தாயும் மகளும் உடனே கிளம்பி விட்டார்கள் அவர்களது குடும்ப ஜோசியரிடம்.ஜோசியர் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று அவர்கள் வந்த விஷயத்தை விசாரித்து, இருவரின் ஜாதகத்தையும் பார்க்க ஆரம்பித்தார். அவ்வப்போது நிமிர்ந்து ஐசு முகத்தை பார்த்துக் கொண்டார். ஜாதகம் இரண்டையும் பார்த்து முடித்ததும்
” ஈஸ்வரன் என்ன வந்து பார்க்கவே இல்லம்மா. நான் கூட கல்யாணதப்ப கேட்டேன் என்ன ஈஸ்வரா பொண்ணுக்கு கல்யாணம் ஜாதகம் பார்க்கவே இல்லையே. அதுக்கு உங்க வீட்டுக்காரர் மாப்பிள்ளைக்கு இதெல்லாம் நம்பிக்கை கிடையாதுன்னு சொல்லிட்டார். “
பகீர் என்றது நர்மதாவுக்கு.” சாமி.. இப்போ நீங்க பாத்துட்டீங்க தானே. எல்லாம் சரியா இருக்கு தானே சாமி” அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பது நர்மதாவின் குரலிலேயே இருந்தது. ஜோசியர் அவர்களை பரிதாபமாக பார்த்துவிட்டு
” எல்லாம் சரியா தான் இருக்கு. பையனுக்கு ரெண்டு தாலி யோகம்மா.. அது ஒன்னும் பிரச்சனை இல்ல. கல்யாணதப்பவே தெரிஞ்சிருந்தா மொத வாழை மரத்துக்கு தாலி கட்டி வெட்டிட்டு கல்யாணத்தை நடத்தி வெச்சுருக்கலாம். இப்ப கூட ஒன்னும் இல்ல ஒரு சின்ன பரிகாரம். திரும்பவும் நம்ம பொண்ணு கழுத்துல மாப்பிள்ளை தாலி கட்ட வெச்சா எல்லாம் சரியாயிடும்.” ஜோசியர் நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லியும், நர்மதா எவ்வளவோ மகளை சமாதானப்படுத்தியும், ஐசுவின் மனம் தெரியவில்லை.
நர்மதாவை வீட்டில் விட்டு விட்டு, அவள் அவளுடைய வீட்டிற்கு சென்றாள். ஆதி இன்னும் வீடு வந்து சேரவில்லை. வந்தவள் அப்படியே ஹாலில் அமர்ந்து விட்டாள்.. வெளியே மழை அடித்து வாங்கியது.
மாலை மயங்கி இரவு தொடங்கியது. ஐஸ்வரிய நந்தினியின் கைபேசி அடித்து ஓய்ந்தது. எதையும் பொருட்படுத்தாமல் அமர்ந்த இடத்திலேயே வெறுத்த பார்வையோடு அமர்ந்திருந்தாள்.மணி இரவு ஒன்பது ஆனது. ஆதி வீடு வந்து சேர்ந்தான். அவனது காரின் சத்தம் கேட்டும் அவளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
உள்ளே வந்த ஆதி” என்ன ஐஸ் இருட்டுல உக்காந்து இருக்க. வேண்டுதலா” வீடு முழுவதும் இருளில் மூழ்கியிருந்தது. ஆதி வந்து தான் விளக்கு போட்டான்.
” இவ்வளவு நேரம் நான் எங்க இருந்தேன்னு உங்களுக்கு தெரியாது? எப்பவும் டான்ஸ் ஸ்கூல்ல இருந்து நீங்க தான் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க. இன்னிக்கி நான் அங்கேயும் இல்ல. நான் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியாது. நீங்க என்ன தேடவே இல்ல தானே” அமர்ந்த நிலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் பார்வையை மட்டும் அவன் மீது பதித்து கேள்வி கேட்டாள் ஐசு.
அவள் முன்பிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்” நீ என்ன சின்ன பிள்ளையா. டான்ஸ் ஸ்கூல் வந்து பார்த்தேன். நீ கிளம்பிட்டேன்னு சொன்னாங்க. உனக்கு நிறைய தடவை போன் பண்ணேன். நீ அட்டென்ட் பண்ணல. நீ என்ன சின்ன பாப்பாவா தொலைஞ்சு போறதுக்கு. நீயே வீட்டுக்கு வந்துருவன்னு விட்டுட்டேன்.”
“அப்போ என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல”
” என்ன ஆச்சு ஐஸ் எதுக்கு ஒரு மாதிரி பேசுற. எதுவா இருந்தாலும் டைரக்டா கேளு. சுத்தி வளச்சு நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் என்னால பொறுமையா பதில் சொல்ல முடியாது”
” ஓ நேராவே கேட்கிறேன். உங்க மனசுல இன்னும் அந்த குழலி இருக்கிறாளா” எழுந்து அவன் முன்பு நின்று அவனது கண்களை நேராய் பார்த்து அவள் கேட்டு விட, அவன் அதற்கு சற்றும் அதிராமல்
” ஆமா இருக்கா” என்றான்..
” என்ன சொன்னீங்க அவ இன்னும் உங்க மனசுல இருக்காளா? அப்போ நீங்க தினம் அவள தான் நினைக்கிறீங்க? அவள தான் லவ் பண்றீங்க? உங்க மனசுல இன்னும் அவ மட்டும் தான் இருக்கா? அப்படின்னா எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிங்க? ஏன் ஆதி என் வாழ்க்கைய கெடுத்தீங்க.. ஏதோ ஒரு வேகத்துல என் கூட நீங்க குடும்பம் நடத்தியாச்சு. உங்களால் குழலிய மறக்க முடியல. அதனாலதான் டான்ஸ் காம்பெட்டிசன் காரணமா காட்டி என்ன விட்டு தள்ளி போனீங்க.
என்ன தொடரதுக்கு கூட குழலிக்கு செய்ற துரோகமா நினைக்கிறீங்க. எனக்குன்னு ஒரு கேரியர் அமைச்சு கொடுத்துட்டா, அதுக்கப்புறம் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீங்க குழலி கூட ஜாலியா இருக்கலாம்னு எல்லாமே பிளான் பண்ணி செஞ்சி இருக்கீங்க? ஜாலியா என்ன ஜாலியா அவள ரெண்டாவதா கல்யாணம் பண்ணவே ரெடியா இருக்கீங்க போல” பொரிந்து தள்ளி விட்டாள் ஐசு. அவளது கண்களில் கண்ணீர் நிற்காமல் கொட்டியது.
மனதில் மிகப்பெரிய அடி. அவளின் கேள்வி ஒன்றுக்காவது ஆதி இல்லை என்று பதில் சொல்லி விட மாட்டானா என்கிற தவித்து. ஆசையும் நீராசையும் போட்டி போட அவனது முகத்தை பார்க்க
” நானே இதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் ஐஸ். நீ புத்திசாலி.” அவளது காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை. பணம் இருந்தால் துரோகத்தை கூட தலை நிமிர்ந்து செய்யலாமா? கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறாளே.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், தலை நிமிர்ந்து, கண்கள் நிலம் நோக்காமல், தான் கூறும் வார்த்தை முன் நிற்பவளின் உயிரையே காவு வாங்குவதை சற்றும் பொருட்படுத்தாமல், எவ்வளவு இலக்குவாக சொல்லி விட்டான்.
நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது. கண்ணீர் கூட நின்று விட்டது. மூச்சு விட சிரமப்பட்டு இதழ்களை பிரித்தாள் ஐசு. இறுதி மூச்சு உள்ளவளை போல அவனை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆதி.. என் கூட குடும்பம் நடத்துன ஒரு நிமிஷம் கூட நீங்க என்ன லவ் பண்ணவே இல்லையா? உங்க மனசுல நான் இல்லையா? என்ன விட குழலி அழகா இருக்கான்னு தான் என்ன ஒதுக்கி வைக்க பாக்குறீங்களா?” ஆதி எழுந்து அவளுக்கு முதுகு காட்டி நின்றான். குற்றமுள்ள இதயம் குறுகுறுக்கிறது போல.
“ஐஸ்..உனக்கே எல்லாம் புரிஞ்சிருச்சு.. இதுக்கு மேல என்ன பேச வைக்காதே.போய் படு” அங்கிருந்து நகர பார்த்தான் ஆதி.
அவனது கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் ஐசு.
” முடியாது ஆதி நீங்க அந்த குழலிய கல்யாணம் பண்ண நான் ஒத்துக்கவே மாட்டேன். என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? நான் உங்க பொண்டாட்டி. ஊரறிய என் கழுத்துல தாலி கட்டிருக்கீங்க. அன்னைக்கு என்னமோ வாய் கிழிய பேசினீங்க. அவ உங்க வாழ்க்கையில முடிஞ்சு போனா அத்தியாயம்.
போனவ போயாச்சு. இனிமே உங்க வாழ்க்கையில நான் மட்டும் தான். ஐஸ்வர்ய நந்தினிக்கு மட்டும்தான் உங்க வாழ்க்கையில இடம் இருக்கு.” ஆக்ரோஷமாக ஆரம்பித்து மெதுவாய் முடித்தாள் ஐசு. ஆதியின் பொறுமை மொத்தமாய் காற்றில் பறந்தது. கோபம் தலைக்கேறியது.
போ போ என பைத்தியக்காரனை போல கத்தினான். அந்த வீடு முழுவதும் அவனது குரல் எதிரொலித்தது. வெளியே இடியுடன் கூடிய மழை. அந்த இடியின் சத்தத்திற்கு நிகராக கேட்டது அவனது குரல்.
“என்ன விட்டு போறியா.. ஏன் வேதாளம் மாதிரி என் கழுத்துல ஏறி ஒக்காந்து சாவடிக்குற?”அவன் ஹை பீச்சில் கத்திக் கொண்டே செல்ல
“நான் ஒன்னும் வேதாளம் மாதிரி உங்க கழுத்துல ஒக்காந்து உயிர எடுக்கல. நீங்கதான் வழுக்கட்டாயமா என் கழுத்துல தாலி கட்டி இழுத்துட்டு வந்துடிங்க”.. அவள் காற்றுக்கும் நோகாத குரலில் இயம்பினாள்.
சூறாவளியாய் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தவனுக்கு மேலும் போக்குவரத்து வசதி செய்து கொடுத்திட”பின்ன உன்னலாம் பாத்து லவ் பண்ணி ஒருத்தன் கல்யாணம் பண்ணிடாளும்.. மூஞ்சியாடி. இந்த மூஞ்சில முழிச்சிட்டு போன அந்த காரியம் விளங்குன மாதிரி தான். ச்சை என் நிம்மதியே போச்சு”..
“இந்த மூஞ்சில முழிச்சு தான் ஆகணும். நீங்க கட்டுனா தாலி இன்னும் என் கழுத்துல கெடக்கு”வார்த்தைகள் தந்தியடித்தன.
இறையை வேட்டையாடும் புலியின் வேட்கை அவனுக்கு. சட்டென்று அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை அறுத்தே விட்டான். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது போல கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அவன் செய்த காரியம் மன்னிக்க முடியாத ஒன்று.
கண்ணீரை சொரிய மறந்து விட்டது போலும். உயிருள்ள சிலையாக அவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.ஒரு நிமிடம் திட்டுக்கிட்டாலும் அவளது கரத்தை பற்றி இழுத்து வாசலில் தள்ளினான் அந்த மூர்க்கன்.
படிகலை தாண்டி விழுந்தவள் நேரம் காலம் உணரவில்லை. வானம் பொத்து மழை அடித்து ஊற்றி அவளை நிற்க விடாமல் செய்த போதும் மூடிய வாசக் கதவை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்ய நந்தினி..