அத்தியாயம்-7

அய்யோ, இவனா? என மனதில் நினைத்தவள், “என்ன சார் இந்த நேரத்துல? மேடம் நல்லா இருக்காங்கதானே?” என அவளின் முகத்தில் சட்டெனப் பதட்டம் கூடியது.

“ஹே, டோன்ட் பேனிக்! என்னோட மாம் தூங்குறாங்க. நான் உன்னைப் பார்க்க வந்தேன்,” என்றான் குரு.

“சொல்லுங்க சார், என்ன விஷயம்?” என செம்பருத்தி மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டே கேட்டாள்.

“அன்னைக்கு உன்னைத் திட்டினேன்ல…”

‘ஓ, சாரி கூடக் கேட்கத் தெரியுமா?’ என்று நினைத்தவள், “என்னைக்கு சார்?” என அவனைப் பார்த்தாள்.

“அதான், நீ ஜாக்புரூட்டில் (பலாப்பழம்) வெஜ் சிக்கன் பிரியாணி செஞ்சியே, அன்னைக்கு!” என்றான் குருசேத்ரன்.

புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “சொல்லுங்க,” என்றாள்.

“ம்ம்… டேக் இட்,” என நீட்டினான்.

“என்ன? என்ன இது?” என அவனைப் பார்த்தாள்.

“இது காசு. ஐ மீன், இதுல இருபதாயிரம் இருக்கு.”

“எதுக்கு?” எனப் புருவத்தைச் சுருக்கினாள் செம்பருத்தி.

“அன்னைக்கு நீ குக் பண்ண பிரியாணியை நானும் டேஸ்ட் பண்ணேன். என்னோட மாம் சொன்னாங்க, அதை நீதான் செஞ்சன்னு. அதுக்காக இந்த மணி.”

செம்பருத்தி புரியாமல் பார்த்தாள்.

“நீ நர்ஸ் வேலை செய்யாம, சமையல் வேலை செஞ்சதுக்கும், பிளஸ் அது டேஸ்டா இருந்ததுக்கும். ஐ மீன், எங்க மம்மி டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னதுக்கும்… பிளஸ், இன்னிக்கு உன்னோட போன் தண்ணிக்குள்ள விழ திங்க் காரணமாகிட்டான், அதுக்காக இந்த போன்,” என்றான் குருசேத்ரன்.

அவனை கேவலமாகப் பார்த்தாள். ‘அதுதானே பார்த்தேன். மலைக் குரங்கு எப்படி மனுஷனா மாறும்? வாய்ப்பில்லை,’ எனச் சொல்லிக்கொண்டாள்.

“ஹே, ஆர் யூ ஹியர்?”

“எனக்கு வேணாம்.”

“அப்போ இதை வாங்கிக்கோ,” என போனை நீட்டினான்.

“இது எதுக்கு?” எனப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.

“திங்க் தானே உன்னோட போன் தண்ணிக்குள்ள விழ காரணம். அதுக்குதான்,” என்றான் குரு.

“எனக்கு உங்க பணமும் வேணாம், போனும் வேணாம்,” என்றாள் வெடுக்கென.

அவளை முறைத்துப் பார்த்தவன் ஒரு அடி முன்னால் வைத்து, “வாங்கு,” என்று உறுமினான்.

“வேணாம் சார்,” என செம்பருத்தி கூற, “இப்போ நீ வாங்கலன்னா, மறுபடியும் உன்னைத் தூக்கிட்டுப் போய் நீச்சல் குளத்தில் போட்டுட்டு வந்துடுவேன். நான் தானே உன்னை சேவ் பண்ணேன். வா,” என அவளின் கையைப் பிடித்தான்.

‘ஹக்’ எனத் துள்ளியவள், பதட்டத்துடன், “ப்ளீஸ் சார்! வேணாம் சார்!” என்று கெஞ்சினாள்.

“அப்போ போன் இல்லைனா பணம், இது ரெண்டுல ஒண்ணை சூஸ் பண்ணு,” என மிரட்டினான் குரு.

“போன்,” என வியர்த்து விறுவிறுக்கக் கூறினாள்.

“ம்ம்… அது,” என குருசேத்ரன் கூற, “சார், என்னோட கைய விடுங்க,” என செம்பருத்தி பார்த்தாள்.

சட்டென விட்டவன், அவளின் முன் போனை நீட்டினான்.

வாங்கி கொண்டாள் பதட்டத்துடன்.

“ம்ம்… தட்ஸ் குட்,” எனச் சொல்லியபடி அறைக்குச் சென்றுவிட்டான்.

அந்த வாரத்தின் இறுதியில் சுப்ரியா வந்து செக் செய்தாள்.

“எப்படி இருக்கீங்க மா? நான் ஓகேவா இப்போ?” என மணியம்மை கேட்க, “பெட்டர் ஆன்ட்டி! இப்போ நீங்க நல்லா இருக்கீங்க,” என்றாள் சுப்ரியா சிரித்துக்கொண்டே.

செம்பருத்திக்கும் சந்தோஷமாக இருந்தது. மணியம்மை அவளைப் பார்த்துக்கொண்டே, “அப்படின்னா நல்லதா போச்சு. செம்பருத்தி அவங்க வீட்டுக்கு ரெண்டு நாள் போய் இருந்துட்டு வரட்டும்,” என்றார்.

செம்பா அதிர்ச்சியுடன் பார்க்க, மணியம்மை சிரித்துக்கொண்டே, “நீயும் இங்கே வந்து மூணு மாசத்துக்கு மேலே ஆகுது. உனக்கும் வீட்டு ஞாபகம் வரும் தானே! அதனால போயிட்டு வாம்மா,” என்றார்.

“தேங்க்ஸ் மேடம்,” என கண்களில் நீர் கோர்க்க, கையெடுத்துக் கும்பிட்டாள்.

“அய்யோ, எதுக்குமா தேங்க்ஸ்? அதெல்லாம் வேணாம். உனக்கு என்ன வேணுமோ அதை என்கிட்ட சொன்னா நானே செய்யப் போறேன். அதை விட்டு நீ மனசுக்குள்ளயே வச்சிருந்தால் எனக்கு எப்படி தெரியும் சொல்லு?” என மணியம்மை கூற, “சரிங்க மேடம், இனி கேட்குறேன்,” என அழுகையுடன் கூறி முடித்தாள்.

“இன்னிக்கு போயிட்டு திங்கட்கிழமை காலையில வாம்மா,” என்றார் மணியம்மை.

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேடம்,” என உற்சாகத்துடன் புறப்பட்டாள் செம்பருத்தி.

அவள் கைப்பையுடன் வெளியே செல்லவும், குருசேத்ரன் வரவும் சரியாக இருக்க, மணியம்மைதான் அவளைச் சீண்டாமல் இருக்க, வெளியே சென்று விட்டு வந்தார்.

“பாய் மேடம்,” எனச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்றாள் செம்பருத்தி.

போகும் அவளைக் குருசேத்ரன் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

சுப்ரியா புறப்பட்டவள், தனக்கு எதிரில் வந்து கொண்டிருக்கும் குருசேத்ரனைப் பார்த்தாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அம்மா முழுசா கியூர் ஆகிட்டாங்களா?”

“இப்போ பரவாயில்லை!”

“அப்புறம் எதுக்கு உன்னோட நர்ஸ் காலி பண்ணிட்டுப் போயிட்டா? எவ்வளவு கொழுப்பு?” என உடனே கோபம் தொற்றிக்கொண்டது.

“அதை உன்னோட அம்மா கிட்ட கேளு,” என்று முறைத்துவிட்டு அவள் நடக்க, “ஹவ் டேர்? எப்படி உன்னால இப்படி நடந்துக்க முடியுது? அவளுக்கு நான் தான் சம்பளம் தரேன். அவள் இஷ்டத்துக்குப் போறாளா?” எனப் பொங்கினான்.

சுப்ரியா முறைத்துப்பார்த்து, “அவள் மூணு மாசம் லீவு இல்லாம வேலை செஞ்சிருக்கா. ரெண்டு நாள் அவங்க வீட்டுக்குப் போறதுல என்னடா இருக்கு?”

சட்டென குருசேத்ரன் முகம் மாறிப்போக, அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு வேகமாகப் படியேறி அறைக்குச் சென்றுவிட்டான்.

“தம்பிக்கு என்னாச்சு?” என சாந்தா திடுக்கிட்டுப் பார்த்தார்.

சுப்ரியா அங்கிருந்து நகரச் செல்ல, “பிரியா மா! அவனோட குணத்தைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே! ப்ளீஸ், அவன் கூடப் போய் பேசிட்டு வாடா கண்ணு,” என மணியம்மை கூற, “உங்களுக்காக… உங்களுக்காக மட்டும் தான் நான் போறேன் ஆன்ட்டி,” என்றவள் பெருமூச்சுடன் மேலே சென்றாள்.

பால்கனியின் பக்கம் நின்று கொண்டிருந்தான் குருசேத்ரன்.

“குரு!”

“ம்ம்,” எனத் திரும்பினான்.

“நீ சைக்யாட்ரிஸ்ட் நித்யாவைப் பார்க்கப் போகல, சரிதானே!”

“எனக்கு பைத்தியம்னு டிக்ளேர் பண்ணிட்ட, ரைட்?” எனக் கோபத்துடன் பார்த்தான்.

“டேய், ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ! கண்டிப்பா நான் அப்படியெல்லாம் நினைக்கல. உனக்கு கோபம் அதிகமா வருது. அதுவும் சின்ன சின்ன விஷயத்துக்கு நீ டென்ஷன் ஆகுற,” எனப் பார்த்தாள் சுப்ரியா.

குரு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “இதுக்கும் மேலே உன்னோட இஷ்டம். நீ உன்னோட கன்ஸ்ட்ரக்ஷனை அடுத்த நிலைக்குக் கொண்டு போக விடாம பண்றதுகூட இந்தக் கோபம்தான். அதனாலதான் உன்னால உன் பெரியப்பாவை ஜெயிக்க முடியல. என்னமோ பண்ணு,” என சுப்ரியா நகர, “ம்ம்… போறேன்,” எனப் பற்களைக் கடித்தவன், “இன்னிக்கு அவங்க அவைலபிலா?” என குரு கேட்க, “சரி, நானும் உன்கூட வரேன்,” என்றவள் போன் செய்து அப்பாயின்ட்மென்ட் போட்டாள்.

குரு அவளை முறைத்துப்பார்த்து, “என்னடா முறைக்கிற?”

“நத்திங்,” என இருவரும் சென்றார்கள்.

சுப்ரியா அவனுடன் உள்ளே செல்ல, “நீ வெளியே வெயிட் பண்ணு. நான் பார்த்துக்கிறேன்,” எனக் கூலாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

“ஹலோ மிஸ்டர் குருசேத்ரன்! வாங்க, உட்காருங்க,” எனப் புன்னகையுடன் நின்றாள் நித்யா.

“ம்ம்,” என ஒற்றை பதிலுடன் அமர்ந்து கொண்டான்.

அவன் எந்தப் பக்கம் அமர்கிறான் எனப் பார்த்தாள் நித்யா.

அங்கிருக்கும் சுவற்றில் ஆரஞ்சு மற்றும் ஃப்ளோரசன்ஸ் வண்ணத்தை அடித்து வைத்திருந்தார்கள். நித்யா அவனைப் பார்த்துக்கொண்டே அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் போட்டாள்.

சட்டென முகம் சுளித்தான் குரு.

“ஆர் யூ ஓகே மிஸ்டர் குரு?”

“லைட் ரொம்ப பிரைட்டா இருக்கு,” எனப் புருவம் சுருக்கினான்.

“உங்களுக்குப் பிடிச்ச கலர் என்ன?”

“பிளாக்.”

“அப்படியே கொஞ்சம் பின்னாடி பாருங்க. அந்தச் சுவற்றில் இருக்கும் கலரைப் பார்த்தால் என்ன தோணுது?” என நித்யா கேட்க, “எனக்கு இரிட்டேட் ஆகுது. நான் கிளம்புறேன். உங்களைப் பத்தி அந்தச் சுப்ரியா இடியட் ஓவரா சொன்னா. அண்ட் நீங்க…” என முனகிக்கொண்டே எழுந்தான்.

“அச்சோ, இருங்க. சாரி சாரி. லாஸ்ட்டா ரெண்டு கொஸ்டின்.”

“வாட்?” எனக் கடுப்புடன் பார்த்தான்.

“உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன? அது ஒரு நபரா இருக்கலாம், ஒரு பொருளா இருக்கலாம், இல்லனா வேலையா இருக்கலாம்,” என்றாள்.

குருசேத்ரன் முறைத்துக்கொண்டு பார்க்க, “வாங்க சார்,” எனப் புன்னகையுடன் அழைத்தவள், “அந்த டிஸ்ப்ளே பாருங்க,” எனச் சொல்லிவிட்டு முன்னால் சென்றாள்.

அந்த சேரில் அமர்ந்து கொண்டவன், “என்ன பண்ண போறீங்க?” என குரு கோபமாகப் பார்க்க, “அந்த டிஸ்ப்ளேல தெரியுற எலிப்டிக்கல் மேலதான் உங்க கவனம் இருக்கணும். அதோட ரொட்டேஷனைக் கவனிங்க,” என்றாள்.

இதோ, அரை மணிநேரம் கழித்து, காச் மூச்செனக் கத்திக்கொண்டே வெளியே வந்தான் குரு.

“என்னடா ஆச்சு?” என சுப்ரியா அவன் பின்னால் செல்ல, நித்யா வெளியே வந்தவள், “கொஞ்சம் உள்ளே வா சுப்ரியா. அவர் இந்நேரம் உன்னை விட்டுட்டு கார்ல பறந்திருப்பார்,” என கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

நித்யா என்ன சொன்னாளோ அதுதான் நடந்தது.

“என்னாச்சு அவனுக்கு? எதுவும் பிரச்சனையா? சாரி நித்யா,” என சுப்ரியா வருத்தத்துடன் கூற, “உன்னோட ஃபிரண்டுக்கு இன்டர்மிட்டன்ட் எக்ஸ்புளோசிவ் டிஸ்ஆர்டர்,” என்றாள் நித்யா.

“என்ன சொல்ற?” என சுப்ரியா புருவம் சுருக்கி கேட்க, “எஸ். அவர் கூட வேலை செய்யுறவங்க ரொம்ப பாவம். அண்ட் கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியல. சைக்கோதெரபி தேவைப்படுது. மெடிசன் எடுத்துக்கணும், கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணனும். ஏதோ ஒரு விஷயத்தில் ஆழமா பாதிக்கப்பட்டிருக்கார்,” என்றாள் நித்யா.

“இப்போ என்ன பண்றது?” என சுப்ரியா கேட்டாள்.

“அதுக்கு அவர் ஒத்துழைக்கணும். இங்கே கிளாஸ் அட்டென்ட் பண்ணனும்,” என்றாள் நித்யா.

தொடரும்…