பின் ஸ்டெல்லா அவர் கையைப் பிடித்தபடியே,

“அத்தை, ரூமிற்கு கூட்டிட்டு போங்க அத்தை” என்று சொன்னவளின் கண்களையும் அதில் இருந்த தவிப்பையும் உணர்ந்தவராக அமுதா, அவளை அழைத்துச் செல்ல,

அவள் பின்னாலேயே ரூத் தயங்கியபடி வந்தாள். வெளியே வந்தவள், அமுதா உதவியுடன் மாடி ஏறி அவள் அறைக்குள் செல்லும் முன், நின்று திரும்பிப் பார்த்தவளின் கண்கள் சிவந்து, அழுகையை அடக்கிய நிலையில்.

“அவனைப் பார்க்கப் போகணும்னு நினைக்காத ஜோசப், அப்படி இங்கிருந்து போகணும்னு நிணச்சினா உனக்கு நான் இல்ல”

என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே நுழைந்துவிட, ரூத் ஸ்டெல்லாவின் பேச்சில் பயந்து போய் நின்றுவிட்டாள்.

இங்கு ஸ்டெல்லாவை உள்ளே அழைத்து வந்து, அவளைக் கட்டிலில் அமர வைத்த அமுதா, அவள் நெஞ்சை நீவி விட்டு அவளை ஆசுவாசம் செய்தவர்

“என்ன ஸ்டெல்லா இது? ஏன் இவ்வளவு டென்ஷன், டாக்டர் இத்தன டென்ஷன் ஆகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க தானம்மா?”

என்றவரை கண்கள் கலங்கப் பார்த்தவள் எதுவும் பேசாமல், அவளை நிதானப்படுத்த முயன்றாள்.

“ரொம்ப முடியலையாடா? டாக்டரை கால் பண்ணி கூப்பிடவா?” என்றதற்கு மறுப்பாகத் தலையசைத்தவள், உதட்டை கடித்துத் தன் அழுகையை உள்ளே இழுத்துக்கொண்டு,

“நான்…. கொஞ்சம் தூங்கணும் அத்தை” என்று எப்படியோ கஷ்டப்பட்டு வார்த்தைகளை ஒன்று சேர்த்துப் பேசியவள், கண்களை மூடிப் படுத்துவிட்டாள்.

அவள் படித்ததும் அமுதா லைட்டை அணைத்துவிட்டு கீழே இறங்கியவர்

அங்கு ரூத் அறையைப் பார்த்தபடியே அழுதுகொண்டு நிற்கவும் அவள் அருகே சென்ற அமுதா

“என்னம்மா ஆச்சு? ஏன் உங்க அக்கா இவ்வளவு டென்ஷனா உன்னைக் கத்திட்டு போயிருக்காங்க?” என்றவரை பாவமாக பார்த்த ரூத்

“அது…. அது அத்தை ஆதி கூட பேசிட்டு இருந்தத ஸ்டெல்லா பார்த்துட்டா” என்று அழுது கொண்டே பேசவும்,

“ஏன்மா ரூத்’ உங்க அக்காக்கு சும்மாவே அவன பிடிக்காது “ என்று நெற்றியை தேய்தத்தவர். ரூத்தின் அழுத முகத்தை பார்த்து

அவள் தலையை வருடியவர்,

“சரி நீ அழாத, நான் உங்க மாமாவைக் இங்க வரச் சொல்றேன்” என்று த்ரூவிற்குப் போன் செய்ய,

முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவன்,

“அங்கதான் ம்மா வந்துட்டு இருக்கேன்” என்று போனை வைத்துவிட, அமுதா,

“உங்க மாமாவுக்கு ஏற்கனவே விஷயம் தெரிஞ்சிருக்கும் போல, இங்க தான் வந்துகிட்டு இருக்கேன்னு சொல்றார்” என்று யோசனையாக இவர் பேசுவதை கேட்ட ரூத்

“ஆதி சொல்லிருப்பாங்க அத்தை. அவுங்க ஆபீஸ்ல இருந்து தான் பேசிட்டு இருந்தாங்க ” என்று ரூத் சொல்ல, தலையசைத்த அமுதா ரூத்தின் அருகில் அமர, அடுத்த கால் மணி நேரத்தில் த்ரூவின் கார் வீட்டை அடைந்திருந்தது.

காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த த்ரூவ்,

“எங்க ம்மா ஸ்டெல்லா?” என்று வேகமாக கேட்ட படி உள்ள வரவும், அமுதா

 “மாடியில இருக்காப்பா” என்றதும் வேகமாகப் படிக்கட்டுகளில் ஏறியவன்,

“அவ ஏதாவது சாப்பிட்டாலா ம்மா?” என்று ஏறிக்கொண்டே கேட்க

“சாயங்காலம் ஜூஸ் குடிச்சது மட்டும் தான் ப்பா , மணி ஏழுதான் ஆகுது ப்பா அதான், நைட் சாப்பாடு இன்னும் சாப்பிடல” என்றதைக் கேட்டதும், அறைக்குள் நுழையச் சென்றவன் ஒரு நிமிடம் நின்று மாடியில் இருந்த படி

“நான் பார்த்துக்கிறேன், நீங்க போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ம்மா. ரூத் நீ அழாத, நான் பார்த்துக்கிறேன்”

என்று தைரியம் சொல்லிவிட்டு அவன் உள்ளே நுழைய, அறையில் ஸ்டெல்லா இல்லை, பின் அவள் எங்கு இருப்பாள் என்று அறிந்தவனாக அந்த ஓவிய அறைக்குள் சென்றான்.

இவன் நினைத்தது போலவே, அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தபடியே அமர்ந்து இருந்தாள் ஸ்டெல்லா.

எப்போது எல்லாம் சோர்வாக இருக்கிறாளோ, அப்போது எல்லாம் இங்கு வந்து அமரும் பழக்கத்தை ஸ்டெல்லா வைத்திருந்தாள்.

அதே போல தான் இன்றும் கோபம் தனிக்க இங்கு வந்து அமர்ந்திருந்தாள். முன்பு என்றாள் அத்தனை கத்து கத்தி அடித்து பொருட்களை உடைத்து அவள் கோபத்தை காட்டி இருப்பாள்.

ஆனால் இப்போது அவளை நம்பி அவள் குழந்தை வயிற்றில் இருக்க குழந்தையின் நலத்திற்கு பயந்தே கோபத்தை குறைக்க இங்கு வந்து அமர்ந்திருந்தாள்.

ஸ்டெல்லாவை அங்கு பார்த்தே பிறகே நின்மதியாக மூச்சை இழுத்துவிட்டவன், மெல்ல அவள் பக்கம் நடந்து சென்று அவள் தோளைத் தொடவும், த்ரூவின் வருகையை உணர்ந்தவளாக அப்படியே அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

எதுவும் போசாது த்ரூவ் அவள் தலையை வருடிய படி இருக்கவும் ஸுடெல்லாவே பேச தொடங்கினாள்.

“த்ரூவ், உனக்கு ஒன்னு தெரியுமா? என்ன அவன தவிர வேற யாரும் இது வரை அடிச்சதே இல்ல” என்று படி த்ரூவின் கையை ஸ்டெல்லா பிடித்தபோது அவளின் கை நடுங்கிக் கொண்டு இருந்தது.

அந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்த அவள் கையை த்ரூவ் அழுத்திப் பிடிக்கவும், ஸ்டெல்லா அவள் முகத்தை அவனின் வயிற்றில் பதித்தபடி அழுது கொண்டே பேசத் தொடங்கினாள்.

“நானும் இது வரை ஜோசப்ப அடிச்சது இல்ல த்ரூவ்” என்றவளின் மனதில் ரூத்தை அடித்து விட்ட வலி அதிகமாக இருக்க, த்ரூவை அணைத்தபடி,

“நான் வேணும்னு அடிக்கல அவள, அன என்னால கண்ட்ரோல் பண்ண முடியல த்ரூவ். இவ எதுக்கு அவன லவ் பண்றா? அவன்… அவன் வேணாமே”

என்று த்ரூவை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் முழுக்க சிவந்து போய், கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தபடி இருக்கவும்,

இவனின் பெருவிரலால் அவள் கண்களைத் துடைத்தவன்,

“ஏன்டா ஆதிஷ், வேணாம்னு சொல்ற? அவ நல்ல பையன் தானே அம்மு?”

என்றவனுக்கு இவளின் பயத்தை எப்படி சொல்லி புரிய வைக்க என்று புரியாது

“ அவன் நல்லவன் தான், அன கல்யாணம் பண்ணிட்டா ஜோசப் என்ன விட்டுப் போகணும் தானே டா? அங்க தனியா அவ என்ன பண்ணுவா? யாராவது ஏதாவது பண்ணிட்டாங்கன்னா…”

என்று பரிதவித்துப் பேசியவளின் தலையை வருடியவன்,

“அதுக்காக அவள கடைசி வரை உன் கூடவே வச்சுக்கப் போறியா அம்மு?” என்றதற்கு ஸ்டெல்லா அமைதியாகவும்,

த்ரூவ், “நீ கூடத் தானே? என்ன கல்யாணம் பண்ணிக்க பயந்த, அன இப்போ ஹாப்பியா தானே இருக்க அம்மு? அதே மாதிரி ரூத்தும் சந்தோஷமா இருக்க வேண்டாமா டா?” என்று குழந்தைக்குச் சொல்வது போல எடுத்துச் சொல்லவும், ஸ்டெல்லா,

“அன பயமா இருக்கே, அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா?”

“நெகட்டிவ்வா யோசிக்காத டா, அங்க அவ தனியாவா இருக்கப் போறா?  பாட்டி இருக்காங்க, ஆதிஷ், அம்மா, அப்பான்னு அவளப் பார்த்துக்க எல்லாரும் இருக்காங்க டா,”

என்றதும் ஸ்டெல்லா அழுகையை விட்டுவிட்டு அமைதியாக யோசிக்கவும், அவள் யோசிக்கட்டும் என்று நினைத்தவன்.

“மொதல்ல அழுகாம பொருமையா யோசி டைம் இருக்கு நீ எடுக்குற முடிவு தான்டா அனா ரூத்தையும் மனசுல வச்சி அந்த முடிவ எடுடா “

என்று சொல்லிவிட்டு கீழே சென்று அவளுக்காக உணவு எடுத்துக்கொண்டு மேலே வந்தவன், அப்போதும் அந்த அறையிலயே அமர்ந்து ஸ்டெல்லா யோசைனையாக இருப்பதை பார்த்த த்ரூவ்

இட்லியைப் பிட்டு அவள் வாய் அருகே கொண்டு செல்லவும், இத்தனை நேரம் ஏதோ நினைவில் மூழ்கி இருந்தவள்,

இவன் செயலில் அவனை நிமிர்ந்து பார்க்கவும், அழகாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“சாப்பிடு டா அம்மு” என்றதும் அவளும் வாயைத் திறந்து தன்னை போல வாங்கிக்கொண்டாள்.

த்ரூவ் மறு வாய் இட்லியைப் பிய்க்கவும், தலையை மறுப்பாக அசைத்து,

“நீங்களும் சாப்பிடுங்க” என்றவளைத் தலையை மறுப்பாக ஆட்டிப் பார்த்தவன்,

“இல்ல டா, நீ முதல்ல சாப்பிடு, நான் கீழே போய் சாப்பிடுகிறேன்” என்றதற்கு ஸ்டெல்லா முறைக்கவும்,

“சரி சாப்பிடுறேன், முறைக்காத டா அம்மு” என்று அவன் ஒரு வாய், அவள் ஒரு வாய் என்று இட்லியை ஊட்டி முடித்தவன்.

“என்னும் ரெண்டு இட்லி எடுத்துட்டு வரட்டா?” என்றதற்கு அவள் போதும் என்று சொல்லிவிடவும், கீழே சென்று தட்டை வைத்துவிட்டு திரும்பி வந்தவன்.

ஸ்டெல்லா போடும் மாத்திரைகளைச் சரியாகப் பார்த்து எடுத்து வந்து, அதையும் அவளைப் போட வைத்தான்.

த்ரூவின் அன்பில் மற்ற அனைத்தயும் மறந்து அவனையே ஆசையாக பார்த்த படி ஸ்டெல்லா இருக்க, த்ரூவ்

ஒரு முறை சுற்றி அந்த அறையைப் பார்த்துவிட்டு,

“நாலு மாசாமா இங்க வந்து பெயிண்டிங்ஸைப் பாக்குறியே தவிர எதுவும் புதுசா வரஞ்ச மாதிரி தெரியலையே அம்மு?” என்று அவளைக் கேலியாகப் பார்த்தவன்,

“உண்மையா இது எல்லாம் நீ வரஞ்சது தானா டா? இல்ல வெளில கடையில வாங்குனாதா” என்றவனின் பார்வையில் முறைத்துப் பார்த்தவள், எழுந்து நின்று அவன் அருகே சென்று,

“இது என்ன ஆபிஸ் வர்க்க என்ன? வேலை வந்ததும் செய்யறதுக்கு த்ரூவ்?” என்று ஒற்றை புருவம் தூக்கி மேலும் அவன் அருகே நெருங்கியவள்.

“இது ஆர்ட் இங்க இருக்க ஒவ்வொரு பெயிண்டிங்கும் எனக்கா உள்ள தொனுன அப்பறம் தான் வரஞ்சன்.”

“எப்போ எந்தப் பெயிண்ட் பண்ணனும்னு தோணுதோ அப்போதான் அதை வரைய முடியும், அதை விட்டுட்டு நீங்க சொல்ற அப்போ எல்லாம் கலை வராது”

என்று உதட்டைச் சுளித்து நின்றவளை ஒரு ரசனைப் பார்வையால் ரசித்துத்  த்ரூவ் பார்க்கவும்,

அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்த ஸ்டெல்லா, என்ன என்பது போல இரு புருவங்களையும் தூக்கி உயர்த்தி அவனை பார்க்க, அவள் பார்வையில் மெய் மறந்து போனவன் அவள் இடை வளைத்து அவளை அணைத்து நின்றவன்.

“அம்மு….” என்றவனின் உயிர் உருகும் அழைப்பில் அவளும் உருகி தான் போனால்.

இத்தனை நாள் அவளை விட்டுப் பயந்து தள்ளிச் சென்றவனால் இன்று அவளை விட்டுச் செல்ல முடியாது போக, அவள் முகத்தோடு முகம் வைத்து இளைத்தவனுக்கு இவளும் இசைய, அன்று போல போதையின் பிடியில் இன்றி முழு காதலுடன் இவர்களின் இல்லறம் தொடங்கியது.