காதல் வைபோகமே…. (எபிலாக்)

சில வருடங்களுக்குப் பிறகு,

போட்ஹவுஸில் அந்த வீடு அதகளமாகிக் கொண்டிருந்தது.

கொல்கத்தாவில் இருந்து திரும்பிய விக்ரம் மாடியேற,  அவன் மீது பூக்குவியலாக மோதினாள்,  அவனுடைய ஏழு வயது அன்பு மகள் வெண்ணிலா.

அவளை அப்படியே தூக்கியவனைக் கண்டதும், “அப்பா…” எனக் கட்டிக் கொண்டாள்.

“என்னடாமா ஓடி வருகிறாய்?” எனக் கேட்டபடி விக்ரம் மாடியேற,

“ நோப்பா,  வேண்டாம்….” என்று கிசுகிசுத்தாள்.

சுவாரசியமான விக்ரம், “என்னடா நிலா….?”

“அம்மா அறையில் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்….” என ரகசியம் பேசினாள்.

 “ஹா… ஹா…” என்று விக்ரம் சத்தமாகச் சிரிக்க,   சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தாள் இனியா.

அவனைப் பார்த்தவுடன் வேகமாக வந்து கட்டிக் கொண்டு, “என்ன  சிரிப்பு விக்ரம்?  என்னடி சொன்ன..?” என்று நிலாவிடம் வம்பு செய்ய,

“சொல்கிறேன் வா….” என்று மூவருமாக அறைக்குள் நுழைய,

“அப்பா…  நோப்பா….” என மீண்டும் சொல்ல,

“என்னடி…?” என இனியா முறுக்க,

இனியாவின் போன் ஒலிக்க,  அவள் சித்தியின் பிரத்யேகமான ரிங் டோன் என்பதைப் புரிந்து கொண்டு,    நிலா போனை எடுத்தாள்.

 “சித்தி முடியலை… டூ மச் டார்ச்சர்…” என மழலையில் கொஞ்ச,

“யாருடாம்மா நிலாக்குட்டி…?” எனக் காவியா கேட்க,

“ எல்லாம் அம்மா தான்…” என விவரத்தைச் சொன்னாள்.

“நிலாக்குட்டி,  போனை ஸ்பீக்கரில் போடு”

அவள் அவ்வாறே செய்ய,

“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் இனியா…?  நிலாக்குட்டியை டார்ச்சர் செய்வாயா?  நான் வந்தேன் என்றால்….” என மிரட்டியபடி,

“நிலா குட்டி, நீ கீழே விக்கி தாத்தா கிட்ட போம்மா…” என்றாள் காவியா.

இதைக் கேட்டவுடன் இனியா முறைக்க,  கண் சிமிட்டியபடி அழகு காட்டி விட்டு ஓடினாள் நிலா.

“அக்கா எங்களைப் படுத்தியதில்லாமல் இப்போது நிலாவையுமா…?” என்று சிரிக்க,

“காவியா…..” என்று இனியா பல்லைக் கடித்தபடி,“ நீ இங்கு இல்லை என்ற குறையைப் போக்க , மாற்று ஆள் ஏற்பாடு செய்கிறாயா…?” எனக் கோபப்பட,

“நீ அதுக்கெல்லாம் அசருகிற ஆளா? எப்படியும் வைத்துச் செய்வாயே….” என்று கேலிச் செய்ய,

“அதை விடு,  மாம்ஸ் வந்துவிட்டாரா? இல்லை கொல்கத்தாவில் ஆரம்பித்த புதிய சேனலுக்கே தன்னை எழுதிக் கொடுத்து விட்டாரா? இல்லை உன் கிட்டேயிருந்து எஸ்கேப்பா…?” எனச் சிரிக்க,

“மவளே, மாட்டினாய்… முடிந்தாய்…” என்றபடி,  “இப்போது தான் வந்திருக்கிறார் காவியா”

போனை வாங்கிய விக்ரம், “ ஏன் என் தலையை உருட்டிக் கொண்டிருக்கிறாய் காவியா…? உனக்கு ஆஃபீஸ் இல்லையா? சஞ்சீவ் எப்படி இருக்கிறார்? குட்டி எப்படி இருக்கிறான்?” என்று நலம் விசாரிக்க,

“இங்கு அனைவரும் நலம் மாமா.  சஞ்சீவை ஆபீஸ்க்குப் பேக் செய்தாகிவிட்டது. கவினைச் சாப்பாடு ஓட்டித் தூங்க வைத்தேன். இன்னும் பத்து நிமிடத்தில் மீட் இருக்குது. அப்புறம் மூன்று மணி நேரத்திற்கு எழுந்து கொள்ள முடியாது,  வைத்துச் செய்வானுங்க….. வொர்க் ஃப்ரம் ஹோம் என்று தான் பேர்,  தண்ணீர் குடிக்கக் கூட எழுந்து கொள்ள முடியாது…” என்று அலுத்துக் கொண்டாள்.

பின், “அக்காவிற்கு விஷ் பண்ண போன் போட்டேன் மாம்ஸ்”

“ஓ…! சரி,  நீ இனியாவிடம் பேசு” என்று போனைக் கொடுத்துவிட்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள, குளியலறைக்குள் சென்றான்.

“மாம்ஸ் வந்தாச்சு,   இனி உங்க ரொம்மன்ஸுக்கு இடைஞ்சலாக நான் வரவில்லை.  என்ஜாய்….. என்ஜாய்…” என்று இனியவை வம்பிழுத்து விட்டு,

அப்புறம், “ஆல் தி பெஸ்ட்,  நீ கலக்கு…” என வாழ்த்தி விட்டுப் போனை வைத்தாள்.

குளியலைறையில் இருந்து வெளியே வந்த விக்ரம் சிரித்தபடி, அறையை நோட்டம் விட,   கட்டில் மேல் உடைகள் குவிந்திருக்க,

அப்படியே நடக்க… டேபிளில், ஸ்கிரிப்ட், ஆராய்ச்சி செய்த குறிப்புகள்,  கேள்விகள்,  துனணக்கேள்விகள் எழுதிய தாள்கள் என்று விரிந்து கிடந்தன.

இனியாவைப் பார்க்க,   அவள் அசடு வழிந்தபடி சிரித்தாள்.

 பின் அவன் அருகே வந்து கையைப் பிடித்து, “கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது விக்ரம்…” எனத் தன் பதட்டத்தைத் தெரிவித்தாள்.

“என்னடா ஜில்லு… நீ இப்போது நம்ம சேனல் செய்திப் பிரிவின்,  எடிட்டர் இன் சீஃப் ஆக இருக்கிறாய். இத்தனை வருடத்தில் எத்தனையோ ஆளுமைகளைப் பேட்டி கண்டு விட்டாய்,   கலக்குவாய் எனப் பார்த்தால்… இப்போ ஏன் இந்த டென்ஷன்?” எனத் தைரியப்படுத்த,

“பிரதமர் என்றால் சும்மாவா விக்ரம் , அதான் டென்ஷன்…”

“இந்தியப் பிரதமர் மற்றும் சீனப் பிரதமர் சந்திப்பு – மகாபலிபுரத்தில் நடப்பதால்,  நம்ம மாதிரியுள்ள ரீஜனல் சேனலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இல்லையென்றால் இவ்வளவு சீக்கிரம் இந்த வாய்ப்பு எனக்கு வந்திருக்காது,  அதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது…”

விக்ரம் கையைத் தட்டிக் கொடுக்க,

”சின்ன ரிகர்சல் பார்க்கலாமா…?” என்று இனியா கேட்க,

“நிச்சயமாக..” எனச் ஷோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

இனியா தன்னுடைய தயாரிப்பைக் காட்ட, “குட் ஜில்லு, நன்றாக ரிசர்ச் செய்திருக்கிறாய். உன் கேள்விகள் சூப்பர்…  நிச்சயமாக நிகழ்ச்சி நன்றாக வரும்….” எனத் தைரியமூட்டினான்.

இனியா தயக்கமாகப் பார்க்க,

பின், “ஜில்லு முதலில் பக்கத்தில் வந்து உட்கார்…”

இனியாவும் உட்கார,   அவள் தோளணைத்துக் கொண்டான். “ஜில்லு, அப்படியே கொஞ்ச வருடம் பின்னாடி போன மாதிரி இருக்கு , உன்னுடைய முதல் மேடை நிகழ்ச்சி,. , பிஸ்தா கலர் சோளி… தான் ஞாபகம் வருது….” என்று சிரித்தான்.

அவளுக்கும் அது தொடர்பான ஞாபகங்கள் வர,   மனம் குழைந்து,  மடி மீது அமர்ந்து,  திரும்பி விக்ரமின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெற்றியில் முட்டினாள்.

“இதெல்லாம் போங்காட்டம்…. நான் வேற எதிர்பார்த்தேன் ஜில்லு…” என வம்பு செய்ய,

இனியாவும் சற்று ரிலாக்ஸானாள். விக்ரமும் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டான்.

பின், “உன் மங்கம்மா சபதம் நிறைவேறும் தருணம்.  பட்டையக் கிளப்ப வேண்டாமா…?” என்று ஏத்தி விட,

இனியா சிலிர்த்து எழுந்து, “விக்ரம்,  இந்த இனியாவை வேறோரு ஆளாகப் பார்க்கப்போகிறாய்…” என்று அண்ணாமலை ஸ்டைலில் பேச,

“சரி தான், நம்ம ஆளு ஃபார்மிற்கு வந்துவிட்டாள்…” என்பதைப் புரிந்து கொண்டு,  அவள் இதழணைத்து விடுவித்தான்.

பின், “நேரமாகிறது ஜில்லு,  , நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்,  சிக்கிரம் ரெடியாகி வா,  நான் கீழே இருக்கிறேன்…” என வெளியேறினான்.

இனியா ரெடியாகி கீழே வர…

கவிதா,   கார்த்திகேயனும் வந்திருக்க,  மிகவும் சந்தோஷமானாள்.

அனைவரின் வாழ்த்தையும்,  ஆசியையும் பெற,   விக்ரமன் மடியில் இருந்த நிலாவும் பெரியவர்கள் போல் வாழ்த்த, அங்கு சிரிப்பலை கிளம்பியது.

இனியா டிரைவரைக் கூப்பிட,

“இல்லை ஜில்லு,  நானே டிராப் செய்கிறேன்…”

“இப்போது தான் வந்தீர்கள்….” என இழுக்க,

“ஒன்றும் பிரச்சினை இல்லை.  உன்னைப் பிரதமர் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டிராப் செய்து விட்டு,   அப்படியே சேனல் போய் கொள்கிறேன்….”

இருவரும் அனைவரிடமும் விடை பெற்றனர்.

காரில், “நான் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன்.  ஐ ஆம் கான்பிடண்ட் நௌ விக்ரம்,  அலைய வேண்டாம். மேலும் வசந்த்தும் அனுவும் இந்த டீமில் தான் இருக்கிறார்கள்” எனக் காதல் மனைவியாகச் சொல்ல,

“உன்னுடனான லாங் டிரைவ்,   ஐ லவ் இட்,  ஜில்லு…” என்று கண் சிமிட்டிச் சிரித்தான்.

இனியவளும் மெல்லிய புன்னகையுடன்,  அவன் தோள் சாய்ந்தாள்.

சிறிது நேரத்தில்,  அவளைக் ஹோட்டல் வாசலில் இறக்கி விட, அவர்கள் டீம் காத்திருக்க, அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

விக்ரம் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லிச் சென்றான்.

இனியா பரபரப்பானாள். வேலையில் இறங்கினாள். இவர்கள் அனைத்துப் பாதுகாப்புத் சோதனைகளைத் தாண்டி,  எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிக்க ஒரு மணி நேரமானது.

அடுத்த அரைமணி நேரத்தில் பிரதமர் வர,    பேட்டி துவங்கியது. ஏற்கனவே கேள்விகள் பிரதமர் செய்தித் தொடர்பாளர்களிடம்  கொடுக்கப்பட்டிருக்க,  பிரதமர் முன்தயாரிப்புடன் வந்து பதில் அளிக்கத் துவங்கினார்.

இனியா கேள்விகளை மாற்றாது, அவர் பதிலில் இருந்து, துணைக் கேள்விகளை எழுப்பினாள். சர்ச்சைகளான கேள்விகள் இல்லாத போதும் மென்மையாகச் சில கிடுக்குப்பிடியானக் கேள்விகளை முன்வைத்தாள்.

அதற்குப் பிரதமர் பதில் தர,  அது நிகழ்ச்சியைச் சுவாரசியப்படுத்தியது.

பேட்டி அனைவருக்கும் திருப்தி தர,   பிரதமர் டீமிடம் பேசிவிட்டு, அனைவரும் சேனல் வந்தனர்.

அங்கு அர்ஜுன் காத்திருந்தான். அவன் இப்போது வேறொரு ரியால்ட்டி ஷோவின் இயக்குனராக இருக்கிறான். அனைவரிடமும் இன்றைய நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தான்.

 அனுவிற்கு இன்றைய நிகழ்ச்சியை எடிட் செய்து,  ரஷ்ஷை ரெடி செய்து, அதை விக்ரமிற்கு அனுப்ப வேண்டும்.

அதை விக்ரம் பார்த்து,  ஒப்புக் கொண்ட பின், அதைப் பிரதமர் செய்தித் தொடர்பு டீமிற்கு அனுப்பி,  அவர்களுடைய ஒப்புதலையும் பெற்று,  நாளை மாலை ஒளிபரப்புக்குத் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்க,

 அனு வீட்டிற்கு வர தாமாதமாகும் என்பதைப் புரிந்து கொண்ட அர்ஜுன், தான் முன்னே சென்று, தங்கள் குட்டீஸ் வினீத் மற்றும் விகாஷைப் பார்த்துக் கொள்வதாக விடை பெற்றான்.

விக்ரம் சேனலிலே இருக்க,  எடிட் செய்த காப்பியைப் பார்த்து விட்டு,  சில சின்ன மாற்றங்களைச் செய்யும்படி அறிவுறுத்தினான்.

சிலமணி நேரத்தில் வேலை திருப்தியாக முடிய, பிரதமர் டீமிற்கு அனுப்பி விட்டு, அனைவரும் கிளம்பினர்.

மீண்டும் விக்ரமும் இனியாவும் காரில் கிளம்ப,

இனியா பேட்டியைப் பற்றி விசாரிக்க, “ரொம்ப நன்றாக இருந்தது ஜில்லு. வழக்கம் போல உன்னுடைய ஃப்ரஸன்ஸ் ஆஃப் மைண்டால்,  துணைக் கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியைச் சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறாய். இந்த நிகழ்ச்சி நிச்சயமாகப் பாராட்டப்படும்,  பெரிய அளவில் பேசப்படும் என்று வாழ்த்தி,  தன் அக்மார்க் மந்தகாசப் புன்னகையைச் சிந்தினான்.

 இனியா தோள் சாய,  இருவரும் மன நிறைவுடன் பயணத்தைத் தொடர்ந்தனர்.

கா‍ரியங்கள் யாவிலும் கை கொடுக்கும் காதல் கணவன் உள்ளவரை,  இனியவளின் பயணம் சீரும் சிறப்புமாக என்றென்றும் திகழும் என்ற நம்பிக்கையுடன்,  நாமும் விடை பெறுவோம்.

                        முற்றும்