அவரால் இப்போதும் இவள் கருவுற்று இருப்பதை நம்பவே முடியவில்லை.
“இவளைச் சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன், இவ இப்படிச் செய்யுற பொண்ணு இல்லையே! இந்த பையன பார்த்தாளும் அப்படிப்பட்ட பையன் மாதிரி தெரியல,
இந்த டாக்டர் தான் படிக்கத் தெரியாம படிச்சிட்டு வந்திருக்காரு போல” என்ற முடிவில்தான் அமர்ந்திருந்தார்.
அப்போது பார்த்து டாக்டர் சரியாக இவளைப் பார்க்க வந்தவர்; அவளின் ட்ரிப்ஸைப் பார்த்துவிட்டு,
“இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க. முழிச்சதுக்கு அப்புறம் டென்ஷன் ஆகாமப் பாத்துக்கோங்க. அவங்க பீப்பீ இறங்குறதுல தான் அவங்க பேபி உயிர் இருக்கு, பாத்துக்கோங்க” என்று சொல்லிச் செல்லப் போனவரை நிறுத்திய மணியம்மாள்,
“டாக்டர்… உண்மையாவே இந்த புள்ள முழிக்காமலையா இருக்கா? இல்ல வியாபாரம் இல்லன்னு நாளைக்கு இங்க புள்ளையப் புடிச்சி போடப் பாக்குறீங்களா?” என்றவரை டாக்டர் நிதானமாக பார்த்து,
“இதோ பாருங்கம்மா, அந்தப் பொண்ணோட ஸ்கேன் ரிப்போர்ட்டு கூட என்கிட்ட தான் இருக்கு. மூணு மாசம் பிரக்னென்ட்டா இருக்காங்க, கொஞ்சம் ஸ்டரெஸ்ஸா வீக்கா இருக்காங்கன்னு பார்த்துக்க சொல்லி தான் அனுப்புனேன்,
அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. முடிஞ்ச அளவு அவங்க முழிச்சதும் தேவையில்லாம பேசி அவங்கள கோபப்படுத்தாமப் பாத்துக்கோங்க” என்று சொல்லி அவர் சென்றுவிட்டார்.
அதை கேட்டு அதிர்ந்த மணியம்மாள், ஸ்டெல்லா அருகே சென்று
“அப்போ நெசம் தானடி நீ முழிக்காம தான் இருக்கியா?” என்று தூங்கும் ஸ்டெல்லாவைப் பார்த்துப் பேசவும்,
த்ரூவ் “பாட்டி…” என்று அவரை இவன் பக்கம் திருப்ப, அவர்,
“நான் உன்னப் பார்த்து நல்லவன்னு நினைச்சேன் ப்பா…, ஆனா இப்படி பண்ணிட்டியே பா! என் புள்ளையத் தனியா நிருத்திட்டியே பா!” என்ற அவரது குற்றச்சாட்டில்,
“பாட்டி, இதைப்பத்தி இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க. ஸ்டெல்லா முழிச்சாலும் இதைப் பத்தி அவகிட்டப் பேசாதீங்க. அவ முதல்ல பத்திரமா திரும்பி வரட்டும் பாட்டி.
அப்பறம் நான் அவல விட்டு எங்கயும் போல அவ பிரக்னெட் டா இருக்குறது எனக்கு இப்போ தான் தெரியும் பாட்டி.
நான் அவல விட்டு எப்பவும் போக மாட்டேன் பாட்டி. கடைசி வரைக்கும் அவளுக்காக நான் இருப்பேன் பாட்டி ,” என்று உறுதியாக பேசியவனை பார்த்தவர்
“அப்புறம்…” என்று இவர் ஏதோ சொல்ல வர,
“அவ பீப்பீ கம்பி அகலன்னா வயித்துல இருக்க பாப்பாவுக்குத்தான் கஷ்டம்னு சொல்லிட்டுப் போறாங்க. ப்ளீஸ் பாட்டி, எதுவும் பேசாதீங்க”
என்று அழுத்திச் சொல்லியதில், அவரும் அமைதியாக தலையசைத்து அமர்ந்து கொண்டார்.
சிறுது நேரம் கழித்து உடை மாற்றி வந்த ரூத்திடமும் எதையும் பற்றிப் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியவன் , அவள் கண் விழிப்பிற்காகக் காத்திருந்தான்.
அனைவரையும் வெகு நேரம் காக்க வைத்தவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். கண் திறந்தவள் முதலில் பார்த்தது த்ரூவைத்தான்;
அவனைப் பார்த்து அழகாக உதடு விரித்து புன்னகைத்தவளின் சிரிப்பில் அதிர்ந்து உறைந்து போனான் த்ரூவ். எத்தனை நாள் ஏங்கியிருப்பான் இந்த முகத்தில் சிரிப்பைக் காண! அத்தனை நாள் ஏக்கத்திற்கும் இன்று பதில் கிடைத்துவிட்டது என்று மகிழ முடியாமல் அவளை தான் பார்த்தான்.
த்ரூவை பார்த்துவிட்டு அந்த அறையைச் சுற்றி ஒரு முறை பார்த்தவளுக்கு, அவள் எங்கு இருக்கிறாள் என்று புரியவே வெகு நேரம் ஆனது.
அவள் நிலை புரிந்த மறுநிமிடம், வேகமாக இவள் எழ முயல, ஸ்டெல்லா தோளை பற்றி அவளை எழ விடாமல் செய்தவன், அவளைச் கோபமாக முறைத்து
“உனக்கு உன் குழந்தை வேனும்ன அமைதியா படு ஸ்டெல்லா” என்று அதட்டியவனைப் பயத்துடன் பார்த்தவள், அவள் வயிற்றில் கை வைத்து
“பாப்பாவுக்கு என்ன…” என்று குரல் நடுங்க பேசியவளின் பதட்டத்தைக் கண்டு இவனுக்குக் கோபம் தான் மேலும் அதிகரித்தது.
இத்தனை அக்கறை குழந்தை மேல் வைத்துக்கொண்டு தான் இவ்வளவு சண்டை போட்டாலா இவள் என்று கோபம் கொண்டவன்.
“இந்த பயம் நீ அப்படி கத்தி சண்டை போடும் போது எங்க போச்சு ஸ்டெல்லா?” என்றவனின் கேள்வியில் அவள் தலை குனிய,
“தயவு செஞ்சு கண்டத யோசிக்காம அமைதியா படு. உனக்காக இல்லைனாலும், உன்னை நம்பி வந்த அந்த ஜீவனுக்காகவாது அமைதியா இரு” என்று சொல்லிவிட்டு இவன் எழுந்து சென்றுவிட்டான்.
த்ரூவ் சென்றதும் பாவமான முகத்துடன் ஸ்டெல்லா, ரூத் மற்றும் மணியம்மாவைப் பார்க்க, இருவருமே இவளைப் பார்த்தார்களே தவிர வேறு ஒரு வார்த்தை பேசவில்லை.
அதில் அவள் உடலின் நிலை புரிய மனதில் பயம் சூழ, கண்களை மூடியவள் வெகு நாட்களுக்குப் பிறகு கடவுளிடம் சரணடைந்தாள் அவளின் பிள்ளைக்காக.
அறையை விட்டு வெளியே வந்த த்ரூவ், கண்களை மூடி சேரில் தலைசாய்த்து அமர்ந்துவிட்டான்.
அப்போது அவன் அருகே வந்து அமர்ந்தான் மதி.
“அப்பறம் பிரனாவ் ட்ரீட் எப்போ? எனக்கு முன்னாடி நீ அப்பாவா ஆகிட்ட?”
என்றவனை சோர்ந்த முகத்துடன் திரும்பிப் பார்த்த த்ரூவ்.
“இதுக்கு என்ன பதில் சொல்லத் தெரியலடா மதி” என்றவனைப் புரியாமல் பார்த்தவன்.
“தெரியலனா என்ன சொல்ல வர்றடா?”
“இல்ல இந்த பிரக்னென்சி எப்படி ன்னு தெரியலடா, பயமா இருக்கு. என் ஸ்டெல்லா எனக்கு இல்லையாடா?இதுக்காகத்தான் என்ன விட்டுப் போக நினைச்சாளடா, ஆனா எனக்கு அவ எப்படி இருந்தாலும் வேணுமே. இப்போ இந்த குழந்தையோட அவ வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்டா.”
என்று எதேதோ புலம்பித் தீர்த்தவனை வினோதமாகப் பார்த்து வைத்தான் மதி.
“டேய் என்னடா உளறுற? உன் குழந்தை உன் கூடத் தான இருக்கும்”
“என் குழந்தை அது எப்படிடா? அதுக்கு வாய்ப்பே இல்லையே!”
“அப்போ சிங்கப்பூர் ஹோட்டல்ல ஒரு நாள் நைட் முழுக்க ரெண்டு பேரும் என்ன பல்லாங்குழி யா விளையாடுனீங்க?” என்று உடைத்து பேசியவனை குழப்பமாகப் பார்த்தவன்
“சிங்கப்பூர்ல அவ அவ ரூம்ல இருந்தா, நான் என் ரூம்ல இருந்தேன்” என்று பேசியவனின் பேச்சின் நடுவில் வந்தான் ஆதிஷ்.
“ஏன் சார் இப்படி பொய் சொல்றீங்க? நான் தான் ஸ்டெல்லாவ உங்க ரூம்ல வச்சு பூட்டுன!”
என்றவனை அதிர்ந்து பார்த்தவன், “என்னது…” என்று அதிர்ச்சியில் எழுந்து நிற்க,
“ ஆமா சார், லாஸ்ட் டே நைட் ஸ்டெல்லா கிட்ட டிசைன் கொடுத்து நான் தான் உங்க ரூமுக்கு அவள அனுப்புனேன். அவ உள்ள போனதும் வெளிய கதவை லாக் பண்ணிடேன் சார். திரும்பி மார்னிங் நான் தான் சார் வந்து திறந்து விட்டேன்.”
என்று ஆதிஷ் பேசியதை கேட்டுத் தலையைப் பிடித்துக் கொண்டவன்.
கண்களை மூடி நினைவுபடுத்த எத்தனை முயன்றும், ஸ்டெல்லா பைல்களைக் காட்டியது மட்டுமே நினைவுக்கு வந்தது; அதன் பின் நடந்தது எதுவும் நினைவில் இல்லாமல் போக முற்றிலும் குழம்பிப் போனான்.
த்ருவ் தலை குனிந்து அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து மதி அவன் தோளைத் தொட்டு,
“என்ன ஆச்சு டா பிரனாவ் “
“அது அன்னைக்கு நைட் என்ன ஆச்சின்னு சுத்தமா நினைவு இல்லடா “ என்றவனை அதிர்ந்து பார்த்த மதி
“அது எப்படி டா மறப்ப எனக்கு தான் குடிச்சா எல்லாம் மறந்து போகும் நீ தெளிவா தான இருந்த “ என்றவன் தலையை பிடித்த படி
“வைன் தான் மதி குடிச்சேன் அந்த ஹோட்டல்ல அது நல்லா இருக்கும்னு சொன்னாங்க ஹால்க்கால் இல்லாதது தான் வாங்குன “
“ எதுவும் நியாபகம் வராம நானே தலைவலில இருந்தா நீ நக்கல் பண்றியா டா “ என்றவன் கோபத்தில் சிரிப்பை அடக்கியவன்
“கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருடா பிரணவ், நைட் நினைவு இல்லனா மார்னிங் நடந்தது எதவுது நினைவு இருக்கான்னு பாருடா,”
என்று மதி சொன்னதைக் கேட்டு, காலை அவன் இருந்த நிலையை அப்போதுதான் நினைவுபடுத்தினான்.
உடையின்றி கண் முழித்தவன் தலைவலிக்கத் , அறை அலங்கோலமாக இருந்தது.
அதன் பின் இவன் சென்னை சென்று மதியை மருத்துவமனையில் சேர்த்து வந்ததும், வீட்டில் குளிக்கும் போது உடம்பில் இருந்த காயங்கள் மற்றும் அதன் மூலம் இவனுக்கு ஏற்பட்ட எரிச்சல் என அனைத்தும் நினைவுக்கு வந்தன.
அன்று இருந்த சூழ்நிலையில் இவனுக்கு அது எதுவும் பெரிதாகத் தெரியவில்லை; ஆனால் இன்று அவற்றை எல்லாம் யோசித்து அது என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போதே அவனின் முகம் சிவந்துவிட, மதி
“டேய்…. ஞாபகம் வந்திருச்சாடா….“ என்று மதி கிண்டல் செய்ய, மேலும் இவனுக்கு வெட்கமாகி விட்டது, அதை மறைக்கும் விதமாக எழுந்து ஆதிஷ் அருகே சென்றவன்.
“நீங்க எதுக்காக இதை பண்ணிங்க ன்னு எனக்கு தெரியல. அன நானாவே இருந்தாளும், நீங்க பண்ணது தப்பு தான் ஆதிஷ்…“
என்று சொல்லி இவன் வெளியே சென்றுவிட, ஆதிஷின் முகம் வாடி போனது. அவன் முகத்தை பார்த்த மதி ஆதிஷின் தோளைத் தட்டிவிட்டு
“விடுடா… விடுடா…. ரொம்ப ஃபீல் பண்ணாத,” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.
இருவரும் சென்றதும் ஆதிஷ் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.
ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்துக்கொண்டிருந்தவன் மேலும் வருந்தி,
“பெரிய தப்பு பண்ணிட்டோமோ“ என்று தளர்ந்து போய் அமர்ந்திருந்தான்.
மூன்று மணிநேரங்களுக்கு ஒருமுறை நர்ஸ் வந்து இவளுக்கு பீப்பி செக் செய்து செல்ல ஸ்டெல்லாக்கு மிகுந்த பயமாக இருந்தது.
பயத்தில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்தவளுக்கு தைரியம் தரும் விதமாக ரூத் அவள் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இரவு நேரத்தில் டாக்டர் வந்து அவளைப் பரிசோதித்துவிட்டு, பிபி குறைந்திருப்பதாகச் சொல்லிவிட்டு, ஒருவர் மட்டுமே கூடத் தங்கலாம் என்று சொல்லிச் சென்றார். ரூத் பாட்டியை ஆதிஷுடன் சேர்ந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.
பாட்டியை வண்டியில் ஏற்றிச் சென்றவன் ரூத், இவனிடம் ஏதாவது பேசுவாள என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.
அவன் செய்த தவறு புரிந்திருந்தும், அதைச் சரி செய்ய முடியாமல் நின்றிருந்தவனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை.
இங்கு மதியையும் அனுப்பி வைத்துவிட்டு ஸ்டெல்லாவைப் பார்க்க அறைக்குச் சென்றவன், அவளைக் காணாமல் கோபமாக முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு ரூத்திடம்,
“நான் வெளியே வெயிட்டிங் ஏரியாவில தான் இருப்பேன் ம்மா, ஏதாவது ன்னா என்னைக் கூப்பிடு ம்மா” என்று சொல்லிச் சென்றவனை யார் என்று இப்போது வரை அவளுக்குத் தெரியவில்லை.
அவள் நினைத்தது எல்லாம் ஸ்டெல்லாவுடன் வேலை பார்ப்பவன் போல அக்காவும் இவனும் காதலிக்கிறார்கள் போல என்று எண்ணிக்கொண்டாள்.
இவள் முகத்தைப் பார்க்காமல் சென்றவனை மௌனமாகப் பார்த்தவள், தன் வயிற்றை மென்மையாக வருடியபடி,
“உங்க அப்பாக்கு நம்ம வேணா போல பாப்பா, அதான் இப்படித் தள்ளித் தள்ளிப் போறாரு” என்று சொன்னவள் காதில் குறள் கரகரக்க இவளை ஆசை ஆசையாக அழைத்த த்ரூவின் “அம்மு…” என்ற குரல் தான் காதில் ஒலித்தது.