காதல் வைபோகமே….   நாள் – 18

அத்தியாயம் 58

அன்று இரவு விக்ரமை வீடியோ காலில் அழைத்து,  இந்த சந்தோஷத்தைப் பகிர, “அய்யாவை யாராவது வேண்டாம் எனச் சொல்வார்களா?”  எனக் காலரைத் தூக்கிக் காட்ட,

“ரொம்ப தான்….” என அலுத்துக் கொண்டாள்.

“இப்ப தான் நிம்மதியாக இருக்கு ஜில்லு, ஒரு பக்கம் ஓ.கே. ஆகிவிட்டது , அடுத்து என் பக்கம் பேச வேண்டும்…”

“ஓ.கே. ஆகிவிடும் தானே விக்ரம் ?” எனக் கலங்க,

“உஷ்…  ஜில்லு,  பார்த்துக்கலாம்…. யாமிருக்கப் பயமேன்” எனப் போஸ் கொடுக்க, 

இனியா சிரிக்க,  காவியா என்ட்டரானாள்.

“ஹாய் மாமஸ்,  நான் காவியா….”  என அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

அவனும் ‘ஹாய்’ சொல்ல,

“எப்ப மாமஸ் ட்ரீட்?” எனக் கேட்டாள்.

 

“உஷ்… காவியா….” என இனியா அடக்க,

விக்ரம் இடை மறித்து, “கட்டாயம் போகலாம். நான் வர இன்னும் 2 வாரம் ஆகும்.  அதற்குப் பின் போகலாம். ஹோட்டல் உன்னோட சாய்ஸ் ரைட்….” என வாக்குறுதி கொடுத்தான்.

“தேங்க்ஸ் மாமஸ்…  இப்படிச் சிரிக்கிற மாமாவை அப்படிச் சொல்லி விட்டாயே,  நீ ரொம்ப மோஷம்…”  எனக் கண்ணடித்தபடி கொளுத்திப் போட்டாள்.

 விக்ரம் சுவாரசியமாகி, “என்ன…?” எனக் கேட்க, 

இனியா புரியாமல், காவியாவை பார்க்க, “ஜெம்…” என வாயசைத்தாள்.

இனியா அடிக்கக் கை ஓங்க, “ஓ.கே. மாம்ஸ் பாய்.  என்ன உதவியென்றாலும்,  என்னை அணுகலாம்…” எனக் குறும்பாகச் சொல்லிச் சென்றாள்.

விக்ரம் மீண்டும் என்னவெனக் கேட்க,

“நீங்கள் நம்ம சேனலோட ‘ஜெம்’ எனப் பெருமை பேசியிருந்தேன், அதைத்தான் குறிப்பிடுகிறாள்….” என கண்ணில் குறும்பு மின்ன,  வாய் கொள்ளாச் சிரிப்புடன் சொன்னாள்.

 

“அடி ஆத்தி..  இன்னும் என்ன என்ன பெருமை பேசியிருக்காயோ? நினைத்தாலே பயந்து வருது…” என நெஞ்சைப் பிடித்து ஆக்க்ஷன் செய்ய,  

இனியா அடக்கமுடியாமல் சிரித்தாள்.

 

அந்த வார இறுதியில்,  ரோஜா நிச்சயத்திற்குச் சென்று வந்தாள்.

நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் சொந்தங்களை அழைத்துச் செய்திருந்தாள். 

மிக அழகாக,  உள்ளார்ந்த சிரிப்போடு, ரோஜா விழாவில் வலம் வந்தாள். 

பரத்தோடு சிரித்துப் பேசி,  எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். இரு வீட்டாரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

“நான் தான் தேவையில்லாமல் பயந்து விட்டேன் போல எல்லாம் சரியாகி விட்டது…” என மகிழ்ச்சி அடைந்தாள் இனியா. 

ரோஜாவையும் பரத்தையும் வாழ்த்தி விட்டு வந்தாள்.

விழா போட்டோக்களை விக்ரமிற்கு அனுப்ப, “ஜில்லு ரொம்ப அழகாக இருக்கிறாய், அப்படியே கடித்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது, அந்தக் கன்னக் குழிக்குள் விழுந்திட்டேன்….”  எனக் காதல் வசனம் பேசி,  அவளைச் சிவக்க வைத்தான்.

விக்ரம் பிளான் செய்த மாதிரி வரமுடியாமல், மேலும் ஒரு வாரம் தள்ளிப் போனது.

அப்படியும் இரண்டு நாட்கள் மட்டுமே சென்னையில் இருக்கும் படியாக அமைந்தது. 

இனியாவுடன் வெளியே செல்ல முடியாமல்,  ஹோட்டலில் மட்டுமே சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்.

அப்பொழுது விக்ரம் போனில் காவியாவை அழைத்து, “ரொம்ப ஷார்ட் டிரிப் காவியா,  இந்தத் தடவை முடியாது. நிச்சயமாக அடுத்த தடவை ட்ரீட் போகலாம்…” எனச் சொன்னான்.

காவியாவும், “என் மாம்ஸ் பெரிய வியாபார காந்தம் என்பதால் ஒத்துக் கொள்கிறேன்…” எனக் கேலி செய்து விட்டு இலகுவாக விட்டுக் கொடுத்தாள்.

 

“விடுங்க மாம்ஸ், அக்கா கூட என்ஜாய் செய்யுங்கள். அடுத்த தடவை பெரிய ட்ரீட்டாக வைத்துக் கொள்வோம்…” எனப் போனை வைத்தாள்.

இனியா அவனைக் காதலாகப் பார்க்க, “என்னடா? என வினவ, 

“ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள், சின்னப் பெண் என்று விடாமல், அவளை அழைத்துப் பேசுவது எல்லாம் சான்ஸே இல்லை,  எனக்கு இதுவெல்லாம் வருமா எனத் தெரியவில்லை….” என்றாள்,  மேலும், “இப்போது ஒத்துக் கொள்கிறேன், எங்க பாஸ் சொல்வது போல் தல தல தான்…” என ரஜினி ஸ்டையிலில் சல்யூட் அடித்தாள். பின் சிறிது நேரம் பேசி விட்டு, மனசே இல்லாமல் கிளம்பிச் சென்றனர்.

வழக்கம் போல் நாட்கள் ஒட,

‘கல்யாண வைபோகமே’ ஐந்து எபிஷோட்கள் எடுக்கப்பட்டு, அடுத்த வாரம் ஒளிபரப்பிற்குத் தயாராகியது. 

இனியாவிற்கும் சில மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வர,  பிஸியானாள். 

மேலும் ஒரு நிகழ்ச்சிக்கு, சேனலில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அதாவது தினமும் ஒரு பிரபலம் அல்லது நிகழ்வு அல்லது இடம் பற்றித் தொகுத்துப் பேச வேண்டும்.  அது இரவு ஏழு மணிக்கு,  செய்திகளுக்கு முன் ஒளிபரப்பு செய்யும்படி பிளான் செய்யப்பட்டிருத்தது. 

அன்று இரவு இதைப் பற்றி விக்ரமிடம் சொல்ல,

“நல்ல வாய்ப்பு இனியா,  உன் தமிழ் வகுப்பு இதில் பயன்படும்..” என நினைக்கிறேன், அசத்து…” 

“இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?”  எனச் சந்தேகம் கேட்க,

“இல்லைடா,  என்னோடு முழுக் கவனமும் இப்போது தெலுங்கு சேனலில் தான், உனக்குத்தான் தெரியுமே… நான் இப்போது கிரியேடிவ் ஹெட் கூட கிடையாது.  ரமணி ஸார் தான் பார்த்து கொள்கிறார்.”

“.ம்ம்… சரி,  எப்போ வருவீங்க?”

“அனேகமாக அடுத்த வீக் எண்ட்,  ரெடியாக இரு,  வெளியே போலாம்…”  

“ம்ம்…  மிஸ்ஸிங் யூ பெட்லி விக்ரம்…”

 “சரியாகி விடும்டா, நீயும் வரும் வாரங்களில் பிஸியாகி விடுவாய். சிக்கிரமாகக் கடந்து விடுவோம்…” எனத் தேற்றினான்.

அத்தியாயம் 59

இனியாவும் புது நிகழ்ச்சியை ஒத்துக்கொண்டாள்.

அந்த வாரம் ‘கல்யாண வைபோகமே’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக, எதிர்பார்த்தது போல் இனியாவின் குறும்புப் பேச்சு, பங்கேற்பாளர்களிடம் இயல்பாகப் பேசி விசயத்தை வாங்கும் தன்மை,  பங்கேற்பாளர்களைக் கம்ஃபர்ட் ஜோனில் வைத்துக் கொள்ளும் பாங்கு என எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சியை நன்றாக எடுத்துச் சென்றது. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

  

நிகழ்ச்சியைத் தாண்டி, பிரபலங்களுடன் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொண்டாள்.

விக்ரமிடம் இருந்து கமெண்ட்ஸை எதிர்பார்த்து காத்திருக்க, அவன், பிஸி,  நாளை பேசலாம் என மெசேஜைத் தட்ட,  கடுப்பானாள்.

“நாளைக்கு இருக்குடா உனக்கு…” என்றவாறு தூங்கப் போக, 

ரோஜா அழைத்து, “உன் நிகழ்ச்சியைப் பார்த்தேன் நன்றாக இருந்தது…” எனப் பாராட்டினாள்.

“புதுப்புது மனிதர்களைச் சந்திக்கிறேன், சுவாரசியமாக உள்ளது  அக்கா..” 

மறுநாளும்,  அதற்கு மறு நாளும் விக்ரமிடம் இருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருக்க,  பிஸி… என்றே மெசேஜே வந்தது.

 கடுப்பான இனியா, “ மவனே கையில் மாட்டினாய் சட்னி தான்….” என நினைத்தபடி,  சிக்கியவர்களிடம் எல்லாம் காய்ந்தாள்.

வசந்த் வழக்கம் போல் ஏதோ கேலி செய்ய,  பாய்ந்து விட்டாள். 

அனு என்னவென்று கேட்க,  ஏதோ சொல்லிச் சமாளித்தாள். பின் வசந்திடம் மன்னிப்புக் கேட்டாள்.

வியாழன் மாலை படப்பிடிப்பில் இருந்த போது,  விக்ரம் வர, 

இனியா கண்கள் அகல, அப்படியே இமைக்காமல் பார்த்தாள்.

 

அர்ஜுன் விக்ரமை வரவேற்று,  நிகழ்ச்சியைப் பற்றி அவனின் அபிப்பிராயம் கேட்க, “இன்னும் பார்க்கவில்லை,  உங்கள் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது அர்ஜுன்…”  

அர்ஜுன் இறக்கையில்லாமல் பறந்தான்.

“அப்புறம் இனியா…” எனப் பேச ஆரம்பிக்க, 

அர்ஜுன் இடைபுகுந்து, “வேண்டாம் ஸார்….”  

விக்ரம் புரியாது பார்க்க,

“ ஸார்,  அவள் இரண்டு,  மூன்று நாட்களாக ஜோம்பி மோடில் இருக்கிறாள்…”  

 சுவாரசியமான விக்ரம், “ஜோம்பி மோட்….” என இழுக்க, 

தல பாராட்டியதும்,  பேசியதும்,  அவனை உற்சாகப்படுத்த, சுற்றுப்புறத்தைக் கவனிக்காது, “யார் மாட்டினாலும் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறாள்…” என அர்ஜுன் விளக்கம் சொன்னான்.

விக்ரம் சிரிக்க, இணைந்து சிரித்தவாறே திரும்ப,  மற்ற மூவரையும் பார்த்தவன், “ஆஹா அர்ஜுன்,  தப்பு பண்ணிவிட்டாயே….” எனத் திருதிருக்க, 

 

எல்லாவற்றையும் கவனித்த விக்ரம், “ யூ ஆர் டூ குட் அர்ஜுன்….” எனத் தோளில் தட்டியவாறு, “எப்போது ஷூட்டிங் முடிகிறது…” எனக் கேட்டான்.

 

“ பேக்கப் டைம் தான் ஸார்….”

“ஓ.கே. யூ கேரி யான் கய்ஸ்… பாய்…” என விக்ரம் கிளம்ப,

அர்ஜுன் பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்ப,   மூவரும் துப்புவது போல் செய்ய,  விழாத எச்சிலைத் துடைத்த வண்ணம், “மன்னிச்சு…” என இரு கை கூப்பினான்.

வசந்த், அனுவை பார்த்து, “ரொம்ப கஷ்டம்…” என வருத்தப்பட, 

ஆங்கிரி பர்ட் மோர்ட்டுக்கு மாறினாள் அனு. 

இனியாவிற்கு மெஸேஜ் வர,  பாஸை முறைத்தபடி,  அதைப் பார்வையிட,  விக்ரம் தான் ஒரு ஹோட்டல் பேரைச் சொல்லி , சந்திக்கும்படி அனுப்பியிருந்தான்.

 “ரொம்ப பிஸி….” என இனியா பதிவைத் தட்டினாள்.

“அதான்,  ஷூட்டிங் முடிந்து விட்டதல்லவா? என்ன பிஸி?” எனச்  சிரித்தபடி தட்டினான்.

“எல்லாம் பிளான் பண்ணி செய்ய வேண்டியது…” என மனதில் திட்டியபடி, “ப்ர்ஸனல் வொர்க்…” என முறுக்கினாள்.

“வந்தால் ஸர்பரைஸ் உண்டு,  காத்திருக்கிறேன். பாய்…” என முடித்தான்.

“நோ” என தட்டிய பின்,  மெஸேஜையே பார்த்தபடியே இருக்க,  புளு டிக் வராததால்,

 

கடுப்பான இனியா, “மவனே …” எனப் பல்லை கடித்தாள்.

இனியாவின் கவனம் தன்னிடம் இல்லாததை உணர்ந்த அர்ஜுன், “மீ எஸ்கேப்…  பேக்கப்….” என்றவாறு நகர்ந்தான்.

இனியாவும், “நண்பனைப் பார்க்கப் போகிறேன்…” எனக் கிளம்பினாள். 

அத்தியாயம் 60

ஹோட்டலில்  அவனிருக்கும் மேஜைக்கு வந்தவள்,  உட்காராமல், “ என்னவென்று சொல்லுங்கள்,  வேலையிருக்கு….” என முறுக்கினாள். 

இனியா சண்டை போடுவதை ரசித்த விக்ரம், அவளைச் சீண்ட எண்ணி, “ரொம்ப முக்கியமான வேலையா? அவசரமா?”என இழுக்க,

“ஆம்…” என தலையாட்ட, 

“சரி,  நீ கிளம்பு,  இரவு பேசுகிறேன்…” என வம்பு செய்தான்.

கடுப்பானவள், “நாளைக்கெல்லாம் திரும்ப வர முடியாது,  நான் பிஸி , பிஸி , பிஸி….” என மூன்று முறை அவன் காதில் விழும்படி மொழிந்தாள்.

இதைக் கேட்டு விக்ரம் அடக்கமுடியாமல் சிரிக்க, காண்டான இனியா,  அவன் வாயை மூடினாள்.

அந்தக் கைகளில் முத்தம் வைக்க,  சட்டென்று கை எடுத்தவள், அவனை முறைக்க,  அவன் நகர்ந்து அருகில் இடம் கொடுக்க,  அதைத் தவிர்த்து எதிர்புறம் அமர்ந்தாள்.

கண்களில் சிரிப்போடு, “ லவ் யூ ஜில்லு…” எனக் கொஞ்ச,  சற்று மலையிறங்கினாள்.

“ஸாரி ஜில்லு…  உன்னை ஸர்ப்ரைஸ் பண்ணலாமென… கொஞ்சம் சொதப்பிடுத்து போல…” எனப் பவ்யமாக கேட்டான்.

“ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?  வேலையே ஒடவில்லை, ஐ லாஸ்ட் மைசெல்ப்,  உங்கள் மேல் ரொம்ப டிபென்டெண்ட் ஆகி விட்டேன் போல…” எனக் குரல் தளுதளுக்கச் சொன்னாள்.

 

“ஸாரி டா…” என அவள் கையைப் பிடித்தபடி, “ஒரு நாள் முன்னாடி வந்து,  உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் எனப்  பிளான் பண்ணி,  எவ்வளவு வேலை பார்த்தேன் தெரியுமா? எல்லாவற்றையும் ரீஷெடியூல் செய்து, நிற்க நேரமில்லாமல் ஓடினேன் தெரியுமா?” எனத் தன்னிலை விளக்கம் தந்தான்.

அவள் சற்று சமாதானமானதை உணர்ந்த,  கண்சிமிட்டியபடி, “ஐ லவ் யுவர் ஃபீலிங்,  என்னை ரொம்ப தேடினேன் நினைக்கிறப்போ, ஏதோ அவார்ட் வாங்கின மாதிரி இருக்கு ஜில்லு….” எனச் சந்தோஷப்பட்டான்.

இனியாவும், “ஒரு நாள் முன்பு வருவது ஸர்பரைசாகவே இருக்கட்டும்,  அதற்காக இப்படியா பேசாமலா இருப்பது…?”எனக் கோபித்தாள்.

“இல்லடா,  நாம் பேச ஆரம்பித்தால் , ஐந்து நிமிடத்தோடு நிற்கும் என நினைக்கிறாயா? அது மட்டும் இல்லை , உன் கிட்ட பேசினால் உளறிவிடுவேன் எனத் தோன்றியது,  அதான்…” எனச் சமாதானம் செய்தான்.

“உங்களால் பேசாமல் இருக்க முடிந்ததா?”  என ஆதங்கப்பட,

 “நான் கஷ்டப்படலையென்று நினைக்கிறாயா ஜில்லு?  சீக்கிரம் பார்க்கப் போகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நகர்த்தினேன். பல முறை  உன்னை அழைக்கப் போனை எடுத்து , பின் உன் போட்டாவைப் பார்த்துக்கொண்டு இருப்பேன்…” எனக் கூறி, பல மன்னிப்புகளை வேண்டி, “இது மாதிரி இனி நடக்காது…” என உறுதி தந்த பின்,  சமாதனமானாள்.

பேரரை அழைத்து பாசந்தி சொன்னான்.

 “சண்டை போட்டதைக் கொண்டாடவா?” எனக் கேலி செய்ய, 

இனியா ஃபார்மிற்கு வந்துவிட்டாள் என ஆசுவாசமானான்.

“இல்லை ஜில்லு…” என்றவாறு, “நீயும் உன் பெற்றோரிடம் நம்மைப் பற்றிப் பேசி மூன்று மாதம் ஆகிவிட்டது, இதற்கு மேல் நான் அவர்களைப் பார்க்காமல் இருப்பது நன்றாக இருக்காது,  அதனால்  உன் அம்மா,  அப்பாவைப் பார்த்துப் பேசிவிடலாம் என யோசித்து தான் இந்த வாரம் ஃப்ரி செய்து வந்தேன். எப்போது பார்க்கலாம் எனக் கேட்டுச் சொல்…” 

இனியா முறைக்க,

“என்னடா ஜில்லு,  இதைச் சொன்னவுடன் மாமாவைக் கட்டிப் பிடித்து முத்தம் தருவாய் என பிரைவேட் ரூம் எல்லாம் போட்டால், காளி அவதாரம் எடுக்கிறாய்…?” எனப் புரியாமல் கேட்க,

“வரும் ஆத்திரத்திற்கு…” எனச் சுற்றும் முற்றும் பார்க்க, 

“நோ வயலன்ஸ் ஜில்லு,  என்ன விசயம் சொல்லு?”

“இன்று காலை தான்,  என் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஊருக்குப் போயிருக்கிறார்கள், ஞாயிறு இரவு தான் வருவார்கள்…”

“என்ன இனியா சொல்கிறாய்?” என விக்ரம் அதிர,

“மூன்று நாட்களில் எப்படியும் ஒரு நாள் ஃபிக்ஸ் செய்து விடலாம் என நினைத்தேனே….” என வருத்தப்பட்டான்.

அதை இலகுவாக்கும் பொருட்டு, “ கடைசியில் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்துவிட்டாயே மொமண்ட்..” எனச்  அம்மா அப்பாவின் ஷெடியூலை விசாரிக்காததைச் சொல்லிச்  சிரிக்க, விக்ரமும் இணைந்து கொண்டான்.

“சரி,  காவியாவோடு ட்ரீட்டையாவது ஃபைனல் பண்ணலாமா?” 

 “அம்மா, அப்பாவோடு பேசி விட்டு, காவியாகிட்டையும் கேட்டுச் சொல்கிறேன்…”

  

அம்மா,  அப்பாவிடம் சொல்ல,  அவர்களும் வருத்தப்பட, பின்,

“சரிடா,  அடுத்த முறை சரியாகப் பிளான் செய்து கொள்ளலாம்….” என முடித்தனர்.

இனியா காவியாவிடம் கேட்க,  “பிராக்டிக்கல் தேர்வு இருப்பதால், அடுத்த முறை…” என அவளும் சொன்னாள்.

விக்ரமிடம் சொல்ல,  விக்ரம் காவியாவிடம் போனைக் கொடுக்க  சொல்லி,  “என்ன காவியா? வெறும் பிராக்டிக்கல் தேர்வு தானே? இரண்டு மணி நேரம் வராலாமில்லையா?”

“என்ன ஒரு அவமானம்?” எனக் காவியா புலம்ப,  விக்ரம் திகைத்தான்.

“மாமஸ், ஒரு எஞ்சினியரிங் மாணவியைப் பார்த்து,  இப்படிக் கேட்கலாமா?  இப்போது தான் போர்ஷனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இனி கண்டு பிடித்து,  ஜெராக்ஸ் எடுத்து, பிராக்டிக்கல் நோட்டில் எழுதி, எதை சாய்ஸில் விட, எதைப் படிக்க எனப் பிளான் செய்து….  என எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?” என நீட்டி முழக்கினாள்.

 விக்ரம் சிரித்தபடி, “தப்புதான் டா,  கண்டினியூ…கண்டினியூ…” எனச் சொல்ல,

அதற்குள் இனியா போனைப் பிடுங்கி, “விட்டா,  பேசிக்கிட்டே இருப்பாய்,  போய்ப் படி…” என்றாள்.

“மாம்ஸ், பொறாமை பொங்கல்,  உங்களோடு ரொம்ப நேரம் பேசிவிட்டேன்…” எனப் பின்னால் இருந்து கத்தினாள்.

 

அதற்குள் இனியா பால்கனிக்கு வந்து விட,

 விக்ரம் சிரித்தபடி, “ சான்ஸே இல்லை உன் தங்கை…”  

“பேச ஆரம்பித்தால் நிப்பாட்ட மாட்டாள்…” 

“இதை யார் சொல்லுகிறார்கள் பார்… காலக் கொடுமை…” என அவளையே வாரினான்.

 கடுப்பானவள், “ நீங்கள் ஒன்றும் என் பேச்சைக் கேட்க வேண்டாம்,  நான் போன வைக்கிறேன்” என்று வம்பு செய்ய,

“இரு,  இரு, நாளைக்கு எங்கே போகலாமா?” 

“நான் ரொம்ப பிஸி….” எனப் பந்தா காட்ட,

“ஜில்லு, உன் அம்மா, அப்பா ஷெடியூல்தான் தெரியாது,  உன் ஷெடியூல் நன்றாகத் தெரியும்” என்று ஓர் இடத்தைச் சொல்லி,

“அங்கே வா…” என்றான்.

மறுநாள் ஷாப்பிங் சென்றார்கள் , அவளுக்கு டிரஸ் வாங்கிக்  கொடுத்தான்.

பின் பிரத்யேக நகைக் கடைக்குச் செல்ல, அவள் மறுக்க மறுக்க மெல்லிய பிளாட்டினம் பிரேஸட் வாங்கிக் கையில் மாட்டி விட்டான்.

பின் இரண்டு நாட்களும்,  எந்தக் கவலையின்றிச் சுற்றினார்கள் . நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலர்கள் போல உணர்ந்தனர். 

ஞாயிறு இரவு கிளம்பும் பொழுது,  இனியா சோக கீதம் வாசிக்க, இன்னும் இரண்டு மாதம் தான்… எல்லாம் செட்டிலாகிவிடும்,  பின் சென்னை தான் நிரந்தரம்…” எனச் சமாதானப்படுத்தினான்.

பின், “உன் நிகழ்ச்சி  நன்றாக இருந்ததடா…” எனப் பாராட்டினான்.

 

“நீயும் வரும் நாட்களில் பிஸியாகி விடுவாய் …., நாட்கள்  ஒடிவிடும்…” என மீண்டும் சமாதனப்படுத்தினான்.

“சரி,  ஆனால் என்ன வேலையிருந்தாலும் ஐந்து நிமிடமாவது பேசி விட வேண்டும்…” என வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்.

தொடரும்….