அனல் – 30

ரூத், ஸ்டெல்லா இருவரும் சென்னையில் இப்போது இருக்கும் வீட்டிற்கு  வந்த போது, ஸ்டெல்லாவிற்கு வயது பத்து என்றாள் ரூத் பிறந்து மூன்றே நாள் ஆன கைக்குழந்தை.

முதல் முறை ஆதிஷை அவன் பாட்டி தான் ரூத்தை காண அழைத்துக்கொண்டு சென்றார்.

அப்போது கை கால்களை உதைத்துக் கொண்டு தனியே கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்தவனுக்கு, அவளை விட்டு நகரவே மனம் இல்லை.

தினமும் பள்ளி முடிந்து ரூத்தை காண சென்று விடுவான்.

அவளின் முதல் அடி இவன் கைபிடித்து தான்; அவளின் முதல் அழைப்பு இவனை கொண்டு என்று; அவளுடன் தான் மூன்று வருடங்கள் இனிமையாக நகர்ந்தது.

இவர்கள் விளையாட்டை ஸ்டெல்லாவும் பார்ப்பாள் தான், ஆனால் எதுவும் கண்டுகொள்ள மாட்டாள்; இவர்களுடன் சேர்ந்து விளையாடவும் மாட்டாள்.

ஏதோ பிரம்மை பிடித்தவள் போல எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பாள். தொடக்கத்தில் இவன் அவளை அழைத்தான் தான், ஆனால் அவள் பார்த்த வெறித்த பார்வையின் பின் அவளை அழைப்பதை விட்டுவிட்டான்.

அந்த வீட்டை உயிர்ப்புடன் வைத்திருந்ததே இவர்கள் இருவர் தான் என்பது மிகையாகாது. ரூத்தின் தாத்தா பாட்டி என்று அனைவரும் ஒருவித சோகத்துடன் தான் சுற்றி வருவார்கள்.

அது எதற்கு என்று தெரிந்துகொள்ள நேரம் இன்றி ஆதிஷ் ரூத்தை சுற்றியே வருவான்.

அது ஒரு விடுமுறை நாள், பள்ளி இல்லாததால் மூன்று வயது ரூத்தை வீட்டின் பின்னே அமர வைத்து, சொப்பு சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான் ஆதிஷ்.

அப்போது இவனுக்கு வயது பத்து, ஸ்டெல்லாவிற்கு பதிமூன்று; அவளும் அங்கே தான் ஒரு ஓரத்தில் அமர்ந்து இவர்களை அதே சோகம் நிறைந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது விளையாடிக் கொண்டிருந்த ரூத், ஆதிஷ் கன்னத்தில் ஆசையாக முத்தம் பதித்து கைதட்டி சிரித்தாள். இது ஒன்றும் புதிதான நிகழ்வு இல்லை தான்; எப்போதும் ரூத்துடன் ஆதிஷ் விளையாடும் போது எல்லாம் அடிக்கடி அவள் இவனுக்கு முத்தம் கொடுப்பது உண்டு.

ஆனால் அன்று தான் இது ஸ்டெல்லாவின் கண்ணில் பட்டதோ என்னவோ, எங்கிருந்து அத்தனை கோபம் வந்ததோ தெரியவில்லை;

 வேகமாக ஆதிஷ் அருகே வந்தவள், அவன் கையை பிடித்துத் அவனை எழுப்பி,  இழுத்துக்கொண்டு இவர்கள் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று ரோட்டில் வேகமாகத் தள்ளிவிட்டாள்.

ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கீழே தள்ளியதால் கையில் சிராய்த்து, தோள் பிய்ந்து இருக்க, அதை பார்த்தபடி கோபமாக எழுந்தவன்

“இப்போ எதுக்கு என்ன தள்ளி விட்ட…” என்று கத்தியவனை, சீற்றம் குறையாமல் பார்த்தவள்,

“இனிமே நீ இங்க வர கூடாது, ஜோசப்ப பாக்க கூடாது!” என்று கத்தியவளை புரியாமல் பார்த்த ஆதிஷ்

“ஏன் நான் வர கூடாது? அதெல்லாம் நீ சொல்றத  கேக்க மாட்டேன். ரூத் என் பாப்பா, நான் பாக்க வருவேன்!”

என்று அவன் சொல்லி முடிக்கவில்லை; அவனை மீண்டும் தள்ளிவிட்டு அவனை போட்டு அடிக்கத் தொடங்கினாள் ஸ்டெல்லா.

“ஏ… விடு… என்னை விடு…” என்று இவனும் அவளை பதிளுக்கு அடிக்க, இருவரும் ரோட்டில் விழுந்து மாற்றி மாற்றி அடித்துக்கொள்வதை பார்த்த பெரியவர்கள் கஷ்டப்பட்டு இருவரையும் பிரித்து விட்டனர்.

ஆதிஷின் தலை எல்லாம் மண்ணாக இருக்க, முகத்தில் நகக்கீறல்கள், அதனுடன் அவன் சட்டை கிழிந்து நின்றவனை முறைத்து பார்த்த ஸ்டெல்லா, விரல் நீட்டி எச்சரித்தபடி,

“ஜோசப் கிட்ட வந்த கொன்னருவன்!” என்று அனைவர் முன்பும் மிரட்டி விட்டுச் சென்றது, இன்றும் அவன் நினைவில் அழுத்தமாகப் பதிந்து இருந்தது.

இந்த கதையை மதியிடம் சொல்லி முடித்தவன், “அவ அப்போ இருந்தே அப்படி தான் சார், ஏன் எதுக்குன்னு தெரியாம சண்டை போடுவா. இவளுக்கு பிடிக்கலன்னா ரூத் அதை பண்ணவே கூடாது.

ரூத் க்கு கிளாசிக்கல் கத்துக்கணும்னு ஆசை, அதை கூட அவ கத்துக்க விடல, அதான் நான் அவளுக்கு தெரியாம ஹெல்ப் பண்ணேன். இதுல என்ன தப்பு சொல்லுங்க?”

இவற்றை எல்லாம் கேட்டு முடித்த மதிக்கு பல கேள்விகள் மனதில் எழும்பின,

“அப்போ அவ அக்காவ பழிவாங்க தான் அவ சிஸ்டர்க்கு டான்ஸ் சொல்லி கொடுத்துருக்க ள?” என்று ஆதிஷை சந்தேகமாக மதி பார்க்கவும்

“அப்படிலாம் இல்ல சார், எனக்கு அவள தான் பிடிக்காது அனா…” என்று நிறுத்தியவன் பேச்சை,

“ஆனா அவ தங்கச்சிய பிடிக்கும், ரைட்?” என்று மதி முடித்து வைத்திருந்தான்.

அதை கேட்டவன் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி, “ஆமா சார், எனக்கு அவல ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்து அவளுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

“என்னது சின்ன வயசுல இருந்தா?” என்று மதி புருவம் உயர்த்தவும்,

“ஆமா சார், அத்தனை வருஷம் காத்திருப்புக்கு இப்போ தான் பலன் கிடைச்சிருக்கு

எப்படியோ இந்த ஸ்டெல்லா கண்ண மறச்சி இப்போ தான் இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கேன், ஆனா இந்த பிரக்னென்சி தான் நான் எதிர்பார்க்கல”

என்றவன் தடுமாறி  பேசியதில் ஏதோ ஒன்று இருப்பது போலத் தோன்ற, மெல்ல தூண்டில் போட்டான்.

“இப்போ தான் ஓகே ஆகிருக்குனா, எப்படி இத்தன நாளா இல்லாம இப்போ மட்டும்?”

“அது… இப்போ தான் ஸ்டெல்லா ரூத்த கொஞ்சம் ஃப்ரீயா விட்டா”

 என்று ஆதிஷ் மென்று விழுங்கியதில் ஏதோ இருப்பதாகத் தோன்றவும், மதி மேலும் அவனிடம் தூண்டில் போட்டான் முழு விஷயத்தையும் வாங்க முயன்றான்.

“என்னென்னு சொல்லுடா, பின்னாடி எனக்கும் ஹெல்ப் ஆகும்ல”

“அது ஒன்னும் பெருசா நான் எதும் பண்ணல சார். நம்ம த்ரூவ் சார் லவ்க்கு தான் ஒரு ஹெல்ப் பண்ணேன், ஆனா அது இப்படி வந்து நிக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல சார்”

என்று அவனுள் எழும் குற்ற உணர்ச்சியில் ஒலறியிருந்தான் ஆதிஷ்.

“அப்படி என்ன ஹெல்ப்ப பெரிசா பண்ண என் நண்பனுக்கு?”

“அது வந்து சார், இதை யார் கிட்டயும் சொல்லிடாதிங்க சார்…”

என்று ஒரு முறை சுற்றி பார்த்தவன்

“சிங்கப்பூர்ல ஸ்டெல்லாவ சார் ரூம்ல வச்சி  ஒன் நைட் முழுக்க லாக் பண்ணிட்டேன் சார்” என்று ஆதிஷ் சொன்னதை கேட்டு,

அதிர்ந்த மதி, “டேய்… என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க? அப்போ இந்த சம்பவம் நீ பண்ண சம்பவத்தின் விளைவு தானா?”

“எனக்கும் அதே சந்தேகம் தான் சார், ஆனா நான் இப்படி ஆகணும்னு நினைச்சு பண்ணல சார். ஸ்டெல்லா சார் கூட சேர்ந்துட்டா ரூத் ஃப்ரீயா இருப்பாளேன்னு நினைச்சேன் சார்” என்று சொன்னவனின் கன்னத்தில் பலமாக அறைந்திருந்தால் ரூத்.

முகம் சிவந்து கண்ணீர் வடிய ஆதிஷ் முன்னே நின்றவள்,

“நீ இவ்ளோ கேவலமானவனா இருப்பேன்னு நான் நினைச்சு பார்க்கல டா” என்று அழுகையுடன் பேச முடியாமல் பேசியவள் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.

ரூத் சென்றதும் அவள் பின்னாலயே ஆதிஷும் “ரூத்… ரூத்…” என்று கத்தியபடி சென்று விட்டான்.

“ஒரே நாள்ல அக்கா கையிலயும் வாங்கியாச்சு, தங்கச்சி  கையிலயும் வாங்கியாச்சு, குட்” என்று மதி அவன் ரூத் பின்னால் செல்வதை பார்த்தான்.

வெளியில் கண்களைத் துடைத்தபடி சென்ற ரூத்தின் கையை பிடித்து நிறுத்தியவன்,

“இப்போ எதுக்கு இப்படி அழுற ரூத்?”

“நீ பண்ணி வச்ச காரியத்துக்கு அழுகாம சிரிக்க சொல்றியா ஆதி? உன் ஒருத்தன் லவ்காக என் அக்காவ இப்படி படுக்க வச்சிட்டியே டா!”

“ப்ச்… பைத்தியம் மாதிரி பேசாத, உங்க அக்கா இந்த டைம் வருவான்னு எனக்கு தெரியாது டி”

“தெரிஞ்சிருந்தா என்னும் என்னலாம் பண்ணலாம்னு ப்ளேன் பண்ணிருப்ப ஆதிஷ்”,

“ஏய்… என்னடி உனக்கு இப்போ! ஏதோ கிரிமினல் மாதிரி ட்ரீட் பண்ற, நான் என்னடி அப்படி தப்பு பண்ண?”

“ம்ம்ம் என்னும் நிறைய போய் சொல்லு, நீ நல்லவன், உனக்கு ஒன்னும் தெரியாது, எங்க அக்காவ… நீ அந்த சார் கூட ரூமில் லாக் பண்ணவே இல்லை! ன்னு நிறைய சொல்லு…

நல்ல வேலை!  இந்த ட்ரெஸை மாத்த சொல்லி பாட்டி அனுப்பப் போய் உன் பொய்யெல்லாம் தெரிஞ்சிது, இல்லனா என்ன என்னும்  என்னலாம் சொல்லி ஏமாத்தி இருப்ப!” என்று அவன் கையை உதறியவள்.

“என்னொரு தடவை என் அனுமதி இல்லாம என்ன தொட்ட? உனக்கு அவ்வளவு தான்!” என்று அவனை மிரட்டியவள், அழுதபடி அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டாள்.

ரூத் சென்ற திசையையே வெறித்தபடி நின்று கொண்டிருந்தவனின் தோள்களின் மீது கை போட்ட மதி.

“என்னடா தம்பி, அடி பலமோ…”

“போங்க சார், நான் பாட்டுக்கு இருந்தேன், என் கிட்ட பேசுறேன்னு இப்படி அவ கிட்ட கோத்து விட்டுடீங்களே சார்!” என்றவனின் சோக முகத்தைப் பார்த்த மதி.

“உண்மையா லவ் பண்றியா டா?” என்று கேள்வியாக அவனை பார்க்கவும் , ஆதிஷ்

“என் லைஃப் சார்,.. அவள ஒரு நாள் பார்க்கலனா கூட எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் சார்!”

“ரைட்டு…..மெண்டல் லவ்வரா நீ?”

“ப்ச், விளையாடாதீங்க சார், நான் ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி பேசிட்டுப் போறாளேன்னு இருக்கேன்!”

“தப்பு பண்ணிட்ட மாதிரி இல்ல தம்பி, நீ பண்ணது தப்பே தான். இந்த மேட்டர் என் நண்பனுக்குத் தெரிஞ்சிச்சு, அவனும் ஒரு அறை கொடுப்பான் உனக்கு!”

“நான் இப்படி ஆகணும்னு ஒரு எண்ணத்தோட அந்த காரியத்த பண்ணல சார்!” என்று இவன் பக்கக் கருத்தை ஆதிஷ் விளக்க முயலவும் மதி.

“ஒரு பொண்ணு ஒரு பையனோட ரூம்ல லாக் பண்றது சும்மா விளையாட்டுக்குன்னு சொன்னாலும் அது தப்பு தான் டா தம்பி!”

“ப்ச் சார்!, ரெண்டு பேரும் லவ் பண்றாங்க சார், அதைச் சொல்லிக்காம விலகியே இருக்கவும், நான் அவங்க மனசு விட்டுப் பேசத்தான் ஹெல்ப் பண்ணேன் சார்!”

“என் நண்பன் லவ் பண்றான் அது ஓகே, அந்தப் பொண்ணும் லவ் பண்றான்னு உனக்கு யார் சொன்னா?”

“எனக்கு அவள அவளோட பத்து வயசுல இருந்தே தெரியும் சார், அவ தங்கச்சிகாக அவளுக்கு ஒன்றும் பிடிக்காது  நாலும் அதைச் செய்வா; அதே சமயம் அதே தங்கச்சிகாக அவளுக்குப் பிடிச்சதையும் தள்ளி வைப்பா சார்!”

“என்னாடா, அந்தப் பொண்ணைச் சுத்தி இருக்கிற எல்லாரும் மண்டக் கலண்ட கேஸா இருப்பீங்க போல!”

“இப்போ கூட சொல்றேன் சார், இந்த நிலைமையிலயும் அவ சார்ரக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டா, அவ தங்கச்சியக் காரணமா சொல்லி சார்ர விட்டுப் பிரியத்தான் பாப்பா!” என்று ஆதிஷ் சொன்னதைத்தான் ஸ்டெல்லாவும் செய்தாள்.

த்ரூவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று அடமாக மறுத்தவளை  என்ன செய்ய என்று தெரியாமல் தான்  முழுத்தான் த்ரூவ்.