இரண்டு, மூன்று நாட்களாக ஒரே சோர்வாக இருந்தாள் செம்பருத்தி. திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தது. இறுதியாக அவளது வீட்டில் தான் மாதவிடாய் முடித்தாள். அதன் பின்தான் திருமணமே நடந்தது.
அன்று கருவாடு ஆசையுடன் தான் செய்து சாப்பிட நினைத்தாள். குருசேத்ரன் வந்து தடுத்து விட்டான். ‘எதற்கும் பரிசோதனை செய்து பார்க்கலாம்,’ என நினைத்தவள் கருவி கொண்டு சோதனை செய்ய, இரண்டு இளஞ்சிவப்பு நிறக் கோடுகள் வந்திருந்தது. உள்ளுக்குள் அளவில்லா ஆனந்தம்.
உடனே தன் கணவனுக்கு கூற வேண்டும் என நினைத்தாள். இதோ போன் செய்தும் கூறிவிட்டாள். குருசேத்ரன் வந்து கொண்டிருக்கிறான்.
குருசேத்ரனுடன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ என நினைத்தாள். அவன் மீது எப்படி ஈர்ப்பு வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. இந்த இனிமையான நினைவுகளை எண்ணிக் கொண்டிருந்தவள் மெல்லக் காலாற நடந்தாள்.
இதோ, வந்து விட்டான் குரு. தலையைக் கோதியபடி ஒவ்வொரு படிகளாக ஏறினான். ‘ம்ம்… தனக்குப் பிடிக்காத ஒருத்தி. தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க ஒரு குழந்தை!! தன்னிடம் உருகி நின்ற குலைகிறாள்.’ குருச்சேத்ரன் வாழ்க்கை மிகவும் திருப்தியாக இருந்தான்.
“சுப்ரியாவ இங்கே வரச் சொல்லட்டுமா?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் குரு.
மெல்ல எழுந்தவள் வெட்கப் புன்னகையுடன் நின்றிருந்தாள்.
“அதுக்கு அவசியம் இல்லை. 90 டேஸ் முடிஞ்சதுக்கு பிறகு ஹாஸ்பிடல் போகலாம். ஏன்னா, நார்மலா அப்போ தான் செக் பண்ணுவாங்க.”
“நீ என்ன பெரிய டாக்டரா? யார் அப்படி சொன்னது?” என குருசேத்ரன் அவளைப் பார்த்தான்.
“90 டேஸ் கழிச்சு வரச் சொல்றதுக்கு காரணம்… சில பேருக்கு கரு நடுவுல…” என செம்பருத்தி கூற வர…
“சட் அப்!” என கொஞ்சம் காட்டமாகக் கூறியவன். “நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ… குழந்தை பத்திரமா ‘லேண்ட்’ ஆகணும். அண்டர்ஸ்டான்ட்?”
செம்பருத்தி அவனை வினோதமாகப் பார்த்து, “ஸ்பேஸ்ஷிப்ல இருந்து தரையிறங்க சொல்ற போல இருக்கு,” என்றவள் முகம் சட்டென மாறிப்போய், “இந்த விஷயத்தை சொன்னால் சந்தோஷப்பட்டு என்னைக் கொஞ்சுவீங்கன்னு பார்த்தால், நீங்க என்னை திட்டுறீங்க!” என்றாள், முகத்தைத் திருப்பிக்கொண்டு.
நெற்றியைத் தேய்த்தவன். “ஹே… இல்லடி! சும்மா,” என்றவன் அருகில் நெருங்கி அவளை முத்தமிட்டான்.
“ஒண்ணும் வேணாம், தள்ளிப் போங்க.”
“எனக்கு வேணும்,” என அவனது கைகள் அத்துமீற ஆரம்பித்தது.
“சாரி, மிஸ்டர் குருசேத்ரன். இப்போ நான் மாசமா இருக்கேன். இதெல்லாம் பண்ணக் கூடாது.”
“வாட்?” என குரு அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“ஆமா! இந்த 90 days கேர்ஃபுல்லா இருக்கணும்,” என செம்பருத்தி அவனை விட்டு விலகினாள்.
“ஹே, என்ன தள்ளிப் போற?” என குருசேத்ரன் அவளின் கையைப் பிடித்தான்.
“உங்க பக்கத்துல நிக்க என்ன இருக்கு? போங்க, தள்ளிப் போங்க!… அத்தை இன்னிக்கு வந்துடுவாங்க. இப்போ நான் விஷயத்தைச் சொன்னா, என்னை கீழே இருக்க ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்க,” என்றாள் சிரித்துக்கொண்டே…
குரு முகத்தை அழுத்தித் துடைத்தவன். “சரி, பக்கத்துல வா!”
“என்னை…”
“உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன் டி! நீ வா! அட்லீஸ்ட் கிஸ், ஹக்,” எனக் கோபத்துடன் பார்த்தான்.
“ம்…ம்… ஆனால் ஹார்ஷா இல்லை… சாஃப்ட்,” என செம்பருத்தி கூற… அவளை இழுத்தான். அடுத்தடுத்து வேகமாக முத்தமிட்டான். கட்டியணைத்தான். அவளை வேலை வாங்கினான். கிட்டத்தட்ட சொல்லப்போனால் கை பாவையக்கி…
“குரு,” என சுப்ரியாவின் குரல் கேட்க, வாயைத் துடைத்துக்கொண்டு பாத்ரூமில் இருந்து வந்தவள், “எதுக்கு சுப்ரியா மேடம் வந்திருக்காங்க?” எனக் கேட்டாள்.
“இருந்தாலும் உன்னை செக் பண்ணணும். அப்போதான் எனக்கு நல்லாருக்கும்,” என அவளை மெதுவாகக் கீழே அழைத்துச் சென்றான்.
ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு பெருமூச்சுடன் சுப்ரியாவின் முன் அமர்ந்தாள் செம்பருத்தி.
“சுப்ரியா, உனக்கு பார்க்கத் தெரியுமா? இல்லை நான்…?” என குரு ஆரம்பிக்க…
“அப்புறம் எதுக்குடா என்னைக் கூப்பிட்ட?” என்று முறைத்துப் பார்த்தாள் சுப்ரியா.
“என்னங்க, அமைதியாவே இருக்க மாட்டீங்களா?” என செம்பருத்தி பொங்கினாள்.
எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் குரு.
“ம்ம்… நாளைக்கு ஹாஸ்பிடல் வாங்க. அண்ட், அடுத்த செக்கப் 90 நாள் கழிச்சு கூட்டிட்டு வா,” என்றாள் சுப்ரியா.
செம்பருத்தி குருசேத்ரனைப் பார்க்க… அவனோ வேறு புறம் பார்த்தான்.
“ஓகே, வாழ்த்துகள்,” என சுப்ரியா செம்பருத்தியை அணைத்து கூறினாள்.
செம்பருத்தியின் புன்னகை, அவள் சுப்ரியாவிடம் பேசுவது, இது அனைத்தும் ஒருவனுக்குப் புகைச்சலைக் கொடுத்தது.
“நீ என்னை நேம் சொல்லியே கூப்பிடு!” என சுப்ரியா சொல்ல…
“இல்லை மேம், நீங்க என்னோட பாஸ் தான்,” என செம்பருத்தி கூறினாள்.
“க்கும், நீ புறப்படு! உனக்கு வேலை இல்லை,” என குருசேத்ரன் கூற…
“எனக்கு வேலை இல்லை. நான் இன்னும் கொஞ்ச நேரம் இவள் கூட பேசிட்டு போறேன்.”
“நீ கிளம்பு, சுப்ரியா! அவளுக்கும் எனக்கும் வேலை இருக்கு. நீ கல்யாணம் பண்ணிக்கோ சீக்கிரமா! உன் புருஷன்கிட்ட போய் பேசு. என் பொண்டாட்டிகிட்ட பேசாத. நீ இப்போவே கிளம்பு!” என நின்றான் குருசேத்ரன்.
“யாருடா நீ?” என சுப்ரியா திட்டிக்கொண்டே எழுந்தாள்.
“நாங்க வந்துட்டோம்,” என மணியம்மையின் குரல் கேட்க…
சுப்ரியா சிரித்துக்கொண்டே, “ஆண்டி, நீங்க சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க,” என சிரித்துக்கொண்டே சுப்ரியா முன்னால் சென்றுவிட…
“என்ன விஷயம்?” எனக் கேட்டார் மணியம்மை.
செல்வியின் கண்கள் செம்பருத்தியைப் பார்த்துக்கொண்டே, “சம்மந்தி, நீங்க ஆத்தா ஆகிட்டீங்க! நான் அம்மச்சி ஆகிட்டேன்,” எனக் கூறினார்.
மணியம்மை ஒன்றும் புரியாமல் பார்க்க, செம்பருத்தி புன்னகையுடன் தலையாட்டினாள்.
‘பயங்கரமான லேடிதான். வளவளன்னு எத்தனை பிள்ளைங்க! அப்போ இதைகூட கண்டுபிடிக்க முடியாதா என்ன? கொஞ்சம் கூட டிசிப்ளின் இல்லை. பிள்ளைகளை வளர்க்க வக்கில்லை. என்னை மாதிரியே இளிச்சவாயன் இவங்களுக்கு வேணும். அதுவும் பணக்காரனா!’ என மனதுக்குள் நினைத்தான் குருசேத்ரன்.
மணியம்மை செம்பருத்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டவர் முத்தமிட்டுக் கொண்டாடினார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வேறு. “இந்த வீட்டோட ஒட்டுமொத்த சந்தோஷமும் உங்க பொண்ணுதான், சம்மந்தி!” என்றவர். “உனக்கு என்ன வேணும், கேளு,” என அவளின் தலையை வருடி விட்டார்.
அதற்குள் சாந்தா சமையலறையில் இருந்து உப்பு, மிளகாய் எடுத்து வந்து செம்பருத்திக்கு சுற்றிப் போட்டார்.
செல்விக்கு மிகவும் சந்தோஷம். செம்பருத்தி தன் கணவனைப் பார்த்தாள்.
“என்ன வேணும்னு கேளு!” என குருசேத்ரன் இரும…
“இந்த ரெண்டு மாசமும் நான் இங்கேயே இருக்கேன். எங்க வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்திட்டு வரவா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் முடியாது,” என குருசேத்ரன் வெடுக்கென கூற…
மணியம்மை அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “நீ போய் இருந்துட்டு வா மா! ஆனால், இன்னிக்கு போக வேண்டாம். ஒரு ரெண்டு நாள் அத்தை கூட இருந்திட்டு நீ அப்புறம் போ! ஒரு வாரம் என்ன? ரெண்டு வாரம் இருந்திட்டு வா! அங்கே உன் வீட்ல கலகலன்னு எல்லாரும் இருப்பாங்க. என்னோட பேரன், குழந்தை சந்தோஷமா பிறக்கணும். அதுக்கு நீ சந்தோஷமா இருக்கணும்,” என்றார்.
“இல்லை, செம்பா, நீ இங்கேயே இரு. மாப்பிள்ளைக்கு வருத்தமா இருக்கும்,” என செல்வி கூற…
“இல்லை, இல்லை ஆன்டி, அவள் வருவா! பட் ரெண்டு வாரம் வேணாம். ஒன் வீக் எனக்கு ஓகே. நானே கொண்டு வந்து விடுறேன்,” என்று விட்டு நகர்ந்தான் குருசேத்ரன்.
செம்பருத்தி ஒரு பெருமூச்சு விட்டாள். ‘கண்டிப்பாக அவள் அருகில் இருந்தால் ஒட்டிக்கொண்டு திரிவான், காரியக்காரன். அவன் நினைத்ததை அடைய எது வேண்டுமானாலும் செய்வான்.’
“அப்போ நான் புறப்படுறேன், சம்மந்தி,” என செல்வி எழுந்தார்.
செம்பருத்தி வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவள். அவளின் மொத்த குடும்பத்துக்கும் தான் கருவுற்றிருக்கும் விஷயத்தைக் கூறினாள். அனைவருக்கும் சந்தோசம்.
இரண்டு நாட்கள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினான்.
அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை அவளை அங்கு அனுப்ப… சாதாரணமாகவே அவளை அனுப்ப மாட்டான். இப்பொழுது தனது குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள். தலைவலி பயங்கரமாக இருந்தது.
மணியம்மையுடன் நெருக்கமாக இருந்தாள். இந்த சந்தோஷம் அனைத்தும் அவள் வீட்டுக்குச் சென்றதும் தலைகீழாக மாறப்போகிறது என்பதை அவள் அறியவில்லை.
“சரி, நான் புறப்படுறேன்,” என செம்பருத்தி கூற…
“இன்னிக்கு 14 தேதி காலை ஒன்பது மணி. நான் 21 தேதி காலையில் நாலு மணிக்கு உன்னை பிக்கப் பண்ண வருவேன். நீ என்கூட வந்துகிட்டே இருக்கணும்.”
“ஹாங்?” என செம்பருத்தி அவனைப் பார்க்க…
“என்ன? சொல்லு! எனக்கு பஞ்சுவல் ரொம்ப முக்கியம்,” என்றான் குரு.
“என்னை மிஸ் பண்றீங்களா? அதுவும் ரொம்ப!! நான் இல்லாம இருக்க முடியலை போல!!” எனப் புருவம் உயர்த்தினாள் செம்பருத்தி. அவளின் மனதில் உற்சாகம்தான்.
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!” என்றவன். “நீ ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு போகலையா?”
“இல்லை, என்னோட ட்ரெஸ் அங்கேயே இருக்கு. அண்ட், முக்கியமா…” என அருகில் நெருங்கி அவன் உதட்டில் முத்தமிட்டாள்.
குருசேத்ரன் கண்கள் அப்பட்டமாக விரிய… “நான் உங்களை மிஸ் பண்ணுவேன், ரொம்ப,” என மீண்டும் உதட்டில் முத்தமிட்டவள் அவனிடமிருந்து விலகி…
“பை பை! இனி ஒன் வீக் கழிச்சு பார்ப்போம்,” என்றவள் மெல்ல வெளியேற… அவளின் கையைப் பிடித்து இழுத்தவன். உதட்டில் முத்தமிட்டான் தீவிரமாக…
மூச்சு வாங்கிக்கொண்டே விலகியவள். “இதுக்குதான் ‘போறேன்னு’ சொன்னேன். தள்ளுங்க,” என மெதுவாகக் கீழே சென்றாள்.
“உன்னோட அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பி இருக்கேன்.”
“எதுக்கு?”
“உனக்கு எதுவும் தேவைப்படும், வாங்கிக்கோ!” என்றான்.
கிரெடிட் ஆன அமவுண்ட் 5 லட்சம்.
“எதுக்கு அஞ்சு லட்சம்?”
“மெயின் பேலன்ஸே என்னோட பொண்டாட்டி 10 லட்சம் வச்சிருக்கணும். இது கம்மிதான்,” என்றவன் அவளை அழைத்துச் சென்றான்.
போகும் வழியில் ஆயிரம் முறை கூறினான். “வண்டியை வீட்டுக்குத் திருப்பவா?” என்று.
செம்பருத்தி முறைக்க…
எதுவும் பேசாமல் இறக்கிவிட்டவன், அவளுடன் இறங்கினான்.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை,” எனப் பாரி அழைத்தார்.
“இல்லைங்க அங்கிள், எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு,” என்று விட்டு புறப்பட்டான் குரு.
இதோ, தாமரையை சைக்காட்ரிஸ்ட் நித்யாவிடம் அழைத்து வந்தாள் செம்பருத்தி.