“ஹே, என்னடி பண்ற?” எனப் பதறிக்கொண்டே கேட்டான் குரு.
“உன்கிட்ட பேசப் பிடிக்கல” என உதட்டைப் பிதுக்கினாள் செம்பருத்தி.
“அதைச் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே! எதுக்குடி அதை உடைச்ச?” எனக் கடுப்புடன் கேட்டான் குரு.
“என்னோட பலவீனத்தை முதன்முதலில் காட்டி கொடுத்தது இந்தப் போன் தானே!! அதான் பிடிக்கல, உடைச்சேன்” என்றாள் செம்பருத்தி.
“சரி, நான் எதுவும் கேட்கல, போதுமா!!” என்று ஓரடி முன்னால் வைத்தான் குரு.
“உன்னைப் பார்க்கப் பிடிக்கல!! ப்ளீஸ், வெளியே போயிடு!!” என முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஹப்பா, மனிதக் குரங்கு போயிடுச்சு போல” என்று அவள் திரும்ப… அருகில் இருந்தான், அதுவும் நெருக்கத்தில்.
“ஹே, என்ன பண்ற? ராஸ்கல்!!” என செம்பருத்தி அவனை அதிர்ந்து பார்க்க…
“என் அம்மாவுக்கு நான் ஒரு பையன்தான். நான் மட்டும் தான்!! என்னோட தம்பி வேணுமா உனக்கு?” என உதட்டைப் பிடித்து இழுத்தான், இரு விரல் கொண்டு.
“ஹே” எனப் புருவத்தை உயர்த்திப் பார்த்தாள் செம்பருத்தி.
“என் கூடத் தம்பியே பிறந்திருந்தாலும் சரி! எனக்கு முன்னாடி ஒரு அண்ணன் பிறந்திருந்தாலும் சரி! உனக்கு நான் தான்டி!!” என்றவன் அவளின் உதட்டைக் கவ்விக்கொண்டான் ஆவேசமாக.
செம்பருத்தி தன்னால் முடிந்த மட்டும் கையைக் கொண்டு தடுக்க முயற்சி செய்ய, அவளின் இரண்டு கைகளையும் ஒரே கையில் பிடித்தவன், உதட்டைக் கவ்வியபடி இன்னொரு கையால் தலையைத் தாங்கி இருந்தான். மூச்சு கொடுத்து, மூச்சு எடுத்து என ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டான் அவளிடமிருந்து முத்த மோகத்தை.
செம்பருத்தி உதட்டைத் துடைத்துக்கொண்டு, “ஆனால் கண்டிப்பா இதே போல் உங்களை கட்டியிருக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் தான் என்னோட வாழ்க்கை மொத்தமா முடிஞ்சு போச்சு. அடுத்த ஜென்மத்தில் கூட விடாமல் துரத்தி வருவேன்னு சொல்ற? நீயே இத்தனை மோசம்! அப்போ உன் கூடப் பொறந்தது இதை விட மிஞ்சியிருக்குங்க!” என்றாள் மூச்சு வாங்கியபடி.
ஆனால் அதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “அழகா இருக்க!! ரொம்பவே!! என்னால… கண்ட்ரோல் பண்ணவே முடியல” எனத் தலையைக் கோதிவிட்டபடி சென்றான் குரு.
அவளின் வீட்டில் இருந்து அனைவரும் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
வரதராஜனின் குடும்பம் வந்திருந்தார்கள். வரதராஜன், அவரது மனைவி திலகவதி, அவர்களின் பிள்ளைகள் தீட்சண்யன், திவ்யன், கீர்த்தனா என மொத்த குடும்பமும் வந்திருந்தது.
“அக்கா, வாங்க வாங்க! மாமா எப்டி இருக்கீங்க?” என விசாரித்த மணியம்மை, “செம்பருத்தி, வாடா கண்ணு” என அழைத்தார்.
“இதோ வரேன் அத்தை” என செம்பருத்தி வந்தவள் அவர்களைப் புரியாமல் பார்த்தாள்.
“இவங்கதான் உனக்கு பெரிய அத்தை!” என்றார் மணியம்மை.
“வணக்கம் அத்தை” எனக் கைகூப்பிக் கும்பிட்டாள் செம்பருத்தி.
“கண்ணு, நீ வந்து உட்காரு” என திலகவதி அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டவர், அவளுக்குப் பூ வைத்துவிட்டுக் கையில் தங்க வளையலைப் போட்டுவிட்டார்.
“அத்தை!!” என செம்பருத்தி மணியம்மையைப் பார்க்க…
“நானும் உன்னோட அத்தை தான் மருமகளே” என்றார் திலகா.
“வாங்கிக்கொள்” என மணியம்மை கண்களால் சைகை காட்டினார்.
“எதுவும் நல்ல செய்தி இருக்குதா கண்ணு?” எனத் தலையை வருடி விட்டார் திலகம்.
“அக்கா, நல்ல நேரத்துக்குத்தான் வந்தீங்க! ரெண்டு மாசம் தள்ளிப் போயிருக்கு” என்றார் மணியம்மை.
திவ்யன் எழுந்து கொண்டு, “சித்தி, எனக்கு முக்கியமா ஒர்க் இருக்கு. நான் குரு கிட்ட கால் பண்ணிப் பேசிக்கிறேன். அண்ட், அன்னி, பை, டேக் கேர்” என்று முகத்தைப் பார்த்தான்.
செம்பருத்தி மலங்க விழிக்க…
“அன்னி, பை சொல்லுங்க!!” எனக் கையை ஆட்டினான் திவ்யன்.
“ஹாங், பை பை!” எனக் கையை ஆட்டினாள் செம்பருத்தி.
மணியம்மை சிரித்துக்கொண்டே, “எங்க வீட்ல சுட்டிப் பையனே திவ்யன் தான். குருசேத்ரன் அண்ட் தீட்சண்யன் ரெண்டு பேருக்கும் எப்போவும் சண்டைதான். கீர்த்தனா வாலு எப்போவும் திவ்யன் கூட வம்பு பண்ணிட்டு இருப்பா.”
“நீ இன்னும் எதையும் மறக்கல மணி. எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்க” என்றார் வரதராஜன்.
“இப்போ எங்கே அவசரமா போற? நேத்துதானே ஃபாரின்ல இருந்து வந்த? டேய், நில்லுடா!” எனத் திலகவதி அழைக்க…
“மாம், எனக்கு ஒர்க் இருக்கு. நீங்க பொறுமையா டாட் கூட வாங்க” என்று விட்டுப் புறப்பட்டான்.
வரதராஜன் எழுந்து கொண்டு, “சரி, நாங்களும் புறப்படுறோம் மணி” என்றார்.
“ஏனுங்க மாமா, வந்ததும் போறீங்க? கொஞ்ச நேரம் இருந்து சாப்பிட்டுப் போகலாமே!!”
“இங்கே நம்மளா முக்கியம்? அங்கே அவங்களுக்கு எவ்ளோ வேலை இருக்கும்?” என்று கேலி பேசினார் திலகா.
“டாடி, நானும்” எனத் தீட்சண்யன் புறப்பட்டான்.
“நீ வரலையா?” என வரதராஜன் கேட்க…
“நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரேன். நீங்க போங்க” எனக்கூறி அனுப்பினார் திலகவதி.
“செம்பருத்தி, உனக்கு இருக்க ஒரே தங்கச்சி கீர்த்தனா தான். போய்ப் பேசுமா!! கீர்த்தனா குட்டி, நீயும் பேசும்டா!!” என்றார் மணியம்மை.
“கீர்த்தனா, வாங்க, போட்டோ பார்க்கலாம்” என செம்பருத்தி அழைத்துச் சென்றுவிட்டாள்.
திலகவதி முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள…
“என் மேலே கோபமா அக்கா?”
“உன் மேலே எனக்கு என்ன கோபம்?” என முகத்தைத் திருப்பினார் திலகா.
மணியம்மை அவரின் அருகில் வந்து அமர்ந்து, “அக்கா, நான் பெரிய இடத்துல பொண்ணு பார்த்து குருவுக்குக் கட்டி வைக்கல. எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தது. குருவுக்கும் தான். அதான் உடனே யாரையும் கூப்பிடாமல் கல்யாணம் பண்ணிட்டேன். நீங்க உங்க தகுதிக்கு என் வீட்டுக் கல்யாணத்துக்கு வருவீங்களோ வரமாட்டீங்களோ! மாமா எதுவும் சொல்லிட்டா என்ன பண்றதுன்னு தான் நான் சொல்லல. அதுக்கு மேல வேற எந்தக் காரணமும் இல்ல” என்றார்.
“ஆமா, பெரிய தகுதியா? நம்ம வீட்டுக்கு முன்ன வந்தவ நானு. எனக்குப் பிறகு வந்த நீ, இப்போ பேரக் குழந்தையை எடுக்கப் போற! ஆனால் எனக்கு? அந்தக் கொடுப்பனை இல்ல!! பெரிய இடத்துல இருக்கிறோம் அப்டின்னுதான் பேர். ஆனால் சல்லிக் காசுக்கு பிரயோஜனம் இல்ல” என்றார் வருத்தப்பட்டுக்கொண்டே.
“என்ன ஆச்சு அக்கா? எதுக்கு இப்படி உடைஞ்சுபோய் பேசுறீங்க?” மணியம்மை அருகில் வந்து கையைப் பிடித்தார்.
“தானாபதி பார்த்து சொன்ன எந்த மாப்பிள்ளையும் கீர்த்தனாவுக்கு ஒத்து வரல… இங்கே குதிக்கிற போல மாப்பிள்ளை வீட்டுல பிரச்னை பண்ணிட்டா? என்ன பண்றது? வெசனமா இருக்குது மணி. தீட்சண்யனுக்கு டாக்டர் பொண்ணு ரெடியா இருக்கு. ஆனால் திவ்யனுக்கு? அவனோட கண்டிசன் கேட்டால் ஏன்டா பெத்தோம்ன்னு இருக்கு?”
“என்ன சொல்றீங்க?” என மணியம்மை திடுக்கிட்டு கேட்க…
“அவனோட அட்டூழியம் தாங்க முடியல மணி!!”
“சரி, இப்போ என்ன பண்ணப் போறீங்க? மாமா என்ன சொல்றாரு?”
“உன்னோட மாமன் எதுக்கு லாயக்கு இல்ல!!” என அங்கலாய்த்துக்கொண்டார்.
“நம்ம உறவுக்காரங்க கிட்ட சொல்லலாமே?”
திலகவதி பெருமூச்சுடன், “கீர்த்தனாவை யாரும் கல்யாணம் பண்ணிக்க முன் வரல” என அழுதே விட்டார்.
“நான் வேணும்னா மாப்பிள்ளை பார்க்கவா? ஆனாலும் எனக்கு யாரைத் தெரியும்? என் மருமகள் வீட்ல கூட இன்னும் மூணு பொண்ணுங்க இருக்காங்க. அதுல நம்ம திவ்யனுக்கு கடைக்குட்டி சம்பூர்ணம் பொருத்தமா இருப்பா!! அவள் இரட்டைப் பிறப்பு. அவளோட அண்ணன் தர்மன் சிவில் என்ஜினீயரிங் முடிச்சிட்டு இப்போ இன்டென்ஷிப் பண்றான் பெங்களூர்ல. அடுத்து குருச்சேத்ரன் கிட்ட சேரப் போறான்” என்றார் மணியம்மை.
“அப்படியா?” எனத் திலகவதி கேட்க…
“ஆனால் நீங்க அவ்ளோ தூரம் இறங்கி வந்து கட்டிக்குவீங்களா? அவங்க வசதி கிடையாது. சொந்த வீடு கூட இல்ல. ஆனால் பிள்ளைகள் எல்லாரும் தங்கமான குணம். அதான் நான் என் பையனுக்குக் கட்டிக்கிட்டேன்” என்றார் மணியம்மை.
“அப்போ திவ்யனுக்கு அந்தப் பொண்ணைக் கட்டிட்டா என்ன? அப்படியே அந்தப் பையனை கீர்த்தனாவுக்குக் கட்டிட்டா சரியா இருக்கும்ல?” எனத் திலகவதி உற்சாகமாகக் கூற…
“இதுக்கு மாமா ஒத்துக்குவாரா அக்கா? அதைவிட கீர்த்தனா? திவ்யன்? நான் வந்து சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்” என மணியம்மை பின் வாங்கினார்.
“என்ன மணி, அவ்ளோதானா? நான் எங்கிருந்து அலையட்டும் மணி? இப்போவே தீட்சண்யனுக்கு 35 ஆகிடுச்சு. அந்த ஃபாரின் மாடு திவ்யனுக்கு வயசு 28 மணி. அந்த அடங்காச் சிறுக்கி கீர்த்தனாவுக்கு 22 வயசு. உன் பையனுக்கு 29 வயசுலயே கல்யாணம் பண்ணிட்ட… நான் எப்போ மணி இது மூன்றையும் கரை சேர்க்க?”
“அக்கா, எதுக்கும் நீங்க மாமாகிட்ட ஒரு வார்த்தை கேளுங்க” என மணியம்மை கூறிவிட…
“நான் முதல்ல தீட்சண்யன், திவ்யன் ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணம் பண்ணப் போறேன். நீ குருவுக்குப் பண்ணது போல மருதமலையில் பண்ணலாம்னு இருக்கேன். அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு கீர்த்தனாவுக்குப் பண்றேன். ஆனால் நிச்சயம் பண்ணிடுவேன் அவங்க ரெண்டு பேருக்கும்” என்றார் உறுதியாக.
“சரி அக்கா, உங்களுக்கு எது சௌகரியப்படுதோ அதை பண்ணுங்க” என்றார் மணியம்மை.
“கீர்த்தனா!!” எனத் திலகா மீண்டும் அழைக்க…
“மா, ஷட் யுவர் மௌத்! உனக்கு டிசிப்ளின் இல்லையா? எதுக்குக் கத்துற?” என மூக்கு வியர்க்க வந்தாள் கீர்த்தனா.