வாசலை நோக்கி நடந்து வந்தவள் அங்கிருந்தவனை பார்க்கவும் மனது படபடக்க, ‘ அவங்களா? இருக்காது…’ என்று மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக்கொண்டே மேலும் நெருங்கிட, அவனோ தலையை கோதியவாறு திரும்பினான்.
அவன் தானா? அவனா? என்று அவனின் கண் பார்த்து கேட்டவள், அவனின் கூற்பார்வை ‘அது நான் தான்’ என்று சொல்ல, அவளின் கை நீண்டது அவனை நோக்கி. அதற்கு ஏதுவாக அவனும் அவளை நெருங்க, அவளின் கை அவன் நெஞ்சில் பதிந்தது. அவளை பார்க்கும்போதே அவனின் இதயம் தடதடக்க அவள் கைப்பட்டதும், ‘ஹா’ என்று பறப்பது போன்ற உணர்வு அவனுக்கு. அவனின் இதயம் வேகமாக துடிக்க, அவளின் இதயத்துடிப்பு அதைப்போலவே வேகமெடுத்தது. இருவரும் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்க்க,
“அட ருத்ரன் தம்பியா?” என்று கேள்வியில் தேன்மொழி சட்டென தன் கையை எடுத்துவிட்டாள். அவளின் அத்தை தான். கண்மணி அவரிடம் அவளுக்காக பூவை கொடுத்துவிட்டிருக்க, அதனுடன் உள்ளே வந்தார்.
“வாங்க சித்தி” என்று ருத்ரன் மரியாதை நிமித்தமாக அவரிடம் பேச,
“நான் தான் தம்பி உங்களை வரவேற்கனும், என்ன தேனு? இங்க என்ன பண்ற? ” என்று கேட்டு இருவரையும் பார்க்க,
“டீ போட போறேன் அதான் அப்பாவுக்கு” என்று தேனு சொல்ல,
“நீ போ தேனு! நான் போடுறேன்… இந்தா இந்த பூவை வைச்சிக்கோ, உள்ள வாங்க தம்பி, எப்போ வந்தீங்க?” என்று தேனிடம் அவர் பூவை கொடுக்க, அதனை வாங்கிக்கொண்டவள் அவனை திரும்பியும் பாராது உள்ளே சென்றுவிட்டாள்.
அவர்களின் அழகிய தருணம் அப்படியே பாதியில் அறுந்துவிட, சற்று ஏமாந்து தான் போனான் ருத்ரன். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, “இருக்கட்டும் சித்தி. மாமாவைப் பார்க்க தான் வந்தேன். மேல இருக்காங்க போல” என்று சொல்லி அவன் அப்படியே திரும்பி மாடிப்படி ஏற, சர்வேஷ் அங்கு தான் நின்றிருந்தான்.
“வாட் ப்ரோ? செஹ்ரா நஹி டிக்ஹாவ்கே கியா?”(முகம் காட்டலையா?) என்று சர்வேஷ் வாய் பொத்தி சிரிக்க, அவன் வயிற்றில் ஒரு குத்துவிட்டான்.
“அவுச்…” என்று வயிற்றை பிடித்தவனின் கண்கள் கலங்கி இருந்தது. சற்று வேகமாக தான் குத்திவிட்டான் போல. ஏமாற்றத்தின் எதிரொலி.
“அதிகம் பேசாதடா!” என்று எச்சரிக்கை வேறு வந்தது.
“அண்ணா டேய்!” என்று திட்டியவன், “ஆனா ஒண்ணு… இன்னைக்கு இந்த மொழி சிஸ்டெர்ஸ் உன்ன வச்சு செய்ய போறாங்க. அவங்ககிட்ட எப்படி ரியாக்ட் பண்றனு பார்க்கதான போறேன்” என்று பேச,
எல்லாம் எங்களுக்கும் தெரியும் என்னும் விதமாக அவன் வாய் மேல் கை வைத்து காட்டினான்.
“டூ மச் டா அண்ணா…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக முணுமுணுத்து கொண்டே அவனோடு படி ஏறினான்.
“வாப்பா ருத்ரா” என்று சுந்தரம் அவனைப் பார்த்ததும் வரவேற்றார்.
“தேவிகா எனக்கு நேத்தே சொல்லிடுச்சு… தேனுக்கு தெரியாது”
“இப்ப தெரிஞ்சிடுச்சு மாமா” என்றான் சர்வேஷ். மீண்டும் அவனின் முதுகில் சத்தம் வரதாவாறு அடி வைத்தான் ருத்ரன். அவனின் அடியின் வலி தாங்க முடியாமல் முதுகை தடவியவாறு நின்றான் சர்வேஷ்.
“அது… மொழி! உங்களுக்கு டீ வேணுமானு கேட்க வந்தா… பார்த்திட்டு தான் வந்தேன் மாமா” என்று பின்னங்கழுத்தை தடவியபடி சொன்னான்.
சரி என்பதாக தலை அசைத்தவர், “இங்க எல்லாம் முடிஞ்சது… வாங்க கீழ போவோம். டீ குடிங்க” என்று சுந்தரம் இறங்க, அண்ணன் தம்பி இருவரும் அவரை பின் தொடர்ந்தார்கள்.
மூவரும் வீட்டிற்குள் நுழைய, சுந்தரத்தின் தங்கை ஒரு அறையிலிருந்து வெளி வர, அந்த அறையின் கதவு சாற்றப்பட்டது.
“உட்காரு ருத்ரா… சர்வா நீயும் தான். அம்மாடி செல்வி இவங்களுக்கு டீ கொடுமா” என்றார் அவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி.
மூவருக்கும் குடிப்பதற்குக் கொடுக்கப்பட, ருத்ரனின் பார்வை வீட்டை சல்லடை செய்தது. அவனின் லேசர் பார்வையிலும் தேன்மொழி அவன் கண்ணில் படவில்லை. எப்படி படுவாள் அவள் தான் மூடிய அறை கதவின் பின் இருந்தாளே.
கனியும், நிலனும் கோவில் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைய, நிலன் ருத்ரனை கண்டதும், “ஹை ப்ரோ” என்று கை நீட்டினான்.
“மன்னிக்கணும். உங்க கல்யாணத்துக்கு வர முடியல” என்று ருத்ரன் சொல்ல,
ருத்ரன் திரும்பி சுந்தரத்தைப் பார்க்க, “சும்மா கேலி பேசுறாரு ருத்ரா” என்றார் அவரும் சிரித்துக் கொண்டே.
அவனின் பார்வை அடுத்து கனியிடம் வர, “உண்மை தானே… இப்ப எங்க அக்காவையெல்லாம் காட்ட முடியாது. நிச்சியம் முடியட்டும் அப்புறம் தான் பேச்சு வார்த்தை” என்றாள் கனி முன்னெச்சரிகையாக.
“அதெல்லம் அவங்க எப்பவோ கண்ணும் கண்ணும் நோக்கியா பண்ணி… பல கதை பேசிட்டாங்க” என்று சர்வேஷ் சொல்ல, திரும்பி அவனை பார்வையிலே அடக்கினான் ருத்ரன்.
நிலனுக்கு புரிந்துவிட அவன் மௌனமாய் சிரித்தான். கனியோ என்னவென்று புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
அதற்குள் மேல் அங்கிருந்து பயனில்லை என்று ருத்ரன் உணர்ந்துக் கொண்டான். அவனின் மொழி இதற்குமேலும் அவனுக்கு தரிசனம் கொடுக்கமாட்டாள் என்று புரிந்துக்கொண்டவன், “உங்களை பார்க்க தான் வந்தேன் மாமா. அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க. கிளம்புறேன் மாமா” என்று எழுந்துக் கொண்டான்.
அவன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு சர்வேஷையும் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவர்கள் கிளம்பியதும் நிலன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தான். கனி தேன்மொழி இருக்கும் அறை சென்றாள்.
“ஆமா ஆமா… ஓடி வந்தாரு. ஆனா என்ன ஸ்லோ மோஷன்ல வந்தாரு. இப்ப தான் வந்து சேர்ந்திருக்கிறார்” என்றாள் தேனுவும் சளைக்காது.
அதில் இருவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு. இருவரும் ஒருபாடு சிரித்து முடித்திருக்க.
“எப்படி தேனு? அப்போ எப்போ காஷ்மீர்ல இருந்து கிளம்பியிருப்பாரு, எவ்ளோ நேரம் அவருக்கு லாங் ஷாட் வைக்கிறது” என்று கனி தீவிரமாக கேட்க,
“அது உன் இஷ்டம்”
“அப்படிங்கிற…”
“நாமளும் ஸ்லோ மோ வைப்போமா?” என்க,
“ம்ம்” என்றாள் புருவம் உயர்த்தி.
“ரைட்…. அவரை இன்னைக்கு உன் கால்ல விழ வைக்கிறேன்” என்றாள் சபதம் போல.
இங்கு இவர்கள் அவனை முட்டி போட வைக்க தீவிரமாக முன் யோசனையில் இருக்க, அது தெரியாத அவனோ அவளுடன் ஏற்பட்ட அந்த நொடிப்பொழுது நெருக்கத்தைச் சுகமாக அனுபவித்தான்.
அவள் கைப்பட்ட இதயத்தை மெதுவாக வருடினான். கண்கள் மூடி அவளின் ஸ்சபரிசத்தை மீண்டும் நூறாவது முறையாக நினைவுக்கோரினான். அவள் உள்ளங்கையின் சூட்டை அவனின் நெஞ்சம் உணர்ந்திருந்தது. அவளின் விரல்களின் நீளம், மற்றும் அவள் பட்டென விலக்கிக்கொண்டதில் அவள் நகங்களின் அழுத்தம் என்று அதனை எண்ணி எண்ணி ரசித்துக் கொண்டிருந்தான்.
“ருத்ரா பத்து மணிக்கு மாமா வீட்ல இருக்கணும். அதுக்குள்ள கிளம்பு டா” என்று அவன் அன்னை அவனின் சிந்தனையைக் கலைத்தார்.
” சரி மா” என்றவன் மீண்டும் படுக்கையில் வந்து அமர, “என்னப்பா” என்று அவனின் தலை கோதினார் தேவிகா. அப்படியே அவரின் மடி சாய்ந்தவன், “கொஞ்ச நேரம் மா… தூக்கம் வருது” என்று கண்கள் மூடிக்கொள்ள, மகன் எப்போது தூங்கினானோ என்று அவனின் தலையை வருடிவிட்டார்.
“மாத்தா ஜி! உன் மகன் வந்ததும் என்னைய கண்டுக்கல நீ” என்று அவரின் அருகில் வந்து அமர்ந்தான் சர்வேஷ்.
“நானா கண்டுக்கல, நீ தான்டா கண்டுக்கல. ஒரே ஊருக்குள்ள இருந்துகிட்டு வேற வீடு எடுத்து தங்கியிருக்க. என் பிள்ளை எப்பாவது தான் வீட்டுக்கு வரான். வர்ற நேரம் என்கூட தான் இருக்கான். அவன் என் பிள்ளை டா” என்றார் மிதப்பாக.
“ராஜமாதா…. அவன் கல்யாணம் ஆனதும் உன்னை கழட்டி விட்டிடுவான். இப்போ உன் மடியில படுத்துக்கிடக்கிறான், கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணி கால் அடியில தான் கிடப்பான்.” என்று சொல்ல,
கண்கள் திறந்த ருத்ரன் கை விரல் நீட்டி எச்சரிக்கை செய்தான். “அண்ணா டேய்! மம்மி ஜீ ரொம்ப இன்னொசென்ட். அவங்களை இப்படி ஏமாத்திரியே! அண்ணியைப் பார்த்தும் நீ டோட்டல் பிளாட். நான் தான் பார்த்தேனே” என்று மேலும் வம்பிழுத்தான்.
அப்படியே எக்கி அவனின் குரல்வளையை பிடிக்க, “ராஜமாதா என்ன பாத்துட்டு இருக்க? காப்பாத்து…” என்று இரும்ப, “விடு ருத்ரா” என்று அவனின் கையை விலக்கிவிட்டு, “நேரமாச்சு பாரு, எழுந்து கிளம்பு. வந்து எவ்ளோ நேரமானாலும் தூங்கு. டேய்! சின்னவனே! உனக்கு இருக்குடா. கல்யாணம் பண்ணிவை அப்படின்னு வருவ தான, உன்ன அப்ப பார்த்துக்கிறேன்” என்று தேவிகாவும் எழுந்துக் கொண்டார்.
ருத்ரன் சர்வேஷை பார்த்து நக்கலாக சிரிக்க, “மம்மி கியா போல்தி தும்”(என்ன சொல்றீங்க நீங்க) என்று அவரை கட்டி அணைத்து கெஞ்சினான்.
“அரே மா! யே தோ ஹமேஷா டிராமா கர்த்தா ரெஹ்தா ஹை. டிராமா கிங்!!” (இவன் எப்பவும் இப்படி தான் டிராமா பண்ணுவான்)என்று ருத்ரன் அவனை வார,
“அண்ணா நீ இப்படி ரூல்ஸ் மீறினா அண்ணி டம் போடும்!” என்றவன் அங்கில்லை ஓடியிருந்தான்.
பின்னே அவனிடம் யார் அடி வாங்குவது? காலையிலிருந்து இருமுறை நன்றாக வாங்கியிருந்தான். அதுவே இன்னும் வலித்தது. அவன் ஓடும் வேகத்தை பார்த்த ருத்ரனுக்கு தன்னால் சிறு வயதில் நடந்த சம்பாஷனை நினைவு வர, தலைக்கோதி அழகாக சிரித்தான்.
மகனின் வெக்கம் பூத்த முகத்தை கண்ட தேவிகாவுக்கு அத்தனை சந்தோஷம். மேலும் அவனை வெக்கம் கொள்ள வைக்குமாறு தேவிகாவும், “ஏன் ருத்ரா மருமக தமிழ் தான் பேசணும்னு ஸ்ட்ரிக் ஆர்டர் போட்டிருக்காளோ?” என்று கேட்க,
“ஆமா ஆமா… உங்க மருமக கொஞ்சம் இல்ல நிறைய தமிழ் பாகல்!(பைத்தியம்)” என்றான் இன்னும் மலர்ந்து.
“தெரிஞ்சது தெரிஞ்சது!! நீ அப்படி விழுந்து விழுந்து படிக்கும் போதே!” என்று சொல்ல, அவனுக்கோ மேலும் வெட்கம் வந்து தொலைந்தது.
மகன் வெட்கம் கொள்ளும் அழகைப் பார்த்த தேவிகா பூரித்துப் போனார். “ரொம்ப வெட்கப்படுற டா” என்று அவனின் கண்ணம் கிள்ளி கொஞ்சினார்.
“மா… முஜே!!” என்றவன் இந்தியில் சொல்லவந்ததை முழுங்கிவிட்டு, “போங்க மா. நான் குளிக்கப் போறேன்” என்று துண்டுடன் ஓய்வறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
“ஹையோ! என் கண்ணே பட்டிடும் போல” என்றவர் அவன் சென்ற திசையில் கைகளால் நெட்டி முறித்தார்.
கண்ணாடி முன் நின்றிருந்த ருத்ரன் தலை முடியை சரி செய்துக் கொண்டே தன் முகத்தை பார்க்க, அவனுக்கே வெக்க வெக்கமாக வந்தது. பொங்கிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் முதல் முறையாக தோற்றுப்போனான் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க பயிற்சி எடுத்த வீரன்.