ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்சனைகள் தோன்றினாலும் எதுவும் யாருக்காகவும் காத்திராமல் நேரமும் நாட்களும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன..
சசியை வீட்டில் பார்ப்பதே அரிதாகியது. ஷூட்டிங் ஆரம்பித்து நல்லபடியாக பூசணிக்காய் உடைத்து நிறைவு பெற்றது. இப்பொழுது டப்பிங் வேலை ஓடிக் கொண்டிருக்கிறது..
அகிலன் வான்மதிக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் முடிந்து விட்டது.. வாசுகியே பார்த்து மூக்கில் கை வைக்கும் வண்ணம் மாதவி வான்மதியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்..
தன்னுடைய அண்ணன் மகளே தன் மருமகளாக வந்துவிட்ட சந்தோஷம் அவருக்கு.. ஏற்கனவே ஒருமுறை அவர் பட்டது பத்தாதா? தன்னால்தான் அண்ணன் குடும்பம் இத்தனை வருடங்கள் வனவாசத்தை அனுபவித்தார்கள் என்கிற குற்ற உணர்ச்சி அவருக்குள்ளும் உண்டு.. அந்த எண்ணத்தை பொய்யாக்க வான்மதியை தான் பெற்ற மகள் பிருந்தாவை விட மேலாக நினைத்தார்.
சின்ன சின்ன விஷயங்கள் கூட வான்மதியின் விருப்பத்தைக் கேட்டே செய்தார்..
என்னதான் முன்போல் மாதவி இல்லை என்றாலும் வாசுகி மனதிற்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
” அகிலன் எப்படி டி உன்கிட்ட நடந்துக்குறான்.. மாதவி ” வான்மதி புத்திசாலி. பெற்றவள் எதை நினைத்து கலங்குகிறாள் என்பதை புரிந்து கொண்டவள்
” நீ இல்லாத குறையே எனக்கு இல்லம்மா.. ” ஒரே வார்த்தையில் நிறையை சொல்லி விட்டாள்.. இருந்தாலும் தான் வருத்தப்படுவது பிடிக்காமல் வான்மதி இவ்வாறு கூறுகிறாளோ என்கிற சந்தேகமும் வாசுகியின் மனதில் இருந்து கொண்டிருந்தது..
அதும் திருமணம் முடிந்து இரு மாதம் கழிந்த நிலையில் வான்மதியை நேரில் பார்க்கும் போது மறைந்து போனது.. முன்னை விட முகம் பூரித்து, சதை போட்டிருந்தாள் வான்மதி.. அவளை நேரில் கண்ட பிறகே வாசுகியின் மனம் நிறைந்தது..
வான்மதி அவளது இளமையின் செழிப்பில் தடம் புரளும் காலத்திலும் பெற்றவர்களின் மனம் நோக்க கூடாது என்பதால் வைராக்கியத்தோடு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவள். அவளுக்கும் தோழிகளைப் போல சிறகடித்து பறக்க நிறைய ஆசை.
தன்னை தன்னுடைய ஒழுக்கத்தை பெற்றோர்களிடம் நிரூபிக்க சின்ன சின்ன ஆசைகளை கூட மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டவள்.
தென்றலைப் போல் பொறுமைசாலி இல்லை என்றாலும் மிகவும் புத்திசாலி.. திருமண பேச்சு எடுத்த கணத்திலிருந்து அகிலன் தடுமாறுவதை அவள் கவனித்திருந்தாள்.
முதலிரவு அன்று இருவரும் அருகருகே அமர்ந்திருந்தார்கள் கட்டிலில்.
எப்படி பேச்சை தொடங்குவது என்றே புரியாமல் அகிலன் மண்டை காய்ந்து போனான். அவன் முகத்தை சில நொடிகள் குறுகுறுவென்று பார்த்தவள்
” என்ன மாமா இப்பதான் என்ன மொத தடவ பாக்குற மாதிரி ரொம்ப ஹாக்வுட்டா இருக்கீங்க.” நிலைமையை இலகுவாக்க பேசினாள்.
“ஹான்.. சின்ன வயசுல நான் உன்ன தூக்கி வச்சிருக்கேன் வானு.. இப்ப பாத்தா நீ என் பொண்டாட்டி..” பெருமூச்சோடு சிரித்தான்.
” இதுல என்ன இருக்கு.. பொண்ணுங்கள மட்டும் தான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைப்பாங்களா.. ” அகிலன் வான்மதியை ஆச்சரியமாக பார்த்தான்.
” நீ இவ்ளோ பேசுவியா? சின்ன பிள்ளைல பார்க்கும்போது ஊமைகோட்டான் மாதிரி இருப்ப..”
” அதுக்காக நை நைனு உங்க கிட்ட என்ன பேச.. மொத நீங்க எங்க என்ன பார்த்தீங்க.. ” அவள் என்ன கூற வருகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.
” தென்றல் பத்தி பேசுறியா.. சின்ன வயசுல இருந்தே அம்மா தென்றல் தான் உன் பொண்டாட்டி ன்னு சொல்லியே வளர்த்தாங்க.. அவங்களுக்கு அண்ணன் குடும்பம் எப்பவும் கூடவே இருக்கணும்.. “
” உங்களுக்கு அக்காவ பிடிக்காதா..”
” பிடிக்குமே.. “
வான்மதி அமைதியாக இருந்தாள்.
“வானு எனக்கும் தென்றலுக்கும் கல்யாணம் ஏற்பாடு நடந்தது உனக்கு தெரியும்.. இப்ப கூட தென்றல் மேல எனக்கு அக்கறை இருக்கு. அவ வந்து உதவினு கேட்டா அர்த்த ராத்திரியா இருந்தா கூட போய் செய்வேன்.. இதனால உனக்கு ஏதாச்சும் சங்கடம் இருக்கா.. என்கிட்ட ஏதாவது கேட்கணுமா”..
வான்மதி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி
” ரொம்ப சீக்கிரமா கேக்கறீங்க பரவால்ல இப்பவாவது கேட்டீங்களே.. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியுது மாமா.. மொத நீங்க ஒன்னு புரிஞ்சுக்கோங்க.. உங்களுக்கு அக்கா மேல இருந்தது லவ்வே கிடையாது.. “
“ஹேய் இல்ல” குறுக்கே புகுந்து பேச முயற்சித்தான் அகிலன்.
” நான் பேசி முடிச்சுக்குறேன்.. நீங்களே சொன்னீங்களே அத்த சின்ன வயசுல இருந்து அக்காவையும் உங்களையும் சேர்த்து வச்சு பேசிட்டு இருப்பாங்களே.. உங்க வயசுக்கு பார்க்கும்போது அக்கா தான் உங்களுக்கு சரியான மேட்ச்.. சைட் அடிக்கிற மாதிரி மாமா பொண்ணு இருக்க நீங்க அந்த வேலைய தான் ஒழுங்கா செஞ்சீங்க.
கல்யாணத்தைப் பத்தி அத்தை பேசும்போது கூட எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு யாரும் செட் ஆயிருக்க மாட்டாங்க.. சிங்கிளா இருக்கிறதுக்கு கல்யாணம் பண்றது பெட்டர்ன்னு ஒத்துக்கிட்டுருந்திருப்பீங்க..
உண்மையா அக்காவ லவ் பண்ணிருந்தா இவ்ளோ ஈஸியா அவள விட்டுக் கொடுத்திருக்க மாட்டீங்க.. உங்களுக்கு அக்கா மேல இருந்தது ஜஸ்ட் கிரஷ்.. மாமா பொண்ணுன்னு எஃபெக்க்ஷன்..சரியா”.. விழிகள் தெறித்து விழும் அளவு முளித்தான் அகிலன்.
” அதுக்கு மேல உங்க லைஃப்ல எத்தனை பொண்ணுங்க வந்தாங்க போனாங்க இதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை.. அது எல்லாமே முடிஞ்சு போன குப்பை.. ஆட்டோகிராப் சேரன் மாதிரி உங்களுக்கு மனசுக்குள்ள ஆயிரம் பொக்கிஷமான நெனப்பு இருக்கலாம். அது எல்லாத்தையும் உங்ககுள்ளேயே வச்சு சமாதி கட்டிருங்க.
தென்றல் என்னோட அக்கா அவ மேல இருக்கிற அக்கறை பாசத்துல நீங்க உதவி செஞ்சா நான் கண்டுக்க மாட்டேன். அதே மாதிரி நீங்க லவ் பண்ண பொண்ணுங்க எல்லாரும் உதவின்னு கேட்டு நீங்க போய் செஞ்சா பாத்துகிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..
அக்காவுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமான நீங்க யோசிக்கிறது புரியுது.. என்ன பண்றது..என் அக்கா கூட நான் பொறந்தேன்…அவளோட புத்தி எனக்கு தெரியும்.. மத்தவங்க கூட நான் பொறக்கலையே.. ” அவனுடைய ஒழுக்கத்தை அவள் சந்தேகப்படுவது போல் இருந்தது.. அதனால் அகிலனின் முகம் மாறியது.
” நானும் நல்ல குடும்பத்து பையன் தான்.. சுய ஒழுக்கம் என்னன்னு எனக்கும் தெரியும்.. ” அவனின் உடல் விரைத்தது.
” எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க.. நா ரொம்ப பிராக்டிகல் மாமா.. அக்கா வீட்டை விட்டு போனதுல இருந்து எங்க நானும் போயிருவேன்னு பயந்து ஒவ்வொரு நானும் என்னோட அப்பா அம்மா எப்படி பயந்தாங்க.. எனக்குள்ள ஒரு வைராக்கியம்.. நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாதுன்னு பொட்டுல அடிச்ச மாதிரி சொல்ல நினைச்சேன்.. அதனால இந்த காதல் கத்திரிக்கானு எனக்கு எதுவும் கிடையாது.. ஆனா நீங்க அப்படி இல்ல.. ” இப்பொழுது அகிலனுக்கு அவள் மேல் பரிதாபம் தோன்றியது.
வாசுகி பரசுராமை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும். தென்றல் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை சிதைந்து போக தப்பே செய்யாமல் வான்மதி மீது அவன நம்பிக்கை தோன்றி விட்டது. அதை உடைத்து அவளை நிரூபிக்க அவள் இழந்தது அவளின் இளமைப் பருவங்களை..
” நானும் பெருசா சொல்லிக்கிற அளவு என் வாழ்க்கையில ஸ்வீட் மெமரிஸ் எல்லாம் இல்லம்மா.. மறக்க நினைக்கிறது தான் அதிகம்.. “
” மறக்காதீங்க”
“என்ன”
” சில விஷயங்களை மறக்க நினைச்சா அது மறக்க முடியாம திரும்பத் திரும்ப நமக்குள்ள நியாபகத்துல இருக்கும்.. அதுக்கு பதிலா புது விஷயங்களை உங்க மைண்ட்ல ஏத்திக்கோங்க.. ” அவனைப் பார்த்து சிரித்தாள் வான்மதி.
கிட்டத்தட்ட அவனைவிட ஏழு வயது சின்ன பெண்.. இவ்வளவு பொறுப்பாக புத்திசாலித்தனமாக அவள் எப்படி பேச கற்றுக் கொண்டால்? மனித மனங்களின் நுணுக்கங்களை எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறாள்?
” உனக்கு என்னை பிடிச்சிருக்கா.. “
இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள் வான்மதி..
அசடு வழிய சிரித்தவன் ” ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டேன்னு எனக்கே தெரியுது.. ப்ளீஸ்மா தயவு செஞ்சு மனசுல எதையும் வச்சுக்காம சொல்லு.. ” அவன் கெஞ்சலை பார்த்து சிரித்தாள் வான்மதி..
” தெரியல மாமா “
அகிலன் முகம் தொங்கி போனது.
” அதுக்கு மேல நான் எதுவும் நினைக்கல.. இனிமேதான் நீங்க நடந்துக்குறத பார்த்து நினைக்கணும்.. ” அகிலன் அவள் கரத்தோடு தன்னுடைய கரத்தை சேர்த்து கோர்த்துக் கொண்டான்..
” நீ அந்த கால பத்தாம் பசலி பொண்ணு கிடையாது. இன்னிக்கு இது வேணுமா வேணாமா.. நீ சொல்லு”
வான்மதி உடனே” நமக்குள்ள புரிதல் இருக்கு.. அத இன்னும் ஒரு வாரம் ரெண்டு வாரம் இம்ப்ரூவ் பண்ணுவோம்.. அதுக்கப்புறம் கொஞ்சமே கொஞ்சம் நமக்குள்ள காதல் வர ஆரம்பிக்கும்.. கடமைக்காக இன்னைக்கு வாழ்க்கையை தொடங்கினாலும் எனக்கு ஓகே.. இல்ல கொஞ்சமே கொஞ்சம் காதலிச்சு வாழ்க்கை தொடங்கினாலும் எனக்கு ஓகே.. ” சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினாள் வான்மதி.
” அது என்ன கொஞ்சமே கொஞ்சம்.. நிறைய காதலிப்போம்”..
“ம்ம்ம்… வயசாச்சே உஙகளுக்கு.. லவ் ஹார்மோன்ஸ் இன்னுமா வேலை செய்யுது” அதி முக்கியமான கேள்வியை கேட்டாள் வான்மதி.
” அடிப்பாவி.. வேணும்னா ஒரு டிரையல் காட்டட்டுமா.. “
” வேணாம் மாமா எனக்கு கராத்தே தெரியும் படாத இடத்துல பட்டுருச்சுன்னா எனக்கு தான் கஷ்டம்.. “
“தேங்க்ஸ் போர் யுவர் இன்ஃபர்மேஷன்” அதன் பிறகு இருவரும் நீண்ட நேரம் பேசிவிட்டு உறங்கினார்கள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டது..
ஆனால் அந்த கொஞ்சமே கொஞ்சம் காதல் தான் இன்னும் அவர்களுக்குள் வராமல் தள்ளி நின்றது..