“ நீயும், விக்ரமும் இந்த முடிவில் தெளிவாக உறுதியாக இருக்கிறீர்களா?” எனக் கார்த்திகேயன் கேட்க,
“நிச்சயமாக அப்பா, எங்கள் அன்பு மீது முழு நம்பிக்கை இருக்கிறது, இதை உறுதி செய்வதற்குத் தான் இந்தக் கால தாமதம்” என உறுதியாகச் சொன்னாள்.
“நோ ஹார்ட் ஃபீலிங்கஸ், சரியா? நான் கேட்பதற்குத் தெளிவாகப் பதில் சொல்…” என்றார் கவிதா.
“சரிம்மா…”
“விக்ரம் மீது நம்பிக்கை இருக்கிறதா?”
அம்மாவின் கேள்வியில் உள்ள உட்பொருளை உணர்ந்தவள், “அம்மா, கிட்டத்தட்ட இரண்டு வருடமாக விக்ரமைத் தெரியும். அவருக்கு எந்தக் கெட்டபழக்கங்களும் கிடையாது. பணம், அந்தஸ்து எல்லாம் இருந்த போதும் கண்ணியம் தவறாதவர். மிகவும் நிதானமானவர். இந்த இளவயதில் பல வெற்றிகளைப் பெற்றவர். கடுமையான உழைப்பாளி.”
மேலும் இந்த துறையில் இருந்த போதும், “இதுவரை எந்தப் பெண்ணுடனும் கிசுகிசுக்கப் பட்டதில்லை. பெண்களை மரியாதையுடன் நடத்துபவர்…” எனக் குக்கரி ஷோவில் நடந்த நிகழ்ச்சியையும் விளக்கினாள்.
“என்னுடைய முன்னேற்றத்திற்கும் துணை நிற்கிறார்என்பதைகடந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள்” என்று தன் நீண்ட உரையை முடித்தாள்.
மேலும் எங்களுடைய உறவு, அலுவலகத்திலோ, வெளியேவோ தெரிந்து, எனக்கு எந்தச் சங்கடமோ, கௌரவக் குறைவோ,வருத்தமோ வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
அவள் அப்பா அருகில் சென்று, அவர் கையைப் பிடித்தபடி, “விக்ரமோடு இருக்கும் போது, நம்ம விட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பு உணர்வையும், கம்ஃபர்ட்டையும் உணர்கிறேன்.”
இந்த வார்த்தைகளைக் கேட்டபின், கவிதாவும், கார்த்திகேயனும் ஓர் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“நீங்களே அவரைப் பற்றி விசாரியுங்கள்… உங்களுக்கே புரியும்….”
“சரிம்மா, ஆனால்….” என்று இழுக்க,
“என்னப்பா..?”
“நம் வாழ்க்கை முறை வேறு, அவர்களுடையது வேறு, சமாளிப்பாயா?”
“முடியும்மா” என நம்பிக்கையுடன் சொன்னாள்.
“மிகவும் பணம், அதிகாரம் படைத்தவர்கள், அரசியல் குடும்பம் வேறு, யோசித்து கொண்டாயா? நாளை ஒரு பிரச்சனையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது…” என எச்சரித்தார்.
“விக்ரம் அப்படியில்லை அம்மா, மிகவும் எளிமையானவர்.”
“நம்ம அந்தஸ்து வேறு, அவர்களின் அந்தஸ்து வேறு, அவர்கள் வீட்டில் சம்மதிப்பார்களா?”எனக் கார்த்திகேயன் கேட்டார்.
“நிச்சயமாகஅப்பா, அதை விக்ரம் பார்த்துக் கொள்வார். மேலும், இன்று அவர் லன்ச்சுக்கு அழைத்ததே அவர் தாத்தாவைப் பார்க்கத்தான்,அவருக்கு மிகுந்த சந்தோஷம்.”
இதைக் கேட்டவுடன் கவிதா முகம் மாற,
‘அம்மா வருந்துகிறார்…’ என்பதைப் புரிந்து கொண்டு,அதற்கு முந்தைய நாள் நடந்த விசயங்களையும், விக்ரமின் சூழ்நிலையையும் விளக்கி, விக்ரம் அதற்கு மேற்கொண்ட தீர்வையும் சொன்னாள்.
மகளின் எண்ணத்தை அறிந்து, சற்றுச் சமாதனமானார்.
“நீங்கள் பார்க்க விரும்பினால், அவர் வருகிறேன்..” என்றார் அப்பா.
“எங்களுக்கு கொஞ்சம் டைம் வேண்டும் இனியா. நாங்கள் விசாரித்து, யோசித்து, கலந்து பேசி முடிவைச் சொல்கிறோம்.”
“ஓ.கே. தேங்ஸ்ப்பா….” எனத் தன் அறைக்கு சென்றாள்.
அறைக்கு வந்த பின், விக்ரமை அழைக்க, போனை எடுத்தவன், “ஜில்லு, என்னாச்சு? சொல்லிவிட்டாயா? வெற்றி தானே…” எனப் படபடத்தான்.
“ரிலாக்ஸ் விக்ரம், எப்படியோ தைரியத்தை வரவழைத்துச் சொல்லி விட்டேன்….” என முழு விவரத்தையும் சொன்னாள்.
“டைம் கேட்டிருக்கிறார்கள்….பாஸிட்டிவ்வாகத் தான் வரும் என நம்புகிறேன்…”
“எப்படி இவ்வளவு நம்பிக்கை ஜில்லு?” எனச் சீண்டினான்.
“என் பெற்றோர், என் நியாயமான ஆசைகளுக்கு என்றும் தடை சொன்னதில்லை, மேலும் என் தேர்வு மீது நம்பிக்கை உள்ளது….” என்றாள் பெருமையாக.
விக்ரம் சிரித்தபடி, “தேங்க்ஸ் ஜில்லு…” என்றான்.
அப்புறம், “அம்மா அப்பாவைத் தொந்தரவு செய்யாதே, அவர்கள் வேண்டிய டைம் எடுத்துக்கட்டும்.” என்று தன்னுடைய எண்ணத்தைச் சொன்னான்.
தன் பெற்றோரிடம் சொல்லி விட்டதால், ரிலாக்ஸாக உணர்ந்தாள் இனியா. அவளுடைய துடுக்குத்தனம் எட்டிப் பார்க்க, “சரி,அப்படியே ஆகட்டும் தல..” என ஏற்ற இறக்கத்தோடு சொல்ல,
“ஆனால் ஜில்லு, உன் விசயத்தில் ஏதுவும் நான் நினைத்த மாதிரி நடப்பதில்லை. குடும்பத்தோடு வந்து, உங்கள் வீட்டில் பேசவேண்டும் என ஏதேதோ கற்பனை செய்து வைத்திருந்தேன்.நான் நினைத்த மாதிரி எங்கே செய்ய விட்டிருக்கிறாய், வழக்கம் போல் சொதப்பச் செய்து விட்டாய். நீ கண் கலங்கியதும், எல்லாம் மாறி போனது…” எனச் சொல்லி சிரித்தான்.
மீண்டும், “லவ் யூ விக்ரம்…” என்றாள்.
அவன் மீண்டும், “தேங்க்ஸ் ஜில்லு” எனச் சொல்ல,
“தலையும், காலும் புரியாமல் பேசுவதற்கு ஆரம்பித்துவிட்டார்…” என்று இனியா சலித்தபடி,
உங்கள் வார்த்தையைப் புரிந்து கொள்ள, “ நான் தனி அகராதி தான் போட வேண்டும் விக்ரம்…” என்றாள் கடுப்பாக,
பின், “எதுக்கு தேங்கஸ்?”
அவன் ஆழ்ந்த குரலில், “ என்னுடன் இருக்கும் போது, உங்கள் வீட்டில் இருப்பது போல் உணர்கிறாய் என்றாயே அதற்குத்தான்…” என ஓர் சிலிர்ப்போடு சொன்னான்.
“உண்மையைத் தானே சொன்னேன், நீங்கள் என்னை அப்படித் தான் உணரவைக்கிறீர்கள்.” என நெகிழ்ந்தாள்.
சில மணித்துளிகள் மௌனமே நீடிக்க, பின் இருவரும் ஒரே நேரத்தில், “குட் நைட், பை…” எனச் சொல்ல, பின், சந்தோஷ மனநிலையில் போனை வைத்தனர்.
அத்தியாயம் 57
நாட்கள் ஓட, ‘கல்யாண வைபோகமே’ படப்பிடிப்பு தொடங்கியது.
‘கல்யாண வைபோகமே’ படப்பிடிப்புத் தளத்திற்கு, விக்ரம் திடீரென விசிட் செய்ய, அர்ஜுன் படபடத்தான்.
“கூல்… எல்லாம் ஓ.கே. தானே அர்ஜுன்?”
விக்ரமின் பேச்சு அர்ஜுனிடம் இருந்தாலும், பார்வை இனியாவைத் தொட்டுச் சென்றது.
பின் இனியாவைப் பார்த்து, “டூயிங் குட்….?” எனக் குறும்புடன் கேட்டான்.
யாரும் பார்க்காத போது ஒரு முறைப்பைப் பரிசாக அளித்து விட்டு, “ ஃபைன் சார்…” எனச் சிரித்தாள்.
சிறிது நேரம் டீம் மக்களிடம் பேசி உற்சாகப்படுத்தினான்.
வீட்டில், அம்மா அப்பாவைப் பார்க்கும் பொழுது,ஒரு டென்ஷன் , படபடப்பை உணர்ந்தாள். அவர்களும் சற்று இருக்கமாக இருப்பது போல் தோன்றியது.
நிறைய நேரம் தனியே பேசிக் கொண்டார்கள்.
“எனக்குத் தெரியாமல், மூன்று பேரும் என்ன சதி செய்கிறீர்கள்? வழக்கமில்லாத வழக்கமாய், வீட்டில் ஒரு வித அமானுஷ்யம் நிலவுதே…” எனக் காவியா கேலி செய்து பார்த்தாள் காவியா. ஆனால் சூழ்நிலை மாறவில்லை.
அம்மா அப்பாவிடம் முயற்சித்துப் பார்த்தால், அவர்களும் அதே “பின்னாடி சொல்கிறேன்…” எனச் சொல்ல,
கடுப்பான காவியா, “விசயம் வெளியே வரட்டும், அன்று இருக்கிறது உங்கள் எல்லோருக்கும்….” என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
இரவில் விக்ரமிடம் புலம்பி…, அவனையும் டென்ஷன் செய்தாள்.
“என்னமோ என் தேர்வு பெஸ்ட் ஒன்…. ஒன்றும் பிரச்சனை இல்லை என டயலாக் விட்டாய்? ,இப்போது என்னவென்றால்….” என இழுக்க,
“இவ்வளவு நாளாகும் என நினைக்கவில்லை விக்ரம், உடனே சரி சொல்வார்கள் என நினைத்தேன்…” எனத் தவித்தாள்.
“நாம் டைம் எடுத்துக் கொள்ளவில்லையா? அது போல் தான், விடு, பார்த்துக்கலாம்…” என ஆறுதல் படுத்தினான்.
இரண்டு நாள் கழித்துப் பேசும் பொழுது, “ஜில்லு, என்னைப் பற்றிய விசாரிப்புகள், பிரைவேட் டிடக்டிவ் மூலம் நடக்குது…”
இந்த விசயத்தை அறிந்து அதிர்ச்சியானாள்.
“ஸாரி விக்ரம், அப்பாவோட பிரெண்ட், ரமேஷ் அங்கிள், டிடக்டிவ் ஏஜென்சி வைத்துள்ளார். அவர் மூலம் தான் நடக்கும்…” என நினைக்கிறேன்.
“அப்படித்தான் ஏதாவது இருக்கும் என நினைத்தேன், இல்லை, எந்த ஏஜென்சிக்கு என்னை வேவு பார்க்கத் தைரியம் வரும்…?” எனச் சிரித்தான்.
மீண்டும், “ஸாரி..” என இனியா இழுக்க,
“லீவ் இட் ஜில்லு, இப்பத்தான் என் மாமனார், மாமியாரை ரொம்பப் பிடித்திருக்கு. பணக்காரப் பையன் என உடனே ஒத்துக்கொள்ளாமல்…, உன் நல்வாழ்க்கைக்குத் தீர விசாரிக்கிறார்களே… ஜ லவ் இட்…” எனச் சிரித்தான்.
அவன் பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொண்டது மிகவும் பிடித்தது, “லவ் யூ விக்ரம்…” என்றாள்.
“என்ன ஜில்லு, வரவர மாமா மேல் காதல் பொங்குது…” எனக் கேலி செய்தான்.
“சொல்லவில்லை எனப் புலம்ப வேண்டியது, சொன்னால் கேலி செய்ய வேண்டியது. இனி கெஞ்ச வைக்கிறேன்…” எனச் சபதமிட,
“ஐயயோ… வேண்டாம்….” என அலறினான்.
“ஏன்?”
“உன் சபதக் கதைகளை நானறிவேன் கண்ணம்மா…”என ஓட்டினான்.
“நேரில் வாங்க உங்களுக்கு இருக்கு…” என மிரட்ட, இப்படியாக சுவீட் நத்திங்கஸ் பேசிப் போனை வைத்தனர்.
அடுத்த வாரத்தில் கார்த்திகேயன், “நாங்கள் எங்களுக்குத் தெரிந்த சோர்ஸ்களில் விசாரித்தோம், அனைவரும் திருப்தியாகச் சொன்னார்கள். எங்களுக்குச் சம்மதம். அவர் குடும்பத்தைப் பார்க்கும் முன், விக்ரமிடம் கொஞ்சம் பேச வேண்டும் இனியா….”
“தேங்க் யூ சோ மச்….” என அம்மாவையும், அப்பாவையும் கட்டிக் கொண்டாள்.
“சரிப்பா, நான் விக்ரமிடம் சொல்கிறேன், அவர் ஏற்கனவே உங்களைப் பார்க்க வருகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்ச டைம் கேட்டிருக்கிறார்….”
“சரிம்மா, அவசரம் இல்லை, நிதானமாகப் பேசிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் இரண்டு பேரும் பொறுப்பானவர்கள் என நம்புகிறேன்.”
“கட்டாயம் அப்பா…”
அப்போது காவியா உள்ளே வர, கட்டி அணைக்கும் காட்சியைப் பார்த்து, “என்னடா நடக்குது இங்கே?” என வடிவேல் பாணியில் பேச,
கவிதா சிரித்தபடி, “இனியா சொல்வாள்…” என நகர,
காவியா இனியாவை நோக்க,
இனியா தயங்கியபடி, “ நானும், விக்ரமும் விரும்புகிறோம். அம்மா, அப்பாவும் என்னுடைய தேர்வைச் சரியென்று விட்டார்கள்” என வெட்கச் சிரிப்போடு சொன்னாள்.
“இந்த ஈர வெங்காயத்தைத்தான் ஒரு வாரமாகப் பேசுகிறீர்களா?” எனப் பாலை அசால்ட்டாக சிக்ஸர் தட்டினாள்.
“நான் யாருக்கோ ஏதோ உடம்பு சரியில்லையோ…? எனப் பயந்திருந்தேன்” எனக் கோபப்பட,
“ஸாரி டா, தெளிவான பிறகு உன்கிட்ட சொல்லலாம் என நினைத்தோமே தவிர, மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உனக்கு இப்படி யோசனை போகும் என நினைக்கவில்லை…” என்றார் கவிதா.
“இனியா,எனக்கும் உன் சாய்ஸ் டபுள் ஓ.கே. ரிங் மாஸ்டர் தான் உனக்குச் சரி….” எனச் சிரிக்க,