மனம் மறுபடி சரிகிறதே!

6

இரவு பத்து  மணிக்கு மேலாகிற்று.. பெண் வரவும் இல்லை.. போனும் செய்யவில்லை. நேரம் கடக்கவும்.. ஜனனியை அழைத்தாள், லலிதா. பெண் அந்த அழைப்பினை ஏற்கவில்லை. லலிதா அனுவிற்கு அழைத்தாள் அப்போதுதான். 

அனு அழைப்பினை ஏற்று “சொல்லு லலிதா, எப்படி இருக்க” என்றார்.

லலிதா அதை காதில் வாங்கியது போலவே தெரியவில்லை  “அக்கா, ஜானு அங்கே இருக்காளா க்கா.. அவ அப்பா இருக்கிறாரா..” என்றாள்.

“இல்லையே.. அவளும் அவ அப்பாவும் வெளியே கிளம்பினாங்களே.. ஏன் அம்மு இன்னமும் வரலையா.. தம்பி இந்நேரம் வரை அங்கே விடாமல் இருக்கமாட்டாரே” என சொல்லிக் கொண்டே ஹாலுக்கு வந்து பார்க்கத் தொடங்கினார்.

இரவு வெகுநேரம் ஆகியிருந்தது.. எல்லோரும் படுக்கைக்கு சென்றிருந்தனர். 

அனு “நான் தம்பிக்கு கூப்பிட்டு கேட்க்கிறேன்.. இரு” என சொல்லி அழைப்பினை துண்டித்தார்.

லலிதா.. டிவியின் முன் அமர்ந்திருந்தாள்.

“சுற்றும் உலகின் விட்டம் தெரியும்..

சூரியன் பூமி தூரமும் தெரியும்..

கங்கை நதியின் நீளமும் தெரியும்..

வங்ககடலின் ஆழமும் தெரியும்..

இந்த காதல் என்பது 

சரியா தவறா.. இதுதான் எனக்கு தெரியவில்லை..” என பாடல் தன்போல அவளின் காதில் விழ பெண்ணவள் விரக்த்தியாக புன்னைத்துக் கொண்டாள்.

அனு அழைத்தாள். இப்போது அவசரமாக அந்த அழைப்பினை ஏற்றாள் லலிதா.

அனு “லலிதா, அம்முவை வெளியே கூட்டி போகலையாம்.. எதோ வேலை வந்துவிட்டதாம். அம்மு வீட்டில்தான் இருக்கிறாள்.. இதோ இப்போதுதான் மேலே தம்பி அறைக்கு வந்தேன்.. ராஜி ரகு அம்மு எல்லோரும் தூங்க போறாங்க லலிதா.. காலையில் வந்திடுவா.” என அம்முவை பார்த்து புன்னகைத்துவிட்டு.. கீழே இறங்கினார் அனு.

லலிதா “அக்கா..” என்றாள் சோகமாக. பாவம் இந்தப்பெண் படுபாடு எனதான் இருந்தது அனுவிற்கு.

அனு “நீ நைட் வரசொல்லிட்ட வீட்டுக்குன்னு.. அம்மு சொன்னாள். நானும் சரி கிளம்புன்னு சொல்லித்தான் விட்டேன். பாரு, ராஜிதான் இருக்க சொல்லியிருப்பா.. நீ அப்போதே கூப்பிட்டிருந்தால் நான் எப்படியாவது கொண்டுவந்து விட்டிருப்பேனே..” என்றார்.

லலிதா “அக்கா, அவ அப்பாகூடதானே இருக்கா என விட்டேன்.. கூப்பிடல.. நேரம் ஆகவும் அவள் அழைப்பினை ஏற்கவில்லை எனவும் என்னமோ மாதிரியாகிடுச்சி அதான் உங்களுக்கு இப்போது கூப்பிட்டேன். இனி அந்த பெண் இங்கதான் இருக்க போறாங்களா அக்கா.. உண்மையாகவா..” என்றாள் சலிப்பாக.

அனு “ம்.. அவ புருஷன் ஒன்னும் சரியில்லையே.. வேலையை சாக்காக வைத்து வந்துவிட்டாள்.” என்றார்.

லலிதா “அவர், எங்க க்கா” என்றாள், தொண்டையில் சிக்கிக் கொண்ட வார்த்தைகளை சின்ன குரலில்.. மென்றாள் பெண். இந்த  வார்த்தையை கேட்ககூடாது எனதான் எண்ணினாள். ஆனால், அஞ்ஞானம் கொண்ட  மனம்தானே இந்த வாழ்வின் அச்சாணி.. அது தன் வேலையை காட்ட.. பெண்ணவள் கணவனின் தூரமான காதலை.. அறுதியாக இப்படியாவது உணர முற்பட்டாள்.

அனு “தம்பி ஆபீஸ்சில் தங்கிக்கொள்கிறாறாம். அப்படியெல்லாம்..” என எதோ பேசவர.

லலிதா “அக்கா, எனக்கு அவரை தெரியும் அக்கா. ஆனால், எனக்கு.. எப்படி சொல்றது.. எப்படி அக்கா.. என்னை அவர் எப்படி பிரிந்தார்.. நான் அவரை.. ஐயோ அக்கா.. எனக்கு தெரியலையே..” என நீண்டநாள் தேக்கி வைத்திருந்த அழுகையை அழுதாள்.

“எப்படி நடந்தது என தெரியவில்லையே அக்கா.. எனக்கு புரியலையே.. நான் அவரை சந்தேகப்படுகிறேனா.. நானா” என அழுதாள் பெண். கண்களில் கண்ணீர் இல்லை.. ஆனால், வலி தெரிந்தது குரலில். கதறி ஆர்பாட்டம் என இல்லை.. இது மனதின் வலி.. உணர்வால் மட்டுமே உணர முடியும். அனுவிற்கு மட்டுமே புரியும் இங்கே நடப்பது. மற்றபடி.. லலிதாதான் சந்தேகபுத்தி என பொதுவாக எல்லோரும் சொல்லிவிடலாம். 

அனு அமைதியானாள்.

லலிதா “சாரி க்கா.. நீங்க விடியற்காலையில் கிளம்புவீங்க.. போயிட்டு வாங்க அப்புறம் பேசலாம். வைக்கிறேன்” என்றாள்.

அனு “லலிதா, தியாகுவிற்கும் சிலது புரியுது. நீ கவலை படாத.. சீக்கிரம் புரியும்.” என்றார்.

“அப்போது எதற்குக்கா இந்த டிவோர்ஸ்.. நான் கேட்கவில்லையே அக்கா” என்றாள்.

அனு மீண்டும் அமைதியானாள்.

இட்ஸ் கிரே. ம்.. இதுவும் இல்ல.. அதுவும் இல்லை.. ஒருமாதிரி குழம்பும் நிலையில்தான் இருக்கிறது லலிதா தியாகுவின் உறவு. ஒன்று இவன் என்னை ஏமாற்றுகிறான் என விலகியிருக்க வேண்டும். லலிதா அப்படிதான் குற்றம் சொன்னாள் கணவனை. ஆனால், விவாகரத்திற்கான எந்த அடியும் இவள் எடுத்து வைக்கவில்லை. தியாகுவும் முன்பு எந்த வகையிலும் விவாகரத்திற்கு அடிகோளவில்லை. எப்படி நடந்தது. சரி, அதனால் என்ன.. அதுதான் விவாகரத்து ஆகிவிட்டதே என்றால்.. காதல் இன்னமும் இருக்கிறதே இருவருக்கும் இடையில். ம்.. இப்போதும் தியாகுவும் வீடு வரவில்லை.. மனையாளும் ‘எங்கே அவர்’ என கேட்க்காமல் இருக்கவில்லையே. இதை எப்படி விவரிப்பது. இது ‘திருமணம் முறிவு’ என ஒரு வரியில் முடிக்கத்தான் தியாகுவின் குடும்பம் ஆசை கொள்ளுகிறது. ஆனால், தியாகு.. எந்தவிதத்திலும் அவளை விளக்கி வைக்க எண்ணவில்லை. அனுவிற்கு நன்றாக புரியும் இடையில் யார் விளையாடியது.. யார் இருக்கிறார்கள் என. ஆனால், எங்கே சொல்வது எனத்தான் தெரியவில்லை. ஒருமாதிரி இருளும் இல்லாமல்.. ஒளியிலும் இல்லாமல்.. அதை விவரிக்கவும் முடியாத நிறத்தில்.. இவர்களின் நிலை இப்போது.

லலிதா, அனுவை  மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால்.. “அக்கா எவ்வளவு யோசித்தாலும் புரியவில்லை எப்படி நடந்தது இந்த விவாகரத்து என.. எனக்கு யாரையும் குற்றம் சொல்ல அருகதையில்ல. நான்தான் தவறு.. நான்மட்டும்தான்.” என்றாள்.. தன் ஆதங்கத்தை கொட்டி.

அனு “ஹேய்.. விடு விடு.. யோசிக்காத. எல்லாம் மாறும்.. தியாகு கண்டிப்பா புரிந்துக் கொள்வான் ஒருநாள். நீ அழத.. போய் தூங்கு. ஜானு லேட்டாகதான் வருவாள்.. நீ நல்லா ரெஸ்ட் எடு.. இவ வந்தால் என்ன, தினமும் பார்க்கும் போது புரியாத விஷயம் எல்லாம் புரியும் தம்பிக்கு. இனி தியாகுவிற்கு எல்லாம் புரியும் பாரு. இப்போது கூட பாரு.. அந்த குழந்தையை தன்னோடு படுக்க வைத்துபாங்க தம்பி.. இப்போது  எதுவுமே பேசாமல் அங்கே போய்விட்டார் தியாகு. நீ தூங்கு.. வெள்ளி முளைத்தே தீரும் .. நீ புல் ரெஸ்ட்.. எடு. போ.. போ..” என சமாதானம் செய்தார்.

இருவரும் பேசி முடித்து அழைப்பினை துண்டித்தனர்.

சோபாவில் சாய்ந்துக் கொண்டாள் லலிதா.. அனுவின் பேச்சினை அசைபோட்டாள்.. சற்று நேரம். சிலபல வார்த்தைகள் அவளை நம்ப சொல்லியது.. இப்போதே வானத்தை பார்த்தாள்.

எதோ தோன்ற.. தன் செல்பேசியை எடுத்தாள்.. “சாரி தியாகு.. நான் மித்ரா கல்யாணத்தில்.. அப்படி நடந்திருக்க கூடாது. சாரி.” என மென்குரலில் பேசி ரெகார்டிங் அனுப்பினாள் பெண்.

பெண்ணவள் எதோ பெரிய சாதனையை செய்து முடித்தவள் போல.. கண்மூடி சாய்ந்துக் கொண்டாள் சோபாவில். 

!@!@!@!@!@!@!@!@!@!@

அன்று…

அனுஷியாவின் வளைகாப்பு பற்றி பேச்ச்சு வந்தது வீட்டில். முதல் குழந்தைக்கு போல சிறப்பாக இல்லையென்றாலும்.. அனைத்து உறவுகளையும் அழைத்து வீட்டோடு செய்திடலாம் என்றனர் பெரியவர்கள்.

அனு “மாமா அப்படியே, நம்ம தியாகு தம்பியின் திருமணம் பற்றியும் எல்லோருக்கும் சொல்லிடுவோமே.. அவர்கள் தனியாக கூட இருக்கட்டும். ஆனால், அவர் திருமணத்தை எல்லோருக்கும் சொல்லிடலாமே. நாளைக்கு என்னை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக விசாரிப்பார்களே.. சின்ன பங்க்ஷன் போல.. செய்திடலாமே” என வேண்டுகோள் வைத்தாள்.

சபரியும் “அதானே அப்பா.. கல்யாணம் ஆகிடுச்சின்னு சொல்லிடுவோம்.” என்றான்.

கிருஷ்ணன் அப்போதும் கோவப்பட்டார் “டேய், அதெல்லாம் முடியாது. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. அவனை படிக்க வைத்து ஆளாக்கினாள்.. என் பேச்சினை துளியும் கேட்க்காமல்.. வீட்டில் ஒரு பெண்ணை தவிக்கவிட்டு.. எங்களை மீறி சென்றவனை.. நான், கெளவுரவப்படுத்தனுமா முடியாது.. அப்படி உறவுகள் கேட்க்கும் என்றால்.. வீட்டோடு சிம்பிளாக செய்திடலாம்.. யாரையும் அழைக்க முடியாது” என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

வள்ளிக்கு ஏதும் பேசமுடியவில்லை.

பிரபாவதி “ஏன் டா.. நல்லது பேசும் போது எதற்கு அவனை இழுக்கிற.. இப்போ பாரு.. இந்த வளைகாப்பினையும் வேண்டாம் என்றுவிட்டார் அப்பா. சும்மா அவனை பற்றியே பேசிகிட்டு.. இப்போது எப்படி இருக்கானோ..” என்றார் கிண்டலாக.

ராஜி “அம்மா.. என்ன பேசுற. சபரி மாமா எதுக்கு ரிசப்ஷன் பற்றி எல்லாம் பேசுறீங்க.. அதெல்லாம் மாமாவே வந்திடுவார் பாருங்க.. அதை கொண்டாடுவோம். மாமாக்கு தனியா இருக்க முடியாது சபரிமாமா” என்றாள்.

அனு “ராஜி அப்படி எல்லாம் பேசாத. நீ படிக்கும் பெண். இதெல்லாம் நீ பேசகூடாதுதானே..”  என்றாள் நல்லவிதமாக,

ராஜி “என் மாமா அவர். அவள்தான் இப்போது வந்தவள்.. உங்களுக்கு இதெல்லாம் தெரியாது.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” என்றாள் கோவமாக.

சபரி “அனு நீ உள்ள போ” என்றான்.

ராஜியை யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. பிரபாவதிக்கும் பெண் பேசுவது சரியாகவே இருந்தது.. “ஒரு மஞ்சள்கயிறு எல்லாவற்றையும் மாற்றிடுமா.. இத்தனை வருடமாக அவன்தான் உனக்கு எல்லாமேன்னு சொல்லியே வளர்த்தோம்.. அவளும் நம்பினாள்.. அவனை விரும்பினாள்.. அவன்தான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டான் இவளை.. அதெல்லாம் மாறிடுமா.. சொல்லு அனுவிடம்” என சபரியிடம் கோவம் கொண்டார் பிரபாவதி.

ஆக சண்டைகள் ஒடயவில்லை.

கிருஷ்ணன் சொன்னபடி தியாகுவை அழைக்கவில்லை வளைகாப்பிற்கு.. வீட்டோடு எளிமையாகவே நடந்தது.

ஆனால், இதெல்லாம் இவர்களை பாதிக்கவில்லை போல.. லலிதா தியாகுவின் வாழ்க்கை சீராக சென்றது. ஆறுமாதத்தில் கர்பம்தரித்தாள் லலிதா. இருவருக்கும் ஒரு நம்பிக்கை.. குழந்தைகளுக்காக பெற்றோர் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என. தியாகு குடும்பத்தோடு பேச ஆசைப்பட்டான். தனியாக இருப்பது என்னமோ போலிருந்தது இருவருக்கும்.

ஆனால், கிருஷ்ணன் எதற்கும் அசையில்லை. மகனிடம் பேசுவதற்கு கூட ஆசைப்படவில்லை.

வள்ளிதான் மகனிடம் போனில் பேசினார். ஆனால், மருமகளிடம் பேசவில்லை. அப்போது மட்டுமல்ல.. குழந்தை பிறந்த பிறகும் சரி.. வள்ளி மருமகளிடம் பேசவேயில்லை.

வள்ளி மகனை சமாதானம் செய்தார்.. “இல்ல டா… ராஜியை பார்க்கவே பாவமாக இருக்கு.. அவளை எப்படி சமாதானம் செய்வது என தெரியவில்லை டா.. அப்பாவிற்கு எதோ நீ பொறுப்பிலிருந்து தவறிய எண்ணம்.. பிரபாவை யார் சாமாதானம் செய்வது.. அதனால் கொஞ்சநாள் ஆகட்டும் நான் பேசுகிறேன்” என சமாதானம் செய்தார்.

இதே கதைதான் தொடர்ந்தது ஜனனி பிறந்த போதும்.

தியாகு லலிதா இருவருமே யாருமில்லாமல் தவித்தனர். நன்றாகவும் இருந்தனர். இருவர் மட்டுமே தங்களின் வாழ்வில் எனும் போது.. அதிக அனுசரணையும் காதலும் ததும்பி வழிந்தது. ஆனால், எல்லாம் இவர்களே செய்துக் கொள்ள வேண்டும் எனும் போது சிலபல எரிச்சல்களும்.. கோபங்களும் வந்து.. அவ்வபோது வந்து போனது.

ஏழு வருடங்கள் கடந்தது.

தியாகு தொழிலில் வளர்ந்தான் புதிதாக ஒரு ஆபீஸ் துவங்கினான்.. தன் மனையாளை முன்னிருத்தி. அனு சபரி வந்து வாழ்த்தினர் தங்கள் ஆதரவை கொடுத்தனர்.

ராஜி அழையா விருந்தாளியாக அங்கே வந்தாள். ம்.. அனு லலிதா என எல்லோரும் ராஜியை அப்படிதான் நினைத்திருந்தனர். ஆனால், தியாகு போன் செய்து அழைத்ததால்தான் வந்தேன்.. என ராஜி புன்னகையோடு சொல்ல.. லலிதாவின் மனது சஞ்சலமானது.

ராஜி, சிறுபிள்ளையாகவே அந்த இடத்தில் நடந்துக் கொண்டாள். தியாகுவின் அலுவலகத்தில் எல்லாவாற்றையும் பார்த்தாள் கருத்து சொன்னாள்.. என் மாமா என தியாகுவை புகழ்ந்தாள்.

அனு சபரி இருவரும் அரண்டனர்.. ஏதும் காட்டிக் கொள்ளாமல் வீடு கிளம்பினர்.

தியாகு “லலிதா, ராஜியை வீட்டுக்கு கூட்டிட்டு போ.. சமையலை பாரு.. நான் ரெண்டுமணி நேரத்தில், வந்திடுகிறேன்” என்றான்.

லலிதா ஏதும் பேசாமல் இன்முகமாகவே ராஜியோடு வீடு வந்தாள்.

ராஜி எந்த வேறுபாடும் காட்டாமல் பிள்ளைகள் இருவரோடும் நன்றாக பழகினாள்.

மதியம் சொன்னது போலவே தியாகு வீடு வந்தான்.. எல்லோருமாக உணவு உண்டனர்.

தியாகு “லலிதா.. பசங்களை பார்த்துக்கோ.. ராஜி எதோ முக்கியமான விஷயம் பேசணும் என சொன்னாள்.. நான் பேசிவிட்டு வரேன்” என சொல்லி தங்களின் அறைக்கு சென்று கதவை சாற்றினான்.

இதுதான் லலிதா ராஜியை தங்கள் வீட்டில் அனுமதித்து தொடங்கி வைத்த முதல் தவறு. அப்படிதான் இப்போது யோசிக்கிறது அவளின் மனது. அப்போதே கணவனிடம் “எதுக்கு கதவை சாற்றுகிறீர்கள்” என மான அவமானம் பார்க்காமல் கேட்டிருந்தால்.. இன்று.. இப்போது என் இடம் சரியாக இருந்திருக்கும் என எண்ணாமல்  இல்லைதான் லலிதா ஆனால், விதிப்படியே வாழ்க்கை.. என்பது தொடர்ந்தது.

லலிதாவிற்கு காலையிலிருந்து வேலை.. இப்போது சமையல் பிள்ளைகளையும் பார்த்து என ஓய்ந்து போக.. ஹாலில் தியாகு வருவார்.. ஜானுவை அவரிடம் கொடுத்துவிட்டு தான் உறங்கலாம் என டிவியில் கார்ட்டூன் போட்டுவிட்டு அப்படியே அமர்ந்தவள் உறங்கிவிட்டாள்.

இவள் விழிக்கும் வரை.. இருவரும் வெளியே வரவில்லை.. இரண்டுமணி நேரம் ஆகிற்று. பிள்ளைகளும் அப்படியே அசதியில் தன் அருகேயே உறங்கியிருந்தது கோணல் மணாலாக.

லலிதா வாரி சுருட்டிக்  கொண்டு எழுந்தாள்.. 

தங்கள் அறை கதவினை திறந்துக் கொண்டு.. பார்க்க.. அந்த சத்தத்தில்.. தியாகு விழித்தான்.. சேரில் அமர்ந்திருந்த்தபடி உறங்கியிருந்தான். கட்டிலில்  ராஜி உறங்கிக் கொண்டிருந்தாள்.

தியாகு கண்களை நன்றாக விழித்து பார்த்து எழுந்து வந்தான்.. “சாரி டா..” என சொல்லிக் கொண்டே கதவினை மெதுவாக சாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

சோபாவில் அமர்ந்தான்.. பிள்ளைகள் உறங்கும் நிலை பார்த்து  ஜானு பிரணவ் இருவரையும் ஒழுங்காகப் படுக்க வைத்தான். உறக்கம் களைய “எப்போது தூங்கினேன்னு தெரியலை டி.. அவ பேசிட்டே இருந்தால்.. அப்படியே தூங்கிட்டேன் போல..” என்றான்.

லலிதா கிட்சென் சென்றால் பதில் சொல்லாமல்.. தியாகுவிற்கு அவளுக்கு கோவம் என புரிய “என்ன கோவமா..” என்றான்.

பதில் சொல்லவில்லை மனையாள்.

தியாகு மனையாளை தன்புறம் திருப்பினான்.. லேசாக புன்னகையோடு “எதுக்கு வந்தால் தெரியுமா.. லவ் பண்றாளாம்..” என்றான்.

லலிதாவின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது இப்போதுதான்.. ஒருமாதிரி குழப்பத்தில் இருந்தவளுக்கு.. இதை கேட்டதும் பெருமூச்சு எழுந்தது.. ரத்தம் பாய்ந்த பிங்க் முகம் அப்படியே கணவனின் கண்களுக்கு தெரிய.. மனையாளின் முக மாற்றத்தில் எதையோ கண்டு கொண்டவன் அப்போதே சொன்னான்  “என்கூடவே வளர்ந்த பொண்ணு டி.. எதையாவது தப்பா யோசிச்ச..” என சொல்லி அவளின் நெற்றியில் தன் தலையால் முட்டினான்.

லலிதா கிடுகிடுவென காபி கலந்தாள்.. தியாகு அங்கேயே நின்று அவள் சொல்லியதை சொல்லிக் கொண்டிருந்தான்.. “வேற ஊர் போல.. பஸ் கம்பெனி வச்சிருக்காங்களாம்.. அவங்க வேற ஆளுங்க போல.. அவங்க வீட்டில் அந்த பையன் சொன்னால் போதும்.. இங்கேதான் பிரச்சனையாகுமோன்னு பயந்துட்டு என்னை வந்து.. என் அப்பா அவங்க அம்மாவிடம் பேச சொல்லுகிறாள்.” என்றான்.

காபி பால் என எல்லாம் எடுத்துக் கொண்டு இருவரும் ஹாலுக்கு வந்தனர். ராஜி, எழுந்து முகம்கழுவி வந்தாள். 

லலிதா “காபி” என சொல்லி நீட்டினாலும் வாங்கவில்லை, ராஜி. தியாகுதான் அந்த காபி கப் வாங்கி ராஜியின் கையில் கொடுத்தான். 

லலிதா இயல்பாக இருந்தாலும் ராஜி பேசவில்லை அவளிடம்.