அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே பிரபாகரனின் குரல் கேட்க, வேகமாய் கீழே சென்றனர். சத்தியசீலனும் சரிதாவும் கூட ஊரில் இருந்து வந்துவிட்டிருந்தனர்.
“என்னாச்சு பிரபா? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றார் நடராஜன் பொறுமையாக.
“எதுக்கு இவ்வளவு கோபம்னு உங்களுக்குத் தெரியாதாப்பா? என்னமோ இவனுக்கு பொண்ணுப் பார்க்க போயிட்டு வந்திங்களாமே? ஒரு வார்த்தை கூட எங்ககிட்ட சொல்லாம? அப்படி என்ன நாங்க வேண்டாதவங்களாகிட்டோம்?” என்றான் கோபமாய்.
“சும்மா போயிட்டு வந்தோம் பிரபா. குடும்பத்தோட இன்னொரு நாள் போகலாம்னு தான் நாங்க மட்டும் போயிட்டு வந்தோம்” என்றார்.
“உங்களுக்கே இது நல்லா இருக்கா மாமா? ஏன் என் தங்கச்சிக்கு என்ன குறைச்சல்? இப்ப எதுக்காக நமக்கு ஆகாதவங்க வீட்டு சொந்தக்கார பொண்ணை பார்க்கணும்?” என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள் செல்வி.
“இது என்னக்கா புது ட்விஸ்ட்டு” என்றாள் சரிதா யாருக்கும் கேட்காத குரலில்.
“நீங்க இப்படி பண்ணியிருக்கக் கூடாதுப்பா” என்றான் சத்யாவும்.
“உங்க ரெண்டு பேருக்கும் நாங்க தான பொண்ணு பார்த்தோம். அதே மாதிரி சிவாவுக்கும் போய் பொண்ணு பார்த்துட்டு வந்தோம். இதுல என்ன குத்தம் கண்டிங்க?” என்று நடராஜனின் குரல் உயரவும் மூத்த இரு மகன்களின் குரல் சற்று அடங்கியது.
“எங்களுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு. சிவாவும் சரின்னு சொல்லிட்டான். மேற்கொண்டு ஆகுற வேலையை பார்க்கணும்” என்று நடராஜன் சொல்ல மற்றவர்கள் அதிர்ந்தார்களோ இல்லையோ சிவா அதிர்ந்தான்.
‘நான் எப்ப சரின்னு சொன்னேன்’ என்ற அர்த்தத்தில் பார்த்திருந்தான்.
“ம்ம் அதுவா? பேக்கரி, உங்க கடைசி பையனோடது ஒண்ணுமில்லை. அதே மாதிரி இந்த வீட்லயும் பங்கு இல்லை. இது என் புருஷனும் சரிதா புருஷனும் சேர்ந்து கட்டின வீடு. இப்படி எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டிங்களா?” என்றாள் நக்கலாய்.
“பேக்கரியில வேணும்னா உரிமை இல்லாம இருக்கலாம். வீட்ல உரிமை இல்லைன்னு நீ சொல்லக் கூடாதும்மா” என்றார் நடராஜன்.
“உண்மையை சொன்னா கோபம் வருதா மாமா உங்களுக்கு? இந்த வீட்ல உங்க கடைசி பையன் காசு ஒத்த ரூபா விழலை. முழுக்க முழுக்க என் புருஷனும் சத்யாவும் தான் காசு போட்ருக்காங்க. அப்போ இந்த வீடு எங்களுக்குத் தான சொந்தம். இந்த குடும்பத்துக்காக உழைச்சுக் கொட்டினது எல்லாமே உங்க மூத்த பசங்க ரெண்டு பேரு தான்” என்றாள் வேண்டுமென்றே.
“நீங்களே குடுத்தாலும் எனக்கு தேவையில்லை. கட்டிட்டு வர்றவளை எப்படி வச்சு காப்பாத்தணும்னு எனக்கு தெரியும். நீங்க கவலைப் பட வேண்டாம் அண்ணி” என்று பட்டென்று சொன்னவன், தன் அண்ணன்களை முறைக்க, அவர்களும் எதுவும் பேசாமல் நின்றனர்.
“இதுக்குத்தான் என் தங்கச்சியை” என்று செல்வி ஆரம்பிக்க,
“அது இந்த ஜென்மத்துல நடக்காது. அதான் அப்பா தெளிவா சொன்னாரே. பொண்ணு வீட்ல உறுதி சொல்லியாச்சுன்னு. வேற பேச்சு பேச வேண்டாம். நான் வேணும்னா வேற வீடு பார்த்து போய்க்கிறேன்” என்று அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
“இதென்னடி இவன் டக்குன்னு வெளிய போனா முதலுக்கே மோசம் வந்துடுமே” என்று யோசித்த செல்வி,
“நாங்க அப்படி ஒன்னும் கல் நெஞ்சக்காரங்க இல்லைங்க கொழுந்தனாரே. நீங்க இப்போ இருக்குற மாதிரி மாடியிலையே இருந்துக்கங்க. ஆனா கீழ சமையல்கட்டை தவிர வீட்டுப் புழக்கத்துக்கு வரக் கூடாது. வீட்டுக்கு சொந்தம் கொண்டாடவும் கூடாது” என்றாள் செல்வி வேண்டுமென்றே.
செல்வியை பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன்களை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் சென்று விட்டான். வண்டியை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தவனின் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் எதிர் காற்றின் உபயத்தால் சுண்டி சென்றிருந்தது.
வைகை நதி பாயும் ஆற்றின் கரையோரத்தில் வண்டியை நிறுத்தியவன், ஆற்றின் கரையில் இருந்த அந்த சிறு கோவிலை நோக்கி சென்றான். ஏனோ மனம் பாரமாய் இருக்கும் போது அவன் அங்கு செல்வது வழக்கம்.
இறங்கி செல்லும் போது அங்கு நின்றிருந்த ஸ்கூட்டியை பார்த்தவன் ஒரு நிமிடம் யோசித்தான்.
‘இது அந்த பொண்ணு ஸ்கூட்டி மாதிரி இருக்கே’ என்று யோசித்தபடியே செல்ல, அங்கே தூரத்தில் காயத்ரி பதட்டத்துடன் இருப்பதைப் போன்று தோன்றியது அவனுக்கு.
வேகமாய் அவள் அருகில் சென்றவன்,”என்னாச்சுமா காயத்ரி? நீ எப்படி இங்க? அதுவும் இந்த நேரத்துல? யாராவது இந்த நேரத்துல தனியா இங்க வருவாங்களா?” என்றான் கோபமாய்.
“என்ன சொல்ற?” என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கிருந்து நடந்து சென்றாலும் கண்டிப்பாக பார்வையில் படுவாள். சுற்றி முற்றி எந்த திசையிலும் அவள் தென்படவில்லை.
“நல்லா யோசிச்சு சொல்லு காயத்ரி. காலை நனைச்சுட்டு ஆத்துல இருந்து அந்த பொண்ணு வெளிய வந்தாங்களா? நீ பார்த்தியா?” என்றான்.
“என் கூட வந்த மாதிரி தான் இருந்தது அண்ணா” என்றவள் ஒரு நிமிடம் குழம்பி நிற்க,
“ஆத்துல எதுவும் தவறி” என்று வந்த வார்த்தையை முழுங்கினான்.
“அப்படின்னாலும் அவளுக்கு நீச்சல் தெரியும்ண்ணா” என்றாள் காயத்ரி.பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்த நீரின் வேகம் வேறு அதிகமாய் இருந்தது.
‘நீச்சல் தெரிஞ்சும் நீந்தாம இருக்கான்னா? ஒருவேளை’ என்று யோசித்தவனுக்கு இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது.
தன் மொபைலையும் பர்சையும் அவளிடத்தில் கொடுத்தவன், வேகமாய் ஆற்றுக்குள் இறங்கியிருந்தான். சற்று தள்ளி போனால் ஆழமான பகுதி இருக்கும் என்று அவனுக்கும் தெரியும்.
அவன் தேடிய வரை அவளைக் காணவில்லை. நேரம் ஆக ஆக பதட்டம் கூடியது அவனுக்கு.
அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவள் நிச்சயம் அவனை எதிர்பார்க்கவில்லை. சட்டென்று தன் நிலை கண்டவள், வேகமாய் கால்களை மாரோடு கட்டிக் கொண்டு அமர்ந்துகொண்டாள்.
“உன் ஷாலைக் குடு காயு” என்றாள் மெதுவான குரலில்.
“இந்த ஆர்கன்சா துப்பட்டா எந்த வகையிலும் உனக்கு உதவாது அபர்ணா” என்றாள் காயத்ரி.
அவர்கள் பேசுவது காதில் விழுந்ததும் தன்னுடைய பைக் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நகர்ந்திருந்தான் சிவா. பைக்கின் முன் பௌச்சில் பேக்கரிக்கு போடும் டீ-ஷேர்ட் இருக்க, அதை எடுத்துக் கொண்டு வந்தவன் காயத்ரியிடம் நீட்டியிருந்தான்.
“அண்ணா” என்றவள் ஒரு நன்றி பார்வையுடன் வாங்கிக் கொண்டாள்.
“இதைப் போட்டுட்டு வாடி” என்ற காயத்ரி நீட்டிய டீ-ஷேர்ட்டை பார்த்தவள் அதிர்ந்தாள்.
“இல்ல வேண்டாம் காயு” என்றாள் மறுப்புடன்.
சிவா பல்லைக் கடிக்க, காயத்ரிக்கோ கோபம் வந்தது.
“இங்க பார் அபர்ணா, எனக்கும் ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது. இல்லைன்னா என் பின்னாடி உட்காருன்னு சொல்லி கூட்டிட்டு போய்டுவேன். நீதான் வண்டி ஓட்டனும். இந்த லட்சணத்துல ஓட்டவும் முடியாது. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” என்றாள் பொறுமையாய்.
சில நிமிடங்கள் யோசித்தவள், தயக்கத்துடன் அந்த டீ-ஷேர்ட்டை வாங்கிக் கொண்டாள். அவள் அதை அணிந்து கொண்டு அவர்கள் கிளம்பும் வரை எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான் சிவா.
“அண்ணா நீங்க வரலையா?” என்றாள் காயத்ரி.
“நான் கோவிலுக்கு வந்தேன்மா. நீங்க கிளம்புங்க” என்றவன் ஸ்கூட்டி சாவியை வாங்கி அதை ஸ்டார்ட் செய்தும் கொடுத்தான்.
“தே..தேங்க்ஸ்” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னவள் அடுத்த நிமிடம் காயத்ரியுடன் சென்று விட்டாள்.
அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் ஆசுவாசமாய் இருந்தது. பாரத்தை இறக்க கோவிலுக்கு வந்தவனின் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.