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு தெரியுது அங்கில்…இருந்தாலும் எனக்குள்ள…….ஒரு உந்து ஷக்தி.., என்னை இதில் இறங்க சொல்லி.. மோட்டிவேட் பண்ணிட்டே இருக்கு.என்னை அறியாமலேயே..எனக்கு இந்த தொழில்ல ஆர்வம்…ஒரு ஈடுபாடு…வந்துவிட்டது அங்கில்.கண்டிப்பா…இந்த பிஸ்னெஸ்லயும் நான் ஜெயிப்பேன் …என்னால் முடியும்..” என்றான் சூர்யா நம்பிக்கையாய்.
அப்படி ஒரு அவசியம் நமக்கு என்ன வந்தது தம்பி…இப்போ..இந்த பிஸ்னெஸ் நல்லாதான் போகுது.இனியும் அகலக் கால் வைக்கனுமா..தம்பி..?என்றார் சுதாகரன்.
“உங்க பயம் எனக்கு புரியுது அங்கில்…என்ன பன்றது இது என்னோட கனவு. தயக்கம் தான் எல்லா தோல்விக்கும் காரணம்.தயக்கத்தை விட்டுட்டு தைரியமா…ஒரு செயல்ல இறங்கனும்.அதே சமயம் அந்த தைரியம் அசட்டு தைரியமாவும் இருக்கக் கூடாது.தொழில் ஆரம்பிக்கிற எல்லாரும்.., அதில் வெற்றி அடையறது இல்லை அங்கில்.ஒரு தொழில்ல இறங்கும் முன்னாடி…அதோட நுணுக்கங்களையும் நெழிவு., சுழிவுகளையும் தெரிஞ்சுக்கிட்டா போதும்…நம்ம ஈஸியா ஜெயிச்சுடலாம்.கண்டிப்பா இந்த பிஸ்னெஸ் சக்ஸஸ் ஆகும்..என்றான் கண்களில் கூர்மையுடன்.
சுதாகரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த நம்பிக்கை ஒன்று மட்டுமே …அவருக்கு.., சூர்யாவிடம் பிடித்த விஷயம்.அவன் தொழில் ஆரம்பித்த நாட்களில் இருந்து…அவனுடன் இருப்பவர்.அவனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்கூடாய் பார்ப்பவர்.தந்தை இல்லாத அவனுக்கு…ஒரு வளர்ப்புத் தந்தையாய் இருந்து ..,அறிவுரைகளை கூறியவர்..இப்படி அத்தனை அம்சங்களிலும் நிறைந்திருப்பவர் சுதாகரன்.
அப்பறம் அங்கில்…”கஷ்டப்பட்டு வேலை செய்றவன விட.., ஸ்மார்ட்டா வேலை செய்றவன் தான் ஜெய்ப்பான்.இதுலா நான் இரண்டாவது வகையா இருக்கனும்னு ஆசைப்படுறேன்..” என்றான் சூர்யா..கண்களில் சிரிப்புடன்.
ஐயோ..! தம்பி நான் சரண்டர்…என்று சிரித்தவர்…,, நான் போய் நிலாவை வர சொல்றேன் என்றார்.
சாரி அங்கில் ..எனக்கு இப்ப டைம் இல்லை. ஜீவா..அந்த பெங்களூர் பார்ட்டிய பார்க்க போயிருக்கான். இன்னைக்கு அசோசியேஷன் மீட்டிங்க் இருக்கு.மறந்துட்டேன். நான் மீட்டிங்க முடுச்சுட்டு வந்து அவங்களை மீட் பண்றேன்னு சொல்லிடுங்க…என்றவாரு கிளம்பினான் சூர்யா.
——————————
இட்லி போதும் சுதா….என்றார் முரளி.ஆனால் அது சுதாவின் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை.முரளியின் தட்டில் இட்லியை அடுக்கிக்கொண்டே போக…முரளி..,சுதாவின் கைகளைப் பிடித்து உலுக்கினார்.
” சுதா..என்ன பன்ற..நீ இந்த உலகத்துல தான் இருக்கியா..? நானும் கவனிச்சுகிட்டுதான் இருக்கேன்…உனக்கு என்ன ஆச்சு…ஏன் எதையோ பறிகுடுத்த மாதிரி இருக்க…,,என்ன ஏதுன்னு சொன்னாதான தெரியும்., நீயா மனசுக்குள்ள போட்டு குழப்பிகிட்டு இருந்தா…எனக்கு என்ன தெரியும்…மனசு விட்டு பேசினாதான் தெரியும்..” என்றார் முரளி அமைதியாக.
அவரின் பேச்சைக் கேட்ட …சுதாவின் கண்களில் கண்ணீர் முத்தாக திரண்டது.”இப்ப இவர் கிட்ட என்னன்னு சொல்றது…சொன்னா..என்னை இவர் எப்படி எடுத்துப்பார்…கடவுளே…இப்ப நான் என்ன பன்றது..” என்று மனதிற்குள் நினைத்தவாறு…கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார் சுதா.
ஐயோ..! சுதா..இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு..கண்கலங்குற…என்னம்மா…! என்றார் பரிவாய்.
“உங்க இந்த அன்புக்கு..நான் தகுதியானவ கிடையாதுங்க…” என்று மனதில் சொல்லிக் கொண்டார் சுதா.
சுதாவின் அமைதியைப் பார்த்து முரளி நொந்தது தான் மிச்சம். பெருமூச்சு விட்டவராய்..” சரி சுதா..உனக்கு எப்ப சொல்லனும்ன்னு தோணுதோ..அப்ப சொல்லு…நான் ஒன்னும் கேட்கலை.. என்றவர்..,, அப்பறம் சுதா..நாம மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு தடவை போய்ட்டு வரனும்..எப்ப.., என்னன்னு…நீ சம்பந்தி அம்மாகிட்ட…போன் பண்னி கேட்டுடு…சரியா..” என்றாரு சென்றார் முரளி.
ஆனால் சுதாவின் நிலை தான் பரிதாபத்திற்கு உரியதாய் மாறிக்கொண்டிருந்தது.”உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்..” என்ற நிலை அவருக்கு.
“மேலே நின்று இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருளுக்கு… குழப்பம் தான் அதிகரித்தது.எதுக்கு அம்மா.., இப்படி இருக்காங்க. கொஞ்ச நாளா அவங்க சரி இல்லை..என்ன காரணமா இருக்கும்…, என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான்.”
“என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.எப்படியோ தீபாவின் கல்யாணம் பிரச்சனையின்றி நடந்தால் சரி …என்று நினைத்தவன்…, எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாமல் குழப்பத்துடன் நின்றிருந்தான்.”
அந்த மாலை வேளையில்….அந்த உணவகம் பரபரப்பாய் காணப்பட்டது.கண்கள் முழுதும் …பசியின் சாயல் தெரிய…சோர்ந்து போன உடலுடன்…கலையிழந்த மென்மையான முகத்துடன் உள்ளே ..நுழைந்தாள் அந்த பெண். பசி என்னும் நோய் அவளை வாட்ட…அங்கு ஓரமாய் இருந்த சேரில் அமர்ந்தாள் அவள்.
மேடம்..என்ன வேண்டும் ..? என்றார் பேரர்.
பேரரின் உடையையும்..அந்த ஹோட்டலையும் சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு…வயிற்றுக்குள்..பசியையும் மீறி பய உணர்வு வந்து போனது.
மேடம்…உங்களுக்கு என்ன வேணும்..? என்று பேரர் மறுபடியும் கேட்க…ம்ம்ம்..ஒரு தோசை..என்று பாதி வாய் திறந்தும்..திறக்காமலும் சொன்னாள்.
“பசி ருசி அறியாது என்பதற்கு இணங்க….என்ன சாப்பிட்டோம்..ஏது சாப்பிட்டோம் என்று தெரியாமல் ..அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தாள் அவள். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் தான் அவளுக்கு மீண்டும் பய உணர்வு படை எடுத்தது.இப்பொழுது பில்லுக்கு என்ன செய்வது.என்னிடம் பணம் இல்லையே..! என்று நினைக்கும் போதே…ஒரு விரக்தியான சிரிப்பு அவள் உதடுகளில் வந்து போனது.இப்ப என்ன செய்வது என்று அவள் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில்..,, பேரர் வந்து பில்லை வைத்து விட்டு போக…அவள் இதயம் எகிறிக் குதித்தது”.
சுற்றும் முற்றும் பார்க்க…அவளுக்கு முன்னால் வந்து அமர்ந்தான் அருள்.ஆனால் அவன் போன் பேசுவதில் பிஸியாய் இருக்க..அவளை கவனியாது விட்டுவிட்டான்.ஆனால் அதுதான் அவளுக்கு சாதகமாய் அமைந்தது.பில்லை அப்படியே வைத்துவிட்டு எழுந்தவள்…நேராக பில்லிங்க் கவுண்டரில் சென்று…என்னோட ஹஸ்பண்ட் வந்து பில் பே பண்ணுவார்.…..எனக்கும் அவருக்கும் சண்டை..அதான்… என்று அருளை கை காட்டியவள்..அவர் பதில் பேச இடம் தராது வேகமாய் சென்று விட்டாள்.
அவளது நடையும் .., பேச்சும் அவருக்கு சந்தேகத்தை விளைவிக்க..நேராக அருளின் அருகில் சென்றவர்…” சார் இப்ப இந்த டேபில்ல இருந்து வந்தவங்க உங்க மனைவியா..? என்றார்.”
மனைவியா..? என்ற அவரது கேள்வியில் அதிர்ந்த அருள்…” என்ன சொல்றிங்க…மனைவியா…எனக்கா..? யார் சொன்னது…” என்றான் சற்று அதிர்ச்சியுடன்.
அதோ ..போறாங்களே..! அவங்கதான் சார்..என் ஹஸ்பண்ட் பில் குடுத்துடுவார்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க சார்..அதான் கேட்டேன்..என்றார்.
யாராய் இருக்கும்..? என்று யோசித்தவன்..அவர் சொன்ன பில்லைக் கொடுத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் விரைந்தான் ..அவளைப் பார்க்க.ஆனால் அவன் சென்று பார்ப்பதற்குள் அவள் மறைந்து விட்டாள்.
அருள் ஓடி சென்று பார்க்க…அங்கு அவன் கண்டது..ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து… செல்வதற்கு தாயாராய் இருந்த நிலாவைத்தான்.யாரோ தன்னைப் பார்ப்பதை..அறிந்து நிமிர்ந்த நிலா…அங்கு அருள் நிற்பதைப் பார்த்து…எப்பொழுதும் போல் சிரித்தாள்.பதிலுக்கு அவன் சிரிக்க…,, டைம் ஆகிட்டது….வரேன் ..என்று சைகையில் சொன்னவள் சென்று விட்டாள்.
அருளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. “நிலாதான் என் மனைவின்னு சொல்லி…பில்லைக் கட்ட சொல்லிட்டு போறாளா..? அப்போ….நிலாவுக்கும் என்னை பிடிச்சிருக்கா….! “ என்று மனதில் நினைத்தவன்…ஹே…ஹூ..என்று குதித்தான்.
“யாருக்கு இணை யார் என்று….
விதி வந்து பதில் சொல்லுமோ…!”
ரோட்டின் ஓரத்தில் தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தவளைப் பார்த்து அதிர்ந்து வண்டியை நிறுத்தினாள் நிலா.
ஹேய்…என்று அவளை நிறுத்தியவள்…கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.”ஏண்டி இப்படி பன்ற….உன்னத்தான் நான் வெளிய வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல…என்றவாறு அவளைத் தாங்கிப் பிடித்தாள் நிலா…”.
நிலாவை அங்கு எதிர்பார்க்காத..அவள்..,, அவள் தான் ரம்யா. நிலாவைப் பார்த்தவுடன்…கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அருவி எனக் கொட்டியது. ” என்னால முடியலைடி…இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி பயந்து பயந்து வாழ்றது…. முடியலைடி..செத்துடலாம் போல இருக்கு …என்று கதறினாள் ரம்யா”.
அவளை அணைத்துக் கொண்ட நிலா…”அப்படி எல்லாம் சொல்லாத ரம்யா…எல்லாப் பிரச்சனையும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துதான் தீரும். இப்ப எதுக்கு நீ வெளிய வந்த..எதுன்னாலும் எனக்கு நீ போன் பண்ணி இருக்கலாம்ல… இவ்வளவு தூரம் நடந்தா வந்த…” என்றாள்.
அவள் முகத்தை ஏக்கத்துடன் பார்த்த ரம்யா..” நிலா…நான் வெளிய வரக்கூடாதுன்னுதான் நினச்சேன்…ஆனா என்ன பன்றது..உனக்கு போன் பண்ணினா லைன் கிடைக்கலை…என்னால பசி தாங்க முடியலைடி…என்று சொல்லிவிட்டு கதறி அழுதாள் ரம்யா…”.
அவள் பசி தாங்க முடியவில்லை என்று சொன்னதைக் கேட்ட நிலாவின் கண்களில் இருந்தும் கண்ணீர் அவள் அனுமதியின்றி வெளிவந்தது.எங்கே தான் கலங்கினாள்.., ரம்யா அதிகமாய் துவண்டு போவாள் என்று எண்ணிய நிலா…” வா ரம்யா..நாம இங்க இவ்வளவு நேரம் இருக்குறது சரி இல்லை…சீக்கிரம் வண்டியில் ஏறு..” என்றவாரு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய்….ஸ்கூட்டியை வேகமாய் செலுத்தினாள் நிலா.
இடையில் ஒரு கடையில் வண்டியை நிறுத்திய நிலா…ரம்யாவிற்கு தேவையான..சில பொருட்களை வாங்கினாள்.
ஒரு குறுகலான சந்தில் நுழைந்தவள்…அங்கு இருந்த சிறு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினாள்.ரம்யாவை உள்ளே சென்று விட்டவள்…” ரம்யா…ப்ளீஸ்..இனி எதுன்னாலும் எனக்கு போன் மட்டும் பண்ணுடி…தயவு செய்து வெளியே வராதடி..பிளீஸ்…இன்னும் கொஞ்ச நாள்..அதுக்கு அப்பறம் எல்லாம் ஒரு நாள் வெளிய வரும். எனக்கு இங்க உன்ன விடவே பயமா இருக்குடி…பேசாம நீ என் கூட வீட்டுக்கே வந்துடு..பிளீஸ்..” என்றாள் நிலா.
வேண்டாம் நிலா..என்றாள் வேகமாய் ரம்யா..”என்னால் ஏற்கனவே..நடந்த பிரச்சனைகள் போதும் நிலா..இனியும் நான் உங்களை கஷ்ட்டப் படுத்த விரும்பலை. அம்மா,அப்பாவை கேட்டேன்னு சொல்லு நிலா.அவங்க என் கண்ணுக்குள்ளயே இருக்காங்க.அவங்களை பத்திரமா பார்த்துக்கடி..என் தலை எழுத்து என்னவோ..அது படியே நடக்கட்டும்..என்றாள் விரக்தியாய்”.
உனக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டேன் ரம்யா…எல்லாம் இதுல இருக்கு…பத்திரமா இருடி…என்றவள் மனமே இல்லாமல் கிளம்ப எத்தனிக்க…”சீக்கிரம் கிளம்பு நிலா… உன்ன சுத்தியும் ஆபத்து கழுகு மாதிரி சுத்தும்..” என்றாள் ரம்யா.
சரி…பத்திரம்டி..என்று பலமுறை சொன்னவள்..தயக்கமாய் வெளியேறினாள்.
நிலா..சென்றவுடன் கதவை பூட்டிய ரம்யா..அப்படியே சுவற்றோடு சாய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினாள்.”எதற்காக…இப்படி ஒரு வாழ்க்கை…எதற்காக இப்படி ஒரு தண்டனை..அப்படி நான் என்ன பாவம் பண்ணேன்…கடவுளே..! என்னால் எல்லோருக்கும் கஷ்ட்டம்..யாருக்கும் நிம்மதி இல்லை..நான் பிறந்ததே தவறு…!” என்று கதறியவாறு அழத் தொடங்கினாள்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான புதிர்.கொண்டவர்களுக்கு கொடுப்பதும்….ஓடுபவர்களை விரட்டுவதும் அதற்கு கை வந்த கலை. விதியின் கைகளில் சிக்கி தவிக்கும் ஜீவன்களில் ரம்யாவும் ஒருத்தி.என்ன ஒரு வித்யாசம்…விதியுடன் சேர்ந்து சில ஆட்களும் துரத்துகிறார்கள்.விதியின் கணக்கை யார் அறிவார்..?
******************
ஏனோ அன்று நிலாவிற்கு மனம் சரி இல்லாமல் இருந்தது.அருகில் உள்ள அம்மன் கோவிலின் சன்னிதானத்தில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
மாலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.வீட்டிற்கு வந்ததும்..,, நிலா ..,”கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவரை… அழைத்து வந்தது மட்டும் தான் தெரியும் மாலாவிற்கு. தன் மகளின் முகத்தில் இருந்தே..ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் ஊகித்தார் மாலா.”
“நிலா வா..போய் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்..என்று அவை சைகையில் கூப்பிட…இல்லம்மா..! நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க..நான் இங்கையே இருக்கேன்..”என்றாள் நிலா.
” நிலாவின் மனது அடுத்து என்ன செய்ய வேண்டும் …என்றே தெரியாமல்.,.,எந்த திசையில் செல்வது என்று புரியாமல்…ஒரு முடிவைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தது.கடந்த கால நினைவுகள் அவள் மனதை ஆட்டிப் படைத்தது. என்னால் தான்…எல்லாம் என்னால் தான்…ரம்யா படும் துன்பத்திற்கு காரணம் நான் மட்டு தான்.என்னுடைய பிடிவாதம் தான் அவளை இந்த நிலையில் நிறுத்தி விட்டது…இனி நான் என்ன செய்ய போகிறேன்..இதை எப்படி தீர்க்கப் போகிறேன்..என்னால் அது முடியுமா…என்று நினைத்தவாறே..அம்மனைப் பார்க்க….நடப்பது எல்லாம் நன்மைக்கே…என்ற ரீதியில் புன்னகையித்த முகமாய் வீற்றிருந்தாள் அம்மன்.”
கோவிலுக்கு…தன் தாய் மகேஷ்வரியுடன் வந்த சூர்யா….பார்த்தது… நிலாவின் இந்த தோற்றத்தைத்தான்.
மனதி இருப்பதை தெளிவாய் எடுத்துக்காட்டும் முகமாய்…நிலாவின் முகம் தன் வேதனைகளை முகத்தில் தாங்கி நின்றது.
சூர்யா..” இப்ப எதுக்கு இவ இப்படி இருக்கா…எதும் பிரச்சனையா இருக்குமோ..? ” என்று மனதில் நினத்தவாறும்..அவளையே பார்த்துக் கொண்டும் சென்றான்.
என்ன சூர்யா…என்ன யோசனை..? யாரப் பார்த்துக்கிட்டே வர்ற…? என்றார் மகேஷ்வரி.
ம்ம்..அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…இது வேற யோசனை..என்றான்.
மகேஷ்வரி..” சூர்யா ..கோவிலுக்கு வந்தா..உன் யோசனை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு…சாமிய மட்டும் கும்பிடு சரியா..! என்றார் அதட்டலாய்..”.
சரிம்மா..தாயே,..மகேஷ்வரி..என்றான் கும்பிடு போட்டபடி… “என்னதான் சிரித்தாலும்…நிலாவின் அந்த வேதனை தாங்கிய முகம்..அவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது”.
தன் யோசனைகளில் இருந்த நிலா..சூர்யா வந்ததையோ..அவன் தன்னை யோசனையாய் பார்த்ததையோ…அறியவில்லை. அவள் மனம் முழுதும் ரம்யாவை சுற்றியே இருந்தது.
எல்லாரும் கிளம்பியாச்சா என்றார் முரளி. சீக்கிரம் சொன்ன நேரத்துக்கு போகனுமா ..வேண்டாமா..? என்றார்.
வெளியில் வந்த தீபாவைப் பார்த்து …” என்னமா உன் ஒப்பனை எல்லாம் முடிந்ததா..? போகலாமா என்றார் கிண்டலாய்.
அப்பா..என்று தீபா பல்லைக் கடிக்க…சுதா அமைதியாக வந்தார்.அவரைப் பார்த்த முரளி யோசனையுடன் நெற்றியை சுருக்க…அதைப் பார்த்த சுதா..தன் உணர்வுகளை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அப்பா…! தீபா..அவசியம் அங்க வரனுமா..? என்றான் அருள் கேள்வியாய்.
என்ன அருள்..நீ எந்த காலத்தில் இருக்கிற…இது எங்க காலம் மாதிரி இல்லை.என் பொண்ணு கண்டிப்பா வரனும்.அவளுக்கும் எல்லாம் தெரியனும்…மாப்பிள்ளையப் பத்தி…அவங்க வீட்டைப் பத்தி…எல்லாமே அவளும் பார்த்து புரிஞ்சுக்கட்டும்..என்றார் முரளி.
தீபாவின்…மனதிற்குள் அவளையறியாமல் சந்தோஷ காற்று வீசத் தொடங்கியது.அவளைப் பார்த்த அருள்..அவளை சீண்டும் பொருட்டு…,, இருந்தாலும் அப்பா..நான் என்ன சொல்றேன்னா..என்று இழுக்க…
“வேகமாய் அவன் அருகில் சென்ற தீபா.., அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினாள்.ஏண்டா..உனக்கு இந்த கொலை வெறி…கம்முன்னு வா..இல்லை நான் என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு” .
இங்க யாரோ..! கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னாங்க..அவங்களைப் பார்த்தியா தீபு..என்றான் அருள் சிரிப்புடன்.
ஐயோ..அண்ணா..போதும் பிளீஸ் என்று அவள்…கெஞ்ச…இதற்கு மேல் வேண்டாம் என்று விட்டு விட்டான் அருள்.
அம்மா…அவங்க எல்லாம் வந்துட்டங்கன்னு நினைக்கிறேன்…கார் சத்தம் கேட்குது என்றான் சூர்யா.சூர்யாவிற்கும் ..,மகேஷ்வரிக்கும் இருந்த படபடப்பு ஜீவாவிற்கு இல்லாமல் போனதுதான் அதிசயம்.
மகேஷ்வரி வேகமாய் சென்று அவர்களை வரவேற்க…அங்கு நின்றிருந்த முரளியைப் பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே சிலையென நின்றார் .
முரளியும்…அங்கு மகேஷ்வரியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது அதிர்ந்த தோற்றத்தில் இருந்து தெரிந்தது.
இருவரது பார்வைகளும்… ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன.
எண்ண அலைகள்.., புயலாய் மாறி இருவரிடத்தும் சுனாமியாய் சுழன்று அடித்தது.
நிலை மாறும் உலகில்…
நிலைக்கும் என்ற கனவில்….
வாழும் மனித ஜாதி….
அதில் வாழ்வதில்லை நீதி….