அனல்– 35

அவன் டேபிளில் இருந்த ஃபைலை உற்றுப் பார்த்திருந்தான் த்ரூவ் . அது ஸ்டெல்லாவைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஃபைல்.

சற்று தயக்கம் இருப்பினும் அதை கையில் எடுத்துத் திறந்து பார்த்தான் த்ரூவ். அதே நேரம், ஸ்டெல்லா தன் அம்மாவின் சிறுவயதுப் புகைப்படத்தின் முன்னே நின்று அதை வருடிக்கொண்டிருந்தாள்.

இன்று என்னமோ அவளின் நினைவு அதிகமாகவே இவளுக்கு இருந்தது.

“நீ பக்கத்துல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்”

என்று புகைப்பட சட்டத்தின் உள்ளே சிரித்த படி நின்றிருந்த அந்த சிறிய பெண்ணிடம் பேசியவள்,

திரும்பி ரூத் எங்கு இருக்கிறாள் என்று எட்டிப் பார்த்தாள்; அவள் வீட்டின் வாசலில் அமர்ந்து மணியம்மாளுடன் போனில் சீரியல் பார்த்த படி கீரை பின்னிக்கொண்டிருந்தாள்.

இன்னும் சிறிது நேரத்திற்கு அவள் உள்ளே வரமாட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டவள்.

மெல்ல நகர்ந்து அவள் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள், அங்கு ஒரு மூலையில் இருந்த இரும்பு பீரோ அருகே சென்றவள், அதைத் திறந்து அதன் உள்ளே இருந்த லாக்கரையும் திறந்தாள்.

பின் அவள் பையில் இருந்த சாவியைக் கொண்டு அதன் உள்ளே இருந்த மற்றோரு கதவைத் திறந்து, உள்ளே போட்டலமாக துணியால் சுற்றப்பட்ட ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

அந்தத் துணி முடிச்சை அவிழ்த்தவள் அந்தப் பெட்டியைத் திறக்க.

அதில் நிறைய முத்துக்கள் வைத்த ஒரு கொலுசு இருந்தது; அதை எடுத்துத் தன் காதருகே அசைத்துப் பார்த்தவளின் முகம் இலகுவாக மாற, ஒரு சிறு புன்னகையுடன்

அதை கீழே வைத்துவிட்டு, அதன் கீழே இருந்த பேப்பரால் சுற்றப்பட்ட ஒன்றை எடுத்து அந்தப் பேப்பர்களை அகற்றிப் பார்த்தாள்.

அது ஒரு புகைப்படச் சட்டம்; அதில் ஒற்றைக் குடுமி போட்டு, கன்னத்திலும் நெற்றியிலும் கருப்பு மை இட்டு, கண்கள் கலங்கத் தேம்பியபடி வாயில் விரல் வைத்து நின்று கொண்டிருந்தாள் மூன்றே வயது ஆன ஸ்டெல்லா.

அவள் அருகே அவளின் கையைப் பிடித்தபடி, அவளின் நீளமான முடியை பின்னல் இட்டு, பூ வைத்து, அனைத்துப் பற்களையும் காட்டிச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள் ஏழு வயதான ஜோசப்.

அந்தப் புகைப்படச் சட்டத்தை கைகளால் வருடிய ஸ்டெல்லா,

 “ஜோசப், என் வயத்துல ஒரு குட்டிப் பாப்பா இருக்கான் ஜோசப்…. அதுவும் என் த்ரூவ், அவனோட பாப்பா இது

எனக்கும் அவனுக்கும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வேற ஆக போது ஜோசப்.” என்று முகம் பூரிக்க பேசியவள் மேலும் தொடர்ந்தாள்

“இதை நேர்ல  நீ சின்ன ஜோசப் கூட இருந்து பார்த்திருந்தா  ரொம்ப நல்லா இருந்திருக்கும் ல ஜோசப்” என்று அவள் கண்கள் லேசாக கலங்க தொடங்கவும், உடனே அதைத் துடைத்தபடி,

“அழக்கூடாது, இப்போ நான் மட்டும் அழுதா அவ்ளோ தான்!  இந்த சின்ன ஜோசப்  கண்டுபிடிச்சி ஒரு வழி பண்ணிருவா, அப்படியே உன்ன மாதிரி” என்று புன்னகைக்க,

“ஸ்டெல்லா…. கதவைத் திற… இப்போ எதுக்கு கதவை பூட்டி வச்சிருக்க…” என்ற ரூத்தின் குரலில் அதிர்ந்தவள்.

வேகமாக எழுந்து அனைத்துப் பொருட்களையும் எடுத்தது போலவே வைத்து விட்டு

வேகமாக வந்து கதவைத் திறந்தாள். முகம் முழுக்க வியர்க்க, கதவைத் திறந்தவளைப் பார்த்த ரூத்.

“என்ன பண்ணிட்டு இருந்த ஸ்டெல்லா? இப்படி கதவை பூட்டாதன்னு சொன்னா கேக்க மாட்டியா நீ….? அட்லீஸ்ட் ஃபேனை போட்டுடவாது ரூம்ல இரு, எப்படி வேர்த்திருக்கேன்னு பாரு”

என்று அவள் முகத்தைத் துடைத்தவள், ரூமுக்குள் இருந்த அவளின் சார்ஜரை எடுத்த படி

“உன் சார்ஜர் ரொம்ப ஸ்லோவா ஏறுது ஸ்டெல்லா” என்று பேசிக்கொண்டே அவள் நகர்ந்த பிறகுதான் இவளுக்கு மூச்சே வந்தது.

இங்கு அலுவலகத்தில் அவன் மேஜையின் மீது இருந்த ஃபைலை கையில் எடுத்து அதைத் திறந்தான் த்ரூவ்.

முதல் பக்கத்தில் ஸ்டெல்லாவின் புகைப்படத்துடன் அவளின் தந்தை மற்றும் தாயின் புகைப்படம் மற்றும்  பெயர் இருந்தது.

“சிலுவை ராஜ், மரியா” என்று எழுதியிருந்தது மற்றும் அவளின் பிறப்பிடமாக மும்பை குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் படித்து புருவத்தைச் சுருக்கியவன், “அப்போ ஸ்டெல்லா தமிழ்நாட்டுல பிறக்கலயா?” என்றபடி அடுத்த பக்கத்தைத் திருப்பினான்.

அங்கே ஒரு நியூஸ்பேப்பர் காகிதம் ஒன்று இருந்தது; அதன் கீழே கூடப் பிறந்தவள் என்ற இடத்தில் “ஜோசப்” என்ற பெயர் போடப்பட்டிருந்தது.

அதை மேலும் குழப்பத்துடன் பார்த்தவன், “அவ சிஸ்டர் நேம் ரூத் தான?” என்று அந்த பேப்பரை எடுத்து வாசித்தான்.

அது இருபது வருடம் முன் வெளியான பழைய பேப்பரின் ஒரு சிறு பகுதி அது; அதில் ஒரு செய்தி தலைப்பைப் பார்த்து முகத்தைச் சுளித்தவன், அதை மேலும் படிக்க விருப்பமின்றி

“என்ன இது, இப்படிலாம் கூட நடக்குதா? ஆமா இதை ஏன் இந்த ஃபைல்ல  வச்சிருக்காங்க, ஒரு வேலை  மாத்தி வச்சிட்டாங்கலோ! ”

என்றபடி அடுத்த பக்கத்தைத் திருப்பியபோது, அங்கே ரூத்தின் புகைப்படத்தைப் போட்டு அதன் கீழ் இருந்த தகவலைப் பார்த்து அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான் த்ரூவ்.

பின் மீண்டும் அதன் முன் பக்கம் இருந்த நியூஸை எடுத்து முழுதாகப் படித்தவன், அதில் இருப்பதை அனைத்தையும் ஜீரணிக்க முடியாமல் திணறியவனாக

“இல்ல இது எப்படி…. ஸ்டெல்லா…” என்று மனம் பதற ஏதோ யோசித்தவன்,

அந்த செய்தியில் சிலுவையின் பெயரை தவிர வேறு எதுவும் போட படவில்லை,  அந்த ஃபைலிலும் வேறு தகவல் இல்லாமல்  இருக்க  இதைப்பற்றி முழுதாக தகவல் தெரிய யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தான்.

ஸ்டெல்லா இருக்கும் நிலையில், இதைப்பற்றி அவளிடம் பேச விரும்பாதவன்.

அறையில் அங்கும் இங்குமாக நடந்தபடி யோசித்தவன் கண் முன் ஆதிஷின் பாட்டியான மணியம்மாள் நினைவு வரவும் வேகமாக ஆதிஷை அழைத்தான்.

அறைக்குள் அனுமதி கேட்டு வந்த ஆதிஷ்,

“சொல்லுங்க சார்” என்று அவன் முன்னே வந்து நிற்கவும்

த்ரூவ் அவனில் எழும்  பதட்டம் மற்றும் தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் உள்ளே போட்டு அடைத்து விட்டு, மிகச் சாதாரணமாக

“உங்க பாட்டி கிட்ட கொஞ்சம் பேசணும் ஆதிஷ், அவங்கள ஸ்டெல்லாக்கு தெரியாம இங்க கூட்டிட்டு வர முடியுமா?” என்று கேட்டவனை, புரியாமல் பார்த்த ஆதிஷ்.

“எங்க பாட்டியா? அவங்க கிட்ட என்ன சார் பேசப் போறீங்க?” என்று கேள்வி கேட்டவனை அழுத்தமாகப் பார்த்த த்ரூவ்.

“கொஞ்சம் பெர்சனலா ஸ்டெல்லா பத்தி பேசணும் ஆதிஷ்” என்றவனின் அழுத்தமான குறளில்  உடனே தலையசைத்து,

“இதோ சார்” என்று அப்போதே வீட்டுக்குக் கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் பாட்டியை பைக்கில் அமர வைத்து அங்கு அழைத்தும்  வந்திருந்தான்.

அலுவலகத்தை அண்ணாந்து பார்த்தபடி இறங்கிய மணியம்மாள்,

“என்னடா இது, இவ்ளோ பெரிய இடத்துலயா நீ வேலைய பாக்குற? அப்புறம் நம்ம ஸ்டெல்லாவ கட்டிக்கப் போறவரும் இங்க தான் வேலை பாக்குறாரா?”

என்றவரை நோந்து போய் தான் பார்த்தான் ஆதிஷ். பின் எத்தனை கேள்விகள், வீட்டில் கிளம்பிய போது கேட்கத் தொடங்கியது?

இங்கு வந்தும் கேட்ட ஒரே கேள்வியையே மாற்றி மாற்றி வித விதமாக கேட்டு நிற்பவரைச் சலிப்பாகப் பார்த்தவன்.

“இங்கேயே இருங்க பாட்டி, நான் பைக்க விட்டு இதோ வந்திடுறேன்”

என்று ஆதிஷ் பைக்கை விட்டுவிட்டு வருவதற்குள், பாட்டியே தனியாக நடந்து அலுவலகத்திற்குள் சென்றிருந்தார்.

அனைத்து இடத்தையும் வியந்து போய் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தவரை, மேலே கேமராவின் வழியே பார்த்த த்ரூவ், வேகமாக அவர் இருக்கும் தளம் வந்தவன்.

“பாட்டி…. தனியா இங்க என்ன பண்றீங்க? ஆதிஷ தானே உங்கள கூட்டிட்டு வர சொன்னேன்?”

என்று கம்பீரமாக வந்து நின்றவனை நன்றாக அவன் அருகே சென்று பார்த்தவர்.

“நல்லா கலையா இருக்க ராசா” என்று

அவன் கன்னம் தொட்டுப் பேசியவரை, முகம் மலர்ந்து பார்த்தவன். அவரைத் கைதாங்கலாக அழைத்துக்கொண்டு லிஃப்ட் மூலம் அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

இங்கு பைக்கை நிறுத்திவிட்டு வந்த ஆதிஷ், பாட்டியை அங்கு காணாது பயந்து

“அச்சோ! பாட்டி…. எங்க போனீங்க…” என்று அலுவலகத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தான்.

இங்கு பாட்டியோ த்ரூவின் அறையில் சூடாக காபியை ரசித்துக் குடித்துக்கொண்டு, த்ரூவின் சம்பளத்தைப் பற்றி அவனிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.

த்ரூவும் அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சிரித்தபடி பதில் சொல்லவும், அந்த காபியை குடித்து முடித்த பாட்டி,

“நிஜமாவா இவ்வளவு சம்பளம் வாங்குறியாப்பா? என் புள்ளைய ஏமாத்தல தான தம்பி?”

என்றவரை நினைத்து வியப்பாகத்தான் இருந்தது த்ரூவுக்கு.

சொந்தங்களையே தள்ளி வைத்து விசாரிக்கும் காலத்தில், தன் பக்கத்து வீட்டு பெண்ணின் திருமணத்திற்காக இத்தனை கேள்விகள் கேட்டு விசாரிப்பவரை இவனுக்குப் பிடிக்கத்தான் செய்தது.

அதில் சற்று இலகுவானவன் இவரிடம் அந்த விஷயத்தைப் பற்றி கேட்கலாமா, இவருக்கு அந்த விஷயம் பற்றி தெரியுமா என்று யோசித்து தயங்கி நின்றான்.

ஏதோ ஒரு தைரியத்தில் அவரை அழைத்து வரச் சொல்லிவிட்டான், ஆனால் அவருக்கு அந்த விஷயம் பற்றி தெரியுமா இல்லை தெரியாத என்று தயங்க, பாட்டியே விஷயத்திற்கு வந்தார்.

“ஏதோ பேசணும்னு சொன்னியே…ப்பா தம்பி, என்ன விஷயம்?” என்றவரிடம் எப்படிச் சொல்வது என்று என்னும்  தயங்கியவன்,

“அது உங்களுக்கு ஸ்டெல்லா குடும்பத்தைப் பற்றி எப்படித் தெரியும் பாட்டி?” என்று சுற்றி வளைத்து விஷயத்திற்கு வந்தான்.

த்ரூவின்  கேள்வியில் ஒரு நிமிடம் அமைதியாக அவனைப் பார்த்தவர்,

“ஸ்டெல்லா பாட்டி என்னோட தோழி” என்று ஒரு வார்த்தையில் அவனுக்கு பதில் சொல்லவும்,

“ஓ…. அவங்க மூலமா தான் ஸ்டெல்லாவத் உங்களுக்கு தெரியுமா பாட்டி?” என்று ஏதோ பேச தயங்கி மழுப்பியவனை உற்றுப் பார்த்த பாட்டி,

“ஸ்டெல்லா குடும்பத்தைப் பற்றி தெரிஞ்சிக்க வேணுமா  தம்பி?” என்று நேராக விஷயத்திற்கு அவர் வரவும், தயக்கத்தை விட்டவன்,

“ஆமா பாட்டி, எனக்கு ஸ்டெல்லா குடும்பத்தைப் பற்றி எல்லாம் தெரிஞ்சிக்க ணும் பாட்டி.”

“எதுக்கு தம்பி, அவளோட குடும்பத்த பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும் ?” என்று பதறிவரை உற்று பார்த்தவன்

“ தைரியமா சொல்லுங்க பாட்டி ஸ்டெல்லாவ  எப்பவும் எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் எதுக்காவும்  நான் அவல விட மாட்டேன் பாட்டி”

என்றவன் பேச்சில் பொய் இருப்பது போலத் தெரியவில்லை, அதை நம்பி பாட்டி சொல்லத் தொடங்கினார்.

“ஸ்டெல்லா அப்பா ச்சீ…. த்தூ….” என்று அவர் வாயை அவரே அடுத்து கொண்டு

 “அவனை அப்படிச் சொல்லக்கூடாது, அந்த நாயை… அவன மனிஷன்  இனம் கூட இல்ல மிருகத்தை கூடையும் சேர்க்க  கூடாத பிறவி அவன்.

அவன் ஒன்னும் ஓடிப் போகல ப்பா, அவன் இப்போ ஜெயில்ல கலி தின்னுட்டு இருக்கான்,” என்று அவர் அவனை மேலும் கேவலமாகத் திட்டவும், த்ரூவ்

“அப்போ இவங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் போல,” என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக,

மூச்சை இழுத்து விட்டு ஒருமுறை கண்களை மூடித் திறந்தவன் மேலும் அவன் அரிய போகும் அனைத்தையும் ஜீரணிக்கும் அளவு மனதை திடம் செய்தவன், மொத்தத் தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு,

“ரூத் அவளை பத்தி சொல்லுங்க பாட்டி, ரூத் ஸ்டெல்லாவிக்கு யாரு பாட்டி? ஏன் ஸ்டெல்லா ரூத்தை இப்படி ஓவர் ப்ரொடக்டிவா பார்க்கிறா?”

என்றவனின் கேள்வியில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவர்,

“நீ அவ குடும்பத்தைப் பத்திதான தம்பி கேட்ட, இப்போ என்ன அவ தங்கச்சி பத்தி கேக்குற?” என்று அவர் பேச்சில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்தவனாக,

“தைரியமா நடந்ததைச் சொல்லுங்க பாட்டி, ஸ்டெல்லா காக வாது சொல்லுங்க பாட்டி.

அவ இப்படியே அவளுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு வைக்கிறது நல்லது இல்லை பாட்டி.” என்றவன் பேச்சில் மேலும் அவர் தயங்கி

“அது வந்துப்பா, இது யாருக்கும் தெரியவே வேண்டாம்னு தான் பார்த்தேன்.”

“இப்போ இங்க என்கிட்ட நீங்க சொல்றது என்ன தாண்டி எங்கேயும் போகாது பாட்டி, நம்பிச் சொல்லுங்க,”

என்றதும் சோர்வாகச் சாய்ந்து அமர்ந்தவர்

“ எப்படியும் ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாள் இந்த விஷயம் ஸ்டெல்லாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா  தெரிய தான் செய்யும். அதை இப்போவே நாம போருமையா எடுத்து சொல்லிடுவோம் “ என்று நினைத்தவறாக பேசத் தொடங்கினார்.

“மரியா ஸ்டெல்லாவோட அம்மா, எங்க தெருவிலயே மரியா மாதிரி அழகி யாரும் இல்லைன்னு சொல்ற அளவு அத்தனை அழகு.

அவ ஸ்கூல் படிக்கும் போதே அத்தனை பேர் வந்து கேட்டுட்டுப் போனாங்க அவள.  அப்படி யாருக்கும் கொடுக்காம பொத்தி வச்ச வளர்த்த பிள்ளையா, அந்த நாய்க்குத்தான் போகணும்னு இருந்திருக்கும் போல,” என்று பெருமூச்சை விட்டவர்

“கனிக்கு என் மகனுக்குத்தான் மரியாவக் கட்டி வைக்கணும்னு ரொம்ப ஆசை, ஆனா எங்க புள்ளைங்க அப்படி நாங்க பழகல அண்ணன் தங்கச்சியாதான் பழகுனோம்னு சொல்லி கேடுத்துட்டாங்க.

இப்படிச் சொல்ற பிள்ளைய என்ன பண்ணுன்னு மரியாக்கு மாப்பிள்ளை பாக்கப்போ வந்தவன் தான், அந்த சிலுவை பேங்க் வேலை, மும்பைல சொந்த வீடுன்னு நல்ல வசதியா இருக்கான்னு சொன்னாங்க.

சரி புள்ள போற இடத்துல நல்லா இருக்கட்டும்னு ஆசை அசையா ஊர் மெச்ச கட்டி வச்சு அனுப்பி வச்சாங்க. கல்யாணம் ஆன மாசமே பொண்ணு மாசமாயிட்டான்னு சந்தோஷமா போய் பார்த்துட்டு வந்தாங்க.

அங்க போய் பார்த்துட்டு வந்து கனி அப்படிப் பூரிச்சுப் பேசுனது இப்போ வரை கண்ணுலயே இருக்கு, ‘என் மாப்பிள்ளை அப்படி வச்சு தாங்குறாரு, என் பொன்னா’ன்னு.

நானும் பரவலான நல்ல பையன் தான் போலன்னு சந்தோஷம் பட்டோம். ஆனா அந்த சந்தோஷம் நீடிக்கிறதுக்குள்ள வருசையா பிரச்சனை.”

என்றவருக்கு அந்த ஏசியிலும் வியர்த்திருக்க அதை முந்தானை கொண்டு துடைத்தபடி,

“அந்த பொண்ண பிரசவத்துக்கு கூட இங்க அனுப்பாம அவனே வச்சிகிட்டான். பெண்டாட்டி  இல்லாம இருக்காங்க முடியாது ன்னு.  அதுக்கு கூட கனி சந்தோஷம் தான் ராசா பட்டா என்ன பொண்ண நேசிக்கிற புருஷன் னு

இங்க இருந்து கனி தான் அங்க போய் மூணு மாசம் தங்கி இருந்துட்டு வந்தா. மொத புள்ள அப்படியே மரியாவ உரிச்சு வச்சி பிறந்திருந்தா.

அப்போ அது பாத்து நாங்க அத்தனை சந்தோஷம் பட்டோம், எத்தன அழகா இருக்கா பேத்தி அப்படின்னு, ஆனா அதுவே அவ உயிர இப்படி எடுத்துரும்னு அப்போ நாங்க நினைக்கலயேப்பா…”

என்றுத் த்ரூவ் கையை பிடித்தவர், அவர் நடுங்கும் கைகளை கொண்டு அவன் கையை பிடித்த படி

“அப்போ நாங்க நினைக்கலயே அந்த படுபாவி மனைவி மாதிரி இருந்த அவன் பொண்ண அவன் மனைவியாவே பாப்பான்னு”

என்று முகத்தை மூடி கதறுகிறவரை எச்சில் விழுங்கி பார்த்தவன்.

“அப்போ ரூத் ஸ்டெல்லா ஓட அக்கா பொண்ணா?”

என்றவனுக்கு பதில் சொல்ல முடியாது, தலையசைத்து இவர் இங்கு கதற இவை அனைத்தையும் வெளியே கதவு பின்னே நின்று கேட்டு கொண்டிருந்த  ஆதிஷின் நிலை தான் பரிதாமாக போனது.

சிறு வயதில் இருந்து ஸ்டெல்லா ரூத்திடம் நடந்து கொண்ட விதம், அவளின் இறுகிய முகம், அவள் ஆண்கள் மீது காட்டிய வெறுப்பு என்று அனைத்தும் கண் முன் விரிய முகத்தை கரம் கொண்டு மூடியவன் மனதில்

“சாரி…. ஸ்டெல்லா “ என்று மனதார மண்ணிப்பு கேட்டான் முதல் முறையாக.