முகம் பிரகாசிக்க, அனைவருக்கும் புன்னகை முகத்துடன் காலை வணக்கம் சொல்லியபடி அவன் அலுவலக அறைக்குள் சென்றான் த்ரூவ்.
அவனின் நாற்காலியில் அமர்ந்தவன், விசில் அடித்தபடி தருணை அழைத்து
“தருண், மூனு வாரத்துக்குள்ள ஒரு நல்ல மண்டபத்தைப் புக் பண்ணு. மேரேஜ்கு டெக்ரேஷன் ரீஸப்சன் ன்னு மேரேஜ்க்குத் தேவையா என்ன வேணும் எல்லாம் ரெடி பண்ணிடு. ஏதாவது டவுட்னா அம்மா கிட்ட கால் பண்ணி கேளு. மூணு வாரம் நீ அம்மா கூடயே இரு, ஆபீஸை நான் பாத்துக்குறன்.”
என்று த்ரூவ் பேசியதைக் கேட்டு அதிர்ந்த தருண், “சார், உங்களுக்கு மேரேஜா!”
“ம்ம்ம்… எஸ், டுடே தான் கன்பார்ம் ஆச்சி,” என்று த்ரூவ் சிரிக்க, தருண்,
“பொண்ணு யார் சார்?” என்று தயங்கித்தான் கேட்டான் எங்கே தவறாக எதாவது நினைத்து விடுவானோ த்ரூவ் என்று
“வேற யாருடா, ஸ்டெல்லா தான்,” என்று த்ரூவ் சொன்ன பிறகே இவனுக்கு மூச்சு வந்தது.
ஏன் என்றாள் ஸ்டெல்லாவின் ராஜினாம மெயிலைப் பற்றித் தெரிந்ததில் இருந்தே, இவர்கள் இருவருக்கும் உள்ளே ஏதேனும் பிரச்சனையா என்று யோசித்தபடி தான் சுற்றி வந்தான் இவன்.
எங்கு இருவரும் பிரிந்து விடுவார்களோ என்று பதறவே செய்தான். ஏன்னென்றாள், இவர்கள் காதலை வைத்துத் தானே பல பிளான் போட்டு வைத்திருக்கிறான்.
ஸ்டெல்லா இல்லை என்றாள் கண்டிப்பாக அவள் பார்த்து கொண்டிருக்கும் வேலை அடுத்து இவனுக்கு தான் என்று பல கனவில் சுற்றி வந்தவனுக்கு மதி அந்த இடத்தை பிடித்து கொண்ட விவரம் தெரியாமல் தான் போனது .
இப்போது கல்யாணம் வரை இவர்கள் காதல் சொன்றதும் மகிழ்ந்தவனாக, “ஓகே சார், எல்லாம் நான் பாத்துக்குறேன் சார்,” என்று அங்கிருந்து சென்றுவிட, த்ரூவுக்கு அத்தனை சந்தோஷம்.
இருந்தும் மூளையின் ஒரு ஓரத்தில், அம்மா ஸ்டெல்லாவை உள்ளே அழைத்துச் சென்று என்ன பேசியிருப்பார் என்ன சொல்லி ஸ்டெல்லாவை ஒத்துக்கொள்ள வைத்திருப்பார், காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான்.
இதை அமுதாவிடம் கேட்டதற்கு, ஸ்டெல்லாவிடமே கேட்டுக்கொள்ளச் சொல்லிவிட்டார்.
இவனும் அவளுக்கு நேற்றிலிருந்து பேசப் போனில் அழைக்கிறான்; போனை எடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பவளை என்ன செய்வது?
“என் மேல என்னும் கோபமா வா இருக்கா?” என்று யோசனையாக இருக்கும் போது, சரியாக மெசேஜ் வந்த அறிகுறியாக போன் சத்தம் போட, அதை எடுத்துப் பார்த்தான்.
ஸ்டெல்லா தான் மெசேஜ் செய்திருந்தாள், இன்றைய மீட்டிங் பற்றி.
அவளின் மெசேஜைப் பார்த்து உடனே அவளை அவன் அழைத்தபோது, அந்தப் பக்கம் போன் வெகு நேரம் கழித்தே எடுக்கப்பட்டது.
“ம்ம்ம் சொல்லுங்க,” என்றவளின் குரல் சோர்வாகவே வந்தது, அதில் த்ரூவ்,
“என்ன ஆச்சு ஸ்டெல்லா? ஏன் டல்லா பேசுற?”
“ம்ம்ம்… இல்ல, இப்போ தான் எழுந்தேன், அதான் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.”
“ஓ… ஓகே,” என்றவனுக்கு அடுத்து என்ன எப்படிப் பேச என்று தெரியாமல் இவன் முழித்தபடி இருக்க, ஸ்டெல்லாவே தொடர்ந்தாள்.
என்று சிறிது நேரம் வேலையைப் பற்றி இவள் பேச, த்ரூவும் இலகுவாக மீட்டிங் பற்றி பேசி முடித்தவன், அப்படியே அவன் சந்தேகத்தையும் கேட்டுவிட்டான்.
“ஸ்டெல்லா…. அம்மா ரூம்ல உங்ககிட்ட என்ன பேசுனாங்க?” என்று கேட்டவனின் கேள்விக்கு, உடனே பதில் கொடுக்காமல் சிறிது நேரம் அமைதியாகிய ஸ்டெல்லா.
“இது நான் உங்களை நேர்ல பார்க்கும்போது சொல்றேன், அத்தை என்ன பேசுனாங்கன்னு.”
“நேர்லயா…..” என்று யோசித்தவன், “அப்போ நான் ஈவினிங் வரவா ஸ்டெல்லா அங்க?” என்று ஆர்வமாக கேட்கவும், உதடு விரிய மௌனமாக சிரித்தவள்.
“நீங்க அவ்வளவு ஃப்ரீயா இருந்தா வாங்க” என்று அனுமதி கொடுத்ததும் மேலும் சந்தோஷமானவன்.
“அப்போ ஈவினிங் கிளம்பிட்டு கால் பண்றேன்” என்று வைத்தவன், எத்தனை முயன்றும் அன்று ஸ்டெல்லாவை காண அவள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் போனது.
பின்பு எப்படி முடியும் தருணையும் இவன் அம்மாவிற்கு உதவ அனுப்பிவிட்டான். மதி என்னதான் ஸ்டெல்லாவின் இடத்தில் இருந்து அவள் வேலையைப் பார்த்தாலும், இவன் சம்பந்தப்பட்ட வேலையே தலைக்கு மேலே இருக்க அதை முடித்து நேரத்தை பார்த்த போது மணி ஒன்பது ஆகியிருந்தது.
இத்தனை தாமதமாக சிறு பெண் இருக்கும் வீட்டிற்கு செல்ல தயங்கி த்ரூவ்
ஸ்டெல்லாவிற்கு ‘சாரி’ என்ற மெசேஜை மட்டும் தான் அனுப்பி வைத்தான்
சரி, மறுநாளாவது அவளைப் போய் பார்த்துவிட வேண்டும் என்று வேகமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றான் மதி.
திடீரென்று வந்து நின்றவனை, “என்னடா…” என்று அவனைப் பார்த்த த்ரூவ்.
“சொல்லு மதி, ஏதாவது டவுட்டா… இங்க வந்திருக்க?” என்றவன் முகத்தில் வேலை நேரத்தில் வந்து டிஸ்டர்ப் பண்றானே என்று கடுப்பு வெளிப் படையாகவே தெரிந்தது .
“ம்க்கும்……எனக்கு தான….அப்படியே டவுட்டு வந்துடாளும்….நீ வேற….. இங்க வேற விஷயமா வந்தேன் டா? வர வழியில இந்த ஆதிஷ் அ இங்க பார்த்தேன் பிரணவ், அவன் இங்க என்ன பண்றான்?”
“அவன் இங்க தான் வொர்க் பண்றான்டா.”
“ஓ…. பரவாயில்லையே, உன் கம்பெனில ஒரு பையனா சர்வே பண்றானா? நல்ல பையன் தான் போலயே!”
“ம்ம்ம் பையன் நல்லவன் தான் டா.”
“அப்போ ஏன் அவன ரூத்-க்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாது பிரணவ்?” என்றவனை எரிச்சலாகப் பார்த்தவன்.
“என்னடா சொல்ற? அவன ரூத்-கா? அவ இப்போ தான் காலேஜ் முடிச்சிருக்கா!”
“சின்ன பொண்ணு தான், ஆனா மேரேஜ் பண்ண கூடாத அளவு வயசு இல்லையே டா!”
“இப்போ எதுக்கு அவ்வளவு அவசரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் சொல்ற?”
“டேய் உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா? அவனும் ரூத்தும் லவ் பண்றாங்க ”
“என்னது லவ்வா…?” என்று இவன் ஜெர்க் ஆகவும்,
“ஆன்டி அங்கிள் நீங்களே பண்ணும் போது எங்கர் ஜென்ரேஷன் பண்ணாமலா இருப்பாங்க?”
“ஆமா, உனக்கு எப்படி டா இது தெரியும்?” என்றதற்கு, ஆதிஷ் ஹாஸ்பிட்டலில் வைத்து இவனுடம் சொன்ன அனைத்தையும் த்ரூவ் இடம் சொன்ன மதி.
“பாவம் பையன், மூஞ்சே சோகமா ஒரு மாதிரி தான் இருக்கு.”
“என்னடா…! இவன் சொல்றத பார்த்தா அந்த பொண்ணு பிறந்ததுல இருந்து லவ் பண்றான் போல!” என்றதற்குத் தோள்களை உலுக்கிய மதி.
“உன் காதல் கல்யாணம் வர வந்ததுக்கு ஒரு வகையில இவனும் காரணம் தான்டா, பார்த்து பண்ணிவிடு!”
“சரி அவன் கதை இருக்கட்டும், இதைச் சொல்லத்தான் நீ இங்க வர வந்தியா டா?”
என்றதும் தான் நினைவு வந்தவனாகத் தலையில் கை வைத்த மதி.
“அந்த பையன பார்த்ததுல வந்த விஷயத்தையே மறந்திட்டேன் பாருடா!”
“அதைத்தான் கேக்குறேன், என்ன மேட்டர்?” என்று சேரில் சாய்ந்தபடி இவர் வினவ மதி,
“பொம்மாயி உன் கம்பெனில தான் வொர்க் பண்ணிட்டு இருக்கா டா” என்று மதி சொன்னதை கேட்டு அதிர்ந்த த்ரூவ்.
“யாரு? அன்வியா…. அவ எப்படி இங்க நான் பார்த்ததே இல்லையே ?”
“ப்ச்! உன் கம்பெனினா…..இது மட்டுமா டா? ஸ்டெல்லா வொர்க் பண்ண கம்பெனி அதச் சொல்றேன் டா.”
“அங்கயா வேலை பாக்குறா? எப்படிடா?”
“இந்த டயலாக் க நான் தான் கேக்கணும் பிரனாவ், நிஜமா உனக்கு அவ அங்க வொர்க் பண்றது தெரியாதா டா?”
“ம்ஹூம், அங்க நான் ஸ்டெல்லாவப் பார்க்கப் போவேன், அவ்வளவுதான்டா. வேற யார் யாரு அங்க வேலை பாக்குறாங்கனு எதுவும் தெரியாது, இது எல்லாம் ஸ்டெல்லா பாத்துப்பா.”
“சூப்பர் போ…. உன்ன மாதிரி தான்டா இருக்கணும்,” என்று அழுத்துக் கொண்டவன்.
“நான் இவள ஊரே தேடி அலஞ்சா, இவ இங்க சென்னையில இருக்கா. சரி அப்போ நான் அவளே அங்க போய் பார்த்துக்கிறேன்,” என்று மதி எழுந்து கொள்ள, த்ரூவ்
“நானும் வரேன், மதி அன்வியப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.”
“ம்க்கும்…. நானே எப்படி அவ கால்ல விழுந்து அவள சமாதானம் செய்யணும்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன், இதுல நீ வேறயா டா?
இப்போதைக்கு நீ இங்கயே இரு, நான் அவள சமாதானம் பண்ணிட்டு உன்ன கூப்பிடுறேன், அப்போ வந்து பேசு,” என்று விட்டு மதி கிளம்பிவிட த்ரூவ் யோசனையாக
“அவள பாத்து இவன் இப்படி பயப்படுற அளவு என்ன பண்ணி வச்சான் இவன்?”
என்று யோசித்தவன், முதலில் ஆதிஷ் பற்றி விசாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவனாக, இவன் ஆட்களை அழைத்து அவனைப் பற்றி அனைத்தையும் விசாரிக்கச் செய்தான்.
மாலை ஆதிஷைப் பற்றி அவன் செய்த சிறு பிழையிலிருந்து அனைத்தும் இவன் கைகளில் வந்துவிட, அவை அனைத்தையும் பார்த்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஆதிஷை அழைத்தான்.
உள்ளே அனுமதி கேட்டு வந்தவன் முகம், மதி சொன்னது போல வாடி தான் இருந்தது.
“என்ன ஆதிஷ், ஏன் இவ்ளோ சோகம்?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல் என்று தயங்கி நின்றவனைப் பார்த்தவனாக,
“ரீலாக்ஸா…. கொஞ்சம் நேரம் பர்ஸ்னலா பேசலாமா ஆதிஷ்?”
“தாரளமா சார், என்னன்னு சொல்லுங்க,” என்றவனை எதிரில் இருந்த இருக்கையில் கை காட்டி அமர வைத்தவன்
“கொஞ்சம் உங்களப் பத்தி பேசணும் ஆதிஷ்.”
“என்னைப் பத்தி பேச என்ன இருக்கு சார்?” என்று ஆதிஷ் சலிப்படைய,
“உங்களனா உங்களப் பத்தி மட்டும் இல்ல ஆதிஷ், ரூத் அவளப் பத்தியும் தான்,” என்றவன் பேசியதை கேட்டு சோர்வாக தலையை தொங்க போட்டபடி அமர,
“உண்மையா நீங்க ரூத்த லவ் பண்றீங்களா ஆதிஷ்?”
“சார் உண்மையா தான் சார் லவ் பண்றேன், அவ நினைக்குற மாதிரி ஸ்டெல்லாவப் பலிவாங்கலாம், நான் ஒன்னும் லவ் பண்ணல சார்,”
“சரி அப்போ இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க ஆதிஷ்?”
“எனக்கு சுத்தமா தெரியல சார், கால் பண்ணா எடுக்க மாட்டிக்கிறா, அவ வீட்டுக்கு போனா பாட்டி என்ன உள்ளையே விட மாட்டிக்கிறாங்க,”
“அதுக்காக அப்படியே விடப் போறீங்களா ஆதிஷ்?”
“கண்டிப்பா என்னால அது மட்டும் முடியாது சார், அவளப் பார்க்காம ஒரு நாள் இருந்தா கூட நான் பைத்தியம் ஆன மாதிரி ஆகிடுவேன் சார்,” என்றவனை மூச்சை இழுத்து விட்டபடி பார்த்தவன்,
“ ஸ்டெல்லாக்கு ஏன் உங்கள பிடிக்கல ஆதிஷ், மொதல்ல அதை சொல்லுங்க,”
“எனக்கே தெரியாத கேள்விக்கு பதில், நான் எப்படி சார் சொல்ல?”
“அது எப்படி? நீ எதுவும் பண்ணாம ஸ்டெல்லா உன் மேல இத்தன கோபமா இருப்பா?”
“மதி சார் சொல்லி எங்க சின்ன வயசு கதையை கேட்டீங்க தான சார், நீங்களே சொல்லுங்க நான் என்ன தப்பு பண்ணேன், எதுக்கு என்ன அப்படி போட்டு அடிச்சா அவ?”
என்று உணர்ச்சிவசப்பட்டு ஸ்டெல்லாவை ‘அவ’ என்று சொல்லியதில் அவனை உறுத்து த்ரூவ் பார்க்கவும்,
“அச்சோ சாரி சார், அது சின்ன வயசுல இருந்து இப்படி பேசிப் பழகிடுச்சு, இனி மாத்திக்கிறேன் சார்,” என்றவனுக்கு சம்மதத்துடன் தலையசைத்தவன்,
“ஸ்டெல்லாக்கு அப்போ சின்ன வயசுல இருந்தே ஆண்களைக் கண்டா பிடிக்காது, ரைட்?”
“ம்ம்ம் ஆமா சார், சின்ன பசங்க வாசல்ல வந்து விளையாடுனாலே இங்க விளையாட கூடாதுன்னு துரத்தி விடுவாங்க சார்,”
“அவங்க அப்பா இவங்கள விட்டு போனதுனால ஆண்கள மேலயே கோபம் வந்துடுச்சு…..
அனா…..இதுல வேற ஏதோ பெருசா இருக்கோன்னு எனக்கு தோணுது ஆதிஸ்,”
என்று த்ரூவ் சொன்ன பிறகு தான் ஆதிஷுக்கும் அதே கேள்வி வந்தது.
“அப்பா போனதுக்கு ஏன் தங்கச்சிய இப்படி பாதுகாப்பா, பயந்து பயந்து வளக்கணும்?” என்றவனைப் புரியாமல் பார்த்த த்ரூவ்,
“என்ன சொல்றீங்க ஆதிஷ்?”
“நார்மலாவே ஸ்டெல்லா ரூத்த தனியா எங்கயும் அனுப்ப மாட்டா சார், கையில ஜிபிஎஸ் வாட்ச், பெப்பர் ஸ்ப்ரேன்னு ரொம்ப புரொடக்டிவா தான் அவள அணுப்புவா,”
“இல்ல சார், அவங்க அப்பா ஓடி போயிட்டாரு, அம்மா ரூத் பிறந்ததும் இறந்துட்டாங்க, பாட்டி தாத்தா இருந்தாங்க, அவங்களும் இப்போ இல்ல, வேற யாரும் இது வரை இவங்கள தேடி வந்ததும் இல்ல சார், ஏன் இவங்களும் எங்கயும் போனது இல்ல?”
இவற்றை எல்லாம் கேட்டு நெற்றியைத் தட்டி யோசித்தவன்,
“சம்திங் ஏதோ பெருசா இருக்கு ஆதிஷ், அது என்னன்னு கண்டுபிடிச்சா தான் இவங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரிய வரும்.”
“பாட்டி கிட்ட இதைப்பத்தி எதுவும் கேட்காதிங்க, அதை நான் விசாரிச்சிக்கிறேன். நீ உன் கல்யாணத்தைப் பத்தி மட்டும் பாட்டி கிட்ட பேசு,”
“என்னது சார், என் கல்யாணத்தைப் பத்தியா சார்? என்னால ரூத்தை தவிர வேற யாரையும் நினைச்சு கூடப் பார்க்க முடியாது சார்,” என்று உணர்ச்சி வச பட்டவனை, முறைத்து பார்த்த த்ரூவ்
பாட்டி சொன்னால் ரூத், ஸ்டெல்லா என்று இருவரும் கேட்பார்கள். திருமணம் முடிவு ஆகிவிட்ட பிறகு கூட ரூத்தை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று யோசித்தவனாக, பாட்டியைப் பார்க்கத் த்ரூவிடம் விடைபெற்று கிளம்பினான்.
ஆதிஷ் சென்றதும் இவன் ஆட்களை விட்டு ஸ்டெல்லா பிறந்த இடம் அவள் வழந்த விதம் அவளின் தந்தை தற்போது இருக்கும் இடம் என்று அனைத்தயும் விசாரிக்க ஆட்களுக்கு உத்தரவு இட்டான்.
இரண்டு நாட்களில் அவர்களும் ஸ்டெல்லாவை பற்றி அனைத்தயும் விசாரித்து தகவலை அவன் முன் கோண்டு வந்து வைத்து விட்டனர்.
அந்த தகவலை எடுத்து பார்த்தவன் சத்தியமாக இதை எதிர்பார்க்கவே இல்லை. மலராக பிறந்தவள் அலராக மாறியதின் காரணம் கண்டு திகைத்து தான் போனான்.