அனல் – 29

விமானத்தை விட்டு இறங்கிய த்ரூவ் உடன் மதியும் வருவதைக் கண்டு ஷாக் ஆன தருண்

“ஐய்யோ இவரா….? இவரு இங்க என்ன பண்றாரு? சார்ர கடத்த ப்ளான் பண்ணி மிரட்டி கூட்டிட்டு வராரோ?”

என்று இருவரையும் உற்று பார்க்க, த்ரூவ் தோளில் கை போட்டபடி மதி அவனைச் சீண்டிக்கொண்டு இருப்பதை பார்த்த தருண், மதி அவனை கடத்தி விட்டதாக முடிவே செய்துவிட்டான்.

“கையில மறச்சி வச்ச கத்தியால சார்ரை மிரட்டி கூட்டிட்டு வராரு போலயே “ என்று நினைத்தவன், வேகமாக அவன் போனை எடுத்து போலீஸ்க்கு கால் செய்துவிட்டான்.

அந்த பக்கம் போனை எடுத்த போலீஸாரிடம், இவன் மிக சீரியஸாக “எங்க சார் ஓட எதிரி, எங்க சார்ர கடத்திட்டு போக கத்திய வச்சி மிரட்டுறான் சார்!”

என்று இவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே இருவரும் அருகில் வந்துவிட, தருண் போனில் பேசியதை கேட்டு அதிர்ந்த த்ரூவ்

“தருண் என்ன ஒலறிட்டு இருக்க? இவன் என்ன ஒன்னும் மிரட்டலடா, பாரு” என்று அவன் தோளில் இருந்த கையை எடுத்து காட்டவும்

“அவர் மிரட்டலனா அவர் கூட ஏன் சார் நீங்க வரிங்க? அவர் உங்க எனிமி தான?”

என்று பேசிய தருணை பார்த்து சத்தமாக சிரித்த மதி, அவன் தோளில் கையை போட்டுக்கொண்டு

“உனக்கு இந்த எனிமி டு லவ்வர்ஸ் ஜார்ன்னர்(genre) தெரியுமா?” என்று அவன் சொல்லியதை கேட்டு, திடிக்கிட்டு  அவன் முகத்தைப் பார்த்து “ம்ம்ம் தெரியும் சார்”

“ம்ம்ம்…. இப்போ இந்த ஸ்டோரில அந்த ஜார்ன்னர் தான் ஓடிட்டு இருக்கு” என்று மதி சொன்னதை கேட்டு, நெஞ்சில் கை வைத்தவன்

“சார்…. அப்போ நீங்க எங்க சார்ர லவ் பண்ண போறீங்களா?” என்று கத்தியவன் சத்தத்தில் விமான நிலையமே இவர்களைத் தான் திரும்பிப் பார்க்கவும், த்ரூவ்

“மதி…. என்ன கருமத்தடா பேசிட்டு இருக்க?” என்று பல்லை கடித்துக்கொண்டு அவன் முறைக்கவும்

தருண் தலையைத் தட்டிய மதி,

“உனக்கு ஏன் இந்த மூளை தப்பாவே யோசிக்குது? ஏன் இந்த எனிமி டூ லவ்ல நட்பு வராதாடா?” என்றவனுக்குத் தலையை நாளாபுறமும் ஆட்டியவன்

“நட்பு…ன்னா அதை எனிமி டூ ஃபிரண்ட்ஸ்னு சொல்ல மாட்டாங்களா சார்?” என்றவன் கண்ணாலே

“என்னை இவர் கிட்ட இருந்து காப்பாத்துங்க சார்…”என்று பாவமாகத் த்ரூவ் முகத்தைப் பார்த்தபடி பேசியவன், செயலில் சிரிப்பு வந்தாலும் மதி.

“ஏன் நட்புல லவ் இருக்காதாடா?” என்று இவன் குரல் கோபமாக மாறவும், அதில் பயந்த தருண்

“அ…. லவ் தான அது இருக்கு சார்…. எவ்ளோ வேணுமோ அவ்ளோ ….இருக்கு சார், எல்லாமே இருக்கு சார்” என்று பம்மியவனைப் பார்த்து சிரித்தவன், அவன் தோளில் கைபோட்டபடியே நடக்க, இவர்கள் கார் அருகில் வந்துவிட்டனர்.

த்ரூவ் இவர்கள் பேசுவதைக் கண்டுகொள்ளாது, அவனின் ஈமெயில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வரும் போதுதான் அந்த மெயில் வந்து விழுந்தது.

ஸ்டெல்லாவின் ராஜினாமா, மெயில் மூலம் வரவும், அதை பார்த்து அதிர்ந்தவன்.

“ஸ்டெல்லா….” என்று அதிர்ச்சியுடன் கத்திருந்தான்.

அவன் சத்தத்தில் தருண் மற்றும் மதி ஒன்றாகத் திரும்பிப் பார்க்க, மதி

“யாருடா அது…. அந்த பொண்ணுக்கு என்ன ஏன் இத்தன ஷாக்?” என்று அவன் நன்பனை பார்க்க

“அவங்க ஆர்கே க்ரூப் கம்பெனி ஜி.எம்.” என்று தருண் அவளைப் பற்றிய தகவலைத் தந்துவிட்டுத் த்ரூவ் புறம் திரும்பி

“என்ன ஆச்சு சார் மேம்க்கு?”

“ஸ்டெல்லா ரிஸைன் பண்ண மெயில் போட்டுருக்க” என்று இவன் பதட்டமாகச் சொல்லியதை கேட்டு, மதி

“அதுக்கு ஏன்டா இப்படி முகத்த வச்சிருக்க? அதான் நான் இருக்கேனே, அந்த கம்பெனிய இனிமே நான் பாத்துக்குறேன்”

என்று தோள்களைக் குலுக்கி பேசியவன் பேச்சை எதையும் கண்டு கொள்ளாத த்ரூவ்

“ஏன் எதுக்கு?” என்ற கேள்வி மட்டுமே சுழல, வேகமாக காரில் ஏறினான்.

த்ரூவ் முகத்தில் இருந்த பயம் அதனுடன் பதட்டம் என்று அனைத்தையும் கவனித்த மதிக்கு, இவனது நிலை புதிதாகத்தான் தெரிந்தது

எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் மிக இலகுவாக  கையாளுபவன் இப்படி ஏதோ ஒரு பெண்ணிற்காகப் பதறுவது புதிதாக இருந்தது.

அவனுடனே காரின் முன் பக்கம் ஏறிக் கொண்டான். மதி த்ரூவ் முன்புறம் ஏறி அமர்ந்தவுடன், தருணுக்கு எங்கு அமர வேண்டும் என்று தெரியாமல் காரின் பின் பக்கம் ஏற முயன்றபோது, கார் புயல் வேகத்தில் புறப்பட்டிருந்தது.

 “சார்….. நான் என்னும்  ஏறல…” என்று தருண் கத்த

“ கேப் புக் பண்ணி போங்க தருண்!  உங்க பாஸ் கிட்ட  அதுக்கும் சேத்து வாங்கிக்குங்க .  நம்ம அப்பறமா மீட் பண்ணலாம்  பாய்…” என்னு கார் ஜென்னல் வழியே மதி கைகாட்ட கார் மின்னல் வேகத்தில் தான் சென்றது.

“பிரணவ், ஏன் இத்தன வேகம் டா” என்று இவன் பேசியதைக்கூட கவனிக்காமல், ஸ்டெல்லாவிற்கு அழைத்தபடியே காரை ஓட்டினான்

அவள் இவன் போனை எடுக்கவில்லை என்றதும் கார் மேலும் வேகத்தைக் கூட்ட.

“டேய் நல்லவனே, என்னடா பண்ற? கார் ஸ்பீடை குறைடா… ஸ்பீடா கார்ர ஓட்டுர எனக்கே பயமா இருக்கு…” என்று அவன் கதர கதர வேகத்தை கூட்டியவன், ஆர்.கே குரூப் எச்சாருக்கு கால் செய்து,

“ஸ்டெல்லா எங்க? அவகிட்ட போனை கொடுங்க” என்று கர்ஜிக்கத் தான் செய்தான்.

அதற்கு அந்த கம்பெனி எச்சார் “சார், மேம் மீட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போயிட்டாங்க” என்று அந்தப் பெண் சொன்ன மறு நொடி, போனை அணைத்துத் தூக்கிப் போட்டவன் நேராக ஸ்டெல்லாவின் வீட்டை நோக்கிச் சென்றான்.

மனதெல்லாம் ஒருவிதமாக அழுத்தவும், அந்த அழுத்தத்துடன் அவளைத் தேடிச் சென்றான். காரை ஓட்டிக்கொண்டிருந்த த்ரூவ், ஸ்டெல்லா விஷயத்தில் இந்த நிமிடம் ஒரு முடிவு எடுத்திருந்தான்.

என்ன நடந்தாலும் சரி, ஸ்டெல்லா ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவளைத் திருமணம் செய்தே தீருவேன் என்று ஒரு முடிவோடு தான் அவளைத் தேடிச் சென்றான்.

எங்கு அவள் இவனுக்குக் கிடைக்காமல் போய்விடுவாளோ என்று பயம் வந்து ஒட்டிக்கொள்ள, அந்த பயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தான்.

அங்கு இவனுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாது.

காரை பதட்டத்துடன் ஓட்டிக்கொண்டிருந்த த்ரூவை வினோதமாகப் பார்த்து வைத்த மதி மனதில்,

“இவன் ரியக்ஷன பாத்தா அந்த பொண்ணு வெறும் ஜீ.எம் போல தெரியல்லை யே” என்று எண்ணிக்கொண்டான்

அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்திற்கு  கால் மணி நேரத்தில் வந்திருந்தனர்.

ஸ்டெல்லா வீட்டின் முன் காரை நிறுத்தி  வேகமாக இறங்கியவன், ஸ்டெல்லா ஆதிஷை கோபமாக அறையும் காட்சியைப் தான்  பார்த்தான்.

அதைப்பார்த்து மேலும் குழம்பியவன் அவள் அழுகையில் வேகமாக அவளை நோக்கிச் சென்றான்.

ஆதிஷை அடுத்த படி அழுது கொண்டிருப்பதைச் சகிக்காமல், அவளைப் பிடித்து இவன் பக்கம் திருப்பியவன், அவளை அணைத்துக்கொண்டு அங்கு இருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.

தேம்பி தேம்பி அழுத ஸ்டெல்லா அப்படியே மயங்கி அவன் மீதே சரியவும், அவளைத் தாங்கிப் பிடித்த த்ரூவ்,

“ஸ்டெல்லா …. ஸ்டெல்லா….” என்று பதறி அவளைத் தாங்கினான்.

“அச்சோ…. என் புள்ளை… “ என்று கத்தியபடி மணியம்மாள் அவளை ஒரு புறம் தாங்கினார் என்றாள் மறுபுறம் ரூத் “ஸ்டெல்லா..” என்று கதறிய படி ஓடி வந்து அவளை தாங்கியிருந்தாள்.

மயங்கி இருந்த ஸ்டெல்லாவை கையில் ஏந்தியவன் வேகமாக காரை நோக்கிச் சென்று

“மதி, வண்டிய எடுடா” என்று கூறிவிட்டு, வேகமாக காரின் பின்னே அவளைக் ஏற்றி, அவள் தலையைத் தன் மடியில் தாங்கி அமர்ந்து கொண்டான்

திடீரென்று ஸ்டெல்லா மயங்கியது, அவளை யார் என்று தெரியாத ஒருவன் காரில் ஏற்றியது என்று ஒன்றும் புரியாமல் திகைத்த மணியாம்மாள்,

“ஏன் புள்ள…. அவள எங்கடா தூக்கி போற….” என்று கத்தியபடி த்ரூவின் பின்னாலேயே சென்று காரில் ஏறிக்கொண்டார்.

அவர் பின்னயே ரூத்தும் காரில் முன் புறம் ஏறிக்கொள்ள மதி காரை வேகமாக ஓட்ட தோடங்கினான்.

 த்ரூவ், காரில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தும் பலன் இன்றி ஸ்டெல்லா அப்படியே இருக்கவும் , பயந்தவனாக

“கார வேகமாக ஓட்டுடா….” கத்தினான் த்ரூவ்

அவன் பதட்டத்திலயே ஸ்டெல்லா த்ரூவுக்கு எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கோண்டவன் வேகமாக தான் சென்றான்.

“அவளுக்குத் தெரியாம அந்த டான்ஸ் ஆடியே திறனுமா டி…. உனக்கு… இப்போ பாரு டி, புள்ள பேச்சி மூச்சி இல்லாம இருக்கு…. இதுக்குதா பொய் சொல்லி அவன் கூட ஆடப் போனியா டி?”

என்று மணியாம்மாள் ரூத்தை திட்டிக்கொண்டிருக்க, ரூத் மௌனமாக அழுதபடி ஸ்டெல்லாவைத் தான் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்தாள்.

“பக்கத்துல இருக்க ஏதாவது ஆஸ்பிட்டலுக்குப் போடா…” என்று இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாது த்ரூவ் மதியை அவசர படுத்த

“அண்ணா, இங்க ஒரு ஆஸ்பிட்டல் இருக்கு, அங்க தான் அக்கா எப்பவும் பாப்பா, அங்க போங்கண்ணா” என்று ரூத் வழி சொல்ல, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

மிகப்பெரிய மருத்துவமனை இல்லை என்றாலும் பார்க்க நன்றாகவே இருந்தது. மதி காரை மருத்துவமனை முன் நிறுத்தியதும்  காரை விட்டு வேகமாக இறங்கிய த்ரூவ், கையில் ஸ்டெல்லாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடத்தான் செய்தான்.

“டாக்டர், டாக்டர்….” என்று கத்திக்கொண்டு ஓடியவன் அங்கிருந்த ஸ்டெட்சரில் அவளைப் படுக்க வைத்தான். அங்கு வந்த டாக்டர் ஸ்டெல்லாவைப் பார்த்துவிட்டு,

“இவங்க இன்னைக்குத் தான இங்க வந்து செக் பண்ணிட்டுப் போனாங்க? என்ன ஆச்சு இவங்களுக்கு?”

“என்னது, ஸ்டெல்லா இங்க வந்தாளா?” என்று த்ரூவ் அதிர்ச்சியாக கேட்கவும், அவர்

“ஆமா, நான் தான் செக் பண்ணி அனுப்புனேன். சரி, இவங்களுக்கு என்னாச்சு? எப்படி அன்கான்சியஸா ஆனாங்க?”

“அது வீட்டுல ஒரு சின்ன பிரச்சனை, அதுல கத்தி டென்ஷன் ஆகி மயங்கிட்டாங்க” என்ற ரூத்தை பார்த்த டாக்டர் கோபமாக,

“என்னம்மா, பிரக்னென்ட்டா இருக்க டைம் அவுங்கள ஒழுங்கா பார்த்துக்க வேண்டாமா?” என்றவர் வேகமாக ஸ்டெல்லாவை அழைத்துக்கொண்டு எமர்ஜென்சி அறைக்குள் சென்றுவிட்டார்.

“என்னது, ஸ்டெல்லா பிரக்னென்ட்டா இருக்காளா?” என்று ரூத் அதிர்ச்சியாக,

“என்ன சொல்லிட்டுப் போறாங்க அந்த டாக்டர் அம்மா? நம்ம ஸ்டெல்லா புள்ள தாச்சியா? அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலன்னு சொல்லுடி….. தப்பா ஏதோ படிச்சிட்டு வந்து ஒலருறாங்க போல டி…. இந்த ஹாஸ்பிட்டல் நமக்கு வேணாம், வேற இடத்துக்குப் போலாம்.”

என்று உள்ளே செல்லப் போனவரைத் தடுத்த ரூத், “பாட்டி அமைதியா இரு பாட்டி, டாக்டர் மொதல்ல ஸ்டெல்லாவ பாத்துட்டு வெளிய வரட்டும், நம்ம கேட்போம். யாரோன்னு நினைச்சி பேசுறாங்க போல” என்று இருவரும் புரியாமல் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டு போக,

“டேய் மச்சான் பிரனாவ்!, அப்புறம் எப்போ ட்ரீட்? நீ இவ்ளோ எமோஸனா  பொங்கும் போதே நினைச்சன் டா…..எனிவே….அப்பா ஆகிட்ட, கன்கிரேஜுலேஷன் டா!” என்று இவன் வேறு நேரம் தெரியாமல் பேசவும், த்ரூவ் குழப்பமான முகத்துடன்,

“அது… மதி…” என்று இவன் திணறி நிற்க,

“ஆமா…, அப்புறம் எதுக்கு ரிசைன் பண்ண மெயில் போட்டுருக்கா உன் ஆளு?” என்று இவன் கேள்வியாக த்ரூவை பார்த்து கேட்டகவும், அந்நேரம் சரியாக அங்கு வந்த ஆதிஷ்

“என்னது, ஸ்டெல்லா ரிசைன் பண்றாளா?” என்று கேட்டபடி ஆதிஷ் அங்கு வரவும், அவனைப் பார்த்துவிட்டு மதி,

“யாருடா நீ? எதுக்கு ஸ்டெல்லா உன்ன அடிச்சிட்டு இருந்தா? அவள என்னடா பண்ண? உன்னால தான் இப்போ அவ சீரியஸா இருக்கா. என் நண்பன் குழந்தைக்கும், அந்தப் பொண்ணுக்கு ஏதாவது ஆகட்டும், உனக்கு இருக்கு!” என்று மதி மிரட்ட,

“என்னது, ஸ்டெல்லா பிரக்னெட்டா…?” என்று த்ரூவை இவன் அதிர்ந்து பார்க்க,

“கன்னத்துல தான முத்தம் கொடுத்தன், பாப்பா எப்படி?  ஒரு வேள டாக்டர் தப்பா சொல்லிட்டு போறாங்களோ “

என்று பக்கா நைட்டீஸ் கிட்ஸ் ரேஞ்சுக்கு யோசித்து கோண்டிருந்தான்.

சரியாக டாக்டர் அந்நேரம் பார்த்து வெளியே வந்து, “அவங்க பீபி ரொம்ப ரைஸ் ஆகிருக்கு, அதுல தான் மயங்கியிருக்காங்க. இப்போ அவங்க ஓகே தான், ஆனா நாளைக்கு வர இங்க வச்சி  செக் பண்ணிட்டு தான் மத்தது சொல்ல முடியும் .”

“டாக்டர், அவங்க பிரக்னென்ட்னு சொன்னீங்களே?” என்ற ரூத்தை பார்த்து, “நீங்க அவங்களுக்கு யாரு?” என்று கேட்கவும் அவள்

“அவங்க சிஸ்டர், டாக்டர்.”

“இன்னைக்கு மார்னிங் தான் வாமிட்டிங்னு வந்தாங்க, அப்போ தான் கன்பார்ம் பண்ணி கேர்ஃபுல்ல இருக்க சொல்லி அனுப்பினேன் அதுக்குள்ள இப்படி ஆகிருச்சி.”

“இப்போ அவங்களுக்கு ஒன்னும் இல்லை தான டாக்டர்?”

“ம்ம்ம், சீ இஸ் ஃபைன், பட் பீபி மானிட்டர் பண்ணிட்டு தான் பேபி பத்தி சொல்ல முடியும். அவங்க முழிச்சதும் டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

அதை கேட்டு பயந்த த்ரூவ், “ஸ்டெல்லா….” என்று ஸ்டெல்லா இருந்த அறைக்குள் சென்றான்.

அவன் பின்னாலயே ரூத் மற்றும் பாட்டி சென்றுவிட, அவர்களுடன் செல்லச் சென்ற ஆதிஷை பிடித்து இழுத்த மதி,

“நீ எங்கடா போற!, இங்க வா…”

“சார் சட்டைய விடுங்க சார்” என்று தள்ளி நின்றவன், “இப்போ எதுக்கு என்ன பிடிச்சு இழுக்கிறீங்க?”

“அவங்க உள்ள போறாங்கன்னா ஓகே, ஃபேமிலி, நீ ஏன் போற? ஆல்ரெடி உன்னால தான் அந்தப் பொண்ணு டென்ஷன் ஆகி உள்ள படுத்துருக்கு.”

“சார் அப்படி சொல்லாதீங்க சார், எனக்கு அவ ப்ரெக்னென்ட்னு தெரியாது” என்று தலைகுனிந்தவனை சந்தேகமாகப் பார்த்த மதி,

“ஆமா…அந்தப் பொண்ணுக்கு நீ யாரு? உன்னைப் பார்த்து ஏன் அந்தப் பொண்ணு கத்திட்டு இருந்திச்சு?”

“அது சின்ன வயசு சண்டை சார், உங்களுக்குப் புரியாது.”

“புரியாதுன்னா புரியுற மாதிரி பொறுமையா சொல்லு, தெரிஞ்சுக்கிறேன்” என்று அவன் தோளில் கை போட, ஆதிஷ்,

“நீங்க ஏன் இதெல்லாம் கேக்குறீங்க சார்? நீங்க கேட்டா நான் ஏன் சொல்லணும்? சார் கேட்டா கூட செல்லலாம் ” என்றவனை முறைத்த மதி,

“அவன் கிட்ட சொல்லுவ, என் கிட்ட சொல்ல மாட்டியாடா?”

“சார எனக்குத் தெரியும், அதுவும் இல்லாம அவுங்க ஸ்டெல்லாவ லவ் பண்றாங்க, சோ சொல்லுவேன், ஆனா நீங்க…”,

“நான் அவன் நண்பன் தான்டா, நம்பி சொல்லு. பாவம் என் நண்பன் ஒன்னும் புரியாம இருக்கான், சோ என்ன சண்டை னு மேட்டர விளக்கு அதை வச்ச எதவது பண்ண முடியுமான்னு பாப்போம் ” என்றதும், ஆதிஷும் ஸ்டெல்லாவுடன் இவனுக்கு இருக்கும் பிரச்சனையைச் சொல்லத் தொடங்கினான்.