அடுத்து கேள்வியாக கேட்டார்.. ‘எப்படி திருமணம் செய்தாய்.. யார் சாட்சி.. ஒரே நாளில் எப்படி ஏற்பாடு செய்தாய்.. அவங்க அப்பா அம்மா எங்கே.. பொண்ணு போனால் போகுதுன்னு விட்டுட்டாங்களா.. எதுக்கு இங்க வந்த..’ என ஒவ்வொரு கேள்விக்கும் அந்த வீட்டின் பெரும்பாலான கைக்கு எட்டிய பொருட்கள் எல்லாம் உடைந்துக் கொண்டிருந்தது..  டிவி ரிமோட்.. டிபாய்.. அங்கிருந்த பிளவேர்வேஸ்.. அவருடைய போன்.. என உடைந்தது.

தியாகு, லலிதாவின் கண்களை பார்த்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். தந்தைக்கு இன்னமும் கோவமாகியது.

சபரி, தந்தையை சமாதானம் செய்யப் பார்த்தான்.

கிருஷ்ணன் “இங்கிருந்து போக சொல்லு.. அப்புறம் நீ எது சொன்னாலும் கேட்க்கிறேன்” என்றார் பெரிய மகனிடம்.

வள்ளி அழுகைதான் “பிரபா என்ன சொல்லுவா டா.. எப்படி தாங்குவா ராஜி..” என அழுகை.

லலிதாவிற்கு, ‘அக்கா’ புரிகிறது.. அவர்கள் ஏன் தம்பி திருமணத்தில் இவ்வளவு வருத்தபடனும் என ஒருமாதிரி பயம் எழுந்தது. ஏதும் புரியாமல் வேடிக்கை பார்த்தாள்.

தியாகு “நாங்க எங்கே போவது.. இங்கேதானே வரமுடியும்.. எங்க போறது.. சும்மா போன்னா” என அவனும் பேசினான்.

கிருஷ்ணன் “என் பேச்சை கேட்டிருக்கணும் இங்கிருக்க.. போ.. கிளம்பு.. பிரபா வருவதற்குள் கிளம்பு” என்றார் அவரும்.

தியாகு “இதென்ன பா.. அக்காவிற்கு பார்த்து என்னை வேண்டாம்ன்னு சொல்லுவீங்களா.. உங்ககிட்ட கேட்க்காமல் செய்தது தப்புதான். போன்னா எங்கே போவது.. இதுதானே என் வீடு.. நானும் அவளும் இங்கேதான் இருப்போம்..” என்றான்.

பேச்சுகள் சென்றது.. பிரபா வந்தார் தன் மகளோடு.

ராஜிக்கு, வீடு என்னமோ சண்டை என எடுத்து சொல்லியது.

ராஜி “தாத்தா என்ன கோவம்.. மாமாமேல் கோவமா” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள். 

லலிதா நின்றிருந்தாள் ஹாலின் ஓரமாக டிவி அருகே. வந்தவர்களின் பார்வை அனிச்சையாக அவள்மேல் நிலைத்தது.

பிரபா “யாருடா இந்த பொண்ணு” என்றாள்.

தியாகு “அக்கா.. நான் சொல்றது கேளுங்கக க்கா” என்றான்.

ராஜி “என்ன மாமா.. என்ன ஆச்சு” என தியாகுவின் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினாள்.

தியாகு “இரு ராஜிம்மா, அக்கா” என ஆரம்பித்தான்.

வள்ளி “ராஜி நீ உள்ளே போ” என்றார்.

பிரபா “அம்மா, அவ வெளியேதானே போகனும்.. அதான் குடும்பமாக சேர்ந்துக் கொண்டீர்களே.. என்னையும் என் குடுபத்தையும் நீங்களும் தனியாக விட்டுட்டீங்க.. அத்தோட.. என் பொன்னு மனசையும் உடைச்சிட்டீங்க..” என்றாள்.

ராஜியை, அனுஷியா கைபிடித்து அழைத்தாள். ராஜிக்கு, பொதுவாகவே அனுவை பிடிக்காது. இப்போது கையை உதறினாள். மாமாவின் மேல் உள்ள ஆர்வத்தில் “என்ன மாமா ஆச்சு.. என்ன செய்தீங்க.. திரும்பவும் எங்காவது போறீங்களா” என சொல்லிக் கொண்டே சட்டென திரும்பி பார்த்தாள் லலிதாவை. எதோ புரிந்தது ராஜேஸ்வரிக்கும்.. “மாமா” என்றாள்.

தியாகு “ராஜி, நான் சொல்றதை பொறுமையாக கேள்.. ப்ளீஸ் ராஜி” என அவளின் கைபிடித்து அழைத்து வந்து சோபாவில் தன் தந்தையின் அருகே அமரவைத்தான்.

லலிதாவிற்கு புரிந்தது.. இது அவனின் அக்கா பெண் என. ‘ஓ திருமணத்திற்கு பேசி இருக்கிறார்கள், இவர்கள் இருவருக்கும்’ என அப்போதுதான் புரிந்தது அவளுக்கு.

ஆனால், தன் கண்ணெதிரே ராஜியின் கைபிடிப்பது.. பிடிக்கவில்லை மனைவிக்கு. தன்னவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கண்களில் கருணைதான்.. மீறின் ஒரு அவஸ்த்தையான பார்வைதான்.. அதைத்தாண்டி தன்னை நோக்கும் பார்வையில்லை என ஒரு நிம்மதி, புது மனைவிக்கு.

ஆனாலும், அந்த பெண் தன்னவனை பார்ப்பதை கவனித்தாள்.. ஒருமாதிரி வேட்கையில் இருந்தது.. தன்னையும் தியாகுவையும் மாறி மாறி பாருக்கும் பார்வையில் ஒரு ஆதங்கம்தான் தெரிகிறது. குழப்பத்தில் கண்ணீர் வழிய அந்த பெண்ணும் நின்றிருந்தாள். ‘அந்த பெண் இவரை விரும்பி இருக்கிறது’ என.. அந்த கண்களில் தெரிகிறது. பதறுகிறது இவளின் மனம். ‘நான் தெரியாமல் விரும்பிவிட்டேனா.. அவளுக்கு சொந்தமானவரா.. எனதில்லையா தியாகு’ என போராட்டம் மனதில். நெற்றி பொட்டில் வலி.. இதயம் இருக்குமிடம் எதுவென அது அபரிவிதமாக துடிப்பதில்.. வலிக்க வலிக்க கண்டுக் கொண்டாள் பெண்.

தியாகு, ராஜியிடம் “ராஜிம்மா.. நான் லலிதாவை கல்யாணம் செய்துக் கொண்டேன். நாங்க ஒன் இயராக காதலித்தோம். உன்கிட்ட இதைபற்றி பேசனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. டைம் இல்லை டா. அவங்க வீட்டில் வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்க.. வேற ஊருக்கு  போறேன்னு சொன்னதால்.. கல்யாணம் செய்துகிட்டேன்” என சொல்ல சொல்ல.. இப்போதுதான் ராஜிக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.

“மாமா என்னைத்தானே கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னீங்க. இதோ.. நீ டீச்சர் ட்ரைனிங் முடி.. நானும் பிஸினெஸ் பார்க்கிறேன்.. இரண்டு வருஷம் போகட்டும்.. பேசலாம்ன்னு.. அன்று பேசினீங்க” என்றாள்.

தியாகு “இல்ல டா அப்படி இல்ல. நீ படி உனக்கு வயதாகவில்லை ஏன்தான் சொன்னேன். வீட்டில்தான் நம்மை பற்றி எப்போதும் அப்படி பேசுவார்கள். நான் ஏதாவது உன்கிட்ட சொல்லியிருக்கனா.. நீ படிக்கனும்.. எதை படித்தால்.. உனக்கு நல்லது.. உன் ப்யூச்சர் நல்லா இருக்கும்ன்னு நான் சொன்னேன். உன்னை கல்யாணம் செய்துக்கனும்ன்னு நான் நினைச்சதில்ல டா.. ராஜி மாமா உன்கிட்ட ஏதாவது அப்படி சொல்லியிருக்கேனா.,.” என்றான்.

ராஜி “எப்படி மாமா இப்படி பேசுறீங்க.. நம்ம வீட்டில் நமக்கு கல்யாணம் செய்யனும்ன்னு பேசும் போது கூட ‘இவங்களுக்கு வேறு வேலையில்ல.. நான் ஜாலியாக இருப்பது இவங்களுக்கு பிடிக்கலைன்னு..’ ஒரு கவுண்டர் கொடுத்து பேசிவிட்டுதானே போவீங்க. இப்போதுவந்து, எனக்கு எந்த விருப்பமும் இல்லைன்னு சொல்றீங்க.. அப்போதே சொல்லியிருக்கலாமில்ல. ஏன் சொல்லவில்லை.

எனக்கு சடங்கு செய்யும் போது கூட நீங்கதானே.. நீங்க மட்டும்தானே என்னை ஓலை வீட்டிலிருந்து தூக்கி வந்து பெரிய சேரில் உட்கார வைச்சிங்க.. சபரி மாமா அப்போது வரலையே.. அப்போது ஏன் எனக்கு எல்லாம் செய்தீங்க.. நீங்களும் சபரி மாமா மாதிரி தள்ளியே இருந்திருக்கலாமில்ல.. அப்போதே சொல்லியிருக்கனுமில்ல.. ஏன் சொல்லலை.

நான் காலேஜ் சேறும் போது.. கம்ப்யூட்டர் டிகிரி எடு.. அதுதான் படிக்கனும்ன்னு ஏன் சொன்னீங்க.. வீடே எனக்கு கார் ஓட்ட கற்றுக் கொண்டுக்க வேண்டாம்ன்னு சொல்லியும்.. யாருக்கும் தெரியாமல் அதிகாலையில் எதுக்கு என்னை எழுப்பி.. எனக்கு எதுக்கு கார் ஓட்ட கற்றுக் கொண்டுத்தீங்க. எனக்கு, எதுக்கு சிஸ்டம் வாங்கிக் கொடுத்தீங்க.. தனி போன் கொடுத்தீங்க.. உங்க கூடத்தானே நான் டிரஸ் வாங்க போவேன்.. அப்போவே சொல்லியிருக்கலாமில்ல.. எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்க விருப்பமில்லைன்னு. நானும் வந்திருக்கமாட்டேன் தானே” என கத்தி அழுதாள் ராஜேஸ்வரி.

சூழ்நிலைகள்தான் மனிதனை உருவாக்குகிறது.. வடிவமைக்கிறது.. வாழ வைக்கிறது.

லலிதா சத்தமில்லாமல் அழுதாள். இங்கிருந்து போய்விடலாம்.. தியாகு அவளோடே வாழட்டும் என கூட ஒருஷனம் மனது சொல்லியது. பின் கண்களில் தன்னவனை பார்க்க.. பொறுமையான அவனின் விளக்கத்தை கேட்கவும், மனது மீண்டும் அவனிடமே சென்றது.

தியாகு “ராஜி, நீ நம்ம வீட்டு பொண்ணு டா.. எப்படி சொல்றது. நீ தைரியமா இருக்கணும்.. உனக்கு எது சரின்னு நாங்கதானே பார்க்கனும்.. இப்போது பாரேன் நம்ம மித்ராவிற்கு, நான் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கேன்.. அவளுக்கு ஓட்ட தெரியாதுன்னு எல்லோரும் சொன்னாங்க.. ஐந்து வயது ஆகிறது என நான்தானே.. காலையில் வெளியே கூட்டி போய் ஓட்ட வைக்கிறேன்.. பழகனுமில்ல. நீ பெரியவங்க பேச்சில் குழம்பியிருக்க ராஜி” என்றான்.

பிரபா “டேய் டேய்.. போதும் டா.. இப்படி நம்ம வைச்சி கழுத்தருத்து விட்டாய்.. நீ எப்படி டா.. நல்லா இருப்ப, உன் கூட வந்தவளுக்கு இதெல்லாம் புரியுமா.. என்ன சொல்லி மயக்கினாலோ..” என பேச பேச ராஜி எழுந்து ஓடினாள்.. வாசலுக்கு, தங்கள் வீடு நோக்கி.

தியாகு, தன் அக்காவை முறைத்தான் “உங்களை போல.. அவளுக்கு இதெல்லாம் தெரியாது அக்கா.. லலிதாவிற்கு எனக்கு இப்படி ஒரு அக்கா பெண் இருப்பதே தெரியாதுக்கா. அவளை ஏதும் பேசாத.” என முறைத்தான் அக்காவை.

மீண்டும் “உனக்கு தெரியும், உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன்.. எப்போதும் ராஜி எங்களுக்கு குழந்தை மாதிரி என.. நீங்க போசும்போதேல்லாம் சிறிய வயதில்  நான் நிறைய முறை சொல்லியிருக்கேன்.. யாருமே அதை உணர்ந்ததில்லை..” என தன் அம்மாவை பார்த்து கத்தினான்.

சபரி “சரி டா.. சரி டா” என தம்பியின் அருகில் வந்து சமாதானப்படுத்தினான்.

கிருஷ்ணன் வள்ளி பிரபாவதி மூவரும் பார்த்துக் கொண்டனர். இது குடும்பத்தில் உள்ளே பெரியவர்கள் முடிவெடுத்தது.. என அனுஷியா அவர்கள் பார்வையில் உணர்ந்தாள். முன்பே அனு’விற்கு சிலதெல்லாம் புரியும்.. ம்.. தந்தையில்லாத பெண் என.. ராஜிக்கு வீட்டில் இருக்கும் செல்லம் தெரியும். ராஜிதான், தியாகு இல்லாமல் உடை எடுக்க செல்லமாட்டாள். அவள் கேட்டு அழுதுதான் கார் பயிற்றுவிக்க.. தியாகு சென்றது. தியாகு, ஒரு ட்ரைவிங் ஸ்கூல்லில் சென்று படிக்கதான் அறிவுறுத்தினான். ஆக, அனு எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்றாள், இப்போது.

கிருஷ்ணன் “என்னமோ டா.. இப்போது இந்த கல்யாணத்தினை ஏற்க முடியாது. நீ கிளம்பு” என்றார்.

தியாகு, சூதில் அனைத்தையும் இழந்த தர்மன் போல நின்றான். ராஜியின் விருப்பம் தெரிந்தும்.. அதனை முகத்திற்கு நேரே சொல்ல முடியாமல்.. தன் காதலை அவசரமாக காத்துக் கொள்ள வேண்டியதில்.. எல்லாவற்றையும் இழந்தான், தியாகு. நல்லவேளையாக.. கிருஷ்ணை பற்றிக் கொண்டிருந்தான் தர்மன், அதேபோல.. தன்னவளை மட்டுமே பற்றிக் கொண்டான் தியாகு.

இருவரும் தியாகு வீட்டினை விட்டு வெளியே வந்தனர்.

எங்கே செல்வது என தெரியவில்லை.. தியாகு, தன் டூவீலர் எடுத்துக் கொண்டு “உட்கார்” என லலிதாவிடம் சொன்னான். ஒன்றுமே கேட்கவில்லை அவளும்.. அமர்ந்தாள் அவன் பின்னால். தியாகு போகும் இடம் தெரியாமல் காற்றினை கிழிக்கும் வேகத்தில் வண்டியை செலுத்தினான். இறுக்கமாக தன்னவனை பற்றிக் கொண்டு அவன் பின்னால் அமர்ந்திருந்தாள் மனையாள்.