அப்பறம் அவ வந்ததும் தலையை நல்லா துவட்டிட்டு அந்த மேக்கப் போடுற புள்ளைக்கு மறக்காம கால் பண்ணுடி”
என்று சொல்லி வாசலுக்குச் சென்றவர், மறந்தவராகத் திரும்பி,
“அந்தப் புள்ளைங்க வர்றதுக்குள்ள அவள சாப்பிட வச்சிடுடி, நான் சாப்பாடு குடுத்துடுறேன், மேல” என்று சொல்லி அவர் சென்றுவிட்டார்.
அவர் பேத்தியின் கல்யாணம் போல அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு சந்தோஷமாக பார்த்து கொண்டிருந்தார் மணியம்மாள்.
அவர் சென்றதும் ப்பூ… என்று காற்றை வெளியே இழுத்துவிட்டவள், ஸ்டெல்லா போட வேண்டிய அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். அப்போது , வேக வேகமாக குளித்து முடித்து வெளியே ஸ்டெல்லா வந்தாள்.
அவள் வேகத்தைப் பார்த்த ரூத், “ஸ்டெல்லா பொறுமை…. என்னும் எவ்வளவு நேரம் இருக்கு, பதறாத… அதான் மாமா உனக்காகவே பத்து மணிக்கு மேல முகூர்த்தம் வச்சிருக்காங்களே, அப்புறம் ஏன் இவ்வளவு வேகம்?” என்று கிளிக்கி சிரித்த ரூத்தை முறைத்த ஸ்டெல்லா.
“பத்து மணி தான் அதுக்கு, கிளம்பாமலே இருக்கணுமா டி?… ஆமா…. நீ என்ன சுடிதார் போட்டுட்டு சுத்துற? எங்கடி நான் வாங்கி கொடுத்த புடவை?”
“அது உனக்கு சேலை கட்டி விடுவாங்களே அவுங்களே, எனக்கும் கட்டி விட்டுருவாங்கலாம் மாமா சொன்னாங்க.”
“ஓ… அப்போ ஓகே, மேக்கப் அதுவும் உனக்கு போடுவாங்க தான?”
“ம்ம்ம்…. எல்லாம் எனக்கும் போடுவாங்க தான், நீ இங்க வந்து முதல்ல உக்காரு” என்று ஸ்டெல்லாவை அமர வைத்த ரூத், அவளது தலைக்கு ஹேர் ட்ரையரை போட்டாள்.
அப்போது தான் ஸ்டெல்லாவின் கைகளில் சிவந்திருந்த மருதாணியை கவனித்தாள் ரூத்.
“ஸ்டெல்லா…. கைல மருதாணி எப்போ வச்ச? திருப்பி நைட் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் வந்தாங்களா என்ன?”
என்று கேள்வி கேட்டவளுக்கு எப்படி பதில் சொல்ல என்று தெரியாமல் இவள் திணறிய சமயம், சரியாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் ஸ்டெல்லா சமாளிப்பாக,
“போய் யாருன்னு முதல்ல பாரு ஜோசப்…” என்று அவளை அணுப்பி வைத்தவள், நெஞ்சில் கை வைத்து நிம்மதியானவள், அவள் சிவந்திருந்த கைகளை தான் பார்த்தாள்.
மெஹந்தி நன்றாக இவள் கைகளில் இரவை காட்டிலும் நான்றாக சிவந்து இருக்க, அது நேற்று நடந்த நிகழ்வை கண் முன் கொண்டு வரவும், அந்த நிகழ்வின் தாக்கத்தில் அவளின் கை சிவப்பிற்கு இணையாக முகமும் சிவந்து காணப்பட்டது.
திருமணத்திற்கு முதல் நாளே அனைவரையும் மண்டபத்தில் தங்க வைத்திருந்தான் த்ரூவ்.
காலை பத்து மணிக்கு தான் முகூர்த்தம் என்றாலும், காலையிலேயே எழுந்து அலைச்சல் வேண்டாம் என்று இந்த முடிவை எடுத்திருந்தான்.
திருமணம் ஒரு மாதத்திலேயே என்பதால், சென்னை உட்புறத்தில் எந்த மண்டபமும் கிடைக்காத காரணத்தால், அவுட்டர் சென்னையில் நல்ல தங்கும் வசதியும் உள்ள பெரிய மண்டபமாக புக் செய்திருந்தான் த்ரூவ்.
அதன் தூரம் கருத்தில் கொண்டே இவ்வாறு செய்திருந்தான் த்ரூவ். அதன் படி மதியம் போல் ஆதிஷின் அம்மாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும், பாட்டியின் கட்டாயத்தின் பேரில் அனைவரும் வந்திருந்தனர்.
பின் மதுரையில் இருந்து மதியின் குடும்பமும் த்ரூவ் திருமணம் என்றதும் சந்தோஷமாகவே வந்திருந்தனர்.
இப்படி திருமணத்திற்கு முந்தைய தினமே மண்டபம் நிரம்பி இருக்க, ஸ்டெல்லா அனைத்தையும் ஒரு வித நிர்மலமான முகத்துடன் தான் பார்த்தாள்.
அவளின் வாழ்வில் இப்படி ஒரு நாள் வரும் என்று எதிர் பார்க்காதவள், இன்று அது அவளுக்கு நடந்து கொண்டிருக்கவும், எப்படி அதற்கு எதிர்வினை ஆற்ற என்று குழம்பி போய் நின்றாள் நெஞ்சு முட்டும் சந்தோஷத்துடன்.
மாலை போல் மெஹந்தி போட பொண்கள் வந்திருக்க, அத்தனை சந்தோஷமாக ஒரு வித ஆர்வத்துடன் அந்த டிசைன் கலையெல்லாம் பார்த்து கொண்டிருந்தாள்.
என்றோ சிறு வயதில் அம்மா இவளுக்கும், இவள் அக்காவுக்கும் ஒன்றாக மருதாணி கையில் வைத்தது நினைவில் வந்து செல்ல, அத்தனை வருடம் கழித்து இன்று தான் மீண்டும் கையில் வைத்துக்கொள்ள போகிறாள்.
அதில் அத்தனை ஆர்வத்துடன் டிசைன்கள் ஒவ்வொன்றாக பொறுமையாக பார்த்து ரசித்து என்று பார்த்து கொண்டிருக்க, இவளை பார்த்த ரூத்,
“என்ன ஸ்டெல்லா இவ்ளோ நேரம் யோசிக்கிற? சரி நீ பொறுமையா தேடு, அதுக்குள்ள நான் எனக்கு போட்டுக்குறேன்.”
என்று அவள் தேர்ந்தெடுத்த டிசைனை அவள் கையில் வைக்கத் தொடங்கினாள்.
ரூத் பேச்சு காதில் விழுந்ததும் அதை கண்டு கொள்ளாமல் தீவிரமாக டிசைனை தேடி முடித்தவள், கடைசியாக இரு கைகளுக்கும் இதய வடிவில் வரும் டிசைன்களை தேர்ந்தெடுத்தாள்.
திருப்தியாக அந்த டிசைனை பார்த்து விட்டு, அதை அங்கிருந்த மற்றொரு பெண்ணிடம் காட்டி இவள் கையில் அதை வைக்க சொல்லியவள், திரும்பி ரூத்தின் கையை பார்க்க,
அவள் கையில் இப்போது தான் கால் வாசி அளவு வைத்து முடித்திருந்தனர். அதை பார்த்து புருவம் சுருக்கி வியப்படைந்தவள், அந்த மெஹந்தி வைக்க வந்த பெண்களை பார்த்து,
“எவ்வளவு நேரம் ஆகும் கையில இந்த மெஹந்தி வைக்க?” என்று கேட்டாள். அதற்கு அந்த பெண்
“ஒரு டூ அவர் ஆவது ஆகும் மேம். முடிஞ்ச அளவு நான் சீக்கரம் உங்களுக்கு வைக்கிறேன். ரெஸ்ட் ரூம் போயிட்டு வரணும்னா போயிட்டு வந்துடுங்க மேம்.”
அதைக்கேட்ட ஸ்டெல்லா உடனே அவள் கையை பின்னே இழுத்துக்கொண்டு,
“இல்ல என்னால அவ்வளவு நேரம் கையை அசையாம வச்சிக்க முடியாது, சோ எனக்கு மெஹந்தி போட வேண்டாம்” என்று எழுந்தவளை ரூத்,
“ஸ்டெல்லா…. நாளைக்கு உன் மேரேஜ் ஸ்டெல்லா, மெஹந்தி வைக்க மாட்டன்னா என்னது…”
“இல்ல ரூத், என்னால அவ்வளவு நேரம் உட்கார முடியாது. இப்போ மெஹந்தி இல்லனா என்ன வேற ஏதாவது பார்த்துக்கலாம்.
நீ போட்டுட்டு வா, நான் போய் படுக்குறேன், எனக்கு முதுகு வலிக்குது” என்று இவள் உள்ளே சென்று விட்டாள்.
அனைவரும் அழைக்க அழைக்க உள்ளே சென்றவளை என்ன செய்வது என்று அந்த மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் புரியாமல் பார்த்து நிற்க. பின் ரூத்க்கும் மற்றும் மற்ற அனைவருக்கும் கையில் மெஹந்தி போட்டு விடத் தொடங்கினார்.
இங்கு நகை கடையில் இதய வடிவ மாங்கல்யத்தில் , ஒரு பக்கம் லட்சுமி மற்றோரு பக்கம் சிலுவை என்று அழகாக இருக்க, அதை பார்த்து இவன் சொன்னது போல டிசைன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்தியவன் அதை வாங்கி கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை பிரித்துக்கொள்ள, மாங்கல்யம் மற்றும் புடவை நகை என்று கல்யாண பெண்ணின் பொறுப்பை மட்டும் உஷாராக த்ரூவ் வாங்கி கொண்டான்.
அதன்படி புடவை, அதற்கு ஏற்ப நகை என்று அனைத்தும் முன்பே வாங்கி வைத்தவன் இன்று தான் அவன் ஆர்டர் கொடுத்த மாங்கல்யத்தை வாங்கினான்.
காரில் ஏறி அமர்ந்தவனுக்கு மெஹந்தி ஆர்ட்டிஸ்டிடம் இருந்து மெசேஜ் வந்திருக்க அதை ஓப்பன் செய்து பார்த்தான்.
அதில் ஸ்டெல்லா மெஹந்தி போடவில்லை என்ற தகவல் இருக்கவும் அவர்களுக்கு அடுத்த நிமிடம் அழைத்து விட்டான் த்ரூவ்.
அவர்கள் சொன்ன தகவல்களை கேட்டு குழம்பியவன் “என்ன ஆச்சு, ஏன் போட மாட்டேன்னு சொல்ற?” என்று யோசிக்கத் தொடங்கினான்.
அதே நேரம் இங்கு அறையில் ஸ்டெல்லா அவள் நடுங்கும் கைகளை இறுக்கி மூடி அடக்கியவள் சோர்வாக கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.
அன்று ஜோசப்புக்காக கதவை கையால் உடைத்ததில் இவள் கை எலும்பு நகர்ந்துவிட்டிருந்தது.
அதை எப்படியோ மாவு கட்டு போட்டு சரி செய்து விட்டார்கள் தான்.
ஆனால் அதன் பின் அந்த கையை அசையாமல் சிறிது நேரம் வைத்திருந்தாளே, கை நடுங்கத் தொடங்கிவிடும் அவளுக்கு.
இதற்கும் சேர்த்து ட்ரீட்மென்ட் பார்த்தாயிற்று, ஆனால் கை நடுக்கம் மட்டும் நிற்கவில்லை. நார்மலாக கை வைத்திருந்தால் நடுக்கம் இருக்காது, இதுவே கையை அசையாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்றாள் முடியாது, உதாரணத்துக்கு ஓவியம்.
ஓவியம் வரைய பொறுமையாக கையை அசையாமல் கட்டுப்படுத்தி வரைய வேண்டும், அது இவளால் முடியாது.
சிறு ஓவியமே வெகு நேரம் எடுத்து வரையும் நிலை தான். வெகு நேரம் தூரிகையை பிடித்தால் கை உதறத் தொடங்கும், உடனே அந்த ஓவியத்தை நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வரையத் தொடங்குவாள்.
இது எதுவும் ரூத்திற்கு தெரிய கூடாது என்றே அவளுக்கு பிடித்தமான ஓவியத்தில் மேலும் கவனம் செலுத்தாமல் வரைவதையே விட்டு விட்டாள் ஸ்டெல்லா.
இவற்றை எல்லாம் அவள் நடுங்கும் கைகளை பார்த்து யோசித்தவளுக்கு, அவள் கையை பார்க்க பார்க்க கோபம் வர, அந்த கையை எதிலாவது போட்டு அடிக்க வேண்டும் என்று தோன்றியது,
உடனே கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்தியவள் அவள் வயிற்றில் கை வைத்து,
“பயப்படாத செல்லம், அம்மா கோபப்படல…” என்று முனுமுனுத்த படியே படுத்திருந்தாள்.
தூக்கம் வராமல் இவள் கண்களை மட்டும் மூடி படுத்திருக்க, ரூத் மெஹந்தி வைத்து முடித்து உள்ளே வந்தாள்.
அவள் அரவம் உணர்ந்து ஸ்டெல்லா தூங்குவது போல படுத்துக்கொள்ளவும், அவளை சிறிது நேரம் பார்த்த ரூத்தும் அவள் அருகே படுத்துக்கொண்டாள்.
ரூத் நன்றாக உறங்கியதை அவளின் சீரான சுவாசத்தைக் கொண்டு உறுதிப்படுத்தியவள் மெல்ல எழுந்து அமர்ந்து,
இவளை அணைத்து உறங்கிய ரூத்தின் கரங்களை மெல்ல அவள் எழுந்திருக்காத படி எடுத்தவள், அவள் கையில் காய்ந்தும் காயமலும் போடப்பட்டிருந்த மெஹந்தியை வருடி பார்த்தவளின் வாய்,