”இதுல எங்கிருந்து நீ சொன்ன தகுதி வந்தது?” என இருபுருவம் தூக்கினான்.
”இல்ல, அது வந்து வெளி இடத்துக்கு போனால் ஃபேமிலி பாக்ரவுண்ட்..” என செம்பருத்தி ஆரம்பிக்க, ஏளனமாக சிரித்த குரு அவளை பார்த்து, ”என்னோட வீட்ல தானே அவள் இருக்கா? அவளோட பின்புலம் வச்சு நான் என்ன பண்ண போறேன்? அதுனால எனக்கு என்ன யூஸ்?” என்றான் குரு.
எப்படி பேசினாலும், ‘கேட் போட்டு லாக்’ செய்கிறான்.
”சரி, உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே! அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணீங்க?”
அவள் முகம் தீவிரமடைய, ”இது புடிச்சிருக்கு!” இச் முத்தம். ”இதுவும் பிடிச்சிருக்கு!” என இன்னொரு முத்தம் கீழ் உதட்டில். ”எச்சில் பிடிச்சிருக்கு” என கவ்வி கொண்டான்.
”நான் இன்னும் பேசி முடிக்கல.. பிடிக்காம எதுக்கு கல்..” என அவள் அவனை பார்க்க முயற்சி செய்ய, ”எப்படி இருந்தாலும் ஒருத்திய கல்யாணம் பண்ணனும். அது ஏன் நீயா இருக்க கூடாதுன்னு தோணுச்சு. அதுவும் உனக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும் டி! அதான் உடனே கல்யாணம் பண்ணிட்டேன்” என்றான் குரு.
”எனக்கு உங்களை பிடிக்காதுன்னு யாரு சொன்னா?”
”அப்போ பிடிக்குமா?” என இரு புருவம் தூக்கினான்.
”அது, அது வந்து..” என்று அவள் தயங்க, ”ஓகே” என்றவன் ஆக்ஷனில் இறங்கினான். ”நான்..” என அவள் ஆரம்பிக்க, ”என்னை பிடிக்குதா பிடிக்கலையா அப்டின்னு நானே உன்னோட கண்ணு, காது, மூக்கு, வாய் அதுக்கும் கீழே போய் கேட்டு தெரிஞ்சுகிறேன். இப்போதைக்கு மேடம்..” என உதட்டை கவ்வி கொண்டான்.
”அய்யோ! ட்ரெஸ்?”
”எஸ்! ட்ரெஸ்!! அது எதுக்கு!!” என உடைகளை கொஞ்சம் ஒதுக்கி ஒட்ட வைத்தான்.
”நீங்க இப்படி!! நான்..” என அவள் ஆரம்பிக்க, ”நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்ல நான். கல்யாணம் பண்ணிட்டு அப்படியே பார்த்திட்டு, தூர நின்னு வேடிக்கை பார்க்க.. ‘யூ ஆர் மை வைஃப்’, ‘அன்டர்ஸ்டான்ட்?’ சோ..” என அவளை மொத்தமாக களவாடிக்கொண்டிருந்தான் கட்டிலில்.
“உங்க கிட்ட நான் முக்கியமா பேசணும். இந்த கல்யாணத்தை பத்தி!!, அதுக்கு பிறகு.. இது இது இதையெல்லாம் வச்சுக்கலாமே?”
அவ்ளோ நேரம் எனக்கு பொறுமையில்ல. இப்போவே என அவனது செயலில் வேகம் கூட்டினான்.
”ப்ளீஸ், எனக்கு வெட்கமா இருக்கு. விடுங்க.”
”தாராளமா வெட்கபடு. ஆனால் விட மாட்டேன். எனக்கு பிடிச்சிருக்கு. ‘ஐ லைக் இட் டாமிட்’.. ‘யூ டாமிட்’” என கொஞ்சம் தலையை பற்றி உதட்டில் முத்தமிட்டான், ‘பிச்சு தின்னும் அளவுக்கு’.
அதற்கும் மேல் அவளால் பேச முடியவில்லை. மொத்தமாக அடங்கி போனாள்.
”ஹே ஹைபிஸ்கஸ்!”
”ஹாங்” என கிறக்கத்தில் அவனை பார்த்தாள் செம்பருத்தி. அவன் பேசுவது கேட்க கூட இல்லை. சட்டென அவன் என்ன சொன்னான் என்று சிந்தித்தாள். இது ஒண்ணு தான் கேடு என தோன்றியது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே அடுத்தகட்டம் சென்று விட்டோமே என்ற எண்ணத்தில் செம்பருத்தி இருக்க.. அதற்கு மாறாக இருந்தான் மன்னவன்.
குருசேத்ரன் நடத்திய கட்டில் போரில், பெண்மை தேன் சொட்ட, மொத்தமாக மதிமயங்கி, வெட்கம் விட்டு, அவன் வேகம் தாங்கி, பெண் பூவை பறி கொடுத்தாள் மொத்தமாக…
”ஆர் யூ ஓகே?” என உதட்டை கவ்வினான்.
”ம்ம்” என உடலை குறுக்கி கொண்டாள்.
”உனக்கு ஓகே வா? இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணனுமா?”
”ச்சீ! இதையெல்லாம் கேட்கிறீங்க?”
”உன்னோட திருப்தி எனக்கு முக்கியம்..”
”பிளீஸ்! பேசாமல் இருக்கீங்களா!!”
”ஓகே” என அவளை நோண்டினான். ”மீண்டும் மீண்டுமா..”
”இப்போ தான் ஸ்டார்ட் பண்ணிருக்கோம். நான் எதுமே பண்ணல.. நீ தான பேசாமல் இருக்க சொன்ன?”
”அப்டின்னா அமைதியா இருக்கணும்” என செம்பருத்தி சொல்லி முடிப்பதற்குள், இதோ புயலை போல அவளை மொத்தமாக சுழற்றி கொண்டான்.
”கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க. வலிக்கிற போல இருக்கு.” என்று வாய் விட்டே கூறிவிட்டாள் மலரவள்.
”ம்ம், சரி ரெஸ்ட் எடுத்துக்கோ” என அவளை இறுக்கி அணைத்து கொண்டு, நெஞ்சத்தை மஞ்சமாக்கினான்.
”என்ன பண்றீங்க?”
”ரெஸ்ட் கொடுத்திருக்கேன்” என்று அங்க லாவண்யங்களை கொண்டாடி கொண்டிருந்தான்.
அய்யோ விட மாட்டான் போலயே!! என செம்பருத்தி வேறு வழியில்லாமல் கண்களை மூடினாள். அது ஒரு நிமிடம் தான். ஆனால் விடிய விடிய, கட்டில் மெத்தை போல அவளும் அவனிடம் கசங்கி விரிந்தாள்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுப்பி அவளுடன் பாத்ரூம் சென்று, அரைமணி நேரம் குளித்து வந்தான்.
தூக்க கலக்கத்துடன் அவள் அமர்ந்து, வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
விடிய விடிய, கட்டில் மெத்தை போல அவளும் அவனிடம் கசங்கி விரிந்தாள்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுப்பி அவளுடன் பாத்ரூம் சென்று, அரைமணி நேரம் குளித்து வந்தான்.
“இன்னிக்கு விருந்துக்கு போறோம் தான?”என அவனை பார்த்து செம்பருத்தி கேட்க..
“ம்ம் நம்ம மட்டும் தான் போறோம், அண்ட் போறதுக்கு முன்னாடி” என அவளின் அருகில் நெருங்கினான்.
“இப்போவேவா?”
“பின்ன எப்போ?” என கேட்டு கொண்டே அவளை அணைத்தவன். கழுத்தில் முத்தமிட்டான்.
செம்பருத்தியின் உடல் அவனது குளிர்ந்த தேகம் பட்டு கொஞ்சம் நடுங்க, “என்னாச்சு?” என கேட்டு கொண்டே அவனது கைகள் ஊறியது அவள் வதனத்தில்..
அவனின் தொடுதலில் ஒரு நொடி மயங்கி நிற்கத்தான் செய்தாள்.
குருசேத்ரனின் கண்கள் அவளை அணு அணுவாக ஆட்கொள்ள ஆரம்பித்தது. கண்கள், மூக்கு, கண்ணம், உதடுகள் என அனைத்தையும் தொட்டு தடவி மோக திணறலுக்கு ஆட்படுத்தியவன். கன்னத்துடன் கன்னம் உரசினான்.
வேக மூச்சுடன் கண்களை மூடி இருந்தவள் அப்படியே உறைந்து நிற்க.. “போய் ப்ரஸ் பண்ணிட்டு வா!! அண்ட் அப்டியே குளிச்சிட்டு வந்திடு!! எனக்கு ஹைஜின் முக்கியம்” என்றானே பார்க்கலாம்.
‘நானா அருகில் வந்தேன்? இந்த மலைக்குரங்கு தானே என் பக்கம் வந்தான்’ என நினைத்தவள். வேகமாக குளிக்க சென்றாள். புத்தம் புது மலராக உடை கொஞ்சம் நனைந்தபடி வந்தாள்.
குரு அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து கொண்டே, “என்ன ட்ரெஸ் ஈரமா இருக்கு? என்ன பண்ண?” என புருவம் சுருக்கினான்.
“ஈரமா இருக்கா?” என உடையை பார்த்தவள். நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணேன்.
குருசேத்ரன் நெற்றியை நீவிக்கொண்டு நிற்க.,
“என்னாச்சு?” என விதிர்த்து பார்த்தாள் செம்பருத்தி.
“இப்போ என்ன அவசியம் வந்தது? அங்கேயே ட்ரெஸ் மாத்த?” என கடுப்புடன் கேட்டான்.
“அது அது வந்து எனக்கு சின்ன வயசில இருந்தே பழகிடுச்சு! எப்போவும் குளிச்சிட்டு பாத்ரூம்லயே ட்ரஸ் மாத்திடுவேன் அதான்” என்றாள் செம்பருத்தி.
“எனக்கு இப்படி இருந்தால் பிடிக்காது. அண்ட் அதை விட நீ உன்னோட ட்ரெஸ் ஈரமாகிடுச்சு. இது சரி இல்ல, இனி உன்னோட லைஃப்ல நிறைய மாற்றங்கள் வரும். நமக்கு இத்தனை பெரிய ரூம் இருக்கு.”
“நீங்க இருக்கீங்களே? உங்க முன்னாடி?” என அவள் தயங்கி நின்றாள்.
“அப்டியா? ஓ அப்படி வரியா?” என்றவன் அவளின் அருகில் நெருங்கி முத்தமிட்டு படுக்கையில் சரித்தான்.
“வீட்டுக்கு போகணும்” என செம்பருத்தி முகத்தை திருப்பி கொள்ள..
“இந்த ட்ரெஸ் ஈரமாகிடுச்சு வா அதை மாத்திட்டு போலாமே” என அவனது லீலைகளை ஆரம்பித்தான்.
“இனி ட்ரெஸ் உள்ளே மாத்துவியா?” என கைகளை எல்லை மீற உத்தரவிட்டான்.
செம்பருத்தி உதட்டை கடித்து உணர்வுகளை அடக்க மிகவும் சிரமம் கொண்டாள்.
“பதில் சொல்லு டி!!” என உதட்டை கவ்வி முத்தமிட்டான்.
முகமெல்லாம் சிவந்து இன்னும் அழகாக இருந்தாள் செம்பருத்தி, “எப்படி அவனிடம் நம்மால் இப்படி இளக முடிகிறது?” என்ற கேள்வி தான் மண்டையில் ஓடி கொண்டிருந்தது.
“எதுக்கு அப்படி பார்க்குறீங்க?”
“ம்ம் பார்க்க தான் நின்னுட்டு இருக்கேன்.”
“இப்படி பார்த்தால் எப்டி ட்ரெஸ் மாத்த?”
“அப்படியே மாத்து! அதை பார்க்க தான் நிக்கிறேன்” என்றானே பார்க்கலாம்.
“என்னால முடியாது.”
“அப்போ விருந்துக்கு லேட் ஆகும். நான் அடுத்த விருந்தை இங்கேயே ஸ்டார்ட் பண்ணுவேன். நீ தான் என்னோட தலைவாழை இலை” என்றான் குருசேத்ரன்.
அவள் அதே இடத்தில் அப்படியே நிற்க, வேகமாக காப்போர்டை திறந்தவன் அவளுக்கான உடைகள் அதுவும் உள்ளாடை முதற்கொண்டு எடுத்து வைத்தவன். ஓர கண்ணால் பார்த்து கொண்டே அனைத்தையும் எடுத்தான்.
“அய்யோ இப்படி வித்தியாசமா டார்ச்சர் பண்றானே? இவனை எந்த லிஸ்ட்ல வைக்கிறது. நல்லவனா கெட்டவனா? சத்தியமா தெரியலையே” என்னும் குழப்பத்தில் அவள் நின்று கொண்டிருக்க..
“ம்ம் என்னோட ஒர்க் எல்லாமே முடிஞ்சதும். உனக்கு தேவையான அத்தனையும் எடுத்து ரெடியா இருக்கு சீக்கிரம் திரும்பு, நான் பார்க்கணும்” என்றானே பார்க்கலாம் அதுவும் கூலாக..
“அய்யோ இவனுக்கு வெட்கமா இல்லையா ஒரு பொண்ணு கிட்ட என்ன கேட்கணும்? என்ன கேட்க கூடாதுன்னு?”
“எல்லாமே கேட்பேன்!! எல்லாத்தையும் பார்ப்பேன். ஏன்னா நீ என் பொண்டாட்டி!! நம்ம கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்” என குருசேத்ரன் குரல் அங்கே ஒலிக்க..
அய்யோ நான் மனதுக்குள் நினைச்சது இவனுக்கு எப்படி கேட்டது என்று விதிர்விதிருத்து பார்த்தாள்
அவள் இன்னும் திரும்பாமல் இருக்க, குருசேத்ரன் வேண்டும் என்றே அப்போ சரி இப்போவே நான் என நிறுத்தினான்.
வேற வழி இல்ல திரும்புறேன் என நினைத்தவள் அவன் முன்னால் திரும்பினாள்.